Home Blog Page 5672

விஜய் படத்தின் ஹீரோயின் வெளியிட்ட செம ஹாட் போட்டோ : அவரை ரசிகர்கள் முந்தானையை மூட சொல்லியா கலாய்ப்பது!

0

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தான் இளைய தளபதி விஜய். இவர் பிகில் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இந்த படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், குட்டி ஸ்டோரி பாட்டு’ என அடுத்தடுத்து வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் நாயகி மாளவிகா ஏற்கனவே முன்னணி விளம்பர மாடலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் மாடலாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்ததால் பெரிய ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது.

இந்த நிலையில் மாளவிகா சமீபத்தில் வெள்ளைப் புடவையில் செம ஹாட்டான போட்டோக்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் முதல்ல முந்தானையை சரியா மூடுமா என மாறி மாறி கலாய்த்து வருகின்றனர்.

ஒரு பக்கம் ரசிகர்கள் கலாய்த்தாலும் மற்றவர்கள் இதனை பார்த்து ரசித்து மாளவிகா மோகனின் அழகை வர்ணித்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த மாதிரியான செயலால் அவர் வெளியிட்ட போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆல்ப்ஸ் மலையை அலங்கரித்த இந்திய கொடி! கொரோனா விவகாரத்தில் இந்தியாவிற்கு சுவிட்சர்லாந்து பாராட்டு.!!

0

ஆல்ப்ஸ் மலையை அலங்கரித்த இந்திய கொடி! கொரோனா விவகாரத்தில் இந்தியாவிற்கு சுவிட்சர்லாந்து பாராட்டு.!!

கொரோனா பாதிப்பை சிறப்பான முறையில் எதிர்கொண்டு வரும் இந்தியாவை பாராட்டும் வகையில் சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் இந்திய கொடியை அந்நாட்டு அரசு ஜொலிக்க வைத்துள்ளது.

இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பல்வேறு நாடுகள் ஏற்கனவே பாராட்டியுள்ள நிலையில், உலக சுகாதார மையமும் பாராட்டியுள்ளது. இதேபோல் தற்போது சுவிட்சர்லாந்து இந்திய நாட்டை வித்தியாசமான முறையில் வெகுவாக பாராட்டியுள்ளது. இந்தியாவை கெளரவிக்கும் விதமாக அந்நாட்டில் உள்ள உலகளவில் பிரபலமான ஆல்ப்ஸ் மேட்டர்ஹார்ன் மலை முழுவதும் இந்திய கொடிகளின் மூவர்ணம் போர்த்தியவாறு லேசர் விளக்குகளால் மின்னியது. சுவிட்சர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் இதனை டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.

இக்கட்டான அபாய சூழலில் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உதவியதற்காக இந்த கெளரவத்தை அளிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் கருத்து கூறிய மோடி, கொரோனா பாதிப்பை உலக நாடுகளே ஒற்றுமையுடன் எதிர்த்து வருகிறது. இந்த பெருந்தொற்று நோயை மனிதம் வெல்லும் என்று கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்து ஒளி கலைஞர் கேரி என்பவர் சுமார் 14,690 அடி உயரமுள்ள ஆல்ப்ஸ் மலையில் இந்தியாவின் கொடியை ஒளிரச் செய்துள்ளார். இதற்கு முன்பு அமெரிக்காவை கெளரவிக்கும். விதமாக அந்நாட்டு கொடியை அங்கு ஒளிர செய்தது குறிப்பிடத்தக்கது.

23 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் விரிவான பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 23 லட்சத்து 10 ஆயிரத்து 572 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 5 லட்சத்து 90 ஆயிரத்து 682 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

23 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் விரிவான பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 15,283 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 496 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 2,015 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 3,648/201
டெல்லி – 1,708/42
குஜராத் – 1,376/53
தமிழ்நாடு – 1,372/15
தெலுங்கானா – 969/14
கேரளா – 396/03
ராஜஸ்தான் – 1,229/11
உத்தரபிரதேசம் – 846/14
ஆந்திர பிரதேசம் – 791/18
கர்நாடகா – 384/14
மத்திய பிரதேசம் – 1,355/69
ஜம்மு & காஷ்மீர் – 603/15
மேற்கு வங்கம் – 287/12
பஞ்சாப் – 202/13
ஹரியானா – 225/03
பீகார் – 85/02
அசாம் – 35/01
சண்டிகர் -21/0
உத்தர்கண்ட் – 42/0
லடாக் – 18/0
அந்தமான் & நிக்கோபார் -11/0
சத்தீஸ்கர் – 36/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 38/01
ஒடிசா – 60/01
பாண்டிச்சேரி – 07/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 33/02
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா 11/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 283 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

சென்னை – 235/06
கோயம்புத்தூர் – 128/0
திருப்பூர் – 108/0
திண்டுக்கல் – 69/01
நெல்லை – 60/0
ஈரோடு – 70/01
திருச்சி – 46/1
நாமக்கல் – 50/0
ராணிப்பேட்டை – 39/0
செங்கல்பட்டு – 50/0
மதுரை – 44/01
கரூர் – 42/0
தேனி – 43/01
தூத்துக்குடி – 26/01
விழுப்புரம் – 26/01
கடலூர் – 20/0
சேலம் – 24/0
திருவள்ளூர் – 46/0
திருவாரூர் – 21/01
விருதுநகர் – 17/0
தஞ்சாவூர் – 36/01
நாகப்பட்டினம் – 40/0
திருப்பத்தூர் – 17/0
திருவண்ணாமலை – 12/0
கன்னியாகுமரி – 16/0
காஞ்சிபுரம் – 08/0
சிவகங்கை – 11/01
வேலூர் – 22/01
நீலகிரி – 09/01
தென்காசி – 18/0
கள்ளக்குறிச்சி – 03/0
ராமநாதபுரம் – 10/1
அரியலூர் – 02/0
பெரம்பலூர் – 04/0

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

சீனாவில் 94 சதவீத இறைச்சி கடைகள் திறப்பு! அசைவ உணவுகள் அமோக விற்பனை! திருந்தவே மாட்டிங்களா..?

0

சீனாவில் 94 சதவீத இறைச்சி கடைகள் திறப்பு! அசைவ உணவுகள் அமோக விற்பனை! திருந்தவே மாட்டிங்களா..?

சீனாவில் மீண்டும் அசைவ உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் அதிகம் திறக்கப்பட்டு அமோக விற்பனை நடந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் சீனா மீது கோபத்தில் இருக்கின்றன.

சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவி பல லட்சம் உயிர்களை பலிவாங்கியது. இதையடுத்து அங்கு இருந்த அனைத்து மார்க்கெட்டையும் மூடுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்சு, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இன்னும் கொரோனாவின் தீவிர பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தினசரி உயிரிழப்பு குறைந்தாலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சீனாவில் வெட் மார்க்கெட் எனப்படும் சைவ மற்றும் அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படும் மார்க்கெட்டில் இறைச்சி கடைகள் உட்பட 94 சதவீத கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் உலக நாடுகளை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா உருவான வூகான் பகுது கடல் உணவு சந்தைக்கு மட்டுமே பூட்டி சீல் வைத்துள்ளனர். அதோடு முதலை கறி, பாம்பு கறி, வன விலங்குகளை மார்க்கெட்டில் விற்கவும் சீன அரசு தடை விதித்துள்ளது.

கடல் உணவான நண்டு, மீன் போன்ற உணவுகளின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. சுகாதாரமற்ற இறைச்சிகள் சீனாவில் விற்கப்படுகிறது. அதிலிருந்து புதிய வைரஸ்கள் உண்டாகலாம் என்கிற பயத்தில் உலக நாடுகள் சீனா மீது கோபத்தில் உள்ளன. கொரோனாவின் பாதிப்பே இன்னும் சீராக தீர்க்கமுடியாத சூழலில் சீனாவில் அசைவ விற்பனைக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளன. இதுசம்பந்தமாக அமெரிக்க எம்பிக்கள் அந்நாட்டு சீன தூதரகத்தில் கடிதம் ஒன்றை அனுப்பி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மேலும் சீனாவின் அசைவ மார்க்கெட்டுகளை திறக்க அனுமதித்த உலக சுகாதார அமைப்பை ஆஸ்திரேலிய பிரதமர் ஸகாட் மோரிசன் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு: மே மாத ரேசன் நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசாணை வெளியீடு!

0

கொரோனா பாதிப்பு: மே மாத ரேசன் நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசாணை வெளியீடு!

கொரோனா பரவலை தடுக்கு தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டுக்கே சென்று வழங்கியது. இதனுடன் ரூ.1,000 பணமும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் மக்களின் அடிப்படை உணவு தேவையின் சிக்கலை புரிந்து தமிழக அரசே நடவடிக்கை எடுத்துள்ளது. மே மாதம் தேவையான கொரோனா நிவாரண இலவச பொருட்களை வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.184.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1300 ஐ தாண்டியுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸ் பரவலை தடுக்க தமிழக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் பகல் இரவாக தீவிர பணியாற்றி வருகின்றனர். மேலும் அனைவரும் வீட்டில் இருக்குமாறும் அவசர தேவைக்காக வெளியே வருவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறி மசூதியில் கூட்டுத் தொழுகை! போலீசார் நடத்திய பிரம்படி பூஜையில் தலைதெறிக்க ஓட்டம்.!!

0

ஊரடங்கை மீறி மசூதியில் கூட்டுத் தொழுகை! போலீசார் நடத்திய பிரம்படி பூஜையில் தலைதெறிக்க ஓட்டம்.!!

கொரோனா பாதிப்பு பரவாமல் இருக்க போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டுத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹவேரி பகுதியில் கொரோடா ஊரடங்கு உத்தரவை பற்றி தெரிந்தும் வீட்டில் இருக்காமல் தனிமனித இடைவெளி கடைபிடிக்காமல் தொழுகை நடத்துவதாக அப்பகுதி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மசூதிக்கு சென்று அங்கிருந்தவர்களை எச்சரித்து வெளியேறுமாறு கூறினர்.

காவல்துறையினரின் வருகைக்கு பிறகு மசூதியில் இருந்து ஒவ்வொருவராக வெளிய வரத்தொடங்கினர். மசூதிக்கு வெளியே இருந்த காவல்துறையினர் கையில் இருந்த பிரம்பின் மூலம் அடியை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சமூக விலகல் இல்லாமல் கூட்டமாக சேர்ந்து வழிபாடு நடத்துவது தவறில்லையா.? என்று போலீசார் கேள்வி கேட்டு எல்லோரையும் உதை கொடுப்பதோடு புத்திமதியோடு அனுப்பினர்.

உள்ளே இருந்து வயதான ஒருவர் வெளியே வந்தபோது அவரை காவலர்கள் அடிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். அவருக்கு பின்னால் தப்பித்து ஓட நினைத்த சிறுவனுக்கு ஒரு அடி விழுந்தது. இதையடுத்து உத்தரவை மீறி தொழுகை கூட்டத்தை ஏற்பாடு செய்த மூத்த குருவுக்கு போலீசார் தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டது. இதேபோன்று மதுரையில் ஊரடங்கை மீறிய சம்பவமும் நடந்தது.

மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரத்தில் இப்ராகிம் என்பவர் தலைமையில் ஊரடங்கு உத்தரவை மீறி அவரது வீட்டிற்குள் 20 பேர் தொழுகை நடத்தினர். இவர்களின் மீது 5 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்துபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். மேலும் கலைந்து செல்ல மறுத்ததால் 20 பேரும் கைது செய்யப்பட்டனர். கொரோனாவுக்கு மதம் கிடையாது யாரை வேண்டுமானாலும் எப்போதும் தாக்க வாய்ப்புள்ளது. ஆகவே வழிபாடு செய்ய நினைப்போர் அவரவர் வீட்டிலேயே செய்வது நல்லது என்று பலர் கருத்து கூறியுள்ளனர்.

“குருமா’ வருதுன்னு சொன்னாங்க..!! அதான் வேப்பிலைய வச்சிகிட்டு வேலைக்குபோறேன்! ஊரடங்கு தூய்மை பணியில் மூதாட்டியின் நகைச்சுவை பேச்சு (வைரல் வீடியோ)

0

“குருமா’ வருதுன்னு சொன்னாங்க..!! அதான் வேப்பிலைய வச்சிகிட்டு வேலைக்குபோறேன்! ஊரடங்கு தூய்மை பணியில் மூதாட்டியின் நகைச்சுவை பேச்சு (வைரல் வீடியோ)

ஊரடங்கு தூய்மை பணியில் ஈடுபடும் மூதாட்டி ஒருவர் கொரோனாவை பற்றி பேசிய நகைச்சுவை வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் அரசு தீவிரமான கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தை விட புதுவையில் கொரோனா பாதிப்பு மிக குறைவு. இதுவரை அங்கு 7 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு நேரத்தில் தூய்மை பணிக்கு செல்லும் மூதாட்டி ஒருவர் கொரோனா பற்றிய பேசிய விழிப்புணர்வு காணொளி இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் எதற்காக தலையில் வேப்பிலை வைத்திருக்கிறீர்கள் என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு மூதாட்டி கொடுத்த பதில் மிக நகைச்சுவையாக அமைந்துள்ளது.

https://m.facebook.com/story.php?story_fbid=10156794651625855&id=720730854 (மூதாட்டி வைரல் வீடியோ)

தலையில ஏன் வேப்பில வச்சிருக்கீங்க.?
குருமா வருதுனு சொன்னாங்க’ அதான் தலையில வேப்பில வெச்சுகிட்டு வேலைக்கி போறேன்’ என்று பேசும் மூதாட்டியின் வெகுளியான பேச்சு எல்லோரையும் கவர்ந்துள்ளது. படித்த பலர் அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இருக்கும் பலருக்கு மத்தியில், அரசுக்கு செவிசாய்த்து தன்னை பாதுகாத்துக் கொள்வதில் இந்த மூதாட்டி கெட்டிக்காரர் என்றே கூறலாம். நோய் மற்றும் ஆபத்து என்றாலே மஞ்சளும், வேப்பிலையும் கையில் எடுப்பது தமிழர்களின் மரபு என்பதை நம் முன்னோர்கள் நிரூபித்தே வருகின்றனர்.

பள்ளி மாணவியை கற்பழித்த பாஜக உறுப்பினர்! மனதை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்! முஸ்லீம் லீக் கட்சியினர் போராட்டம்!

0

பள்ளி மாணவியை கற்பழித்த பாஜக உறுப்பினர்! மனதை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்! முஸ்லீம் லீக் கட்சியினர் போராட்டம்!

நான்காம் வகுப்பு படித்துவந்த மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பானூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பத்மராஜன் (45) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நான்காம் வகுப்பு உள்ளிட்ட மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதோடு அப்பகுதி பாஜக பஞ்சாயத்து உறுப்பினராக செய்யல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தன்னிடம் கல்வி கற்றுவந்த
4 ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பத்மராஜன் திட்டமிட்டு தனது பாலியல் இச்சைக்காக சற்றும் யோசிக்காமல் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இச்சம்பவம் கடந்த ஜனவரி 15 – பிப்ரவரி 2 ஆகிய நாட்களுக்கு இடையே நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு மாணவி மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

மாணவியின் சூழலை அறிந்த பெற்றோர் கவுன்சலிங் கொடுக்க ஏற்பாடு செய்தனர். கவுன்சலிங் நடந்தபோதுதான் தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவத்தை பற்றி மாணவி கண்ணீருடன் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் மூலம் குழந்தைகள் தன்னார்வ குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதனை அறிந்து கொண்ட ஆசிரியர் பத்மராஜன் காவல்துறை கைதுக்கு பயந்து தலைமறைவானார். இதனால் அவரை கைது செய்வதில் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. மாணவிக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு நீதி வேண்டும் என்னு காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினர் போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து காவல்துறை மிக தீவிரமான தேடுதல் வேட்டையின் மூலம் பத்மராஜனை கைது செய்து வழக்கும் பதிவின் பின்னர் சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் 41 பேருக்கு கொரோனா! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது.!

0

ராஜஸ்தானில் 41 பேருக்கு கொரோனா! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது.!

ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்த நபர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மாநில வாரியான கொரோனா பதிப்பு எண்ணிக்கயால் மக்களிடையே அச்சம் தொடர்ந்து நிலவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. 180 பேர் மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர். இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலங்களின் பாதிப்பு எண்ணிக்கை:

கேரளா பாதிப்பு 396 பேர் பாதித்துள்ளனர்.
கர்நாடகாவில் 359 பேர் பாதித்துள்ளனர்.
ஆந்திராவில் 572 பேர், தெலுங்கானாவில் 766 பேர், கோவாவில் 7 பேர், மகாராஷ்டிராவில் 3,323 பேர், சத்தீஸ்கரில் 36 பேர், அந்தமானில் 12 பேர், மத்திய பிரதேசத்தில் 1,310 பேர், ஒடிசாவில் 60 பேர், மேற்கு வங்காளம் 287 பேர், ஜார்க்கண்ட் 33 பேர், குஜராத் 1099 பேர், ராஜஸ்தான் 1,229 பேர், டெல்லி 1,707 பேர், ஹரியானா 225 பேர், சண்டிகர் 21 பேர், மிசோரம் மற்றும் மணிப்பூரில் 3 பேர், திரிபுராவில் 2 பேர், அசாம் மற்றும் மேகாலயாவில் 44 பேர், இமாச்சல பிரதேசம் 36 பேர், பஞ்சாப் 202 பேர், ஜம்முகாஷ்மீர் 328 பேர், அருணாச்சல பிரதேசம் 1, உத்தரகண்ட் 40 பேர், உத்திரபிரதேசம் 849 பேர், லடாக் பகுதியில் 18 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் கொரோனாவால் பாதிப்படைந்த நபர்களின் எண்ணிக்கை 14,378 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1,992 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது!

0

கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது!

மருத்துவமனைக்கு கர்ப்பிணியை ஏற்றிச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸ் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி சந்திரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இவரது பிரசவத்தில் சிக்கல் இருப்பதால் திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து உறவினர் பாதுகாப்புடன் திருச்சியை நோக்கி ஆம்புலன்ஸ் கிளம்பியது. அப்போது திருச்சி அவிநாசி சாலையில் சென்றபோது கார் ஒன்று ஆம்புலன்ஸை இடிப்பதுபோல் வந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ் தலைகுப்புற கவிழ்ந்து நூலிழையும் கர்ப்பிணி உயிர்தப்பினார்.

இதையடுத்து மற்றொரு ஆம்புலன்ஸ் வந்து கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற போது அந்த வாகனம் திடீரென தீப்பிடித்த எரிந்தது. தீவிபத்து குறித்து உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் கர்ப்பிணி உட்பட நால்வர் உயிர் தப்பினர். இருவேறு ஆபத்துகளை கடந்துவந்த கர்ப்பிணி சந்திராவுக்கு நேற்றிரவு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.