Home Blog Page 5656

கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து மூலம் பரிசோதனை – மத்திய அரசு

கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து மூலம் பரிசோதனை – மத்திய அரசு

கடந்த மார்ச் மாதம் பரவ துவங்கிய கொரோனா தொற்று உலகெங்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுபட்டுத்த உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேல், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அதில் ஓரளவுக்கு வெற்றி கண்டிருப்பதாகக் கூறினாலும், மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வர இன்னும் 2 மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

தற்போதைக்கு அறிகுறி சார்ந்த மருத்துவத்தை அனைத்து நாடுகளும் மேற்கொண்டு சமாளித்து வரும் நிலையில் ஆயுர்வேத மருந்துக்கு புகழ்பெற்ற நம் நாட்டில் ஆயுர்வேத மருந்துகள் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தவோ, குண்டப்படுத்தவோ முடியுமா என்ற முயற்சியில் ஈடுபடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக கொரோனா பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் பணியாற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு இன்று முதல் ஆயுர்வேத மருந்துகள் கொடுக்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து “அஸ்வகந்தா, யஷ்டிமாடு, குடுச்சி பிப்பாலி, போன்ற ஆயுஷ் மருந்துகள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பணிபுரிபவர்களுக்குக் கொடுக்கப்பட்டு இன்று முதல் மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கியுள்ளன. ஐ.சி.எம்.ஆரின் தொழில்நுட்ப உதவியுடன் ஆயுஷ் அமைச்சகம், சுகாதார அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூட்டு முயற்சியான இதனை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் (CSIR) உதவியோடு செயல்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கைவிடப்படுகிறதா இந்தியன் 2! – உண்மை நிலவரம் என்ன?

0

கைவிடப்படுகிறதா இந்தியன் 2? – உண்மை நிலவரம் என்ன?

1996ம் ஆண்டு AM ரத்னம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல், மனிஷா கொய்ரலா, ஊர்மிளா ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘இந்தியன்’.

தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற இப்படம் தெலுங்கு, இந்தி எனப் பிற மொழிகளிலும் மொழிமாற்ற செய்யப்பட்டு, அதிலும் பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு 2017ல் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. படத்தினை தெலுங்கு தயாரிப்பாளரானதில் ராஜு தயாரிக்க, ஷங்கர் இயக்க, கமல் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகும் எனக் கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் தில் ராஜு படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலக, ரிலையன்ஸ், லைகா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஷங்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

லைகாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட 250 கோடியில் இப்படத்தினை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்த செய்யப்பட்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதிலிருந்தே தொடர்ந்து தடங்கல்களைச் சந்தித்து வந்ததால் இன்னும் படத்தின் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் நடைபெற்றபோது அதில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட இரண்டு உதவி இயக்குநர்கள், இரண்டு ஃபெப்சி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். இதனையடுத்து படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது சி.பி.ஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரும்ப எப்பொழுது படப்பிடிப்பைத் துவங்க முடியுமென்று தெரியாமல் தவிப்பில் இருக்கிறார் ஷங்கர்.

இதற்கிடையே லைகா சமீபத்தில் தயாரித்த எந்த படங்களும் சரியாகப் போகாத நிலையில் கடும் நிதி நெருக்கடியில் அந்த நிறுவனம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தினை கைவிடும் முடிவிற்கு வந்துள்ளதாம். இதனை ஷங்கரிடமும் தெரியப்படுத்தி விட்டார்களாம்.

இதனால் இப்படத்தினை கைமாற்ற ரிலையன்ஸ், சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். கமலின் அரசியல் நிலைப்பாட்டால் வேறு எந்த தயாரிப்பாளர் இப்படத்தினை தயாரிக்க முன் வந்தாலும் அரசு சிக்கலை ஏற்படுத்தும் என கணக்கிடும் ஷங்கர், சன் பிக்சர்சிடம் இப்படத்தைக் கைமாற்றி விடும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

க்கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் ‘இந்தியன் 2’ என்ற அறிவிப்பு வரும் அடித்து கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

சலூன்கள் திறக்க அனுமதி – அடேங்கப்பா நிபந்தனைகள்

0

சலூன்கள் திறக்க அனுமதி – அடேங்கப்பா நிபந்தனைகள்

தலைப்பைப் பார்த்தவுடன், ஆவலுடன் படிக்க வந்திருப்பீர்கள். ஆனால் இவை இங்கே இல்லை நெட்டிசன்களே.

நாடு முழுவதும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக முடி திருத்தும் நிலையங்களும், அழகு நிலையங்களும் திறக்கப்படாததால், மக்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள். நமது நாட்டின் பிரச்சினையாக மட்டும் இது இருக்கவில்லை. உலக அளவிலான பிரச்சினையாக இது உருவெடுத்துள்ளது. அழகுபடுத்திக் கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இந்த பிரச்சினை அதிகரித்த நிலையில், மக்களின் மன நிலையை உணர்ந்து ஜெர்மனி, ஸ்பெயின், டென்மார்க் உள்ளிட்ட சில நாடுகள் நிபந்தனைகளுடன் முடிதிருத்தக்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளன. ஊரடங்கைத் தளர்த்துவதற்கான முதற்கட்ட அறிவிப்பிலேயே, இதற்கான அனுமதியை ஜெர்மனி அளித்துள்ளது.

ஜெர்மனியில் முடிதிருத்தக கடைகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்:

  • முன்பதிவின் அடிப்படையிலேயே வாடிக்கையாளர்கள் முடிதிருத்தகங்களுக்கு வர வேண்டும்.
  • முடிதிருத்தகத்துக்குள் நுழையும் முன்பாக வாடிக்கையாளர்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
  • முடிதிருத்தகங்களில் வாடிக்கையாளர்கள் யாரும் காத்திருக்கக் கூடாது.
  • முடிதிருத்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வாடிக்கையாளருக்கும், முடிதிருத்துபவருக்கும் இடையே ஒன்றரை மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
  • வாடிக்கையாளரும், முடிதிருத்துபவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • இருவரும் நேருக்கு நேர் பேசக்கூடாது. முடி எந்த ஸ்டைலில் திருத்தப்பட வேண்டும் என்பது குறித்தும், எந்த கலர் ஹேர் டை அடிக்க வேண்டும் என்பது குறித்தும் பேச வேண்டியது இருந்தால், கண்ணாடி மூலமாக இருவரும் மிகக் குறைவாகப் பேசிக் கொள்ளலாம்.
  • ட்ரையர் மூலமாக முடியை உலர்த்தக் கூடாது.
  • வெளிக்காற்று நன்றாக வரக்கூடியதாகவும், இட வசதி நிறைந்ததாகவும் முடி திருத்தும் நிலையம் இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் கத்தரிக்கோல் உள்ளிட்ட உபகரணங்களும், வாடிக்கையாளர் அமரும் இருக்கையும் கிருமிநாசினி கொண்டு முழுமையாகச் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
  • வாடிக்கையாளர்களுக்காகப் பயன்படுத்தப்படும் துணிகள் அனைத்தும் ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் நன்றாகத் துவைக்கப்பட வேண்டும். அல்லது ஒரு பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கி எறியக் கூடியதாக அவை இருக்க வேண்டும்.
  • ஜெர்மனியின் நிபந்தனை இவ்வாறு இருக்க, வழக்கமான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் 30 சதவீதத்திற்கு மட்டுமே சேவை அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை ஸ்பெயின் விதித்துள்ளது.

‘ஆரோக்கிய சேது’ இல்லாவிட்டால் அபராதம்!

‘ஆரோக்கிய சேது’ இல்லாவிட்டால் அபராதம்!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருவதால், கரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க, ‘ஆரோக்கிய சேது’ செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதில் கரோனா வைரஸ் தொற்று உடையவர்களுடன் நாம் தொடர்பில் இருந்தோமா என்ற விவரத்தை இந்த செயலி தெரிவிக்கும்.அதன் மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். இந்தியாவில் இனி தயாரிக்கவிருக்கும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களிலும் ‘ஆரோக்கிய சேது’ கண்டிப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு ஸ்மார்ட் ஃபோன்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், டில்லி அருகிலிருக்கும் நொய்டாவில் ‘ஆரோக்கிய சேது’ பயன்படுத்துவது அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து நோய்டா சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் அகிலேஷ் குமார் “நொய்டாவில் வசிப்போர் ஸ்மார்ட்போனில் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்யாதவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டத்தின்படி ரூ.1000 அல்லது 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நொய்டாவைத் தொடர்ந்து மற்ற நகரங்களிலும் ‘ஆரோக்கிய சேது’ அத்தியாவசியமாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு செய்ய வேண்டிய மிகப்பெரிய பணி இது தான்! ஆலோசனை வழங்கிய ராமதாஸ்

0

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு செய்ய வேண்டிய மிகப்பெரிய பணி இது தான்! ஆலோசனை வழங்கிய ராமதாஸ்

கொரோனா பாதிப்பானது முன்பை விட அதிகரித்துள்ள நிலையில் அடுத்ததாக தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்து இன்று “கொரோனா தடுப்பு: மண்டலவாரியான திட்டங்கள், சிறப்பு அதிகாரிகள் தேவை!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலில் நேற்று புதிய உச்சம் எட்டப்பட்டிருக்கிறது. சென்னையில் 324 பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் 771 பேர் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். புதிய நோய்த்தொற்றுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

சென்னையில் ஏற்படும் புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை முதலில் ஒற்றை இலக்கங்களிலும், பின்னர் இரட்டை இலக்கங்களிலும் இருந்த நிலை மாறி, கடந்த வாரத்தில் நூற்றுக்கும் அதிகமாக உயர்ந்தது. அந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் பயனளிக்காமல், கடந்த சில நாட்களாக புதிய தொற்றுகள் இருநூறுகளைக் கடந்து, நேற்று முந்நூறைத் தாண்டி 324 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல், மாநில அளவிலான தொற்றுகளின் எண்ணிக்கை முந்நூறுகளையும், பின்னர் ஐந்நூறுகளையும் கடந்து இப்போது எழுநூறைத் தாண்டியுள்ளது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் தான் புதிய தொற்றுகள் அதிகமாக நிகழ்ந்து வருகின்றன. அதற்கான முதன்மைக் காரணங்களில் குறிப்பிடத் தக்கது கோயம்பேடு சந்தையில் கட்டுப்பாடற்ற கூட்டத்தால் ஏற்பட்ட நோய்ப்பரவல் என்பதில் ஐயமில்லை.

கோயம்பேடு சந்தையிலிருந்து உருவான நோய்ப்பரவல் சுமார் 10 மாவட்டங்களில் கடுமையாக இருக்கும் நிலையில், மீதமுள்ள மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் இருப்பது மனநிறைவளிக்கிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து நோயர்களும் குணமடைந்து விட்ட நிலையில், அந்த இரு மாவட்டங்களும் இப்போது கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களாக உருவெடுத்துள்ளன. நாகையில் ஒருவர், தூத்துக்குடி, திருப்பூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தலா மூவர், கரூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா நால்வர், திருவாரூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 6 பேர், நெல்லை மாவட்டத்தில் எழுவர், தேனி மாவட்டத்தில் 8 பேர், இராமநாதபுரத்தில் 9 பேர், திருச்சி மாவட்டத்தில் 10 பேர் என தமிழகத்தின் 19 மாவட்டங்களில், அதாவது பாதிக்கும் அதிகமான மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாகவே உள்ளது. இந்த மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாகவே மருத்துவமனைகளில் உள்ளோர் எண்ணிக்கை 78 பேர் தான் என்பது ஆறுதலையும், கொரோனா நோய்த்தடுப்பு முயற்சிகள் வெற்றிகரமாக முன்னேறுகின்றன என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

ஒரு சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலின் எண்ணிக்கை மிக அதிகமாகவும், வேறு சில மாவட்டங்களில் மிகவும் குறைவாகவும் இருக்கும் நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே அணுகுமுறையை கடைபிடிக்கத் தேவையில்லை. எந்தெந்த மாவட்டங்களில் நோய்ப்பரவல் வேகம் அதிகமாக உள்ளதோ, அந்த மாவட்டங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த 26 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், கோயம்பேட்டில் ஏற்பட்ட பரவல் மூலம் 298 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், சென்னையில் ஏப்ரல் 30&ஆம் தேதி வரை 906 பேர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டிருந்த நிலையில் கோயம்பேடு தொற்று கண்டறியப்பட்ட கடந்த 6 நாட்களில் மட்டும் 1422 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களையும், ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடையாதவர்களையும் சேர்த்து மொத்தம் 1975 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் 216 பேர், விழுப்புரம் மாவட்டத்தில் 133 பேர், செங்கற்பட்டு 93 பேர் என முதல் 5 மாவட்டங்களில் மட்டும் 2715 பேர் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக மருத்துவமனைகளில் உள்ள 3275 பேரில் இவர்களின் அளவு மட்டும் 83% ஆகும். அடுத்த நிலையில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய மாவட்டங்களையும் கணக்கில் கொண்டால், அம்மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 3018 பேர், அதாவது 93 விழுக்காட்டினர் சிகிச்சை பெருகின்றனர்.

கொரோவால் அதிகம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட 10 மாவட்டங்களில் தான் நொய்த்தடுப்பு பணிகளில் கூடுதல் கவனமும், தீவிரமும் காட்டப்பட வேண்டும். இவற்றில் சென்னை மாவட்டத்தில் மட்டும் கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கான சிறப்பு பொறுப்பு அதிகாரியாக ஜே. இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல், கடலூர், விழுப்புரம், அரியலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு திறமையான, சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த காலங்களில் பணியாற்றி அப்பகுதிகளின் சமூக கலாச்சாரங்களை அறிந்த மூத்த அதிகாரிகளை கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவற்றுக்கெல்லாம் மேலாக தமிழக அரசு செய்ய வேண்டிய மிகப்பெரிய பணி மதுக்கடைகள் திறக்கப் படாமல் உறுதி செய்வது தான். நோய்ப்பரவலைத் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எவ்வளவு சிறப்பாக செய்தாலும் கூட, மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அத்தனையும் பயனின்றி போய்விடும். எனவே, கொரோனா நோய்ப்பரவல் தடுப்புப் பணிகள் வெற்றி பெறுவதற்கு வசதியாக தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கும் முடிவை கைவிட வேண்டும்; திறக்கப்பட்ட கடைகளை உடனே மூட வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்கிறதா? பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலக்கம்

0

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்கிறதா? பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலக்கம்

இந்தியாவிற்கு எதிராக காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத செயல்களை தூண்டிவிட்டு வரும் பாகிஸ்தான் தற்போது இந்தியாவின் மீது வித்தியாசமான குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

இந்தியாவிற்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு அங்குள்ள உள்ளூர் பிரச்சினை தான் காரணம் என்றும், அதற்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா பாகிஸ்தான் மீது பொய்யான காரணங்களை காட்டி அந்நாட்டின் மீது போர் நடவடிக்கையை துவக்க திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது.

இந்திய ஆக்கிரமிப்பு என்பது இந்தியாவின் ஒடுக்குமுறை மற்றும் காஷ்மீர் மிருகத்தனத்தின் நேரடி விளைவாகும். ஆர்.எஸ்.எஸ்-பாஜக இணைப்பின் பாசிச கொள்கைகள் கடுமையான ஆபத்து நிறைந்தவை. இந்தியாவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் தெற்காசியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பை பாதிப்பதற்கு முன்பாக சர்வதேச சமூகம் செயல்பட வேண்டும்.

இவ்வாறு பாகிஸ்தானை குறிவைத்து ஒரு தவறான போர் நடவடிக்கைக்கு ஒரு காரணத்தை கண்டுபிடிப்பதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து நான் உலகிற்கு எச்சரிக்கை விடுத்து வருகிறேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவிலான தீவிரவாதத்திற்கு அடிப்படை ஆதாரமாக பாகிஸ்தான் உள்ளதை பெரும்பாலான உலக நாடுகள் உறுதியளித்துள்ள நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ள இந்த கருத்து நகைப்புக்குரியது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி கொத்து கொத்தாக விழும் மக்கள் – நடந்தது என்ன?

0

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி கொத்து கொத்தாக விழும் மக்கள் – நடந்தது என்ன?

ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டினம் அருகே 20 கிராமங்கள் சேரும் இடத்தில் அமைந்திருக்கிறது எல்.ஜி.பாலிமர்ஸ் எனும் நிறுவனம். ஊரடங்கினால் மூடி வைக்கப்பட்டிருந்த இந்த நிறுவனம். ஊரடங்கு தளர்த்தப்பட்டால் இயக்குவதற்குத் தயார்ப் படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. அதிகாலை 2 மணிக்கு மேல் 3 மணிக்குள் இந்த ஆலையிலிருந்து வாயுக்கசிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

இதனால் அந்த கிராமத்திலிருந்தவர்கள் கொத்து கொத்தாக மயங்கி விழுந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலரௌ பரிசோதித்த மருத்துவர்கள், ஆலையிலிருந்து வெளியான வாயு ‘ஸ்டைரீன்’ ஆக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். ஸ்டைரீன் என்பது எரியக்கூடிய திரவப் பொருள்களில் ஒன்று. கார்களின் கதவுகள், பைப்புகள், பிளாஸ்டிக் குவளைகள் உள்ளிட்ட கடினமான பிளாஸ்டிக் பாகங்கள் தயாரிப்பில் இந்த ஸ்டைரீன் பயன்பாடு அதிகம். இது போன்ற பொருட்களைத் எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம தயாரித்து வருகிறது.

இந்த வாயு மனித உடலுக்குள் மூன்று வழிகளில் ஊடுருவும். தோல் மீது படுவதன் மூலமாக, மூச்சு மூலமாக மற்றும் உணவு மூலமாக என மூன்று வழிகளில் மனித உடலுக்குள் ஊடுருவக்கூடிய இந்த வாயு நொடியில் கண், முக்கு, தோல் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும், உடனடியாக மூச்சுக்குழாயில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மூச்சுத்திணறல் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

இதுகுறித்து, கிங் ஜார்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறும்போது, “இந்த வாயு பட்டால், மூளை மற்றும் பின்பக்க தண்டுவடத்தைச் செயலிழக்கச் செய்யும். முறையான மற்றும் சரியான முறையில் ஆக்ஸிஜன் வழங்கலை உறுதி செய்தால் இறப்பைத் தவிர்க்க முடியும்” என்று தெரிவித்தனர்.

இந்த வாயுதான் விசாகப்பட்டினத்தில் தற்போது கசிந்திருக்கிறது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் ஆணையருக்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர சுதந்திரமாக செயல்பட உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் நடந்த நேரத்தில் மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்ததால், மீட்புப் பணி இன்னும் கடினமாக இருந்ததாகக் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் – இத்தாலி அறிவிப்பு

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் – இத்தாலி அறிவிப்பு

கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹானில் துவங்கிய கொரோனா நோய் தொற்று உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் மிகவும் அதிகமுள்ள நிலையில், இந்தியாவில் கடந்த வாரம் முதல் தொற்று பரவும் வேகம் அறிவித்துள்ளது.

கொரோனாவிற்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே நிலமை சீரடையும் என்ற நிலையில் உலகம் முழுவதுமுள்ள முன்னணி மருந்து நிறுவனங்கள் அரசு உதவியுடன் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முந்தைய தினம் இஸ்ரேல் கொரொனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கான காப்புரிமையை பெற முயற்சித்து வருதாகவும் கூறியிருந்த நிலையில் உலகின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கியிருப்பதாக இத்தாலி கூறியுள்ளது.

டாகிஸ் எனும் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி, ரோம் நகரில் உள்ள ஸ்பல்லான்ஷானி மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.முதலில் இந்த தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊசி போட்டதும் அந்த எலியில் கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் உருவாகி உள்ளன.

இந்த தடுப்பூசியை பரிசோதித்தபோது, மனித உடலிலும் வைரசின் செயல்பாட்டை தடுத்துள்ளது. இது மனித அணுக்களில் உள்ள வைரசை அழித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசியால் கொரோனா வைரஸ் அழிந்திருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று டாகிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி லூய்கி, இத்தாலி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.இத்தாலியில் இதுவரை தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆய்வுகளில் இது மிகவும் முன்னேறிய கட்டம் என்று அவர் கூறியுள்ளார்.

கோடை காலத்தில் மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தும் முழுமையான ஆராய்ச்சி தொடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.இந்நிலையில், தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு, சர்வதேச அளவில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மதுரை மீனாட்சி அம்மனை பற்றி சமூக வலைதளத்தில் இழிவுபடுத்திய இளைஞர் கைது! கடவுளை இப்படியா விமர்சிப்பது.?

0

மதுரை மீனாட்சி அம்மனை பற்றி சமூக வலைதளத்தில் இழிவுபடுத்திய இளைஞர் கைது! கடவுளை இப்படியா விமர்சிப்பது.?

தமிழ் கடவுள் மீனாட்சி அம்மனை பற்றி இழிவுபடுத்தும் விதமாக சமூக ஊடகத்தில் எழுதிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த மனோகரன் என்ற இளைஞர் ஒருவர் மதுரை மீனாட்சி அம்மனை பற்றி அநகாரிமாக எழுதிய சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது சமூகவலைதளமான முகநூல் பக்கத்தில் மதுரை மீனாட்சி அம்மனை பற்றி இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்டே மனோகரன் எழுதியுள்ளார். பின்னர் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த பதிவை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மனை பற்றி சமூக வலைதளத்தில் இழிவுபடுத்திய இளைஞர் கைது! கடவுளை இப்படியா விமர்சிப்பது.?
மீனாட்சி அம்மனை பற்றி தவறாக எழுதிய மனோகரன்

இந்நிலையில் மீனாட்சி அம்மனை பற்றி சமூக வலைதளத்தில் தவறாக பதிவு செய்த நபரை உடனடியாக கைது செய்யுமாறு, திண்டுக்கல் தாலுகா பகுதி காவல்நிலையத்திற்கு முன்பு இந்து முண்ணனியினர் சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டம் நடத்தினர். அப்போது தமிழ் கடவுளை தவறாக பேசிய இளைஞரை கைது செய்யுமாறு வலியுறுத்தினர்.

இதையடுத்து பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான நபர் போலியான சாதியொழிப்பு பேசும் நபர் என்றும் கூறப்படுகிறது. தமிழர்கள் வணங்கும் மதுரை மீனாட்சி அம்மனை தரக்குறைவாக விமர்சித்த சம்பவம் பலரை கோபமடையச் செய்துள்ளது.

திருவண்ணாமலையில் பெண் உயிரிழப்பு! ஆரஞ்சு மண்டலத்தில் அதிகரிக்கும் ஆபத்து! உலகளவில் 2.64 லட்சத்தை தாண்டியது!

0

திருவண்ணாமலையில் பெண் உயிரிழப்பு! ஆரஞ்சு மண்டலத்தில் அதிகரிக்கும் ஆபத்து! உலகளவில் 2.64 லட்சத்தை தாண்டியது!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் தினசரி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் 1,485 பேர் வைரஸ் பதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 33 பேர் உயிரழந்திருந்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியுள்ளது. உலக நாடுகளில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.64 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் பாதித்தோர் எண்ணிக்கை 49,931 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,694 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 14,183 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.