Home Blog Page 5670

சீன ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்! 94% தவறான முடிவு தருவதாக புகார்! உண்மை காரணம் என்ன.?

0

சீன ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்! 94% தவறான முடிவு தருவதாக புகார்! உண்மை காரணம் என்ன.?

சீனாவில் இருந்து கொரோனா பாதிப்பை உறுதிசெய்ய வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

கொரோனா தொற்று இருப்பதை விரைவில் கண்டறிய சீனாவில் இருந்து ரேபிட் கிட் எனும் டெஸ்ட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டன. மருத்துவ சோதனைக்கு இவை தரமற்றவை என்றும் 95% தவறான முடிவை காட்டுவதாக பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் புகார் கூறியுள்ளனர். இதனையடுத்து மருத்துவ சோதனைகளுக்கு சீன ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதற்கு 2 நாட்கள் தடைவிதிப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது்.

மருத்துவ சிகிச்சைக்காக கடந்த வாரம் 6.5 லட்சம் ரேபிட் கருவிகளும், அதன்பிறகு இரண்டாம் கட்டமாக 3 லட்சம் கருவிகளும் வாங்கப்பட்டன. இந்த கருவிகளை மாநில அரசுகளுக்கு பிரித்து கொடுப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரா கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அதிக பாதிப்பு இருக்கும் சூழலில்
தமிழக மாநிலத்திற்கு 24 ஆயிரம் கருவிகள் மட்டுமே வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரேபிட் கருவியை பயன்படுத்தி அதன் மூலம் வரும் சோதனை முடிவுகள் 95% தவறாக இருப்பதாக மாநில அரசுகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு புகாரும் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக 2 நாட்களுக்கு சீன ரேபிட் கருவிகளை மருத்துவ சோதனைக்கு பயன்படுத்த வேண்டாம் என்று நேற்று தடைவிதிக்கப்பட்டது. மீண்டும் எப்போது மருத்துவ சோதனை நடத்தலாம் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை குறை கூறிவருகின்றன.

கொரோனா தொற்று 25 லட்சத்தை கடந்து கொன்று குவிக்கிறது : பதற வைக்கும் பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 25 லட்சத்து 56 ஆயிரத்து 798 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 77 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 6 லட்சத்து 90 ஆயிரத்து 219 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

கொரோனா தொற்று 25 லட்சத்தை கடந்து கொன்று குவிக்கிறது : பதற வைக்கும் பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 19,984 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 640 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 3,870 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 5,218/251
டெல்லி – 2,156/47
குஜராத் – 2,178/90
தமிழ்நாடு – 1,596/18
தெலுங்கானா – 928/23
கேரளா – 408/03
ராஜஸ்தான் – 1,735/26
உத்தரபிரதேசம் – 1,184/18
ஆந்திர பிரதேசம் – 646/15
கர்நாடகா – 418/17
மத்திய பிரதேசம் – 1,407/70
ஜம்மு & காஷ்மீர் – 368/15
மேற்கு வங்கம் – 339/12
பஞ்சாப் – 219/16
ஹரியானா – 233/03
பீகார் – 96/02
அசாம் – 35/01
சண்டிகர் -26/0
உத்தர்கண்ட் – 44/0
லடாக் – 18/0
அந்தமான் & நிக்கோபார் -11/0
சத்தீஸ்கர் – 36/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 39/01
ஒடிசா – 68/01
பாண்டிச்சேரி – 07/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 42/02
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா 11/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 635 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

சென்னை – 358/06
கோயம்புத்தூர் – 134/0
திருப்பூர் – 108/0
திண்டுக்கல் – 76/01
நெல்லை – 62/0
ஈரோடு – 70/01
திருச்சி – 50/1
நாமக்கல் – 51/0
ராணிப்பேட்டை – 39/0
செங்கல்பட்டு – 56/0
மதுரை – 46/01
கரூர் – 42/0
தேனி – 43/01
தூத்துக்குடி – 27/01
விழுப்புரம் – 40/01
கடலூர் – 26/0
சேலம் – 24/0
திருவள்ளூர் – 48/0
திருவாரூர் – 28/01
விருதுநகர் – 19/0
தஞ்சாவூர் – 49/01
நாகப்பட்டினம் – 44/0
திருப்பத்தூர் – 17/0
திருவண்ணாமலை – 12/0
கன்னியாகுமரி – 16/0
காஞ்சிபுரம் – 10/0
சிவகங்கை – 12/01
வேலூர் – 22/01
நீலகிரி – 09/01
தென்காசி – 31/0
கள்ளக்குறிச்சி – 05/0
ராமநாதபுரம் – 11/1
அரியலூர் – 04/0
பெரம்பலூர் – 05/0
புதுக்கோட்டை – 01/0

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! மாநகராட்சி தீவிர பாதுகாப்பு நடவடிக்கை! ராயபுரத்தில் ஒரே நாளில் 24 பேர்?

0

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! மாநகராட்சி தீவிர பாதுகாப்பு நடவடிக்கை! ராயபுரத்தில் ஒரே நாளில் 24 பேர்?

சென்னை ராயபுரம், அம்பத்தூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாநகராட்சியின் திட்டம் பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அதிக மக்கள் தொகை வசிக்கும் இடமாக சென்னை பெருநகரம் இருந்து வருகிறது. வேலைவாய்ப்பு காரணத்தால் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வேலையாட்கள் வந்து தங்கி பணி செய்யும் இடமாகவும், பல்வேறு முக்கிய நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் சுற்றுலா பகுதிகள் இருப்பதால் சென்னையில் மக்கள் நெருக்கடி அதிகம் என்றே சொல்லலாம்.

சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 358 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டுள்ளது. இதில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 86 பேர் மருத்துவ சிகிச்சை மூலம் குணமாகியுள்ளனர். அதிக பாதிப்பாக ராயபுரத்தில் 116 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில்
46 பேர், தேனாம்பேட்டையில் 42 பேர், திரு.விக.நகரில் 42 பேர், கோடம்பாக்கத்தில் 35 பேர், அண்ணா நகரில் 25 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மேலும் திருவொற்றியூர் பகுதியில் 12 பேரும், வளசரவாக்கத்தில் 11 பேரும், பெருங்குடியில் 8 பேர், அடையாறு மற்றும் ஆலந்தூரில் 7பேர், மாதவரத்தில் 3 பேர், சோழிங்கநல்லூரில் 2பேர் மற்றும் அம்பத்தூரில் முதல் தொற்று நேற்று ஒருவருக்கு பாதித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று அதிகம் 65% சதவீத ஆண்களையும், 34% சதவீத பெண்களையும் பாதித்துள்ளது. சென்னை ராயபுரத்தில் நேற்று மட்டுமே 24 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதனால் அங்கு தீவிர பாதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவு ஜூன் மாதம் வரை நீட்டிப்பு! கொரோனா தாக்கத்தால் சிங்கப்பூர் எடுத்த பாதுகாப்பு முடிவு!!

0

ஊரடங்கு உத்தரவு ஜூன் மாதம் வரை நீட்டிப்பு! கொரோனா தாக்கத்தால் சிங்கப்பூர் எடுத்த பாதுகாப்பு முடிவு!!

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் சிங்கப்பூரில் ஜூன் மாதம் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 206 நாடுகளுக்கு பரவியதன் மூலம் தினசரி நோயாளிகள் அதிகரித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்சு, ஈரான் போன்ற நாடுகள் பெருமளவு தாக்கத்தால் தடுமாறி வருகின்றன. இதுவரை தடுப்பூசி மருந்துகளோ நிரந்தரமாக குணமாக்க புதிய மருத்துவமுறையோ இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை.

கொரோனாவின் தாக்கத்தை குறைக்க இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவு, சமூக இடைவெளி மற்றும் பல அறிவுரைகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதால் அங்கு ஜூன் மாதம் வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அந்நாட்டு அதிபர் லீ அறிவித்துள்ளார். இதுவரை சிங்கப்பூரில் கொரோனாவால் இன்றைய பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,111 பேராக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 9,125 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அங்கு கூறப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் உலக சுகாதார மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனாவின் பாதிப்பு இனிமேல்தான் அதிகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தகவல் உலக நாடுகளை பீதியடையச் செய்துள்ளது.

திரௌபதியை காப்பாற்ற கிருஷ்ணன் ஏன் நேரில் வரவில்லை? யதார்த்தத்தை விளக்கும் கதை!

0

ஒருமுறை தடாகத்தில் புஷ்பம் பறிக்க வந்த யானையின் காலை முதலை பிடித்துவிட்டது. யானையின் கண் முன்னே மரணம் தெரிய ஆரம்பித்து விட்டது.

முதலைக்கோ அந்த யானையை கொன்றால் தான் ஆகாரம் என்பதால் விடவேயில்லை. யானைக்கோ தன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற பயம். போராடி பார்த்த யானை நம்மை காப்பாற்ற அந்த பெருமாளால் தான் முடியும் என நினைத்தது.

யானை தன் அடி வயிற்றில் இருந்து ஆதிமுலமே என்று கத்தியது. அந்த அலறல் சத்தம் கிட்டத்தட்ட விண்ணை தாண்டி ஒலித்தது. இதனை பார்த்த பரமாத்மன் உடனே அந்த யானைக்கு உதவி செய்ய கிளம்பினான்.

பாம்பனையில் இருந்து படாரென எழுந்தான் பரந்தாமன், எழுந்த வேகத்தை பார்த்து கருடாழ்வார் சுதாரித்து ஆயத்தமானான். தன் தோளில் துண்டு போடாமல் பாதுகை அணியாமல் புறப்பட்டான்.

ஒரு குழந்தை அழுதால் அதன் தாய் எப்படி ஓடுவாள், ஒரு கன்று துடித்தால் பசு எப்புடி ஓடும், அதே மாதிரி சுவாமி ஒடி வந்துள்ளார்.யானை கூப்பிட்ட அடுத்த நொடியே வந்து நின்று காப்பாற்றினார் மகாபிரபு.

யானை கூப்பிட்டு வந்த பரந்தாமன் திரௌபதி கூப்பிட்டு ஏன் வரவில்லை என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.

மகாபாரதத்தில் தர்மன் சூதாடும்போது மனத்திற்குள் வேண்டுதல் ஒன்றை வைத்தான். தானும் தனது சகோதரர்களும் சூதாடும் விஷயம் கிருஷ்ணனுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதே அது.

தர்மனின் எண்ணத்தை புரிந்து கொண்ட கிருஷ்ணன் சூதாடும் மண்டபத்துக்கு வரவில்லை. ஆனால் அபயம் என்றதும் திரௌபதிக்கு ஆடை கொடுத்து மானம் காத்தான்.

தர்மன் அவ்வாறு வேண்டாமல் இருந்திருந்தால் திரௌபதிக்கு இன்னல் வரும் முன்பே பரந்தாமன் காப்பாற்றி இருப்பான். நாம் என்ன நினைக்கிறோமோ அது தான் நடக்கும் என்பது கதை சொல்லும் நீதி.

கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! -புதுவை அரசு அதிரடி உத்தரவு

0

கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்!
-புதுவை அரசு அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்க இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே அடைந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிக்கலை நாட்களை சமாளிக்கும் விதமாக இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அரிசி, எண்ணெய், பருப்பு, நிவாரண தொகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. ஏப்ரல் மாதத்தை தொடர்ந்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை தேவைகளுக்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுவை அரசு கட்டுமான பணியாளர்களுக்கு ஆறுதலான நிவாரண அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியதாவது; புதுச்சேரி கட்டுமான பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்குவதாக கூறியுள்ளார். இதற்கு முன்னர் அடிப்படை பொருளாதார தேவைக்காக ரேசன் அட்டைகளுக்காக ரூ.2,000 வழங்கப்பட்டது. மேலும் 2 ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்த ஆலோசனை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் இது அவசியமா.? சமூக இடைவெளி இல்லாமல் நடிகை ரோஜா எம்எல்ஏ செய்த சர்ச்சை சம்பவம்.!!

0

ஊரடங்கு நேரத்தில் இது அவசியமா.? சமூக இடைவெளி இல்லாமல் நடிகை ரோஜா எம்எல்ஏ செய்த சர்ச்சை சம்பவம்.!!

நடிகை ரோஜா சாலையில் நடந்து வர அவரது இருபக்கம் நின்றிருந்த மக்கள் அவரது பாதங்களுக்கு மலர்தூவி பின்னர் மாலையிட்ட சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த ஆபத்தான சூழலில் ஆந்திர மாநில எம்எல்ஏ ரோஜாவின் செயல்பாடு சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வாக உள்ள நடிகை ரோஜா தனது சொந்த தொகுதியான நகரிக்கு சமீபத்தில் விசிட் செய்தார்.

தொகுதியில் உள்ள கிராம மக்களின் அடிப்படை தேவைக்காக புதிய போர்வெல் போடப்பட்டிருந்தது. இதனை திறந்து வைக்க சென்றபோது சாலையின் இருபுறத்திலும் மக்களும், தூய்மை பணியாளர்களும் நின்று பாதையில் பூவினை தூவினர். இதற்கு வணக்கம் தெரிவித்து சினிமாவில் வருவது போல் மக்களை கைகூப்பி வணங்கியவாறு ரோஜா நடந்து வந்தார்.

இதன் பின்னர் அவருக்கு அப்பகுதி மக்கள் பிரம்மாண்டமான மாலை ஒன்றை அணிவித்து வரவேற்பை முடித்தனர். பின்னர் போர்வெல் திறப்பு விழா சிறப்பாக முறையில் முடிந்தது. ஊரடங்கு நேரத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் அரசின் விழிப்புணர்வை மறந்து கும்பலாக நின்றது சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

இளமை மாறா புன்னகையுடன் நடிகை சீதா.!இயற்கை முறையில் மாடித்தோட்டம்! 55 வயதில் அழகை பராமரிக்கும் ரகசியம்!

0

இளமை மாறா புன்னகையுடன் நடிகை சீதா.!இயற்கை முறையில் மாடித்தோட்டம்! 55 வயதில் அழகை பராமரிக்கும் ரகசியம்!

இயற்கை முறையில் மாடித்தோட்டம் அமைத்து அன்றாட அத்தியாவசிய காய்கறிகள் வீட்டிலேயே கிடைப்பதாக நடிகை சீதா கூறியிருப்பது இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஒருவர் நடிகை சீதா. 1990 காலகட்டங்களில் சிறப்பான நடிகையாக வலம்வந்தவர் பல வெற்றிப்படங்களையும் கொடுத்தவர். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணத்தால் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். கொரோனா பாதிப்பு உண்டாக காலத்தில் எவ்வாறு வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது பற்றி அவர் கூறியிருப்பது பலருக்கு ஆவலை தூண்டியுள்ளது.

தனது வீட்டு மாடியில் தோட்டத்தை அமைத்து இந்த இக்கட்டான சூழலில் அத்தியாவசிய பொருட்களுக்கு வெளியில் செல்லாமல் வீட்டிலேயே கிடைக்கும் வழிவகையை மிக நேர்த்தியாக கையாண்டு வருகிறார். மாடித்தோட்டம் அமைத்தபோது, சென்னையில் இருக்கும் சுற்றுச்சூழல் மற்றும் சீதோஷ்ண நிலையில் இது சரிவராது என்று அவருடைய தோழிகளும் உறவினர்களும் கூறியுள்ளனர்.

இயற்கையின் மீதுள்ள நம்பிக்கையில் மாடித் தோட்டத்தை ஆரம்பித்துள்ளார். வந்தால் நன்றாக வரட்டும் என்றும் இல்லையேல் இதனை அனுபவமாக எடுத்துக்கொள்வதாக தோழிகளுடன் கூறியுள்ளார். ஆரம்பகட்ட காலத்தில் சிறு குழந்தையை போல் ஆர்வமாக இந்த மாடித்தோட்டத்தை பராமரித்து வந்தேன் அதேபோன்றுதான் இப்போதும் பராமரித்து வருகிறேன், இதனால் எனக்கு நல்ல மகசூல் கிடைக்கிறது. தற்போதைய ஊரடங்கு உத்தரவு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகளை வாங்கவேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். உறவினர்களும் தற்போது நாங்களும் மாடித்தோட்டம் அமைந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இயற்கை முறையில் சாணம், பஞ்சகாவ்யா, வேப்பெண்ணெய் கரைசல், காய்கறி கழிவுகளை மட்டுமே இயற்கை இடு உரமாக பயன்படுத்தி வருகிறேன். தினந்தோறும் தோட்டத்திலேயே நேரத்தை கழிப்பதால் மனதிற்கு மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த கொரோனா ஆபத்தில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்பதை இயற்கை உணர்த்தியுள்ளது. இனியாவது இயற்கைக்கு எதிராக எதையும் செய்யாமல் அதனோடு ஒன்றிணைந்து வாழ்ந்தால் மட்டுமே நன்மை நடக்கும் என்பதை உலக மக்கள் உணர வேண்டும் என்று தனது பேட்டியின் மூலம் வேண்டுகோளை வைத்துள்ளார். இவரது பேட்டி இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாஸ்க் அணிந்தால் மட்டுமே பேருந்தில் அனுமதி! மே 4க்கு பிறகு செய்ய வேண்டிய நடைமுறைகள்! சென்னை மாநகராட்சி அதிரடி!

0

மாஸ்க் அணிந்தால் மட்டுமே பேருந்தில் அனுமதி! மே 4க்கு பிறகு செய்ய வேண்டிய நடைமுறைகள்! சென்னை மாநகராட்சி அதிரடி!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு யாரும் வெளியே வரக்கூடாது என்று நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. இருப்பினும் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்ற காணத்தால் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக அரசு கூறியது. பின்னர் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக மோடி அறிவித்தார்.

இதே சமயத்தில் சிறுதொழில்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள், மாநில மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு விதிகள் தளர்த்தப்பட்டு ஏப்ரல் 20 இருந்து செயல்படலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
மேலும் மாநில அரசுகள் அவரவர் பகுதிகளில் எந்தெந்த நிறுவனங்களுக்கு ஊரடங்கு தளர்வு அளிக்கலாம் என்பதை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதன்பிறகும் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும் என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் மே 3 ஆம் தேதிக்கு பிறகு போக்குவரத்து இயக்கப்படவுள்ளது. இதற்கு பின் சென்னை போக்குவரத்து பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

  • மே 4 ஆம் தேதி முதல் மாநகர போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வேலைக்கு வர வேண்டும்.
  • மணிக்கு ஒருமுறை தங்களது கைகளை சோப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகள் முக கவசம் இல்லாமல் ஏறினால் அனுமதிக்க கூடாது.
  • பேருந்தை இயக்கும் போது காய்ச்சலோ அல்லது கொரோனா தொற்றோ இருந்தால் அப்பணியாளர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பணியில் இருக்கும் ஊழியர்கள் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
    ஆரோக்கிய சேது என்ற செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.
  • சமூக இடைவெளியை பராமரித்து பயணிகள் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இசைத்தம்பதிக்கு பிறந்த இசைக் குழந்தை! மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி ஜோடி.!!

0

இசைத்தம்பதிக்கு பிறந்த இசைக் குழந்தை! மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி ஜோடி.!!

தமிழ் சினிமாதுறையில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என்று சினிமாவில் பன்முகம் கொண்டவர் ஜிவி.பிரகாஷ். தமிழகத்தில் மக்களுக்கு ஆதரவாக நடந்த சில போராட்டங்களிலும் சமூக அக்கறையுடன் கலந்துந்து கொண்டவர்.
மேலும் இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மானின் அக்கா மகனும் ஆவார்.

தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே தனது திரை இசையின் மூலம் மக்களை கவர்ந்தார். கிரீடம் படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இசைப்புயலின் இசையில் ஜென்டில்மேன் படத்தில் பாடகராகவும் முதல் தடம் பதித்தார். இதற்பிறகு சில படங்களில் நடிகராகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இசைத்தம்பதிக்கு பிறந்த இசைக் குழந்தை! மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி ஜோடி.!!

கடந்த 2013 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த இசைத்தம்பதிக்கு தி.நகரில் உள்ள மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் சினிமா பிரபலம் மற்றும் ரசிகர்கள் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.