Home Blog Page 54

வெளியே லீக்கான லேப்டாப் வழங்கும் தேதி.. குஷியில் மாணவர்கள்!!

0

DMK: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய பெரும்பான்மையான நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி இருந்த வரை வழங்கி வந்த விலையில்லா மடிக்கணினி அதன் பின் வந்த திமுக எந்த ஆண்டு மாணவர்களுக்கும் தரவில்லை. இதேபோல இலவச பேக் புத்தகங்கள் பெண்களுக்கு தேவையான நாப்கின் உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது இது ஏதும்  நடைமுறையில் இல்லை.

இதே போல மிதிவண்டி வழங்கவும் காலதாமதம் ஆனது. தொடர்ந்து இது ரீதியாக கோரிக்கை எழுப்பிய பின் பரிந்துரை செய்து மிதிவண்டி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அரசு பள்ளியில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி, மிதிவண்டி வழங்கும் நலத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன்பின் வரும் திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளிலும் மிதிவண்டி வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

ஆனால் தேர்தல் காலம் முடியும் சமயத்தில் அனைவருக்கும் மடிக்கணினி வழங்குவது ரீதியாக டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. அப்படி மடிக்கணினி வழங்கும் பட்சத்தில் தற்போது கடந்த ஆண்டு மாணவர்கள் அதற்கு முன்பு இருந்த மாணவர்கள் என அனைவருக்கும் கிடைக்குமா என்பது சற்று சந்தேகம்தான். கட்டாயம் தேர்தலுக்கு முன் லேப்டாப் வழங்கி ஆக வேண்டும் என்ற முடிவை தலைமை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அதிக வாய்ப்புள்ளதாம்.

அரசியலே வேண்டாம்.. நான் வெளிய போறேன்!! விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

0

TVK: தமிழக அரசியல் களத்தில் புதிதாக வந்த விஜய்யை நெருக்கடிக்கு தள்ளும் விதத்தில் தான் ஆளும் கட்சி பல குடைச்சல்களை கொடுத்து வருகிறது. எந்த நடிகருக்கும் கிடைக்காத வரவேற்பானது விஜய்க்கு கிடைத்துள்ளது. இது வெறும் மாயை தான் என பலர் கூறினாலும் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றவர்களுக்கும் இப்படித்தான் வரவேற்பு இருந்தது என அனைவரும் உணர்கின்றனர்.

அதை வைத்து இவரை ஆரம்ப கட்டத்திலிருந்து மூலையில் உட்கார வைத்து விட்டால் எந்த பிரச்சனையும் நேராது என எண்ணுகின்றனர். மேலும் அதிமுக பாஜக போன்ற கட்சிகள் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என முயற்சிக்கிறது. அந்த வகையில் ஆளும் கட்சி கொடுக்கும் தொந்தரவுகளில் உச்சகட்டமாக கரூர் உயிரிழப்பு தான் இருந்தது.

ஒவ்வொரு பிரச்சாரத்திற்கு செல்லும் போது ஏதேனும் தடங்கல்கள் இருந்த நிலையில் கரூரில் மட்டும் கட்டுப்படுத்த முடியாத கூட்டமும் அதற்கு ஏற்ற காவல் பாதுகாப்பும் இல்லை. இதனால் 41 பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது. இதை வைத்து ஒவ்வொரு கட்சியிலும் விஜய்யை ரவுண்டு கட்ட ஆரம்பித்தனர். அதிலும் திமுக, விஜய் மீது வழக்கு மேல் வழக்கு போட்டு இனி பிரச்சாரம் என்பதே இருக்கக் கூடாது எனக் கூறினர்.

ஆனால் கைது நடவடிக்கை மட்டும் செய்யவில்லை. இவ்வாறு செய்துவிட்டால் இவர்களே அவரை அடுத்த கட்ட பெரியாளாக்கி விடுவார்கள் என்பதால் அதனை இறுதிவரை செய்யவில்லை. விஜய் இந்த கரூர் பிரச்சனையிலேயே மிகவும் தொய்வடைந்துவிட்டார். அரசியலே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார். ஆனால் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைப்படி மீண்டும் புதிய ஊந்துதலுடன் தொடங்கியுள்ளார்.

அப்படி இருப்பவருக்கு தான் தற்போது பீகாரின் சட்டப்பேரவை முடிவானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல முக்கிய கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வியூக அமைப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் ஒரு தொகுதியில் கூட இடம்பெறவில்லை. அவருக்கே அந்த நிலை என்றால், நம்மால் என்ன செய்து விட முடியும் என மீண்டும் சிந்திக்கிறாராம். அரசியல் சார்ந்த அனுபவமும் பயிற்சியும் அதிகம் தேவை என உணர்ந்த விஜய் அரசியல் பயணத்தை ரத்து செய்யப் போவதாக பேச்சு அடிபட்டு வருகிறதாம்.

விஜய்யின் அரசியல் வாழ்க்கை பாஜக கையில்.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்!!

0

TVK BJP: தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை இவ்வளவு பரபரப்பாக உள்ளதற்கு காரணம் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் கட்சி துவங்கியதே ஆகும். விஜய்யின் அரசியல் பிரவேசம் யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவை பெற்றது. ஆனால் தவெக சார்பில் நடந்த கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட 41 உயிரிழப்புகள் அவரின் அரசியல் வாழ்க்கையை கேள்வி குறியாக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக அரசு மீது தவெக குறை கூறுவதும், தவெக மீது திமுக தொண்டர்கள் குறை கூறுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், இதனை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு தனி நபர் குழு அமைக்கப்பட்டது. மேலும் விஜய்யை கூட்டணியில் சேர்க்க துடிக்கும் பாஜக கரூர் சம்பவத்தை விசாரிப்பதற்காக 8 பேர் கொண்ட குழுவை அமைத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில் தமிழக அரசின் தனி நபர் குழுவில் நம்பிக்கை இல்லாத விஜய் தரப்பு சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அறிந்த விஜய் நீதி வெல்லும் என்று பதிவிட்டிருந்தார். இவ்வாறான நிலையில், சிபிஐ பாஜக கையில் உள்ளதால் விஜய் பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், அவர் மீது வழக்கு பதியக்கூடும் என்ற கருத்து அரசியல் களத்தில் நிலவி வந்த சமயத்தில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரஷாந்த் ஒரு கருத்தை கூறியுள்ளார்.

விஜய் கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் சிபிஐ விஜய் மீது கூட வழக்கு பதிவு செய்வார்கள். விஜய்யை விசாரணைக்கு உள்ளக்குவார்கள், புஸ்ஸி ஆனந்த், மதியழகன், நிர்மல் குமார் உள்ளிட்டோரை கைது செய்வார்கள் , விஜய்யை கைது செய்து திகார் சிறையில் கூட அடைப்பார்கள். விஜய் பாஜக கூட்டணிக்கு வந்து விட்டால் அவர் குற்றமற்றவர், இல்லையென்றால் துணை முதல்வர் பதவி கூட கொடுக்கலாம். இவையெல்லாம், விஜய்யின் முடிவை பொறுத்து தான் உள்ளது என்று அவர் கூறினார்.

ஸ்டாலினுக்கு எதிராக போர் கொடி தூக்கிய திருமா.. கூட்டணிக்கு வைக்கும் வேட்டு!!

0

DMK VSK: திமுகவை கடந்து மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தற்போது வரை தங்களது கூட்டணியை யாருடன் வைத்துக் கொள்வோம் என்பது குறித்து உறுதிப்படுத்தாமலேயே உள்ளனர். அதிலும் குறிப்பாக தேமுதிக தங்களது மாநாட்டிற்கு பிறகு தான் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று கூறியுள்ளது. இவ்வாறு இருக்கையில் திமுக கூட்டணியிலிருக்கும் கட்சிகளை கலைக்க வேண்டும் என்று பலரும் எண்ணுகின்றனர்.

ஆனால் அவர்களுக்குள்ளேயே உட்கட்சி பூசலானது உள்ளது. அதிலும் திமுக கூட்டணியில் முதன்மையாக இருப்பது திருமாவின் விடுதலை சிறுத்தைகள் தான். அவர்களுக்கு இரண்டு தொகுதிகளை மட்டும் தான் ஒதுக்குகிறது. இது முற்றிலும் நியாயமற்றது என விசிக கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதனால் இம்முறை அதிகளவு தொகுதிகளை கேட்டு திருமா கோரிக்கை வைத்துள்ளார். இவர்களின் கோரிக்கையை தலைமை ஏற்பதாக தெரியவில்லை.

கூட்டணி கட்சியை எதிர்க்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இப்படி ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடக்கும் போது எதிர்கட்சியினர் தான் முக்கிய ஆதரவாக அவர்களுடன் நிற்பார். ஆனால் அவர்களுக்கு முன்பு திமுகவையே எதிர்த்து நிற்கும் வரிசையில் திருமா முதலாவது ஆளாக உள்ளார். இவையனைத்தும் கட்சிக்குள் உள்ள பகையை அப்பட்டமாக  காட்டுகிறது.

சமயம் பார்த்து திருமாவை மாற்றுக் கட்சியினர் மடக்கிவிடலாம் என எண்ணுகின்றனர். அந்த திட்டம் எந்த அளவுக்கு பழிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆதவ் அர்ஜுனாவை தவெகவில் வைத்திருப்பதற்கான காரணம் இது தான்.. லீக் ஆன சீக்ரெட்!!

0

TVK: தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில், இதற்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு பெருகியுள்ளது. இதனை கண்ட மாநில கட்சிகளனைத்தும் அதிர்ச்சியுற்றன. இதன் காரணமாக இவரை கட்சியில் இணைக்க வேண்டுமென பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. இவை எதற்கும் அசராத விஜய் அவரது பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.

தவெகவில் விஜய்யை அடுத்து அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா. கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் சரியாக செயல்படவில்லை என்றும், கரூர் சம்பவத்தின் போது விஜய் உடனிருந்து கட்சியை வழி நடத்தவில்லை என்றும் அவர் மீது பல புகார்கள் எழுந்தது. முக்கியமாக ஆனந்த் மீது எழுப்பபட்ட கழக குரல் ஆதவ் அர்ஜுனா ஆதரவாளர்களிடையே எழுந்தது. இதனால் இவர் கூடிய விரைவில் புஸ்ஸி ஆனந்த் இடத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் , கரூர் சம்பவதிற்கு பிறகு தவெக சார்பாக நடத்தப்பட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் பேசிய கருத்து விஜய்யை ஆத்திரமடைய செய்துள்ளது என்று தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. திமுகவிற்கு விஜய் ஆதரவு அளித்தார் என்ற கருத்தை ஆதவ் அர்ஜுனா கூறியும் அவரை ஏன் இன்னும் கட்சியிலிருந்து விஜய் நீக்காமல் உள்ளார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்நிலையில் அதற்கான காரணத்தை மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கூறியுள்ளார்.

ஆதவின் பேச்சு தவெகவிற்கு நன்மைகளை விட தீமைகளே அதிகம் பரிசளிக்கிறது. இப்படி இருக்க இவரை இன்னும் கட்சியிலிருந்து நீக்காமல் இருப்பதற்கான ஒரே காரணம் அவர் கட்சிக்காக நிறைய செலவு செய்வதாகும் என்று அவர் விளக்க மளித்துள்ளார். இவரின் இந்த கருத்து அரசியல் களத்திலும், தவெக ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் விவாதமாகியுள்ளது.

எங்கள் எதிரி தவெக தான்.. அதிமுக அல்ல!! வெளிப்படையாக பேசிய ஸ்டாலின்!!

0

ADMK DMK TVK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் எப்போதும் போல தீவிரம் காட்ட ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தவெக என்னும் புதிய கட்சி தொடங்கப்பட்டு புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுக தான் தவெகவின் அரசியல் எதிரி என்று கூறினார். அப்போது முதல் இப்பொது வரை விஜய் அந்த நிலையிலிருந்து மாறவில்லை.

அதேபோல் திமுகவும் இத்தனை வருடங்களாக அதிமுகவை மட்டுமே எதிரி என்று கூறி வந்த நிலையில், தற்போது அந்த வரிசையில் விஜய்யையும் இணைத்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு இடங்களில் புதிய எதிரிகள், பழைய எதிரிகள் என்று கூறியுள்ளார். மேலும் சில இடங்களில் விஜய் பற்றிய கேள்வியை அறவே தவிர்த்துள்ளார். இதுவே திமுக தவெகவை எதிரி பட்டியலில் சேர்த்து விட்டது என்பதற்கு உதாரணமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ஒரு கருத்தை கூறியுள்ளார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக முகவர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பை கடுமையாக வெளிபடுத்தியதுடன், அதிமுக எதிர்கட்சி மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து, அதிமுகவை எதிரி பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு தவெகவை அமர்த்திவிட்டது என்பதை  நிரூபிக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

கூட்டணிக்காக தேமுதிகவிடம் மன்றாடும் அதிமுக.. தப்பு எங்க மேல தான்!! ஒப்பு கொண்ட அதிமுக அமைச்சர்!!

0

ADMK DMDK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகளை வரை, பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. தேர்தல் என்றாலே கூட்டணி கணக்குகள் தான் பரபரப்பாக பேசப்படும். அந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்ட அதிமுக, தேசிய கட்சியான பாஜக உடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை மறந்து கூட்டணி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யின் தவெகவிற்கு பெருகும் ஆதரவை கண்ட அதிமுக-பாஜக அவரை கூட்டணியில் சேர்த்து விடலாம் என்று திட்டம் தீட்டியது. ஆனால் விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி அமைக்க முடியாது என்றும், தவெக தலைமையில் தான் கூட்டணி என்றும் தனது முடிவை பகிரங்கமாக அறிவித்தார்.

இதனால் இவ்விரண்டு கட்சிகளும் விஜய் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இவர்களின் விஜய்க்கான ஆதரவு அனைத்தும், வன்மமாக மாறியது. பாஜக டெல்லியில் சக்தி வாய்ந்த கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் காலூன்ற ஒரு பலம் வாய்ந்த கட்சி தேவைப்படுகிறது. அதற்கு அதிமுக மட்டுமே போதாது என்று பாஜக நினைத்தது. அதிமுகவும் தற்சமயம் பல பிரிவுகளாக இருப்பதால் அதன் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது. இதனை விஜய்யை வைத்து சரி கட்டி விடலாம் என்று இபிஎஸ் நினைத்தார். இவர்களின் ஆசை நிறைவேறாமல்  போனதால், அடுத்த கட்ட அரசியல் நகர்வாக தேமுதிகவிடம் அதிமுக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று தகவல் பரவியது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஒரு கருத்தை கூறியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர், வேட்பாளராக விஜய் பிரபாகரன் நிறுத்தப்பட்டார். இவரின் தோல்விக்கு காரணம் அதிமுக போதிய வசதிகளை இந்த பகுதிக்கு செய்து தராததே ஆகும் என்று அவர் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து தேமுதிக, திமுக பக்கம் செல்லாமல் தவிர்ப்பதர்க்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுகவிற்கும், தேமுதிகவிற்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கும் சமயத்தில் அதனை சரி செய்யும் வகையிலும் இவரின் பேச்சு அமைந்துள்ளது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், அதிமுக கூட்டணிக்கு யாரும் சம்மதம் தெரிவிக்காத நிலையில் வேறு வழியில்லாமல் தேமுதிகவிடம் கையேந்தும் நிலைமைக்கு அதிமுக தள்ளப்பட்டு விட்டது என்றும் பலர் கூறி வருகின்றனர்.

விஜய் தலையில் இறங்கிய இடி.. சுக்குநூறான அரசியல் கணக்கு!! மண்ணை கவ்விய PK!!

0

TVK: பீகாரின் சட்டமன்ற தேர்தலின் முடிவானது பாஜகவிற்கு சாதகமாக தான் அமையும் என்று தெரிந்திருந்தாலும் மற்றொரு பக்கம் பிரசாந்த் கிஷோர் இருந்ததால் முடிவுகள் குறித்து சற்று எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் பீகார் முடிவு குறித்து விஜய்யை மதிப்பீட்டு விடலாம் என பலரும் எண்ணியிருந்தனர். இவையனைத்தும் தற்போது பாஜகவிற்கு சாதகமாகவே அமைந்துள்ளது. பீகாரில் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளில் பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

ஒரு தொகுதியில் வருவதே சற்று கடினம்தான். என்னதான் புதியதாக வந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் ஆரம்ப கட்டத்திலிருந்து புழக்கத்தில் உள்ள கட்சிக்குதான் வாக்களித்துள்ளனர். அந்த வகையில் பீகாரின் பெண்கள் தான் அதிகளவு பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். அதிலும் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில் போட்டியிட்டு 11 தொகுதிகளில் தான் வெற்றியடைந்துள்ளது. தேர்தலில் வியூக மன்னனாக வலம் வந்தவர் பிரசாந்த் கிஷோர் அவருக்கே தனது கட்சியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் அடிமட்ட நிர்வாகிகளிடம் தொடங்கி, சாதிவார வாக்குகள் என அனைத்திலும் இவர் பக்கம் ஆதரவு கிடையாது. இதே நிலையை தான் விஜய்யும் தமிழகத்தில் சந்திக்க கூடும். மக்கள் ஆரம்ப கட்டத்திலிருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பர். அந்த வகையில் சாதிவாரிய ஓட்டு, நிர்வாகிகள் செயல்பாடு என எதுவும் விஜய்க்கு கை கொடுக்காது என்று கணக்கிடுகின்றனர். இதை வைத்து விஜய் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை கவனமாக நகரத்தினால் மட்டுமே அங்கீகாரம் பெற்ற கட்சியாக தேர்வாக முடியும்.

பாமகவில் எல்லாமே நான் தான்.. பரபரப்பை கிளப்பி விட்ட அன்புமணி!! ஷாக்கில் ராமதாஸ்!!

0

PMK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக கட்சிகளனைத்தும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பாமகவில் மட்டும் தந்தைக்கும், மகனுக்கும் நடுவில் நிலவும் பிரச்சனை தீவிரமாகி கொண்டே செல்கிறது. இதன் காரணமாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையமோ கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வதாக அறிவித்திருந்தார் ராமதாஸ்.

இதற்கடுத்து, ராமதாசின் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும், அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் உண்மையான பாமக யார் என்பது பெரிய கேள்வியாக இருந்தது. மேலும் பாமக இரண்டாக இருப்பதால் அது யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதும் கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், அன்புமணி பேசிய பேச்சு ராமதாசுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

அன்புமணி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி, என்னை கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது, சின்னத்தையும் எனக்கு ஒதுக்கி  விட்டனர், யாராலும் எதுவும் செய்ய முடியாது. இதனை காரணமாக வைத்து நீதிமன்றம் சென்றாலும் எதுவும் நிகழ போவதில்லை, அதனால் அதை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். இவரின் இந்த கருத்து பாமகவில் எல்லாமே நான் தான்  என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதனை ராமதாசின் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

நீங்க இத பண்ணி தான் ஆகணும்.. திமுக கூட்டணி கட்சி ஆவேசம்!! கலக்கத்தில் ஸ்டாலின்!!

0

DMK VCK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதிமுக, திமுக, பாமக, போன்ற கட்சிகளில் உட்கட்சி பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. அதிமுகவில் பல்வேறு அணிகள் உருவானது, பாமகவில் ஏற்பட்ட தந்தை மகன் பிரச்சனை, திமுகவின் கூட்டணி கட்சிகளின் கோரிக்கை போன்றவை புதிய வேகமேடுத்துள்ளது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென்று பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து வரும் சமயத்தில், அதன் கூட்டணி கட்சிகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கை கேட்டு வலியுறுத்தி வரும் சமயத்தில், விசிக அதிக தொகுதிகளை கேட்டு வருகிறது. திமுகவின் கூட்டணி கட்சிகளில் முதலிடம் பிடித்திருப்பது விசிக தான் அப்படி இருக்க விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்குவது எந்த வகையில், நியாயம் என்று விசிகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். குறைந்த தொகுதிகளை ஒதுக்குவதால் ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருந்த திருமா வேறு கட்சியில் இணைய போகிறார் என்ற தகவலும் பரவியது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக திருமாவளவன் திமுகவிற்கு எதிராக ஒரு கருத்தை கூறியுள்ளார்.

அண்ணாமலை பல்கலைகழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அதனை நிறைவேற்றி தரவேண்டுமென விசிகவின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பொதுவாக இப்படிப்பட்ட விஷயங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இந்த மாதிரியான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கூறுவது வழக்கம். ஆனால் ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் கட்சியே இந்த முழக்கத்தை முன் வைப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பலரும் கூறுகின்றனர். இதன் காரணமாக திமுகவை எதிர்க்க விசிக தயாராகி விட்டது என்ற கருத்தும் வலுபெற்று வருகிறது.