Home Blog Page 5653

பாகிஸ்தான் வீரரைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கும் கொரோனா தொற்று உறுதி!

0

பாகிஸ்தான் வீரரைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கும் கொரோனா தொற்று உறுதி!

டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவ துவங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதிலும் பரவி வருகிறது.

கொரோனாவின் பிடியிலிருந்து பிரபலங்கள் கூட தப்பவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்தின் மஜித் ஹக் மற்றும் பாகிஸ்தானின் சபார் சர்ப்ராஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.

பாகிஸ்தான் வீரரைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கும் கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான சோலோ நிக்வேனிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு உடல் உபாதைகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது அவரை மேலும் கலங்கச் செய்துள்ளது.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில் “கடந்த ஆண்டு எனக்கு கில்லன் பார் சின்ட்ரோம் நோய் வந்தது. கடந்த 10 மாதங்களாக அதை எதிர்த்துப் போராடி வருகிறேன். அதிலிருந்து பாதி அளவே மீண்டுள்ளேன். எனக்கு டிபி உள்ளது. என் கணையம், சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது. இப்போது கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதெல்லாம் எனக்கு மட்டும் ஏன் நடக்கிறது என எனக்குப் புரியவில்லை?” என்று தனது சோகத்தைப் பகிர்ந்துள்ளார்.

இவரின் இந்த பதிவு ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0

தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற நிறுவனங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழகம் முழுவதும் டீ கடைகள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் தேநீர் கடைகள் பார்சலுக்கு மட்டும் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அத்தியாவசிக்கடைகள் அனைத்தும் இயங்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக இந்த அறிவிப்பை பயன்படுத்தி கடைகளை திறக்கும்போது சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கிருமி நாசினிகளை கொண்டு கடை முழுவதும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் அதுபோன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் திங்கள் கிழமை முதல் இயங்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த திலகவதி… அவருக்கு என்ன ஆனது… எதற்காக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சட்டங்களை கடுமையாக்க கோரப்பட்டது..??

0

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த மாணவி திலகவதி (18), இவர் அங்குள்ள கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பேராவூரணி காலனி பகுதியை சேர்ந்த தலித் சமுதாய இளைஞன் ஆகாஷ், மாணவி திலகவதியை ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

தினந்தோறும் மாணவி திலகவதி கல்லூரிக்கு செல்லும் போது ஆகாஷ் அவரை பின்தொடர்ந்து சென்றதாகவும், ஒரு கட்டத்தில் அவரின் இந்த செயலை திலகவதி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

மாணவியின் கண்டிப்பை மீறி மீண்டும் அவரை பின்தொடர்ந்த ஆகாஷ் தன்னுடைய காதலை மாணவியிடம் வெளிப்படுத்தியுள்ளார். அவரது காதலை ஏற்றுக் கொள்ளாத திலகவதி  இளைஞர் ஆகாஷை எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் மாணவி திலகவதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு அவரது வீட்டிற்கு சென்ற ஆகாஷ் தன்னுடைய காதலை ஏற்க முடியுமா ஏற்க முடியாதா? என்று கேட்டுள்ளார். அவரது காதலை மாணவி திலகவதி ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திலகவதியை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார்.

பலத்தகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த திலகவதியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பத்திலிருத்தோர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். திலகவதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதனையடுத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஆகாஷை கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்த நேற்றோடு(08/05/2020) ஓராண்டு நிறைவுற்றது, இந்த நாளில் பலர் தங்களது வீட்டில் இறங்கலை பதிவு செய்தனர்.

மாணவி திலகவதி கொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவுற்ற நிலையில், இதுவரை சம்பந்தப்பட்ட கொலையாளிக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடுமையான சட்டங்களை இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி #ViolenceAgainstTNWomen என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

கொரோனா பரவும் நேரத்தில் நடந்த கேவலமான திருட்டு : 1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் மாயம்..!!

0

இங்கிலாந்தின் தொழில் சார்ந்த முக்கிய நகரங்களில் ஒன்றான மான்செஸ்டரில் உள்ளது சல்போர்ட் பகுதி. இந்த பகுதியின் குடோன் ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த உபகரணங்கள் சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. அந்த உபகரணங்களின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 66 ஆயிரம் ஐரோப்பிய பவுண்டுகள்(இந்திய ரூபாயில் ரூ.1.5 கோடி), அதில் 80 ஆயிரம் முக கவசங்கள் கிடங்கில் பத்திரமாக இருந்துள்ளது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வேளையில் 3 வண்டிகளில் வந்த 3 மர்ம ஆசாமிகள் இந்த கிடங்கிற்குள் புகுந்து 80 ஆயிரம் முக கவசங்களையும் கொள்ளையடித்தனர். திருடிய பொருட்களை கொண்டு வந்த வண்டிகளில் ஏற்றி அந்த பகுதியில் இருந்து தப்பி சென்றனர்.

இங்கிலாந்தில் தற்போது சுகாதார ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் 80 ஆயிரம் முக கவசங்கள் கொள்ளை போனது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மான்ஸ்டர் நகரின் பாதுகாப்பு நிறைந்த முக்கிய பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் அந்த நகர போலீசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சரக்கு பாட்டிலுக்குள் இருந்த தவளை – டாஸ்மாக் அதிர்ச்சி

சரக்கு பாட்டிலுக்குள் இருந்த தவளை – டாஸ்மாக் அதிர்ச்சி

சீர்காழியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மதுபானம் வாங்கியவரின் பாட்டிலில் தவளை செத்துக் கிடந்ததையடுத்து மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 40 நாட்களுக்கு மேலாகப் பூட்டப்பட்டிருந்த மதுக் கடைகள் 7ம் தேதி காலை திறக்கப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் தென்பாதியை சேர்ந்த ஒருவர் மது பாட்டில் ஒன்று வாங்கியுள்ளார்.

சரக்கு பாட்டிலுக்குள் இருந்த தவளை - டாஸ்மாக் அதிர்ச்சி

அங்கிருந்து நேராக வயல் பகுதிக்குச் சென்று அந்த பாட்டிலைத் திறந்து பாதி மதுவைக் கோப்பையில் ஊற்றிவிட்டு மீண்டும் பாட்டிலை மூடும் போது பாட்டிலினுள் ஏதோ இருப்பதைப் பார்த்துள்ளார். இதனையடுத்து அது என்னவென உற்றுப் பார்த்த போது பாட்டினுள் தவளை ஒன்று மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அருகிலிருந்த ஒருவர் மூலம் மதுபானக் கடைக்குத் தகவல் தெரிந்துள்ளது.

இதனையடுத்து தகவல் வெளியே தெரியாமல் மறைக்கத் தவளையுடன் இருந்த மது பாட்டிலைப் பெற்றுக்கொண்டு உடனே புது மதுபாட்டிலை கடை ஊழியர்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளரான அம்பிகாபதியை செய்தி தொலைக்காட்சி ஒன்று தொடர்பு கொண்டு கேட்ட போது “இதுவரை தங்கள் கவனத்திற்குத் தகவல் வரவில்லை. ஒயின் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யும்போது பரிசோதித்தே விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ரம் போன்ற மது வகைகளில், நிறுவனங்களிலிருந்து வரும்போது ஏதேனும் தவறு நடைபெற்றிருக்கலாம். எனவே இனிவரும் காலங்களில் மதுபாட்டில்களையும் நன்கு பரிசோதித்தே வழங்க ஊழியர்களை அறிவுறுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

உஷாராக இருங்கள் மதுப்பிரியர்களே

பாய்ந்தது தேசத் துரோக வழக்கு – கைதாகிறாரா சீமான்?

பாய்ந்தது தேசத் துரோக வழக்கு – கைதாகிறாரா சீமான்?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோயமுத்தூரில் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. அச்சமயத்தில், கோவை ஆத்துப்பாலத்தில் பிப்ரவரி மாதம் 22ம் தேதி இஸ்லாமியக் கூட்டமைப்பு நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அந்த கூட்டத்தில் அவர் பேசும் போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கடுமையாகச் சாடினார். மேலும் மத்திய, மாநில அரசுகள் மீதும் கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

தற்போது இந்த கூட்டத்தில் பேசிய சீமான் மீது, கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் இப்போது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசத்துரோகம், விரோத உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து சீமான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

டாஸ்மாக் நீதிமன்ற தீர்ப்பு மக்கள் நீதி மய்யம் தொடுத்த வழக்கினாலா! – உண்மை என்ன?

0

டாஸ்மாக் நீதிமன்ற தீர்ப்பு மக்கள் நீதி மய்யம் தொடுத்த வழக்கினாலா! – உண்மை என்ன?

டாஸ்மாக் நீதிமன்ற தீர்ப்பு மக்கள் நீதி மய்யம் தொடுத்த வழக்கினாலா! - உண்மை என்ன?

மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலிலிருந்த நிலையில், கடந்த 3ம் தேதியிலிருந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த பல எதிர்ப்புகளை மீறிக் கடந்த 7ம் தேதி சென்னையைத் தவிர்த்துப் பிற இடங்களில் மதுக்கடைகளைத் திறந்தது தமிழக அரசு. மதுக்கடைகளைத் திறக்க பல்வேறு விதிமுறைகளை உயர் நீதிமன்றம் விதித்திருந்த நிலையில், அவை எதையுமே பெரும்பாலான கடைகளில் பின்பற்றாத காரணத்தால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதி மன்றம், டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டது. ஊரடங்கு முடியும் வரை ஆன்லை மூலம் மட்டுமே மதுக்களை விற்க அனுமதியளித்தது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் தாங்கள் தொடுத்த வழக்கினால் பெற்ற வெற்றி என உரிமை கொண்டாடியது.

டாஸ்மாக் நீதிமன்ற தீர்ப்பு மக்கள் நீதி மய்யம் தொடுத்த வழக்கினாலா? நிச்சயம் இல்லை. முதல் வழக்கு ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடுத்த வழக்கு. இதில்தான் விற்பனையை ஒழுங்குபடுத்தும் உத்தரவு வந்தது. மறுநாள் விற்பனையை ரத்து செய்து வந்த உத்தரவு, மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கினால் என்று கூறப்படுகிறது. மேலும், அவர்கள் வழக்குத் தொடுத்ததால்தான் இது அவசர வழக்காக எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இது தவறான தகவல். சென்னை உயர்நீதிமன்றம் இரண்டாவது முறை வழக்கை அவசரமாக விசாரிக்கக் காரணம், டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கே. உயர்நீதிமன்றம் ஏற்கனவே விதித்த நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்று தொடுத்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வந்துள்ளது. அதனால்தான் உயர்நீதிமன்றம் அவசர வழக்காக இதை எடுத்து விசாரித்தது.

இது போக டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று தொடரப்பட்ட பல வழக்குகளில் மக்கள் நீதி மய்யத்தின் வழக்கும் ஒன்று. மக்கள் நீதி மய்யம் இந்த வழக்கைத் தொடராவிட்டாலும், இந்த தீர்ப்பு வந்திருக்கும். தீர்ப்பில் ம.நீ.ம வழக்கறிஞர் பெயர் இருக்கிறது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இது போல ஒரே விஷயத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டால் பேட்ச் வழக்குகள் என்று கூறப்படும். அனைத்து வழக்குகளைத் தொடர்ந்த வழக்கறிஞர்களின் பெயரும் தீர்ப்பில் இருக்கும். அனைவர் பெயரும் இருக்கிறது என்பதற்காக வழக்கு தொடர்ந்த அனைவரும் என்னால்தான் தீர்ப்பு என்று சொல்லிக் கொள்வது சிறுபிள்ளைத்தனம்.

மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பாகத் தொடரப்பட்ட மனு குறித்து ஒரே ஒரு இடத்தில் கூட தீர்ப்பில் விவாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை மறைத்து கமலினால் தான் இந்த வழக்கே நடைபெற்றது போல் சமூக வலைத்தளங்களில் சித்தரிக்கப்பட்டு வருவது நகைப்புக்குரிய விஷயமாக உள்ளது.

ஆன்லைன் மூலம் மது விற்பனை – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

0

ஆன்லைன் மூலம் மது விற்பனை – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 நாட்களுக்கு மேலாக மது கிடைக்காமல் தவித்து வந்த மது பிரியர்கள், இப்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், உற்சாகம் அடைந்துள்ளனர். இதனையடுத்து மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான கடைகளில் கொரோனா குறித்த அச்சம் எதுவும் இன்றி, குடிமகன்கள் தனி மனித இடைவெளியை பின் பற்றவில்லை. இதனால் மதுக்கடைகள் கொரோனா பரப்பும் ஹாட்ஸ்பாட்டாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் மதுக் கடைகளைத் திறக்கும் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் மதுக்கடைகளில் சமூக விலகல் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும், மது விற்பனை மற்றும் விதிமுறைகள் தொடர்பாக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த மனுவானது, நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு விடியோ கான்ஃபரின்ஸிங் வாயிலாக நேற்று உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது மது விற்பனை தொடர்பாக அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி அசோக் பூஷன் தெரிவித்தார்.

ஆனால், சமூக விலகல் நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில், மறைமுக விற்பனை அல்லது ஆன்லைன் மூலம் மது விற்பனை மேற்கொண்டு ஹோம் டெலிவரி செய்வது குறித்து அனைத்து மாநில அரசுகளும் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். அத்துடன் மனுதாரரின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.

இதேபோன்று தமிழகத்தில் மதுபானக் கடை திறப்புக்கு எதிரான வழக்கு நேற்று உயர்நீதி மன்றத்தில் விசாரணையின்போது, மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.

அடித்தட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கும் மின்சார திருத்த சட்டம் தேவையற்றது – பாமக தலைவர் ராமதாஸ்

0

அடித்தட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கும் மின்சார திருத்த சட்டம் தேவையற்றது – பாமக தலைவர் ராமதாஸ்

மின்சார சட்டத்தைத் திருத்த்தியமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது தேவையற்றது எனவும் அந்த முடிவை கைவிட வேண்டும் எனவும் பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மின்சாரத் துறையில் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், 2003-ம் ஆண்டின் மின்சார சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. விவசாயிகள் மற்றும் அடித்தட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கும் இந்தத் திருத்தம் தேவையற்றது; திரும்பப் பெற வேண்டியதாகும்.

மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள மின்சார சட்டத் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டால் அதனால் ஏழைகளும், விவசாயிகளும் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மத்திய மின்சார சட்டத்தின் 45-வது பிரிவு மின்கட்டணத்தை வசூலிக்கும் அதிகாரத்தை மின்சார வாரியங்களுக்கு வழங்குகிறது. இச்சட்டத்தின் 65-வது பிரிவு மின் கட்டணத்திற்கு மாநில அரசுகள் மானியம் வழங்குவதை முறைப்படுத்துகிறது.

இந்த இரு பிரிவுகளிலும் செய்யப்படவுள்ள திருத்தங்களின் மூலம் மாநில அரசுகள் மின்சாரத்திற்கான மானியத்தை மின்சார வாரியங்களுக்கு வழங்குவது தடை செய்யப்படும். மாறாக, பயனாளிகளுக்கு மாநில அரசு விரும்பினால் நேரடியாக மானியம் வழங்க வகை செய்யப்படும்.

விவசாயிகளுக்கு இப்போது நேரடியாக இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்காக அவர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், குடிசைகள் மற்றும் பசுமை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர் உள்ளிட்ட சில தொழில் பிரிவினருக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ஆகியவை ரத்து செய்யப்படும்.

அவற்றுக்கு சம்பந்தப்பட்டவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இதை மாநில அரசு தடுக்க முடியாது. ஒருவேளை இந்தப் பிரிவினருக்கு உதவ வேண்டும் என்று மாநில அரசு நினைத்தால், மின்சாரத்திற்கான மானியத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.

விவசாயப் பயன்பாட்டுக்கான இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படும் என்பதாலும், மாநில அரசுகள் மானியம் வழங்க உச்சவரம்புகள் விதிக்கப்படும் என்பதாலும் வேளாண் பணிக்குத் தேவையான மின்சாரம் முழுமையும் இலவசமாக கிடைக்காது. அதுமட்டுமின்றி படிப்படியாக அடுத்த 3 ஆண்டுகளில் இலவச மின்சாரம் முழுமையும் ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது.

அதுமட்டுமின்றி, இப்போது வீடுகளுக்குக் குறைந்த அளவு மின்கட்டணமும், தொழில் மற்றும் வணிகப் பயன்பாடுகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் முறை கைவிடப்படும். மாறாக, அனைத்து வகை மின் பயன்பாட்டாளர்களுக்கும் ஒரே அளவில் மின்கட்டணம் வசூலிக்கப்படும். அதனால் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் கடுமையாக உயரக்கூடும்.

தமிழ்நாடு முழுமைக்கும் இப்போது தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக மின்சாரத்தை விநியோகிக்கிறது. புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், மாவட்ட வாரியாக தனியார் நிறுவனங்களை நியமித்து அவர்கள் மூலமாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதற்கான கட்டணம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என செய்திகள் கூறுகின்றன.

மின்வாரியங்களுக்கும், மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையே கொள்முதல் விலை தொடர்பாக ஏதேனும் சர்ச்சைகள் எழுந்தால் அதை மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையம் விசாரித்து தீர்த்து வைக்கும்.

ஆனால், இப்போது இதற்காக மின்சார ஒப்பந்தம் செயலாக்க ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த மின்சார சட்டத் திருத்தம் வகை செய்கிறது. இது மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமான ஏற்பாடு என்றும், இதனால் ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி விலை இப்போதுள்ள 8 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயரும் என்றும் மின்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி எரிசக்தித் துறை பொதுப்பட்டியலில் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களை மத்திய அரசு ஒட்டுமொத்தமாகப் பறித்துக் கொள்வது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

அதுமட்டுமின்றி, கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது மின்சார சட்டத் திருத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு துடிப்பதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

இதற்கு முன்பு 2014, 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக முயன்றது. அப்போது பாமக உள்ளிட்ட கட்சிகளும், பொதுமக்களும் கடுமையாக எதிர்த்ததால் இந்த சட்டத்திருத்தம் கைவிடப்பட்டது.

விவசாயிகளையும், அடித்தட்டு மக்களையும் பாதிக்கும் இந்த திருத்தத்தை இப்போதும் பாமக கடுமையாக எதிர்க்கிறது. பொருளாதாரப் பின்னடைவு, கரோனா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகியுள்ள நிலையில், இச்சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் இலவச மின்சாரம் ரத்து, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட கூடுதல் சுமைகளை திணிக்கக்கூடாது.

எனவே, பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள மின்சார சட்டத்திருத்தத்திற்கான வரைவு மசோதாவை திரும்பப் பெற வேண்டும். மின்சார சட்டத்தைத் திருத்தும் முடிவையே மத்திய அரசு கைவிட வேண்டும். இதை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஃபாவிபிராவிர் மருந்தைக் கொடுக்க அனுமதி

0

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஃபாவிபிராவிர் மருந்தைக் கொடுக்க அனுமதி

கடந்த டிசம்பரில் சீனாவின் வுகான் மாகானதில் பரவத் துவங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா நோயை கட்டுப்படுத்தவும், குணமாக்கவும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இறப்பு மிகவும் குறைவு. அதற்குக் காரணம் நமது நாட்டில் மருத்துவத்துறை சிறப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளதாகும். தற்போது கொரோனாவிற்க்கு அறிகுறிகள் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஃபாவிபிராவிர் (Favipiravir) என்ற மருந்தை மருத்துவமனைகளில் கொடுத்துப் பரிசோதிக்கலாம் என இந்திய தலைமை மருந்து கட்டுப்பாளர் அனுமதி அளித்துள்ளார். மூலிகை தாவரத்திலிருந்து பெறப்படும் சத்துக்களை வைத்து இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது. ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் இன்புளூவன்சாவுக்கு இந்த மருந்து நல்ல பலனை அளித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு அதை வழங்கலாம் என்ற அனுமதி கிடைத்துள்ளதாக மத்திய அறிவியல் தொழில்துறை ஆய்வு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சேகர் மண்டே தெரிவித்துள்ளார்.