Home Blog Page 5654

தொடரும் கொரோனா பாதிப்பு… பீதியில் உலக மக்கள்… கிடுகிடுவென உயரும் பட்டியல்..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 39 லட்சத்து 35 ஆயிரத்து 828 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 13 லட்சத்து 19 ஆயிரத்து 306 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

தொடரும் கொரோனா பாதிப்பு... பீதியில் உலக மக்கள்... கிடுகிடுவென உயரும் பட்டியல்..!!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 56,342 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 1,886 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 16,540 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 17,974/694
குஜராத் – 7,012/425
டெல்லி – 5,980/66
ராஜஸ்தான் – 3,427/97
மத்திய பிரதேசம் – 3,252/193
உத்தரபிரதேசம் – 3,071/62
தமிழ்நாடு – 5,409/37
தெலுங்கானா – 1,123/29
கேரளா – 503/04
ஆந்திர பிரதேசம் – 1,847/38
கர்நாடகா – 705/30
ஜம்மு & காஷ்மீர் – 793/09
மேற்கு வங்கம் – 1,548/151
பஞ்சாப் – 1,644/28
ஹரியானா – 625/07
பீகார் – 550/05
அசாம் – 54/01
சண்டிகர் -135/01
உத்தர்கண்ட் – 61/01
லடாக் – 42/0
அந்தமான் & நிக்கோபார் -33/0
சத்தீஸ்கர் – 59/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 46/02
ஒடிசா – 219/02
பாண்டிச்சேரி – 09/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 132/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 65/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 12/01
தாத்ரா நகர் ஹாவெலி – 01/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1,547 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிழப்பு! தேடுதல் வேட்டையில் காவல்துறை!

0

பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிழப்பு! தேடுதல் வேட்டையில் காவல்துறை!

வீட்டின் பின்புறம் பிளஸ் 2 மாணவி இறந்துகிடந்த சம்பவம் திருவாரூரில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார். இவருக்கு ஒரு மகனும், மெளனிகா என்ற மகளும் உள்ளனர். மெளனிகா பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு ஊரடங்கு காரணமாக விடுமுறையின் வீட்டில் இருந்து வந்துள்ளார். முந்தைய நாள் இரவு பாட்டி வீட்டில் உறங்கச் செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டின் பின்புறம் உள்ள வயல் பகுதியில் நேற்று சடலமாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை வயலுக்கு சென்ற கிராம மக்கள் மௌனிகாவின் சடலத்தை பார்த்து மிரண்டுபோய் காவல்துறைக்கும், அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற நன்னிலம் பகுதி காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மௌனிகா எதனால் இறந்தார் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. வீட்டின் பின்புறமே இறந்தகிடந்த சம்பவம் போலீசாருக்கு மர்மமான சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மௌனிகா உடலில் ஏராளமான காயங்கள் இருந்ததால் சந்தேகம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசாரால் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த பிளஸ் 2 மாணவி மௌனிகா ஒரு குறும்படத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திரெளபதி இயக்குனரிடம் வாங்கிக்கட்டிய திமுக உடன்பிறப்பு! வேண்டுமென்ற சீண்டியதால் மோகன் ஜி பதிலடி.!!

0

திரெளபதி இயக்குனரிடம் வாங்கிக்கட்டிய திமுக உடன்பிறப்பு! வேண்டுமென்ற சீண்டியதால் மோகன் ஜி பதிலடி.!!

திரெளபதி படத்தின் இயக்குனர் மோகனிடம் சமூக வலைத்தளத்தில் திமுக தொண்டர் ஒருவர் வேண்டுமென்றே சீண்டி வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.

தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் ஆதாரத்துடன் நாடக காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் திரெளபதி. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் போதே பலத்த வரவேற்பும் சில எதிர்ப்புகளும் இருந்து வந்தன. பின்னர் படம் வெளியாகி பொதுமக்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதுகுறித்த கருத்துகள் இன்னமும் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் பசி குறித்த ட்விட்டருக்கு இயக்குனர் மோகன் அவருடைய கருத்தை பதிவு செய்திருந்தார். அப்பதிவில் வேண்டுமென்ற இயக்குனரை சீண்டும் வகையில் திமுக தொண்டர் ஒருவர் “இரண்டு படம் எடுத்துவிட்டு இவரு பண்ணும் அலப்பரை தாங்க முடியல” என்று விமர்சித்து கூறியிருப்பதார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் திமுக தொண்டருக்கு இயக்குனர் மோகன் ஜி கூறியதாவது; படம் எடுத்தால் பேசக்கூடாதா எடுப்பதற்கு முன்பும் இப்படித்தான் பேசினேன், நாங்கள் வளர்ந்தால் உங்களுக்கு பிடிக்காதே என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவாதம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

காதலிப்போம்! கட்டியணைப்போம்! சரக்கு மிடுக்கு கும்பலை வெளுத்து வாங்கிய பாமகவினர்

0

காதலிப்போம்! கட்டியணைப்போம்! சரக்கு மிடுக்கு கும்பலை வெளுத்து வாங்கிய பாமகவினர்

கடந்த வருடம் இதே நாள் கடலூர் மாவட்டம் கறிவேப்பிலங்குறிச்சியில் தன்னை காதலிக்கவில்லை என்பதற்காக திலகவதி என்ற மாணவியை அப்பகுதியை சேர்ந்த ஒருவன் கொலை செய்தது அப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகளை பெற்றோர் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அந்த பெண் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிவடையும் நிலையில் குற்றவாளிக்கு இன்னும் தண்டனை வழங்காமல் இருப்பதை கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.  #ViolenceAgainstTNwomen என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அவர் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது.

இதே போல பாமகவின் மாநில தலைவர் G.K மணி அவர்களும் இது குறித்து கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

நாடக காதல் பற்றி படமெடுத்த திரௌபதி இயக்குனர் மோகன்.ஜி பதிவிட்டுள்ளதாவது

இதனையடுத்து பாமகவினர் #ViolenceAgainstTNwomen என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்களுடைய எதிர்ப்பை  தெரிவித்து அதை டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர். குறிப்பாக இதில் நாடக காதல் மூலமாக பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் மற்றும் அதற்கு ஆதரவாக செயல்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் குறித்த கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அவற்றில் சில பதிவுகள் உங்களின் பார்வைக்காக

இறந்தது மாற்று சாதிப்
பெண்ணாக இருந்திருந்தால்
இந்நேரம் அந்தக் குடும்பத்தில்
ஒருவருக்கு அரசு வேலையும்
ரூபாய் 1 கோடி இழப்பீடும்
வழங்க வேண்டும்னு போராடி
வாங்கி இருப்பானுங்க .!

காதலிப்போம்… காதலிப்போம் கவுண்டர் பெண்ணை காதலிப்போம்…
கட்டியணைப்போம் கட்டியணைப்போம் முதலியார் பெண்ணை கட்டியணைப்போம். திருமணம் செய்வோம் திருமணம் செய்வோம். வன்னியர் பெண்ணை திருமணம் செய்வோம். கலப்பு திருமணம் செய்வோம். சாதி ஒழிப்போம் சாதி ஒழிப்போம். எங்கள் அண்ணன் வழியில் வழி நடப்போம்”என விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு முன் கூடி சூளுரைத்த வீடியோவும் அதில் பகிரப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன் பேசிய சரக்கு மிடுக்கு சர்ச்சை கருத்தை பதிவிட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

https://twitter.com/qflL6xXjuZ8pB1o/status/1258670150586417152?s=19

எங்களை காதலிக்க மறுத்தால் கொள்வோம் என ஒருவர் பதிவிட்டுள்ளதையும் ஆதாரமாக வைத்து விமர்சித்துள்ளனர்.

https://twitter.com/Kumar93344289/status/1258759489425035264?s=19
https://twitter.com/Kumar93344289/status/1258759641460162560?s=19
https://twitter.com/Kumar93344289/status/1258759687983386624?s=19
https://twitter.com/Kumar93344289/status/1258759269018513408?s=19

இந்த தேதியிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு!

இந்த தேதியிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு!

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் 24-தேதியில் இருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை.

துப்புரவுப் பணியாளர்கள், அத்தியாவசிய அரசு வேலை புரிபவர்களுக்கு மட்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் மே 17ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ளதால் அன்று முதல் பேருந்துகளை இயக்கும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு போக்குவரத்துக் கழகங்களுக்குத் தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் போக்குவரத்து கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் “தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகளுடன் அரசு பஸ்களை இயங்க தயாராக இருக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒட்டுனர், நடத்துனர்களுக்கு முக கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி திரவம் வழங்கப்படும்.

பேருந்து இயக்குவதற்கு முன் ஓட்டுனர், நடத்துனர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பயணிகள் இருக்கையில் அமர “மார்க்” செய்ய வேண்டும். பேருந்தில் நின்று பயணம் செய்தால் போதிய இடைவெளி அவசியம். கட்டாயம் பேருந்தின் ஜன்னல் திறந்திருக்க வேண்டும். பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.

அதிக கூட்டம் கூடாதவாறு பயணிகள் 6 அடி இடைவெளியில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும்.

பேருந்தில் பயணம் செய்ய வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். தவறினால் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது. பொதுமக்கள் வரிசையில் நின்று பேருந்துகளில் ஏறுவதை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல் கூகுல்பே, இ-பே போன்றவை மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். முடிந்தளவு மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம்.

பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகள் இயக்க திட்ட மிடும்போது இது போன்ற நடவடிக்கை பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து மண்டலங்களும் இதை கவனமுடன் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா பாதிப்பில்லாத இடங்களில் 50% இருக்கை வசதியுடன் பேருந்துகள் இயக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா கட்டுக்குள் வரும் வரை குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகள் இயக்கப்படாது என்று கூறப்படுகிறது.

ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது – உயர்நீதி மன்றம் அதிரடி

ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது – உயர்நீதி மன்றம் அதிரடி

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடை திறக்கும் என அறிவிக்கபட்டிருந்தது.அறிவிக்கப்பட்டது போலவே சென்னையை தவிர தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில்,கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், நாளை ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 போலீசார் மற்றும் 4 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும், மதுவாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. முதல்நாள் முடிவில் சுமார் 170 வசூலானது. பல இடங்களில் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வரும் வரை தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூட வேண்டும் எனவும் ஆன்லைனில் மது விற்பனை செய்யலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் நிபந்தனைகள் மீறப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றம் மேற்கண்ட அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு? அதிர்ச்சியளிக்கும் தகவல்

0

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு? அதிர்ச்சியளிக்கும் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் திடீரென்று சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இவ்வாறு தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வது பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 600 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 6,000 மேல் தாண்டியுள்ளது.

கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சி! மத்திய அரசை எதிர்க்க அதிமுகவிடம் ஸ்டாலின் கோரிக்கை

கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சி! மத்திய அரசை எதிர்க்க அதிமுகவிடம் ஸ்டாலின் கோரிக்கை

கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சியாக மாநில உரிமைகளை பறிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று அதிமுக அரசிடம் திமுக தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

“கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சியாக, மாநில உரிமைகளை முழுமையாகப் பறிக்கும் விதத்திலும் – “பொதுப்பட்டியலில்” உள்ள “மின்சாரம்” தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே அபகரித்துக் கொள்ளும் உள்நோக்கத்துடனும் – “2020-ம் ஆண்டு புதிய மின்சார திருத்தச் சட்டத்தைக்” கொண்டு வரும் மத்திய பா.ஜ.க அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2014, 2018 ஆகிய ஆண்டுகளில் முயற்சி செய்து தோற்றுப் போன இந்தத் திருத்தச் சட்டத்தை, மாநிலங்கள் எல்லாம் கொரோனா நோய்த் தொற்று பேரிடரைச் சமாளிக்கும் “உயிர்காக்கும்” முயற்சியில் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், கொண்டு வந்து – கருத்துக் கேட்பது மிகுந்த கவலையளிக்கிறது.

கொரோனாவிலிருந்து மனித உயிர்களைக் காக்கும் முயற்சிகள் குறித்தோ, ஸ்தம்பித்து – மூச்சுத் திணறி – ஊசலாடிக் கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியோ, கிஞ்சித்தும் கவலைப்படாமல் – அதிகாரப் பசியில் இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றிட மத்திய பா.ஜ.க. அரசு முனைவது வேதனையளிக்கிறது.

சுமூகமான மத்திய – மாநில உறவுகளை அடியோடு வெறுக்கும் ஒரு பிரதமராக – அடுத்தடுத்த அதிகாரப் பறிப்புகள் மூலம் நரேந்திர மோடி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது – “நாம் அனைவரும் இந்திய மக்கள்” (We the people of India) என்று அரசியல் சட்டம் வகுத்துள்ள கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது.

“ஆமாம் சாமி” போட்டு நழுவிவிடக் கூடாது- புதிய மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

புதிய மின் திருத்தச் சட்டத்தில் – “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேசியக் கொள்கையை மத்திய அரசே வகுக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களெல்லாம் இனி மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்குத் தலைவர், உறுப்பினர்களைக் கூட இனிமேல் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் “தேர்வுக் குழுவே” தேர்வு செய்யும்.

இந்த ஐந்து பேர் கொண்டு தேர்வுக் குழுவில் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களில் இருவர் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்களுக்கும் கூட ஒரு வருடப் பதவிக்காலம் கொடுக்கப்பட்டு – மாநிலங்களின் பெயர் அகரவரிசைப்படி (Alphabetical) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.

உதாரணத்திற்கு, முதல் தேர்வுக்குழுவில் ஆந்திரா மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலாளர்கள் இடம்பெறுவார்கள் என்றால் – அடுத்ததாக “T” பெயர் வரிசையில் வரும் தமிழ்நாடு இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு இந்த தேர்வுக்குழுவில் இடம்பெறவே முடியாது!

ஒருவேளை தமிழ்நாட்டில் உள்ள மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந்தால் – தமிழ்நாடு ஆணையத்தின் பணியை வேறொரு மாநிலத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கவனிக்க மத்திய அரசு உத்தரவிடலாம் என்று இன்னொரு பிரிவு கூறுகிறது. இது என்ன கூத்து? ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை இன்னொரு மாநிலம் எப்படிக் கவனிக்க முடியும்?

“ஆமாம் சாமி” போட்டு நழுவிவிடக் கூடாது- புதிய மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

ஏற்கனவே “மின்வாரியத்தைப் பிரித்து” “மின்கட்டணம்” நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து – மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பறித்துக் கொடுத்த மத்திய அரசு, தற்போது இந்த ஆணையத்தைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டிலேயே எடுத்துக் கொள்வது, ஆபத்தான “அதிகார” விளையாட்டு!

“இனிமேல் மின்சார மானியங்களைப் படிப்படியாகக் குறைத்து அதற்கான பணத்தை நேரடியாகச் சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு வழங்கிட வேண்டும்” என்று கொண்டு வரப்படும் சட்டத் திருத்தம் – கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் கொண்டுவந்த விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை – நடுத்தர மக்களுக்கு நூறு யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

அதுமட்டுமின்றி “மின் கொள்முதல், மின் விற்பனை, மின்சாரத்தை அனுப்புதல்” உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களை, இனிமேல் மத்திய அரசின் கீழ் அமைக்கப்படும் “மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம்” (Electricity Contract Enforcement Authority) ஒன்றே தீர்வு காணும் என்பதும் – மாநிலங்களுக்கு எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லாமல் இப்படியொரு ஆணையத்தை உருவாக்குவதும், மாநிலங்களிடம் இருக்கின்ற அதிகாரத்தையும் “எள்ளி நகையாடும்” போக்காகும்.

நமது அரசியல் சட்டப்படி “மின்சாரம்” பொதுப்பட்டியலில் (Entry 38) இருக்கிறது. “மின் நுகர்வு மீதான வரி, மின் விற்பனை மீதான வரி விதிக்கும் அதிகாரம்” மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் (Entry 54) உள்ளது. இப்போது கொண்டு வரும் புதிய மின்சாரச் சட்டத் திருத்தம் 2020-ன் மூலம், மாநிலத்திற்கு என்றே வழங்கப்பட்டுள்ள தனி அதிகாரத்தையும் – பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரத்தையும் மத்திய அரசே எடுத்துக் கொள்ளும் ஆணவப் போக்காகும்.

மறுபடியும் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்யவே பா.ஜ.க.,விற்கு மக்கள் வாக்களித்தார்களே தவிர – இப்படியொரு அதிகார வேட்டையாடி, மாநில உரிமைகளையும் மாநிலங்களையும் கபளீகரம் செய்வதற்கல்ல!

“நமது நாட்டில் மாநிலங்கள் தேவையில்லை. கூட்டாட்சி தத்துவத்தை வழங்கியுள்ள அரசியல் சட்டம் தேவையில்லை” என்ற முடிவிற்கு, “பெரும்பான்மை இருக்கிறது” என்ற ஒரே அகங்காரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

கடந்த ஏப்ரல் 17-ம் தேதியே கருத்துக் கேட்கப்பட்டு – கொரோனோ பேரிடரின் காரணமாக தற்போது 05.06.2020 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலில் மறுத்து விட்டு – பிறகு உதய் திட்டத்தில் அ.தி.மு.க அரசு கையெழுத்திட்டதால் “மின்கட்டண உயர்வு” “மின் வாரியத்திற்கு மீண்டும் இழப்பு” “விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு ஆபத்து” என்று பல்வேறு நெருக்கடிகளைத் தமிழகம் அனுபவித்து வருகிறது. அந்த “கையெழுத்து” குறித்து அப்போதே சட்டமன்றத்தில் எடுத்துரைத்து இந்த ஆபத்துகளை எல்லாம் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

“ஆமாம் சாமி” போட்டு நழுவிவிடக் கூடாது- புதிய மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

“உதய் திட்டத்திற்கு” அன்று அ.தி.மு.க. போட்ட கையெழுத்து, இன்றைக்கு “புதிய மின்சாரத் திருத்தச் சட்டம்” என்ற அடுத்தகட்ட ஆபத்தாக வந்திருக்கிறது.

ஆகவே, மின்சாரத்தை “மத்திய அரசு மயமாக்கும்” இந்த கருப்புச் சட்டமான “புதிய மின்சார திருத்தச் சட்டம்” 2020-ஐ அ.தி.மு.க அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அ.தி.மு.க அரசு, காயம் ஏற்படாமல் தன்னைக் காத்துக்கொள்வதற்காக எப்போதும் செய்வதைப்போல் இப்போதும், “ஆமாம் சாமி” போட்டு நழுவிவிடக் கூடாது என்று நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மாநில உரிமைகளைக் காப்பாற்றி, கூட்டாட்சித் தத்துவத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதில் ஆர்வமும் நம்பிக்கையும் உள்ள பா.ஜ.க அல்லாத மாநில அரசுகள் அனைத்தும் இந்த சட்டத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மாநிலங்களை ஓரங்கட்டி, அதிகாரங்களை மையப்படுத்திக் கொள்ளும் அடுத்தகட்டமான இந்தச் சட்டத் திருத்தத்தை, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பயிற்சியின் போது இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து

0

பயிற்சியின் போது இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் – 29 ரக விமானம் பஞ்சாப் மாநிலம் நவன்ஷார் அருகே தொழில்நுட்ப கோளாறால் விபத்துக்குள்ளகியுள்ளது. இந்த விமானத்தை ஓட்டி சென்ற விமானி விமானத்தில் இருந்து குதித்து உயிர் பிழைத்தார் என்றும் கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள விமானப்படை தளத்திலிருந்து, மிக்-29 ரக போர் விமானம் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட அந்த விமானத்தில் ஒரு பைலட் மட்டும் பயணித்துள்ளார். இதனையடுத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சுகார்பூர் கிராமத்திற்கு மேலே பறந்தபோது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து கீழே சென்ற விமானம் சிறிது நேரத்திலேயே வயல்வெளியில் விழுந்தது. இந்நிலையில் விமானம் தரையை தொடுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பே, அந்த விமானத்தை ஓட்டி சென்ற பைலட் பாராசூட் மூலம் வெளியே குதித்துள்ளார்.

IAF Mig-29 fighter jet crashes in Punjab-News4 Tamil Online Tamil News
IAF Mig-29 fighter jet crashes in Punjab-News4 Tamil Online Tamil News

இதனால் விமானத்தில் பயணித்த விமானி காயங்களுடன் உயிர்தப்பினார். இதனையடுத்து கீழே விழுந்த விமானம் சிதறி தீப்பிடித்து எரிந்துள்ளது. கீழே குதித்த விமானியை ஹெலிகாப்டர் மூலமாக மீட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை 10.40 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் கார்க் தெரிவித்தார். மேலும், விமானி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தமிழக அரசிடம் கேள்வியெழுப்பிய கமல்ஹாசன்

0

ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தமிழக அரசிடம் கேள்வியெழுப்பிய கமல்ஹாசன்

கொரோனா வைரசின் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அதை வரும் மே 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் தமிழக அரசிற்கு வருவாய் ஆதாரமாக உள்ள டாஸ்மாக் நிறுவனமும் அடங்கும்.

இந்நிலையில் மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை காரணமாக காட்டி தமிழகத்திலும் சென்னையை தவிற மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதனை எதிர்த்து அரசியல் தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்த தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் #தாங்குமா தமிழகம் என்ற ஹேஷ்டாக் டிரெண்டானது.
இந்நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் இந்த டேக்கை பயன்படுத்தி ட்விட் செய்து உள்ளார்

அவர் வெளியிட்டு உள்ள அந்த ட்விட்டர் பதிவில்
“மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்துவிட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.