Home Blog Page 5655

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் OBC-க்கு அநீதி: உடனடியாக இடஒதுக்கீடு வழங்குக! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் OBC-க்கு அநீதி: உடனடியாக இடஒதுக்கீடு வழங்குக! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

முதுநிலை மருத்துவ படிப்புகளில் OBC மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை போக்க மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் பாமக இளைஞர் அணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர் சேர்க்கையில், அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 9550 இடங்களில், வெறும் 371 இடங்கள், அதாவது 3.80% இடங்கள் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்துள்ளன. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.

இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி 5&ஆம் தேதி நடத்தப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 24&ஆம் தேதியுடன் முடிவடைந்த முதற்கட்ட கலந்தாய்வில் 9550 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒட்டுமொத்தமாக 371 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த இடங்களையும் அவர்கள் பொதுப்பிரிவில் போட்டியிட்டு தான் வென்றுள்ளனர். இது முதல்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்ட ஒட்டுமொத்த இடங்களில் 3.8 விழுக்காடு மட்டுமே ஆகும். பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீடு இல்லாத பொதுப்பிரிவினர் 7125 இடங்களை, அதாவது 74.60 விழுக்காடு இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இவர்களுக்கெல்லாம் மேலாக உயர்வகுப்பைச் சேர்ந்த ஏழைகள் பிரிவுக்கு 10 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றில் சுமார் 7%, அதாவது 653 இடங்கள் இதுவரை நிரப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த சமூக அநீதிக்கு காரணம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினம், பழங்குடியினம், உயர்வகுப்பு ஏழைகள் என அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் போதிலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படாதது தான். 2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2009-ஆம் ஆண்டு முதல் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டத்தின்படி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் பட்டியலினம், பழங்குடியினருக்கு வழங்கப்படுவதைப் போன்று பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டப்படி மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மட்டும்தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க இயலாது என்று மத்திய அரசு கூறுவதை ஏற்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தனியாக உருவாக்கப்படுவதில்லை. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம் தான் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு உருவாக்கப்படுகிறது. அவையும் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் தான் எனும் போது, அவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடுகள் வழங்கப்படும் போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுவது நியாயமல்ல.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 24 வகையான மருத்துவ மேற்படிப்புகளில் 1758 இடங்கள் உள்ளன. அவற்றில் 50%, அதாவது 879 இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்திருந்தால், அதில் 50% இடங்கள், அதாவது 440 இடங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இப்போது கிடைத்துள்ள இடங்களை அளவீடாக கொண்டால், 440 இடங்கள் கிடைக்க வேண்டியதற்கு பதிலாக 33 இடங்கள் மட்டும் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கக்கூடும். இதை விட பெரிய சமூக அநீதி இருக்க முடியாது.

மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு பதிலளித்து ஜனவரி 16-ஆம் தேதி ஹர்ஷ்வர்தன் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்திருந்தார். மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டப்படியான இட ஒதுக்கீடு அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கும் பொருந்தும் என்ற நிலையில், நீதிமன்ற வழக்குகள் ஒரு பொருட்டல்ல. ஒருவேளை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தான் இதற்கு காரணம் என்று வைத்துக் கொண்டாலும், 2015-ஆம் ஆண்டு தொடரப்பட்ட அந்த வழக்கு 5 ஆண்டுகளுக்கும் மேலாக முடிக்கப்படாமல் இருப்பது சமூக நீதிக்கு எந்த வகையிலும் வலிமை சேர்க்காது. இந்த சமூக அநீதி உடனடியாக போக்கப்பட வேண்டும்.

அதற்காக மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற வழக்குகள் தான் இதற்கு தடையாக இருப்பதாக மத்திய அரசு கருதினால், அவை அனைத்தையும் விரைவாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; சமூக நீதியை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்த தமிழர் மரணம்

0

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்த தமிழர் மரணம்

சென்னையில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் டாக்டர் ராஜ்குமார் என்பவரும் அவரது நண்பர் பெருங்குடியை சேர்ந்த சிவநேசன் என்பவரும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பெருங்குடி சிவனேசன் உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூர் பகுதியில் உள்ள சுஜாதா பயோடெக் என்ற நிறுவனத்தின் புரோடக்சன் மேனேஜராக கடந்த 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சளி மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் இவர் தற்போது அவருடைய நண்பருடன் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக வருது கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னை தியாகராயநகரில் உள்ள டாக்டர் ராஜ்குமார் வீட்டில் அவர் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதில் சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்ஸைடு தயாரித்தால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது சோடியம் நைட்ரேட் கரைசலை பரிசோதனைக்காக அவர் குடித்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்திலேயே அவர் மயக்கம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து அவரை தியாகராயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் குடிக்காமல் தான் இருந்தார்கள்! ஆனால் அரசால் தான் மதுக்கடையை திறக்காமல் இருக்க முடியவில்லை-இயக்குனர் தங்கர்பச்சான் விளாசல்

மக்கள் குடிக்காமல் தான் இருந்தார்கள்! ஆனால் அரசால் தான் மதுக்கடையை திறக்காமல் இருக்க முடியவில்லை-இயக்குனர் தங்கர்பச்சான் விளாசல்

தமிழகத்தில் நேற்று முதல் சில கட்டுபாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அனைவரும் குரலெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் சமூக ஆர்வலரும், திரைப்பட இயக்குனருமான தங்கர்பச்சான் தமிழக அரசிற்கு எதிரான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

விடிய விடிய உறக்கத்தை இழந்து அமைதியற்ற மனநிலையில்தான் இதை எழுத அமர்கிறேன். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை அறிவிப்பின் போது எதிர்கொள்ளும் பரபரப்பான பதட்டமான மனநிலையில்தான் ஊடகச்செய்திகளைப் பார்க்கிறேன். உலக நாடுகளும்,உலக சுகாதார நிறுவனமும்,மருத்துவத்துறை வல்லுனர்களும் கூட கோவிட் 19 தொற்று நோயை கட்டுப்படுத்துவது குறித்து நமது அரசை பாராட்டி வரவேற்றார்கள். இந்நிலையில்தான் கோயம்பேடு காய் கனி வளாகம் தொற்று பரப்பும் மையமாக மாற்றம் கண்டு அனைவரும் அதிர்ந்து கிடக்கின்றோம்! மதுக்கடைகளை திறக்கிறார்கள் எனும் செய்தி வெளியான போது பதட்டம் மேலும் அதிகமானது. இப்போது நீதிமன்றம் கட்டுப்பாடு நிபந்தனைகளை விதித்து கடைதிறக்கப்பட்டுள்ளது. இந்தக்கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் மீறப்படும் போது மீதமிருப்பவர்களுக்கும் மதுக்கடைகள் கிருமியை கொண்டு சேர்த்துவிடுமே எனும் கவலை அனைவரையும் சோர்வடையச் செய்திருக்கிறது.

இதிலிருந்து மீண்டு விடலாம் என 43 நாட்கள் குடிக்காமல் தான் மக்கள் இருந்தார்கள். ஆனால் அரசாங்கத்தால் தான் மதுக்கடை திறக்காமல் இருக்க முடியவில்லை. எல்லையில் கடை திறந்து விட்டார்கள் என காரணம் கூறி பழியை மக்களிடத்தில் போடுகிறது. இன்னும் மூன்று மாதங்கள் மதுக்கடைகளை மூடி வைத்திருந்தால் குடியை மறந்து வருமானம் முற்றிலுமாக நின்றுவிடும் என்று நினைத்து இப்போது திறக்கிறார்களோ எனும் எண்ணம் எழுகிறது!

நான் சிறுவனாக இருந்தபோது அரசாங்கத்திற்குத் தெரியாமல் சாராயம் காய்ச்சி விற்பவர்களை கைகளைக்கட்டி தலையில் குடத்தை வைத்து வீதி வீதியாக அடித்து இழுத்துக் கொண்டு போவதை பல முறை பார்த்திருக்கிறேன். அதைப்போல் அதை வாங்கி குடிப்பவர்களுக்கும் அடி உதை சிறைதண்டனை எல்லாம் உண்டு. ஆனால் இந்த 40 ஆண்டுகளுக்குள் சாராயம் விற்கின்ற வேலையை அரசாங்கமே செய்வதால் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் எல்லாம் குடிக்கத்தொடங்கி அடிமையாகி அலைகிறார்கள். மக்களை காக்க வேண்டியவர்கள் இந்தபேரழிவு காலத்தில்கூட இப்படி செய்யலாமா எனக்கேட்டால் ‘ஆட்சி நடத்த பணம் இல்லை; அதற்காகத்தான் மதுக்கடைகளை திறக்கிறோம்’ எனச் சொல்வது எவ்வளவு பெரிய கேடு விளைவிக்கும் அவமானத்திற்குரிய செயல்?

மக்களை வாழ வைப்பதற்காகவே தான் அரசியலுக்கு வருகிறேன்! என் வாழ்க்கையை தியாகம் செய்கிறேன்! எனக்கூறிவிட்டு அரசியலுக்குள் நுழைந்து ஊழலை அறிமுகப்படுத்தினார்கள். தான் மட்டும் திருடினால் தானே கேள்விகள் கேட்பார்கள் என்பதற்காக தன் கீழ் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடைநிலை வரை உள்ள கட்சிக்காரர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என அனைவரையும் ஊழல் செய்ய அனுமதித்தார்கள். இந்த திருடர்கள் பணக்காரர்களாக மாறுவதை கண்ட மக்கள் கேள்வி கேட்க தொடங்கியபோது, அவர்களின் வாயையும் அடைப்பதற்காகவே பணம் கொடுத்து வாக்குரிமையை விலைக்கு வாங்கி தங்களின் திருட்டை நியாயப்படுத்திக் கொண்டார்கள்.

Thangar Bachan

இந்நிலையில் யார் யாரைப்பார்த்து கேள்வி கேட்க முடியும்? அரசியலுக்குள் நுழையும்போது கடந்த காலங்களில் அவர்கள் எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் எவ்வளவு சொத்து வைத்திருந்தார்கள் என்பதெல்லாம் மக்களுக்கு தெரியாமல் இல்லை. அனைத்து தொழில்களையும் ஒழித்துவிட்டு அரசியல் தொழில் மட்டுமே இன்றைக்கு கொடி கட்டி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்பது மக்கள் எல்லோருமே தெரிந்ததுதான். வாழ்வாதாரத்தை இழந்து வருமானத்தை இழந்து மூன்று வேளை உணவை இரண்டு வேளையாக சுருக்கி, இருப்பதைக்கொண்டு ஊரடங்கில் உயிர் வாழும் மக்களிடமே நன்கொடை கேட்கும் அரசாங்கத்தை உலகத்தில் எங்கேயாவது கண்டிருக்க முடியுமா?

உயிர் பற்றிய கவலையை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஐந்து கிலோ அரிசிக்காக அதிகாலையே வந்து வரிசையில் இடம்பிடித்துக் காத்திருக்கிற மக்களைப் பார்த்தபிறகும் கூட எவ்வாறு ஈவு இரக்கமில்லாமல் இவ்வாறு செயல்பட முடிகிறது. ஒரே இரவில் பணமதிப்பிழப்பு சட்டத்தை உருவாக்கி மக்களின் சேமிப்பையெல்லாம் எடுத்துக்கொண்டவர்களுக்கு தேவைக்கு அதிகமான பணமும், மக்களிடமிருந்து ஊழல் செய்து திருடி கொள்ளையடித்த பணமும் எங்கெங்கே இருக்கிறது எனத்தெரியாதா? அவற்றையெல்லாம் அதே மாதிரி ஒரு சட்டம் இயற்றி பிடுங்கினால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு மக்களிடமிருந்து வரி வாங்காமலேயே சிறப்பான ஆட்சி நடத்தலாமே! மக்கள் பணம் 68 ஆயிரம் கோடியை பணக்கார முதலாளிகளுக்கு கடனாக கொடுத்துவிட்டு அந்த கடனை ஒரே அறிவிப்பில் தள்ளுபடி செய்து அதற்கு காரணமும் கூறுபவர்களை எந்த அரசியல்வாதிகளும் பெரிதாக கண்டுகொள்ளவில்லையே! கல்வி செலவுக்காக சிறுமி சேர்த்து வைத்திருந்த உண்டியலை உடைத்து நன்கொடை கொடுத்ததை தலைப்புச் செய்தியாக்கி நாட்டுப்பற்றை விதைக்க முனைகின்றவர்களின் செயல்கள் எவ்வளவு அவமானத்திற்குரியவை?

வருவாய் குறைந்து விட்டதற்காக முதலில் ஆந்திர அரசு தனது ஊழியர்களுக்கு இனி பாதி தொகை மட்டுமே மாத ஊதியம் என அறிவித்தது. அதை பின்பற்றி ராஜஸ்தான், ஒடிசா போன்ற மாநிலங்களும் அறிவித்தன. ஏற்கனவே ஜிஎஸ்டி பணம் மாநிலங்களுக்கு இல்லாமல் மத்திய அரசுக்கு சென்று விட்டது. அத்துடன் மத்திய அரசு அறிவித்த குறைந்த அளவிலான கோவிட் 19 உதவித்தொகையும் கூட முறையாக இன்னும் வந்து சேரவில்லை என்பதால் தமிழக அரசு பணப்பற்றாக்குறையால் திண்டாடுகிறது என்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். வேறு வழியில்லாத இந்த இக்கட்டான நிலையில் பிற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் ஊழியர்களுக்கான மாத ஊதியத் தொகையை ஏன் பாதியாக அறிவிக்க தயங்குகிறது எனபது புரியவில்லை.

தேவைக்கு அதிகமான ஊழியர்கள் பலதுறைகளில் பணியில் இருக்கிறார்கள். சுழற்சி முறையில் இரவு பகலாக பல துறைகள் இயங்குகின்றன. இரு பிரிவினருக்குமே ஒரே மாதிரியான ஊதியம் என்பதெல்லாம் சரியானது தானா? மொத்த வரிப்பணத்தில் முக்கால் பகுதி அரசு ஊழியர்களுக்கே ஊதியமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் நிலைமை சீராகும் வரைக்குமாவது ஊதியத் தொகையை வரைமுறை படுத்தினால் எவ்வளவோ தொகையை மிச்சப்படுத்தி அந்தப்பணத்தில் மக்களுக்கு இந்நேரத்தில் உதவலாமே!

இதைச் செய்யாமல் வருமானம் இல்லாததால் தான் மதுக்கடைகளை திறக்கிறோம் எனக் கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா? அரசு மருத்துவமனைகள் மட்டுமே கொரோனா நோயாளிகளை கையாளும் நிலையில் மேலும் 750 திருமணக்கூடங்கள் மருத்துவமனைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. மக்கள் வரிப்பணத்தில் மாத ஊதியம் பெறும் கடைநிலை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் முதற்கொண்டு முதலமைச்சர்கள், நீதிபதிகள், ஆளுநர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் வரை அவர்களின் குடும்பங்கள் உட்பட எவருமே அரசு மருத்துவமனைகளை திரும்பிக்கூட பார்ப்பதில்லை! ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே தான் அவைகள் என்பதால் பெயரளவிற்கு இயங்கி வருகின்றன. ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைய காத்திருக்கும் கொரோனா கிருமி இனி ஒருவரையும் விட்டு வைக்கப் போவதில்லை. எத்தனையோ குடும்பங்களில் புதிதாக பிறந்த குழந்தைகள் சிறுவர்கள் முதியோர்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இனி மேல் அவர்களெல்லாம் நோய்த் தொற்றுக்கு ஆளாவார்கள். ஏற்கனவே நம்மிடம் முறையான மருந்தும் இல்லை, மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், ஊழியர்களுக்குமே பற்றாக்குறை. இவர்களை எல்லாம் இனி எங்கே கொண்டு போய் படுக்க வைக்கப் போகிறார்கள்?

கடந்த நாட்களில் மதுக்கடைகளை மூடச் சொல்லி முதலில் அரசியல் கட்சிகள் போராடின. பின் அமைப்புகளும், இயக்கங்களும் போராடின. இறுதியாக வேறு வழியின்றி மக்களே வீதியில் இறங்கினார்கள். குடும்பம் நடத்த பணம் இன்றி, குடிநோயாளிகளாகி துன்புறுத்தும் கணவன் மற்றும் பிள்ளைகளால் பெண்களே களத்தில் இறங்கி போராடினார்கள். இனி அவர்களின் நிலை என்னவாக போகிறது? சமையல் எரிவாயு வாங்குவதற்கே அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் சரியாகிப் போனது. அரசு தந்த விலையில்லா பண்டங்கள் இந்த குடும்பங்களுக்கு எந்த மூலைக்கு எத்தனை நாட்களுக்கு உதவப்போகிறது?

வேலையிழந்து பணம் இல்லாத இந்த நடுத்தர ஏழை எளிய மக்களிடமிருந்து சுரண்டி வசம் கண்ட 30,000 கோடி தானே இப்பேர்ப்பட்ட கொலைக்கு சமமான செயலைச் செய்ய வைக்கிறது? ஏற்கனவே பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் காவல்துறை கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, விபத்துக்கள் போன்றவற்றையெல்லாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறதோ தெரியவில்லை?

பசியுடன் நாட்களை கடத்த போகும் இந்த தாய்மார்களை பிள்ளைகளை முதியோர்களை குடிநோயாளிகள் பணம் கேட்டு அடித்து துன்புறுத்துவார்கள். குடித்துவிட்டு கொரோனாவை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு அதன்பிறகும் துன்புறுத்துவார்கள். பண்ட பாத்திரங்கள் அடகு கடைக்கு போகும், கதறும் பெண்களின் தாலிகள் மஞ்சள் கயிறாக மாறும்!

மருத்துவத்திற்கும், வாழ்க்கை நடத்தவும் மக்களை அலையவிட்டு எத்தனை பிணங்கள் ஒரு நாளைக்கு விழுகிறது. எவ்வளவு பேருக்கு நோய் பரவி இருக்கிறது என்ற செய்தியைத்தான் நாள்தோறும் ஊடகங்கள் கொடுத்துக் கொண்டிருக்க போகின்றன?

எது நடந்தாலும் எதைச் செய்தாலும் மக்கள் மறந்து விடுவார்கள்! அதனால் தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என அரசியல்வாதிகள் கணக்கு போடலாம். அதற்கும் மக்கள் உயிரோடு இருந்தால்தான் முடியும். ஒரு வேளை அவர்களின் கணக்கு இப்படியும் இருக்கலாம்! பதிவாகின்ற வாக்குகளின் எண்ணிக்கையின் வித்தியாசத்தில் தானே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்பதால் மக்கள் தேர்தலில் வாக்களிக்கத் தேவையில்லாமல் போனாலும் பரவாயில்லை. வேட்பாளர்களின் குடும்பம் மட்டுமே வாக்களித்து மக்களாட்சி எனும் பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா? நிதி நெருக்கடியிலுள்ள தமிழகத்தை தனிப்பகை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தயவு செய்து மதுக்கடைகள் இயங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்! மக்களைக் காப்பாற்றுங்கள் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக்கும் மது எதிர்ப்பும் – அம்பலமாகும் அதிமுக திமுக கூட்டுச்சதி!

டாஸ்மாக்கும் மது எதிர்ப்பும் – அம்பலமாகும் அதிமுக திமுக கூட்டுச் சதி!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (07.05.2020) முதல் தமிழக அரசு நடத்தி வரும் மதுக் கடைகளான டாஸ்மாகை சென்னை தவிர்த்து இதர ஊர்களில் திறக்கவிருப்பதாக ஆளும் அதிமுக அரசு அறிவித்தது. அவர்களின் இந்த முடிவுக்கு கூட்டணிக் கட்சிகளான பா.ம.க, பா.ஜ.க, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளே எதிர்ப்பை தெரிவித்த நிலையில் பொதுமக்களும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி மற்றும் திமும தலைவருமான முக ஸ்டாலின் தனது இல்லத்தின் முகப்பிலேயே கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகப் பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தார். அவரை தொடர்ந்து அவரது கட்சிக்காரர்களும், கூட்டணி கட்சியினரும் அதே பாணியில் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதிமுக அரசு டாஸ்மாக்கை திறக்கப் போவதாக அறிவித்தவுடனேயே, திமுக தலைவர் ஸ்டாலின் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில். ஸ்டாலினுக்கு, உண்மையாக மக்கள் மீது அக்கறை இருந்தால், திமுக கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களின் மது ஆலைகளை மூட வலியுறுத்துவாரா, என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பியிருந்தார். இதே தொனியில் அதிமுகவைச் சேர்ந்தவர்களும், இன்னும் பிற மக்களும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இது குறித்து நாம் டாஸ்மாக்கின் அதிகார்வபூர்வ வலைத்தளத்தில் ஆராய்ந்த போது கீழ்க்கண்ட மது ஆலைகளிலிருந்து தான் மதுக்களைக் கொள்முதல் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது:

 Suppliers  
 DISTILLERIES  
Sl.No.Name of the DistilleriesLocation of the Manufacturing UnitPhone No.
1ENRICA ENTERPRISES PVT. LIMITEDNo.5, Bye Pass Road, Poonamallee, Chennai 600 05628202555
2MOHAN BREWERIES & DISTILLERIES LIMITEDNo.112, M.M. Nagar, Valasaravakkam, Chennai 600 08728291238
3SHIVA DISTILLERIES LIMITED45, Mettupalayam Road, Narasimha Naicken Palayam, Coimbatore 641 03128474300
4EMPEE DISTILLERIES LIMITEDMevaloorkuppam Village, Sriperumbudur Taluk, Kancheepuram Dist. 602 10528522510
5SOUTHERN AGRIFURANE INDUSTRIES LIMITED (SAFIL)Valuda Reddy Village, Villupuram District 605 60228475967
6MIDAS GOLDEN DISTILLERIES PVT. LIMITED2/207, Padappai, Pushpagiri Road, Sirumathur Village, Sriperumbudur Taluk, Kancheepuram Dist. 601 30128216465
7ACCORD BREWERIES AND DISTILLERIES LTDNathanallur Village, Kancheepuram Taluk & District 631 60528344195
8SNJ DISTILLERS PVT. LTD.56/1, Kallapiranpuram Village & Post, Madurantagam Taluk, Kancheepuram District 603 30824320706
9KALS DISTILLERIES PVT. LTD.Kallakkottai Village, Gandarvakottai Taluk, Pudukottai District 622 30224345254
10GOLDEN VATS PVT. LTD.Karnavur Village, Mannargudi Taluk, Tiruvarur District 614 01464524144
11KALS BEVERAGES PVT. LTD.SF.No.103/2, Mavuthampathi Village, Navakkarai (Post), Coimbatore 641 10528110187
 BREWERIES  
Sl.No.Name of the BreweriesLocation of the Manufacturing UnitPhone No.
1UNITED BREWERIES LTD. (ARANVOYAL)Mount Tiruvallur High Road, Aranvoyal Village, Thiruvallur District 602 02527621187
2MOHAN BREWERIES & DISTILLERIES LTD.No.112, M.M. Nagar, Valasaravakkam, Chennai 600 08728291238
3UNITED BREWERIES LTD. (KUTHAMBAKKAM)788/2, Kuthambakkam, Thirumazhisai, Thiruvallur District 602 10726811154
4SNJ BREWERIES LTD.,23, Moosivakkam, Padalam Kootu Road, Madurantagam Taluk, Kancheepuram District 603 30824320616
5KALS BREWERIES PVT. LTD.,Kunnathur Village, Illapur Taluk, Pudukkottai District.24345264
6APPOLLO DISTILLERIES PVT. LTD.,Billakuppam Village, Sidharaja Kandigai Post, Gummidipoondi Taluk, Thiruvallur District 601 20127997267
7ACCORD BREWERIES AND DISTILLERIES LTDElayanarvellore village, Kancheepuram Taluk,28346506

மேற்குறிப்பிட்டவற்றை இந்த இனைய முகவரியில் சரி பார்த்துக் கொள்ளலாம் : https://www.tasmac.co.in/suppliers.php

இதில் கோல்டன் வாட்ஸ் மற்றும் எலைட். இந்த இரண்டு ஆலைகளும் திமுக பிரமுகர்களான டி.ஆர்.பாலு மற்றும் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானதாகும். மேலும் எஸ்என்ஜே, கால்ஸ் மற்றும் இம்பெரியல் திமுகவிற்கு நெருக்கமான பிரமுகர்கள் நத்தும் மது ஆலைகளாகும்.

எனவே ஸ்டாலின் ஓர் அறிக்கை விட்டால் இதனை மூட செய்துவிடலாம் என அதிமுகவும், திமுகவின் மது ஆலைகளிலிருந்து அதிமுக அரசு ஏன் மது கொள்முதல் செய்ய வேண்டும் என ஒருவர் மாறி ஒருவர் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் பதிவொன்று உலா வருகிறது அது இவ்வாறு செல்கிறது :-

“மது உற்பத்தி ஆலைகள் எல்லாம் திமுகக்கு சொந்தமானது என்று கூறிக்கொண்டு வருவானுக பாருங்களேன்!

மது உற்பத்தி நிறுவனங்கள் திமுகவுக்கு சொந்தமானதா!!!???

சென்னை டிஸ்ட்ல்லரீஸ்…

இந்த மது ஆலை உரிமையாளர் பெங்களூரு தொழிலதிபராம்..! அவர் யார் தெரியுமா ? நம்ம விஜய் மல்லையா தாங்க…!! அவர் பெயரை குறிப்பிட மாட்டார்கள் ஊடக முதலாளிகள். திமுக என்றால் வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்..!

சென்னை டிஸ்ட்ல்லரீஸ், யுனைட்டட் ஸ்பிரிட்ஸ்…..

இந்த இரண்டு நிறுவனங்களும் விஜய் மல்லையாவுக்கு சொந்தமானவை. இதில் யுனைட்டட் ஸ்ப்ரிட்ஸ் 1862 ல் மெக்டவல் என்ற ஆங்கிலேயரால் சென்னை ஜார்ஜ் கோட்டைக்குள் துவங்கப்பட்டது. மது மற்றும் சிகரெட் தயாரிப்பு பிரதான தொழில். இந்த ஆலையை இந்திய சுதந்திரத்திற்கு பின் வாங்கியவர் விட்டல் மல்லையா. அவரின் இறப்புக்குப்பின் ஆலைக்கு பொறுப்பேற்றவர் நம்ம பிளே பாய் விஜய் மல்லையா. விஜய் மல்லையாவுக்கும் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கும் பல கொடுக்கல் வாங்கல்கள், அந்தப்புர இரகசியங்கள் நிறையவே உண்டு..!

மோகன் புருவரீஸ்…..

இந்த நிறுவன அதிபர் யார் என்றால் மருத்துவக்கல்லூரி உரிமையாளராம்..!! ஏன் அதை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி முதல்வர் ராமச்சந்திரா உடையார் & கோ என்று சொல்லக்கூடாதா..? சொன்னால் எம்.ஜி.ஆர், சுப்பிராம ரெட்டி என்ற ஆந்திர தொழிலதிபர் ( முன்னாள் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியின் காட்பாதர் ) இப்படி பல தொடர்புகள் வெளியே வருமல்லவா..?

ராமச்சந்திர உடையாரின் உறவினர் மாசிலாமணி நந்தகோபால், அவர் மகன்கள் அரவிந்த் நந்தகோபால், நடராஜன் நந்தகோபால் மற்றும் நடராஜன் நந்தகோபாலின் மனைவி ஷோபா ஆகியோர் நிர்வாகத்தில் உள்ள மோகன் புருவரீஸ்க்கு, ப்ரூடண்ட் டிஸ்டில்லரீஸ் மற்றும் கலிபோர்னியாவில் நந்தா ஒயின்ஸ் ஆகிய மது தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.

எம்பி புருவரீஸ்……

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் எம்.பி.புருஷோத்தமன். புருஷோத்தமனின் குடும்பம் நீண்ட காலமாகவே சர்க்கரை மில்களையும், மதுபான ஆலைகளையும் நடத்திவரும் குடும்பமாகும்.

புருஷோத்தமனுக்கு ஷாஜி என்றொரு மகன் உண்டு. அவர் மது போதையில் கார் ஒட்டி சென்னை அமைந்தகரையில் சிலர் மீது காரை ஏற்றியதில் ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்து விட ஷாஜியின் டிரைவர் தான் தான் காரை ஒட்டியதாக போலீசில் சரணடைய , உண்மை குற்றவாளி ஷாஜி மலேசியாவில் தஞ்சமடைய அவரை இண்டர்போல் போலீசார் கைது செய்ததாக தகவல் கிடைக்கிறது.

அப்பல்லோ……

இந்த நிறுவனம் , அப்போலோ டயர் நிறுவன குழுமத்தை சேர்ந்தது. அதன் தலைவர்களான ஓம்கா கன்வார் மற்றும் நீரஜ் கன்வார் எப்படி திமுக கட்சிக்கு தொடர்புள்ளவர்கள் என்று புரியவில்லை..!

எலைட் டிஸ்ட்லரீஸ் மற்றும் ஏஎம் புருவரீஸ்…….

இந்த நிறுவனங்களின் உரிமையாளர் ஜெகத் ரட்சகன். இவர் எம்.ஜி.ஆர். சாகும்வரை அதிமுகவில் இருந்து ஆர்.எம்.வீரப்பனின் வலது கரமாக செயல்பட்டவர். இவரின் எந்த தொழில் முன்னேற்றமும் திமுக வால் வந்ததில்லை, அதிமுகவில் இருந்த போதே வந்தவை..

கால்ஸ் டிஸ்டில்லரீஸ்……

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வாசுதேவன். காரைக்கால் பகுதியில் இயங்கும் ஜி.என்.எஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது கால்ஸ். வாசுதேவன் குடும்பம் மது விற்பனையில் நீண்ட அனுபவம் உள்ள குடும்பம். காங்கிரஸ் கட்சியோடு தொடர்பில் இருந்த வாசுதேவன் 2006 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டு அது மறுக்கப்பட்ட நிலையில் அவர் நிறுவனத்தை திமுக வுடன் முடிச்சு போடுகின்றனர்..! கால்ஸ் நிறுவனம் விஜய் மல்லையாவின் யுனைட்டட் ஸ்ப்ரிட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவுட்சோர்சிங்க் முறையில் அந்நிறுவனத்துக்கு மது உற்பத்தி செய்து கொடுக்கிறது. இது போக தங்களுக்கென்று தனி மது வகைகளையும் தயாரித்து விநியோகம் செய்கிறது..!

இம்பிரியல் ஸ்பிரிட்ஸ் அண்ட் ஒயின் பிரைவேட் லிமிட்டட்……

கோவையில் இயங்கும் இந்த மது ஆலையின் உரிமையாளர் தரணிபதி ராஜ்குமார். தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மருமகன்..! திமுக ஆட்சியில் தரணிபதி ராஜ்குமாரின் தந்தை கிருஷ்ணசாமி கவுண்டருக்கு தென்னை விவசாயிகள் நல வாரியத்தின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டதாம்..! அதனால் இந்த ஆலையை திமுக கணக்கில் சேர்க்கின்றனர்..! பொள்ளாச்சி மகாலிங்கம் யார் ..? எந்த கட்சி என்பது ஊரறிந்த ரகசியம்..!! தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்புலமாக இருந்தவர்..

சிவா டிஸ்டில்லரீஸ்……..

இந்த நிறுவனம் கோவையை சேர்ந்த பண்ணாரி அம்மன் குரூப் நிறுவனங்களுக்கு சொந்தமானது..! பண்ணாரி சர்க்கரை, நிதி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் நடத்தும் பாலசுப்பிரமணியம் சரவணன்தான் சிவா டிஸ்ட்டில்லரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்..!

மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ்……

அதிமுக வின் முன்னாள் போதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை சசிகலாவுக்கு சொந்தமானது என்று சொல்வார்கள். ஆனால் சசிகலாவை ஜெயலலிதா சில காலம் விலக்கி வைத்திருந்த போது மிடாஸ் மது ஆலையின் மேலாண்மை இயக்குனர் பாதவியை துக்ளக் சோ விடம் கொடுத்து வைத்தார் ஜெயலலிதா..! அந்த ஆலை சசிகலாவுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்திருந்தால் சசிகலா மீது வெறுப்பை உமிழும் சோவை எப்படி மேலாண்மை இயக்குனராக ஜெயலலிதாவால் நியமிக்க முடியும்..!

பொதுவாகவே சாராய கடைகள் ஏலம் என்றாலும், மது உற்பத்தி ஆலைகள் என்றாலும் அது அதிமுக தான். ஆனால் நம்மூர் ஊடகங்கள் மது ஆலைகள் திமுகவுக்கு சொந்தமானது என்று கட்டிவிட்ட கதைக்கு றெக்கை முளைத்து பறந்து கொண்டிருக்கிறது!” என நிறைவடைகிறது.

இவை அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தால் நமக்கு ஒன்று புரியும். அதிமுக, திமுக இவை இரண்டில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் ஒருவரை ஒருவர் வசை மாறி பொழிந்தாலும் கூட்டுச்சதியில் ஈடுபட்டு தங்களை வளப்படுத்திக் கொள்வதில் தான் மும்முரமாக இருக்கின்றனர்.

இதில் பாவம் திருவாளர் பொதுஜனமாகிய நாம் தான்.

சென்னையில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்த கோடம்பாக்கம்

சென்னையில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்த கோடம்பாக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வைக்கபட்டிருந்தாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே வருகிறது.ஆரம்பத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்து வந்த பாதிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.

ஆரம்பத்தில் தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு காரணமாக டெல்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் காரணமாக கூறப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக அதை முறியடிக்கும் வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதி அமைந்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டுமே இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக சென்னை ராயபுரத்தில் மட்டுமே அதிக பாதிப்புகள் இருந்த நிலையில் தற்போது அதை பின்னுக்கு தள்ளி திரு.விக.நகர் மற்றும் கோடம்பாக்கம் பகுதிகள் அதிகம் பாதிக்கபட்டவைகளாக மாறியுள்ளது.

Kodambakkam Reached Highest Corona Infection Rate in Chennai-News4 Tamil Online Tamil News
Kodambakkam Reached Highest Corona Infection Rate in Chennai-News4 Tamil Online Tamil News

இதுவரை சென்னையில் 2644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோடம்பாக்கத்தில் மட்டுமே 467 பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்த நிலையில் திருவிக நகரில் 448 பேர்களும்,ராயபுரத்தில் 422 பேர்களும்,தேனாம்பேட்டையில் 316 பேர்களும், அண்ணா நகர் பகுதியில் 206 பேர்களும், தண்டையார்பேட்டை பகுதியில் 184 பேர்களும், அடையாறு பகுதியில் 107 பேர்களும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் குறைந்தபட்சமாக மணலியில் 14 பேர்களும், சோழிங்கநல்லூரில் 15 பேர்களும் மற்றும் ஆலந்தூரில் 16 பேர்களும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட பகுதிகளான கோடம்பாக்கம்,திருவிக நகர் மற்றும் ராயபுரம் பகுதிகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

மீன் மற்றும் இறைச்சிக் கடைகளைத் திறக்க தடை விதித்த மாவட்ட ஆட்சியர் – மக்கள் ஆவேசம்

மீன் மற்றும் இறைச்சிக் கடைகளைத் திறக்க தடை விதித்த மாவட்ட ஆட்சியர் – மக்கள் ஆவேசம்

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இது வரை 3550 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 2255 பேருக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாகச் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையின் மூலம் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையே அதிகம். இதனையடுத்து மக்கள் கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேரூந்தகத்தில் இயங்கி வரும் மீன் விற்பனை கடைகளை 09.05.2020 அன்றும், மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து மீன் மற்றும் இறைச்சிக் கடைகளை 10.05.2020 அன்றும் திறக்க தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியரான வினய் உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிப்பது எந்த விதத்தில் சரி என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் “மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 9.5.2020 அன்று மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மொத்த மீன் விற்பனை செய்யும் கடைகளும், 10.5.2020 அன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் கடைகள், இறைச்சி கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய் இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை தொடர்ந்து தமிழக மக்களுக்கு வரும் அடுத்த சோதனை! தமிழக அரசு ஆலோசனை

0

கொரோனாவை தொடர்ந்து தமிழக மக்களுக்கு வரும் அடுத்த சோதனை! தமிழக அரசு ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் 3 ஆம் கட்டமாக ஊரடங்கு மே 17 வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அத்தியாவசிய சேவைகளை தவிர மற்ற தொழில்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவங்கள் செயல்படுவது நிறுத்தப்பட்டதால் அரசு மற்றும் பொது மக்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து தமிழகத்திலும் நேற்று முதல் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது, இது குடிமகன்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு தற்போதுள்ள ஊரடங்கால் அரசுக்கான வருவாய் குறைந்ததால் தான் இந்த நடவடிக்கை என்று காரணம் கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் வருவாய் இழப்பை சரி செய்யும் வகையில் பேருந்து கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதுள்ள ஊரடங்குக்குப் பின் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள ஊரடங்குக்குப் பிறகு பாதி பயணிகளோடு பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக பேருந்து கட்டணமும் உயர்த்துவது பற்றி அரசு முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னாள் எம்எல்ஏ மகன் விபத்தில் மரணம்

0

முன்னாள் எம்எல்ஏ மகன் விபத்தில் மரணம்

ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று பிறகு திமுக ஆதரவாளராக மாறினார்.

இந்த தேர்தலில் அவர் பாமகவின் சார்பாக போட்டியிட்ட மாவீரன் குரு என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்ட காடுவெட்டி ஜே குரு அவர்களை எதிர்த்து போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதது.

முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் அவர்களின் சொந்த ஊர் மீன்சுருட்டி அருகே உள்ள ராம தேவநல்லூர். இவரது மகன் ராஜ்கமல் குடும்பப் பணிகளைப் கவனித்து வந்துள்ளார்.இவர்களுக்குச் சொந்தமான பண்ணை வீடு, ஊருக்கு அருகில் உள்ளது.

அடிக்கடி இவர் அந்த பண்ணை வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு அந்தப் பண்ணை வீட்டிற்குக் காரில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் போது, அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் ராஜ்கமல் பலத்த காயம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

உயிர் கொல்லி கொரோனா… கலங்கும் உலக நாடுகள்… பலி எண்ணிக்கையால் நீளும் பட்டியல்..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 38 லட்சத்து 45 ஆயிரத்து 607 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 69 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 12 லட்சத்து 82 ஆயிரத்து 930 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

உயிர் கொல்லி கொரோனா... கலங்கும் உலக நாடுகள்... பலி எண்ணிக்கையால் நீளும் பட்டியல்..!!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 52,952 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 1,783 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 15,267 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 16,758/651
குஜராத் – 6,625/396
டெல்லி – 5,532/65
ராஜஸ்தான் – 3,317/92
மத்திய பிரதேசம் – 3,138/185
உத்தரபிரதேசம் – 2,998/60
தமிழ்நாடு – 4,829/35
தெலுங்கானா – 1,107/29
கேரளா – 503/04
ஆந்திர பிரதேசம் – 1,777/36
கர்நாடகா – 693/29
ஜம்மு & காஷ்மீர் – 775/08
மேற்கு வங்கம் – 1,456/144
பஞ்சாப் – 1,516/27
ஹரியானா – 594/07
பீகார் – 542/04
அசாம் – 45/01
சண்டிகர் -120/01
உத்தர்கண்ட் – 61/01
லடாக் – 41/0
அந்தமான் & நிக்கோபார் -33/0
சத்தீஸ்கர் – 59/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 45/02
ஒடிசா – 185/02
பாண்டிச்சேரி – 09/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 127/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 43/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 12/01
தாத்ரா நகர் ஹாவெலி – 01/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 35 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1,516 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

உயிர் கொல்லி கொரோனா... கலங்கும் உலக நாடுகள்... பலி எண்ணிக்கையால் நீளும் பட்டியல்..!!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஜூன், ஜுலையில் உச்சத்தை தொடும் – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குனர்

0

கொரோனா தொற்று ஜூன், ஜுலையில் உச்சத்தை தொடும் – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குனர்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ துவங்கி கொரோனா தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஓரளவிற்க்கு கொரோனா தொற்று கட்டுபாட்டில் இருந்தாலும், கடந்த இரண்டு வாரங்களாக பல பேருக்கு தொற்று பரவி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 52,952 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவும் வேகத்தை வைத்துப் பார்க்கும் போது, உச்சகட்ட தொற்று வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நிகழலாம் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறி உள்ளார்.

இன்று டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது இது குறித்து கொரோனா பாதிப்பு குறித்து பேசியவர் “நம்மிடம் இப்போது இருக்கும் புள்ளிவிவர மாதிரியின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், உச்சகட்ட தொற்றின் காலம் முன் பின் மாற வாய்ப்புள்ளது என்றும் கூறினார். அதே சமயம் ஊரடங்கை நீட்டித்துள்ளதால் கிடைக்கும் பலன், தொற்று பரவுவதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியனவும் உச்சகட்ட தொற்று காலத்தை முடிவு செய்வதில் முக்கிய இடத்தை வகிக்கும்” என தெரிவித்துள்ளார்.