Home Blog Page 5652

மே 12ம் முதல் இயங்கவிருக்கும் ரயில் அட்டவணை! பயணிப்பதற்கான விதிமுறைகள் என்ன?

மே 12ம் முதல் இயங்கவிருக்கும் ரயில் அட்டவணை! பயணிப்பதற்கான விதிமுறைகள் என்ன?

கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படவில்லை.

தற்போது இரண்டாவது முறையாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த மாநிலத்திற்குக் கொண்டு சேர்க்க மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், நாளை (12.05.2020) முதல் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவங்க முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ரயிலின் வழித்தடங்கள் மற்றும் விதிமுறைகள் வெளியாகியுள்ளன

கீழ்க்கண்ட வழித்தடங்களில் நாளை முதல் ரயில் இயக்கப்படுகிறது:

  1. புது தில்லி – அகமதாபாத்
  2. புது தில்லி – சென்னை
  3. புது தில்லி – செகந்திராபாத்
  4. புது தில்லி – புவனேஷ்வர்
  5. புது தில்லி – அகர்தலா
  6. புது தில்லி – பிலாஸ்புர்
  7. புது தில்லி – மும்பை
  8. புது தில்லி – ஜம்மு தாவி
  9. புது தில்லி – திருவனந்தபுரம்
  10. புது தில்லி – மாத்கான்
  11. புது தில்லி – ஹவுரா
  12. புது தில்லி – பாட்னா
  13. புது தில்லி – ராஞ்சி
  14. புது தில்லி – திப்ருகார்
  15. புது தில்லி – பெங்களூரு

இந்த ரயில்களில் பயணம் செய்வதற்க்கான் விதிமுறைகள்:

  • குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மட்டுமே இனைக்கப்பட்டிருக்கும். பிற வகுப்புகள் கிடையாது.
  • ராஜதானி கட்டணம் வசூலிக்கப்படும்.
  • பயண நேரம் முழுவதும் பயணிகள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் பயணிகள் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதன் பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • காத்திருப்பு பட்டியலிலோ, RAC பட்டியலிலோ இடம்பெறும் பயணிகளுக்கு அனுமதியில்லை.
  • இணையதளத்தின் மூலமாகவோ, செயலி மூலமாகவோ மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

ரயில் அட்டவணை:

மே 12ம் முதல் இயங்கவிருக்கும் ரயில் அட்டவணை! பயணிப்பதற்கான விதிமுறைகள் என்ன?

பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசு?

பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசு?

கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் மே மாதம் 17ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மே 17ம் தேதியிலிருந்து 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து சேவையை இயக்க தமிழக அரசு தயாராகிவருகிறது.

இந்நிலையில் மீண்டும் பேருந்து போக்குவரத்து சேவையை தொடரும்போது, பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் சென்னை, விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை உள்பட 8 கோட்டங்கள் மூலம் 23 ஆயிரத்துக்கும் அத்திமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட சுமார் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் பணியாளர்களாக உள்ளனர்.

இந்த பேருந்துகளால் மாதம் ஒன்றுக்கு சுமார் 850 கோடிக்கு மேல் வருமானமாகக் கிடைக்கிறது. இதில் தொழிலாளர்கள் சம்பளத்திற்கு 450 கோடியும், மீதி தொகை எரிபொருள், உதிரிபாகங்ககள் வாங்குவதற்கான செலவு, சுங்க வரி, சாலை வரி உள்ளிட்ட செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளும் பணிமனைகளில் முடங்கி உள்ளது. இதனால் இதுவரை சுமார் 1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கான ஒவ்வொரு மாதமும் சம்பளம் 450 கோடி தேவைப்படும் நிலையில் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பால் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைச் சரி செய்ய மத்திய அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு நிதி அளிக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு, மதுபானங்கள் விலை உயர்வு, அரசு ஊழியர் ஓய்வு வயது உயர்வு என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில், ஊரடங்கின் போது, ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய ஊரடங்கு முடிந்து பேருந்து போக்குவரத்து துவங்கும் போது, பேருந்து கட்டணத்தை உயர்த்த, அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பினை அரசு விரைவில் வெளியிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஊரடங்கு நீட்டிப்பா? – இன்று முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

0

ஊரடங்கு நீட்டிப்பா? – இன்று முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வரை இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன் மாநில முதல்வர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டார் பிரதமர் மோடி.

தற்போது 3வது ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பொது முடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே மத்திய அரசு 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இன்று முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அமைச்சரவை செயலாளர், அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் அதன் நீட்சியாக இன்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெற இருக்கிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் எந்த அளவு இருக்கிறது, அதற்காக எடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் போன்றவற்றைப் பற்றி விவாதிக்கவிருக்கின்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தெலுங்கானா உள்ளிட்ட சில மாநில முதல்வர்கள் தன்னிச்சையாக மே மாத இறுதி வரையில் ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த முறை நடைபெற்ற பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாம் என்று ஒடிசா மாநில அரசு சார்பில் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவரின் கருத்தை பல்வேறு மாநில முதல்வர்களும் வழிமொழிந்துள்ள நிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் எடுக்கவிருக்கும் முடிவுக்காகப் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நாளை முதல் பயணிகள் ரயில்களை இயக்க முடிவு – மத்திய அரசு அறிவிப்பு

0

நாளை முதல் பயணிகள் ரயில்களை இயக்க முடிவு – மத்திய அரசு அறிவிப்பு

கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படவில்லை.

தற்போது இரண்டாவது முறையாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த மாநிலத்திற்குக் கொண்டு சேர்க்க மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், நாளை (12.05.2020) முதல் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவங்க முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக, டெல்லியிலிருந்து மும்பை, பாட்னா, அகர்தலா, அகமதாபாத், திருவனந்தபுரம், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய 15 நகரங்களுக்கு, 30 சேவைகளைக் கொண்ட 15 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கான முன்பதிவு இன்று (மே 11) மாலை 4 மணி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. IRCTC இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு டிக்கெட்களை பெற முடியும்.

ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுன்ட்டர்கள் திறந்திருக்காது. கவுன்ட்டர்களில் நடைமேடை டிக்கெட் உள்பட எந்த டிக்கெட்டும் வழங்கப்படாது.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

ரயில் பயணத்தின்போது, பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த வழிகாட்டுதல்களைப் பயணிகள் கடைப்பிடிப்பதைப் பொருத்து, நாட்டின் பிற பகுதிகளிலும் ரயில் சேவையை அடுத்தடுத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் தளர்வு – இன்று முதல் இந்த 34 வகையான கடைகள் செயல்படலாம்

ஊரடங்கில் தளர்வு – இன்று முதல் இந்த 34 வகையான கடைகள் செயல்படலாம்

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் 21ம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை ஆராய்ந்து அதற்கேற்றார் போல் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்திக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிகாரமளித்துள்ளது.

இரண்டாவது முறையாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு கடந்த வாரம் சில தளர்வுகளை அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று (11.05.2020) முதல் 34 வகையான கடைகள் செயல்படத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசு திறக்க அனுமதித்த கடைகளின் விவரம் வருமாறு:

  • தேநீர்க்கடைகள் (பார்சல் மட்டும்)
  • அடுமனைகள் (பார்சல் மட்டும்)
  • உணவகங்கள் (பார்சல் மட்டும்)
  • பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்குக் கடைகள்
  • கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள்
  • சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
  • மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  • அலைப்பேசி விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  • கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  • வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
  • மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  • கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  • சிறிய நகைக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை)
  • சிறிய ஜவுளிக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை) – ஊரக பகுதிகளில் மட்டும்
  • மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
  • தொலைக்காட்சி விற்பனை மற்றும் தொலைக்காட்சி பழுது நீக்கும் கடைகள்
  • பெட்டிக் கடைகள்
  • பர்னிச்சர் கடைகள்
  • சாலையோர தள்ளுவண்டிக் கடைகள்
  • உலர் சலவையகங்கள்
  • கூரியர் மற்றும் பார்சல் சேவை
  • லாரி புக்கிங் சர்வீஸ்
  • ஜெராக்ஸ் கடைகள்
  • இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
  • இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்
  • நாட்டு மருந்து விற்பனை கடைகள்
  • விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
  • டைல்ஸ் கடைகள்
  • பெயிண்ட் கடைகள்
  • எலக்ட்ரிகல் கடைகள்
  • ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் விற்பனை கடைகள்
  • நர்சரி கார்டன்கள்
  • மரக்கட்டைகள் மற்றும் பிளைவுட் கடைகள்
  • மரம் அறுக்கும் கடைகள்
  • முடிதிருத்தகங்கள், ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்கக்கூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது.
  • ஊரடங்கு தளர்வின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் தொடரலாம், கடைகள் தொடர்ந்து இயங்கலாம்.

மேலும், கொரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொறுத்து வரும் காலங்களில் பல்வேறு பணிகள் மற்றும் கடைகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 63 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா தொற்று : உயரும் பலி எண்ணிக்கையால் பட்டியல் நீள்கிறது..!!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 40 லட்சத்து 97 ஆயிரத்து 158 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 14 லட்சத்து 2 ஆயிரத்து 882 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

இந்தியாவில் 63 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா தொற்று : உயரும் பலி எண்ணிக்கையால் பட்டியல் நீள்கிறது..!!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 62,939 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 2,109 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 19,358 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 20,228/779
குஜராத் – 7,796/472
டெல்லி – 6,542/73
ராஜஸ்தான் – 3,708/106
மத்திய பிரதேசம் – 3,614/215
உத்தரபிரதேசம் – 3,373/74
தமிழ்நாடு – 6,535/44
தெலுங்கானா – 1,163/30
கேரளா – 505/04
ஆந்திர பிரதேசம் – 1,930/44
கர்நாடகா – 794/30
ஜம்மு & காஷ்மீர் – 836/09
மேற்கு வங்கம் – 1,786/171
பஞ்சாப் – 1,762/31
ஹரியானா – 675/09
பீகார் – 591/05
அசாம் – 63/02
சண்டிகர் -169/02
உத்தர்கண்ட் – 67/01
லடாக் – 42/0
அந்தமான் & நிக்கோபார் -33/0
சத்தீஸ்கர் – 59/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 50/02
ஒடிசா – 294/02
பாண்டிச்சேரி – 09/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 156/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 134/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 13/01
தாத்ரா நகர் ஹாவெலி – 01/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1,824 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

இந்தியாவில் 63 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா தொற்று : உயரும் பலி எண்ணிக்கையால் பட்டியல் நீள்கிறது..!!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் தொல்லை கொடுத்த சீனா தற்போது எல்லையிலும் சண்டை மூட்டுகிறது..!!

0

இந்தியாவின் அருகில் உள்ள பல்வேறு அண்டை நாடுகளில் ஒன்று சீனா. அதில் பாகிஸ்தானை போல சீனாவும் ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு தொல்லை கொடுத்து வருகிறது.

சீனா கடந்த 2017ஆம் ஆண்டில் வடகிழக்கு மாநிலமான லடாக்கின் பாங்காக் ஏரி பகுதியில் அத்துமீறி ஊடுருவியது. அதன் பிறகு சிக்கிமின் டோக்லாம் பகுதியில் ஊடுருவி தொல்லை கொடுத்து வந்தது.

இந்த நிலையில் இந்திய-சீனாவின் வடகிழக்கு எல்லையான சிக்கிம் பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையில் லேசான சண்டை ஏற்பட்டது. இந்த சண்டை சிக்கிம்மின் வடகிழக்கு எல்லையான நகு லா செக்டார் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இருநாட்டு வீரர்களுக்கும் இடையில் நடந்த இந்த சண்டையை அந்தந்த நாட்டு அதிகாரிகள் பேசி தீர்த்ததாக சொல்லப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவின் இந்த செயல் அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

40 லட்சத்தை கடந்து உயரும் கொரோனா தொற்று : உலக நாடுகளின் பட்டியல் வெளியாகி பரபரப்பு..!!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 40 லட்சத்து 18 ஆயிரத்து 342 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 13 லட்சத்து 63 ஆயிரத்து 698 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

40 லட்சத்தை கடந்து உயரும் கொரோனா தொற்று : உலக நாடுகளின் பட்டியல் வெளியாகி பரபரப்பு..!!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 59,662 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 1,981 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 17,847 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 19,063/731
குஜராத் – 7,402/449
டெல்லி – 6,318/68
ராஜஸ்தான் – 3,579/101
மத்திய பிரதேசம் – 3,341/200
உத்தரபிரதேசம் – 3,214/66
தமிழ்நாடு – 6,009/40
தெலுங்கானா – 1,133/29
கேரளா – 503/04
ஆந்திர பிரதேசம் – 1,887/41
கர்நாடகா – 753/30
ஜம்மு & காஷ்மீர் – 823/09
மேற்கு வங்கம் – 1,678/160
பஞ்சாப் – 1,731/29
ஹரியானா – 647/08
பீகார் – 571/05
அசாம் – 59/01
சண்டிகர் -150/01
உத்தர்கண்ட் – 63/01
லடாக் – 42/0
அந்தமான் & நிக்கோபார் -33/0
சத்தீஸ்கர் – 59/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 50/02
ஒடிசா – 271/02
பாண்டிச்சேரி – 09/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 132/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 118/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 12/01
தாத்ரா நகர் ஹாவெலி – 01/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 40 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1,605 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

40 லட்சத்தை கடந்து உயரும் கொரோனா தொற்று : உலக நாடுகளின் பட்டியல் வெளியாகி பரபரப்பு..!!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

புகார் கூறிய பாமக நிர்வாகியை மது போதையில் தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்

புகார் கூறிய பாமக நிர்வாகியை மது போதையில் தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்

தண்ணீர் வரவில்லை என்று முகநூலில் புகார் பதிவிட்ட பாமக கிளை செயலாளரை அந்த பகுதியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மது போதையில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் 71 மேலையூர் ஊராட்சியில் கூத்தக்குடி பகுதியில் பாமக கிளை செயலாளர் பதவியை வகித்து வருபவர் தான் அப்புனு என்கிற ஜெயப்பிரகாஷ்.

இவர் தனது தெரு குழாயில் தண்ணீர் வரவில்லை என்று முகநூலில் புகாராக பதிவிட்டதற்கு, மேலையூர் ஊராட்சி மன்ற தலைவி ஜெயக்கொடி அவர்களின் கணவர் ஸ்டாலின் மது போதையில் அப்புனுவை கடுமையாக தாக்கியுள்ளார்.

புகார் கூறிய பாமக நிர்வாகியை மது போதையில் தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்
Stalin

இது சம்பவம் தொடர்பாக திருநீலக்குடியில் காவல் நிலையத்தில் பாமக ஒன்றிய மற்றும் மாநில பொறுப்பாளர்கள் புகார் அளித்துள்ளார்கள். ஊராட்சியில் உள்ள பிரச்சனை குறித்து புகார் தெரிவித்த பிரபல அரசியல் கட்சி நிர்வாகியான இவருக்கே இந்த நிலைமை என்றால் அப்பகுதியில் வசிக்கும் சமானியர்களின் நிலை என்னவாக இருக்கும்.

விரைவில் கேப்டன்ஸி பொறுப்பிலிருந்து நீக்கப்படும் விராட் கோலி? – BCCI அதிரடி

0

விரைவில் கேப்டன்ஸி பொறுப்பிலிருந்து நீக்கப்படும் விராட் கோலி? – BCCI அதிரடி

2008ம் ஆண்டு இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்தவர் விராட் கோலி. தனது தனித்துவமான ஆட்டத்தால் உலகெங்கும் பல ரசிகர்களைக் கொண்டுள்ளார். பல கிரிக்கெட் வீரர்களே தங்களை இவரது ரசிகர்கள் எனக் கூறிக்கொள்வார்கள்.

சச்சின், தோணியைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டின் அணியின் அடையாளமாக தற்போது திகழ்வது விராட் கோலி தான். சச்சினின் சாதனைகளை தற்போதைக்கு முறியடிக்க முடிந்த நிலையிலுள்ள ஒரே வீரரும் கோலி தான் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் ஒருமித்த கருத்து.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்திய அணியின் தலைவர் பொறுப்பை வகுத்து வருகிறார் கோலி. ஒரு பேட்ஸமேனாக சிறந்த ஆட்டக்காரராகக் கோலி தான் உலக அளவில் சிறந்தவர் என்றாலும் ஒரு சிறந்த அணித்தலைவர் என அவரை குறிப்பிட முடியாது. திறமை வாய்ந்த ஆட்டக்காரர்களாலும், நெருக்கடியான சூழலில் தோணியின் ஆலோசனையாலுமே கோலி ஆட்டங்களை வெற்றி பெற்று வருகிறார் என்ற கருத்து உண்டு.

அதற்கு உதரானமாக அவர் ஐபிஎலில் அணித்தலைவராக இருக்கும் ஆர்.சி.பி அணியைச் சுட்டிக்காட்டுவார்கள். பல உலகத்தரம் வாய்ந்த ஆட்டக்காரர்கள் இருந்தும் கோலியால் 12 ஆண்டுகளில் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாததற்கு அவருக்குத் தலைமைப் பண்பு இல்லாததே காரணம் என்ற குற்றச்சாட்டு உண்டு.

தற்போது கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மட்டும் சுமார் 2000 கோடி வரை நிதி இழப்பு என்று கூறப்படுகிறது. இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடத்த முடியுமா என்ற நிலை நீடிப்பதால், பிசிசிஐ சில அதிரடி முடிவுகளை எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கென்று தனித்தனியாக அணிகளைக் கட்டமைத்து ஒரே நேரத்தில் இந்த மூன்று விதமான போட்டிகளிலும் இந்திய அணியைப் பங்குகொள்ள வைப்பதன் மூலம் இழந்த வருவாயைச் சரி கட்ட முடியும் என நம்புகிறது.

இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் விராத் கோலியை அணித்தலைவராக வைத்து கொண்டு, ஒரு நாள் மட்டும் 20 ஓவர் போட்டிகளுக்கு வெவ்வேறு அணி மற்றும் அணித்தலைவர்களை நியமிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மாவை அணித்தலைவராகத் தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அல்லது 20 ஓவர் நடைபெறும் சூழல் ஏற்பட்டால் அப்போது அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுலை அணித்தலைவராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

டெஸ்ட் போட்டியில் முரளி விஜய், சத்தீஷ்வர் புஜாரா, ரவி அஷ்வின், ஹனுமா விஹாரி, விரிதிமான் சாஹா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், அஜின்க்யா ரஹானே இடம் பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கே எல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல், தீபக் சாஹர், ஸ்ரேயாஸ் ஐயர், புவனேஸ்வர் குமார், மனிஷ் பாண்டே, ஷிகர் தவான், ஹார்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஆஸ்திரேலய கிரிக்கெட் அணி பல வருடங்களாக இந்த நடைமுறையைப் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.