Home Blog Page 5681

படிக்கும் வயதில் காதலித்து கர்ப்பமான மாணவி! நாடக காதலன் மூலம் உடன்பிறந்த சகோதரியை கொன்ற கொலைகார புள்ளீங்கோ.!!

0

படிக்கும் வயதில் காதலித்து கர்ப்பமான மாணவி! நாடக காதலன் மூலம் உடன்பிறந்த சகோதரியை கொன்ற கொலைகார புள்ளீங்கோ.!!

காதலுக்கு இடையூறாக இருந்த சகோதரியை நாடக காதலன் மூலம் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய 12 ஆம் வகுப்பு பள்ளிக்கூட மாணவி கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன்-வத்சலா தம்பதிக்கு மணிகண்டன் என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். மூத்தமகள் மோனிஷா கல்லூரியில் முதலாம் ஆண்டு, இளையமகள் 12 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24 ஆம் தேதி மோனிஷா கையில் அறுபட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டில் கிடந்ததாக அவரது தங்கை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மோனிஷாவை உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் மோனிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மோனிஷாவின் இறப்பு தற்கொலைதான் என்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நம்பிய நிலையில் மோனிஷாவின் அண்ணன் மணிகண்டன் தனது தங்கையில் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் உடனடி விசாரணை நடத்த வேண்டுமென்று நாமக்கல் காவல் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை புகார் அளித்திருந்தார். இதனையடுத்து தற்கொலை வழக்கில் இருந்து சந்தேகத்திற்கான மரண வழக்காக மாற்றப்பட்டு தீவிர விசாரணை தொடர்ந்தது.

முதலில் மணிகண்டன் குடும்பத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மோனிஷா இறந்த அன்று தங்கள் வீட்டு மாடியில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவர் வேகமாக ஓடியதாக மோனிஷாவின் தாயார் கூறினார். ராகுலைப் பிடித்து போலீசார் பக்குவமான விசாரணை நடத்தியதில் மோனிஷாவின் தங்கையின் பெயர் வெளியானது. இதையடுத்து அவரிடம் பிடித்து விசாரணை நடத்தியபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

கல்லூரி மாணவர் ராகுலும் 12 ஆம் வகுப்பு மாணவியான மோனிஷாவின் தங்கையும் கடந்த நான்கு வருடங்களாக ஆர்வகோளாறில் பாலியல் உணர்ச்சிக்கு அடிமையாகி காதலித்து வந்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராகுல் மோனிஷாவின் தங்கையுடன் கசமுசா போன்ற வயதுக்கு மீறிய எல்லையில் ஈடுபட்டுள்ளார். பாலியல் உணர்ச்சிக்கு அடிமையான தங்கையின் தவறான செயலை மோனிஷா கண்டித்ததோடு அவரது குடும்பத்தினரும் கண்டித்துள்ளனர்.

இதனிடையே படிக்கும் வயதில் மோகத்தில் விழுந்த மாணவி ராகுலின் ஆசைக்கு இணங்கியதால் கர்ப்பமாகியுள்ளார். இதனை மோனிஷா தனது காட்டிக் கொடுத்ததாக சொல்லப்பட்டுகிறது. இதனை வஞ்சகமாக வைத்து மோனிஷா தூங்கிக் கொண்டிருந்த போது காதலன் ராகுலின் உதவியுடன் மோனிஷாவை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் தற்கொலை போன்று இருக்கவேண்டும் என்பதால் மோனிஷாவின் கையில் அறுத்துவிட்டு தப்பியோடிதாக தனது வாக்குமூலத்தில் ராகுல் கூறியுள்ளான்.

இதையடுத்து நாடக காதலன் ராகுலையும் அவரால் கர்ப்பமான 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியையும் போலீசார் கைது செய்தனர். சமீப காலங்களாக பள்ளிக்கு செல்லும் மாணவிகள் காதல் என்கிற வலையில் விழுந்து கர்ப்பமாவதும் இதனால் அவர்களின் குடும்பத்தில் கொலை சம்பவம் மற்றும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. படிக்கும் வயதில் உடன் பிறந்த சகோதரியையே கொலை செய்ய தூண்டியது அறியாமையால் வந்த காதலே காரணம் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் காதல் என்கிற பெயரில் சுற்றி வரும் நாடக காதல் கும்பலைப் பற்றி தமிழ் சினிமாக்கள் பேசத் தொடங்கியிருந்தாலும் மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்றே பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் பலி! குடும்பமே மயங்கிவிழுந்த பரிதாபம்!

0

பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் பலி! குடும்பமே மயங்கிவிழுந்த பரிதாபம்!

மாமனார் மைதா மாவுடன் பூச்சுக்கொல்லி மருந்தை வாங்கிவந்து வைத்ததை கவனிக்காமல் இரண்டையும் கலந்து போண்டா செய்து சாப்பிட்டதால் குடும்பமே ஆபத்தில் சிக்கியுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் மக்கள் முடங்கி இருந்தாலும், பலர் இணையத்தில் நேரத்தை கழித்தும், உடற்பயிற்சி செய்வதும், புத்தகம் படிப்பதும், சுவையான உணவுகளை தயார் செய்வது போன்ற ஆர்வத்தோடு ஊரடங்கு நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல வீட்டில் இருக்கும் போது குடும்பத்தினர் போண்டா செய்து சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

அரக்கோணம் எஸ்.ஆர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி என்பவரிடம், அவரது மருமகள் பாரதி வீட்டில் போண்டா தயாரித்து உண்பதற்காக மைதா மாவு வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதனால் மைதாமாவுடன் சேர்த்து தனது மிளகாய் தோட்டத்திற்கு தேவையான பூச்சிக்கொல்லி மருந்தையும் வாங்கி வந்துள்ளார். இதை சற்றும் கவனிக்காத மருமகள் பாரதி மைதா மாவு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தையும் ஒன்றாக கலந்து போண்டா செய்துள்ளார்.

சமைத்த போண்டாவை கவணர் சுகுமார், மாமியார் லட்சுமி, மாமனார் பெரியசாமி ஆகியோருக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் குடும்பமே தலைசுற்றி மயங்கி விழுந்துள்ளனர். இதன் பின்னர் அரசு மருத்துவமனையில் அவரசமாக சேர்க்கப்பட்ட நிலையில், மருமகள் பாரதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருந்தவர்களுக்கு இப்படி ஒரு சோதனையா என்று அப்பகுதியினர் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இங்கிலாந்து பிரதமருக்கு தீவிர சிகிச்சை! ஐசியு-விற்கு மாற்றம்!

0

கொரோனா பாதிப்பால் இங்கிலாந்து பிரதமருக்கு தீவிர சிகிச்சை! ஐசியு-விற்கு மாற்றம்!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இங்கிலாந்து பிரதமருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் வெளிநாட்டு பயணிகளின் மூலம் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் 12 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆரம்பத்தில் சீனாவில் உச்சகட்ட அளவில் இருந்தாலும் தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலை உருவாகியுள்ளது. சீனாவை விட அமெரிக்கா, இத்தாலி, பிரான்சு போன்ற நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டு இளவரசர் சார்லஸ் மற்றும் அந்நாட்டு பிரதமர் போரி ஜான்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், போரி ஜான்சன் தன்னைத்தானே தனிமைப்படுத்தியதோடு அல்லாமல் தனது பணிகளையும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கவனித்து வந்தார்.
அவருக்கு உண்டான காய்ச்சல் இதுவரை குறையவில்லை என்ற காரணத்தால் லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரதமரின் பரிதாப நிலை இங்கிலாந்து மக்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று 13லட்சத்தை தாண்டியது : அலறும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 13 லட்சத்து 46 ஆயிரத்து 482 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 692-ஐ எட்டியுள்ளது, மேலும் 2 லட்சத்து 78 ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது, உலக அளவில் இந்த நோயால் பலியானார்களின் எண்ணிக்கையில் கிட்ட பாதியை தொடுகிறது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

கொரோனா தொற்று 13லட்சத்தை தாண்டியது : அலறும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 4,281 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 111 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 319 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / குணமடைந்தவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 868/56/52
டெல்லி – 525/19/07
தமிழ்நாடு – 621/06/06
கேரளா – 327/55/02
தெலுங்கானா – 321/7/34
கர்நாடகா – 163/12/4
குஜராத் -146/22/12
மத்திய பிரதேசம் -256/0/9

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

காய்கறி மளிகை பொருட்கள் கிடையாது! தூத்துக்குடியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் திடீர் நடவடிக்கை!

0

காய்கறி மளிகை பொருட்கள் கிடையாது! தூத்துக்குடியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் திடீர் நடவடிக்கை!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் அப்பகுதியில் உள்ள மளிகை, காய்கறி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவை மீறி பலர் வெளியே வருவதாலும், வீட்டிலேயே தனிமைப்படுத்தி இல்லாமல் சாதாரண சூழலையே சிலர் கடைபிடிப்பதாலும் கொரோனா அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 571 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த நபர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர் பகுதிகளில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்செந்தூர் தாலுக்கா முழுவதும் ஏப்ரல் 14 வரை காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மக்களுக்கு கொரோனா தொற்று குறித்த சோதனையும் நடத்தப்பட உள்ளது.

ஊரடங்கு விஷயத்தில் மத்திய அரசின் திட்டம் சரியில்லை! பிரதமருக்கு கமல் அவசர கடிதம்!

0

ஊரடங்கு விஷயத்தில் மத்திய அரசின் திட்டம் சரியில்லை! பிரதமருக்கு கமல் அவசர கடிதம்!

ஊரடங்கு குறித்து மத்திய அரசு சரியான் முறையில் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடிக்கு நடிகர் கமல் கடிதம் எழுதியுள்ளார்.

கமலின் கடித்தத்தில் கூறியிருப்பதாவது;
கடந்த மார்ச் 23 ஆம் தேதி உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதன் அடுத்த நாளே ஊரடங்கு உத்தரவு திடீரென்று போடப்பட்டது. பணமதிப்பிழப்பின் போது எப்படி கால அவகாசம் தரப்படவில்லையோ அதேபோல் இந்த முறையும் கால அவகாசம் மக்களுக்கு தரப்படவில்லை, நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பொது மக்கள் எந்த அளவிற்கு சிரமம் கொண்டார்களோ அதேபோல், இந்த ஊரடங்கு உத்தரவு சமயத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாடியில் விளக்கேற்றும் போது எத்தனையோ ஏழைகள் உணவுக்காக எண்ணெய் இல்லாமல் தவித்து வருகின்றனர். வீட்டு வேயாட்கள், தினக்கூலி ஆட்கள், அனைத்து டிரைவர்கள், புலம்பெயர்ந்த மக்கள் பலர் தங்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு போராடி வருகிறார்கள். கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஏழைமக்களை பசி மற்றும் வறுமையால் வாட வழிவகை செய்கிறோம்.

கொரோனாவை தடுக்க நான்கு மாதங்கள் நேரம் இருந்தும் நான்கு மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியது. ஏழை மக்களை புறக்கணிக்கும் அரசு மக்களால் கவிழ்ந்த வரலாறுகளும் உண்டு. உங்களின் தொலைநோக்கு பார்வை சரியாக இல்லாமல் தவறிவிட்டது. இதனால் என்னை தேசத்துரோகி என்று யாராவது சொன்னாலும் சொல்லட்டும்’ என்று கமல் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

நோய் தொற்று அறிகுறி இல்லாமலே கொரோனா பரவுகிறது! – எடப்பாடி எச்சரிக்கை

0

நோய் தொற்று அறிகுறி இல்லாமலே கொரோனா பரவுகிறது! – எடப்பாடி எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இரண்டாவது முறையாக ஒவ்வொரு மாவட்டத்தின் நிலவரம் என்ன என்பதை அனைத்து கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். மேலும் இதனைப்பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது ;

தமிழக மாவட்ட ஆட்சியாளர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 கொரோனா ஆய்வகங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும் என்று கூறினார். 4,612 பேருக்கு கொரோனா கொரோனா ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், இதுவரை தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. புதிய நோயாளிகளின் சிகிச்சைக்காக 22 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நோய் தொற்று இல்லாமலே கொரோனா பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்தவித அறிகுறி இல்லாமலேயே கொரோனா பரவி வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டிற்கு சென்ற நபர்கள் தாமாகவே முன்வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டனர். வீட்டு கண்காணிப்பில் உள்ள நபர்களுக்கு வீடுகளுக்கே சென்று அத்தியாவசியமான பொருட்கள் தரப்படுகிறது. குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா நிவாரணம் நிதி ரூ.1,000 வழங்கப்படும். தமிழக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 500 கோடி கொடுத்துள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகே பள்ளி தேர்வுகள் குறித்த முடிவு எடுக்கப்படும்.

கொரோனா நோயார்களின் சிகிச்சைக்காக புதியதாக 2,500 வெண்டிலேட்டர்கள் வாங்க கொள்முதல் ஆணை கொடுக்கப்பட்டு உள்ளது. ரேபிட் டெஸ்ட் கருவி, உபகரணங்கள் என் 95 முக கவசங்கள் போதுமானவை கையிருப்பில் உள்ளன. ஏற்கனவே ஆர்டர் கொடுக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் வருகின்ற 9 ஆம் தேதி வரும், அடுத்த நாளே மக்களுக்கு இதன் மூலம் சோதனை நடத்தப்படும். மக்களை துன்புறுத்தாமல் கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்கள் கண்காணிப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.

அன்புமணி ராமதாஸிடம் ஆலோசனை பெறும் பிரதமர் : கொரோனாவை தடுக்க அதிரடி திட்டம்!

0

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார்.

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 4,288 ஆக உயர்ந்துள்ளது. அதில் சிகிச்சை பெற்று 328 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 109 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ராஜ்யசபா எம்பி அன்புமணி ராமதாஸ் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி பாராளுமன்றத்தில் வைரஸின் ஆபத்தை உணர்த்தும் விதமாக பேசியுள்ளார். அவர் மாநிலங்கள் அவையில் பேசி அந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று மாலை ராஜ்யசபா எம்பி மற்றும் பாமக இளைஞரணி செயலாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இடம் தொலைபேசியில் உரையாடியுள்ளார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் துடிப்புடன் செயல்பட்டதால் அவரிடம் சில ஆலோசனைகளை பிரதமர் கேட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த உரையாடலின் போது பிரதமரின் செயல்களை பாராட்டியதாகவும், மேலும் நோய் பரவல் அதிகமாக இருப்பதால் அதன் தாக்கம் கட்டுக்குள் வரும்வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி பிரதமர் கேட்ட கொண்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானிலும் தப்லீக்ஜமாஅத் மாநாடு தான் கொரோனாவின் ஹாட்ஸ்பாட் : அடுத்தடுத்து உயிரிழப்பு!

0

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால் பிரதமர் மோடி இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு வரும் முன்னே டெல்லியில் தப்லீக் ஜமாஅத் மாநாடு நடந்துள்ளது, இந்த மாநாட்டில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலரை சோதனை செய்ததில் நாடு முழுவதும் நோய்த்தொற்று ஏற்பட்டு வரும் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.

இதனால் இவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்வது மற்றும் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளில் அரசு தீவிரம் காட்டியது. மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அவரின் உறவினர்கள் நண்பர்கள் அப்பகுதி மக்கள் என பலரை தனிமைப்படுத்தி அரசு கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் லாகூர் அருகில் உள்ள ராய்பிண்ட் நகரில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மாநாட்டில் 2,50,000 மக்கள் கலந்து கலந்து கொண்டதால் அந்நாட்டு அரசு அவர்களை பரிசோதனை செய்து தனிமை படுத்தி தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது.

பாகிஸ்தானிலும் இந்த மாநாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கொண்டதால் அவர்கள் மூலமாக பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. இந்த மாநாடு நடந்த சமயத்தில் பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது தடையை மீறி இவ்வாறு நடத்தப்பட்டுள்ளதை அறிந்து அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.

பாக். தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 40 மதபோதகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த நகரில் இருந்து யாரும் வெளியேறக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அம்மாநாட்டில் கலந்து கொண்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெவ்வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் வழங்கிய பட்டியலின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி 7 ஆயிரம் பேரை கண்டுபிடித்து தனிமை படுத்தியுள்ளனர். மேலும் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட 1500 வெளிநாட்டினர் உட்பட 2500 பேரை மாநாடு நடந்த இடத்திலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

நேற்றுவரை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 300 பேருக்கு வரலாற்று உறுதியாகியுள்ளது அதில் 2 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் இதுவரை 2,280 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் ஆயிரக்கணக்கானோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர் ஆவார். பாகிஸ்தானில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து பாகிஸ்தானின் அறிவியல் துறை அமைச்சர் ஃபாவத் சௌத்ரி தடையை மீறி நடத்தப்பட்ட இக்கூட்டத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். மேலும் அரசின் சட்ட திட்டங்களை மதிக்காத எந்த அமைப்பும் ஆபத்தானது என்று கூறிய அவர், சிந்து மாகாணத்தின் ஹைதராபாத் நகரில் உள்ள தப்லீக் ஜமாஅத் தலைமையகத்திற்கு சீல் வைக்கப்பட்டதையும் உறுதி செய்தார்.

மதபிரிவினை தூண்டியதாக மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு! நடந்தது என்ன.?

0

மதபிரிவினை தூண்டியதாக மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு! நடந்தது என்ன.?

மதங்களுக்கு இடையே பிரிவினை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் நடந்த தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாகவே முன்வந்து சிகிச்சை பெறுமாறு அரசு கூறியது. இதன் பின்னர் மாநாட்டில் பங்கேற்ற பலரும் மருத்துவ தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டனர். இச்சம்பவம் இணையத்தில் சர்சையை உண்டாக்கியது.

இதையடுத்து நிசாமுதீன் மாநாட்டிற்கு சென்ற இஸ்லாமியர்களின் மீது கொரோனா தொற்று பரப்பியதாக இணையத்தில் பலரும் விவாதிக்க தொடங்கினர். கொரோனா பாதிப்பை ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது திணிக்க வேண்டாம் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இணையத்தில் அரசியல் மற்றும் இந்திய நிகழ்வுகளை வீடியோவாக வெளியிடும் மாரிதாஸ் கொரோனா பாதிப்பு குறித்தும் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சம்பந்தமாக திருநெல்வேலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கொரோனா தொற்று குறித்தும் மேலப்பாளையத்தில் செயல்படும் இஸ்லாமிய அமைப்புகள் குறித்தும் ஒன்றுபடுத்தி சமூக வலைத்தளத்தில் இரு மதங்களுக்கிடையே பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது 292ஏ, 295ஏ, 505 (2), 67பி என்ற நான்கு இந்திய சட்டப் பிரிவுகளின் கீழ் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.