Home Blog Page 5635

ரம்ஜான் தொழுகை – நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் உட்பட பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மக்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளன்.

தற்போது அமலில் இருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கில், வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி தரப்படலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில் அரசு இன்னும் அதில் முடிவெடுக்கவில்லை என கூறப்படுகிறது.

வரும் மே 25ம் தேதி இஸ்லாமியர்களின் பண்டிகையான ‘ரம்ஜான்’ கொண்டாடப்படவிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக ரம்ஜான் பண்டிகையின்போது மக்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்துமாறு தலைமை ஹாஜி அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சாகுல் ஹமீது என்பவர் ரம்ஜான் அன்று மதுரையில் உள்ள மசூதிகளில் 2 மணி நேரம் மட்டுமாவது சிறப்பு தொழுகைக்கு அனுமதி அளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் வழிபாட்டுத் தலங்களை திறப்பதன் மீதான முடிவுகள் மத்திய மற்றும் மாநில அரசினை சார்ந்தவை என்றும், இதனால் நீதிமன்றம் அரசு கொள்கையில் தலையிட முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

Swiggy, Zomato நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கிய பிரபல நிறுவனம்

0

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக உணவு டெலிவரி சேவை பிரபலமடைந்து வருகிறது. இதில் Swiggy மற்றும் Zomato நிறுவனங்கள் தற்போது முன்னணியில் உள்ளன.

நாளுக்கு நாள் இவர்களின் பயனீட்டாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களுக்கு போட்டியாக இறங்கியுள்ளது Amazon நிறுவனம். ஏற்கனவே ஆன்லைன் ஷாப்பிங்க், OTT தளம் என தனது சேவைகளை விரிவாக்கம் செய்தும் வரும் அமேசான், உணவு டெலிவரி சேவையில் இறங்கியிருப்பது மற்ற உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாகப் பெங்களூருவில் மகாதேவபுரம், வொயிட் ஃபீல்ட் உள்ளிட்ட 4 பகுதிகளில் இந்த சேவை 100 ஓட்டல்களுடன் இணைந்து துவங்கியுள்ளது அமேசான் நிறுவனம். இந்த சேவையை படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த உணவு டெலிவரி சேவையை அமேசான் செயலி மூலமே ஏற்படுத்தப்படுத்தியுள்ளது அமேசான் நிறுவனம். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உணவு தொழில் 4 பில்லியன் டாலரில் இருந்து 15 பில்லியன் டாலராக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் தனது பணியாளர்களை வேலையை விட்டு Swiggy, Zomato நீக்கி வரும் நிலையில், அமேசானின் இந்த முயற்சி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனே எம்ஐடிசி ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! வீடியோ உள்ளே

0

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பத்லாப்பூரில், எம்ஐடிசி என்ற வளாகத்தில் தனியார் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அங்குள்ள ட்ரையரில் இன்று காலை 9 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்ததில், பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரண்டுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடி விபத்தால் எந்த ஒரு சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என  தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மக்கள் ரசாயன தொழிற்சாலைக்கு வெளியே அதிக எண்ணிக்கையில் காணப்பட்டனர். மேலும் இந்த தீ விபத்து நடந்த பொது ஆலையில் பல ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட தடிமனான கருப்பு புகை அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதே போல கடந்த மாதத்தில், புனேவில் உள்ள மார்க்கெட்டியார்ட் என்ற பகுதியில் ஒரு பெரிய மூன்று மாடி குடோனில் இதே போன்ற தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீ விபத்தினால் யாரும் தீக்காயங்களுக்கு ஆளாகவில்லை.

அதே போல இந்த மாத தொடக்கத்தில் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் எரிவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் கொல்லப்பட்ட சோகமான சம்பவமும் நடந்துள்ளது.இவ்வாறு விசாகபட்டினம் பாலிமர்ஸ் ஆலை எரிவாயு கசிவு விபத்தை தொடர்ந்து, நாட்டில் ஊரடங்கிற்கு பின்னர் நிறுவனங்கள் உற்பத்தித் தொழில்களை மறுதொடக்கம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டது.

அரசு வெளியிட்டுள்ள அந்த வழிகாட்டுதலில் நிறுவனங்கள் ஆரம்பத்தில் அதிக உற்பத்தி இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டாம் என்றும், ஆபத்தை குறைக்க முதல் வாரத்தை சோதனை அல்லது சோதனை ஓட்ட காலமாக கருத வேண்டும் என்றும் மத்திய அரசு தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு தமிழக முதல்வர் எழுதிய அவசர கடிதம்

0

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று அந்த துறையின் மந்திரி ஹர்தீப் சிங் பூரி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

இதன்படி, வரும் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் உள்நாட்டு விமானச் சேவையும் தமிழகத்தில் சென்னை கோவை திருச்சி ஆகிய மாவட்டங்களில் இயங்கும் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் வரும் 25 ஆம் தேதி தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என்றும் ஜூன் மாதத்திற்குள் பிறகு தொடங்கலாம் எனவும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

இரட்டை சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட காரணம் வெளியானது

0

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியை அடுத்துள்ள மாருதி நகர் பகுதியை சார்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் கட்டிட ஒப்பந்ததாரராக (கான்ட்ராக்டர்) பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரட்டை மகள்கள் இருக்கின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் இரு மகள்களான பத்மபிரியா மற்றும் ஹரிப்பிரியா மாடியில் இருக்கும் அறைக்கு ஆன்லைன் வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு சென்றனர்.

தந்தை பாலசுப்பிரமணியம் வெளியே சென்ற நிலையில் அவரது மகன் வீட்டில் இருந்தார்.தனது இரு சகோதரிகளும் வெகுநேரமாகியும் கீழே வராததால் பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மகன் மேலே சென்று பார்த்தனர்.அப்பொழுது இரண்டு பெண்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் பெற்றோர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், தாய் – தந்தை இருவரும் அடிக்கடி அடிக்கடி சண்டை போடுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி இரு பெண்களும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தாய் தந்தையரின் சண்டை குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு மன அழுத்தத்தை தருகிறது என்று இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைகிறது.

கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு இருப்பின் அது குழந்தைகள் இல்லாத பின்பு பேசி சரி செய்துக் கொள்வது அவர்களின் மகிழ்ச்சிக்கும் எதிர்காலதிற்கும் பாதுகாப்பானதாக இருக்கும்.

ஆட்டோக்களை இயக்க அனுமதியளித்த தமிழக அரசு – நிபந்தனைகள் என்ன தெரியுமா?

மே 31ம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு தொடர்ந்து தளவுகளை அறிவித்து வருகிறது.

பேருந்து போக்குவரத்து மே 17ம் தேதியிலிருந்து தொடங்கப்படலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில் இது குறித்து இன்னும் அரசு முடிவெடுக்கவில்லை.

இதனிடையில் பெரும்பாலும் தின வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஊரடங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, ஆட்டோக்களை அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஒரு கட்டத்தில் போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகம் இருக்கும் சென்னையை தவிர்த்து மற்ற நகரங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆட்டோக்கள் இயக்க அரசு விதித்துள்ள நிபந்தனைகள்:

  • காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்கள் இயக்கப்பட வேண்டும்.
  • ஆட்டோ ஓட்டுநருடன், பயணி ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.
  • இருவரும் பயணம் முழுவதும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
  • தினமும் 3 முறை கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும்.
  • நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆட்டோக்களை இயக்க அனுமதியில்லை.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் விபி துரைசாமி பாஜகவில் இணைந்தார்

0

திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி வகித்தவரும் முன்னாள் சபாநாயகருமான வி.பி. துரைசாமி பாஜக மாநில தலைவர் முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

திமுக தலைமையால் சில மாதங்களாக அக்கட்சியில் புறக்கணிக்கப்பட்டு வந்த திமுக துணைப் பொதுச்செயலாளரான வி.பி.துரைசாமி, கடந்த வாரம் தமிழக மாநில பாஜக தலைவர் முருகனை சந்தித்து பேசினார்.  திமுகவின் முக்கிய பொறுப்பு வகிக்கும் இவர் தமிழக பாஜக தலைவரை சந்தித்து பேசியது தமிழகஅரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  சூழ்நிலையை புரிந்து சுதாரித்து கொண்ட திமுக தலைமை நேற்று திடீரென அவரை துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான துரைசாமி, இன்று பாஜகவில் இணையபோவதாக அறிவித்தார்.

இதனையடுத்து இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலவலகத்துக்கு சென்ற அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜக மாநில தலைவர் எல்.முருகனை  சந்தித்து பாஜகவில் இணைந்து கொண்டார்.

ஆரம்பத்தில் அதிமுகவின் மூலமாக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய வி.பி.துரைசாமி, அப்போது தான் வகித்த தனது ராஜ்யசபா எம்.பி.பதவியை துறந்துவிட்டு திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைந்த அவருக்கு கருணாநிதி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் துணை சபாநாயகர் உள்ளிட்ட பொறுப்புகளை வழங்கினார்.

இந்நிலையில் தற்போது அந்த பதவிகளை உதறிவிட்டு திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

EMI செலுத்த மேலும் அவகாசம் – சலுகையை நீட்டிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு

0

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது. மார்ச் மாத மத்தியில் தொடர்ந்து தொற்று அதிகரிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் பலரும் வீட்டுக்குள் முடங்கினர். ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு 1 முதல் 50 சதவீதம் வரை சம்பள குறைப்பு அறிவிக்க, தினமும் வேலைக்குச் சென்று வந்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில் பலரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் வீட்டுக் கடன், தனி நபர் கடன், பொருட்கள் கடன் என எந்த தவணையையும் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, RBIயுடன் ஆலோசித்து மூன்று மாதங்களுக்கு (மே 31 வரை) தவணை நீட்டிப்பை அறிவித்திருந்தது. அதன் படி மூன்று மாத காலம் பயனாளர்கள் கடன் செலுத்த வங்கிகள் நிர்பந்திக்கக் கூடாது. ஆனால் தவணை செலுத்தாத காலத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டு அசலில் இனைத்து அது மாத தவணையாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இது நிச்சயம் வங்கிகளுக்கு சாதகமான அறிவிப்பு தான் என்றாலும், தங்களை நிதி சுமையிலிருந்து தற்காலிகமாகக் காத்து கொள்ள பயனாளர்களுக்கு ஓர் வடிகாலாக இருந்தது.

இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பான்மையான மக்கள் இன்னும் வேலைக்கு செல்ல முடியாத நிலையே நீடிக்கிறது.

இதை கருத்தில் கொண்டும் இன்னும் மூன்று மாதங்களுக்கு தவணை செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்கலாமா என RBI ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்திய ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்தி காந்த் தாஸ் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமாக ஏற்கனவே அறிவித்த தவனை அவகாச காலத்தை மேலும் மூன்று மாதம் நீட்டிப்பதாக அறிவித்தார்.

இதனால் EMI செலுத்த ஆக்ஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு தற்போதைக்கு இதிலிருந்து விலக்கு கிடைத்துள்ளது.

லட்டு விலையை கணிசமாக குறைத்த தேவஸ்தானம் – புதிய விலை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்

0

கொரோனா ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் ஏழுமலையான் கோவிலின் முக்கிய பிரசாதமான லட்டின் விலையை குறைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி “கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா ஊரடங்கால் ஏழுமலையான் கோவிலில் மக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு தரிசனம் கிடைக்காத நிலையில் பிரசாதத்தை மக்களுக்கு அளிக்க வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

அதனால், ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை 50 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைந்து பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

விருப்பமுள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் லட்டு பிரசாதத்தை வாங்கிச் சென்று பக்தர்களுக்கு அளிக்கலாம் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் லட்டு பிரசாத விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இந்த 50% விலை குறைப்பால் லட்டு விற்பனை அதிகரித்து அதிக அளவிலான பக்தர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.வ்

பெண்கள் பாதுகாப்புக்கு ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி – உடனடியாக பின்பற்றுங்கள் சகோதரிகளே

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பு கேள்விக் குறியாகி வருகிறது.

குறிப்பாக ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடியில் உலா வரும் விஷமிகள் புகைப்படங்களை முறைகேடாக பயன்படுத்துவது போன்றவற்றை செய்வதால் அவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக பெண்கள் இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு ஃபேஸ்புக் ‘Lock Profile’ எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஆக்டிவேட் செய்வது மூலம் நமது நண்பர்கள் வட்டத்தில் இல்லாதவர்கள், நாம் ப்ரொஃபைலில் வைத்திருக்கும் புகைப்படத்தை zoom செய்து பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ, மற்றவர்களுடன் அதனை பகிரவோ முடியாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய, பயனர்கள் ஃபேஸ்புக்கில் தங்கள் பெயருக்கு கீழ் தரப்பட்டிருக்கும் More என்பதை அழுத்தினால் ‘Lock Profile’என்பது வரும். அதை அழுத்தினால் இந்த அம்சம் உங்கள் ப்ரொஃபைலுக்கு ஆக்டிவேட் ஆகிவிடும்.

பெண்கள் பாதுகாப்புக்கு ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி - உடனடியாக பின்பற்றுங்கள் சகோதரிகளே

உடனடியாக இதை பின்பற்றி உங்களை தற்காத்து கொள்ளுங்கள் சகோதரிகளே.