Home Blog Page 5649

20 லட்சம் கோடி நிவாரணம் யார் பயன் பெறுவார்கள்? – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

0

20 லட்சம் கோடி நிவாரணம் யார் பயன் பெறுவார்கள்? – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தாததையடுத்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதை மீட்கும் பொருட்டு ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என பாரத பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதற்கட்டமாக சில திட்டங்களை அறிவித்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது:

“விரிவான தொலைநோக்கு திட்டத்தைப் பிரதமர் நேற்று அறிவித்திருக்கிறார். பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனை அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியா சுயசார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் தேவை ஆகியவை வளர்ச்சியின் தூண்கள். இந்த 5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் கவனம் செலுத்தப்படுகின்றன.5 அம்ச திட்டங்களுடன் 20 லட்சம் கோடியிலான தன்னிறைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு திட்டங்கள் மூலம், இந்தியா தன்னிறைவு பெறுவதுடன் உலகத்திற்கு உதவுவதாக இருக்கும்.

மின்னுற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக விளங்குகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் சுமார் 52,606 கோடி ரூபாய்க்கும் மேல் நிதியுதவி அளிக்கப்பட்டது. 2லட்சம் டன் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. 6 கோடிக்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள் இதன்மூலம் பயன் பெற்றனர்.”

இதனைத் தொடர்ந்து அவர் அறிவித்த திட்டங்கள்:

சிறு குறு தொழில்களுக்கு பிணையற்ற கடன்கள் வழங்கப்படும். 31, அக்டோபர் 2020 வரை இந்தக் கடன்கள் வழங்கப்படும். சுமார் ரூ.3 லட்சம் கோடிக்கு கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கடன் தொகை 100% உத்தரவாதத்துடன் வழங்கப்படும். இந்தக் கடனுக்கான தவணைக் காலம் 4 ஆண்டுகளாகும்.

நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்பதற்கான முதலீட்டு வரம்பு உயர்வு 10 கோடியிலிருந்து 20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளிகள் இனி உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் என்ற பகுப்புக்குள் வராது. இந்த ஒப்பந்தப்புள்ளிகள் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். சிறு குறு நிறுவனங்கள் இனி அரசின் கொள்முதல் பட்டியலில் இருக்கும். மேலும் சிறு குறு நிறுவனங்களுக்கு ஆன்லைன் வர்த்தகச் சந்தை அணுகுமுறை எளிமைப்படுத்தப்படும். வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கும் கடன் வழங்கப்படும். அதற்கான பிணையை அரசே ஏற்கும்.

அடுத்த மூன்று மாதங்களுக்கான (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) PF தொகையை அரசே செலுத்தும். PF பங்களிப்பு தொகை தற்போதுள்ள 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 7 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். இதற்காக ரூ.2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டேன்ஜெட்கோ உள்ளிட்ட மின்னுற்பத்தி செய்யும் டிஸ்காம் நிறுவனங்களுக்கு 90,000 கோடி நிதியுதவி.

ஒப்பந்த ஊழியர்களின் ஒப்பந்தங்கள் கூடுதலாக 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுமானம், சரக்குப் போக்குவரத்து ஆகிய துறைகள் இதில் அடங்கும்.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கால நீட்டிப்பு. மார்ச் 25ஆம் தேதிக்குப் பிறகு கட்டுமானப்பணிகளைத் தொடங்கிய நிறுவனங்களுக்கு 6 மாத காலம் ஒப்பந்தம் நீட்டிப்பு.

TDS வரிப்பிடித்தம் 2021 மார்ச் வரை 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இந்த அறிவிப்பு உதவும் இந்த வரிச்சலுகை நாளை முதல் அமலுக்கு வரும்.

வாணியம்பாடியில் வியாபாரிகளிடம் அத்துமீறிய நகராட்சி ஆணையரை கண்டிக்கும் கனிமொழி எம்பி

0

வாணியம்பாடியில் வியாபாரிகளிடம் அத்துமீறிய நகராட்சி ஆணையரை கண்டிக்கும் கனிமொழி எம்பி

கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தற்போது கடைபிடித்து வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாணியம்பாடி சந்தையில் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி,வியாபாரிகள் வைத்துள்ள காய்கறி பழங்களை தரையில் தள்ளி அவர்களிடம் அந்த பகுதி நகராட்சி ஆணையர் அத்துமீறி நடந்துள்ளர். இதனையடுத்து வியாபாரிகளிடம் அத்துமீறியுள்ள நகராட்சி ஆணையர் சிசில் தாமசுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் விதிமீறல் நடந்திருந்தாலும், அதை சமூக பொறுப்புணர்வுடன் கண்டிப்பதை விட்டுவிட்டு, எளிய வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்படும் வகையில் அவர்களின் காய்கறி மற்றும் பழங்களை கீழே தள்ளிவிட்டு இரக்கமற்ற முறையில் அவர் செயல்பட்டிருப்பது பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், சிசில் தாமசின் இந்த அத்துமீறிய செயலுக்கு தி.மு.க மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் கூறியுள்ளதாவது, வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

சம்பளத்தை குறைத்தால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் தொழிலாளர் ஆணையம்

சம்பளத்தை குறைத்தால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் தொழிலாளர் ஆணையம்

கடந்த மார்ச் மாதம் சீனாவின் வுகான் மாகானதில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்துள்ள கொரோனா தொற்றினால் ஐடி நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. நிறைய நிறுவனங்கள் வீட்டிலிருந்தே தங்கள் பணியாளர்களை வேலை செய்ய சொன்னாலும், அமெரிக்கா மற்றும் யூரோப்பை பெரிய அளவில் நம்பியிருக்கும் ஐடி நிறுவனங்களுக்குப் பெரிய சவால்கள் வரும் மாதங்களில் காத்திருக்கிறது. கொரோனா தொற்றால் , அமெரிக்கா மற்றும் யூரோப்பில் நிறைய பேர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். இதனால் அந்த அரசுகள் தங்கள் நாட்டு குடிமகன்களுக்கு வேலைகளில் முன்னுறிமை தர நிறுவனங்களை நிர்பந்தித்து வருகிறது. இதனால் இந்த நாடுகளிலிருந்து இந்தியா உட்பட வெளிநாடுகளுக்கு தரப்படும் பணிகள் குறைத்துக் கொள்ள படலாம் எனக் கூறப்படுகிறது.

இதனால் தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. இந்திய ஐடி நிறுவனங்களான
டெக் மகிந்த்ரா நிறுவனம் மற்றும் விப்ரோ தனது ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஐடி ஊழியர்களின் நலனுக்காக இயங்கி வரும் தேசிய ஐடி ஊழியர் செனட் (NITES) இந்த புகாரை எழுப்பியுள்ளது. அந்த புகாரில் புனேவில் அமைந்திருக்கும் டெக் மகிந்த்ரா நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும் ஷிஃப்ட் கொடுப்பனவு (shift allowance) மே 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக டெக் மகிந்த்ராவின் 13,000 ஊழியர்களுக்கான ஊதியம் குறைந்துள்ளது. மகாராஷ்டிர அரசின் உத்தரவுகளை, விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் டெக் மகிந்த்ரா நிறுவனம் மீறியுள்ளது. ஆகவே இந்நிறுவனத்தின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதனையடுத்து இந்நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் மார்ச் 31ஆம் தேதியன்று மகாராஷ்டிர அரசு போட்ட தீர்மானத்தின் படி மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும், ஊதியம் வழங்கப்பட்ட பின்னர் தொழிலாளர் ஆணையர் அலுவகத்திற்கு தகவல் அளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெக் மகிந்த்ரா தனது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கக்கூடாது எனவும், அவர்களது சம்பளத்தை குறைக்கக்கூடாது எனவும், மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

தொழிலாளர் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஐடி ஊழியர்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

இவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

இவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி நள்ளிரவு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுக்கு வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் நியாயவிலைக்கடை அட்டைதாரர்கள் (அரிசி மட்டும்) அனைவருக்கும் கடந்த மாதம் 1000 ரூபாய் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு. மேலும் விலை இல்லா அரிசி, சீனி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றையும் கொடுத்தது. மேலும் ஜூன் வரை இந்த விலை இல்லா பொருட்கள் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் 14 வகையான நலவாரிய தொழிலாளர்களுக்கும் மீண்டும் 1000 ரூபாய் நிவாரணம் அளிக்கவிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் கீழ்க்கண்ட நலவாரியத்தினர் பயனடைவார்கள்:

தூய்மை பணி நலவாரியத்தினர் 30780 பேர்
திரைக்கலைஞர்கள் நலவரியரித்தினர் 21679 பேர்
நரிக்குறவர் நலவாரியத்தில் உள்ள 12670 பேர்
காதி நலவாரியத்தில் உள்ள 9042 நெசவாளர்கள், திருநங்கைகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 6553 பேர்
சலவை தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 3826 பேர்
முஸ்லிம் உல்மாக்கள் நலவாரியத்தில் உள்ள 14622 பேர்
சில குறிப்பிட்ட பழங்குடியினர் நலவாரியத்தினர் 33687 பேர் (de-notified communities welfare board)

இதற்காகத் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 83,99,50,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
839950 பேர் பயனடைவார்கள்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று புதிய உச்சம் : செய்வதறியாது தவிக்கும் நாடுகள்..!!

0
உலகம் முழுவதும் கொரோனா தொற்று புதிய உச்சம் : செய்வதறியாது தவிக்கும் நாடுகள்..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 42 லட்சத்து 33 ஆயிரத்து 504 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 14 லட்சத்து 81 ஆயிரத்து 314 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று புதிய உச்சம் : செய்வதறியாது தவிக்கும் நாடுகள்..!!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 70,756 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 2,293 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 22,455 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 23,401/868
டெல்லி – 7,233/73
குஜராத் – 8,541/513
தமிழ்நாடு – 8,002/53
தெலுங்கானா – 1,275/30
கேரளா – 519/04
ராஜஸ்தான் – 3,988/113
உத்தரபிரதேசம் – 3,573/80
ஆந்திர பிரதேசம் – 2,018/45
கர்நாடகா – 862/31
மத்திய பிரதேசம் – 3,785/221
ஜம்மு & காஷ்மீர் – 879/10
மேற்கு வங்கம் – 2,063/190
பஞ்சாப் – 1,877/31
ஹரியானா – 730/11
பீகார் – 747/06
அசாம் – 65/02
சண்டிகர் -174/02
உத்தர்கண்ட் – 68/01
லடாக் – 42/0
அந்தமான் & நிக்கோபார் -33/0
சத்தீஸ்கர் – 59/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 59/02
ஒடிசா – 414/03
பாண்டிச்சேரி – 12/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 160/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 152/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 13/01
தாத்ரா நகர் ஹாவலி – 01/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 2,051 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

உலகம் முழுவதும் கொரோனா தொற்று புதிய உச்சம் : செய்வதறியாது தவிக்கும் நாடுகள்..!!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம்! ஒரே நாளில் 8 பேர் மரணம்!

0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம்! ஒரே நாளில் 8 பேர் மரணம்!

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இதுவரை தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8718 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது ஓரளவு கட்டுப்பாட்டில் வைக்கபட்டிருந்த நிலையில் கோயம்பேடு சென்று வந்தவர்களால் தற்போது மீண்டும் அதிவேகமாக கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் தினந்தோறும் 700 க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 500 க்கும் குறைவில்லாமல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

குறிப்பாக கடந்த திங்கள் கிழமை மாலை நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 798 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 8002 ஆக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று மே 12 ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 716 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 8718 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாட்டின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது கொரோனா தொற்று தமிழகத்தில் தான் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பானது அதிகமாக உள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 510 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக அரியலூரில் 36 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 35 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 24 நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரம்பலூரில் 27 நபர்களுக்கும், திருவள்ளூரில் 27 நபர்களுக்கும் திருவண்ணாமலையில் 13 நபர்களுக்கும், தேனியில் 7 நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளத.

Corona Infection Rate in Tamilnadu May 12-News4 Tamil Online Tamil News
Corona Infection Rate in Tamilnadu May 12-News4 Tamil Online Tamil News

இந்நிலையில் தமிழகத்தில் செவ்வாய்கிழமையான நேற்றைய நிலவரப்படி மட்டும் 82 நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குனமடைந்துள்ளனர். இதன் மூலமாக ஒட்டுமொத்தமாக மே 12ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை 2134 நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் தற்போது வரை 6520 நபர்கள் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் குறிப்பாக சென்னையில் மட்டுமே மிக அதிகமாக 4093 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மே 12ம் தேதியான நேற்றைய நிலவரப்படி 11788 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 266687 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று மட்டுமே 11 632 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இன்றுடன் சேர்த்து இதுவரை 2,55,584 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 69 வயது ஆண், 63 வயது ஆண், 43 வயது பெண், 55 வயது பெண் மேலும் கீழ்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது ஆண், 70 வயது ஆண், 58 வயது பெண், சென்னை ஸ்டான்லியில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண், திருவள்ளூரில் 43 வயது பெண், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 66 வயது பெண், உள்ளிட்டோர் இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.. இதன் மூலம் தமிழகத்தில் தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 61 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று உயிரிழந்தவர்கள் அனைவரும் 40 வயதை கடந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட 716 பேரில் 427 நபர்கள் ஆண்கள், 288 நபர்கள் பெண்கள் மற்றும் ஒருவர் திருநங்கை ஆவார். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 5848 ஆண்களும், 2867 பெண்களும், 3 திருநங்கைகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 12 நிலவரப்படி 4401 பேர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து தற்போது வரை 6520 நபர்கள் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று வரை தமிழகத்தின் கொரோனா தொற்று நிலவரம்! மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு !!

அனைத்து மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று (மே 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,718 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று – பட்டியல்:

மாவட்டம்மே 11 வரைமே 12மொத்தம்
1அரியலூர்30836344
2செங்கல்பட்டு35635391
3சென்னை4,3725104,882
4கோயம்புத்தூர்1460146
5கடலூர்3951396
6தருமபுரி505
7திண்டுக்கல்1092111
8ஈரோடு70070
9கள்ளக்குறிச்சி59261
10காஞ்சிபுரம்13224156
11கன்னியாகுமரி25126
12கரூர்48452
13கிருஷ்ணகிரி20020
14மதுரை1210121
15நாகப்பட்டினம்45045
16நாமக்கல்77077
17நீலகிரி14014
18பெரம்பலூர்10527132
19புதுக்கோட்டை606
20ராமநாதபுரம்30030
21ராணிப்பேட்டை67976
22சேலம்35035
23சிவகங்கை12012
24தென்காசி52153
25தஞ்சாவூர்69069
26தேனி59766
27திருப்பத்தூர்28028
28திருவள்ளூர்44027467
29திருவண்ணாமலை9213105
30திருவாரூர்32032
31தூத்துக்குடி33235
32திருநெல்வேலி90393
33திருப்பூர்1140114
34திருச்சி65267
35வேலூர்33134
36விழுப்புரம்2981299
37விருதுநகர்40444
38விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்44
மொத்தம்8,0027168,718

மக்களின் மனநிலையைப் பற்றி கவலைப்படாமல் அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு! எச்சரிக்கும் ஸ்டாலின்

0

மக்களின் மனநிலையைப் பற்றி கவலைப்படாமல் அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு! எச்சரிக்கும் ஸ்டாலின்

ஜூன் 1 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது மக்களின் மனநிலையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

ஜூன் 1-ம் தேதி முதல் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் பீதியும் அச்சமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் இந்த அவசர அறிவிப்பு, மாணவ – மாணவியர் மற்றும் அவர்தம் பெற்றோர் மனதில் மேலும் பதற்றத்தை உருவாக்கவே செய்யும்.

மக்களின் மனநிலையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், திடீரென தன்னிச்சையாக இப்படி ஒரு முடிவை அரசு எடுத்துள்ளது. வாரந்தோறும் பிரதமரே அனைத்து மாநில முதல்வர்களுடனும் கலந்தாலோசனை செய்து முடிவுகள் எடுக்கும் போது, இத்தேர்வுத் தேதிகளை யாரைக் கேட்டு தமிழக அரசு முடிவு செய்கிறது? ஆசிரியர் – பெற்றோர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக் கேட்டு, பரிசீலனை செய்யப்பட்டதா?

மே17-ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. ஊரடங்கு நீடிக்குமா இல்லையா என்பதை அரசு இன்னமும் இறுதி முடிவு செய்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தேர்வுத் தேதியை அறிவிக்க என்ன அவசரம், என்ன அவசியம்?

“ஜூன் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வா? : குழப்பமான அறிவிப்பு ஏன்?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!

சென்னையில் கொரோனா பாதிப்பு குறையாமல், பெருகி வருவதால், தமிழகத்தில் விமானம் மற்றும் இரயில் போக்குவரத்தை மே 31-ம் தேதி வரை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். மே 31-ம் தேதி வரை ரயில்கள் ஓடாது என்றால், போக்குவரத்து வசதிக்கு உத்தரவாதம் இன்றி, ஜூன் 1-ம் தேதி காலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு எப்படி வருவார்கள்? மாணவர்கள் எத்தனை பேர் வெளியூர்களில் இருக்கிறார்கள் எனத் தெரியாது. இந்நிலையில் எதற்காக இத்தகைய குழப்பமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதிப்படுத்திய பிறகு, தேர்வு நடத்துவதே சரியானது; முறையானது. தேவையான கால இடைவெளி கொடுத்து, மாணவர்களையும் பெற்றோரையும் ஆசிரியர்களையும் மனரீதியாகத் தயார் செய்த பிறகு, தேர்வுத் தேதியை அறிவிப்பதே சரியாக இருக்கும். நெருக்கடி மிகுந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தன் பங்குக்குக் குழப்பத்தை அதிகப்படுத்துவது நியாயமல்ல என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

வணிக வளாகத்தில் ஆடையில்லாமல் ஆண் நண்பருடன் இளம்பெண் செய்த அசிங்கம்: வைரலாகிய வீடியோ!

0

வணிக வளாகத்தில் ஆடையில்லாமல் ஆண் நண்பருடன் இளம்பெண் செய்த அசிங்கம்: வைரலாகிய வீடியோ!

பிரபல பன்னாட்டு நிறுவனம் மற்றும் பல் பொருள் அங்காடி நிறுவனங்களில் ஒன்று ஐகியா(IKEA). சீனாவின் உள்ள இந்த நிறுவனத்தின் வணிக வளாகம் ஒன்றில் அசிங்கமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அந்த வணிக வளாகத்திற்கு தன்னுடைய நண்பருடன் வந்த இளம்பெண் ஒருவர் விதவிதமாக போஸ் கொடுத்து ஆங்காங்கே போட்டோ எடுத்துள்ளார். அப்போது யாரும் இல்லாத இடத்திற்கு தன்னுடைய நண்பருடன் சென்ற பெண் சுய இன்பம் அனுபவிக்க ஆரம்பித்தார்.

இதனையடுத்து மறைவான இடத்திற்கு சென்று ஆடை முழுவதையும் நீக்கிவிட்டு காம இச்சைகளை செய்து வீடியோ எடுத்துக் கொண்டார். அவ்வப்போது வாடிக்கையாளர்கள் வந்து சென்றாலும் யாருக்கும் தெரியாமல் சோஃபா மற்றும் மெத்தையிலும் உருண்டு சேட்டைகளை செய்திருக்கிறார்.

அந்த வணிக வளாகத்தை விட்டு சென்ற இருவரும் அங்கு செய்த அசிங்கம் அனைத்தையும் இணையத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் மிக வைரலாக பரவியதை அடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் அந்த வணிக வளாகத்தின் சீன நிர்வாகிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். மேலும் புகார் அளிக்கப்பட்டதால் அந்த வீடியோ இணையத்தில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர்.

முன்னதாக இது போன்ற அசிங்கமான நிகழ்வு ஏற்கெனவே பல முறை இந்த நிறுவனத்தின் மற்ற கிளைகளிலும் நடந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அந்த வணிக வளாகத்தின் கிளை எது மற்றும் வீடியோவை வெளியிட்டது யார் என்ற தகவல்கள் தெரியாததால் பரபரப்பாக பேசப்படுகிறது.

கொரோனாவை குணப்படுத்த சித்த மூலிகை – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

0

கொரோனாவை குணப்படுத்த சித்த மூலிகை – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் பரவத் துவங்கிய கொரோனா தொற்றுக்கு இது வரை சுமார் 70700க்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். தற்போது வரை கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறி சார்ந்த மருந்துகளையே மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.

ஒரு பக்கம் அலோபதி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தாலும், நமது பாரம்பரிய மருத்து முறையான சித்த ஆயுர்வேத மருத்துவத்தால் கொரோனாவை குணப்படுத்த முடியாதா என்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் நாயக்கர் மற்றும் ஆயுஷ் மருத்துவர்கள் சங்கத் தலைவரான கே.எம்.செந்தமிழ் செல்வன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைச் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்றும் அதற்கு மத்திய மாநில அரசு தங்களை அனுமதிக்க நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.

இதனையடுத்து இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வசந்தகுமார், கொரோனாவுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்காத நிலையில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவத்தில் இந்நோயை பரிபூரணமாக குணப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக்காட்ட தயாராக இருப்பதாகவும், சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், லிங்கம், பாதரசம், செந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பலவகை மூலிகைகளை ஒன்றாக கலந்து மருந்தாக உட்கொண்டாலே கொரோனா உள்ளிட்ட எல்லா வகையான நோய் கிருமிகளும் (வைரஸ்) அழிக்கப்பட்டுவிடும் என வாதிட்டார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனாவை சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் குணப்படுத்த முடியுமா என்பதைக் கண்டறிய மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் கூறும் மூலிகையை பரிசீலிக்குமாறு, மத்திய-மாநில அரசுகளுக்கு விண்ணப்பிக்கும்படி மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அந்த விண்ணப்பத்தை நிபுணர் குழு பரிசீலித்து மூலிகை கலவை குறித்து விளக்கமளிக்க மனுதாரருக்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனவும், அந்த மருந்தை ஆய்வக பரிசோதனை செய்து ஒரு மாத காலத்திற்குள் அதன் முடிவை மனுதாரருக்கு தெரிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.