Home Blog Page 5626

விரைவில் மெட்ரோ ரயில் சேவை – புதிய விதிமுறைகள் அறிவிப்பு

0

கொரோனா பொது முடக்கம் காரணமாக பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தளர்வுகளை அறிவித்து வரும் அரசு, பொது பயணிகள் ரயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்தை இயக்க துவங்கியுள்ளது மத்திய அரசு.

அடுத்து பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவையை துவங்க மாநில அரசுகள் பரிசீலித்து வருகிறது. இதில் முதல்கட்டமாக டெல்லியில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை அம்மாநில அரசு துவங்கவுள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கையடுத்து மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவங்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா நொய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.
  • ரயில் நிலைய படிக்கட்டுகளை தொடக் கூடாது, லிப்ட் உள்ளே இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
  • ரயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து பயணிகளும் அவசியம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், அனைவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டு அனைவருக்கும் கிருமி நாசினி அளிக்கப்படும்.
  • டிக்கெட் வழங்குவதில் இனி டோக்கனுக்கு பதிலாக முழுமையாக ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தப்பட உள்ளது.
  • முதற்கட்டமாக 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும், அவசரமான நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 10 மணி மற்றும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையில் அதிக அளவில் பயணிகள் பயணிப்பார்கள் என்பதால் அந்த நேரத்தில் 5 நிமிட இடைவெளியில் 35 ரயில்கள் இயக்கப்படும்.
  • ரயில்களின் உள்ளே 6 நபர் அமரக்கூடிய இருக்கையில் இனி 2 நபர்கள் மட்டுமே அமர்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
  • ஒரு ரயிலில் 1270 பயணிகள் பயணிக்கலாம் என்றால், இனி 160 பயணிகளை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
  • இதனை ஈடு செய்யும் வகையில் குறைந்த நேர இடைவெளியில் அதிக ரயில்கள் இயக்கப்படும்.
  • விமான நிலையத்திற்கு சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்தும், வண்ணாரப்பேட்டையில் இருந்தும் ரயில்கள் நேரடியாக இயக்கப்படும்.
  • மெட்ரோ ரயில்வேயால் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த “Last Mile Connectivity” என்ற கார் சேவை இனி இருக்காது.

ஊரடங்கு – ரிஸ்க் எடுக்கும் தெலுங்கானா! மக்கள் அதிருப்தி

0

தெலுங்கானா முதலமைச்சர் கொரோனா தொற்று‌ அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு மேலும் ‌ஜுன் மாதம் வரை நீட்டிக்கப்போவதாக அறிவிக்கப்படவிருந்த நிலையில் ஊரடங்கு விலக்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டது.

தெலுங்கானாவில் கடந்த மாதம் கொரோனோ தொற்று பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும், அரசின் பொருளாதாராம் பின்னடைந்த நிலையிலும் மக்களின் உடல்நல ஆரோக்கியம் மட்டுமே முக்கியம் என அரசு அறிவித்தது

இந்நிலையில் தெலுங்கானாவில் தீடீர் ஊரடங்கு விலக்கு மக்களை குழப்பத்திற்குள்ளாக்கியது. இது குறித்து தெலுங்கானா முதலமைச்சர் அறிவித்த தகவல் ஒன்றில் இன்று முதல் அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதாக கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் அலுவலகங்கள், கடைகள்,தொழிற்சாலைகள் மூடியுள்ள நிலையில் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் ‌என்ன நிலை மாறப்போகிறது என இந்த ஊரடங்கு விலக்கினை “இருக்கு ஆனா இல்லை” என்கிற வசனத்தைப்போல் கேலியாக விமர்சித்து வருகின்றனர்.

சென்னையில் உச்சமடையும் கொரோனா நோய் தொற்று – எந்த பகுதியில் எவ்வளவு பாதிப்பு தெரியுமா?

சென்னையில் நாளுக்கு நாள் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையின் முக்கிய மண்டலங்களிலும் கொரானா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

குறிப்பாக சென்னையின் முக்கிய நகரமான அண்ணா நகரில் இன்றுடன் கொரானா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது அங்கு வசிப்பவர்களுக்கு அச்சமளித்தது.

மேலும் சென்னையின் தூங்கா நகரான கோடம்பாக்கத்தில் 1559 பேரும் , திரு.வி.க நகரில் 1325 பேரும் , அதிகபட்சமாக வடசென்னையின் முக்கிய நகரான ராயபுரத்தில் 2252 பேரும் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதிகரித்துக் கொண்டே போகும் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கையால் சென்னையில் பணிபுரியும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னைக்கு வர பயப்படுகின்றனர். ஊரடங்கு முடிவடையும் நிலையிலும் மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையும் என்று மக்களால் பேசப்படுகிறது.

வந்தவர்களுக்கு வாழ்க்கையளித்த சென்னை இன்று கொரானாவிற்கும் வாழ்க்கையளித்து சென்னைவாசிகளுக்கு துயரம் அளிக்கிறதே என பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்

மற்றும் மக்கள் தொகை அதிகமாக உள்ள காரணத்தினாலும், வெளிநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் அதிகம் உள்ள காரணத்தினாலும் மட்டுமே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என பலரும் கூறுகின்றனர்.

ஜூன் மாத ரேஷன் பொருட்கள் – அரசின் புதிய திட்டம்

டோக்கன் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் – பொதுமுடக்கம் ஜூன் வரை நீட்டிக்குமா ?

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் மக்கள் எண்ணிக்கை அதிகம் காணப்படும் இடங்களில் ஒன்று ரேஷன் கடைகள். வருமான பற்றாக்குறை காரணமாக இலவச அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்கின்றனர்.

அரசு 1000 ரூபாய் வழங்கிய போதும் மக்கள் தனிமனித இடைவெளியை மறந்து ஒருவருக்கொருவர் முந்தியடித்ததால் கொரானா தொற்று அதிகம் பரவும் அபாயம் உருவானது.

சமீபத்தில் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கையில் ரேஷன் பொருட்களை விநியோகிக்க டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. மக்களுக்கு முதலில் ரேஷன் வழங்கும் தேதி , நேரம் என பதிக்கப்பட்டுள்ள டோக்கன் ஒன்று வீடு வீடுகளாக சென்று வழங்கப்படும்.

டோக்கனில் குறிப்பிட்டுள்ள அந்த நாளிலும் நேரத்திலும் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். டோக்கன் இல்லாதவர்கள் யாரும் பொருட்களை வாங்க முடியாது. இத்திட்டத்தினால் மக்கள் கூட்டம் அதிகம் சேராமலும் அதே நேரத்தில் உணவுப்பொருட்கள் தட்டுபாடின்றி மக்களிடம் சேருமென்றும் அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இத்திட்டத்தினால் பொதுமுடக்கம் ஜூன் வரை நீட்டிக்கப்படுமோ என்று மக்களால் பேசப்படுகிறது. மேலும் இந்த டோக்கன் வழங்கும் திட்டம் முதலில் மதுபாட்டில்கள் வாங்க டாஸ்மாக்கில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 10 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம்

0

கடந்த மார்ச் 23ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நான்காவது கட்டமாக வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கு நிறைவடைய இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் குழுவுடன் விவாதித்து வருகிறது.

முதல் ஒரு மாதத்தில் குறைந்த அளவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தற்போது உச்சம் பெற்று வருகிறது. குறிப்பாக இந்தியாவின் மெட்ரோ எனப்படும் பெருநகரங்களில் கொரோனா தொற்று அதிகம் பதிவாகி வருகிறது. மாநிலங்கள் அளவில் கள நிலவரத்தை ஆராய்ந்து அந்நத்த மாநில அரசே ஊரடங்கை தளர்த்தவே நீட்டிக்கவோ மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கு மட்டும் மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், பூனே, தானே, ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் மத்திய அரசே ஊரடங்கை நீட்டிக்க உத்தரவிடும் என கூறப்படுகிறது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் தளர்வுகள் இருக்கும் என தெரிகிறது.

தமிழகத்தில் உச்சநிலையை எட்டும் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவ துவங்கிய சில நாட்கள் மிகவும் குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே பாதிப்புகள் இருந்தன. ஆனால் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது

இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 817 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18545 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் கொரோனா பாதிப்பால் ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133னாக அதிகரித்துள்ளது. மேலும், இன்று 567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 9099 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 558 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது.

விமான பயணத்தில் கொரோனா பரவுமா? – விளக்கம்

0

உலகையே உலுக்கி வரும் கொரோனா நோய்த் தொற்று குறித்து இன்னும் மருத்துவர்களுக்கே அது பரவும் முறை குறித்து ஐயமுள்ளது. கடந்த டிசம்பரில் சீனாவின் வுகான் மாகானதில் தோன்றிய கொரோனா தொற்று பிற நாடுகளுக்கு, வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகள் மூலமே பரவ துவங்கியது.

இந்நிலையில் சுமார் 2 மாத ஊரடங்கிற்க்கு பின் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் சில தளர்வுகளை ஏற்படுத்து பொது போக்குவரத்தை படிப்படியாக துவக்க துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாக இரயில் மற்றும் விமான போக்குவரத்தை துவங்கி வருகிறது.

இந்நிலையில் வெளிநாட்டு பயணிகள் மூலமாகவே கொரோனா பரவியதால், விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் போது கொரோனா நோய்த்தொற்று பரவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது இது குறித்து பதிலளித்துள்ள அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், விமானத்தில் வடிகட்டிய நிலையில் காற்று சுழற்சி இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் கிருமித் தொற்று எளிதில் பரவுவதில்லை.

அதே சமயம் கொரோனாவை பொருத்த வரை தனி மனித இடைவெளி முக்கியம் என்பதால் அதை விமானத்தில் கடைப்பிடிக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. எனவே அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே விமான போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். அப்படியில்லை என்றால் விமான போக்குவரத்தை தவிர்ப்பது நல்லது. அப்படி விமான பயணம் மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் பயணம் மேற்கொள்வதையே தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பயணத்திற்கு பிறகும் விமானங்கள் கிருமி நாசினி கொண்டும் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி! தொடரும் சோகம்

0

சமீபத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தது போல தற்போது தெலுங்கானாவில் 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் பொடிச்சன்பள்ளி என்ற கிராமத்தில் பாப்பன்னபேட்டை பகுதியில் வசிக்கும் கோவர்த்தன் என்பவர் தன்னுடைய விவசாய நிலத்தில் 120 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு ஒன்றை தோண்டியுள்ளார். 

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றின் அருகே நின்றிருந்த 3 வயதாகும் விவசாயி மகன் சாய் வர்தன் திடீரென திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் கோவர்த்தனின் குடும்பத்தினரும் அருகில் தான் இருந்துள்ளனர்.

இதன்பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரெண்டு உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ நடந்த பகுதிக்கு உடனடியாக விரைந்து சென்றனர். இதனையடுத்து சிறுவனை மீட்கும் வகையில் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு குழி தோண்டி, 25 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியை ஆரம்பித்தனர். 

இதில் சிறுவனுக்கு சுவாசத்திற்கு உதவியாக பிராணவாயு செலுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.எனினும், இந்த மீட்பு முயற்சியில் பலனின்றி 3 வயதாகும் சிறுவன் உயிரிழந்து விட்டான்.அரசு பலமுறை அறிவுறுத்தியும் ஆழ்துளை கிணறுகளை விவசாயிகள் அலட்சியமாக கவனிப்பதால் அடுத்ததடுத்து இது போன்ற சோகங்கள் ஏற்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை – அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் பரவத் துவங்கிய கொரோனா தொற்றுக்கு இது வரை சுமார் லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் பாதிப்படைந்துள்ளனர். தற்போது வரை கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறி சார்ந்த மருந்துகளையே மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக அலோபதி மருந்துகளுடன், ஹோமியோபதி, சித்த ஆயுர்வேத மருந்து உள்ளிட்டவற்றையும் கொரோனா நோயாளிகளுக்கு, கொரோனா வராமல் தடுக்க பொதுமக்களுக்கும் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில் “1979ல் 112 வகையான நோய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசும் கடந்த 2003 ம் ஆண்டு முதல் இயற்கை முறையிலாக அக்குபஞ்சர் முறையை அங்கீகரித்து வருகிறது. பரவிவிரும் கொரோனா நோய்த்தொற்று நோயைக் கட்டுப்படுத்த சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியுமா என மத்திய அரசு, குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது.

கொரோனா நோய்த்தொற்று தொற்றுக்கு ஆங்கில மருத்துவ முறையில் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அக்குபஞ்சர் முறை மூலமாக சீனாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தப்பட்டது என்பதை உலக சுகாதார நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

சீனாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 85.2% அதாவது 60,107 பேருக்கு அலோபதி மருத்துவத்துடன், அக்குபஞ்சர் சிகிச்சையும் சேர்த்து வழங்கப்பட்டது. அதேபோன்று இந்தியாவிலும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்.

அக்குபஞ்சர் சிகிச்சை முறை மூலமாக “3 ml albino immuno immunoglobulin” உடலில் உற்பத்தி செய்யப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க காரணமாகிறது. மாத்திரைகள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சையில் 1 லட்சம் மருத்துவர்கள் இந்தியாவில் உள்ளனர்.

அதனால், அக்குபஞ்சர் மூலமாக சிகிச்சை அளிக்க முடியும் என்பதை இந்திய மருத்துவ அறிவயல் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் ஆங்கில மருத்துவத்துடன் நோயாளிகளிக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்”.

இது விசாரித்த நீதிபதிகள் மூன்று வார காலத்திற்க்குள் இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

பொதுமுடகத்தால் சொந்த மகளின் திருமணத்தை வீடியோ கால் மூலம் பார்த்த பெற்றோர்கள்

கொரானா நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் சொந்தங்கள் ஒன்று கூடும் சுப நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்தது‌. எனினும் 20 நபர்களுக்கு மிகாமல் பாதுகாப்புடன் திருமணங்கள் நடத்தலாம் எனவும் அரசு அனுமதியளித்தது.

இந்நிலையில் மும்பையில் பணிபுரியும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ஜோடிக்கு தமிழ்நாட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் மும்பையிலிருந்து தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. நமது நாட்டில் குறிப்பாக தென்னிந்தியாவில் நிச்சயித்த தேதியில் திருமணம் நடைபெறவில்லை என்றால் அதை அபசகுணமாக பார்க்கும் வழக்கம் உள்ளது.

எனவே அந்த ஜோடி, நிச்சயித்த தேதியில் பெற்றோர்கள் சம்மதத்துடன் எளிமையாக மும்பையிலுள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை
நடத்தி பார்ப்பதென்பது வாழ்நாள் கனவாக இருக்கும்.

ஆனால் இந்த பொதுமுடக்கத்தால் மணமக்களை நேரில் வாழ்த்த கூட முடியாமல் மணமகளின் தந்தையும் தாயும், தங்கள் சொந்த ஊரான மதுரை அருகிலிருக்கும் குருவித்துறையிலிருந்படியே வீடியோ கால் மூலம் கண்கலங்க வாழத்தியுள்ள்னர். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது.

பொதுமுடகத்தால் சொந்த மகளின் திருமணத்தை வீடியோ கால் மூலம் பார்த்த பெற்றோர்கள்

தொழில்நுட்பங்கள் மூலம் ஆறுதல்கள் இருந்தாலும் மணமக்கள் அருகில் இருந்து அட்சதை தூவி வாழ்த்தும் ஆனந்த நிகழ்வை தவரவிடவைத்ததே இச்சூழ்நிலை என்பதே அவர்கள் கண்ணீருக்கு காரணம்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி பார்ப்பவர்களையும் உணர்ச்சி வயப்பட வைக்கிறது.