Home Blog Page 5684

மதரீதியான கூட்டங்களை நடத்த அதிரடியாக தடைவிதித்த முதல்வர் : உச்சகட்ட பரபரப்பு!

0

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று கோர தாண்டவம் ஆடிவருகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை ஏற்று பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை பொது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கும் முன்னதாக டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅதில் மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை இஸ்லாமிய மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இது தெரியாமல் பல மாநிலங்களில் இருந்து வந்த உறுப்பினர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கடந்த மார்ச் 29 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டோரால் பலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரேந்தர்சிங் கொரோனா அச்சுறுத்தலால் இஸ்லாமியர்களின் மத ரீதியான ஒன்று கூடல்களுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளார். மேலும் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டாரை தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர் என்று கூறினார்.

நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசு கண்டிப்பு காட்டி வரும் நிலையில், இந்த அறிவிப்பு பஞ்சாப்பில் உள்ள அம்மதத்தவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிப்பு! கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!!

0

சீனாவில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிப்பு! கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!!

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த மக்களின் துக்கத்தை அனுசரிக்கும் வகையில் இன்று தேசிய துக்க தினத்தை அந்நாட்டு அரசு கடைபிடிக்கிறது.

கொரோனா பாதிப்பு முதன்முதலாக சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் 200 க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு வெளிநாட்டு பயணிகள் மூலம் வேகமாக பரவி பல்வேறு நாடுகளில் கடையை விரித்துள்ளது. குறிப்பாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

உலகளவில் பெரும் ஆபத்தை கொரோனா உண்டாக்கியுள்ளது. இதுவரை உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் இதனால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. தினமும் பல்வேறு நாடுகளில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது.

சீனாவில் வூகான் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்திருப்பதால் பொது மக்கள் வெளியில் நடமாடும் வகையில் அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அங்கு இயங்கும் தனியார் தொழிற்சாலைகள் நிறுவனங்கள், ஓட்டல்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஓரளவு மக்களின் அன்றாட வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதிமாக ஏப்ரல் 4 ல் (இன்று) தேசிய துக்க தினம் சீனாவில் கடைபிடிக்கப்படுகிறது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா தொற்று 11லட்சத்தை நெருங்குகிறது : சர்வதேச மற்றும் மாநில விபரங்கள்!

0

சீனாவின் வூகான் மாநகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 10 லட்சத்து 88 ஆயிரத்து 878 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 382-ஐ எட்டியுள்ளது, மேலும் 2 லட்சத்து 25 ஆயிரத்து 438 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது, உலக அளவில் இந்த நோயால் பலியானார்களின் எண்ணிக்கையில் பாதியை தொடுகிறது.

இத்தாலியில் நேற்று புதிதாக 4,585 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, மொத்த எண்ணிக்கை 1,19,827 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில 766 பேர் பலியாகியுள்ளனர், அதில் மொத்த எண்ணிக்கை 14,681 ஆக தெரிகிறது.

ஸ்பெயினில் நேற்று புதிதாக 7,412 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, மொத்த எண்ணிக்கை 1,17,710 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில 932 பேர் பலியாகியுள்ளனர், அதில் மொத்த எண்ணிக்கை 10,935 ஆக தெரிகிறது.

பிரான்ஸில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 64,338 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6,507 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 14,008 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

ஜெர்மனியில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 91,159 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,275 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 24,575 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

அமேரிக்காவில் நேற்று புதிதாக 34,134 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, மொத்த எண்ணிக்கை 2,70,473 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில 1242 பேர் பலியாகியுள்ளனர், அதில் மொத்த எண்ணிக்கை 6,889 ஆக தெரிகிறது.

சீனாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 81,620 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 3,322 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 76,571 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2,547 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 163 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தென் கொரியாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 10,062 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 174 ஆகவும் தெரிகிறது.

மெக்சிகோவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 50 ஆகவும் தெரிகிறது.

நியூசிலாந்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 868 ஆக உயர்ந்துள்ளது, புதிதாக நோய் தொற்று ஏற்பட்டவர்கள் 71 ஆகவும் தெரிகிறது.

உருகுவேயில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது, புதிதாக நோய் தொற்று ஏற்பட்டவர்கள் 19 ஆகவும் தெரிகிறது.

பொலிவியாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 9 ஆகவும் தெரிகிறது.

பராகுவேயில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 3 ஆகவும் தெரிகிறது.

ஹைட்டியில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது, புதிதாக நோய் தொற்று ஏற்பட்டவர்கள் 2 ஆகவும் தெரிகிறது.

பிலிப்பைன்ஸில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 3,018 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 136 ஆகவும் தெரிகிறது.

ரொமானியாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 3,183 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 133 ஆகவும் தெரிகிறது.

போலந்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 3266 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 65 ஆகவும் தெரிகிறது.

மலேஷியாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 3,333 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 53 ஆகவும் தெரிகிறது.

ஈகுவேடாரில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 3,368 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 145 ஆகவும் தெரிகிறது.

சிலியில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 3,737 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 22 ஆகவும் தெரிகிறது.

டென்மார்க்கில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 3,757 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 139 ஆகவும் தெரிகிறது.

ரஷ்யாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 4,149 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 34 ஆகவும் தெரிகிறது.

ஐயர்லாந்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 4,273 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 120 ஆகவும் தெரிகிறது.

நார்வேயில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 5,296 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 57 ஆகவும் தெரிகிறது.

ஸ்வீடனில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 6,131 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 358 ஆகவும் தெரிகிறது.

இஸ்ரேலில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 7,030 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 40 ஆகவும் தெரிகிறது.

பிரேசிலில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 8,229 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 343 ஆகவும் தெரிகிறது.

போர்ச்சுக்கலில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 9,886 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 37 ஆகவும் தெரிகிறது.

ஆஸ்திரேலியாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 11,489 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 168 ஆகவும் தெரிகிறது.

கனடாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 11,747 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 173 ஆகவும் தெரிகிறது.

நெதர்லாந்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 15,722 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 1,478 ஆகவும் தெரிகிறது.

ஸ்விட்சர்லாந்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 19,606 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 591 ஆகவும் தெரிகிறது.

பெல்ஜியமில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 16,770 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 1,143 ஆகவும் தெரிகிறது.

தாய்வானில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 348 ஆக உயர்ந்துள்ளது, புதிதாக நோய் தொற்று ஏற்பட்டவர்கள் 9 பேர் ஆகவும் தெரிகிறது.

செக் குடியரசில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது, புதிதாக நோய் தொற்று ஏற்பட்டவர்கள் ஓருவராகவும் தெரிகிறது.

நைஜீரியாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 4 ஆகவும் தெரிகிறது.

இஸ்ரேலில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 7,428 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 40 ஆகவும் தெரிகிறது.

துருக்கியில் பெல்ஜியமில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 20,921 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 425 ஆகவும் தெரிகிறது.

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 7 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை;

தேனி – 21
நாமக்கல் – 21
கோயம்புத்தூர் – 29
திருநெல்வேலி – 36
திண்டுக்கல் – 43
சென்னை – 81
விருதுநகர் – 11
திருவாரூர் – 12
விழுப்புரம் – 13
மதுரை – 15
கரூர் – 20

இந்த தகவல்கள் அந்தந்த நாடுகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா கோவிட் என்று பெயர் சூட்டிய பெண்மணி! வைரலாகும் குழந்தையின் படங்கள்!

0

இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா கோவிட் என்று பெயர் சூட்டிய பெண்மணி! வைரலாகும் குழந்தையின் படங்கள்!

இந்தியாவில் கொரோனாவின் தாண்டவம் அதிகரித்து வரும் நிலையில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு “கொரோனா’ “கோவிட்’ என்று பெயர் வைத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

உலகநாடுகளைதொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றால்
10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனா வூகான் பகுதியில் உருவான கொரோனா தாக்குதல் 199 நாடுகளில் தீவிரமாக பரவி உயிர்பலியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலி, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 12 ஆயிரம் பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் கடந்துள்ளது.

கொரோனாவால் ஸ்பெயினில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது. இதேபோன்று அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் அங்கு கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகளவில் அதிகம் கொரோனா அதிகம் பாதித்த பட்டியலில் அமெரிக்கா இருந்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அதில் ஒரு குழந்தை ஆண் மற்றொரு குழந்தை பெண் குழந்தையாகும். இந்த குழந்தைகளுக்கு “கொரோனா’ மற்றும் ” கோவிட்’ என்றும் பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பெண் கூறுகையில், கடந்த மார்ச் 27 ஆம் தேதி எனக்கு பிரசவம் ஏற்பட்டது.
ஊரடங்கு உத்தரவு மற்றும் பல்வேறு சிக்கல்களுக்கு இடையே அதிக பிரசவ வலியில் இவர்களை நான் பெற்றெடுத்தேன். இதனை எப்போதும் மறந்துவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு பெயர் வைத்தோம் என்று கூறியுள்ளார். இதனால் பிறந்ததுமே உலகளவில் இரண்டு குழந்தைகளும் பிரபலமாகி உள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ரேசன் அட்டைக்கான 1000 ரூபாய் வீட்டில் டோக்கன் கொடுக்கும்போதே வழங்கப்படும்! – தமிழக முதல்வர் அறிவிப்பு

0

ரேசன் அட்டைக்கான 1000 ரூபாய் வீட்டில் டோக்கன் கொடுக்கும்போதே வழங்கப்படும்! – தமிழக முதல்வர் அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 1,000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்குவதாக சட்டசபையில் தமிழக முதல் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நிவாரண பொருட்கள் அந்தந்த பகுதி நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் வழங்க கூட்டுறவுத்துறை ஏற்பாடு செய்திருந்தது. இதில் சில விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. ஒரே நேரத்தில் கூட்டம் குவியும் என்பதால் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கான டோக்கன் வழங்கப்படும், அதில் பொருட்களை வாங்க வேண்டிய தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் குறிக்கப்பட்டிருக்கும். அதன்படி உணவுப் பொருட்களை சரியான நேரத்தில் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிப்பு செய்யப்பட்டது.

நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா பொருட்கள் வாங்க வந்த மக்கள் சமூக இடைவெளி விட்டு ஒரு தள்ளியே நாற்காலியில் அமர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக பொருட்களை வாங்கிச் சென்றனர். சில இடங்களில் பொருட்களை வாங்கும் பைகளுக்கு மட்டும் இடைவெளி விட்டுவிட்டு மக்கள் ஒரே இடத்தில் கூட்டாக காத்திருந்த சம்பவங்களும் நடந்துள்ளது.

இதனையடுத்து தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதி ரூ.1,000 வீடு தேடி வரும் என்று கூறியுள்ளார். ஊரடங்கு மற்றும் சமூக விலகல் போன்ற காரணத்தால் ரேசன் கடை ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று உணவுப்பொருள் வாங்குவதற்கான மற்றும் முதல்வர் அறிவித்த நிவாரண பணத்தையும் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயல்களிலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 199 உலக நாடுகளுக்கு பரவி இதுவரை 53 ஆயிரத்திற்கும் மேலான உயிர்களை பலிவாங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் தொடர்ந்து போராடி வருகிறது. இதனால் தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 411 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டுமே 102 பேருக்கு கொரோனோ அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்த விரிவான தகவலையும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நபர்கள் 2,10,538 என்றும் தனிமை வார்ட்டில் உள்ளவர்கள் 23,689 என்றும் தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டியில் கூறியதாவது;

தமிழகத்தில் கொரோனா பரவல் சமூக பரவலாக மாறவில்லை. முன்பு இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 411 ஆக கூடியுள்ளது. கொரோனா மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்த யாரும் அதி தீவிர சிகிச்சை அளிக்கும் நிலையில் இல்லை. கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்றும் கூறினார். மீதமுள்ள இருவரில் ஒருவர் அமெரிக்கா சென்று திரும்பியவர் என்றும் மற்றொருவர் குறித்த தகவல் விசாரித்து வருவதாகவும் கூறினார்.

ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை! போலீசார் மீது கல்வீச்சு! லேசான தடியடி! தென்காசியில் நடந்த பரபரப்பு சம்பவம்!

0

ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை! போலீசார் மீது கல்வீச்சு! லேசான தடியடி! தென்காசியில் நடந்த பரபரப்பு சம்பவம்!

ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை நடத்த குழுமியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் தென்காசியில் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. வைரஸ் பரவலை தடுக்க அரசு சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. உத்தரவை மீறி தென்காசி பள்ளிவாசலில் தொழுகை நடத்த கூட்டமாக திரண்ட இஸ்லாமியர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். அவர்கள் மறுக்கவே லேசான தடியடி நடத்தப்பட்டது. இதனால் போலீசார் மீது கல்வீச்சும் செருப்பு வீச்சும் நடத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனோ பரவலை தடுக்கும் நோக்கத்தில் மக்கள் கூடும் அத்தியாவசியமற்ற அனைத்து இடங்களுக்கும் தடை உள்ளது. இதில் வழிபாட்டு தளங்களும் அடங்கும். இந்நிலையில் தென்காசி பள்ளிவாசல் இஸ்லாமியர்களிடம் அவரவர் வீட்டில் தொழுகை நடத்துமாறு காவல்துறையினர் கூறிய பின்பும் நேற்று, வெள்ளிக்கிழமை தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் ஊரடங்கு உத்தரவை மீறி 100 க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

தென்காசி டிஎஸ்பி கோபாலகிருஷ்ணன் தலைமையிலன போலீசார் அங்கு சென்று ஜமாத் நிர்வாகிகளிடம் பேசி வீட்டுக்கு செல்லுமாறு கூறப்பட்டது. இதனை ஏற்காமல் அங்கேயே இருந்துள்ளனர். மீண்டும் கோரிக்கையாக போலீசார் கூறியும் யாரும் அங்கிருந்து நகரவில்லை. இதனையடுத்து வலுக்கட்டாயமாக அவர்கள் மீது லேசான தடியடி நடத்த ஆரம்பித்ததால் சிலருக்கு காயம் ஏற்பட்டது. பள்ளிவாசலில் இருந்த சிலர் போலீசார் மீது கல்வீச்சும், செருப்பும் வீச்சும் நடத்தியதாக கூறப்படுகிறது. காவல்துறையின் நடவடிக்கைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் பரிசோதனை செய்ய வந்த டாக்டர்களை கல்லால் அடித்து வெறிச்செயல்!

0

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று கோர தாண்டவம் ஆடிவருகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை ஏற்று பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை பொது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கும் முன்னதாக டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅதில் மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை இஸ்லாமிய மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இது தெரியாமல் பல மாநிலங்களில் இருந்து வந்த உறுப்பினர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கடந்த மார்ச் 29 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டோரை அரசு பரிசோதனைக்கு அழைத்துள்ளது, அதில் சிலர் ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசின் உத்தரவை ஏற்று, இந்தூரில் உள்ள ஒரு இடத்தில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டோரை பரிசோதனை செய்ய மருத்துவ குழு சென்றுள்ளது. முதலில் ஒத்துழைக்க மறுத்த இவர்கள் பின்னர் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கல்லால் அடித்து விரட்டியுள்ளனர்.

மருத்துவர்கள் உட்பட அனைவரையும் கல்லால் அடித்து தாக்கியதால் உயிருக்கு பயந்த அக்குழுவினர் அங்கிருந்து தப்பித்து மருத்துவ முகாமுக்கு வந்துள்ளனர். அந்த மருத்துவக்குழுவுடன் சென்ற டாக்டர் ஒருவர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் வரவில்லை என்றால் தாங்கள் உயிர் பிழைத்திருக்கவே முடியாது என்று தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

https://twitter.com/RightWing_India/status/1245402123954614272?s=19

கவிஞர் நெல்லை பாரதி உயிரிழப்பு! நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி!

0

கவிஞர் நெல்லை பாரதி உயிரிழப்பு! நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி!

சினிமா திரைப்பட பாடலாசிரியர் மற்றும் திரைப்பட பத்திரிகையாளர் கவிஞர் நெல்லை பாரதி இன்று திடீரென உயிரிழந்தார். இன்று அவரது வீட்டில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நெல்லை பாரதியின் இறப்பு குறித்து நடிகர் விவேக் பதிவு செய்துள்ளார். அதில், நல்ல எழுத்து ஆளுமை கொண்ட நெல்லை பாரதியின் திடீர் இறப்பு வருத்தத்திற்குரியது. இது அவரே தேடிக்கொண்டது என்றும் தெரிந்தவர்கள் இதனை அறிவர் என்று கூறியுள்ளார்.

மற்றொரு நல்ல திறமையாளனை எழுத்து உலகமும், பத்திரிகை உலகமும் இழந்துவிட்டது மனதில் பட்டதை நேரடியாக சொல்பவர் சிலர் அந்த சிலரில் ஒருவர் இவர் என்றும் எப்போதாவது பூக்கும் அறிய மலர் என்றும் நடிகர் விவேக் கூறியுள்ளார்.

சினிமா துறையில் இருக்கும் கலைஞர்களின் இறப்பு தற்போது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இளம் நடிகர் மற்றும் மருத்துவர் சேதுராமன் இறப்பும் சினிமா திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கவிஞர் நெல்லை பாரதியின் இறப்பும் சினிமா நடிகர்கள் இடையே சோகத்தை உண்டாக்கியுள்ளது.

நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு முத்தம் கொடுத்த மகேஷ்பாபு : பிறந்தநாளில் சர்பிரைஸ்!

0

தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோவும் மிகப்பெரிய வசூலை முதல் வாரத்திலேயே வழங்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தான் மகேஷ்பாபு. தமிழில் பெரிய ஹிட் ஆன கில்லி, போக்கிரி போன்ற படங்களின் ஒரிஜினல் வெர்ஷனில் நடித்தது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதிவ்யா தமிழில் அறிமுகமாகி சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழில் அதிக படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

மகேஷ்பாபு கடந்த 2000ம் ஆண்டில் சிம்ரன், சாக்ஷி ஆகியோருடன் நடித்து ஹிட்டான படம் தான் யுவராஜ். இந்த படத்தில் மகேஷ்பாபுவுடன் நடிகை ஸ்ரீதிவ்யா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார்.

நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு முத்தம் கொடுத்த மகேஷ்பாபு : பிறந்தநாளில் சர்பிரைஸ்!

யுவராஜ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு கண்ணத்தில் முத்தம் கொடுப்பது போல அமைந்திருக்கும். இந்த படத்தை பார்த்த பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் ஸ்ரீதிவ்யாவின் பிறந்தநாளில்(ஏப்ரல் 1) ரசிகர்கள் சிலர் அந்த படத்தில் வரும் புகைப்படங்களை சர்ப்ரைஸாக போட்டு டுவிட்டரில் வாழ்த்து கூறியிருந்தனர்.

நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு முத்தம் கொடுத்த மகேஷ்பாபு : பிறந்தநாளில் சர்பிரைஸ்!

மகேஷ்பாபு குழந்தையாக நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு தான் முத்தம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது, மற்றபடி அவர் எப்பவுமே ஜெண்டில்மேன் தான்.

நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு முத்தம் கொடுத்த மகேஷ்பாபு : பிறந்தநாளில் சர்பிரைஸ்!

இந்த பழைய புகைப்படங்களை பார்த்து நம்ம ஸ்ரீதிவ்யாவா இது என்று ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர், ஏப்ரல் 1 அவரது பிறந்தநாள் என்பதால் பலரும் அவருக்கு வாழ்த்து கூறியிருந்தனர்.

நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு முத்தம் கொடுத்த மகேஷ்பாபு : பிறந்தநாளில் சர்பிரைஸ்!