Home Blog Page 5680

மஹாராஜா ஜெய் சிங்கிடம் அசிங்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் : வரலாறை பின்னோக்கி பார்ப்போம்!

0

ஒருமுறை ராஜா ஜெய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்றிருந்தார், அங்கு சாதரணமாக தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோரூமை பார்த்தார் அங்கே சென்று கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார்.

அங்கிருந்து ஷோரூம் ஊழியர்கள் இவர் ஒரு மன்னர் என்பதை அறியாமல்
ஒரு ஏழை இந்திய குடிமகனாக நினைத்து அவரை அடித்து விரட்டினர். இதனால் கோபமடைந்த ராஜா தனது
ஓட்டல் அறைக்கு சென்று பிறகு சில மணி நேரம் கழித்து தனது விலை உயர்ந்த ராஜ உடையில் மீண்டும் அதே ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம் அடைந்தார் .

இந்த முறை ஷோரூம் ஊழியர்கள் அவருக்கு முழு அரச உபசாரம் செய்து சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்தனர். மஹாராஜா ஜெய் சிங் 6 விதமான ரோல்ஸ் ராய்ஸ் கார்களை தேர்வு செய்து முழு தொகையும் செலுத்தி வாங்கினார்.

விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களை கப்பல் மூலம் கொண்டு வந்தார், நகரின் கழிவுகளை சுத்தம் செய்ய அந்த கார்களை பயன்படுத்துமாறு நகராட்சிக்கு உத்தர விட்டார்.உலகின் நம்பர் ஒன் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் நகரத்தின் கழிவு
போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்ட செய்தி ,விரைவில் உலகம் முழுவதும் பரவி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் நற்பெயர் கெட்டுப்போனது.

இந்த சம்பவத்திற்கு பிறகு யாரவது ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் நான் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ளேன் என்று பெருமை பீத்திகொண்டால், இது
இந்தியாவில் குப்பை அள்ள பயன்படுகிறது என்று மக்கள் ஏளனம்
செய்யும் நிலைமைக்கு ஆளானது.

இதன் காரணமாக நிறுவனத்தின்
மதிப்பு கெட்டு அதன் விற்பனை சரிய தொடங்கியது, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன தலைவர் ராஜா ஜெய் சிங்கிற்கு ஒரு அவசர தந்தி அனுப்பினார். அதில் தாங்கள் உடனடியாக எங்கள் கார்களை
குப்பை அல்ல பயன் படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பிரதிபலனாக நாங்கள் உங்களுக்கு மேலும் 6 கார்களை இலவசமாக தருகிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பதிலளித்த மஹாராஜா ஜெய் சிங் ‘எனக்கு உங்கள் கார்கள் மேல் வெறுப்பு இல்லை, உங்கள் ஊழியர்கள் என் நாட்டவரை குப்பை போல் வெளிய வீசினர், அதற்கு பதிலாக தான் நான் உங்கள் கார்களை குப்பை அள்ள உபயோகித்தேன். முதலில் மக்களை மதியுங்கள் என்று வெள்ளை காரனை செவிட்டில் அறைந்தார் போல பதில்
அனுப்பினார்.

ஏப்ரல் 14க்கு பிறகு ஊரடங்கு தொடருமா? பிரதமர் மோடி அதிரடி தகவல்!

0

கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பல்வேறு வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாடி அவர்களின் தேவைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.

இதனையடுத்து பிரதமர் மோடி லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களுடன் பேசி அவர்களின் ஆலோசனைகளை கேட்டு கொண்டார். இதில் தெலுங்கானா முதல்வர் மற்றும் ராஜ்யசபா எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு நீட்டிக்க கோரியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று 5க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்து உரையாடியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் பெரும்பாலான மாநில கட்சி தலைவர்கள் ஊரடங்கு நீட்டிக்கும்படி கேட்டதாக தெரிகிறது.

இதனால் பிரதமர் மோடி வரும் 11ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் மீண்டுமொருமுறை கலந்தாலோசித்து ஊரடங்கு நீட்டிக்க படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார். நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையில் ஊரடங்கு முழுமையாக தொடருமா அல்லது பகுதி நேரமாக தொடருமா என்பது பற்றி முடிவு எடுக்கபடும் என்று தெரிகிறது.

இறந்த தாயை காணாமல் கடமையை செய்த சப்-இன்ஸ்பெக்டர் : பணியில் கண்ணீர்விட்ட சோகம்!

0

கொடூர கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளையும், வெவ்வேறு பகுதிகளையும் மரண பயத்தில் வைத்துள்ளது. இந்த வைரஸை தடுக்க மருத்துவர்கள் மட்டுமல்லாமல் காவல்துறையினரும் இரவு பகல் பாராது பணி செய்து வருகின்றனர்.

காவல்துறையினர் குடும்பங்கள், குழந்தைகளையும் மறந்து மக்களை காக்கும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நோய் தொற்று அபாயம் இவர்களுக்கும் கூட உண்டு என்றாலும், உயிரையும் துச்சமென நினைத்து மக்கள் சேவையாற்றி வருகின்றனர்.

அதேபோல, சுய விருப்பு, வெறுப்புக்கும் இடமில்லாமல் கொரோனா பரவலை தடுப்பது மட்டுமே கடமையென காவலில் இருக்கின்றனர். அந்த வகையில் நாம் அனைவரும் சல்யூட் வைக்க வேண்டியவர் சாந்தாராம் என்கிற சப்-இன்ஸ்பெக்டர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில்வே போலீஸில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் தான் சாந்தாராம். இவர் கடந்த சனிக்கிழமை விஜயவடா ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு ஒரு போன் வந்தது, அதில் அவது அம்மா சீதாமகாலட்சுமி உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் என்று கூறப்பட்டது. இவரின் 69 வயதான தாய் சீதாமகாலட்சுமி இறந்த செய்தி அறிந்து உடனே விடுப்பும் கொடுக்கப்பட்டது. ஆனால் சாந்தாராம் தாயின் மரணத்துக்கு செல்லவல்லை, அதோடு இறுதி சடங்கிற்கும் செல்லாமல் தவிர்த்து விட்டார்.

இதனை அறிந்த இன்ஸ்பெக்டர் பங்கர்ராஜூ என்பவர், ‘ஏன் தாயின் இறப்பிற்கு செல்லவில்லை என்று கேட்டார்’? அதற்கு சாந்தாராம், “சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் 4 மாவட்டம், 40 செக்போஸ்டுகளை தாண்டிதான் போக வேண்டும். அங்கே உறவினர்கள் பலர் வந்திருப்பார்கள், நான் போனால் சொந்தக்காரர்களிடம் பேச வேண்டி இருக்கும். ஒருவேளை இதனால்கூட நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் என் தம்பியிடம் கூறி என் தாயின் இறுதி சடங்கை செய்ய சொல்லிவிட்டேன். வேறு வழியில்லாமல் அந்த இறுதிசடங்கினை செல்போனில் வீடியோ கால் மூலம் பார்த்து என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்” என்று கண்ணீர் மல்க கூறினார்.

இந்த காரணத்தை கேட்டதும் இன்ஸ்பெக்டர் பங்கர்ராஜூ அதிர்ச்சியில் உறைந்தார். இதையே மக்களுக்கு விழிப்புணர்வாகவும் பயன்படுத்த முடிவு செய்தார். மக்களிடம் விழிப்புணர்வு குறித்து பேசும் போது நடந்த சம்பவத்தை கூறி, “இப்படி ஒரு இக்கட்டான சூழலில்தான் நாங்க வேலை செய்து வருகிறோம். சாந்தாராமுக்கு கொடுத்தும் கொரோனா பரவலை நினைத்து இறுதி சடங்கிற்கு செல்லவில்லை. தயவு செய்து எங்கள் நிலைமையையும் நாட்டு நிலைமையையும் எல்லாரும் புரிந்து கொள்ளுங்கள். இன்னும் 2 வாரத்திற்கு வீட்டிலேயே இருங்கள், நம்மால் கண்டிப்பாக கொரோனா வைரஸை சமாளிக்க முடியும்” என்றார் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மருத்துவர்களுக்கு இணையாகவே காவல் துறையினரும் தங்கள் உயிரை கொடுத்து வேலை செய்வது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. ஊரடங்கு எதற்காக போடப்பட்டுள்ளது என்றுகூட தெரியாமல் இன்னமும் வெளியே நடமாடி கொண்டிருக்கும் மக்களுக்கு சாந்தராமின் இந்த தியாக சம்பவம் ஒரு உதாரணமாக இருக்கும். கொரோனாவை விரட்ட சாந்தாராம் போன்ற போலீசார் பலர் நம் நாட்டில் வேலை செய்து வருவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா குமார், கொரோனா குமாரி என்று பெயரிடல் : ஊரடங்கில் நெகிழ்வான சம்பவம்!

0

கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள வேம்பள்ளி பாஷா மருத்துவமனையில் கர்ப்பிணிகள் இருவர் அனுமதிக்கப்பட்டனர். கடப்பா அருகில் உள்ள அல்லிரெட்டிபள்ளியை சேர்ந்த ரமாதேவி மற்றும் தல்லாப்பள்ளியை சேர்ந்த சசிகலா இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தை பிறந்துள்ளது.

இதில் ரமாதேவிக்கு பெண் குழந்தையும் சசிகலாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் குழந்தைகள் பிறந்துள்ளதால் அவர்களுக்கு கொரோனா குமாரி, கொரோனா குமார் என்று அந்த மருத்துவமனையின் டாக்டர் பெயர் சூட்டினார்.

பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா குமார், கொரோனா குமாரி என்று பெயரிடல் : ஊரடங்கில் நெகிழ்வான சம்பவம்!

இவ்வாறு பெயர் சூட்டுவதற்கு முன்பு அந்த குழந்தைகளின் பெற்றோர்களிடம் அனுமதி பெற்றதோடு, இது போன்று பெயர் வைத்தால் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்று அவர்களிடம் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று 14 லட்சத்தை கடந்து பதறவைக்கிறது : அதிர்ச்சியூட்டும் பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 14 லட்சத்து 30 ஆயிரத்து 516 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 3 லட்சத்து ஆயிரத்து 828 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது, உலக அளவில் இந்த நோயால் பலியானவர்களின் எண்ணிக்கையில் பாதியை தொடுகிறது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

கொரோனா தொற்று 14 லட்சத்தை கடந்து பதறவைக்கிறது : அதிர்ச்சியூட்டும் பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 5,000 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 124 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 352 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / குணமடைந்தவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 1161/79/64
தமிழ்நாடு – 690/19/07
டெல்லி – 606/20/09
தெலுங்கானா – 404/44/11
கேரளா – 336/71/02
ராஜஸ்தான் – 343/25/06
உத்தரபிரதேசம் – 332/27/03
ஆந்திர பிரதேசம் – 324/06/04
கர்நாடகா – 204/25/04
குஜராத் -168/23/14
மத்திய பிரதேசம் -280/23/21
ஜம்மு & காஷ்மீர் -125/04/03
மேற்கு வங்கம் -87/13/05
பஞ்சாப் -99/14/8
ஹரியானா – 129/17/02
பீகார் – 34/15/01
அசாம் – 28/0/0
சண்டிகர் -10/9/0
உத்தர்கண்ட் – 31/5/0
லடாக் – 14/10/0
அந்தமான் & நிக்கோபார் -10/0/0
சத்தீஸ்கர் – 10/09/0
கோவா – 7/0/0
இமாச்சல பிரதேசம் – 27/02/01
ஒடிசா – 42/02/01
பாண்டிச்சேரி – 6/1/0
மணிப்பூர் -2/0/0
ஜார்க்கண்ட் -4/0/0
மிசோரம் -1/0/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0/0
திரிபுரா – 01/0/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 7 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 19 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(புதிதாக தொற்று ஏற்பட்டோர்/ மொத்த எண்ணிக்கை);

சென்னை -39/149
கோயம்புத்தூர் -01/60
திண்டுக்கல் -0/45
நெல்லை -0/38
ஈரோடு -0/32
திருச்சி -0/30
நாமக்கல் -0/28
ராணிப்பேட்டை -2/27
செங்கல்பட்டு -0/24
மதுரை -05/24
கரூர் -0/23
தேனி -0/23
தூத்துக்குடி -06/17
விழுப்புரம் -0/16
திருப்பூர் -13/16
கடலூர் – 0/13

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

அஜித்தை பற்றி தெரியாமல் விமர்சனம் செய்த நடிகை! முதல் ஆளாக டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பாராட்டு!

0

1.25 கோடி நிதியுதவி அளித்த தல அஜித்.! சமூக அக்கறையில் சினிமா நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு.!!

கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் 1.25 கோடி வழங்கியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு கண்காணிப்பு, சமூக இடைவெளி, வீட்டில் தனித்திருப்பது போன்ற பல்வேறு சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க கொரோனா நிவாரண நிதி அளிக்குமாறு மக்களிடம் எடப்பாடி கோரிக்கை வைத்தார். நாம் ஒற்றுமையோடு எதிர்த்து போராடினால்தான் இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறியிருந்தார். இதன் பின்னர் தனியார் நிறுவனங்கள், சினிமா திரைப்பட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலர் முதல்வரின் கொரோனா நிவாரண தடுப்புக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் யாருடைய பிண்ணணியும் இல்லாமல் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிய, ரசிகர்களால் “தல’ என்று கூறப்படும் நடிகர் அஜித்குமார் கொரோனா நிவாரண நிதியாக 1.25 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இதில் 50 லட்சம் பிரதமரின் நிவாரண நிதிக்கும், 50 லட்சம் தமிழக நிவாரண நிதிக்கும், 25 லட்சம் கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு இல்லாமல் வேலையிழந்து காணப்படும் பெஃப்சி நிறுவன ஊழியர்களுக்கு உதவும் வகையிலும் நிதியை வழங்கியுள்ளார். இதனால் தல ரசிகர்கள் மட்டுமல்லாது பலர் நடிகர் அஜித்குமாரை பாராட்டி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு டுவிட்டரில் அஜித்தை பற்றி விமர்சித்த நடிகை கஸ்தூரி தல ரசிகர்களுடன் கடுமையான விமர்சன விவாதத்தை முன்வைத்திருந்தார். தற்பொது பழைய மனக்கசப்பை மறந்து அஜித்தை பாராட்டி கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜெர்மனிக்கு சொந்தமான மருத்துவ உபகரணங்களை அபேஸ் செய்த அமேரிக்கா : வெளியான அதிர்ச்சி பின்னணி!

0

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா அச்சுறுத்தலால் முடங்கிப் போயுள்ளது, இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து நாடுகளும் மருத்துவ மற்றும் அத்தியாவசிய செலவுகளை மட்டுமே செய்து வருகிறது.

கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் உலக நாடுகள் அனைத்தும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நம்பி போராடி வருகிறது. தங்கள் உயிரையே பனையம் வைத்து மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை பணியாற்றி வருவதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க அனைத்து முயற்சியும் எடுக்கப்படுகின்றன.

சீனாவிலுள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்க்கு ஜெர்மனி நாடு முகக்கவசம் உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்களை தயாரிக்க ஆர்டர் வழங்கியிருந்தது. சீனாவில் தயாரிக்கப்படும் இந்த உபகரணங்கள் தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கப்பல் மூலமாக ஜெர்மனிக்கு எடுத்து செல்ல திட்டமிடப்பட்டது.

இதற்கிடையில் அமெரிக்காவில் வைரஸ் தொற்று அதிகமாகி இதுவரை 3,67,004 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இவர்களுக்காக பணியாற்றி வரும் மருத்துவ ஊழியர்களுக்கு முகக்கவசம், கையுறை போன்ற உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த தட்டுப்பாட்டை சரிசெய்ய அமெரிக்கா தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு மருத்துவ உபகரணங்களை அதிக அளவில் தயாரிக்க உத்தரவிட்டது. பல்வேறு நிறுவனங்கள் அதன் உற்பத்தியில் இறங்கினாலும் தட்டுப்பாடு குறையாத நிலையில் அந்நாட்டில் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் உலகெங்குமுள்ள அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் மருத்துவ உபகரணங்களை மற்ற நாடுகளுக்கு விற்கக்கூடாது என்று அதில் கூறப்பட்டது.

இவ்வாறான சூழலில் ஏற்கனவே சீனாவில் இருந்து ஜெர்மனி செல்ல தயாராக இருந்த மருத்துவ உபகரணங்கள் அமெரிக்க தூதரகத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தயார் நிலையில் உள்ள அந்த மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அந்நிறுவனத்தில் இருந்து ஜெர்மனி, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டியதை தடுத்து நிறுத்தியதால் அந்த நாடுகள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. இதனை பார்த்த அரசியல் நோக்கர்கள் அமெரிக்காவின் இச்செயல் மற்ற நாடுகளுக்கு எதிரான நூதன கொள்ளை என்று கூறி வருகின்றனர்.

ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்க கூடாது! அமைச்சரின் அதிரடி உத்தரவு..!!

0

ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்க கூடாது! அமைச்சரின் அதிரடி உத்தரவு..!!

தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்க கூடாது என்று அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடியாக கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது; கோவை மாவட்டத்திலுள்ள 15 அம்மா உணவகங்களின் மூலம் சுமார் 20 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். மேலும் 37 ஆயிரம் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. வியாபாரிகள் பொருட்களை வாங்கிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • கோவை மாவட்டத்தில் 8 லட்சத்து
    79 ஆயிரத்து 678 ரேசன் அட்டைகளுக்கு தர வேண்டிய ரூபாய்க்கான டோக்கன் வழங்கி உள்ளோம்.
  • கோவையில் 43 ஆயிரத்து 630 கட்டுமான அமைப்புசாரா பணியாளர்களுக்கு நிவாரணம் வழக்கப்பட்டு வருகிறது.
  • இதுவரை கோவையில் 234 நபர்களுக்கு கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.
  • வீட்டு கண்காணிப்பில் இருந்து 2 ஆயிரத்து 248 பேர் தனிமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
  • அத்தியாவசிய பொருட்களை வாங்க தினமும் கடைகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
  • கோவையில் 387 செயற்கை சுவாசக் கருவிகள் தயார் நிலையில் உள்ளன.
  • தனியார் மருத்துவமனைகள் மக்களுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • தனியார் நிறுவனங்கள் ஆள்குறைப்பு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் ஊழியர்களின் மாத சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது. இவ்வாறு அமைச்சர்
    எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

அதிகரிக்கும் கோரோனா பாதிப்பு! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை

0

அதிகரிக்கும் கோரோனா பாதிப்பு! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகெங்கும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசானது இந்தியாவையும் விட்டு வைக்காமல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அரசும் இந்த வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் தற்போது வரை இந்தியாவில் 4421 நபர்களுக்கு கொரோனா பாதிப்புள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 326 பேர் குணமடைந்து விட்டதாகவும், 114 இறந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதியுள்ள 3981 நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்குமாறு பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே இந்த ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பின் நிலவரத்தை ஆய்வு செய்த நிபுணர்களும் ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கோரிக்கைகளுக்கு ஏற்ப ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் தற்போதுள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் சேவையே முக்கியம்! திருமணத்தை தள்ளிவைத்த பெண் போலீஸ்! கடமையே கண்ணாக கம்பீரத்துடன் களத்தில்..!!

0

மக்கள் சேவையே முக்கியம்! திருமணத்தை தள்ளிவைத்த பெண் போலீஸ்! கடமையே கண்ணாக கம்பீரத்துடன் களத்தில்..!!

தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொறுப்பில் இருப்பதால் பெண் காவல்துறை அதிகாரி தனது திருமணத்தை தள்ளிவைத்துள்ள நிகழ்வு உத்தரகண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ரிஷகேஷி பகுதியில் உள்ள முனி கி ரெட்டி காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ட்டராக பணிபுரிந்து வரும் காவல்துறை அதிகாரிக்கு கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமண நாளில் ஷாதிகா காவல் பணிக்கு வந்ததை பார்த்து உடன் பணிபுரியும் காவல் பணியாளர்கள் அதிர்ச்சியாகினர்.

இதையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கும் பகுதியில் நிவாரணம் வழங்கும் பணி இருப்பதால் தனது திருமணத்தை தள்ளி வைத்ததாக கூறினார். இதைக்கேட்ட சக காவல்துறை பணியாளர்கள் மகிழ்ச்சியில் ஷாதிகாவை பாராட்டி தள்ளினர்.

மக்கள் சேவையே முக்கியம்! திருமணத்தை தள்ளிவைத்த பெண் போலீஸ்! கடமையே கண்ணாக கம்பீரத்துடன் களத்தில்..!!

கொரோனா நிவாரண பணிகளை முடிந்த பின்னர் திருமணம் செய்துகொள்வதாக தனது பெற்றோரிடம் கூறியதை அவர்களும் ஏற்றுக் கொண்டனர். அவருடைய வருங்கால கணவரும் நடைமுறையில் உள்ள இக்கட்டான சூழலை புரிந்து கொண்டு நடக்கவிருந்த திருமணத்தை தள்ளிவைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தன் விருப்பத்திற்கு சுயநலமாக செயல்படாமல் மக்கள் சேவையே முக்கியம் என்று கடமையை தொடர்ந்து கம்பீரத்துடன் செய்து வரும் பெண் போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.