Home Blog Page 5

அன்புமணிக்கு வந்த வினை.. ராமதாஸின் அதிரடி ஆக்சன்.. சரியும் பாமக கோட்டை..

0

PMK: இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரம் காட்டி வரும் வேளையில் பாமகவில் மட்டும் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட தலைமை பிரச்சனை தற்போது வரை தீர்ந்த பாடில்லை. இது அண்மை காலமாக உச்சத்தை எட்டிய நிலையில், நிறுவனர் ராமதாஸ் புதிதாக ஒரு செய்தியை கூறியுள்ளார். அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் மூன்று பேரை கட்சியிலிருந்து நீக்க உத்தரவு பிறப்பித்துள்ள அவர் இன்னும் சில முக்கிய முடிவுகளையும் கூடிய விரைவில் அறிவிப்பார் என்று பாமகவின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாமக இரண்டாக பிரிந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் தலைவராக அன்புமணி இருந்த நிலையில், இளையரணி தலைவராக ராமதாசின் பேரன் முகுந்தன் நியமிக்கப்பட்டார். இதில் விருப்பமில்லாத அன்புமணி அவரது எதிர்ப்பை மேடையிலேயே வெளிப்படுத்தியிருந்தார். அப்போது ஆரம்பித்த மோதல் டெல்லி உயர்நீதி மன்றம் வரை சென்று விட்டது. ராமதாஸுக்கு எதிராக அன்புமணி சில செயல்பாடுகள் செய்து வந்ததால் அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. இதனால் ராமதாஸ் இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வதாக கூறி டெல்லி உயர் நீதிமன்றம் செல்ல, அங்கும் அன்புமணிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. அன்புமணி தான் தலைவர் என்பதை மறுக்காத நீதிமன்றம், பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்க உத்தரவிட்டது.

இவ்வாறான நிலையில் தான், அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாசின் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் போன்ற செயல்கள் அங்கேறி வந்தன. அந்த வகையில், தற்போது அன்புமணியின் ஆதரவு எம்எம்ஏ-க்களான மயிலம் சட்டமன்ற உறுப்பினர் .ச.சிவகுமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி. வெங்கடேஸ்வரன் ஆகிய 3 மூன்று பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகலிளிருந்தும் நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த நிகழ்வு அன்புமணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் பலரும் கூறுகின்றனர். 

கடுமையான குளிர் அலைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது – எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை

“கடுமையான குளிர் அலைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; இதயம், நுரையீரல், சிறுநீரகம் தொடர்பான நோயாளிகள் அதிக ஆபத்தில் உள்ளனர்” – எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை

வட இந்தியா முழுவதும் கடந்த திங்கட்கிழமை கடுமையான குளிர் அலை வீசியதால், இந்த பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகி, கடும் குளிர் சூழல் நிலவியது. தேசிய தலைநகர் டெல்லி உட்பட பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், AIIMS Delhi மருத்துவர்கள், கடுமையான குளிர் நிலை நீடித்தால் இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் மாற்றுச் சுரப்பி (metabolic) தொடர்பான நீண்டகால நோய்கள் உள்ளவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் தீவிரமடையக்கூடும் என எச்சரித்துள்ளனர்.

டெல்லியில் 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்த ஜனவரியில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. நகரின் பல வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது. சப்தர்ஜங் வானிலை நிலையம் 3.2 டிகிரி செல்சியஸ் என பதிவு செய்துள்ளது; இது இந்த பருவத்தில் இதுவரை பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாகும். தேசிய தலைநகர் பிராந்தியத்தின் புறநகர் பகுதிகளில், சில இடங்களில் பூஜ்யத்துக்கு அருகிலான வெப்பநிலையும் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

India Meteorological Department (இந்திய வானிலை ஆய்வு மையம்) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த கடும் குளிர் நிலை இன்னும் சில நாட்கள் தொடரக்கூடும். வட இந்தியாவின் சில பகுதிகளில் தனித்தனியாக கடுமையான குளிர் அலை நிலவ வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதய நோய்களுக்கு குளிர் ஆபத்து அதிகம் என Dr Rajiv Narang, எய்ம்ஸின் இதயவியல் பேராசிரியர் தெரிவித்துள்ளார். குளிர்காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்குவதால், நீர் அருந்தும் அளவு குறைவதாலும், உப்பு உணவு அதிகரிப்பதாலும் ரத்த அழுத்தம் உயரும் அபாயம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக இதயஅட்டாக் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகமாகும் என்று அவர் கூறினார். கடும் குளிரும் காற்று மாசும் இருக்கும் நேரங்களில், குறிப்பாக அதிகாலை நடைபயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என்றும், இதய நோயாளிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும், வெப்ப அலைகளைப் போலவே குளிர் அலைகளையும் தீவிரமான பொது சுகாதார பிரச்சனையாகக் கருதி, அரசு மட்டத்தில் குளிர் செயல் திட்டங்கள் (Cold Action Plans) அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு குளிர் காற்று மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என எய்ம்ஸின் மருத்துவத் துறையைச் சேர்ந்த Dr Sanjeev Sinha தெரிவித்துள்ளார். நேரடியாக குளிர் காற்றை சுவாசிப்பதால் சுவாச பாதைகள் எரிச்சலடையும்; இதனால் மூச்சுத் தளங்களில் சுருக்கம் ஏற்பட்டு, திடீர் மூச்சுத்திணறல் (bronchospasm) ஏற்படலாம் என அவர் விளக்கினார். குறிப்பாக சிஓபிடி (COPD), நீண்டகால பிராங்கைட்டிஸ், எம்ஃபிசீமா மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். குளிர் அலைகளின் போது இத்தகைய நோயாளிகளில் இருமல், மூச்சுத்திணறல் மற்றும் சீழ்விசிறல் அதிகரிப்பதோடு, நிமோனியா போன்ற தொற்றுகளுக்கும் ஆளாகும் அபாயம் உள்ளது என்றார்.

தற்போது வெளிநோயாளர் பிரிவுகளில் குளிர் தொடர்பான சுவாசப் பிரச்சனைகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தினமும் ஏழு முதல் பத்து பேர் வரை இதுபோன்ற குறைபாடுகளுடன் வருவதாகவும் அவர் தெரிவித்தார். அவசியம் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம், பல அடுக்குகளாக சூடான உடைகள் அணியவும், மருந்துகள் மற்றும் இன்ஹேலர்களை தவறாமல் பயன்படுத்தவும், சூடான திரவங்களை அருந்தவும் அவர் அறிவுறுத்தினார். குளிர் அலைகளும் வெப்ப அலைகளைப் போலவே உடலில் பெரும் உடலியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால், வட இந்தியா இதை ஒரு தீவிரமான பொது சுகாதார சவாலாக உணர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கான பராமரிப்பு சிரமமாகிறது என எய்ம்ஸின் மாற்றுச் சுரப்பி நிபுணர் Dr Rajesh Khadgawat தெரிவித்துள்ளார். குளிர் காரணமாக உடற்பயிற்சி குறைவதால், இரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது கடினமாகிறது என்றார். எனவே, வீட்டிற்குள் நீட்டிப்பு பயிற்சி, யோகா அல்லது லேசான உடற்பயிற்சிகள் மூலம் செயலில் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். மேலும், பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி அவசியம் என்றும், நிமோகாக்கல் தடுப்பூசி (PPS23) நிமோனியா, இரத்தத் தொற்று மற்றும் மெனிஞ்ஜைட்டிஸ் போன்ற கடுமையான தொற்றுகளிலிருந்து பாதுகாப்பளிக்கிறது என்றும் அவர் விளக்கினார்.

குளிர் அலைகளின் போது குழந்தைகள், குறிப்பாக乳குழந்தைகள் மற்றும் காலத்துக்கு முன் பிறந்த குழந்தைகள் அதிக ஆபத்தில் இருப்பதாக எய்ம்ஸின் குழந்தை மருத்துவ பேராசிரியர் Dr Rakesh Lodha எச்சரித்துள்ளார். குழந்தைகளின் உடல் எடையை ஒப்பிடும்போது தோல் பரப்பளவு அதிகமாக இருப்பதால், உடல் வெப்பம் வேகமாக இழக்கப்படும் என்றார். இதனால் சோர்வு, சரியான உணவு உட்கொள்ள முடியாமை மற்றும் மூச்சுப் பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும், குளிர்காலத்தில் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான முக்கிய காரணம் சுவாசத் தொற்றுகளே என்றும் அவர் கூறினார். தலை பகுதியை மூடுவது மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிறுநீரக நோயாளிகளுக்கு குளிர்காலத்தில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மிக முக்கியம் என எய்ம்ஸின் நெப்ராலஜி பேராசிரியர் Dr Sandeep Mahajan தெரிவித்துள்ளார். பெரும்பாலான சிறுநீரக நோயாளிகள் உயர் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருப்பதால், குளிர்காலத்தில் அதைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றார். பெரும்பாலான நோயாளிகளுக்கு 130/80 மிமீ ஹெச்.ஜி.க்கு கீழ் ரத்த அழுத்தத்தை வைத்திருக்க வேண்டும் என்றும், முதியவர்களுக்கு 140–145 வரை அனுமதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். அதிக உப்பு மற்றும் புரத உணவுகளைத் தவிர்க்கவும், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பசலைக் கீரை, கடுகுக் கீரை போன்ற பருவ கீரைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.

மொத்தத்தில், குளிர் அலைகள் வெறும் வானிலை மாற்றம் மட்டுமல்ல; அவை மனித உடலுக்கு தீவிரமான சுகாதார அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, தனிநபர் மட்டத்திலும் அரசியல் மற்றும் நிர்வாக மட்டத்திலும் விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சரியான மருத்துவ பராமரிப்பு அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சீமானுக்கு சப்போர்ட் பண்ண அண்ணாமலை.. பாஜக போடும் அரசியல் கணக்கு.. வலையில் விழப் போகும் நாதக..

0

BJP NTK: 2026 க்கான சட்டசபை தேர்தல் அடுத்த இரண்டு மாதங்களில் நடைபெற இருப்பதால் அதற்கான தேர்தல் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி கணக்குகளை வகுத்து வரும் வேளையில் நாதக மட்டும் ஒவ்வொரு முறையும் தனித்து நின்று ஆட்சியை பிடிப்பேன் என்று கூறி வருகிறது. தமிழகத்தில் ஓரளவு வாக்குகளை வைத்துள்ள நாதக இம்முறையும் அதே போல் தனித்து நின்று களம் காணப் போகிறது. நாதகவின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிமுக, திமுக, பாஜக என அனைத்து கட்சிகளையும் எதிரியாக நினைத்து வருகிறது.

அனைத்து கட்சிகளையும் எதிரி என்று கூறி வரும் சீமான் தனித்து நின்று ஓரளவு வாக்குகளை சேகரித்துள்ளார். இந்நிலையில் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,  2026 தேர்தல் நான்கு முனை போட்டியை சந்திக்க உள்ளது, சீமானை யாரும் லேசாக எடைபோட வேண்டாம். அவர் அவரது கொள்கைக்காக நிற்கிறார். அவரது கொள்கை எனக்கு புடிக்குமோ பிடிக்காதோ அது இரண்டாம் பட்சம், ஆனால் அவர் அவரது கொள்கையில் உறுதியாக உள்ளார் என்று கூறியுள்ளார்.

பாஜகவை சீமான் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில் அண்ணாமலை அவருக்கு ஆதரவாக பேசி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனால் பாஜக சீமானை, கூட்டணியில் சேர்க்க முயற்சிகிறது என்பது தெளிவாகியுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் 2026 தேர்தல் போட்டி வாய்ந்ததாக உள்ளதால் சீமான் பாஜகவில் இணைவார் என்று பலரும் கூறி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அண்ணாமலையின் இந்த கருத்து பாஜக மற்றும் நாதக வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.  

திமுக உடன் தான் தொடர்வோம்.. கூட்டணி கட்சி சொன்ன குட் நியூஸ்.. ஹாப்பி மோடில் அறிவாலயம்..

0

DMK KMDK: மார்ச் மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும் அதற்கான வேளைகள் நடந்து வருகின்றன. திராவிட கட்சிகள், மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வரும் நிலையில், சிறிய கட்சிகளனைத்தும் வெற்றி வாய்ப்புள்ள கட்சியில் சேர முயற்சித்து வருகின்றன. மேலும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எப்போதும் போலில்லாமல் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக-திமுகவின் போட்டியை மட்டுமே பார்த்து கொண்டிருந்த தேர்தல் களம் தற்போது நாதக-தவெகவின் போட்டியையும் எதிர்நோக்கியுள்ளது. தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக, 2026 தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில், முதலில் கூட்டணியை பலப்படுத்த முயற்சித்து வரும் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறது. ஆனால் காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் ஆட்சி பங்கை வலியுறுத்தி வருவது திமுக தலைமைக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் திமுக உடன் பல ஆண்டுகளாகவே கூட்டணியில் உள்ள நிலையில், அது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

ஆனால் இவை இரண்டும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவ்வாறான நிபந்தனைகளை முன்வைத்து வருவது அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் திமுகவிற்கு இன்ப  அதிர்ச்சியாக இருக்குமென்று பலரும் கூறுகின்றனர். திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கொங்கு மக்கள் தேசிய கட்சி அக்கூட்டணியிலேயே தொடரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இவர் கூறிய இந்த செய்தி திமுக தலைமைக்கு பக்க பலமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனக்கு வருத்தம்பா.. ஜனநாயகனுக்கு ஆதரவு தெரிவித்த பாஜகவின் முக்கிய புள்ளி.. ஷாக்கான டெல்லி மேலிடம்..

0

BJP TVK: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்து, இக்கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகம் ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவிருந்த நிலையில், இந்த படத்திற்கு சென்சார் போர்ட் வழங்காத விவகாரம் தொடர்பாக திரைப்படம் ரிலிஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இது பாஜகவின் சதி என்று கூறப்பட்ட சமயத்தில், பாஜகவின் மகளிரணி நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு ஜனநாயகன் திரைக்கு வராததில் எனக்கு மிகவும் வருத்தம் என்று கூறி, விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிதாக உதயமான கட்சியான தவெக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் ஆரம்பத்திலேயே பாஜகவை கொள்கை எதிரி என்று கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், கரூர் விவகாரத்தில் பாஜக விஜய்க்கு முழு ஆதரவு அளித்தும், அவர் பாஜகவிற்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை. இது மட்டுமில்லாமல், விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்ட பாஜக அவரை கூட்டணியில் சேர்க்க எவ்வளவு முயற்சித்தும் விஜய் அவரது முடிவில் தெளிவாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் விஜய்யையும், தவெகவையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கி விட்டனர்.

இவ்வாறான நிலையில் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனுக்கு சென்சார் போர்டு வழங்காத விவகாரம் காரணமாக படம் திரைக்கு வராமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தணிக்கை வாரியம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், சென்சார் போர்டு வழங்காதது பாஜகவின் சதி திட்டம் என்று பலரும் கூறி வரும் சமயத்தில், பாஜகவின் மகளிரணி நிர்வாகி குஷ்பு, ஒரு விஜய் ரசிகையாக ஜனநாயகன் படம் வெளிவராததற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து டெல்லி மேலிடத்தில் புகைச்சலை கிளப்பியுள்ளது.

காங்கிரசுக்கும் ஆட்சியில் பங்கு.. மௌனம் கலைத்த செல்வப்பெருந்தகை.. சுக்குநூறாகும் திமுக கூட்டணி..

0

DMK CONGRESS: அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக ஆளுங்கட்சியான திமுக ஏகப்பட்ட முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. ஆனால் அதன் கூட்டணி கட்சிகளோ திமுகவின் தோல்விக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு விசியங்களை செய்து வருகின்றன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் வேளையில். தற்போது ஆட்சி பங்கு குறித்த கேள்விக்கு மௌனம் சாதித்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

விஜய் தமிழக அரசியலில் கால் பதித்ததிலிருந்தே காங்கிரஸ் கட்சி திமுகவிடம் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. அந்த வரிசையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் போன்றோர் ஆட்சியில் பங்கு தராவிட்டால் வேறு மாதிரியான முடிவுகளை எடுப்போம் என்று ஸ்டாலினை எச்சரித்திருந்தனர். இவர்களை தொடர்ந்து விசிகவும் இந்த நிபந்தனையை முன் வைத்து வந்தது திமுக தலைமைக்கு பேரிடியாக இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைச்சர் பெரியசாமி ஆட்சியில் பங்கு கிடையாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார் என்று காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்தார்.

இவரை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இது குறித்து கேட்ட போது, அவர் பதிலளிக்காமல் சென்றது, அவரும் ஆட்சி பங்கை எதிர்பார்க்கிறார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இத்தனை நாட்களாக முழுக்க முழுக்க திமுகவிற்கு ஆதரவாகவும், காங்கிரஸ் கட்சியிலிருப்பவர்கள் ஆட்சி பங்கை கேட்டால் அவர்களை கண்டித்தும் வந்த செல்வப்பெருந்தகை, தற்போது மௌனமாக சென்றது கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் கூடிய விரைவில் செல்வப்பெருந்தகையும் ஆட்சி பங்கு குறித்து நேரடியாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திடீர் திருப்பம்.. திமுக உடன் பாமக கூட்டணி.. ட்விஸ்ட் வைத்து பேசிய ராமதாஸ்..

0

PMK DMK BJP: இன்னும் சில தினங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தொடங்கி கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில் திமுக இந்த முறையும் ஆட்சி கட்டிலை தன்வசப்படுத்தியே வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. மேலும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் இதில் வெற்றி பெற போராடி வருகிறது. மூன்றாம் நிலை கட்சிகளனைத்தும் வெற்றி கூட்டணியில் இடம் பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இவ்வாறான சமயத்தில் தான் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. இந்த பிரிவினை தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலர் கூறியும் அன்புமணியும், ராமதாசும் ஒன்று சேர தயாராக இல்லை. இவ்வாறு இரண்டாக பிரிந்துள்ள பாமகவின் ஒரு பகுதியான அன்புமணி தரப்பு, சில தினங்களுக்கு முன்பு அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்து விட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் முழு அதிகாரமும் எனக்கு மட்டுமே உள்ளது. அன்புமணியின் செயல் சட்டவிரோதமானது.

இதனால் அன்புமணியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸிடம் திமுக உடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று கேட்ட போது, யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. திமுக உடன் கூட்டணி அமையலாம், அமையாமலும் போகலாம் என்று கூறிய அவர், தற்போது வரை NDA கூட்டணியிலிருந்து வெளியேறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

படை பலத்தை காட்டிய ஸ்டாலின்.. மாபெரும் கட்சியை தட்டி தூக்கிய திமுக.. கொண்டாட்டத்தில் அறிவாலயம்.. 

0

DMK: தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலுக்காக விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்காக முதலில் தனது கூட்டணியை பலப்படுத்தி வரும் திமுக தலைமைக்கு ஜாக்பாட் அடித்ததை போல புதிய கட்சி ஒன்று இணைந்துள்ளது. ஜான்பாண்டியனின் தமமுக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திமுக அமைச்சர் ராஜகருப்பன் கூறியுள்ளார். திமுக உடன் தேசிய கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக மற்றும் இன்னும் சில சிறிய கட்சிகள் பல ஆண்டுகளாகவே அங்கம் வகித்து வருவதால் மற்ற கட்சிகளை காட்டிலும் திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது.

தற்போது அதிமுக பலமிழந்து காணப்படுவதால் இதனை பயன்படுத்தி கடந்த 10 தேர்தல்களிலும் திமுக வெற்றியடைந்து வருகிறது. மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளில் இம்முறை வெற்றி பெற அங்கு முக்கிய அமைச்சர்களை நியமித்துள்ளது. அது மட்டுமல்லாமல், நான்கரை ஆண்டுகளில் திமுக செயல்படுத்திய திட்டங்களை மக்களுக்கு நினைவுப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்சிகளையும் நடத்தி வருகிறது. மேலும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகளவு வாக்குறுதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

இவ்வாறு பல்வேறு முயற்சிகளை செய்து வரும் திமுகவிற்கு விஜய்யின் அரசியல் வருகை அதிருப்தியை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து, திமுக தான் தமது அரசியல் எதிரி என்று கூறியதோடு, திமுகவின் கூட்டணி கட்சிகளை தவெக பக்கம் இழுக்க முயற்சித்தார். ஆனால் தற்போது வரை அது ஈடேறவில்லை. இப்படி தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுகவிற்கு பல்வேறு பிரச்சனைகள் நெருங்கி வரும் வேளையில் தமமுக கட்சி திமுகவில் இணைவது அதற்கு பலத்தை கூட்டும் வகையில் அமைந்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தேமுதிகவிற்கு வலை வீசிய ஸ்டாலின்.. தூண்டிலில் சிக்கிய பிரேமலதா.. சூடாகும் களம்.. 

0

DMDK DMK: தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் வெளியாகுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது இருக்கும் சூழலில் எந்த ஒரு கட்சியும் தனித்து நின்று வெற்றி பெறுவது கடினம். அதனால் திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மூன்றாம் நிலை கட்சிகளான பாமக, தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தான் தேமுதிக, திமுக கூட்டணியில் சேர சம்மதம் தெரிவித்து விட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடந்த தேமுதிக மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பதாக கூறியிருந்த பிரேமலதா, இதுவரை யாரும் கூட்டணியை அறிவிக்காத போது, நாங்கள் மட்டும் ஏன் அவசர படவேண்டும் என கூறி, பொங்கலுக்கு பிறகு கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறி அதிருப்தியை ஏற்படுத்தினார்.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தேமுதிக, அதிமுக, திமுக, தவெக என மூன்று பக்கமும் கதவை திறந்து வைத்திருந்தது. மேலும் பிரேமலதா மேற்கொண்ட பிரச்சாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பிரேமலதாவை சந்தித்து பேசியதால் அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியாகும் என்று எண்ணப்பட்டது. ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் ராஜ்யசபா சீட் தராத விவகாரத்தில் தேமுதிக இபிஎஸ் மீது கடும் கோபத்தில் இருந்தது. அதோடு பிரேமலதா அவரை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இதனால் இந்த கூட்டணி முடிவுக்கு வராது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் அதிக தொகுதிகளையும், ராஜ்யசபா சீட்டையும் ஒதுக்குபவர்களுடன் தான் கூட்டணி என்று பிரேமலதா கூறியதால், விஜயுடன் கூட்டணி இல்லையென்பதும் தெளிவானது.

இதனை பயன்படுத்தி கொண்ட திமுக,தேமுதிகவை தன் பக்கம் இழுக்க முயற்சிதுள்ளது. இதற்காக திமுகவின் டாப் தலை ஒருவரை பிரேமலதாவிடம் பேச அனுப்பியதாக தகவல் கசிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், ஒரு ராஜ்யசபா சீட்டும், இரட்டை இலக்க தொகுதிகளும் ஒதுக்குவதாக கூறியுள்ளதால் தேமுதிக, திமுக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து விட்டது என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது திமுக கூட்டணி மட்டுமே பலமாக உள்ளதாலும், இந்த முறையும் திமுக தான் வெற்றி பெரும் என்று சில கருத்து கணிப்புகள் கூறுவதாலும் பிரேமலதா இந்த கூட்டணிக்கு தலையசைத்து இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

விஜய்க்கு அடுத்தடுத்து செக்.. சிபிஐ அனுப்பிய சம்மன்.. முடிவுக்கு வரும் கரூர் விவகாரம்..

0

TVK: அடுத்த 2 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக இம்முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமெனவும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக ஆட்சி கட்டிலை பிடிக்க வேண்டுமெனவும் போராடி வருகிறது. இந்நிலையில் தான் புதிதாக உதயமான கட்சியான தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்து முதல்வர் இருக்கையில் அமர வேண்டுமென போராடி வருகிறது.

இவ்வாறான சமயத்தில் கரூரில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் விசாரணை நடத்திய சிபிஐ அடுத்ததாக விஜய்யிடம் விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்பியது. இதன் காரணமாக விஜய் இன்று டெல்லி புறப்பட்டுள்ளார். ஒன்றரை வருடத்திற்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றிய விஜய் 2026  தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்ததிலிருந்தே தவெகவுக்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு உள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் சந்திப்பை தொடங்கிய விஜய் 6 வதாக கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு நாட்டையே உலுக்கிய நிலையில், சில போரட்டங்களுக்கு பிறகு இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கபட்டது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ, நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களான தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை விசாரித்த நிலையில் தற்போது கட்சி தலைவர் விஜய்யையும் விசாரிக்க இருப்பதால், விஜய் இன்று காலை 6 மணியளவில் தனது தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். தமிழக தேர்தல் களத்தில் விஜய்யின் அரசியல் வருகை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கரூர் விவகாரம் அதனை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.