Home Blog Page 5671

உயிருக்கு ஆபத்தான நிலையில் வடகொரிய அதிபர்! கொரோனா பாதிப்புதான் காரணமா.? அமெரிக்கா வெளியிட்ட தகவல்.!!

0

உயிருக்கு ஆபத்தான நிலையில் வடகொரிய அதிபர்! கொரோனா பாதிப்புதான் காரணமா.?
அமெரிக்கா வெளியிட்ட தகவல்.!!

வடகொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அதிபர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 56 வயதான கிம் தனது தாத்தாவின் பிறந்தநாள் ஏப்ரல் 15 ஆம் தேதி விழாவில் கூட கலந்துகொள்ளவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

கிம்மின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான் ஆனால், அவருக்கு என்ன சிக்கல் என்ற உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது. வடகொரியா பற்றி செய்திகளை சேகரித்து வரும் தென்கொரியா செய்தி நிறுவனம் வேறொலு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி கிம் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். புகைப்பிடித்தல், அதிக உடல் எடை, வேலைப்பளு போன்ற பல்வேறு காரணங்களால் இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அளவிற்கு அவரது உடல்நிலை சென்றுவிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரண பொருட்களை நிபந்தனையுடன் வழங்க வேண்டும்! -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

0

கொரோனா நிவாரண பொருட்களை நிபந்தனையுடன் வழங்க வேண்டும்!
-சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்குவதில் நிபந்தனையுடன் செயல்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்தார். இதையடுத்து நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால் மக்களிடன் அடிப்படை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு பாதிப்பில் பலர் வெளியூரில் தவித்து வருகின்றனர். மேலும் சொந்த ஊரில் இருக்கும் மக்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுபோன்ற சிக்கலை தீர்க்கும் விதமாக அம்மா உணவகம், குறிப்பிட்ட நேரத்திற்கு காய்கறி மார்க்கெட் திறப்பு, கிராமங்களுங்கே சென்று காய்கறி விற்பனை மற்றும் ரேசன் கடை மூலம் இலவச கொரோனா நிவாரண பொருட்களும் வீட்டுக்கு சென்று கொடுக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உணவு தட்டுப்பாடு நிலவியதால் அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள மற்றும் சமூக பற்றாளர்கள் அரசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு அளித்து வந்தனர்.

இதனால் கொரோனா சமூக பரவலாக மாறக் கூடும் என்ற காரணத்தால் சென்னை மாநகராட்சி புதிய நிபந்தனை உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரவு பின்வருமாறு;

  • கொரோனா தொற்று நோய் உறுதியாகி சென்னை மாநகராட்சியால் தடைசெய்யப்பட்ட இடங்களில் யாரும் 2 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உணவு வழங்க கூடாது.
  • அரசு பொது மருத்துவமனைகள், மாநகராட்சி சுகாதார மையங்கள், கொரோனா தொற்று நோய் பரிசோதனை மையங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை பகுதிகளை சுற்றியும் 2 கி.மீ தொலைவுக்கு உணவுகளை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உணவு வழங்க வேண்டுமெனில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு கிடங்குகளில் உணவை ஒப்படைக்கவும். பின்னர் உணவுப் பொருட்கள் முறையாக பரிசோதனை செய்யப்பட்டு வழங்கப்படும்.
  • உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்க 48 மணி நேரத்திற்கு முன்பே சென்னை மாநகராட்சி சம்பந்தபட்ட மண்டல அலுவலரிடம் தெரியப்படுத்த வேண்டும்.
  • உணவு வழங்கும் இடம் மற்றும் இதர தகவல்களை மண்டல அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
  • உணவுகளை எந்த மண்டலத்திற்கு வழங்க வேண்டுமோ அந்த மண்டலத்திலேயே உணவு தயாரிக்க வேண்டும்.
  • தயாரிக்கப்பட்ட உணவுகளை உரிய நேரத்தில் அமைப்பாளர்கள் வழங்கி முடிக்க வேண்டும்.
  • உணவு வழங்குமிடத்தில் ஓட்டுனருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரிதிநிதி, தன்னார்வல அமைப்பு, குழுவினர் உட்பட மூன்று நபர் மட்டுமே இருக்க வேண்டும்.
  • உணவு வழங்கும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மூன்று பேர்களை தவிர வேறு யாரும் செல்லக்கூடாது.
  • கொரோனா நிவாரண பொருட்களை வழங்குவதில் 144 தடை மற்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்திய அனைத்தும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு சென்னை மாநகராட்சியின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் கள்ளக்காதலி வீட்டில் தங்கிய டாக்சி டிரைவர்! இடையூறாக இருந்த மகனை கொன்ற அதிர்ச்சி சம்பவம்!

0

ஊரடங்கு உத்தரவால் கள்ளக்காதலி வீட்டில் தங்கிய டாக்சி டிரைவர்! இடையூறாக இருந்த மகனை கொன்ற அதிர்ச்சி சம்பவம்!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த 6 வயது மகனை பெற்ற தாயே அடித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரும் திவ்யா என்ற மனைவியும் 6 வயதில் அபிஷேக் என்ற மகனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அருண் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து கோவையில் உள்ள கோவில்மேட்டில் தனது 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசிந்து வந்துள்ளார்.

கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த திவ்யா அப்பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது கால்டாக்சி ஓட்டுனர் ராஜதுரை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர். திவ்யாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற ராஜதுரை ஊரடங்கு உத்தரவு காரணத்தால் கள்ளக்காதலியின் வீட்டிலேயே தங்கியுள்ளார்.
இதையடுத்து இருவரின் சல்லாபத்திற்கு சிறுவன் அபிஷேக் தடையாக இருந்துள்ளான். இதனால் திவ்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜதுரை இருவரும் இணைந்து சிறுவனை தாக்கியுள்ளனர். காயமடைந்த சிறுவனுக்கு மருந்துகளையும் வீட்டிற்கே வாங்கி வந்து கொடுத்தும் சரியாகவில்லை. சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமானதால் ஆம்புலன்ஸை அழைத்தனர்.

சிறுவனின் உடலை சோதித்து பார்த்தபோது உடல் முழுக்க காயம் இருப்பது தெரிந்தது. மேலும் சிறுவன் உயிரிழந்துவிட்டதாகவும் கூறினர். பின்னர் இத்தகவல் காவல்துறைக்கு செல்லவே, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தன்னுடைய மகன் மாடியில் இருந்து தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக திவ்யா நாடகமாடினார். சிறுவன் உடலில் இருந்த காயங்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கடைசியாக நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் திவ்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜதுரை இருவரும் சிறுவனை அடித்துக் கொன்ற உண்மையை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்றதாயே மகனை கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகப்புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி இயக்குனர் மரணம்! ஆஸ்கர் நாயகனுக்கு பலர் இரங்கல்!

0

உலகப்புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி இயக்குனர் மரணம்! ஆஸ்கர் நாயகனுக்கு பலர் இரங்கல்!

உலகம் முழுவதும் சிறியவர் முதல் முதியவர்கள் வரை நகைச்சுவையாக ரசிக்க வைக்கும் கார்ட்டூன்கள் “டாம் அண்ட் ஜெர்ரி” ஆகும். இந்நிகழ்ச்சியை விரும்பாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு உலக மக்களின் மனதில் இடம்பிடித்த நிகழ்ச்சி ஆகும். இதில் பூனை மற்றும் எலியை சண்டையிடும் போட்டியாளர்களாக அதன் இயக்குனர் ஜீன் டெய்ச் உருவாக்கியிருப்பார்.

அனைவரும் ரசிக்கும் வகையில் எலி மற்றும் பூனையின் சேட்டைகளை நவீன காலத்து டெக்லாஜியாக மாற்றி வேடிக்கையான முறையில் வெளியிட்டு வெற்றிகண்டவர் இயக்குனர் ஜீன் டெய்ச். இந்த கார்ட்டீன் தொடர் 1940 ஆம் ஆண்டு வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பார்பெரா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. 1940 முதல் 1958 வரை இவர்கள் இருவரும் எழுதி இயக்கி வந்தனர்.

இதையடுத்து இதற்கு உயிர்கொடுக்கும் விதமாக “டாம் அண்ட் ஜெர்ரி” கதையை இயக்கி வந்தவர்தான் ஜீன் டெய்ச். இவர் தனது ஆரம்ப காலத்தில் இராணுவ வீரராகவும் பின்னர் வட அமெரிக்காவில் விமானியாகவும் பணியாற்றி வந்தார். 1944 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக வேலையிலிருந்து விலகி கார்ட்டூன் சித்திரங்களை வரைந்து வந்தார். வித்தியாசமான கார்ட்டூன் சித்திரங்கள், ஓவியங்கள், கதைகள் போன்ற சிறப்பான படைப்புகளுக்கு ஆஸ்கர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் ஜீன் டெய்ச் பெற்றுள்ளார்.

1960 ஆண்டில் இவரது கார்ட்டீன் ஆதிக்கம் எழுச்சியுற்றது எனலாம். அந்த காலகட்டத்தில் டாம் அண்ட் ஜெர்ரி மற்றும் பாப்பாய் என்ற புகழ்மிக்க கார்ட்டூன் சித்திரங்களை உலகம் முழுக்க மக்களை ரசிக்க வைத்தார். இதுவரை 13 டாம் அண்ட் ஜெர்ரி கதைகள் இவரது இயக்கத்தில் வெளிவந்துள்ளன. சத்தான கீரையை சாப்பிட்டால் உடலுக்கு சக்தி ஏறும் என்று பாப்பாய் நிகழ்ச்சியின் மூலமாக குழந்தைகள் மனதில் பதிய வைத்தார். வயதின் முதிர்ச்சியால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ப்ராக் நாட்டிலுள்ள தனது வீட்டிலேயே கடந்த 16 ஆம் தேதி உயிரிழந்தார். “மன்றோ” என்னும் பிரபல கார்ட்டூன் குறும்படத்திற்காக ஆஸ்கார் விருது வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா! உலகம் முழுவதும் 1.70 லட்சம் உயிரிழப்பு!

0

குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா! உலகம் முழுவதும் 1.70 லட்சம் உயிரிழப்பு!

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அங்கு ராஷ்டிரபதிபவனில் இருக்கும் 125 குடும்ப உறுப்பினர்களும் தனிமைபடுத்தியுள்ளனர்.

சீனாவில் உருவான கொரோனா பாதிப்பு உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு பரவி மனித உயிர்களை கொத்து கொத்தாக சூரையாடியது. இதனால் உலகத்தின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிழந்தோர் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 2,842 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.70 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் இருந்து 6 லட்சத்து 46 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும் 56,766 பேர் கவலைக்கிடமான நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட இந்த பாதிப்பினால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்சு, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதித்துள்ளது.

தல… அஜித் செய்த அட்டகாசம்! 600 கி.மீ பைக்கில் பயணம் செய்த ரகசியம் என்ன.?

0

தல… அஜித் செய்த அட்டகாசம்! 600 கி.மீ பைக்கில் பயணம் செய்த ரகசியம் என்ன.?

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகர் அஜித்குமார். தற்போது அவர் நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பின் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரங்கு அமலுக்கு முன் வலிமை படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஹைதராபாத்தில் நடத்தினர். சூட்டிங் முடிந்த நிலையில் அஜித் சென்னை செல்வதற்காக விமான டிக்கெட் தயாராக இருந்த நிலையில், அதனை ரத்து செய்துவிட்டு ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு பைக்கில் வந்துள்ளார். நடிகர் அஜித் ஒரு மிகச்சிறந்த பைக்ரேசர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அவர் நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவர். ஹைதராபாத்தில் இருந்து கிட்டத்தட்ட 600 கிலோமீட்டர் சென்னை வரை பைக்கிலேயே வந்த காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு சென்னையில் அவர் பைக்கில் சென்ற சம்பவமும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று 25 லட்சத்தை நெருங்குகிறது : பதற வைக்கும் பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 24 லட்சத்து 81 ஆயிரத்து 026 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 6 லட்சத்து 46 ஆயிரத்து 575 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

கொரோனா தொற்று 25 லட்சத்தை நெருங்குகிறது : பதற வைக்கும் பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 18,364 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 573 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 2,842 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 4,666/232
டெல்லி – 2,003/45
குஜராத் – 1,939/67
தமிழ்நாடு – 1,520/17
தெலுங்கானா – 844/23
கேரளா – 402/03
ராஜஸ்தான் – 1,535/23
உத்தரபிரதேசம் – 1,184/18
ஆந்திர பிரதேசம் – 646/15
கர்நாடகா – 408/16
மத்திய பிரதேசம் – 1,407/70
ஜம்மு & காஷ்மீர் – 368/15
மேற்கு வங்கம் – 339/12
பஞ்சாப் – 219/16
ஹரியானா – 233/03
பீகார் – 96/02
அசாம் – 35/01
சண்டிகர் -26/0
உத்தர்கண்ட் – 44/0
லடாக் – 18/0
அந்தமான் & நிக்கோபார் -11/0
சத்தீஸ்கர் – 36/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 39/01
ஒடிசா – 68/01
பாண்டிச்சேரி – 07/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 42/02
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா 11/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 457 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

கொரோனா தொற்று 25 லட்சத்தை நெருங்குகிறது : பதற வைக்கும் பட்டியல்!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

கடப்பா கல்லை திருடிய திமுக பிரமுகர்! இணையத்தில் பரவும் சிசிடிவி காட்சி! நடந்த உண்மை என்ன.?

0

கடப்பா கல்லை திருடிய திமுக பிரமுகர்! இணையத்தில் பரவும் சிசிடிவி காட்சி!
நடந்த உண்மை என்ன.?

ஒரு கடைக்கு முன்பாக போட்டிருந்த கடப்பா கல்லை திமுக பிரமுகர் ஒருவர் திருடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் அருகே புதுப்பேட்ட பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கிருஷ்ணன் என்பவர் அதே பகுதியில் கார்ஷெட் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த நள்ளிரவு இவரும் அவரது உறவினர் ஒருவரும் இருசக்கர வாகனத்தில் அவரது கார்ஷட் இருக்கும் பகுதிக்கு செல்கின்றனர். அங்கு செல்லும் வழியில் கடை ஒன்றின் முன்பு அமருவதற்காக கடப்பா கல் போடப்பட்டிருந்தது.

இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கிருஷ்ணனும் அவரது உறவினரும் அந்த கடைக்கு முன்பு வாகனத்தை நிறுத்தி சுற்றி பார்த்துவிட்டு திடீரென உட்காரவைத்திருந்த கடப்பா கல்லை தூக்கி பைக்கில் வைத்து எடுத்து செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இச்சம்பவம் பற்றி கிருஷ்ணன் பேசியதாவது; போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கல்லை எடுத்து பக்கத்தில் வைத்தேன். அதை நான் எடுத்துச் செல்லவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், கல்லை எடுத்து வைத்தது நான்தான் என்று தெரியாமல் கடைக்கு சொந்தக்காரர் அந்த சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளார். இதன்பிறகு என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். இது மட்டுமல்லாமல் நான் தற்போது திமுக வில் எந்த பொறுப்பிலும் இல்லை. என்னை பிடிக்காத நபர்கள் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் ஊறினார்.

பிரிந்து கிடந்த நண்பர்கள் சேர்ந்து செய்த பிரியாணி விருந்து : சொந்த செலவில் சூன்யம் வைத்து கொண்ட பரிதாபம்..!!

0

மயிலாடுதுறை அருகேயுள்ள வில்லியநல்லூர் கிராம இளைஞர்கள் ஊரடங்கால் பிரிந்து கிடந்தவர்கள் பொழுது போகாமல் ஒன்று சேர்ந்தனர். என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம் என திட்டமிட்டனர்.

பிரியாணி என்றதும் மேலும் இருபது பேர் கூட்டணியில் சேர்ந்து கொண்டனர். உடனே, ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த வாய்க்கால் மதகு ஓரமாக தடபுடலாகப் பிரியாணி தயாரானது.

அந்த நண்பர்கள் அனைவரும் கூட்டாக அமர்ந்து சமூக இடைவெளி விடாமல் ருசித்துள்ளனர். அதனை அப்படியே வீடியோவாக எடுத்தவர்கள் பெருமை பீற்றிக்கொள்ளும் விதமாக டிக்டாக்கில் பதிவிட்டனர்.

ஊரடங்கு சமயத்தில் சமூக விலகலை கடைபிடிக்காமல் இவர்கள் பிரியாணி விருந்து சாப்பிட்டு அதை டிக் டாக்கிலும் வலம்வர வைத்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தகவல் கிடைத்து விரைந்த காவல்துறையினர் மணல்மேடு காவல்துறையினர், கலைமணி, ராஜேஷ், வெங்கடேஷ், தினேஷ், சதீஷ்குமார், அரவிந்த், அருண், சிவா, பாலமுருகன், பாலச்சந்தர் ஆகிய 10 பேரைக் கைது செய்தனர்.

பிரிந்து கிடந்த நண்பர்கள் பிரியாணியை ருசிக்க ரூம் போட்ட இடத்தில் பிடித்த போலீசார் மற்றவர்களையும் தேடியும் வருகின்றனர்.

கொரோனா தொற்று 24 லட்சத்தை கடந்தது : பதற வைக்கும் பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 24 லட்சத்து 8 ஆயிரத்து 211 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 6 லட்சத்து 24 ஆயிரத்து 939 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

கொரோனா தொற்று 24 லட்சத்தை கடந்தது : பதற வைக்கும் பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 16,668 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 531 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 2,302 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 4,200/223
டெல்லி – 1,893/42
குஜராத் – 1,604/58
தமிழ்நாடு – 1,477/15
தெலுங்கானா – 809/18
கேரளா – 400/03
ராஜஸ்தான் – 1,431/11
உத்தரபிரதேசம் – 974/14
ஆந்திர பிரதேசம் – 647/15
கர்நாடகா – 390/16
மத்திய பிரதேசம் – 1,407/72
ஜம்மு & காஷ்மீர் – 341/15
மேற்கு வங்கம் – 310/12
பஞ்சாப் – 202/13
ஹரியானா – 246/03
பீகார் – 86/02
அசாம் – 35/01
சண்டிகர் -23/0
உத்தர்கண்ட் – 42/0
லடாக் – 18/0
அந்தமான் & நிக்கோபார் -11/0
சத்தீஸ்கர் – 36/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 39/01
ஒடிசா – 61/01
பாண்டிச்சேரி – 07/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 35/02
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
Megalaya 11/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 411 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

சென்னை – 285/06
கோயம்புத்தூர் – 133/0
திருப்பூர் – 108/0
திண்டுக்கல் – 74/01
நெல்லை – 62/0
ஈரோடு – 70/01
திருச்சி – 46/1
நாமக்கல் – 50/0
ராணிப்பேட்டை – 39/0
செங்கல்பட்டு – 53/0
மதுரை – 46/01
கரூர் – 42/0
தேனி – 43/01
தூத்துக்குடி – 33/01
விழுப்புரம் – 26/01
கடலூர் – 26/0
சேலம் – 24/0
திருவள்ளூர் – 46/0
திருவாரூர் – 26/01
விருதுநகர் – 19/0
தஞ்சாவூர் – 46/01
நாகப்பட்டினம் – 43/0
திருப்பத்தூர் – 17/0
திருவண்ணாமலை – 12/0
கன்னியாகுமரி – 16/0
காஞ்சிபுரம் – 09/0
சிவகங்கை – 11/01
வேலூர் – 22/01
நீலகிரி – 09/01
தென்காசி – 22/0
கள்ளக்குறிச்சி – 03/0
ராமநாதபுரம் – 10/1
அரியலூர் – 02/0
பெரம்பலூர் – 04/0

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.