Home Blog Page 5650

பாமக கிளை செயலாளரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மன்னிப்பு!

பாமக கிளை செயலாளரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மன்னிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் 71 மேலையூர் ஊராட்சியில்  கூத்தக்குடி கிளை பாமக நிர்வாகி பொறுப்பாளராக பதவி வகிப்பவர் தான் அப்புனு. இவர் தான் வசிக்கும் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று சமூக வலைதளங்களில் புகாராக பதிவிட்டுள்ளார்.இதைக்கண்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கடந்த 08.05.2020 அன்று மதியம்  சுமார் 3 மணியளவில் மது போதையில் சென்று அப்புனுவை தாக்கியுள்ளர்.இந்த செய்தி சில தினங்களுக்கு முன்பு நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். 

இது பற்றிய செய்தியை படிக்க: புகார் கூறிய பாமக நிர்வாகியை மது போதையில் தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவி செயக்கொடி கணவன் ஸ்டாலின் தான் செய்த தவறை உணர்ந்து பாமக நிர்வாகி அப்புனுவிடம் கடந்த 10.05.2020 அன்று மதியம் சுமார் 2 மணியளவில்  கூத்தக்குடி கிளை நிர்வாகிகள்  சுரேஷ் சண்முகம் ,  செந்தில் சக்கரை , முருகராசன் ரெங்கநாதன் மற்றும் முருகதாஸ் சங்கர்பாலு இவர்கள் முன்னிலையில் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு மேலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

பாமக கிளை செயலாளரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மன்னிப்பு!

இந்த சம்பவத்தில் இரு தரப்பையும் சமரசம் பேசி நடவடிக்கை மேற்கொள்ள பாமக நிர்வாகிகள்,உழவர் பேரியக்கம் மற்றும் பாட்டாளி ஊடகப்பேரவை அமைப்புகளின் கிளை, ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் மற்றும் அகில இந்திய வன்னியர்குல ஷத்திரிய சங்கங்களின் பேரமைப்பு உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் உறுதுணையாக இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்த இவர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த பாமக நிர்வாகிகள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள ட்ரம்பின் மரண கடிகாரம்

0

அமெரிக்காவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள ட்ரம்பின் மரண கடிகாரம்

உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் இது வரை 13 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 81000 பேர் இறந்துள்ளனர். இதனால் அமெரிக்க அதிபரான டோனால்ட் ட்ரம்ப் மீது அவர் நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் புதிதாக விளம்பர பதாகை ஒன்று வைக்கப்பட்டது. ட்ரம்பின் மரண கடிகாரம் (Trump Death Clock) என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இதில் அமெரிக்காவில் இது வரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணைக்கையை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதாகையை திரைப்படத் தயாரிப்பாளர் யூஜின் ஜாரெக்கியால் நிறுவப்பட்டுள்ளது. இது குறித்து அவர் குறிப்பிடுகையில், அதிபர் ட்ரம்ப் சரியாக செயல்பட்டிருந்தால் அமெரிக்காவில் இவ்வளவு பேரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று கூறியுள்ளார். ட்ரம்ப் தக்க சமயத்தில் சமூக இடைவெளியையும், பள்ளிகளை மார்ச் 16ம் தேதிக்கு பதிலாக ஒரு வாரத்திற்கு முன்னர் 9ம் தேதியே நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்த இறப்புகளில் 60% வரை குறைந்திருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இவரின் இந்த செயலுக்கு அமெரிக்கர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் பேருந்துகள் இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

0

மீண்டும் பேருந்துகள் இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற சேவைகள் மற்றும் தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தும் அடங்கும்.

மே 17 ஆம் தேதி முதல் ஊரடங்கு முடிவடையும் நிலையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒடிசா மாநிலத்திலுள்ள பசுமை மண்டலங்களில் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பத்மநாப் பெஹெரா இன்று தெரிவித்தார். ஆனால் பேருந்து சேவைக்கான கட்டணங்கள் வழக்கத்தை விட இரு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பேருந்துகளை இயக்குவதற்கும், அதற்கான கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்தியதற்கும் போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய ஆலோசனைக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார் என்று பெஹெரா தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு ஊரடங்கு நேரத்தில் இயக்கப்படும் இந்த பேருந்துகள் சமூக இடைவெளியை பின்பற்றி 50 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றுவதால் பயணிகளிடமிருந்து சாதாரண கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் என்று அதற்கான காரணத்தையும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டண உயர்வானது பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் என்று கூறப்படுகிறது. மேலும் பேருந்து உரிமையாளர்களுக்கு இந்த திட்டம் குறித்து அறிவித்து அவர்களின் கருத்துக்களையும் பெற்று இது குறித்து ஓரிரு நாட்களில் முடிவெடுப்போம் என்றும் அமைச்சர் இது குறித்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கடைபிடிக்கப்படும் ஊரடங்கின் போது அலுவலகத்திற்குச் செல்வோருக்கு உதவும் வகையில், நாளை முதல் கட்டாக் மற்றும் புவனேஸ்வர் இடையே பேருந்து சேவையை தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு புவனேஸ்வர் மற்றும் கட்டாக் இடையே பேருந்தை இயக்க பேருந்து கட்டணத்தை ரூபாய் 30 ஆக ஒடிசா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் நிர்ணயித்துள்ளது. மேலும் இது அலுவலக நேரங்களில் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குவைத் அரசு உறுதியளித்தும் கண்டு கொள்ளாத இந்திய அரசு! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

0

குவைத் அரசு உறுதியளித்தும் கண்டு கொள்ளாத இந்திய அரசு! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக குவைத்தில் வேலையின்றி தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “கொரோனா அச்சம்: குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

வாழ்வாதாரம் தேடி குவைத்துக்கு சென்ற தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் எந்த நேரமும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர். அவர்கள் இந்தியா திரும்புவதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக குவைத் அரசு உறுதியளித்துள்ள போதிலும், அவர்களை தாயகம் அழைத்து வருவதில் தாமதம் காட்டப்படுவது கவலையளிக்கிறது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தையும், கேரளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். உலகின் மற்ற நாடுகளைப் போலவே குவைத்திலும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வரும் நிலையில், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் வாடுகின்றனர். அவர்களிலும் உரிய ஆவணம் இன்றி பணியாற்றி வரும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. அவர்களுக்கு வேலையோ, தங்குமிடமோ இல்லாத நிலையில், அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 30&ஆம் தேதி வரை குவைத் செயல்படுத்தியது. அதற்கு விண்ணப்பித்தோரில் 7340 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கு தற்காலிக இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டு, எந்த நேரமும் இந்தியா திரும்ப வசதியாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்காமல் தெருக்களில் உணவின்றி வாடி வந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு சிறப்பு சலுகையாக நேற்று பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு பொது மன்னிப்பு பெற்றவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழர்கள் உள்ளிட்ட 7340 இந்தியர்களும் தாயகம் திரும்புவதற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருக்கும் போதிலும் அவர்கள் எப்போது தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்பது குறித்து இந்திய அரசிடமிருந்தும், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திடமிருந்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. அதனால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.

இந்தியர்கள் அனைவரையும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைத்துள்ள குவைத் அரசு, அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளது. ஆனால், அந்த உணவு ஒத்துக் கொள்ளாததால் ஏராளமான தமிழர்கள் உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இதையும் தாண்டி குவைத்தில் வாழும் தமிழர்களுக்கு கொரோனா தாக்குதல் அச்சம் அதிகரித்திருக்கிறது. குவைத்தில் நேற்று வரை மொத்தம் 9286 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் அதிகபட்சமாக 3375 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 400 தமிழர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனைகளில் உரிய மருத்துவம் வழங்கப்படவில்லை..

சேலம் ஆத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அவருடன் ஒரே அறையில் இருந்த மேலும் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் படவில்லை. மாறாக, அடிப்படை வசதிகள் கூட இல்லாத முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் பணியாற்றி வந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குவைத் நாட்டவர் அண்மையில் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மட்டும் தான் அங்குள்ள மருத்துவமனைகளில் முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு கொரோனா நோய் ஏற்படும் பட்சத்தில் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டால் அது தான் அதிகபட்ச சிகிச்சை ஆகும்.

இத்தகைய சூழலில் இந்தியா திரும்புவதற்காக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடையே கொரோனா அச்சம் அதிகரித்துள்ளது. சிறிய அறைகளில் 20-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஒரே கழிப்பறையை ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டியிருப்பதால், அவர்களில் எவருக்கேனும் கொரோனா இருந்தால் மற்றவர்களுக்கும் பரவி விடக்கூடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
குவைத்தில் பொதுமன்னிப்பு பெற்றவர்கள் எல்லாம் சட்டவிரோதமாக அங்கு குடியேறியவர்களோ அல்லது குற்றம் செய்தவர்களோ அல்லர். மாறாக, தங்களுக்கு வேலை வழங்கியவர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு விரட்டியடிக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் இந்தியா திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, விமானக் கட்டணத்தையும் ஏற்கத் தயார் என்று குவைத் அரசே அறிவித்த பிறகும், தமிழர்களை அழைத்து வருவதில் தாமதம் கூடாது.

உடனடியாக சிறப்பு விமானங்களை அனுப்பி குவைத் நாட்டில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் ஒரு வாரத்திற்குள் தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கணவனை விரட்டிவிட்டு வெட்கமே இல்லாமல் மூன்று வாலிபர்களுடன் சல்லாபம் அனுபவித்த பெண் : தட்டிக் கேட்ட கள்ளக் காதலனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

0

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பாலாற்று பாலத்திற்கு அடியில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்து கிடந்த வாலிபர் யார் என்று விசாரித்த போது அந்த வாலிபரின் பெயர் சுனில் என்று தெரியவந்தது.

அந்த வாலிபர் சுனில் காட்பாடி பகுதியில் உள்ள பிரபல ரௌடி என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். போலீசார் மோப்ப நாயை வர வைத்து சோதனை செய்த போது அது அங்கு அருகில் உள்ள பூட்டிய வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளது.

அங்கு யாரும் இல்லாததாலும் சந்தேகம் அதிகமானதால் போலீசார் பூட்டை உடைத்து சோதனை செய்து பார்த்தனர். அந்த வீட்டில் உள்ள பாத்திரங்கள் சிதறி கிடந்தன, அதோடு ஆங்காங்கே ரத்தம் வழிந்து கிடந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அந்த பெண் கோகிலாவின் முழு விபரங்களையும் காவல்துறையினர் விசாரித்து தெரிந்து கொண்டனர். மேலும் அந்த பெண்ணிற்கு அதே பகுதியை சேர்ந்த மூன்று பேருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

அதில் கோகிலாவுடன் தொடர்பில் இருந்தது ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன், வேலை தேடி வந்த இப்ராஹிம் மற்றும் ரௌடி சுனில் ஆவர். மேலும் சம்பவம் நடந்த தினத்தில் கொகிலாவை தொலைபேசியில் அதிகம் தொடர்பு கொண்டது சுனில் என்று தெரிந்தது.

இதற்கிடையில் கோகிலாவின் கணவன் மனைவியின் செய்கை பிடிக்காமல் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார். தனது தந்தையுடன் வசித்து வந்த கோகிலா இந்த மூன்று வாலிபர்களை தவிர மேலும் சிலருடன் தொடர்பில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சுனில் கோகிலாவின் காம லீலைகளை பற்றி தெரிந்து கொண்ட பிறகு அவரின் வீட்டிற்கு சென்று நேரடியாக சண்டை போட்டுள்ளார். அங்கு நடந்த பிரச்சினையில் சுனில் அசந்த நேரம் பார்த்து கோகிலாவும் அவரது தந்தையும் சரமாரியாக வெட்டி கொன்றனர்.

அதன் பிறகு சுனிலின் சடலத்தை இழுத்து சென்று பாலாற்றின் பாலத்திற்கு அடியில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவு ஆனதாக தெரிகிறது. சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் தலைமறைவான கோகிலாவையும் அவரது தந்தையையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மே 18ல் விமான சேவை துவக்கம்?

0

மே 18ல் விமான சேவை துவக்கம்?

கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படவில்லை.

இன்று முதல் (12.05.2020) தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் ரயில் சேவையை துவங்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி முதல் உள்ளூர் விமான சேவையை துவங்குவதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் விமான நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இதனால் பல விமான சேவை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தைப் பெருமளவில் பிடித்தம் செய்துள்ளன. இதனால் தங்களை நிதி நெருக்கடியிலிருந்து காப்பாற்றுமாறு மத்திய அரசிடம் விமான சேவை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சமீபத்தில் அவுட்லுக் இதழுக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, விமான சேவை குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும், அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும் பட்சத்தில் மே 15 அல்லது அதற்கு முன்னதாகவே உள்நாட்டு விமானச்சேவை துவங்குமெனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரயில் போக்குவரத்தைத் தொடர்ந்து விமான போக்குவரத்தைத் தொடங்கும் விதமாக விமான சேவை நிறுவனங்கள், டிராவல் ஏஜென்டுகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

விமான சேவை தொடங்கும் பட்சத்தில் பயணிகள் கீழ் கண்டவற்றை மேற்கொள்வது அத்தியாவசியமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

  • விமான நிலையங்களில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முன் ஏற்பாடுகள் செய்யப்படும்.
  • விமான நிலையத்தில் காய்ச்சலை கண்டறியும் கருவி கட்டாயமாக்கப்படும்.
  • தற்காலிகமாக ஆன்லைன் டிக்கட்டுகள் மட்டுமே விற்கப்படும்.
  • ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயமாக்கப்படும்.
  • பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும்
  • விமானத்தில் ஏறுவதற்கு முன் பரிசோதனை நடத்தப்படும். கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே விமானத்தில் அனுமதிக்கப்படுவார்கள.

வெளிநாட்டு விமான சேவை துவங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

ஜூன் 1 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூன் 1 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடிப்படையாக விளங்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மதம் 27ம் தேதி முதல் 13ம் தேதி ஏப்ரல் மாதம் வரை நடத்தத் திட்டமிட்டிருந்தது தமிழக கல்வித துறை. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு மாணவர்கள் இரவு, பகல் பாராமல் படித்து வந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.

12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நிறைவடைந்திருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக, 10ம் வகுப்பு பொது தேர்வை தள்ளி வைத்தது தமிழக அரசு. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளை உடனடியாக திறக்க முடியாத சூழ்நிலையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சியின்றி வெற்றி பெற்றதாக அறிவித்தது அரசு.

10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் குறித்த மாறுபட்ட செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. 10ம் வகுப்புக்கும் தேர்வு வைக்காமல் திருப்புதல் தேர்வு முடிவின் அடிப்படையில் தேர்வு முடிவுகளை அறிவிக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அடிப்படை கல்வித் தகுதியாக கருதப்படுவதால் நிச்சயம் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தேர்வு அட்டவணை ஊரடங்கு முடிந்த பிறகு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் வரும் ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெறும் என இன்று பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியவர் “ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வரும் ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும்.

கடந்த மார்ச் 26-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 1 வகுப்புத் தேர்வை எழுதாத மாணவர்கள், ஜூன் 2-ம் தேதி அத்தேர்வை எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே விடுபட்ட பிளஸ் 1 தேர்வு, ஜூன் 4-ம் தேதி நடைபெறும்.

மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை 34 ஆயிரத்து 842 பேர் வாகனங்கள் குறைவால் எழுத முடியவில்லை என்ற செய்தி வெளியானது. அவர்கள் மீண்டும் ஜூன் 4 ஆம் தேதி அத்தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படுகிறது.

வரும் 27-ம் தேதியிலிருந்து 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்படும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்துவிதமான சுகாதார வசதிகளும் செய்து தரப்படும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளும் தேர்வுகளின்போது எடுக்கப்படும்.

பள்ளி திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கியம் என்பதால் நடத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

தனி மனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் – ஆந்திராவின் அசத்தல் முயற்சி

தனி மனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் – ஆந்திராவின் அசத்தல் முயற்சி

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் 24-தேதியிலிருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை. துப்புரவுப் பணியாளர்கள், அத்தியாவசிய அரசு வேலை புரிபவர்களுக்கு மட்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் மாநிலங்களின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பேருந்து சேவையை துவக்க அனைத்து மாநிலகங்களும் தயாராகி வருகின்றன. நாள் தோறும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டே பேருந்து சேவையைத் துவக்க வேண்டிய நிலையில் மாநில அரசுகள் உள்ளன.

வரும் 17ம் தேதி தமிழகத்தில் பேருந்து சேவையைத் துவக்கும் வகையில் போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு விதிமுறைகளை அறிக்கையாக அனுப்பியுள்ளது.

அதில் கீழ்க்கண்ட விதிமுறைகள் இடம்பெற்றுள்ளது:

  • கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒட்டுநர், நடத்துனர்களுக்கு முக கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி திரவம் வழங்கப்படும்.
  • பேருந்து இயக்குவதற்கு முன் ஓட்டுநர், நடத்துநர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  • பயணிகள் இருக்கையில் அமர “மார்க்” செய்ய வேண்டும். பேருந்தில் நின்று பயணம் செய்தால் போதிய இடைவெளி அவசியம். கட்டாயம் பேருந்தின் ஜன்னல் திறந்திருக்க வேண்டும். பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.
  • அதிக கூட்டம் கூடாதவாறு பயணிகள் 6 அடி இடைவெளியில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • பேருந்தில் பயணம் செய்ய வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். தவறினால் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது. பொதுமக்கள் வரிசையில் நின்று பேருந்துகளில் ஏறுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • அதேபோல் கூகுல்பே, இ-பே போன்றவை மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். முடிந்தளவு மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம்.

இதெல்லாம் பின்பற்றப்பட்டாலும் தற்போதைக்கு உள்ளூர் பேருந்து சேவை மட்டுமே துவங்கவுள்ளது. அதே நேரம் 50% வரை மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவதால் போக்குவரத்து கழகங்களுக்கு நிதி இழப்பு ஏற்படும்.

இதனையெல்லாம் கருத்தில் கொண்டு ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம், தங்கள் பேருந்தில் இருக்கைகளை தனி மனித இடைவெளியுடன் மாற்றியமைத்துள்ளது. இதை அஅரசு அங்கீகரிக்கும் பட்சத்தில் மற்ற மாநிலங்களும் இதனை பின்பற்றி தனிமனித இடைவெளியுடன் அதிக அளவிலான பயணிகளை பேருந்தில் பயணம் மேற்கொள்ள வைக்க முடியும்.

சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு?

சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு?

மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வரை இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன் மாநில முதல்வர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டார் பிரதமர் மோடி.

தற்போது 3வது ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பொது முடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே மத்திய அரசு 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடந்த திங்கட்கிழமை நேற்று முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்குபெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் அரசு கோரியிருந்த 2000 கோடி ரூபாய் விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தார். மேலும் மே 31ம் தேதி வரை தமிழகத்தில் ரயில், விமானங்களை இயக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைப் பற்றி பிரதமர், முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் அந்த கூட்டத்தில் பேசியது அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

அதில் “கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், தங்கள் கருத்துக்களை, ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளனர். இதை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். தற்போது நிலவும் பிரச்சினையின் உண்மை தன்மையை உணர்ந்து, அதற்கேற்ப, நாம் தயாராக வேண்டும். கொரோனா பிரச்சினையால், தனிப்பட்ட மனிதரிலிருந்து, ஒட்டு மொத்த மனித சமுதாயமுமே ஒரு புதிய வாழ்க்கைக்குத் தயாராகி வருகிறது. முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவற்றில் சில கட்டுப்பாடுகள், இரண்டாவது ஊரடங்கிற்குத் தேவைப்படவில்லை. அதேபோல், மூன்றாவது ஊரடங்கு காலத்திலிருந்த சில நடவடிக்கைகள், அதற்கு பிந்தைய காலத்துக்கு தேவைப்படாது.

பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவே, சில வழித் தடங்களில் பயணியர் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அனைத்து வழித் தடங்களிலும் ரயில்கள் இயக்கப்படாது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விஷயத்தில், இனி அதிக கவனம் செலுத்தப்படும். அத்துடன், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான நடவடிக்கைகளும் படிப்படியாக அதிகரிக்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.

இதனை வைத்துப் பார்க்கும் போது கொரோனா தொற்று அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. எனவே சென்னை, மும்பை உட்பட சிவப்பு மண்டலத்தில் இடம்பெற்றிருக்கும் நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது. இதர மண்டலங்களில் சில தளர்வுகளை அரசு மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

விரட்டும் கொரோனா… பதறும் உலக நாடுகள்… உயரும் பட்டியலால் இந்தியாவில் புதிய உச்சம்..!!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 41 லட்சத்து 68 ஆயிரத்து 427 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 85 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 14 லட்சத்து 52 ஆயிரத்து 626 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

விரட்டும் கொரோனா... பதறும் உலக நாடுகள்... உயரும் பட்டியலால் இந்தியாவில் புதிய உச்சம்..!!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 67,152 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 2,206 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 20,917 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 22,171/832
குஜராத் – 8,194/493
டெல்லி – 6,923/73
ராஜஸ்தான் – 3,814/107
மத்திய பிரதேசம் – 3,614/215
உத்தரபிரதேசம் – 3,467/74
தமிழ்நாடு – 7,204/47
தெலுங்கானா – 1,196/30
கேரளா – 512/04
ஆந்திர பிரதேசம் – 1,980/45
கர்நாடகா – 848/31
ஜம்மு & காஷ்மீர் – 861/09
மேற்கு வங்கம் – 1,939/185
பஞ்சாப் – 1,823/31
ஹரியானா – 703/10
பீகார் – 696/06
அசாம் – 63/02
சண்டிகர் -169/02
உத்தர்கண்ட் – 68/01
லடாக் – 42/0
அந்தமான் & நிக்கோபார் -33/0
சத்தீஸ்கர் – 59/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 55/02
ஒடிசா – 377/03
பாண்டிச்சேரி – 09/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 157/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 150/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 13/01
தாத்ரா நகர் ஹாவெலி – 01/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1,959 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

விரட்டும் கொரோனா... பதறும் உலக நாடுகள்... உயரும் பட்டியலால் இந்தியாவில் புதிய உச்சம்..!!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.