Home Blog Page 5669

அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு! முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

0

அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு! முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளையும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது.அந்த வகையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த கொரோனா பாதிப்பை கட்டுபடுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் தான் கொரோனா தொற்றை தடுக்க உதவும் முக்கிய நடவடிக்கையாக சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநில அரசும் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் விதமாக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் கேரளா அரசு சிறப்பான நடவடிக்கைகள் மற்ற மாநில மக்களும் பாராட்டும் வகையில் பெயர் பெற்றுள்ளது.

இதனையடுத்து மற்ற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் கேரளா மாடல் என்ற முன்மாதிரியும் கொரோனா தடுப்பு விஷயத்தில் உருவானது. இந்நிலையில் தான் திடீரென கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மேற்கொண்டு இருக்கும் ஒரு அதிரடி முடிவு பெரும் சர்ச்சையில் கொண்டு போய்விட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்களின்  சம்பளத்தை கட் செய்ய அவர் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து மே முதல் செப்டம்பர் வரை 5 மாதங்களுக்கு அரசு ஊழியர்களின் 6 நாட்கள் சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் பிடிக்க அவர் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலானது அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணமகளே இல்லாமல் நடந்த திருமணம் : ஆச்சரியப்படுத்திய புது யுக தம்பதிகள்!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடிவருவதால் கடந்த மாதம் பிரதமர் மோடி மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த இன்னும் கால அவகாசம் தேவைப்பட்டதால் அந்த ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார் மோடி.

இந்த அதிரடி அறிவிப்பு வெளியானதால் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பல தரப்பினர் ஏற்பாடு செய்து வைத்த நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளை ஊரடங்கு முடிந்த பிறகு நடத்தலாம் என்று ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் தார்காடில் மணமகளே இல்லாமல் வித்தியாசமான திருமணம் ஒன்று நடந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இஸ்லாமிய முறையில் நடந்த இந்த திருமணம் முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே நடந்தது தான் இந்த ஆச்சர்யத்திற்கு காரணம்.

இந்த நிகழ்ச்சியில் மணமகன் தார்காட்டில் உள்ள அவரது வீட்டில் தனது பெற்றோருடன் தயார் நிலையில் இருக்கிறார். அதே நேரத்தில் மணமகள் தஜாமா தலையில் முக்காடு போட்டபடி கோபாலில் உள்ள தங்கள் வீட்டில் பெற்றோருடன் இருக்கிறார்.

மணமக்கள் இருவரும் தங்கள் தாய் தந்தையருடன் வீடியோ கால் மூலம் இணைகிறார்கள், இவர்களுடன் ஜமாத்தினர் மற்றும் உறவினர்கள் வீடியோ கால் செய்து இணைகிறார்கள். ஜாமாத்தினர் வழிமுறைகளை சொல்ல சொல்ல அதை அவ்வாறே செய்து முடித்த மணமக்களுக்கு ஆன்லைனில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.

ஊரடங்கு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியோடு நடந்து முடிந்திருந்தால் இந்த திருமணம் இயல்பாய் நடந்து முடிந்திருக்கும் என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ஊரடங்கு நடவடிக்கைகள் முடிந்த பிறகு மணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வர உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவின் கடலோர பகுதியில் நிலநடுக்கம் : இருக்கிற கொரோனா பீதியில் சுனாமி பயத்தோடு தவிக்கும் மக்கள்!

0

உலகமே கொலைகார கொரோனா தொற்றால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி பெரும் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் 300 கோடிக்கும் அதிகமான மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வரும் சூழ்நிலையில் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் கிழக்கு கடலோர பகுதியான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சட்ஸ்கை நகரில் இருந்து 177 கி.மீ தொலைவில் தென்கிழக்கே இன்று அதிகாலை இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 44 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாகவும், அது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. இதனை கடலோர பகுதி மக்கள் உணரவில்லை என்றும் நிலநடுத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அந்நாடு தெரிவிக்கிறது. மேலும் நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிக்கப்பட்டது.

என்ன தான் அந்நாட்டு அரசு மக்களின் அச்சத்தை போக்கினாலும் கோரோனா பயத்தில் இருப்பவர்கள் இதை கேட்டு சுனாமியும் வந்துவிடுமோ என்று மேலும் பதற்றமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று 26 லட்சத்தை தாண்டியது : பதற வைக்கும் பட்டியல் உள்ளே!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 26 லட்சத்து 23 ஆயிரத்து 415 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 83 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 7 லட்சத்து 09 ஆயிரத்து 694 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

கொரோனா தொற்று 26 லட்சத்தை தாண்டியது : பதற வைக்கும் பட்டியல் உள்ளே!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 20,471 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 652 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 3,960 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 5,221/251
டெல்லி – 2,156/47
குஜராத் – 2,272/95
தமிழ்நாடு – 1,629/18
தெலுங்கானா – 945/23
கேரளா – 427/03
ராஜஸ்தான் – 1,801/25
உத்தரபிரதேசம் – 1,412/21
ஆந்திர பிரதேசம் – 813/24
கர்நாடகா – 425/17
மத்திய பிரதேசம் – 1,592/80
ஜம்மு & காஷ்மீர் – 380/05
மேற்கு வங்கம் – 423/15
பஞ்சாப் – 251/16
ஹரியானா – 254/03
பீகார் – 126/02
அசாம் – 35/01
சண்டிகர் -27/0
உத்தர்கண்ட் – 46/0
லடாக் – 27/0
அந்தமான் & நிக்கோபார் -17/0
சத்தீஸ்கர் – 36/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 39/01
ஒடிசா – 82/01
பாண்டிச்சேரி – 07/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 45/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா 12/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 635 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

கொரோனா தொற்று 26 லட்சத்தை தாண்டியது : பதற வைக்கும் பட்டியல் உள்ளே!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் மீனை வாங்க குவிந்த மக்கள்! சமூக இடைவெளி இல்லாமல் கொரோனா உண்டாகும் அபாயம்!

0

ஊரடங்கு நேரத்தில் மீனை வாங்க குவிந்த மக்கள்! சமூக இடைவெளி இல்லாமல் கொரோனா உண்டாகும் அபாயம்!

ஊரடங்கு உத்தரவை மீறி மீன் வாங்க கூட்டம் கூட்டமாக மக்கள் கூடிய சம்பவம் மைசூரில் அரங்கேறியுள்ளது. இங்கு சமூக இடைவெளி என்பது கேள்விகுறியாகி உள்ளது.

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. குறிப்பாக மைசூர் பகுதியில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நிறுவனம் ஒன்றில் சீன மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்து வந்த காரணத்தால் அங்கு வேலைபார்த்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அங்கு பணிபுரிந்து 80 நபர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

இந்நிலையில் கொரோனா தொற்று அதிகமான நஞ்சன் கூடு பகுதியில் மக்கள் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றி திரிகின்றனர். குறிப்பாக அப்பகுதி கிராமத்தில் உள்ள ஏரிகளில் மீன்பிடி வேலை தினமும் நடைபெறுவதால் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. இதனால் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் போன்ற எவ்வித முன்னெச்சரிக்கை பாதுகாப்பும் இல்லாமல் மீனை வாங்க கூட்டமாக மக்கள் திரண்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பாதுகாப்பு குறித்து மாநில அரசு, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பலர் விதிமுறைகளை பின்பற்றாமல் நடப்பது பலருக்கு கொரோனா அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊரடங்கால் ஏற்பட்ட மத ஒற்றுமை! மனிதநேயத்துடன் உதவிய முஸ்தபா அறக்கட்டளை! எங்கே நடந்தது தெரியுமா.?

0

ஊரடங்கால் ஏற்பட்ட மத ஒற்றுமை! மனிதநேயத்துடன் உதவிய முஸ்தபா அறக்கட்டளை! எங்கே நடந்தது தெரியுமா.?

கொரோனா பாதிப்பில் இந்து ஐயர் ஒருவருக்கு இஸ்லாமியர்கள் நிவாரண உதவி அளித்திருப்பது மத நல்லிணக்கத்தை உண்டாக்கியுள்ளது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று உலகத்தில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பல லட்சம் பேரை பாதித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1லட்சத்து 77 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்சு, இத்தாலி, பிரிட்டன், வடகொரியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தொற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால் இந்தியா முழுக்க மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வரும் மக்களுக்கு அரசியல் கட்சிகள், சமூக சேவகர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஐயங்கடை பகுதியில் பள்ளிவாசல் ஒன்று இயங்கி வருகிறது. அந்த மசூதியில் உள்ள இமாம் முகமது ருஸ்தும்அலி என்பவர் ஏற்பாட்டில் ‘ரசா ஏ முஸ்தபா அறக்கட்டளை ” என்ற அறக்கட்டளை ஒன்று இயங்கி வருகிறது. இதன் மூலமாக பாதித்தோருக்கு இஸ்லாமியர்கள் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு வீதியில் அமைந்துள்ள விநாயகர் கோவில் அர்ச்சகர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உதவியாக அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். அதை அவரும் நட்போடு வாங்கிக் கொண்டார். இச்சம்பவம் இணையத்தில் பரவி பலரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறக்கட்டளை சார்பில் கூறியதாவது; ஆபத்து நேரத்தில் தவிப்பவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியையும், இரண்டு மதங்களுக்கிடையே சகோதரத்துவத்தை உண்டாக்குவது போன்ற நிம்மதி தருவதாக கூறியுள்ளார்.

விமான போக்குவரத்து ஊழியருக்கு கொரோனா! உடனடியாக தனிமைபடுத்த நடவடிக்கை தீவிரம்.!

0

விமான போக்குவரத்து ஊழியருக்கு கொரோனா! உடனடியாக தனிமைபடுத்த நடவடிக்கை தீவிரம்.!

டெல்லி: விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதித்த நபர் கடந்த 15 ஆம் தேதி வரை அலுவலகத்தில் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிற அலுவலக ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ள காரணத்தால் அந்த ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அங்கிருந்த 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களை தனிமைப்படுத்தி சோதனை செய்ததும் குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் இதற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் தரப்பில் மறுப்பு கூறப்பட்டது.

இதேபோல் நாடாளுமன்றத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் விமான போக்குவரத்து அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்காரணமாக அவருடன் பணியாற்றியவர்களை மத்திய அரசு தனிமைபடுத்துமாறு கூறியுள்ளது.

இந்தியா நாடு முழுவதுமான கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து 3,869 பேர் மருத்துவ சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மேலும் பரவி வருகிறது. தமிழகத்தில் 1,596 பேர் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கஞ்சாவை ஒழிக்க திமுக கவுன்சிலர் போராட்டம்! அவரது மகனே கஞ்சா விற்று கைதான அதிர்ச்சி சம்பவம்.!!

0

கஞ்சாவை ஒழிக்க திமுக கவுன்சிலர் போராட்டம்! அவரது மகனே கஞ்சா விற்று கைதான அதிர்ச்சி சம்பவம்.!!

கஞ்சாவிற்கு எதிராக திமுக கட்சியை சேர்ந்த தாய் போராட்டம் நடத்திய நிலையில் திமுக இளைஞரணியில் இருக்கும் அவரது மகன் பிரவீன் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட சமயநல்லூர் பகுதி திமுக கட்சியின் ஒன்றிய கவுன்சிலராக செல்வி ஆரோக்கியாமேரி பதவி வகித்து வருகிறார். இவர் சில வாரங்களுக்கு முன்பு சமயநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாகவும், அதனை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்று அப்பகுதி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

இந்நிலையில் நேற்று இளைஞர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், கஞ்சா விற்பனை நடப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் ரோந்து பணியின் போது குறிப்பிட்ட பகுதியை ஆய்வு செய்தார். அப்போது திமுக கவுன்சிலர் செல்வி ஆரோக்கியாமேரியின் மகனான பிரவீன் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 750 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இதன் பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தவர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி பணமோசடி செய்து அவர்களின் பணத்தை அபகரித்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் மேலும் பல குற்றச் சம்பவங்களில் பிரவீன் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

திமுக ஒன்றிய கவுன்சிலராக தாய் கஞ்சாவுக்கு எதிராக போராடியதும், திமுக கட்சியில் இளைஞரணி நிர்வாகியாக மகன் பணியாற்றி கொண்டே கஞ்சா விற்பனை செய்து கைதான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மாஸ்டர் படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு

0

மாஸ்டர் படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. இதில் திரைப்படத் துறையும் அடங்கும்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழ் திரையுலகில் இந்த மாதம் வெளியாக வேண்டிய பல படங்கள் வெளியாவதில் கடும் பிரச்சினையை சந்தித்து வருகின்றன. இதில் குறிப்பாக தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படமும் அடங்கும்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க நடிகர் விஜய் நடித்துள்ளார். இவருடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனையடுத்து இப்படம் இந்த மாதம் 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. தற்போதைய நிலையில் மாஸ்டர் படத்தின் வெளியீடு விஜய் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிய அப்டேட்டாக மாஸ்டர் படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான வேலைகளை வரும் மே 3 ஆம் தேதிக்கு பிறகு தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்த மருத்துவரை புதைக்க கிறித்தவர்கள் எதிர்ப்பு! எங்கே போனது மனிதநேயம்! தடுத்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாயுமா.?

0

இறந்த மருத்துவரை புதைக்க கிறித்தவர்கள் எதிர்ப்பு! எங்கே போனது மனிதநேயம்! தடுத்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாயுமா.?

கொரோனாவால் பாதித்து உயிரிழந்த மருத்துவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நரம்பயில் நிபுணர் மற்றும் 30 வருடங்களாக மக்களுக்கு மருத்துவ சேவை செய்த டாக்டர் சைமன் ஹெர்குலஸ் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலை அடக்க செய்ய நேற்று முன்தினம் கீழ்பாக்கத்தில் உள்ள இடுகாட்டிற்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். அப்போது அங்கிருந்த சிலர் மருத்துவரின் உடலை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதன்பிறகு வேறொரு மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறந்த மருத்துவர் சைமன் அவர்கள் ஒரு கிறித்தவர் மட்டுமல்லாமல் அவரை புதைக்க சென்ற இடமும் ஆர்.சி என்னும் இறந்த கிறித்தவர்கள் புதைக்கப்படும் இடமாகும். மருத்துவரின் உடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது வேறு யாருமில்லை, அதே இயேசுவை வழிபடும் கிறித்தவர்கள்தான் என்ற உண்மை வெளியாகியுள்ளது. உலகமே கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காக பல்வேறு முயற்சிகளை ஒற்றுமை உணர்வோடு மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் துளியும் மனிதநேயம் இல்லாமல் நடந்துகொண்ட கிறித்தவர்களை ஆண்டவன் இயேசுவே தண்டிப்பார் என்று நடுநிலை கிறித்தவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கிறித்தவர்களின் தவறை மறைத்து பொதுமக்கள் என்று உண்மையை பூசி மொழிகியதாக தகவல்கள் கூறப்படுகிறது
மனிதாபிமானம் இல்லாமல் ஒரே சமயத்தை சேர்ந்த ஆர்.சி மற்றும் பெந்தகோஸ்தே கிறித்தவர்களே இப்படி நடந்து கொண்டதை மறைத்து பொத்தாம் பொதுவாக செய்தியை வெளியிடுவதாக சமூக வலைதளத்தில் கருத்து விவாதமும் நடந்து வருகிறது.
இந்நிலையில் மருத்துவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.