Home Blog Page 5638

இந்தியாவில் தடை செய்யப்படுகிறதா Tik-Tok?

சீன நிறுவனத்தை சார்ந்த ‘டிக்-டாக்’ என்னும் செயலி கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது உலகம் முழுவதும் 75 மொழிகளில் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி சுமார் 80 கோடி பேர் ‘டிக் டாக்’ செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

‘டிக்-டாக்’ செயலியால் பல விபரீதங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் அதனை தடை செய்ய பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘ஃபைசல் சித்திக்’ என்பவரது ‘டிக்-டாக்’ பக்கத்தை சுமார் 13.4 மில்லியன் பயனர்கள் பின் தொடர்கின்றனர். அவர் டிக்-டாக் பக்கத்தில் பெண்கள் மீது அமிலம் வீசுவதை ஊக்குவிக்கும் வகையில் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளார் என குற்றம் எழுந்தது. அந்த காணொளியும் வைரலாக பரவியது.

அவருடைய காணொளியை டிவிட்டரில் பதிவிட்டு குறிப்பிட்ட பலரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தை #BanTiktok என்ற ஹேஷ்டக்கில் பதிவு செய்து ட்ரெட்ன் செய்து வருகின்றனர்.

ஒரு பெண்ணின் மீது அமிலம் வீசுவதாகச் சித்தரிக்கும் காணொளியை எப்படி நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடிகிறது என்ற கேள்வியையும் பலரும் எழுப்பியுள்ளனர். பலரும் அவருடைய செயலை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனையடுத்து தேசிய மகளிர் ஆணையம், மராட்டிய மாநில காவல் துறை ஆணையருக்கும், டிக்டாக் நிறுவனத்திற்கும் கடிதம் எழுதியுள்ளது. இதனையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட காணொளி டிக்டாக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஃபைசல் சித்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “யாரையும் காயப்படுத்துவது என்னுடைய நோக்கம் இல்லை. எனது பொறுப்பை நான் உணர்ந்து, காணொளியால் காயம்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து சமுதாய சீர்கேட்டை ஊக்குவிக்கும் விதமாக ‘டிக்-டாக்’ காணொளிகள் இருப்பதால், இந்தியாவில் நிரந்தரமாக ‘டிக்-டாக்’ தடை செய்யப்பட வேண்டும் என்ற கோஷம் அதிகரித்துள்ளது.

ஜூன் 1 முதல் கோயில்கள் திறப்பு – நிபந்தனைகளை இறுதி செய்த தமிழக அரசு

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் கூடும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், கடற்கரை, பூங்காக்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

தற்போது 4வது ஊரடங்கு நடைமுறையிலுள்ள நிலையில் விரைவில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கான தளர்வை மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஜூன் 1 முதல் அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள 40,000 கோயில்களில், சில பெரிய கோயில்களில் மட்டும் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதியளிக்க அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்காக விதிக்க்படவிருப்பதாக கூறப்படும் நிபந்தனைகள்:

  • நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு இத்தனை பேர் மட்டுமே அனுமதி என்ற அடிப்படையில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.
    -பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்
  • கோயில்கள் வாயிலில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்ட பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
    -சமூக இடைவெளியைக் கடை பிடிக்க வேண்டும்
    -கோவிகளை இரண்டு வேளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

மேலும் பக்தர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிருமிகளை தானாகவே அழிக்கும் அதி நவீன முககவசம்!

ஸ்மார்ட் வாட்சுகள் தயாரிப்பில் முன்னணியிலிருக்கும் ஹூவாமி / அமேச் ஃபிட் (HUAMI / AMAZFIT).

2013ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் வாட்சுகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் N95 முக கவச வழிகாட்டுதலுடன் அதி நவீன முககவசங்களை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Aeri (ஏரி) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த முககவசங்களில் பொருத்தப்பட்டிருக்கும் புற ஊதா விளக்குகள் (Ultra Violet Lights) கிருமிகளை அழித்துவிடும் என கூறப்படுகிறது. USB மூலம் சார்ஜ் செய்யும் வசதியுடைய இந்த முகக் கவசத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஃபில்ட்டர்களை கழட்டி சுத்தப்படுத்த முடியுமாம். ஒளி ஊடுருவும் (Transparent) வகையில் தயாரிக்கப்படும் இந்த முகக் கவசங்கள் நீண்ட நாட்கள் உழைக்கும் பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.

முகத்தை அடையாளம் காணும் (Face Recognition) அம்சத்தை தங்கள் அலைபேசியில் வைத்திருக்கும் ஆண்டிராய்ட் மற்றும் ஆப்பிள் அலைபேசி பயனர்கள், Aeri முகக்கவசத்தை அணிந்து அவர்கள் அலைபேசியை இயக்க முற்பட்டால் கூட அவர்களின் அலைபேசி அவர்களின் முகத்தை அங்கீகரிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

கிருமிகளை தானாகவே அழிக்கும் அதி நவீன முககவசம்!

ஹூவாமி நிறுவனம் புதிய முகக்கவசத்தை சீன அரசாங்கத்தின் மூத்த மருத்துவ ஆலோசகருடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. தற்போது இந்த முககவசத்தை பரிசோதனை செய்து வரும் இந்நிறுவனம் விரைவில் வாடிக்கையாளர்களை கவரும் விலையில் இதனை அறிமுகப்படுத்தவிருப்பதாக கூறப்படுகிறது.

எமனாக மாறிய ‘பப்ஜி’ – மாரடைப்பால் உயிரிழந்த தமிழக மாணவர்

கசந்த சில வருடங்களாக இளைஞர்கள் அலைபேசி செயலி மூலம் விளையாட்டுக்கு அடிமையாகி வருகின்றனர். இதை போன்ற விளையாட்டுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து மருத்து நிபுணர்கள் எச்சரிக்கை செய்து வந்தாலும் இவர்கள் கேட்பதே இல்லை.

அப்படிப்பட்ட விளையாட்டு வரிசையில் தற்போது ‘பப்ஜி’ எனும் விளையாட்டு சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் அடிமை படுத்து வருகிறது. அதுவும் இந்த விளையாட்டை இண்டர்நெட்டின் உதவியுடன் நண்பர்களுடன் இனைந்து கூட்டாக இரவு பகல் பாராமல் விளையாடி வருகின்றனர். இதற்கு அடிமையாகிப் பல சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பல உபாதைகளுக்கு ஆளாகி வரும் நிலையில் ஈரோட்டை சேர்ந்த இளைஞர் ‘பப்ஜி’யால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

ஈரோட்டிலுள்ள கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் அங்குள்ள பிரபல முட்டை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருபவர்.

சதீஷ்குமார் எந்நேரமும் அவரது அலைபேசியில் ‘பப்ஜி’ விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் பல முறை கண்டித்தும், அலைபேசியை பிடுங்கி வைத்தும் கேட்காமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். மேலும், அலைபேசி விளையாட்டில் வெற்றி பெற வேண்டுமென்கிற உந்துதல் அதிகம் இருந்து வந்ததுடன் அனைத்து விளையாட்டுகளிலும் வெற்றி பெற்றும் வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, தொடர்ந்து அலைபேசி விளையாட்டுகளிலேயே மூழ்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (மே 19) மதியம் வழக்கம் போல் வீட்டுக்கு வெளியே அலைபேசி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் மிகவும் வியர்த்துப் போன நிலையில் விளையாட்டை தொடர்ந்து கொண்டிருந்த சதீஷ்குமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனைத் தாமதமாகவே கவனித்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சதீஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகவும், அதிக மன அழுத்தம் காரணமாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

அலைபேசியில் விளையாடி அதிக மன அழுத்தம் காரணமாக மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை கண்காணித்துக் கொண்டிருங்கள்.

தமிழகம் மற்றும் புதுவை இடையே பேருந்து போக்குவரத்து துவக்கம்

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பேருந்து இயக்கம் உட்பட முக்கிய விவகாரங்களில் மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பெரும்பாலான மக்களின் கோரிக்கையை ஏற்று மாநில அரசுகள் பேருந்து இயக்கம், சலூன் கடைகள் திறப்பு உள்ளிட்ட சில தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், தற்போது அமலில் இருக்கும் நான்காவது ஊரடங்கையொட்டி அறிவித்த தளர்வுகளில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்தது.

முதற்கட்டமாக சென்னையில் 200 பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெளி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து இயக்கம் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடலூர், நாகை வழியாகக் காரைக்கால் வரை செல்லும் பேருந்துக்கு மாவட்ட அனுமதி வழங்கியுள்ளது. இந்த பேருந்து தமிழக மாவட்டங்கள் வழியாக செல்வதால் கடலூர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர்களிடம் இது குறித்து அனுமதி கோரப்பட்டிருந்தது. அவர்கள் உரியப் பாதுகாப்புடன் பேருந்தை இயக்குமாறு அறிவுறுத்தி அனுமதி அளித்துள்ளனர்.

இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுவை இடையே பேருந்து போக்குவரத்து துவங்கியுள்ளது.

கட்டண உயர்வு, ஜூலையில் பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளிகள் கோரிக்கை

கட்டண உயர்வு, ஜூலையில் பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளிகள் கோரிக்கை

மார்ச் மாதம் இறுதியில் கோரானா அச்சுறுத்தலால் மூடப்பட்ட பள்ளிகள், ஊரடங்கு நீட்டிப்பால் மீண்டும் பள்ளிகளை திறக்க முடியவில்லை.

இதனால் கடந்த கல்வியாண்டில் பயின்ற 1 முதல் 9 வகுப்பு மாணவர்கள் வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். வரும் ஜூன் மாதம் 15ம் தேதி பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடத்த அரசு பெரும் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், நாள் தோறும் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் அது திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற ஐயம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஜூலை முதல் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்போது நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதால், தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். ஜூலை முதல் வாரத்தில் பள்ளிகளை திறந்து ஒருநாள் இடைவெளிவிட்டு வகுப்புகளை நடத்தலாம். அரசுப் பள்ளிகளை போல, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்களை இலவசமாகத் தரவேண்டும். பாடத்திட்டத்தில் 20 சதவீதம் வரை குறைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கோரோனா பாதிப்பால் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கியிருக்க, தனியார் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்தி கேட்பது கடும் விமர்சனத்திற்க்கு உள்ளாகியிருக்கிறது.

கொரானாவுக்கு இது தான் ஹோமியோபதி மருந்து – மூன்று நாட்களுக்கு எடுத்து கொள்ள சொல்லும் தமிழக அரசு

கொரானாவுக்கு இது தான் ஹோமியோபதி மருந்து – மூன்று நாட்கள் எடுத்து கொள்ள சொல்லும் தமிழக அரசு

கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மருந்துகளை எடுக்க மத்திய அரசும் மாநில அரசும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

சித்த மருத்துவத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் உள்ளிட்டவற்றைத் தமிழக அரசே மக்களுக்கு வீடுதோறும் சென்று வழங்கி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், சிகிச்சை வழங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம் – 30 (Arsenicum Album) என்ற ஹோமியோபதி மருந்தை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் எனவும், ஒரு மாதத்திற்குப் பின் இதே முறையில் மருந்து சாப்பிட வேண்டும் எனவும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு, இந்த மருந்தை பயன்படுத்தும்படி, கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.

Arsenicum Album – 30 என்ற இந்த ஹோமியோபதி மருந்தை அனைத்து மக்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், தொற்று பாதித்தவர்களுக்கும் இலவசமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, சென்னை பாடி பகுதியை சேர்ந்த ஜேசய்யா ஆன்டோ பூவேந்தன் என்ற ஹோமியோபதி மருத்துவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவர் தன் மனுவில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, குஜராத் மாநிலங்களில் இந்த மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் மருந்துக்கு ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பித்தும், அது அமல்படுத்தப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.வேலுமணியும், அரசு தரப்பில் அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனும் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, Arsenicum Album – 30 மருந்துக்கு ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை ஏற்று, அதை பயன்படுத்த தமிழக அரசும் அரசாணை பிறப்பித்து, அமல்படுத்தி வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும் இந்த மருந்து கிடைப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தார்.

இந்த தேதியிலிருந்து 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் – ரயில்வே துறை அமைச்சர் அறிவிப்பு

0

கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படாமல் இருந்தது.

தற்போது 4வது முறையாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த மாநிலத்திற்குக் கொண்டு சேர்க்க மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 12ம் தேதியிலிருந்து தேர்ந்தெடுத்த 15 வழித்தடங்களில் மட்டும் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் 200 பயணிகள் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து துறை அமைச்சர் ப்யூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த ரயில்கள் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் பயணிக்க ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த ரயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதி அல்லாத 2ம் ஆம் வகுப்பு பெட்டிகளை கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயரும் கொரோனா பலி… உச்சத்தில் வைரஸ் தொற்று… வெளியான பட்டியலால் அச்சத்தில் மக்கள்..!!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 49 லட்சத்து 89 ஆயிரத்து 672 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 19 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 17 லட்சத்து 86 ஆயிரத்து 829 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

உயரும் கொரோனா பலி... உச்சத்தில் வைரஸ் தொற்று... வெளியான பட்டியலால் அச்சத்தில் மக்கள்..!!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1,01,139 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 3,163 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 39,174 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 35,058/1,249
டெல்லி – 10,054/168
குஜராத் – 11,745/694
தமிழ்நாடு – 11,760/81
தெலுங்கானா – 1,980/37
கேரளா – 630/04
ராஜஸ்தான் – 5,507/138
உத்தரபிரதேசம் – 4,605/118
ஆந்திர பிரதேசம் – 2,474/50
கர்நாடகா – 1,246/37
மத்திய பிரதேசம் – 5,236/252
ஜம்மு & காஷ்மீர் – 1,289/15
மேற்கு வங்கம் – 2,825/244
பஞ்சாப் – 1,980/37
ஹரியானா – 928/14
பீகார் – 1,391/09
அசாம் – 107/02
சண்டிகர் -196/03
உத்தர்கண்ட் – 93/01
லடாக் – 43/0
அந்தமான் & நிக்கோபார் -33/0
சத்தீஸ்கர் – 93/01
கோவா – 38/0
இமாச்சல பிரதேசம் – 90/03
ஒடிசா – 876/04
பாண்டிச்சேரி – 18/01
மணிப்பூர் – 07/0
ஜார்க்கண்ட் – 223/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 167/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 13/01
தாத்ரா நகர் ஹாவலி – 01/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 81 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 4,406 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

உயரும் கொரோனா பலி... உச்சத்தில் வைரஸ் தொற்று... வெளியான பட்டியலால் அச்சத்தில் மக்கள்..!!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியானதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாடலாம் ஆனால் இதற்கு மட்டும் தடை! ஐசிசி அறிவிப்பு!

0

ஊரடங்கு அறிவித்த போதும் இந்திய கிரிக்கெட் வீரருக்கான பயிற்சி முகாம் துவங்கியது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி எந்தவித பயிற்சிகளில் கூட பங்கேற்கவில்லை 13வது ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளில் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகின்றனர் இதனிடையே நான்காவது கட்ட ஒரு அரங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன இதன்படி ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டியில் நடத்துவது தொடர்பாக தளர்வுகள் தரப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்பொழுது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கிரிக்கெட் விளையாட்டின் போது பந்து பளபளப்பாக்க பந்துகளில் பந்துவீச்சாளர்கள் எச்சில் மற்றும் வியர்வையை பயன்படுத்துவார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில் எச்சில் பயன்படுத்தினால் மற்றவர்களுக்கு அதன் மூலம் வைரஸ் பரவும் என்ற அபாயம் உள்ளதால் பயன்படுத்த ஐசிசி தடை விதிக்க பரிந்துரை செய்து உள்ளது.

எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டால் அது பந்துவீச்சாளர்களுக்கு கடினம் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறுகையில் எச்சில் பயன்படுத்த தடை விதிப்பது பந்துவீச்சாளர்களுக்கு கடுமையான விஷயம் ஐசிசி அதற்கான மாற்று முறையை கொண்டு வர ஆலோசனை செய்யலாம். மேலும் பளபளக்க முடியவில்லை என்றால் பந்திற்கும் பேட்டிற்கும் போட்டியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. பந்து வீச்சாளர்களுக்கு முகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். நீங்கள் இதை பயன்படுத்த அனுமதிக்க வில்லை என்றால் மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும் இதுவும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இல்லையெனில் கிரிக்கெட் பார்ப்பது சுவாரசியமாக இருக்காது என கூறியுள்ளார்.