Home Blog Page 5637

பாமகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! மருத்துவர் ராமதாஸ் பெருமிதம்

0

தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் ஆசிரியர் தேர்வு வாரியம் எம்.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு விதிகளை மீறி அநீதி இழைத்தது குறித்து பாமக அளித்த கோரிக்கைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் தற்போது நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றியாகும்.

அரசு பள்ளிகளுக்கு 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளுக்கான முடிவுகள் நவம்பர் 20-ஆம் தேதியும், ஜனவரி 2-ஆம் தேதியும் இரு கட்டங்களாக வெளியிடப்பட்டன. இவற்றில் வேதியியல், வரலாறு, பொருளியல், தமிழ், அரசியல் அறிவியல், உயிர் வேதியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வில் இடஒதுக்கீட்டு முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், அப்பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளுக்கு உட்பட்டு புதிய பட்டியலை தயாரித்து வெளியிடும்படியும் பா.ம.க பலமுறை வலியுறுத்தியிருந்தது. நேரிலும் கோரிக்கை மனுவை ஆதாரங்களுடன் அளித்திருந்தது.

வேதியியல் பாடத்திற்கு 121 பின்னடைவு பணியிடங்கள், 215 நடப்பு காலியிடங்கள் உட்பட மொத்தம் 356 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதற்காக தேர்வு வாரியம் தயாரித்திருந்த தற்காலிகத் தேர்வுப் பட்டியலில், அதிக மதிப்பெண் பெற்று பொதுப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34 பேரையும், பட்டியல் இனத்தவர் 5 பேரையும் பொதுப் பிரிவில் சேர்க்காமல், அவரவர் சமூகப் பிரிவுகளில் வாரியம் சேர்த்திருந்தது. இது பெரும் அநீதியாகும்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன், ‘‘ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளின்படி புதிய பட்டியலை தயாரிக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டிருந்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஆசிரியர் தேர்வு வாரியம், வேதியியல் தவிர பிற பாடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்களை பிப்ரவரி மாதமே நிரப்பி பணி ஆணைகளை வழங்கியது.

வேதியியல் ஆசிரியர் நியமனம் குறித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாகி, நீதிபதி செந்தில்குமார் இராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களை பொதுப்பிரிவில் சேர்க்காமல், இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது தவறு என்று தீர்ப்பளித்துள்ளது.

அதுமட்டுமின்றி, அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பொதுப்பிரிவில் சேர்த்து விட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டிலும் அவர்களை சேர்த்தால் அப்பிரிவினரின் பிரதிநிதித்துவம் அதிகரித்து விடும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்ட முட்டாள்தனமான அச்சத்தை நிராகரித்த நீதிபதிகள்,‘‘ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் தகுதி அடிப்படையில் பொதுப்பிரிவு இடத்தை பிடிக்கும் போது அதை மதிக்க வேண்டும். அவர்கள் பொதுப்பிரிவு இடத்தை பிடிக்கக்கூடாது என்று யாரும் கூற முடியாது. அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பொதுப்பிரிவில் நியமிக்கப்படுவது தான் முறை; இது யாருடைய உரிமையையும் பறிக்காது’’ என்றும் தீர்ப்பில் மிகவும் தெளிவாக தெரிவித்திருக்கின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை பாட்டாளி மக்கள் கட்சி புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டிய பிறகும் கூட அதை சரி செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வரவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்த தெளிவான தீர்ப்பைக் கூட நடைமுறைப்படுத்தாமல், மேல்முறையீடு செய்தது. அதையும் கடந்து, அதிக மதிப்பெண் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களை பொதுப்பிரிவில் சேர்த்தால், அப்பிரிவினருக்கு அதிக இடங்கள் கிடைத்து விடும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வாதிட்டதை வைத்துப் பார்த்தாலே, ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அளவுக்கு சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது என்பதை உணர முடியும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சமூக நீதிக்கு எதிரான அதன் போக்கை தொடராமல், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, வேதியியல் பாட ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை புதிதாக தயாரித்து வெளியிட வேண்டும். அதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 பேருக்கு கூடுதலாக வேதியியல் ஆசிரியர் பணி கிடைப்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் உறுதி செய்ய வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் கடைபிடித்த தவறான இடஒதுக்கீட்டு கொள்கை காரணமாக வேதியியல் வேதியியல் பாடத்தில் 34 பேர் மட்டும் பாதிக்கப்படவில்லை. அவர்கள் தவிர தமிழ் பாடத்தில் 28 பேர், பொருளியலில் 12 பேர், வரலாறு 6 பேர், புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல் பாடங்களில் தலா ஒருவர் என மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 83 பேரும், பட்டியலினத்தைச் சேர்ந்த 16 பேரும் ஆசிரியர்களாகும் வாய்ப்பை இழந்துள்ளனர். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த பணியிடங்களுக்கும் பொருந்தும் என்பதால், அந்த பாடங்களுக்கான ஆசிரியர் நியமன பட்டியலையும் புதிதாக தயாரித்து, அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் நியமனம் வழங்க வேண்டும்; அதன் மூலம் சமூகநீதியை உறுதி செய்ய வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக சமூக நீதிக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரை அப்பதவியில் இருந்து மாற்ற வேண்டும். அரசுப் பணி தேர்வாணையங்களில் சமூகநீதிக்கு ஆதரவான அதிகாரிகளை பணியமர்த்தி, சமூக நீதி முழுமையாக கடைபிடிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு நாளை முதல் அனுமதி

0

கொரோனா தொற்று காரணமாக சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்பு குழுவினர் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கச் சொல்லி அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளார்.

படப்பிடிப்பின் போது பின்பற்றவேண்டிய கட்டுப்பாடுகள்:

• Indoor படப்பிடிப்பிற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
• தடைசெய்யப்பட்ட பகுதியில் படப்பிடிப்பிற்கு அனுமதி கிடையாது.
• படப்பிடிப்பு வெவ்வேறு மாவட்டங்களில் இருப்பின் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையான அனுமதி பெற்ற பின்பே படப்பிடிப்பு எடுக்க வேண்டும்.
• நடிகை நடிகைகள் தவிர மற்ற கலைஞர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
• நடிகை நடிகைகளும் இடைவேளையின் போது கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்.
• சின்னத்திரையில் அனைவரும் குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
• இவர்கள் அனைவரும் அடிக்கடி சோப்பினால் கைகளை கழுவ வேண்டும்.
• படப்பிடிப்பு எடுக்கப்படும் வீட்டைச் சுற்றி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கிருமிநாசினி கட்டாயம் தெளிக்க வேண்டும்.
• ஒரு சீரியல் படப்பிடிப்பில் 20 பேர் மிகயாமல் இருக்கலாம் என்று அரசு அனுமதித்துள்ளது.

இவ்வாறு பல நிபந்தனைகளுடன் நாளை சின்னத்திரை படப்பிடிப்புகளை ஆரம்பிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சிக்கன் பிரியாணி, தந்தூரி சிக்கன் – மருத்துவமனையில் கொரோனா நோயாளி செய்த அட்டகாசம்

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் அட்ராஸ்டிக்கள் தாங்க முடியவில்லை என மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சிலர் அத்துமீறி நோயாளிகள் போலில்லாமல் விருந்தாளி போல் நடந்து கொள்வதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான்கு நோயாளிகள் ஒன்று சேர்ந்து ஆன்லைனில் சிக்கன் பிரியாணி, தந்தூரி சிக்கன் செய்துள்ளனர்.

அதை டெலிவரி செய்ய வந்த ஊழியரை மருத்துவமனை காவலாளி திருப்பி அனுப்பியுள்ளார். இதனை கேள்விப்பட்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் அந்த நோயாளிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். கொரோனா தாக்கம் இருக்கும் நிலையில் மருத்துவர்களின் பரிந்துரை செய்யும் உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறி இருக்கின்றனர்.

மது பானங்களை ஹோம் டெலிவரி செய்யும் ஸ்விகி

மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது நாங்காவது கட்டமாக தொடர்ந்து வருகிறது.

இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்த மாநில அரசுகள், மதுபானக்கடைகளையுல் சில கட்டு பாட்டுகளுடன் திறப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் 45 நாளுக்கு மேல் மது பார்க்காத மது பிரியர்கள், அலை அலையாக மதுக்கடையை மொய்ததன் விளைவு, சில மாநிலங்களில் மதுக்களின் விலைகள் ஏறப்பட்டன, சில மாநிலங்கள் மதுக்கடைகளை அரசே மூடியது, சில மாநிலங்களில் மதுக்கடைகளை மூட நீதிமன்றமே உத்தரவிட்டது.

இதனையடுத்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து மதுக்கடைகளை மாநிலங்கள் திறந்துள்ளன.

இந்நிலையில் பிரபல உணவு ஹோம் டெலிவரி நிறுவனமான ஸ்விகி மது பானங்களை வீட்டுக்கு வந்து டெலிவரி செய்யும் முறையை தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக ஜார்கண்ட் மாநில அரசி அனுமதியுடன் அந்த மாநிலத்தில் இந்த சேவையை துவங்கியுள்ள ஸ்விகி, இதனி மற்ற மாநிலங்களிலும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது.

லாக்டவுனிலும் அசராத பக்தர்கள் – திருப்பதி கோயிலுக்கு இ-உண்டியல் மூலம் வசூலான தொகை எவ்வளவு தெரியுமா?

0

லாக்டவுனிலும் அசராத பக்தர்கள் – திருப்பதி கோயிலுக்கு இ-உண்டியல் மூலம் வசூலான தொகை எவ்வளவு தெரியுமா?

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் கூடும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், கடற்கரை, பூங்காக்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

கடந்த 120 ஆண்டுகளில் மூடப்படாத திருப்பதி, திருமலையில் உள்ள வேங்கடாசலபதி கோயிலுக்குள் நுழைய பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டாலும், தேவஸ்தான ஊழியர்கள், உறுப்பினர்கள், பாதுகாப்பு படையினர் தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு தரிசனம் மூலம் தினசரி 10 ஆயிரம், 20 ஆயிரம் என உண்டியல் வசூலாகி வருகிறது. இதில் அதிகபட்சமாக ஒரு நாளில் 2 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

கோடைக்காலத்தில் தான் திருப்பதியில் கூட்டம் மிக அதிக அளவிலிருக்கும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் தங்கள் காணிக்கையை இ-உண்டியல் மூலம் பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 1.97 கோடி வசூலாகியுள்ளது. இது சென்ற ஆண்டை விட 18 லட்சம் கூடுதல் பணம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஒரு பக்கம் பெரும் வருமான இழப்பை திருப்பதி தேவஸ்தானம் சந்தித்து வந்தாலும், இதை போன்ற காணிக்கைகள் அவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

எந்த மாதம் ஐபிஎல் துவங்கும்? – பி.சி.சி.ஐ தகவல்

0

மார்ச் மாத இறுதியில் 13வது ஐபில் போட்டிகள் துவங்கவிருந்த நிலையில் கோரானா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15க்கு தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

ஆனால் இன்னும் கோரனாவுக்கு மருந்தோ தடுப்பு மருந்தோ முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து இதை பற்றி தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் பி.சி.சி.ஐ கொரோனா கட்டுக்குள் வரும் பட்சத்தில் செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் துவங்கப்படலாம் என்று பி.சி.சி.ஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ தலைமை நிர்வாகி ராகுல் ஜோஹ்ரி கூறுகையில் “பருவமழைக்குப் பிறகுதான் கிரிக்கெட் நடவடிக்கைகள் தொடங்க முடியும், ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். நாங்கள் முற்றிலும் இந்திய அரசாங்கத்தால் வழிநடத்தப் போகிறோம், அரசாங்க வழிகாட்டுதல்கள் எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பின்பற்றுவோம். மழைக்காலத்திற்குப் பிறகுதான் கிரிக்கெட் நடவடிக்கை நடைமுறையில் தொடங்க முடியும்” என தெரிவித்துள்ளார்

இதனால் பருவ மழைக்காலமான ஜூலை – செப்டம்பருக்கு பின் ஐபிஎல் போட்டிகள் துவங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அக்டோபரில் டி20 உலக கோப்பை திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கொரோனா காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தை ஐபிஎல் போட்டிகள் நடத்த பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விமான பயணத்திற்கு மத்திய அரசு வெளியிட்ட புதிய விதிமுறைகள்

0

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து பேருந்து, ரெயில் மற்றும் விமானம் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பல கட்டங்களாக இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் சமீபகாலமாக இந்த ஊரடங்கில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வெளிமாநிலங்களில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து அந்தந்த மாநில அரசுகள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகக் கடந்த 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் அடுத்தக்கட்டமாக வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் 4 வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. தற்போது வரை விமான போக்குவரத்தை பொறுத்தமட்டில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை என இரண்டும் முற்றிலும் நிறுத்தபட்டுள்ளது. இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக மட்டும் சில விமானங்கள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போலவே மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்லவும் சில விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் தற்போதுள்ள ஊரடங்கு முடிவடைந்த பிறகு தான் விமான போக்குவரத்து வழக்கம் போல தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்து அதற்கு முன்பே, அதாவது வருகிற 25 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. 
இந்த நிலையில், தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் இயக்கப்படும் விமானங்களில் பயணம் செய்பவர்களுக்காக புதிய விதிமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது. 

இந்த விதிமுறையின் படி உடல் வெப்ப நிலையை அளவிடும் கருவியான தெர்மல் ஸ்கிரீனிங் பகுதி வழியாக தான் விமான நிலையத்திற்குள் பயணிகள் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை தவிர மற்ற அனைவரும் கட்டாயமாக ஆரோக்கிய சேது செயலியை மொபைலில் நிறுவியிருக்க வேண்டும். மேலும் விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வரவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவில்கள் திறப்பு – அறநிலை துறை விளக்கம்

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் கூடும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், கடற்கரை, பூங்காக்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

தற்போது 4வது ஊரடங்கு நடைமுறையிலுள்ள நிலையில் விரைவில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கான தளர்வை மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஜூன் 1 முதல் அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள 40,000 கோயில்களில், சில பெரிய கோயில்களில் மட்டும் நிபந்தனைகளுடன் பக்தர்களை வழிபாட அனுமதியளிக்க அரசு முடிவு செய்திருப்பதாகத் நேற்று தகலவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள இந்து சமய அறநிலை துறையினர் “தற்போது வரை, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டை அனுமதிப்பது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை. அறநிலையத்துறை சார்பிலும் அப்படி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து விடுபடும் மற்றொரு மாவட்டம்!

கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னையில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, வேகமாக தமிழகம் முழுவதும் பரவியது.தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையுடன் இனைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகிறது.

தமிழகத்தில் சென்னை கொரோனா தொற்றில் முதலிடம் வகுத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக மாவட்டங்கள் மெல்ல கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட்டு வருகிறது.

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, திருச்சி, அரியலூர், இராமநாதபுரம், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் முழுவதுமாக கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதிக்கு பின்னர் தருமபுரி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், இறுதியாக கடந்த 11ம் தேதி பெண் காவலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அந்த நாளில் இருந்து 14 நாட்கள் வரை யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்ற நிலை நீடித்தால் அதன் பின்னர் தருமபுரி மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும்.

சமையல் எண்ணெய் சில்லறை விற்பனைக்கு தடை விதித்த தமிழக அரசு – அதிர்ச்சியில் வியாபாரிகள்

ஜூன் 1ம் தேதியிலிருந்து சமையல் எண்ணெயை பாக்கெட்டில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது நல்லெண்ணை, கடலை எண்ணை உட்பட எண்ணைகள் சில்லறையாக மக்கள் வாங்கி வருகிறனர். ஆனால் சில்லறையாக விற்க்கப்படும் எண்ணையில் கலப்படம் செய்யப்படுவதாக புகாழ் எழுந்தது. இதனையடுத்து சில்லறை விற்ப்பனைக்கு தடை விதிக்கப்பட, வியாபாரிகள் அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து இதை ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டு, ஆய்வு நடத்தப்படது.

அது அளிக்கப்பட்ட பரிந்துரையின் பெயரில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் பாக்கெட்டில் மட்டுமே எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

கொரோனா பாதிப்பால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக மூடியிருந்த தொழிற்சாலைகளில் தற்போதுதான் உற்பத்தி செய்ய துவங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு வரும் ஜூன் 1ம் தேதி முதல் சமையல் எண்ணெய் சில்லறை விற்பனைக்கு தடை விதித்திருப்பது எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து எண்னை வியாபார்கள் “இளைஞர்கள் பலர் செக்கு எண்ணெய் உற்பத்தியை சுயதொழிலாக செய்கின்றனர் .இவற்றை பேக்கிங் செய்து விற்பது சிரமமானது. சில்லறை விற்பனைக்கு தடை விதிப்பது சிறு வணிகர்களை பாதிக்கும். தனியாக பேக்கிங் உரிமம் எடுக்க வேண்டியிருக்கும் என்பதால் சிறிய அளவிலான உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார சுமையும் ஏற்படும். இந்த உத்தரவுகள் பெரிய நிறுவனங்களுக்கே சாதகமாக அமையும். கொரோனா காலத்து தாக்கத்திலிருந்து இன்னும் மீளாத நிலையில், கருவிகள் வாங்கி பேக்கிங் செய்து, இதற்கான பணிகள் மேற் கொள்வதும் சிரமத்திற்குரியது. இதனால் ஒரு லிட்டருக்கு ₹15 வரை விலை உயர்வுக்கும் வழிவகுக்கும். எனவே, ஜூன் 1ம் தேதி முதல் பேக்கிங் கட்டாயம் என்ற உத்தரவை, குறைந்தது ஓராண்டு கழித்து அமல்படுத்த பரிசீலிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளர்.

ஆனால் அரசு தரப்பிலோ “எண்ணெய் சில்லறை விற்பனைக்கு 2006ம் ஆண்டு முதலே தடை உள்ளது. 2011லும் கூடுதல் சட்டம் இயற்றி கடுமைப்படுத்தப்பட்டுள்ளது. நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தை, ஆயில் கமிட்டி முடிவின் கீழ் ஜூன் 1ல் மீண்டும் செயல்படுத்தும் விதமாகவே அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கலப்படம் தடுக்கவும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் பலளிக்கும். இதற்கென வணிகர்களுக்கு போதிய கால அவகாசமும் தரப்பட்டிருக்கிறது” என்கின்றனர்