Home Blog Page 5683

தமிழகத்தில் கோடையிலும் கொட்டி தீர்த்த கனமழை : பூமி குளிர்ந்து மக்கள் மகிழ்ச்சி!

0

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார்.

தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் தமிழகத்தின் பல இடங்களில் வெய்யில் கடுமையாக வாட்டி வந்தது. மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் கடும் வெய்யிலால் வற்ற தொடங்கிவிட்டன.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் செல்லும் மக்கள் கோடை வெயிலை தாங்கமுடியாமல் தவித்து வந்தனர். ஊரடங்கு உத்தரவால் பணியில் உள்ள காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், வியாபாரிகள், பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பலரும் வெய்யிலால் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்தநிலையில் தென்தமிழகத்தில் பரமக்குடி மற்றும் விருதுநகர் பகுதிகளில் கோடை மழை கொட்டித் தீர்த்துள்ளது. ஏற்கனவே அதிகம் மழை காணாத இடங்களாக இருந்துவந்த இவ்வூர்களில் பூமி குளிர்ந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சற்று மேகமூட்டம் ஆகவே இருக்கிறது, இதனால் வெய்யிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதே போன்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தால் நீர்நிலைகளிலும் நிரம்பும், மக்களும் நிம்மதி அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

தப்லீக்ஜமாஅத் மாநாட்டிற்கு சென்றவர் உட்பட தமிழகத்தில் 2 உயிரிழப்பு : கொரோனா பலி 5ஆக உயர்வு!

0

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று கோர தாண்டவம் ஆடிவருகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை ஏற்று பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை பொது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

இதனை அடுத்து மார்ச் 22ஆம் தேதி முதல் இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. மேலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை பரிசோதனை செய்து வீட்டில் தனிமை படுத்திப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையில் துபாயில் இருந்து சென்னை வந்த 71 வயது முதியவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அவரது ரத்த மாதிரிகளை சோதனை செய்து தற்போது அவர் கொரோனாவால் தான் உயிரிழந்தார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்த 61 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நபர் டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்டு சென்னை வந்த இவர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று வரை தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3ஆக இருந்தது தற்போது இந்த இரண்டு உயிரிழப்புகள் 5ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று 12லட்சத்தை தாண்டியது : சர்வதேச மற்றும் மாநில புள்ளி விபரங்கள்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 12 லட்சத்து ஆயிரத்து 473 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 691-ஐ எட்டியுள்ளது, மேலும் 2 லட்சத்து 46 ஆயிரத்து 383 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5.5 லட்சத்தை கடந்துள்ளது, உலக அளவில் இந்த நோயால் பலியானார்களின் எண்ணிக்கையில் பாதியை தொடுகிறது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

கொரோனா தொற்று 12லட்சத்தை தாண்டியது : சர்வதேச மற்றும் மாநில புள்ளி விபரங்கள்!

இந்தியாவில் நேற்று புதிதாக 529 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, மொத்த எண்ணிக்கை 3,588 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில 13 பேர் பலியாகியுள்ளனர், அதில் மொத்த எண்ணிக்கை 99 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 229 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / குணமடைந்தவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 409/42/24
டெல்லி – 445/15/6
தமிழ்நாடு – 411/6/2
கேரளா – 295/41/2
ராஜஸ்தான் – 200/21/0
உத்தரபிரதேசம் – 174/19/2
ஆந்திர பிரதேசம் – 161/1/1
தெலுங்கானா – 159/1/7
கர்நாடகா – 128/12/3
குஜராத் -105/14/10
மத்திய பிரதேசம் -104/0/6
ஜம்மு & காஷ்மீர் -75/3/2
மேற்கு வங்கம் -69/3/3
பஞ்சாப் -57/1/5
ஹரியானா -49/24/0
பீகார் -30/0/1
அசாம் -24/0/0
சண்டிகர் -18/0/0
உத்தர்கண்ட் -16/2/0
லடாக் -14/3/0
அந்தமான் & நிக்கோபார் -10/0/0
சத்தீஸ்கர் -9/3/0
கோவா -7/0/0
இமாச்சல பிரதேசம் -6/1/1
ஒடிசா -5/0/0
பாண்டிச்சேரி -5/1/0
மணிப்பூர் -2/0/0
ஜார்க்கண்ட் -2/0/0
மிசோரம் -1/0/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0/0

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியானதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் மனித இனம் அழியுதோ இல்லையோ டிக்டாக் நிச்சயம் அழிய போகுது!

0

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்று காட்டுத்தீ போல் பரவி வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியில் வர வேண்டாம் என்று பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

சீனாவில் கொரோனா பரவ தொடங்கினாலும் அங்கு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது, ஆனால் இந்த வைரஸ் தொற்று தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நாடுகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தாலும் மக்களை கட்டுப்படுத்த முடியாததால் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்கா அதிபர் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று கூறி கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் சீன அரசு தவறான புள்ளி விவரங்களை தருவதாகும், அங்கு உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டிருக்கும் என்று என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சீன தயாரிப்பான டிக்டாக் செயலி பயனாளர்களின் ரகசியங்களை திருடுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி சீனா பல்வேறு அமெரிக்கர்களின் ரகசியங்களை சேமித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

டிக்டாக் செயலிக்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி வருவதால் அதனை தடை செய்ய வேண்டும் என்று ஆசிய நாடுகளில் எதிர்ப்புகள் எழுந்து வந்தது. ஏற்கனவே கொரோனாவால் பல நாட்டினர் சீனா மீது கோபத்தில் இருக்கின்றனர், மேலும் எதிர்ப்புகள் வலுப்பதால் இந்தியா உட்பட பல நாடுகளில் டிக்டாக் செயலி தடைசெய்ய சொல்லி டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதனால் டிக் டாக் செயலியை அமெரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகளில் தடை செய்ய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

நாளை இரவு தெரு விளக்குகளை அணைக்க கூடாது! -மத்திய மின்துறை அமைச்சகம்

0

நாளை இரவு தெரு விளக்குகளை அணைக்க கூடாது! -மத்திய மின்துறை அமைச்சகம்

நாளை இரவு தெருவிளக்குகளை அணைக்க கூடாது என்று மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை வீட்டில் மின் விளக்குகளை அணைத்துவிடுங்கள் மேலும் கொரோனோ என்ற இருளை அகற்ற டார்ச், அகல்விளக்கு போன்றவற்றை எரியவிடுமாறு பிரதமர் நரேந்திரமோடி மோடி கூறினார். இதனையடுத்து பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளியாகியது.

இதுகுறித்து மத்திய மின்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறியதாவது; நாளைய இரவு வீட்டில் மின்விளக்குகளை அணைக்கும் போது தெருவிளக்குகள் எரிய வேண்டும். இதனை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதிபடுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வீட்டில் இருக்கும் பிற மின்சாதன உபகரணங்கள் வழக்கம்போல செயல்பட வேண்டும். மேலும் மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய இடங்களில் மின் விளக்குகளை அணைக்க கூடாது என்று மத்திய மின்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதுகுறித்து தமிழக மின்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறியதாவது; நாளை இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைப்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை. மின் விளக்குகளை அணைக்கும்போது மின் சாதனத்தில் எந்த சிக்கலும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின் விளக்கை அணைக்கும் போது வழக்கம்போல மற்ற மின்சாதனங்களை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமர் அறிவிப்பை ஏற்று மின்விளக்குகளை ஒரே நேரத்தில் அணைத்தால் மின்விநியோக சிக்கல் அல்லது மின்சாதன வழித்தடங்களில் கோளாறு ஏற்படலாம் என்று மின்சாரத்துறை நிபுணர்கள் பல்வேறு கருத்துகள் வெளியிட்ட நிலையில் மத்திய மற்றும் தமிழக மின்துறை அமைச்சகங்கள் விளக்கம் அளித்துள்ளன.

கொரோனா போரில் ஊர்க்காவல் படையை மலர்தூவி ரூபாய் மாலையிட்டு வரவேற்க்கும் மக்கள்(வீடியோ)!

0

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் கூட அல்லது வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. நாடு முழுவதும் சுகாதாரத்துறையினர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் நபா என்ற ஊரில் துப்புரவு ஊழியர்கள் மக்கள் வசிக்கும் பகுதியில் சுகாதார வேலைகளை செய்து செல்கின்றனர். அப்போது இந்த பகுதி மக்கள் மலர்தூவி வரவேற்கின்றனர், பின்னர் சில இளைஞர்கள் அந்த ஊழியருக்கு ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையை அணிவித்து நன்றி தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்வை அங்கிருந்த யாரோ மொபைலில் வீடியோவாக எடுத்துள்ளனர், அதனை பஞ்சாப் முதல்வர் நரேந்திர சிங் ட்விட்டரில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.

வாகனத்தை நிறுத்தியதால் பெண் போலீஸை பழிவாங்கிய ஸ்டேட் பாங்க் மேலாளர்!

0

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த அதிரடி உத்தரவால் காவல்துறை வெளியில் வருபவர்களிடம் கண்டிப்பு காட்டி வந்தது, இதனால் நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று தமிழக முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து காரணமின்றி பொது இடங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தது. மேலும் அத்தியாவசிய வேலைகளுக்காக செல்பவர்கள் ஆட்டோவை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது தேவையேற்பட்டால் சொந்த வாகனத்தில் செல்ல உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையில் திருவொற்றியூரை சேர்ந்த ஸ்டேட் பாங்கின் துணை மேலாளர் இன்று காலையில் வேலைக்கு செல்ல ஆட்டோவை பயன்படுத்தியுள்ளார். அங்கே இரு அங்கு வாகன தணிக்கை செய்து வந்த காவல்துறையினர் ஆட்டோவில் செல்ல அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் பெண் காவலர் ஒருவர் திருவெற்றியூரில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அங்கு பணம் எடுக்கும் முன்ப வங்கியின்ு துணை மேலாளரிடம் கையெழுத்து வாங்க சென்றுள்ளார், அப்போது ‘காவல்துறை எங்களுக்கு இடையூறு தான் செய்கிறது நாங்கள் ஏன் உங்களுக்கு உதவி செய்யும் வேண்டும்’ என்று கூறி கையெழுத்து போட மறுத்துள்ளார்.

இதனால் வேதனையுற்ற பெண் காவலர் வங்கி துணை மேலாளர் இந்த காரணத்திற்காக தான் கையெழுத்து போட மறுத்தார் என்ற குரல் பதிவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தக் குரல் பதிவு வைரல் ஆனதால் அனைவரும் அந்த துணை மேலாளரை வசை பாடி வருகின்றனர்.

இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்று வந்தவர் உயிரிழப்பு : தமிழகத்தில் 2வது பலி!

0

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று கோர தாண்டவம் ஆடிவருகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை ஏற்று பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை பொது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கும் முன்னதாக டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅதில் மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை இஸ்லாமிய மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இது தெரியாமல் பல மாநிலங்களில் இருந்து வந்த உறுப்பினர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தானாக முன்வந்து பரிசோதனையை செய்து கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டு கொண்டது.

இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டனர். அந்த பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயதான நபர் உயிரிழந்துள்ளார். இவர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர் என்று சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

0

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிக்காக பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் அரசுக்கும், மருத்துவர்களுக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா தடுப்புப் பணிகள் மட்டுமின்றி, ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய பொறுப்பும் மாநில அரசுக்கு சேர்ந்திருக்கும் நிலையில், அதற்காக மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்காதது வருத்தமளிக்கிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் மிகவும் தாமதமாகத் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது. ஆனால், இன்றைய நிலையில், இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், ஒரு லட்சத்திற்கும் கூடுதலானவர்கள் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவேளை அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சையளிக்கும் பணிகளுக்காக ஏராளமான மருத்துவக் கருவிகளும், மருந்துகளும் வாங்க வேண்டியுள்ளன. அதற்காக பல்லாயிரக்கணக்கான கோடி நிதி தமிழக அரசுக்கு தேவைப்படுகிறது.

கொரோனா மருத்துவத் தேவைகளுக்காக பா.ம.க. மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.3 கோடி ஒதுக்கிய நிலையில், அவரைத் தொடர்ந்து மேலும் பலர் நிதி ஒதுக்கினர். ஆனால், அதற்குப் பிறகும் மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக ரூ.3,000 கோடி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருக்கிறது.

மற்றொருபுறம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.3,280 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை மார்ச் 31&ஆம் தேதி வரையிலான வாழ்வாதார இழப்பை ஈடுகட்டுவதற்கான முதல்கட்ட உதவிகள் தான் எனும் நிலையில், ஏப்ரல் 14&ஆம் தேதி வரையிலான வாழ்வாதார இழப்புக்கு அடுத்தகட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும். அதற்காகவும், பிற தேவைகளுக்காகவும் மத்திய அரசின் உதவியாக ரூ.4,000 கோடியும், சிறப்பு மானியமாக ரூ.9,000 கோடியும் வழங்கும்படி பிரதமர் அவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால், இந்தியப் பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் 11 நாட்கள் ஆகும் நிலையில், இன்று வரை தமிழக அரசுக்கு மட்டுமின்றி, எந்த ஒரு மாநில அரசுக்கும் மத்திய அரசின் நிதி உதவி அறிவிக்கப்படவில்லை. கொரோனா நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்படுவது தவிர்க்க முடியாதது ஆகும். அதனால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப் பட்டுள்ள போதிலும், அடித்தட்டு மக்களால் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாது. அவர்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதார உதவிகளை மாநில அரசு வழங்கும் நிலையில், அதற்கான செலவுகளில் ஒரு பகுதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்பது தான் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையாகும்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு மாநில அரசுகளின் வரி விதிப்பு அதிகாரம் குறைந்து விட்டது. பெட்ரோல், டீசல், மது வகைகள் ஆகியவற்றின் மீதான மதிப்புகூட்டு வரி வருவாய் நேரடியாக தமிழக அரசுக்கு கிடைக்கும் என்றாலும் கூட, அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் பத்தில் ஒரு பங்காக குறைந்து விட்டது. ஜி.எஸ்.டி வரி வருவாயில் தமிழகத்திற்கு மத்திய அரசு பல்லாயிரம் கோடி நிலுவை வழங்க வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழலில் மத்திய அரசின் நிதி உதவிகள் உடனடியாக கிடைக்காவிட்டால் தமிழக அரசின் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். அது தமிழகத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு மற்றும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தமிழக அரசு கோரியவாறு ரூ.16,000 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். அத்துடன் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் முன்பணம் ஆகியவற்றையும் மத்திய அரசு விரைவாக வழங்க முன்வர வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மது பிரியர்களுக்கு இதை கொடுத்தால் போதும் : அரசுக்கு மருத்துவர் அட்வைஸ்!

0

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த உத்தரவால் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், தியேட்டர், கோயில்கள், சர்ச்கள், ஒயின் ஷாப்கள், பார்கள், உள்ளிட்டவை அதிரடியாக மூடப்பட்டன. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார்.

இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால் குடிமகன்கள் சாராயம் கிடைக்காமல் அல்லாடி வந்தனர். மேலும் சில இடங்களில் கள்ள மார்க்கெட்டில் சாராய பாட்டில்களை அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில் கேரளாவின் சில இடங்களில் மது பிரியர்கள் சாராயம் கிடைக்காத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளனர். இதனால் கேரள அரசு ஊரடங்கு உத்தரவு காலத்தில் மட்டும் சாராயம் விநியோகம் செய்ய உத்தரவிட்டது.

அந்த உத்தரவில் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சிலருக்கு மட்டும் பாஸ் வழங்கப்படும் அந்த குறிப்பிட்ட நபர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவில் மது வினியோகம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இவ்வாறு சாராயம் வழங்குவது ஏற்க முடியாது மாற்று யோசனைகளை கையால உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மது பிரியர்களுக்கு சாராயம் வழங்குவதை விட போதை மீட்பு சிகிச்சை வழங்குங்கள். மேலும் உயர் நீதிமன்றம் சொன்னபடி கேரள அரசின் பரிந்துரைக்கு அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.