குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது! ஸ்டாலினை போல் இல.கணேசனும் உளறல்!!
குஜராத் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு, குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறதென்று பாஜகவின் இல.கணேசன் கவனம் இல்லாமல் உளறியுள்ளார்.
அடுத்த வாரம் 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசு சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார். இதையொட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் டெல்லி ஆக்ரா போன்ற முக்கிய பகுதிகளை சுற்றிப் பார்க்கிறார்.
குஜராத்தில் சில இடங்களில் திடீரென குடிசை பகுதிகளில் சுவர் எழுப்பும் சம்பவம் ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து செய்தியாளர்கள்; இல.கணேசனிடம் கேள்வி கேட்டனர். இதற்கு, குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது என்று பேசினார். இதைக்கேட்ட செய்தியாளர்களுக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் திகைத்தனர்.
குஜராத்தில் பாஜக ஆளும் கட்சியாக உள்ள நிலையில் இல.கணேசன் தவறாக கூறியது சிறிய அதிர்ச்சியை உண்டாக்கியது. தமிழக அரசியலில் அடிக்கடி வார்த்தைகளை மாற்றி உளறுவதில் ஸ்டாலின் முன்னிலையில் இருக்கிறார். அனிதாவுக்கு சரிதா என்றும், பூனைமேல் மதில் என்றும் பல இடங்களில் உளறியுள்ளார். சமீபத்தில் கூட வேளாண் சிறப்பு மண்டலத்தை பொருளாதார சிறப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்று ஸ்டாலின் உளறியபடி மாற்றி கூறியிருந்தார்.
உலகில் இதுவரை மனிதன் கண்டிராத ஒரு உயிர் கொல்லி வைரஸ் என்றால் அது கொரோனா வைரஸ் தான். கடந்த வருடம் சீனாவின் உகாண் மாகாணத்தில் தோன்றிய வைரஸ் சீனாவில் கொத்து கொத்தாக மக்களை பலிவாங்கும் எமனாக மாறியிருக்கிறது. சீனாவில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் நோய் பரவலும் அசுரவேகத்தில் பரவிவருகிறது.
இந்த நிலையில், பலி எண்ணிக்கையை சீன அரசு மறைப்பதாக உலக நாடுகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. பலி எண்ணிக்கை 2000 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சீனாவில் உள்ள முக்கிய தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் சீன அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், அவர்களை கைது செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு தோல்வி அடைந்துள்ளது என கைது செய்யப்பட்டவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி சீன அதிபர் தலைமறைவாக இருப்பதாக அவர்கள் குற்றசாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் பற்றி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தி ஐஸ் ஆப் டார்க்ன்ஸ் என்ற நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது என சமூகவலை தளங்களில் பரவிவருகிறது.
டீன் கூன்ட்ஸ் எழுதிய இந்த நாவலில் 39 ஆவது அத்தியாயத்தில் ”வுஹான் 400” வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. வுஹான் 400 வைரஸ் ஒரு ஆய்வகத்தில் ஆயுதமாக உருவாக்கப்பட்டதாக அந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாதான் இந்த வைரஸை உருவாக்கியதாக சீன அரசு மீது பல நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளது.
சீன அரசு அசுர வேகத்தில் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, உண்மை நிலையை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.
பா.ம.க.வின் யோசனைகளில் ஒன்றை திட்டமாக செயல்வடிவம் கொடுத்த அதிமுக அரசு! மகிழ்ச்சியில் பாமகவினர்
தமிழக அரசியல் கட்சிகளில் ஆக்க பூர்வமான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளுடன் இருப்பதில் முன்னணியில் இருப்பது மருத்துவர் ராமதாஸ் நிறுவிய பாட்டாளி மக்கள் கட்சியே. இந்நிலையில் பாமக கூட்டணி அமைத்த அதிமுக அரசு தற்போது பாமகவின் கோரிக்கைகள் மற்றும் அக்கட்சியின் யோசனைகளில் சிலவற்றை சட்டமாக்கி நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களை 5 மாவட்டங்களில் அமைக்க தமிழக அரசு முன்வந்திருப்பதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் “ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகம் சிறப்பான திட்டம்: விரிவுபடுத்த வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தை உள்ளிட்ட விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் வழங்கக்கூடிய ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களை 5 மாவட்டங்களில் அமைக்க தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. பா.ம.க.வின் யோசனைகளில் ஒன்றான இத்திட்டம் செயல்வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
வேளாண் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின்படி முதல்கட்டமாக திருவண்ணாமலை, தருமபுரி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்கள் அமைக்கப்படும். இந்த வளாகங்களில் உழவர்கள் தங்களின் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான கடைகள், வேளாண் விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டும் மையங்கள், உழவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வசதிகள், உழவர்களுக்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் நிலையங்கள், மளிகைப் பொருள் விற்பனை நிலையங்கள் ஆகியவை ஏற்படுத்தப்படும். இவை தவிர உழவர்கள் மற்றும் நுகர்வோருக்கு தேவையான தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளும் அமைத்துத் தரப்பட உள்ளன.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய சந்தைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி தாக்கல் செய்து வரும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கைகளிலும், 2016-ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையிலும் இத்திட்டம் இடம் பெற்றிருந்தது. மேலும், இந்த சந்தைகளை நாடு முழுவதும் உள்ள மற்ற சந்தைகளுடன் மின்வணிக நுழைவாயில் மூலமாக இணைக்க வேண்டும் என்றும் பா.ம.க. கூறியிருந்தது. அந்த வசதியையும் இந்த வளாகங்களில் அரசு ஏற்படுத்தவிருப்பது பா.ம.கவுக்கு கிடைத்த வெற்றியாகும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனையை ஒட்டி அமைக்கப்படும் இந்த சந்தைகளின் சிறப்பம்சமே இவற்றில் இடைத்தரகர்கள் இருக்க மாட்டார்கள் என்பது தான். வழக்கமான சந்தைகளில் உழவர்கள் தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்யச் செல்லும் போது, அங்குள்ள வணிகர்களும், இடைத் தரகர்களும் நிர்ணயிக்கும் விலைக்கு பொருட்களை விற்று விட்டு வருவதை தவிர வேறு வழியில்லை. இந்த முறையில் சந்தையில் விற்பனை செய்யப்படும் விலையில் பாதி தொகை கூட உழவர்களுக்கு கிடைக்காது. ஆனால், புதிதாக அமைக்கப்படவிருக்கும் ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களில் உழவர்களே தங்களின் விளைபொருட்களை நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடியும். இதனால் உழவர்களுக்கு நல்ல விலை கிடைப்பதுடன், நுகர்வோருக்கும் குறைந்த விலையில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும். இது இரு தரப்பினருக்கும் நன்மை பயப்பதாக அமையும்.
ஒரே நேரத்தில் ஒரே வகையான காய்கறிகள் சந்தையில் குவியும் போது விலை சரியக்கூடும். அதை தடுக்கவும் இந்த வளாகங்களில் வசதிகள் உள்ளன. உழவர்கள் விரும்பினால் வளாகங்களில் உள்ள மதிப்பு கூட்டும் மையங்களில் தங்களின் பொருட்களை மதிப்பு கூட்டி, புதிய பொருளாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும். அவ்வாறு செய்ய விரும்பாத உழவர்களுக்காக வளாகங்களில் 25 முதல் 50 டன்கள் வரையிலான காய்கறிகளை பாதுகாத்து வைக்கக்கூடிய குளிரூட்டப்பட்ட கிடங்குகள் அமைக்கப்படும். அங்கு தங்களின் பொருட்களை சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்து கொள்ளலாம். இதனால் வேளாண் விளைபொருட்கள் வீணாவது தடுக்கப்படும்.
இந்த சந்தைகளை சிறு மற்றும் குறு உழவர்கள் இன்னும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வசதியாக மேலும் சில யோசனைகளை நடப்பாண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்துள்ளது. இந்த சந்தைகளுக்கு பொருட்களை கொண்டு செல்ல வசதியாக இரவு 8.00 மணிக்குப் பிறகு வேளாண் விளைபொருட்களை அரசு பேருந்துகளில் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்; வேளாண் விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் சிறிய சரக்குந்துகள், இழுவை ஊர்திகள் ஆகியவற்றுக்கு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் பா.ம.க. முன்வைத்த யோசனைகளாகும். அவற்றையும் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.
ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்கள் உழவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய சந்தை வளாகங்களை தமிழகம் முழுவதும் அரசு விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரே ஆளாக தனித்து நின்று பதிலடி கொடுப்பார். அவரது ஒவ்வொரு பதிலடியும் சட்டமன்றத்தில் கலகலக்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
அந்தவகையில் ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் ஒரு சமயோசிதமான பதிலை கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாராட்டுக்களை பெற்றுள்ளார் சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்த போது தமிழக அரசின் கடன் 4 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது என்றும் நாளை எங்கள் தலைவர் ஆட்சிக்கு வந்தால் இதனை எப்படி சமாளிப்பார்? என்று திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ’அந்த கவலை உங்களுக்கு தேவை இல்லை, அப்படி ஒரு நிலை உங்களுக்கு வராது’ என்று கூறினார் தமிழக முதல்வரின் இந்த பதிலை கேட்டு சட்ட சபையில் சிரிப்பலை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பதில்களை அவ்வப்போது ஜெயலலிதா கூறி அனைவரின் கவனத்தையும் பெறுவார் என்ற நிலையில் தற்போது ஜெயலலிதாவை மிஞ்சிய வகையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பதிலடி இருந்ததாக அதிமுக எம்எல்ஏக்கள் கருத்து கூறி வருகின்றனர்
சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா…
சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்த கப்பலின் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாக தெரிகிறது. இதனால் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2000 மேல் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பல் வந்தது. அதில் இருந்த 19 பேரை சோதனை செய்ததில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தெரியவந்தது.
கொரோனா வைரஸ் அறிகுறிகள் உடன் வந்தவர்களை கிண்டி கிங்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் தான் என் காதலர்! மனம் திறந்த பிரபல நடிகை
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
இதனையடுத்து இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது அவர் ஒரு படத்தில் நடிக்க ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நிதினுடன் பீஷ்மா என்ற படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படம் வருகின்ற 21 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கான புரோமோஷன் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம்செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் எந்த நடிகர் உங்கள் நண்பர், காதலர், கணவராக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விகளும் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தனக்கு காதலராக வர வேண்டும் என்றும், சின்ன வயதில் இருந்தே அவர் மேல் தனக்கு க்ரஸ் உள்ளதாகவும் கூறினார். மேலும் அவர் தளபதியுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் நடிகர் நிதின் தனக்கு நண்பராக வரவேண்டும் என்று கூறிய ராஷ்மிகா, அவருக்கு கணவராக தமிழ் நடிகர் வந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். ஆனால் குறிப்பாக யாருடைய பெயரையும் கூறாமல் தவிர்த்துவிட்டார்.
தீவிபத்தில் உடல் கருகி 4 மாணவர்கள் பலி! மீதி 4 மாணவர்களை மீட்ட சிறுமிக்கு துணிச்சலுக்கான விருது!!
திடீரென பள்ளி வாகனத்தில் தீ பிடித்ததால் 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் பகுதியில் கடந்த வாரம் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிவாகனம் ஒன்று யாரும் எதிர்பாராத வகையில் திடீரென புகைமூட்டத்துடன் தீப்பிடிக்க ஆரம்பித்தது. வாகனத்தில் விளையாடியது போல் இருந்த சிறுவர்கள் வாகனம் தீ பிடித்ததை கவனிக்கவில்லை.
இதைப் பார்த்ததும் பொதுமக்கள் வண்டியில் இருந்த பள்ளி மாணவர்கள் 8 பேரை காப்பாற்றினர். கொழுந்துவிட்டு எரிந்த தீயில் அமன்தீப் கவுர் என்ற சிறுமி துணிச்சலுடன் 4 மாணவர்களை காப்பாற்றினார். தீ மேலும் அதிகமான காரணத்தால் வாகனத்தில் மீதியிருந்த நான்கு பள்ளி மாணவர்கள் உடல் கருகி பலியாயினர்.
இதனையடுத்து, தீ விபத்தில் தைரியமாக பள்ளி மாணவர்களை காப்பாற்றிய சிறுமிக்கு பஞ்சாப் மாநில அரசு துணிச்சலுக்கான விருதை அறிவித்துள்ளது. மேலும், இந்த விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் என்றும், அச்சிறுமியின் கல்விச் செலவை மாநில அரசே ஏற்கும் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களை காப்பாற்றிய சபாஷ் சிறுமி அமன்தீப் கவுருக்கு பொது மக்களிடையே பாராட்டுகள் குவிந்தன.
“வலிமை” படப்பிடிப்பின் போது விபத்து! நடிகர் அஜீத் காயம் அடைந்தார்
ஹெச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
“நேர்கொண்ட பார்வை” வெற்றிக்கு பிறகு அஜித் மீண்டும் அதே கூட்டணியுடன் மறுபடியும் கைகோர்க்கும் படம் “வலிமை”. வலிமை படத்தின் ஹீரோயின் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
வலிமை படப்பிடிப்பின்போது நடிகர் அஜீத்துக்கு காயம் ஏற்பட்டதாக குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.#GetwellsoonThala என்ற பெயரில் ஹேர்ஸ்டைல் உருவாக்கப்பட்டு அதை அஜித் ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.விரைவில் அஜித் நலம் பெற வேண்டும் என்று இறைவனை வழிபட்டு வருவதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
வலிமை திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாகன சோதனையில் இளைஞரின் மண்டை உடைப்பு! ஹெல்மெட் இல்லாத காரணத்தால் வில்லனாக மாறிய போலீஸ்..!!
சென்னை ஓட்டேரி பகுதியில் வழக்கம்போல வாகன சோதனையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுரேந்தர் என்கிற வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். சுரேந்தர் ஹெல்மெட் போடாத காரணத்தால் அபராதம் விதிப்பதாக போலீசார் கூறினர். இதைக் கேட்டதும் சுரேந்தர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு கூட்டம் கூடியது.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாகி சிறப்பு ஆய்வாளர் கட்டையால் சுரேந்தரின் மண்டையை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சுரேந்தரின் தலையில் ரத்தம் வடிந்த சம்பவத்தை பார்த்த மக்கள் கூட்டமாக சேர்ந்து போலீசாரை தாக்க முயன்றனர். இந்த பிரச்சினை குறித்து தகவலறிந்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் வள்ளி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சுரேந்தரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் மீது சுரேந்தர் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது. ஹெல்மெட் இல்லாத காரணத்தால் இளைஞரின் மண்டை உடைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிஏஏ போராட்ட அறிவிப்பால் சென்னையில் பதற்றம்! பலத்த பாதுகாப்பில் தலைமை செயலகம்..!!
குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை வண்ணாரப் பேட்டையில் நடந்த தடியடி சம்பவம் பெரிதும் பேசப்பட்டது.
சில மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீர்மானைத்தை நிறைவேற்ற திமுக வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும், தமிழக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்தினால் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இசுலாமியர்களின் ஒட்டுமொத்த ஜமாத் அமைப்பினர்களும் தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்த நிலையில் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் மன்ற தலைவார் வாராகி சார்பில் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்றும், பொது சொத்துகளுக்கு அசம்பாவிதமோ அல்லது சட்டம் ஒழுங்கு சீர்கெட வாய்ப்பு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை போராட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்தார். தடை விதித்தாலும் இன்று சொன்னபடியே போராட்டம் நடக்கும் என்று இஸ்லாமியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்கள் காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளது. இதில் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமை செயலகத்தில் மட்டும் 2000 போலீசார் அவசரமாக குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தை முன்னிறுத்தி களத்திற்கு வந்தால் அனைவரையும் கைது செய்ய காவல்துறை தயாராக இருப்பதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.