Home Blog Page 5634

ஈரோட்டில் 37 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடக்கத்தில் மதுரை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் அதிகம் இருந்தது. ஆரம்பக் கட்டத்தில் சென்னையை விட ஈரோட்டில் 70 பேருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டு தமிழகத்தில் முதலிடம் வகித்தது.

பல கடுமையான விதிகளை பின்பற்றி கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி 70 கொரோனா தொற்று நோயாளிகளும் முழுவதுமாக குணமடைந்து பச்சை மண்டலமாக அதாவது பூஜ்ஜிய கொரோனா தொற்று மாவட்டமாக ஈரோடு மாறியது.

ஆனால் தற்போது 37 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கவுண்டன் பாடியை சேர்ந்த 52 வயது உடைய ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவருக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இனி சென்னையிலும் திருப்பதி லட்டு – மொத்தமாக வாங்கி விநியோகம் செய்ய அலைபேசி எண்!

0

கோடை விடுமுறையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களால் நிரம்பி வழியும். ஆனால் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக வழிபாட்டு தலங்கள் களையிழந்து காணப்படுகின்றன.

அதுவும் திருப்பதிக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் சோகத்திலுள்ளனர். இருந்தாலும் தங்கள் காணிக்கையை இ-ஹுண்டி வழியாக செலுத்தி வரும் நிலையில், இந்தியா முழுவதுமுள்ள ஏழுமலையான் பக்தர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.

தற்போது திருப்பதி லட்டின் விலை 50 ரூபாயிலிருந்து பாதியாக 25 ரூபாய்க்கு குறைத்துள்ள தேவஸ்தானம், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் ஆந்திராவின் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் திருப்பதி லட்டுகளை மானிய விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் எந்த தேதியிலிருந்து லட்டு விற்பனை செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் திருப்பதி லட்டை மொத்தமாக வாங்கி இலவசமாக விநியோகிக்க வேண்டும் என நினைக்கும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் துணை நிர்வாக தலைவரை 9849575952, 9701092777 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து வசதிக்கு இந்த எண்களை அணுகவும் – அசத்தும் மாநகர போக்குவரத்துக் கழகம்

ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேல் கடந்து விட்ட நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த் 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்களால் மட்டுமே அலுவலகத்திற்கு வரும் நிலை தொடர்கிறது. வாகன வசதி இல்லாதவர்கள், தொலை தூரத்தில் உள்ளவர்களாலும் இன்னும் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசின் பல்வேறு துறைகள், தலைமைச் செயலகம் மற்றும் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்களில் உள்ளவர்கள் பணிக்கு வர ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 200 பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தலைமைச் செயலகத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது . அதன்படி 25 பேருந்துகளும், சென்னை மாவட்ட ஆணையர் அலுவலகம், பள்ளி கல்வி இயக்குநரகம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளுக்காக 5 பேருந்துகள் என ஆக மொத்தம் 230 பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.

அதே போல், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக ஊழியர்கள் பணிக்கு வர ஏதுவாக, 49 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசின் பல்வேறு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், புறநகர் பகுதிகளில் வசிக்கும் தனியார் தொழிற்சாலைகள் பணியாளர்களுக்கு பேருந்து வசதி தேவைப்பட்டால், மாநகர போக்குவரத்துக் கழகத்தின், தலைமையகப் பொது மேலாளரின் அலைப்பேசி எண்ணான 9445030504, துணை மேலாளர் அலைபேசி எண்ணான 94450 30523 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

edp.mtc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் – போட்டு கொடுத்த விபி துரைசாமி

0

ஒரு பக்கம் கொரோனா காரணமாக தமிழகம் தத்தளித்து வந்தாலும், மறுபக்கம் அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நிலையே நிலவி வருகிறது.

திமுக வில் துணைப் பொதுச்செயலாளராக இருந்து வந்த விபி துரைசாமி கடந்த சில தினங்களுக்கு முன் பாஜகவின் தமிழக தலைவரை நேரில் சந்தித்தார். இதனால் திமுக பாஜக பக்கம் சாய்கிறதோ என்ற விவாதம் எழுந்தது. இதனையடுத்து அவர் அதிரடியாக கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியது திமுக.

கட்சி பதவியிலிருந்து நீக்கப்படும் வரை தான் எந்த சூழ்நிலையிலும் திமுகவிலிருந்து விலக மாட்டேன் என கூறி வந்த விபி துரைசாமி, பதவி நீக்கம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் பாஜகவில் இனைந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து திமுக மற்றும் அதன் தலைவர் ஸ்டாலின் மீது விமர்சனங்களை வைத்து வரும் துரைசாமி, திமுகவை சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுகவின் அமைச்சர்களுடன் தொடர்பிலிருந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தெர்தல நெருங்கும் வேளையில் பலர் திமுகவிலிருந்து விலகி அதிமுக மற்றும் பிற கட்சிகளில் இனைய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.

கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில் துரைசாமியின் இந்த கருத்து திமுக வட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி திடீர் கைது

0

இன்று காலை திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை காவல் துறையினர் திடீரென கைது செய்துள்ளனர். சென்னை ஆலந்தூரில் வசித்து வரும் ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் கைது செய்ததால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு கைதுக்கு காரணமாக கடந்த  பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற திமுக கட்சி கூட்டத்தில்  ஆர்.எஸ் பாரதி தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து  அவதூறாக பேசியது தான் என்று கூறப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அந்த கூட்டத்தில் இவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவருக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் சுந்தரம் என்பவர் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக ஆர்.எஸ் பாரதி மீது புகார் அளித்திருந்தார்.  இதனைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு  உதவி ஆணையர் தலைமையிலான காவல் துறையினர், ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை கைது செய்தனர்.  கைது செய்த பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். 

பாகிஸ்தானில் 91 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

0

பாகிஸ்தானில் ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியது. 

பாகிஸ்தானில் 99 பயணிகளுடன் சென்ற விமானம் தரையிறங்க சில நிமிடங்களுக்கு முன் விபத்துக்குள்ளாகியது. லாகூரில் இருந்து கராச்சியை நோக்கி சென்ற விமானம், கராச்சி அருகே கீழே விழுந்து நொறுங்கியது. இது குறித்த தகவலை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விபத்திற்குள்ளான இந்த விமானத்தில் 91 பயணிகள் உள்பட மொத்தம் 99 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கராச்சி அருகே, குடியிருப்பு பகுதிக்கள் மீது விழுந்து விமானம் விபத்தை சந்தித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காட்சிகளின்படி,விபத்திற்குள்ளான இந்த விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பி விண்ணை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் யாரும் உயிர் தப்பியதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்த மூத்த நிர்வாகிகளுக்கான முக்கியத்துவம் குறைகிறதா?

திமுகவில் மக்கள் பிரச்சினை சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது,அரசிடம் கோரிக்கை மனு அளிப்பது உள்ளிட்டவைகளை அக்கட்சியின் மூத்த தலைவர்களான திமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் ஆர்.எஸ் பாரதி  மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தான் முன்னின்று நடத்தினர்.

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஜூன் 15 முதல் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரி திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை மனு அளித்திருந்தார். இது சம்பந்தமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் துறை செயலாளர் என இருவரையும் நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது போன்ற கோரிக்கைகளை திமுகவில் மூத்த தலைவர்கள் மூலமாக வைப்பது தான் வழக்கம். இந்நிலையில் அவர்களை விட்டு திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மூலமாக கோரிக்கை வைத்திருப்பது அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது மூத்த நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகளையும் உதயநிதி ஸ்டாலின் செய்ய ஆரம்பித்துள்ளார். திமுகவில் மூத்த தலைவர்கள் பலரிருந்தும் திமுக தலைவர் ஸ்டாலினின் வாரிசு என்ற அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை கட்சியில் தொடர்ந்து முன்னிலைப்படுத்துவது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப் படுத்துவதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலருக்கும் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் திமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் தான் திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி அளித்த பேட்டியும் அமைந்துள்ளது.

மேலும் ஆரம்ப காலத்தில் அரசியலில் ஈடுபடும் ஆசையே இல்லை என்ற உதயநிதி ஸ்டாலின் திடீரென்று அரசியலில் நுழைந்து கட்சியின் முக்கிய பொறுப்பையும் பெற்றது கட்சியிலுள்ள பல மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்?

0

ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். தங்கள் முன்னோர்களில் யாராவது கொலை செய்து இருந்தாலும் நாம் முற் பிறவியில் கடும் பாவம் செய்து இருந்தாலும் இத்தகைய குறையுடய அமைப்பில் பிறக்கும்படி ஆண்டவன் நம்மை படைக்கிறான்.
பிரம்மஹத்தி தோஷம் தரும் விளைவு

சிலருக்கு எதிலும் காரியத்தடங்கள் வந்து கொண்டேயிருக்கும்
திருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்து வகை செல்வங்கள் கிடைப்பதில் கடைசி வரை இழுபறி இருந்து கொண்டே இருக்கும்.
நல்லறிவு, நல்ல பழக்கங்கள், நல்ல உழைப்பு போன்றவை இருக்கும் ஆனால் தகுந்த பலன்கள் கிடைப்பதில்லை எல்லாவற்றிலும் தோல்வி ஏற்படும்.

பரிகார ஸ்தலங்கள்

இதற்கு சில பரிகாரங்கள் உள்ளது கடும் பிரம்மஹத்திக்கு திருவிடைமருதூர் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக உள்ளது.

  • பாண்டிய மன்னன் ஒருவனுக்கு அந்தணன் ஒருவனை தெரியாமல் கொன்ற பாவம் பிரம்மஹத்தியாக பிடித்துகொண்டது சிவபெருமானால் பாண்டிய மன்னனின் கனவில் சென்று சொல்லி திருவிடைமருதூர் வரச்செய்தார் இவா கூடவே வந்த அந்தணன் ஆவி கோவில் முன்புற வாசலில் மன்னன் நுழையவும் உள்ளே நுழைய முடியாமல் வாசலிலேயே நின்றுகொண்டது.சிவபெருமானின் அசரீரிகேற்ப உள்ளே சென்ற மன்னன் சுவாமியை வணங்கிவிட்டு சென்று பின் வாசல் வழியாக வெளியேறினான் முன் வாசலில் நின்ற அந்தணன் ஆவி மீண்டும் அவனை பிடித்துவிடலாம் என முடிவு செய்து இன்னும் பிடிக்கமுடியாமல் நிற்பதாக ஐதீகம் இதற்கேற்ப இங்கு பிரம்மஹத்தி தோஷபரிகாரம் செய்யப்படுகிறது.

    இங்கு உள்ள மகாலிங்க சுவாமியையும் மூகாம்பிகை அம்மனையும் வணங்கிவிட்டு பின் வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

குறிப்பு : பிரம்மஹத்தி பரிகாரம் செய்ய அனுச நட்சத்திரம் அன்று காலையில் மட்டுமே செய்ய வேண்டும்.

  • இது செய்ய முடியாதவர்கள் இராமேஸ்வரம் அருகே தேவிபட்டினத்தில் நவபாஷாணத்தில் கடலில் கிரகங்களை அமைத்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கபெற முடியும். இங்குள்ள பிராமணர்களை வைத்தும் தோஷம் நீக்கலாம். இராமேஸ்வரத்திலும் இதற்குரிய யாகங்கள் பிரம்மஹத்தி நீக்கலாம்.

    நல்லெண்ணெய்,விளக்கெண்ணேய்,நெய், இலுப்பை எண்ணெய்,வேப்ப எண்ணெய் இவை அனைத்தும் அரைலிட்டர் எடுத்துக்கொள்ளுங்கள் இவைகளை ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். பழமையான சிவாலயத்திற்கு சென்று ,சிவன் சன்னிதி,அம்பாள் சன்னிதி மற்ற அனைத்து தெய்வங்களுக்கும் அகழ் விளக்கு உங்கள் கைகளால் ஏற்றி வழிபடவும் பின்பு அம்பாள்,சிவன் சன்னதிகளில் பூ,பழம்,தேங்காய்,வெற்றிலை பாக்கு,சூடம்,பத்தி இவைகளை அர்ச்சகர் மூலம் அர்ச்சனை செய்யவேண்டும் இப்படிச்செய்தால் கடும் தடைகள் மாறி பிரம்மஹத்தி விலகி சிவனருளால் நல்லதே நடக்கும்.

பிரம்ம ஹத்தி தோஷம் பலிக்காதபடி இருக்கும் கிரக நிலை ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் பிரம்மஹத்தி தோஷம் இருந்து செவ்வாய் தொடர்பிருந்தால் பரிகாரம் உடனே பலிதமாகாது. இவர்கள் பிரசன்ன ஜோதிடரரை அணுகி தோஷநிவர்த்தி செய்து கொள்ளவும்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்று வெளியிட்ட ஐந்து முக்கிய அறிவிப்புகள்

0

கொரோனா ஊரடங்கு கடும் சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளார திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அதனை தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்புகள்:

  • ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
  • ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
  • வங்கி கடன் தவணைகளை செலுத்துவதற்கான சலுகை ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை என மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
  • சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 90 நாள் கால கடன் வசதிகளை வழங்குவதற்காக ரிசர்வ் வங்கி, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கு மேலும், 90 நாட்கள் நீட்டித்துள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.