Home Blog Page 3

“கேஸ் வாபஸ்” அண்ணியாரிடம் மண்டியிடும் விஜய்.. குதூகலத்தில் திரியும் அணில் குஞ்சுகள்!!

0

Vijay Sangeetha Divorce Case: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள விஜய் மீது ஏதேனும் குற்றம் சுமத்தி அது குறித்த தகவல்தான் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. அந்த வகையில் அவருக்கு தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு தரப்பில் ஆதரவு கிடைத்துள்ளது. அப்படி இருக்கையில் தக்க நேரம் பார்த்து தான் சங்கீதா விவாகரத்து கேட்ட மனுவானது வெளியாகி பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலரும் பல வித விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஒரு சில தரப்பினர் இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை பேசக்கூடாது, அரசியல் ரீதியான எதிர்ப்புதான் தங்களுக்கு சரி என கூறுகின்றனர். ஆனால் மறைமுகமாக விஜய்யை குறி வைத்து அவரது பெயரை கெடுக்க இந்த விவாகரத்து மனு வெளியாகியுள்ளது. அதில் அவரது மனைவி சங்கீதா கூறியுள்ளதாவது, திருமணத்திற்கு மீறிய உறவில் விஜய் இருப்பதாகவும் அது தொடர்வதால் விவாகரத்து கேட்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேற்கொண்டு தனக்கு இந்த விவாகரத்து ரீதியாக விஜய் தரப்பபிடமிருந்து அழுத்தம் வந்தால் கட்டாயம் அவருடன் இருக்கும் அந்த நடிகை யார் என்பதையும் கூறுவேன் என தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த வழக்கு குறித்த மனு அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஆளும் கட்சி மறைமுக வேலையை பார்த்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனை சரி கட்ட விஜய் அடுத்த கட்ட நடவடிக்கையை மூவ் செய்துள்ளாராம். இந்த வழக்கு ரீதியாக ஏப்ரல் 20 ஆம் தேதி விஜய்யை நீதிமன்றத்தில் ஆஜராக கூறி உத்தரவு போடப்பட்டுள்ளது. அதற்குள் சங்கீதா தரப்பிடம், இரு தரப்பு சமாதான நிலையை அறிவித்து சுமூகமாக கொண்டு செல்ல விஜய் அணி பேச்சுவார்த்தை நடத்த முயற்ச்சித்து வருகிறார்களாம்.

சுமூகமான முறையில் விவாகரத்து இல்லாமல் வழக்கை வாபஸ் வாங்க சங்கீதா சம்மதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சீட்டை குறைக்கும் திமுக.. ஸ்டாலின் போட்ட குண்டு.. கூட்டணியில் வெடிக்கும் பூகம்பம்”.. “சிதறும் கூட்டணி கட்சிகள்”..

0

DMK: திமுக அடுத்த ஐந்து ஆண்டுகள் மீண்டும் நாம்தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக உள்ளது. இதற்காக ஆட்சி முடிவதற்கு முன்பு மகளிர் அனைவருக்கும் ரூ 5000 வழங்கியது. மேற்கொண்டு தேர்தல் அறிக்கையில் மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால் கூட்டணி கட்சிகள் இவர்களுக்கு கை கொடுப்பதாக தெரியவில்லை.

விஜய் அரசியலுக்குள் நுழைந்து கூட்டணி முறையில் ஆட்சி என்று கூறியதிலிருந்து, ஆளும் மற்றும் எதிர் கட்சி என ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி முறையில் ஆட்சி வேண்டும் என கேட்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக திமுகவிற்கு அது பாதகமாகவே அமைந்துவிட்டது. விடுதலை சிறுத்தை திருமாவி-ல் தொடங்கி, காங்கிரஸ் வரை அனைவரும் திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் திமுக கூட்டணி ஆட்சிக்கு ஒத்துவரவில்லை.

மாறாக தொகுதி பங்கீடாவது வழக்கம் போல் இல்லாமல் இரட்டை இலக்க எண்ணில் தான் வேண்டும் என அனைவரும் பிடிவாதமாக உள்ளனர். தமிழக காங்கிரஸின் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் கூட நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், அனைத்து கட்சியினருடன் தான் பேச வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். இன்னும் திமுக பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுக்கவில்லை.

எங்களது முக்கிய நோக்கமே தொகுதிகளின் பங்கீட்டின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான் என்று கூறியுள்ளார். இதைப் போல திமுகவில் ஒவ்வொரு கட்சியினரும் தொகுதி பங்கீடு குறித்து பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் திமுக வழக்கத்திற்கு மாறாக அதிரடி முடிவை எடுக்க உள்ளது. வருடம் வருடம் ஒதுக்கும் தொகுதியை காட்டிலும் அதிலிருந்து ஒரு தொகுதியை குறைத்து வழங்குவதாக உள்ளது.

கட்சியில் புதிதாக தேமுதிக இணைந்துள்ளதால் இந்த மாறுபாடு இருக்கலாம் என கூறுகின்றனர். முன்னதாகவே காங்கிரஸ் வெளிப்படை தன்மையுடன் விஜய் உடன் பேச்சுவார்த்தை கூட நடத்துவோம் என கூறியுள்ளதால் இது மாதிரியான திடீர் முடிவுகள் கூட்டணியில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். இந்த முடிவால் திமுக கூட்டணி உடையக் கூடும்.

“தேர்தலுக்கு பின் கூட்டணி வேண்டாம்” யாருக்கும் அடிமை இல்லை”.. பாஜக தலையில் இடியை இறக்கிய எடப்பாடி”

0
ADMK BJP: சட்டமன்ற தேர்தல் மே மாதம் தொடங்க இருப்பதையொட்டி ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இம்முறை திமுக அதிமுக தவெக நாம் தமிழர் என்று நான்கு முனைப்போட்டி உள்ளது. இதில் திமுக மற்றும் அதிமுக தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்து விட்டனர். அதேபோல தேமுதிக வழக்கத்திற்கு மாறாக இம்முறை திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
 
மேலும் அதிமுக வுடனும், பாஜக பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளனர். இதில் பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் என கூறாமல், பாஜக ஆளும் என கூறி வருகின்றனர். ஒரு படி மேலாக அமித்ஷா கூட்டணி முறையில் ஆட்சி என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் அதிமுக இதற்கு முழு எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதனால் தேர்தல் கட்டமைப்பிற்காக ஆளும் கட்சியை எதிர்க்க தான் இந்த கூட்டணி என்று பலமுறை எடப்பாடி தெரிவித்துள்ளார். அந்த வகையில் நேற்று சென்னையில் நடந்த பிரச்சாரத்தில், திமுகவைப் போல யாரும் பத்தாண்டுகள் கூட்டணியில் அடிமையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இது வெறும் தேர்தலுக்கான கூட்டணி தான்.
 
தேர்தலுக்குப் பின் ஒவ்வொரு கட்சியும் தங்களின் கொள்கைக்கேற்ப செயல்படலாம் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுக தேர்தல் முடிந்ததும் தங்களது கொள்கைக்கு ஏற்ப மாறுவதாக கூறி என்டிஏ கூட்டணியிலிருந்து வெளியேறி விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காலையில் அதிரடி: விஜய்யுடன் இணைகிறாரா சசிகலா.. கூட்டணி குறித்து வெளியான “முக்கிய தகவல்”..

0

TVK: அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அனைத்துமாக சசிகலா இருந்து வந்தார். எடப்பாடி எப்பொழுது முதல்வரானாரோ அப்போதையிலிருந்து சசிகலா மற்றும் அவரின் ஆதரவாளர்களை ஓரம் கட்ட ஆரம்பித்தார். இறுதியில் கட்சியை விட்டு நீக்கி விட்டார். டிடிவியுடன் கூட்டணியிலிருந்த சசிகலா அங்கிருந்தும் விலகி அதிமுகவை ஒன்றிணைக்க போகிறேன் என கூறினார். ஆனால் யாரும் கை கொடுப்பதாக தெரியவில்லை.

இதனால் சுயேட்சையாக நின்று போராடி விடலாம் என எண்ணி நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் மாநாடு ஒன்று நடத்தி அதில் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். அந்தக் கூட்டத்தில் பேசிய அனைத்து வார்த்தைகளும் எடப்பாடிக்கு எதிரானதாக தான் இருந்தது. மேற்கொண்டு அதிமுகவிலிருந்து வெளியேறிய செங்கோட்டையன் உள்ளிட்டோர் கஷ்ட காலங்களில் தனக்கு ஆதரவு குரல் கொடுத்ததாகவும் கூறினார்.

தற்போது புதிய கட்சி ஆரம்பித்தவர் யாருடன் கூட்டணி என்பதெல்லாம் அறிவிக்கவில்லை. ஆனால் செங்கோட்டையன் குறித்து பாசிட்டிவாக பேசியதை வைத்து, இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய அதிக வாய்ப்புள்ளதாம். அதிமுகவே எதிர்க்கும் விஜய்யுடன் கூட்டணி வைத்தால் தான் ஒரு தொகுதியிலாவது அவரால் வெற்றி பெற முடியும் என அவரை சுற்றியிருக்கும் நிர்வாகிகள் ஆலோசனை கூறி வருகிறார்களாம்.

இதுகுறித்து சசிகலா விஜய்யுடன் பேசி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த கட்சியை தவிர வேறு கட்சியில் இணைந்தால் வெகு விமர்சையான வரவேற்பு கிடைக்காது என்றும் கூறுகின்றனர்.

“அதிமுக ஆட்டம் க்ளோஸ்”.. நான் சொல்ற தொகுதியில நில்லுங்க.. OPS- க்கு ஸ்டாலின் கொடுத்த நியூ அசைன்மென்ட்!!

0

DMK OPS: சட்டமன்ற தேர்தல் நெருங்கி  வரும் சமயத்தில் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆளும் கட்சிக்கும் ஆளும் கட்சியில் இருப்பவர்களும் மாற்றுக் கட்சிக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக, அதிமுகவின் முக்கிய புள்ளிகள் என தொடங்கி கூட்டணி கட்சிகள் வரை இடமாறி வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தற்போது திமுகவுடன் இணைந்துள்ளது. மேலும் ஓபிஎஸ் ஸ்டாலினை சந்தித்து மீண்டும் நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

இவ்வாறு அதிமுகவின் சக்தி பீடங்களாக இருந்த ஒவ்வொருவரும் திமுகவிற்கு சாதகமாகி வருகின்றனர். அதேபோல தேமுதிக கூட்டணி வைத்துக் கொண்டதால் அவர்களுக்கு எட்டு தொகுதிகள் வரை திமுக  ஒதுக்குவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. அதிலும் விஜயகாந்த் வெற்றி வாகை சூடிய விருதாச்சலம் தொகுதியில் பிரேமலதாவை போட்டியிட வேண்டாம் என்று ஸ்டாலின் கூறுகிறாராம். அதற்கு காரணம், அதிமுகவிலிருந்து வெளியேறிய பெரும்புள்ளிகளை வைத்து அவர்களையே வீழ்த்த மாபெரும் பிளான் போட்டுள்ளாரம். அந்த வகையில் அதிமுக பாஜக கூட்டணியில் பவர்ஃபுல்லான தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எதிராக பிரேமலதாவை களம் இறக்க உள்ளாராம்.

அதேபோல ஓபிஎஸ்-ம் திமுக கூட்டணியில் இணைகிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டால், கட்டாயம் திமுக போடி தொகுதியில் இவரை நிற்க விடமாட்டார்களாம். மாறாக அதிமுகவின் பலம் வாய்ந்த தொகுதியாக இருக்கும் இடத்தில் தான் ஓபிஎஸ் போட்டியிட வேண்டுமாம். அந்த வகையில் போடி தொகுதியில் ஓபிஎஸ் க்கு பதிலாக, திமுகவை சேர்ந்த எஸ் லட்சுமணன், புருஷோத்தமன், வெங்கடேஷ் குமார் உள்ளிட்டோர் வரிசை கட்டி நிற்பதாகவும் இவர்களில் ஒருவரை தான் ஸ்டாலின் தேர்ந்தெடுப்பார் என்று அண்ணா அறிவாலயத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

ஆட்சியில் பங்கு இல்லையன்றால் பந்தம் இல்லை.. திமுக-வுக்கு “கூட்டணிகள் போடும் ஆர்டர்”.. கதிகலங்கும் ஸ்டாலின்..

0

DMK: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது பரப்புரையை ஆரம்பித்து விட்டனர். எதிர் கட்சி நிர்வாகிகள், அதன் கூட்டணி கட்சிகள் என பலர் ஆளும் கட்சியில் இணைந்தாலும், திமுக பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக விஜய் அரசியலுக்குள் வந்ததும் கூட்டணி கட்சிகளுக்கு சம பங்கு, ஆட்சியில் உரிமை எனக் கூறியது பல  கட்சிகளுக்கு பாதகமாகவே அமைந்துவிட்டது. குறிப்பாக, திமுகவின் கூட்டணி கட்சிகள் இந்த அறிவிப்பிற்கு பிறகு தலைமைக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

அதவாது எங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டு வருகின்றனர். தலைமை அதற்கு முற்றிலும் மறுப்பு தான் தெரிவித்துள்ளது. கடந்த முறை திமுக மட்டும் தனித்து 173 தொகுதிகளில் நின்றது. இதரக் கூட்டணிகளுக்கு ஒற்றை இலக்கத்திலேயே தொகுதிகளை ஒதுக்கியது. ஆனால் இம்முறை திருமா-வே இரட்டை இலக்க எண்ணிக்கையில் தான் தொகுதி வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். மேலும் காங்கிரசும் கூட்டணியில் பங்கு என்பதை தீவிரமாக பேசி வருகிறது.

ஒருபுறம் ஐந்தாண்டு ஆட்சிகள் சரிவர செய்யவில்லை எனக் கூறி ஒரு தரப்பினர் வாதம் வைக்கின்றனர். மற்றொருபுறம் விஜய் தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதில் கூட்டணி கட்சிகளும் திமுகவிற்கு அழுத்தத்தை தான் தருகிறது. இவற்றையெல்லாம் சமாளித்து மீண்டும் திமுக ஆட்சி கட்டிலில் அமருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடைபெறும் கொ*லைகள் தனித்தனியான சம்பவங்கள் அல்ல; அது தொடர்ச்சியான அரசியல் தோல்வியின் பிரதிபலிப்பு

0

2025 டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷின் பல பகுதிகளில் இந்து ஆண்கள் மீது நடைபெற்ற கொ*லைகள், தனித்தனியான குற்றச் சம்பவங்களாக அல்லாமல், நீண்டகாலமாக இந்து சிறுபான்மை எதிர்கொண்டு வரும் துன்புறுத்தல்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகின்றன. ஒரு மாதத்திற்குள் குறைந்தது 12 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கூட்ட வ*ன்முறை மற்றும் நீதிமன்றத்திற்கு வெளியான தண்டனைகளின் மூலம் உயிரிழந்துள்ளனர். அரசியல் அமைதியின்மை, மத அடிப்படைவாதம் மற்றும் நிறுவனங்களின் செயலிழப்பு ஒன்றோடொன்று இணையும் சூழலில் சிறுபான்மையினர் எவ்வளவு எளிதில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்தச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

உயிரிழந்தவர்களில் டிபு சந்திர தாஸ், அம்ரித் மொண்டல் (சம்ராட் என்றும் அறியப்படுகிறார்), திலிப் போர்மோன், பிரான்தோஷ் கர்மோகர், உத்பல் சர்கார், ஜோகேஷ் சந்திர ராய், சுபோர்ணா ராய், ஷான்தோ தாஸ், ரிப்பன் குமார் சர்கார், பிரதாப் சந்திர, ஸ்வாதீன் சந்திர மற்றும் பலாஷ் சந்திர ஆகியோர் அடங்குவர். ஒவ்வொரு மரணத்தையும் தனிப்பட்ட குற்றச் சம்பவமாக விளக்க முயற்சிகள் நடந்தாலும், மொத்தச் சம்பவங்களை ஒருங்கிணைத்து பார்க்கும்போது, இது தற்செயலான நிகழ்வுகள் அல்ல; மாறாக ஒரு அமைப்புசார் அரசியல் பாதுகாப்பு குறைபாடு என்பதை காட்டுகிறது.

2025 டிசம்பரில் பங்களாதேஷில் குறைந்தது 12 இந்துக்கள் கொ*ல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் கூட்ட வன்முறைக்கு இலக்கானவர்கள். அரசியல் குழப்பம் மற்றும் மத தீ*விரவாத சூழலில் இந்து சிறுபான்மை மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அவதூறு குற்றச்சாட்டுகள் அல்லது பிற குற்றச்சாட்டுகள் அடிப்படையாக வைத்து, சட்ட நடைமுறைகளை புறக்கணித்து கூட்டமே தண்டனை வழங்கும் நிலை உருவாகியுள்ளது. அதிகாரப்பூர்வ பதில்கள் சிறுபான்மையினருக்கு போதிய பாதுகாப்பை வழங்கவில்லை என்பதே பரவலான கருத்தாக உள்ளது.

பங்களாதேஷில் இந்துக்கள் மீதான துன்புறுத்தல்கள், அந்நாட்டின் சமூக-அரசியல் அமைப்பில் வேரூன்றியுள்ள தீ*விரவாத மனப்போக்கை வெளிப்படுத்துகின்றன. இந்தியா எதிர்ப்பு பேச்சுகள் மற்றும் மதவெறி மனநிலைகள், சிறுபான்மையினர் வாழும் சூழலை பாதித்துள்ளன. இந்துக்கள் மீதான பகைமை, தீ*விரவாதமாக அல்லாமல் ‘சிந்தனையியல் எதிர்ப்பு’ என வடிவமைக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது. இதனால் அரசியல் இயக்கமும் சமூக அச்சுறுத்தலும் இடையே உள்ள வரம்பு மங்கிவருகிறது.
மாற்றம், சீர்திருத்தம், மாணவர் இயக்கம் போன்ற பெயர்களில் முன்வைக்கப்படும் கருத்துகள் பல நேரங்களில் தீ*விரவாத நோக்கங்களுக்கு மறைவாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்தியாவின் சர்வதேச வளர்ச்சியை எதிர்த்து தன்னை நிலைநிறுத்தும் அரசியல் நிலைப்பாடுகளின் பக்க விளைவாக, உள்நாட்டு சிறுபான்மையினர் பாதிக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனமும் எழுகிறது.
டிசம்பர் மாத கொ*லைகளில் பல, மத அவமதிப்பு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன. ஆதாரம் இல்லாமல் அல்லது முறையான விசாரணை இன்றி எழும் இத்தகைய குற்றச்சாட்டுகள், கூட்டத்தைத் தூண்டி கடுமையான வன்முறைக்கு வழிவகுக்கின்றன. சிலருக்கு மிரட்டல், வசூல் அல்லது பிற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், சட்ட நடைமுறைக்கு பதிலாக கூட்டமே தண்டனை வழங்கும் நிலை மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
மய்மென்சிங் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து ஆடைத் தொழிலாளி டிபு சந்திர தாஸ் சம்பவம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பணியிட நிகழ்ச்சியில் இஸ்லாமை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவர், கூட்டத்தினரால் தாக்கப்பட்டு, மரத்தில் கட்டப்பட்டு, தூக்கிலிட்டு பின்னர் தீவைக்கப்பட்டார். பின்னர் விசாரணையில் நேரடி ஆதாரம் எதுவும் இல்லை என கூறப்பட்டது. இது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எவ்வளவு எளிதில் மரண தண்டனையாக மாறுகின்றன என்பதை காட்டுகிறது.
அதேபோல், ராஜ்பாரி மாவட்டத்தில் அம்ரித் மொண்டல் தாக்கி கொ*ல்லப்பட்டார். அவரது குற்றப் பின்னணியை முன்வைத்து அதிகாரிகள் சம்பவத்தை மத சார்ந்ததாக அல்ல என்று விளக்க முயன்றனர். எனினும், கைது மற்றும் நீதிமன்ற விசாரணைக்கு பதிலாக கூட்டத் தாக்குதலில் உயிரிழந்தது, சிறுபான்மை சமூகத்தில் சட்டப் பாதுகாப்பு பற்றிய நம்பிக்கையை மேலும் குறைத்துள்ளது.

இந்தக் கொ*லைகள், நாட்டின் பல மாவட்டங்களில் பரவியிருந்த போராட்டங்கள் மற்றும் அரசியல் நிலையற்ற சூழலில் நடைபெற்றன. இத்தகைய காலங்களில், இந்து சமூகமே அதிகளவில் இலக்காக மாறுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
மதம் அரசியல் கருவியாக பயன்படுத்தப்படும் நிலை அதிகரித்துள்ளது. சில தீவிர அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள் மத தேசியவாதத்தை முன்வைத்து ஆதரவை திரட்டுகின்றன. ஆட்சித் திட்டங்களுக்குப் பதிலாக அடையாள அரசியலை முன்வைக்கும் சூழலில், இந்துக்கள் எளிதில் இலக்காக மாறுகின்றனர்.
மொஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இந்தக் கொ*லைகளை கண்டித்து, கூட்டநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சில சம்பவங்களில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படுவது சம்பவத்திற்குப் பிந்தைய கண்டனங்களால் அல்ல; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான பொறுப்பேற்பு மூலம் மட்டுமே.
பங்களாதேஷில் இந்துக்கள் மீதான துன்புறுத்தல்கள் ஒருமுறை நிகழ்ந்து மறையும் நிகழ்வுகள் அல்ல; மீண்டும் மீண்டும் எழும் குற்றச்சாட்டுகள், மீண்டும் மீண்டும் கூடி வரும் கூட்டங்கள், மீண்டும் மீண்டும் நிகழும் உயிரிழப்புகள் – இவை அனைத்தும் ஒரு அமைப்புசார் அரசியல் ரீதியான பிரச்சனையை சுட்டிக்காட்டுகின்றன.

மத அல்லது குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும், அவை சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டும். அரசியல் சூழ்நிலைகளைக் கடந்து சிறுபான்மையினருக்கு சமமான பாதுகாப்பு வழங்கப்படாத வரை, பங்களாதேஷில் இந்துக்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் தொடரும் என்ற அச்சம் நீடிக்கிறது.

பாஜக எடுத்த மாஸ்டர் பிளான்… பழனியில் களமிறங்கும் இளைஞர்…! அதிரடி மாற்றம்!

0

பழனி சட்டமன்ற தொகுதியில் அடுத்தடுத்த தேர்தலை முன்னிட்டு பாஜக வட்டாரத்தில் இளைஞர் முகமாக M.கமலேஷ் கண்ணன் அவர்களின் பெயர் பலமாக பேசப்பட்டு வருகிறது. 35 வயதுடைய இவர், BCA பட்டதாரி மட்டுமல்லாமல், கடந்த பத்து ஆண்டுகளாக கட்சி மற்றும் மக்கள் பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் எனக் கூறப்படுகிறது.

2012 ஆம் ஆண்டு இளைஞர் இயக்கத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய கமலேஷ் கண்ணன், 2014ல் பாஜகவில் இணைந்து, மாவட்ட இளைஞரணி செயலாளர், மாவட்ட தலைவர் (விளையாட்டு மேம்பாட்டு பிரிவு) போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது மாநில துணைத்தலைவர் (இளைஞரணி) பொறுப்பில் இருந்து கட்சித் தளவமைப்பை வலுப்படுத்தி வருகிறார் என தகவல்.

பழனி தொகுதியில் 2000க்கும் மேற்பட்ட புதிய இளைஞர்களை கட்சியில் இணைத்தது, 45,000க்கும் மேற்பட்ட மக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பது போன்ற கள பணிகள் அவருக்கு தனி அடையாளமாக அமைந்துள்ளன. சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, 100க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கியது, மாதந்தோறும் அன்னதானம் நடத்தியது, “Drug-Free Palani” போன்ற விழிப்புணர்வு இயக்கங்களை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் Rope Car சேவை சீரமைப்பு, Underground Sewerage திட்டம் நிறைவு, பல்துறை சிறப்பு மருத்துவமனை தேவை, Mega Food Park அமைப்பு, விவசாய மற்றும் குடிநீர் பிரச்சனைகள் போன்ற முக்கிய உள்ளூர் கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார் என கூறப்படுகிறது.

ஆன்மிக மையமாக திகழும் பழனியில் கோவில் சார்ந்த சேவைகள், இளைஞர் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள் மூலம் பரவலான ஆதரவை பெற்றுள்ளதால், பாஜக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக இவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கட்சி வட்டாரத்தில் நிலவுகிறது.

இளைஞர் முகம், களத்தில் நேரடி செயற்பாடு, அமைப்பு வலிமை ஆகிய மூன்றையும் இணைக்கும் வேட்பாளராக கமலேஷ் கண்ணன் உருவெடுத்து வருகிறார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

15 சீட், மத்திய அமைச்சர் பதவி.. “தேமுதிக போடும் ரகசிய டீல்”.. தலையசைக்கப் போகும்பாஜக..

0

BJP DMDK: சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் இருக்கும் வேலையில் ஆளும் கட்சி முதல் எதிர்கட்சி வரை கூட்டணி குறித்த முடிவில் உறுதியாக இல்லை. குறிப்பாக தேமுதிக-வானது மாநாட்டில் தங்களது கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என கூறியது. ஆனால் தற்போது வரை யாருடன் கூட்டணி எனக் கூறாமல் மறைமுக பேச்சு வார்த்தையே நடத்தி வருகிறது. ஆதிக்கம் இருக்கும் ஒவ்வொரு கட்சியினரிடமும் தேமுதிக பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியானது.

இது ரீதியாக பிரேமலதா விஜயகாந்த் கூட, நாங்கள் ஏன் பேரம் பேசக்கூடாது என்று கூறியிருந்தார். இவ்வாறு இருக்கையில் தேமுதிக பாஜகவிற்கு கொடுத்த நிபந்தனையில், எங்களுக்கு 15 சீட்டுக்கு மேல் வேண்டும் அது மட்டுமில்லாமல் மத்திய அமைச்சரவையில் ஒரு பதவி என டிமாண்ட் வைத்துள்ளனர். ஆனால் இது சாத்தியமில்லாதது என அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருப்பினும் சமரச பேச்சு வார்த்தை மூலம் கூட்டணிக்குள் இணைக்க பாஜக முயன்று வருகிறது.

அதன்படி மத்திய இணையமைச்சர் வேல்முருகன் கூறியதாவது, மேலிடம் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இதன் இறுதி முடிவை தேசிய தலைமை அறிவிக்கும் என கூறியுள்ளார். தேமுதிக வைக்கும் நிபந்தனைகளுக்கு ஏதேனும் ஒன்றையாவது பாஜக செய்து கொடுத்தால் தான் கூட்டணி உறுதியாகும் என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆனால் பாஜக சார்ந்த மற்ற கூட்டணி கட்சிகள் இதற்கு இடம் கொடுக்குமா என்பது கேள்விக்குறிதான்.

நாடாளுமன்ற பேச்சு.. “கமல் மீது குற்றமில்லை” அண்ணாமலை பகீர் பேட்டி..

0

BJP: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தனை வருடம் இருந்த அரசியல் களமானது மாறி தற்போது புதிய மாற்றத்தை பார்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது வரை திமுக அதிமுக பாஜக என யாரும் ஒருசேர கூட்டணியை உறுதி செய்யவில்லை. அதிலும் பாஜகவில் அதிமுக இணைப்புக்குப் பிறகு நயினார் பொறுப்பேற்றார்.

ஆனால் அண்ணாமலைக்கு இருந்த மரியாதை இவருக்கு கிடைக்கவில்லை. பின்பு அண்ணாமலைக்கு, மத்தியில் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது என்று கூறி வந்தனர். ஆனால் சட்டமன்ற தேர்தல் தொகுதி பொறுப்பாளர் பதவி தான் கொடுக்கப்பட்டது. தற்போது அவர் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொண்டார். அரசியல் பேசும் நெட்டிசன்களோ பல காரணங்களை கூறி வந்தனர்.

டம்மி பொறுப்பு கொடுத்து பாஜக அவரை ஓரங்கட்டி விட்டதாக கூறப்பட்டது. இதனிடையே அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிப்பதாகவும் கமலாலைய வட்டாரங்கள் அசை போட்டனர். இத்தனை விமர்சனங்களுக்கும் அண்ணாமலை முற்றுபுள்ளி வைக்கும் விதத்தில் நான் தனியாக போட்டியிடவில்லை, மூத்த தலைவர்கள் மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள் நாங்கள் ஒற்றுமையுடன் அன்பாக இருக்கிறோம் என கூறினார்.

இதனிடையே கமல்ஹாசன் நிர்மலா சீதாராமன் இடையே பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்குவாதம் குறித்து பேசியுள்ளார். அதில் கமலஹாசன் நல்ல நடிகர் அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது, ஆனால் மாநிலங்களவையில் புரியாமல் பேசியுள்ளார். நிர்மலா சீதாராமன் அம்மையார், தமிழை பற்றி அநாகரீகமாக மற்றவர்கள் பேசுகிறார்கள் என்று கூறியதை தவறாக புரிந்து கொண்டார். கமல்ஹாசனுக்கு அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும்போது அதனை திருத்திக் கொள்வார்.

தமிழ்நாட்டிற்கு உழைக்க வேண்டும் என்ற முனைப்போடு ராஜ்யசபா உறுப்பினராக இருப்பதால் அவர் மீது தவறான கருத்துடைய குற்றத்தை சுமக்க நான் விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். அண்ணாமலை பொறுப்பிலிருக்கும் போது இருந்த பேச்சு முனைப்பு தற்போது இல்லை. இவையனைத்திற்கும் பாஜக தான் காரணம் என்றும் விருப்பமில்லாமல் கடமைக்கு கட்சியில் இருப்பதாக தெரிகிறது என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.