Home Blog Page 5636

கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ள உருவாக்கப்பட்டிருக்கும் அதி நவீன கவசம்

கொரோனாவால் ஒரு பக்கம் அவதிகளும், இறப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில், மற்றொரு பக்கம் பல புதிய கண்டு பிடிப்புகளில் வல்லுநர்கள் பரபரப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாம் நேற்று நவீன முக கவசத்தை பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் டொரோன்டோவை சேர்ந்த VYZR டெக்னாலஜிஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனம் BioVYZR எனும் பெயரில் நவீன கவசம் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இது கொரோனா உட்பட அனைத்து வித கிருமி தொற்று, நச்சுக் காற்று உட்பட பலவற்றிலிருந்து மனிதர்களை காக்கும் என கூறியுள்ளனர்.

நாம் எடுத்து செல்லும் பேக் பேக்கை போல அணியக்கூடிய இந்த கவசம் உள்ளது. 360 டிகிரி பாதுகாப்பு தரும் உபகரணமாகக் கூறப்படும் இதில் N-95 ஃபில்டர்கள் பொருத்தப்பட்டிருப்பதுடன் இதில் இனைக்கப்பட்டிருக்கும் ஏர் ப்யூரிஃபையர் (Air Purifier) கிருமிகளை அழிப்பதுடன், சுவாசிக்கும் தூய்மையாக்கும் என கூறுகின்றனர். சுமார் 1.25 கிலோ எடையுடைய இந்த கவசம் எந்த காலமாற்றத்தையும் தாங்கும் வகையும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

புழுக்கத்தை தவிர்க்கும் விதமாக இதில் ஒலி எழாத சிறிய மின் விசிறி பொருத்தப்பட்டுள்ளதாம். ரீசார்ஜ் செய்யும் வசதியுடன் இனைக்கப்பட்டுள்ள இந்த மின் விசிறி, ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 12 மணி நேரம் வரை இயங்கும் வசதி கொண்டதாம்.

இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை 13,017 ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது.

சரி இது எப்போது பயன்பாட்டுக்கு வரும் என கேட்கிறீர்களா?

indiegogo எனும் பணத்தை சேகரிக்கும் தளத்தில் மே 12ம் தேதி இதை பட்டியலிட்டுள்ள இதன் வடிவமைப்பாளர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் 17 லட்சத்து 87 ஆயிரத்து 4088 ரூபாய் இருந்தால் இதனை உருவாக்கிட முடியும் கூறியுள்ளனர். இது வரை கிட்டத்தட்ட 12 லட்ச ரூபாய் அளவிற்கு இதற்கு பணம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் முழு பணத்தையும் இவர்கள் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த தளத்திலேயே இதற்குப் பலரும் முன் பதிவு செய்துள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு இதை அனுப்பியவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு

0

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட பங்களா வீட்டில் தான் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார்.  அவரது மறைவுக்கு பின்னர் அவர் வாழ்ந்த அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து ஜெயலலிதா வசித்து வந்த இல்லத்தை நினைவிடமாக்குவதற்கான நடவடிக்கைகளை கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழக அரசு  மேற்கொண்டு வந்தது.  இந்த நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற  ஆளுநர் ஒப்புதலுடன் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இதன் மூலமாக வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது.

இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும்

0

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்பேருந்து,ரயில் மற்றும் விமானம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளன. இதனையடுத்து இந்தியா முழுவதும் ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 200 ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த ரெயில்களுக்கு ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கபட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து இதற்கான டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று 22.05.2020 முதல் இயங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல முதன்மை தலைமை வர்த்தக மேலாளருக்கு ரெயில்வே வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.

இன்று முதல் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தந்த மண்டலங்களில் எத்தனை டிக்கெட் கவுண்ட்டர்கள் திறந்திருக்க வேண்டும் என முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் முடிவு செய்து கொள்ளவேண்டும். 

மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு நிற்கவும், மேலும் அரசு அறிவித்துள்ள சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு இந்த நேரத்தில் வெளியே வர கூடாதாம்

ஒரு பக்கம் கொரோனாவின் அச்சுறுத்தல் மக்களை பயமுறுத்தி வரும் நிலையில் மற்றொரு பக்கம் அக்னி வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது.

இந்நிலையில் வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கரையைக் கடந்து ஒடிசா, மேற்குவங்கத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

குறிப்பாக வட தமிழக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியிருந்தது.

இந்நிலையில் இன்று முதல் வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் 11 மணி முதல் 3 மணி வரை காரணமின்றி வெளியே வரவேண்டாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரத்தில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்ப நிலையாக 42 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 30 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விபி துரைசாமி நீக்கம்

கடந்த மே மாதம் 18 ஆம் தேதி திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி வகிக்கும் வி.பி. துரைசாமி தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம் சென்று புதிதாக தமிழக பாஜக தலைவர் பதவியேற்றுள்ள எல். முருகனை சந்தித்தார். திமுகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இவரது இந்த சந்திப்பானது அப்போதே தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சந்திப்பு திமுகவில் சர்ச்சையைக் கிளப்பியது.

இது மட்டுமல்லாமல் நாமக்கல் மாவட்டத்தில் துணை பொதுசெயலாளராக பதவியிலுள்ள இவருக்கு தெரியாமலேயே கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறித்து அவரது ஆதரவளர்கள் மத்தியில் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவருடனான சந்திப்பு அவர் தன்னுடைய சமூகத்தை சார்ந்தவர் என்பதால் நிகழ்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனையடுத்து தனிப்பட்ட முறையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி திமுக குறித்தும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தும் இவர் கூறிய கருத்துக்கள் தலைமையை கோபமடைய செய்துள்ளது. இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் இவரை துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அறிவித்துள்ளார்.

மேலும் இவர் வகித்து வந்த இந்த துணை பொதுச்செயலாளர் பதவியை அந்தியூர் செல்வராஜ்க்கு வழங்கியுள்ளார்

10-ம் வகுப்பு தேர்வு எழுதப் போகிறீர்களா? இந்த புதிய நடைமுறைகள் தெரியுமா?

ஜூன் 1ம் தேதி பொது தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால் ஜூன் 15 தேதிக்கு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் நடைமுறைகள் குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-

  1. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே, மார்ச் 27 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மார்ச் / ஏப்ரல் 2020 பருவத்திற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் மார்ச் 26 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

    இது தவிர, மார்ச் 24 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகளை எழுத இயலாத 36,089 தேர்வர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
  1. மேற்குறிப்பிட்ட பொதுத் தேர்வுகள் ஜூன் 01 முதல் நடத்தப்படும் எனவும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27 முதல் தொடங்கும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனினும், தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி பெற்றோர்கள் மற்றும் பிற தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைளை ஏற்று, ஜூன் 01 தொடங்க இருந்த பொதுத் தேர்வுகள் ஜூன் 15 முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
  2. இந்நிலையில் பொதுத் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகளை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் பொருட்டு கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பிற ஏற்பாடுகள் மேற்கொள்ள மே 20 நாளிட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசாணை(நிலை) எண் 246 இல் உத்தரவிடப்பட்டுள்ளது:
  • கோவிட்-19 தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை காரணமாக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்புடன் சமூக இடைவெளியோடு தேர்வுகள் நடத்திடும் நோக்கத்தின் அடிப்படையில், ஒரு தேர்வறைக்கு 20 தேர்வர்கள் தேர்வெழுதுவர் என்ற தற்போதைய நடைமுறையை மாற்றி ஒரு தேர்வறைக்கு 10 என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் சமூக இடைவெளியோடு அமர வைக்கப்படுவர்.
  • அதற்கேற்ப, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், அவரவர் பயிலும் பள்ளிகளையே தேர்வு மையமாக அமைத்து அந்தந்த பள்ளிகளிலேயே (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் நீங்கலாக) தேர்வர்கள் தேர்வு எழுதிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால், மாணவர்கள் அதிக தூரம் பயணம் செய்வதும் தவிர்க்கப்படும்.
  • இதன் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்விற்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்படும் 3,825 பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும், அவற்றோடு இணைக்கப்பட்ட 8865 பள்ளிகள் துணைத் தேர்வு மையங்களாகவும் செயல்படும். இதனால் மொத்தம் 12690 தேர்வு மையங்களில் 9.7 இலட்சம் மாணவர்கள் தேர்வினை எழுதுவர்.
  • மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விற்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்படும் 3,016 பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும், அவற்றோடு இணைக்கப்பட்ட 4384 பள்ளிகள் துணைத் தேர்வு மையங்களாகவும் செயல்படும். இதனால் மொத்தம் 7400 தேர்வு மையங்களில் 8.41 இலட்சம் மாணவர்கள் தேர்வினை எழுதுவர்.
  • இது தவிர, மார்ச் 24 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகளை எழுத இயலாத 36,089 தேர்வர்களுக்கு மட்டும் ஜூன் 18 அன்று அவர்கள் ஏற்கனவே பிற தேர்வுகளை எழுதிய தேர்வு மையங்களிலேயே தேர்வு நடத்தப்படும்
  • · இத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு நாளன்று பயன்படுத்தும் பொருட்டு சுமார் 46.37 லட்சம் முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்.
  • · தேர்வு மையங்கள் மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் காலையில் பணி தொடங்குவதற்கு முன்னும் மற்றும் மாலையில் பணி நிறைவுற்ற பின்னும் சுத்தம் செய்யப்பட்டு போதிய அளவு கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • தேர்வு மையங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zone) இருப்பின் அத்தேர்வு மையங்களுக்கு மாற்று தேர்வு மையங்கள் (Alternate Examination Centres) அமைக்கப்படும்.
  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zone) வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வு மையங்கள் ((Special Examination Centres) அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து பயணம் செய்து வரும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு மட்டும் வீட்டு தனிமைப்படுத்தலிலிருந்து விலக்களிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதன்மை தேர்வு மையங்களிலேயே தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zone) வசிக்கும் மாணவர்கள் அவர்களின் அடையாள அட்டை மற்றும் தேர்விற்கான நுழைவுச் சீட்டின் அடிப்படையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து வெளியே செல்லவும் மற்றும் உள்ளே வரவும் அனுமதிக்கப்படுவர்
  • சிறப்புத் தேர்வு மையங்களுக்கு சென்றுவர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தனியாக போக்குவரத்து வசதி உறுதி செய்யப்படும்.
  • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேர்வுப் பணியில் சுமார் 2,21,654 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பணியில் சுமார் 1,65,969 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
  • மேல்நிலை பொதுத் தேர்வுகளுக்கான மதிப்பீட்டு பணியில் சுமார் 43,592 ஆசிரியர்களும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் சுமார் 62,107 ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
  • மதிப்பீட்டு முகாம்களில் சமூக இடைவெளியை (Social Distance) பின்பற்றும் பொருட்டு, ஒரு அறையில் ஒரு முதன்மைத் தேர்வாளர் (CE), ஒரு கூர்ந்தாய்வாளர் (SO) மற்றும் ஆறு (6) உதவித் தேர்வாளர்கள் (AE) என மொத்தம் 8 நபர்கள் மட்டுமே அமர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படும். அதற்கேற்ப மதிப்பீட்டு மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும்.
  • மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மையத்திற்கு வருகை புரியும்போது தங்களது கைகளை சோப்பு/ Hand Sanitizer கொண்டு சுத்தம் செய்வதற்கும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக 5 தொடர்பு எண்கள் உதவி எண்களாக (Helpline) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி ((SMS) மூலமாக அனுப்பப்பட்டும், மாணவர்களின் தேர்வு நுழைவு சீட்டில் அச்சடித்தும் வழங்கப்படும். இதன் வாயிலாக மாணவர்கள் / பெற்றோர்கள் தங்கள் சந்தேகங்களை காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
  • வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சார்ந்த விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களின் நலனுக்காக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 11 முதல் தேர்வு முடிவுறும் வரை அனைத்து வகை அரசு / தனியார் பள்ளி விடுதிகள் மற்றும் நலத்துறை விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அவ்வாறு செயல்படும் விடுதிகளில் சம்மந்தப்பட்ட துறைகள் / நிர்வாகங்கள் மூலம் தினமும் இருமுறை உரிய முறையில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை உறுதி செய்யப்படும்.
  • குறிப்பிட்ட தேதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு மையங்கள் / விடைத்தாள் திருத்தும் மையங்களுக்குச் சென்றுவர தேவையின் அடிப்படையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் போதிய அரசு பேருந்து மற்றும் தனியார் பள்ளி வாகன வசதிகள் ஏற்படுத்தித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தேர்வு எழுதும் பொருட்டு சொந்த ஊருக்குத் திரும்ப வரும் மாணவர்கள் அடையாள அட்டை ( ID card) அல்லது தேர்வு அனுமதி சீட்டினைக் காண்பிக்கும்பட்சத்தில் அம்மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் / பாதுகாவலர்கள் TNepass இல்லாமல் தேர்வு மையங்கள் அமைந்துள்ள அவர்களது சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கப்படுவர்.
  • மேலும், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தேர்வு எழுதும் பொருட்டு வரும் மாணவர்கள் அடையாள அட்டை ( ID card) அல்லது தேர்வு அனுமதிச் சீட்டினைக் காண்பிக்கும்பட்சத்தில் அவர்களையும் அவர்கள் பெற்றோர் / பாதுகாவலர்களையும் TNepass இல்லாமல் தேர்வு மையங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு தேர்வு நடைபெறும் நாட்களில் அவர்களது பெற்றோர் மற்றும் காப்பாளர்களுடன் வந்து செல்ல அனுமதி வழங்கப்படும். இவ்விலக்கானது தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
  • தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் புதியதாக தேர்வு நுழைவுச் சீட்டு ((Hall ticket) கணினி மூலம் பதிவிறக்கம் ((Online download) செய்து கொள்ள வழிவகை செய்யப்படும். மேலும் மாணவர்கள் இதனை பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம்.
  • மேற்காண் இரு முறைகளிலும் நுழைவுச் சீட்டு பெற இயலாதவர்களுக்கு தக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zone) வசிக்கும் மற்றும்
  • வெளியூரிலிருந்து வந்து வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வந்து நுழைவுச் சீட்டு பெற அழைக்காமல் அவர்களது வீடுகளுக்குச் சென்று நுழைவுச் சீட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • மாணவர்கள் வெளியூர் சென்றுள்ள இடம் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக (Containment Zone) இருந்தால், அப்பகுதியில் இருந்து தனி வாகனம் மூலம் சொந்த ஊர் திரும்ப சிறப்பு அனுமதி வழங்கப்படும்.
  • எனினும், அத்தகைய மாணவர்களும், பெற்றோர்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், அதேபோல் மாணவர்கள் வெளியூரிலிருந்து சொந்த ஊர் திரும்பும்போது அவர்கள் குடியிருப்பு நோய் கட்டுப்பாட்டு பகுதியாக (Containment Zone) இருந்தால், அவர்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிக்கான வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தப்படும்.
  • மேற்காணும் தேர்வு தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை வழிமுறைகளைச் சார்ந்து மேற்கொள்ளப்படும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு

0

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எழுத சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவித்திருந்த 10 ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தேர்வை வரும் ஜூலை மாதம் வரை ஒத்தி வைக்க வேண்டும் என்று பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்வெழுத போகும் மாணவர்களுக்கு அரசின் சார்பாக என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

நீதிமன்றத்திற்கு பதில் அளித்து தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையங்களில் வசிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத அதற்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் அவர்கள் வெளியே சென்று வர ஹால் டிக்கெட் அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுத வரும் மாணவர்கள் இந்த சிறப்பு தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

இது மட்டுமில்லாமல் தேர்வெழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வு மையத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு 46.37 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படும். சிறப்பு தேர்வு மையங்களுக்கு சென்று வர மாணவர்கள் , ஆசிரியர்களுக்கு போதிய பேருந்து வசதி செய்து தரப்படும்.

மேலும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று ஹால் டிக்கெட் வழங்கப்படும். இ பாஸ் இல்லாமலே தேர்வு நாளன்று தேர்வு மையங்களுக்கு சென்று வர மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இது மட்டுமில்லாமல் முன் எச்சரிக்கையாக ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள்மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் சொந்த தங்கை என்றும் பார்க்காமல் வாலிபர் செய்த காரியம்

குடிபோதையில் வாலிபர் ஒருவர் தன்னுடைய சொந்த சகோதரி என்று கூட பார்க்காமல் அவர் வீட்டில் வெடிகுண்டுகளை வீசி கொலை அவரை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகிலுள்ள ராமகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் தான் முருகன். மதுப்பழக்கத்திற்கு அடிமையான முருகன் அடிக்கடி குடித்துவிட்டு போதையில் தனது சொந்த சகோதரியான செல்வராணியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல நேற்று இரவும் முருகன் குடித்துவிட்டு செல்வராணியுடன் சண்டையிட்டுள்ளார்.

தினமும் குடித்துவிட்டு சண்டையிடும் முருகனை கண்டிக்கும் விதமாக அவரது தங்கை செல்வராணி இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுகுறித்து முருகனிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் தனது நண்பன் சின்னத்துரை என்பவரின் உதவியுடன் தனது சகோதரியை கொலை செய்யும் நோக்கத்துடன் அவரது வீட்டில் 4 வெடிகுண்டுகளை வீசியுள்ளார்.

அவர் வீசிய இந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் செல்வராணி மற்றும் அவரது இரண்டு மகன்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். ஆனால் இந்த சம்பவத்தில் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாய் உடல் சிதறி உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்துள்ளனர். மஐம் அவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பன் சின்னத்துரை என்பவரை தேடிவருகின்றனர்.

தனது அமைச்சரவை சகாக்களையும் கூட நம்பாமல் தன்னை மட்டும் முன்னிலைபடுத்தும் முதல்வர்! ஸ்டாலின் விமர்சனம்

0

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தனது அமைச்சரவை சகாக்களையும் கூட நம்பாமல் தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தி கொண்டு செயல்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாற்றியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், மாநகராட்சிகளிலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ள அ.தி.மு.க. அரசு, அந்தப் பகுதிகளில் உள்ள அமைச்சர்களையோ அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ அந்தக் குழுக்களில் இடம்பெறச் செய்யாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

ஒவ்வொரு பகுதியிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக – ஏற்கனவே அந்தந்தப் பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு மேல், “சிறப்பு அதிகாரிகளை” நியமித்திருப்பதால் மட்டுமே கொரோனா நோய் கட்டுக்குள் வந்துவிட்டதாகத் தெரியவில்லை. இது அதிகாரிகளுக்குள்ளே அதிகாரப் போட்டி, பொறாமை ஆகியவற்றை ஏற்படுத்தவே பயன்படும்.

தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மக்களின் அச்சம் பெருகிக் கொண்டே இருக்கிறது. ஊரடங்கு தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் – மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பணியில் அதிகாரிகளுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் பயன்படுத்தினால்தான் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், மக்கள் தங்கள் குறைகளை அவர்களிடம்தான் நெருங்கி, தயங்காமல் கூறுவதற்கான வாய்ப்பு உருவாகும்; உடனடி கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் முடியும்.

உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் அவதிப்படுவோருக்கு நிவாரணங்களை விரைவுபடுத்த முடியும். நோய்ப் பாதிப்பின் பீதியில் இருக்கும் மக்களிடம், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களால்தான் நேரடியாக ஆறுதல் கூறி – சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி போன்ற தனி நபர் பாதுகாப்பினைச் செய்து கொள்ள வேண்டும் என்று ஆக்கபூர்வமாக வலியுறுத்தி – போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட முடியும்.

“சிறப்பு அதிகாரிகளை” நியமித்துவிட்டால் – அதிகாரிகள் அடங்கிய பல்வேறு குழுக்களை நியமித்து விட்டால், தன் கடமை முடிந்துவிட்டது என்ற மனப்பான்மையில் முதலமைச்சர் செயல்படுவதை ஒருங்கிணைந்த முயற்சியாகக் கருதிட முடியாது. ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட “கூட்டு முயற்சி” ஒன்றே இதுபோன்ற நேரத்தில் கை கொடுக்கும்; மக்களின் உயிரைப் பாதுகாக்கும்.

ஜனநாயக ரீதியான அதுபோன்ற “கூட்டு முயற்சிக்கு” தனக்குத்தானே முதலமைச்சர் தடை விதித்துக் கொள்வது, சிறந்த நிர்வாக அணுகுமுறையாக இருக்க முடியாது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கும், பொருளாதார மீட்பு நடவடிக்கைக்கும் வலுசேர்க்காது. “கொரானோவோடு வாழப் பழகுவோம்” என்று அரசு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள நிலையில் – தன் அமைச்சரவை சகாக்கள், மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் இதுபோன்ற பேரிடர் நேரத்தில் கூட முதலமைச்சர் நிர்வாக ரீதியாக “வாழப் பழகிக் கொள்ளவில்லை” என்பது கவலையளிக்கிறது.

"ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதலமைச்சர் எடப்பாடி உணரவேண்டும்" : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

உதாரணத்திற்கு ஒன்றிரண்டைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றால்; கொரோனா கால முதலீடுகளை ஈர்க்க தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கமிட்டிக்கு தமிழகத்தின் தொழில் துறை அமைச்சர் தலைமை வகித்திருக்க வேண்டும். அதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை விட – அந்தக் குழுவில் அவர் ஒரு உறுப்பினராகக் கூட இடம்பெறவில்லை. பாதிக்கப்பட்டு – நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க, நிதி நிலைமையைச் சீர்படுத்த ஆலோசனைகள் வழங்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் ஒரு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் மாநிலத்தின் நிதியமைச்சர் ஒரு உறுப்பினராகக் கூட இடம்பெறவில்லை. இப்படி கொரோனா தடுப்பு நிபுணர் குழு, ஊரடங்கு தளர்வு பற்றி அறிவிக்கும் குழு எவற்றிலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கூட இடம்பெறவில்லை!

முதலமைச்சர் பழனிசாமி, தனது அமைச்சர்களுக்குள்ளேயே “ஒருங்கிணைப்பு” இன்றி, “கொரோனா பற்றிய அனைத்தும் எனக்கு மட்டுமே தெரியும்” என்பதுபோல் செயல்படுவது – அமைச்சரவைக்கே உரிய கூட்டுப் பொறுப்பு திட்டமிட்டுத் தட்டிக்கழிக்கப்படுவது, ஆபத்தான போக்காகும்.

இந்நிலையில் கொரோனா நோய்த் தடுப்பில் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கவும், அதிகரித்து வரும் நோய்த் தொற்றை முறைப்படி தடுக்கவும், எங்கெங்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களோ – அங்கெல்லாம் உள்ள மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

‘ஒரு கை தட்டினால் ஓசை வராது’ என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் புறக்கணிப்பதால், கொரோனா தடுப்பின் தீவிர நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டு – பெருமளவு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் இந்த நேரத்தில் – மக்களிடம் மிக ஆபத்தான பாதுகாப்புக் குறைபாடுகளை ஏற்படுத்தி, நோய்த் தொற்று அதிகரிக்கக் காரணமாக அமைந்து விடும் என்பதை முதலமைச்சர் பழனிசாமி உணர்ந்திட வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்று நான் கூறுவது – ஏதோ, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்காக மட்டுமல்ல; அ.தி.மு.கவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்திட வேண்டும். அண்டை மாநிலமான கேரளாவில், மாநில அளவிலிருந்து, நகராட்சி – ஊராட்சி வார்டுகள் வரை, அனைத்துக் கட்சிகளும் அரவணைக்கப்பட்டு, ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, வெகு சிறப்பாகப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதைப் பார்த்தாவது, மக்களாட்சியின் நெறிமுறைகளை உணர்ந்து, தமிழக முதல்வர் தன்னைத் திருத்திக் கொள்ளாதது ஆச்சரியமாக இருக்கிறது!

தனது அமைச்சரவை சகாக்களையும் கூட நம்பாமல், ஏதோ ஒரு விசித்திரமான மனப்பான்மையின் காரணமாக ஒதுக்கிவைத்து, தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்திக்கொள்ளவும், முக்கியத்துவம் தேடிக் கொள்ளவும், முதல்வர் முயற்சி செய்வது, அதுவும் இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் செய்வது, பேரிடர் மேலாண்மைக்கு ஆக்கபூர்வமான அடையாளம் அல்ல!

எனவே ஜனநாயக ரீதியாக, கடமைகளையும் பொறுப்புகளையும் பரவலாக்கி, பகிர்ந்தளித்து, கொரோனா பேரிடரை எதிர்கொள்வதே ஏற்கத் தகுந்ததாகும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்

கண்ணாமூச்சி ஆடும் கொரோனா : ஒரு வாரம் கழித்தே உறுதியாகும் நோய்த்தொற்று! அதிர்ச்சி தகவல்

0

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 87 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன் விவரம் :
மகாராஷ்டிரா – 76
சிக்காகோ – 6
மஸ்கட் – 1
மாலத்தீவு – 1
கேரளா – 1
டெல்லி -1
மேற்கு வங்கம் – 1

இவர்களில் 25 பேருக்கு முதலில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா நோய்த்தொற்று இல்லை என வந்துள்ளது. ஆனால் ஒருவாரம் கழித்து நடத்தப்படும் இறுதி ஆய்வில், நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதே போன்று, நேற்று (20.05.2020) 18 பேருக்கும், 19 ஆம் தேதி 18 பேருக்கும், ஒரு வாரம் கழித்து இறுதி ஆய்விலேயே கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஒருமுறை இல்லை என்று வந்துவிட்டால், அச்சமில்லாமல் பலர் சுற்றித்திரிந்து வருகின்றனர். இந்த தகவலை அறிந்தாவது இனி அவர்கள் எச்சரிக்கையுடன், முகக் கவசம், கிருமி நாசினி பயன்படுத்தி, பாதுகாப்பு இடைவெளியை பின்பற்ற வேண்டும்.