Home Blog Page 5651

கருத்து மோதலால் கோபம் கொண்ட விராட்கோலி ! அடங்கி போன வேக பந்து வீச்சாளர்!!

0

விராட் கோலியுடன் மோதலா இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் கூறியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு ஜமைக்காவில் நடந்த ஆட்டத்தில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய கெஸ்ரிக் வில்லியம்ஸ் நோட்டு புத்தகத்தில் எழுதி அடிப்பது போல சைகை செய்து கோலியை வழியனுப்பி வைத்தார். களத்தில் ஆக்ரோஷத்திற்கு பெயர்போன விராட்கோலி இதை எளிதாக எடுத்துக்கொள்ள வில்லை

அதன் பிறகு 2019ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் டி20 விளையாடியபோது கடைசி போட்டியில் வில்லியம்ஸின் பந்தை விராட் கோலி சிதறடித்தார் அப்போது வில்லியம்ஸின் நோட்டுப் புத்தக கொண்டாட்டத்தை கோலி செய்து காட்டி பதிலடி கொடுத்தார் இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் வில்லியம்ஸ் தற்போது கூறியுள்ளார்.

கருத்து மோதலால் கோபம் கொண்ட விராட்கோலி ! அடங்கி போன வேக பந்து வீச்சாளர்!!

ஜமைக்காவில் நான் முதன்முதலில் விராட் கோலியிடம் தான் அந்த நோட்டுப் புத்தக கொண்டாட்டத்தை ஆரம்பித்தேன் அது எனக்கு பிடித்ததால் ரசிகர்களுக்காக நான் அதை செய்தேன். ஆனால் நான் செய்ததை விராட் கோலி தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆட்டம் முடிந்ததும் அணியினர் இடம் கைகுலுக்க சென்றேன் விராட் கோலி நல்ல பந்து வீச்சு என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அவர் கடுமையாக நடந்து கொள்ளவில்லை ஆனால் அதோடு எங்கள் பேச்சு முடிந்துவிட்டது. 2019 டி20 தொடர் மூன்றாவது போட்டியின்போது விராட் கோலி ஆட்டத்தில் இறங்கியதுமே என்னிடம் நேராக வந்து அந்த அந்த நோட்டுப் புத்தக கொண்டாட்டம் இன்று இங்கு வேலை செய்யாது அதற்கு வாய்ப்பும் வராது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன் என்று என்னிடம் சொன்னார்.

கருத்து மோதலால் கோபம் கொண்ட விராட்கோலி ! அடங்கி போன வேக பந்து வீச்சாளர்!!

அப்போதிலிருந்து நான் பந்து வீசி வரும் போது ஒவ்வொரு பந்துக்கும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தார் நான் நண்பா வாயை மூடி பேட்டிங் ஆடு நீ பேசுவது குழந்தைத்தனமாக உள்ளது என்றேன் ஆனால் அவர் காதில் விழுந்தது எல்லாம் வாயை மூடு என்பது மட்டுமே குழந்தைத்தனம் என்பது நான் பின்னால் நடந்து கொண்டே பேசியதால் அவர் காதில் விழவில்லை அவ்வளவுதான் நான் சொன்னேன் ஆனால் அவர் பேசிக்கொண்டே இருந்தார். அந்த ஆட்டத்தில் என் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார் நான் குழம்பி விட்டேன்எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் சரி சரியாகவில்லை என்று கூறினார். மேலும் இந்த சம்பவத்தால் தான் அவரால் அன்று என் பந்துவீச்சை விலாச முடிந்தது என்று வில்லியம்சன் கூறினார் அந்த போட்டியில் 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இந்திய அணி கோப்பையை வெல்லவும் காரணமாக இருந்தார் என்று நினைவு கூர்ந்தது.

விமான, ரயில் சேவை தற்போதைக்கு வேண்டாம் – பிரதமர் கூட்டத்தில் பேசிய முதல்வர்

0

விமான, ரயில் சேவை தற்போதைக்கு வேண்டாம் – பிரதமர் கூட்டத்தில் பேசிய முதல்வர்

கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வரை இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன் மாநில முதல்வர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டார் பிரதமர் மோடி.

தற்போது 3வது ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பொது முடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே மத்திய அரசு 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இன்று முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அமைச்சரவை செயலாளர், அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் அதன் நீட்சியாக இன்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்குபெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் அரசு கோரியிருந்த 2000 கோடி ரூபாய் விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தார். அத்துடன் கீழகண்ட அம்சங்களையும் முன் வைத்துப் பேசினார்.

  • 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாகவே வழங்கிட வேண்டும்.
  • PCR பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
  • மருத்துவ உபகரணங்களை மேம்படுத்த, முந்தைய காணொலிக் காட்சி வாயிலான உரையாடலின்போது ஏற்கெனவே வலியுறுத்திய ரூ. 2,000 கோடியை விடுவிக்க வேண்டும்.
  • நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை விடுவிக்க வேண்டும்.
  • மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொள்முதல் செய்வதற்காகவும், புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்காகவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 1,000 கோடி வழங்க வேண்டும். இந்த மொத்த செலவையும் தற்போது மாநில அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.
  • அனைத்து நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கும் இலவசமாக உணவு தானியங்களை வழங்கிட வேண்டும்
  • விமானச் சேவைகளை மே 31 வரை தொடங்க வேண்டாம்.
  • சென்னையில் அதிகளவில் கொரோனாதொற்று பாதித்தவர்கள் இருப்பதால், தமிழகத்தில் மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! சற்றுமுன் வெளியான அதிர்ச்சியளிக்கும் தகவல்

0

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! சற்றுமுன் வெளியான அதிர்ச்சியளிக்கும் தகவல்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்பான கட்டுப்பாடுகள் இன்று முதல் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக சலூன் கடைகள், பியூட்டி பார்லர்கள் தவிர பெரும்பாலான கடைகள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது குறையாமல் வழக்கம் போல நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 7204 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று புதிதாக 798 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 538 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சென்னையில் இன்று மட்டுமே 538 நபர்களுக்கு கொரோனா பாதித்த நிலையில் தற்போது வரையில் மொத்த கொரோனா பாதிப்பானது 4371 ஆக உயர்ந்துள்ளது. இதே போல தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8002 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக திருவள்ளூரில் 97 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 90 நபர்களுக்கும் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் திருவண்ணாமலையில் 10 நபர்களுக்கும், அரியலூரில் 33 நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இன்று மேலும் 6 பேர் உயிரிழந்திருப்பதால், தமிழக அளவில் கொரோனா பாதிப்பினால் பலியானோர் எண்ணிக்கையானது 53 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் 92 பேர் குனமடைந்துள்ளதால், தமிழக அளவில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 2051 ஆக உயர்ந்துள்ளது.

இனி 17 நாட்கள் போதும் – கொரோனா திருத்தப்பட்ட நெறிமுறைகள் வெளியீடு

இனி 17 நாட்கள் தான் – கொரோனா திருத்தப்பட்ட நெறிமுறைகள் வெளியீடு

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் முதல் கொரோனா நோய்பரவல் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் பெரும்பாலும் வெளிநாடு சென்று வந்தவர்களுக்கு மட்டுமே நோய் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அது நாடு முழுவதும் பரவத் துவங்கியது.

இதனையடுத்து கொரோனா நோயாளிகெளுக்கென்று நெறிமுறைகளை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது மத்திய அரசு. சுமார் 2 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்படைந்தவர்கள், அதிலிருந்து குணமடைந்தவர்கள் போன்றவற்றில் ஆய்வை மேற்கொண்டு தற்போது அந்த நெறிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் லேசான கோரோனா அறிகுறிகளோடு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது.

அதில் கீழ்கண்ட நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன:

  • கொரோனா அறிகுறிகள் லேசாக இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதி இருந்தால், குடும்பத்தில் மற்றவர்களுடன் தொடர்பு வைக்காமல் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.
  • கொரோனா அறிகுறிகள் லேசானதுதான், தீவிரமானது அல்ல என்று மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்தப்படலாம். அந்த மருத்துவ அதிகாரிகளுக்கு தனிமையில் இருக்கும் நபர் தனது உடல் நிலை குறித்து அடிக்கடி தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், மாவட்டக் கண்காணிப்பு குழுவுக்கும், அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நபர் மாதிரி எடுக்கப்பட்ட தேதியிலிருந்து 17 நாட்களில் தனது தனிமையை முடித்துக்கொள்ளலாம்.
  • தொடர்ந்து 10 நாட்களாக காய்ச்சல் ஏதும் இல்லாமல் இருந்தால், வீட்டில் தனிமைப்படுத்தும் காலம் அதாவது 17 நாட்கள் முடிந்தபின் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
  • கொரோனா அறிகுறிகள் தீவிரமாக இருந்து மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்புப்படும் முன் ஆர்டி பிசிஆர் சோதனை மூலம் நெகட்டிவ் வந்தபின் செல்ல வேண்டும்.
  • கொரோனா அறிகுறிகள் லேசாக இருப்பவர்கள் மற்றும் தொடக்க நிலை அறிகுறி இருப்பவர்கள் மருத்துமனையிலிருந்து அனுப்பப்படும் முன் பரிசோதனைகள் ஏதும் செய்ய வேண்டாம்.
  • இதுதவிர வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபருக்கு உதவும் உதவியாளர், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முன்தடுப்பு நடவடிக்கையாக தகுதியான மருத்துவ அதிகாரியின் ஆலோசனைப்படி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
  • வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபருக்கு உதவி செய்ய ஒருவர் 24 மணிநேரமும் இருக்க வேண்டும். உதவியாளருக்கும், அருகில் இருக்கும் மருத்துவமனைக்கும் அடிக்கடி தொடர்பு இருக்க வேண்டும்.
  • தனிமைப்படுத்தப்பட்டவரின் மொபைல் போனில் ஆரோக்கிய சேது செயலி பதிவேற்றம் செய்யப்பட்டு 24 மணிநேரமும் அது இயக்கத்தில் இருக்க வேண்டும்.
  • தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு உடனடியாக ஏதேனும் மருத்துவ சகிச்சை தேவைப்படும் அளவுக்கு அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் அதாவது மூச்சு விடுதலில் சிரமம், நெஞ்சு எரிச்சல், மனரீதியான குழப்பம், ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்றவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தெரிவிக்க வேண்டும்.
  • தனிமைப்படுத்தப்பட்ட நபர் மருத்துவ அதிகாரியால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் அல்லது சந்தேகிக்கும் நபர் என்று உறுதி செய்ய வேண்டும், குறிப்பிட்ட காலத்துக்கு பாதிக்கப்பட்டநபர் கண்டிப்பாக சுய தனிமையில் இருக்க வேண்டும்’.

பொள்ளாச்சி சம்பவத்தை போல விழுப்புரத்திலும் நடந்து விட கூடாது! திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை

0

பொள்ளாச்சி சம்பவத்தை போல விழுப்புரத்திலும் நடந்து விட கூடாது! திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை

விழுப்புரத்தில் அ.தி.மு.கவினரால் உயிருடன் தீவைத்து கொளுத்தப்பட்ட சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க தி.மு.க. துணை நிற்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை – கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத் திணறவைத்து; கலியபெருமாளும் முருகனும் சிறுமியை தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயஸ்ரீ, நீதித்துறை நடுவரிடம் இதுகுறித்து மரண வாக்குமூலம் அளித்துள்ளார். 95% தீக்காயத்துடன் போராடிய ஜெயஸ்ரீ, சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார் என்ற செய்தி இதயமுள்ள எவரையும் துடிதுடிக்கவே செய்யும். கோவை வேளாண் கல்லூரி மாணவியர் சுற்றுலா சென்ற பேருந்தை தருமபுரியில் தீக்கிரையாக்கி, மாணவியர் மூவரையும் கருக்கி, கதறக் கதறக் கொன்றதற்குக் காரணமானவர்கள் அ.தி.மு.க.,வினர் சிலர். அதற்கு அடுத்த கொடிய சம்பவம் இது.

தீயிட்டு கொளுத்தப்பட்ட 10ம் வகுப்பு மாணவி.. அதிமுகவினர் தண்டிக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

சிறுமியை இழந்து வாடும் ஜெயபால் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் அதேவேளையில், குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி ஜெயஸ்ரீகள் போன்ற சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்றும். இந்தக் கொடூர கொலைக் குற்றத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வினர் சம்பந்தப்பட்டுள்ளதால், காவல்துறையினர் பெயரளவிற்கு செயல்படாமல், சட்டத்தின் முழு வலிமையையும் நியாயமாகவும் வேகமாகவும் பயன்படுத்த வேண்டும்.

விரைந்து உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். ஏற்கனவே, பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்ட பலர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவியுள்ள நிலையில், விழுப்புரத்திலும் அந்த நிலைமை ஏற்படக்கூடாது என்பதையும், ஜெயஸ்ரீயின் கொடூர மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க தி.மு.கழகம் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இதுபோன்ற கொடிய நிகழ்வுகள், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதை உணர்ந்து காவல் துறையினர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் சாய்ந்துவிடாமல், நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் விடுத்த வேண்டுகோள்

0

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் விடுத்த வேண்டுகோள்

கொரோனா வைரசின் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக பெரும்பாலான வெளிமாநில தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் ஒவ்வொரு மாநில அரசும் இவர்களை தற்கால முகாம்களில் தங்க வைத்தனர்.இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மட்டங்களிலும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.ஆரம்பத்திலேயே அவர்களுக்கான தங்கும் முகாம், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பராமரிக்க உத்தரவு எனப் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. ஆனாலும், பல இடங்களில் போதிய அடிப்படை வசதி கிடைக்காமல் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த பிரச்சனைகளையெல்லாம் சமாளிக்கும் விதமாக சமீபத்தில் மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களை அனைவரையும் அவரவர் மாநிலத்துக்குச் செல்ல அனுமதித்தது. இதை அனைத்து மாநிலங்களும் முறையாக செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனாலும் இவ்வாறு சொந்த மாநிலங்களுக்கு செல்லும் நபர்களிடம் ரயில் கட்டணம் வாங்கியது பிரச்சினை ஆனது. இதனையடுத்து அவர்களுக்கான ரயில் கட்டணத்தையும் தமிழக அரசு தானே செலுத்த முன்வந்தது.

இந்நிலையில் நேற்று தமிழகத்தில் சில இடங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் வந்து போராடினர். காவல் துறையினர் அளித்த கோரிக்கையையும் அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் இன்று ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது

”வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களை விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்துவிதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இதுவரை 9 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 8 ரயில்களில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, அதுவரை வெளிமாநிலத் தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் மதுபான விற்பனைக்கு தடையா? வழக்கு குறித்து நீதிபதிகள் விளக்கம்!!

0

ஆன்லைன் மதுபான விற்பனைக்கு தடையா? வழக்கு குறித்து நீதிபதிகள் விளக்கம்!!

கடந்த மே 7 ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இதற்கு முன் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளை மீறி உள்ளதாக கூறி டாஸ்மார்க் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டது.

டாஸ்மாக் திறப்பது குறித்து பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர் குறிப்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு அவர்கள் இந்த சூழலில் மதுபான கடைகளை திறந்தால் பெரிய பாதிப்பு நேரிட வாய்ப்புள்ளதாக எச்சரித்தார்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மதுரை நுகர்வோர் அமைப்பு பொதுச் செயலாளர் சிங்கராஜ் என்பவர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தார். இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டாஸ்மாக் கடைகளை மூட அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் விற்க மதுபானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகளை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் அதன் முடிவை பொறுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி

விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ராமதாஸ் கோரிக்கை

0

விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ராமதாஸ் கோரிக்கை

விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த வழக்கில் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள்-முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன் பகை காரணமாக ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவியை கை – கால்களைக் கட்டிய நிலையில், வாயில் துணி வைத்து தீவைத்துக் கொளுத்தி கொலை செய்த கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி இன்று உயிரிழந்துள்ளார். இந்த கொலைக்கு காரணமான கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவு மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது பற்றி அவருடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி முன் பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. இது கொடூரமான செயல். மகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்!

ஊரடங்கால் 400 கோடி இழப்பு – சம்பளம் கொடுக்க திண்டாடும் திருப்பதி தேவஸ்தானம்

0

ஊரடங்கால் 400 கோடி இழப்பு – சம்பளம் கொடுக்க திண்டாடும் திருப்பதி தேவஸ்தானம்

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் கூடும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், கடற்கரை, பூங்காக்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

கடந்த 120 ஆண்டுகளில் மூடப்படாத திருப்பதி, திருமலையில் உள்ள வேங்கடாசலபதி கோயிலுக்குள் நுழைய பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஊரடங்கால் சுமார் 400 கோடி வரை வருமான இழப்பைச் சந்தித்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் திண்டாடி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் 300 கோடி வரை சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பிற மாதாந்திர செலவுகளாகச் செய்துள்ள தேவஸ்தானம் 400 கோடியளவிற்குத் தேவஸ்தானத்தினால் நடத்தப்படும் மருத்துவமனைகளுக்கும் இதர நிறுவனங்களுக்கும் செலவு செய்கிறதாம். இந்த நிதி நெருக்கடியிலிருந்து மீளப் பலவேறு வழிகளை ஆராய்ந்து வருகிறது.

மாதம் ஒன்றுக்கும் சுமார் 120 கோடி ரூபாயை சம்பளத்திற்கு மட்டும் செலவு செய்யும் தேவஸ்தானம் நடப்பு ஆண்டிற்கு 1385.06 கோடி தேவைப்படும் எனக் கணக்கிட்டுள்ளது.

தேவஸ்தானம் கோயிலுக்குச் சொந்தமான 8 டன் அளவிலான தங்கத்தை இருப்பாகவும் , 14000 கோடி ரூபாயை வைப்பு நிதியாகவும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னணி அதிரடி வீரருக்கு கிரிக்கெட் வாரியம் 6 ஆண்டு தடை!! ரசிகர்கள் அதிர்ச்சி

0

முன்னணி அதிரடி வீரருக்கு கிரிக்கெட் வாரியம் 6 ஆண்டு தடை!! ரசிகர்கள் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி வீரரான விக்கெட் கீப்பர் சபியுல்லா சபிக் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவருக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட ஆறு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி வீரரான இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் உட்பட 430 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 46 டி20 போட்டிகளிலும் 494 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த வங்கதேச பிரிமியர் லீக் போட்டியின்போது அவர் சூதாட்டக்காரர்களிடம் பணம் பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் இதற்கு முன் 2018ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் போட்டியிலும் இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் மீது ஊழல் தடுப்பு பிரிவில் நான்கு வகையான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது தன் மீதான புகாரை சபியுல்லா சபிக் ஒப்புக்கொண்டுள்ளார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அவருக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட 6 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.