Home Blog Page 5693

சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கையில் கடைசி நாள் என்ன நடந்தது.? திகல் நிறைந்த சுவாரஸ்ய தகவல்.!!

0

சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கையில் கடைசி நாள் என்ன நடந்தது.? திகல் நிறைந்த சுவாரஸ்ய தகவல்.!!

1945 ஆம் ஆண்டு ஜனவரி (16) மாதம் எதிரி நாடுகள் ஜெர்மனியை சுற்றிவளைத்துக் கொண்டிருந்தன. அடால்ப் ஹிட்லர் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்க உருவாக்கப்பட்ட பெர்லின் ஃபியூரர்பங்கர் என்னும் தரையடிச் சுரங்கத்திற்கு சென்றார். அவருடன் மனைவி மகதா, குழந்தைகள், அவரது உதவியாளர்கள் கெப்பல்ஸ், ஈவா பிரவுன், மருத்துவர்கள், பாதுகாப்பு வீரர்கள், தொலைதொடர்பு பணியாளர்கள் உட்பட பலரும் அந்த சுரங்கத்தில் தங்கினர். ஹிட்லர் அங்கிருந்தே போர் குறித்த செய்திகளை அறிந்துகொண்டு தனது உத்தரவின் மூலம் ஜெர்மனியை வழிநடத்தினார்.

1945 ஏப்ரல் 29 அன்று முசோலினி மற்றும் அவரது மனைவியின் மரணம் குறித்தும் அவர்களது உடலுக்கும் ஏற்பட்ட கதியை அறிந்து கொண்டார். ஆனால், இதற்கு முன்பே ஹிட்லர் முடிவு செய்திருந்தார். என் உடலை எதிரிகள் கைப்பற்றிக் கொள்ளவும் அதை ஒரு வெற்றிப்பதக்கமாக கொண்டாட அனுமதிக்க மாட்டேன் என்று “சயனைடை” ஏற்கனவே தேர்ந்தெடுத்திருந்தார். பங்கருக்கு வந்த நாளில் இருந்தே தற்கொலை எண்ணம் அவருக்கு உதித்துக்கொண்டே இருந்தது.

ஈவா பிரவுனை சுரங்கத்திற்கு வரவேண்டாம் என்று ஹிட்லர் கூறியிருந்தும் கெப்பல்ஸ் உடன் அவரும் சுரங்கத்திற்கு வந்திருந்தார். ஹிட்லரின் பிரத்யேக புகைப்படக் கலைஞரின் உதவியாளராக பணிபுரிந்த ஈவா பிரவுன் அடிக்கடி அவரைச் சந்திக்க தொடல்கினார். முசோலியை போலன்றி, ஹிட்லரின் வாழ்வில் ஈவாவைத் தவிர இன்னொரு பெண் இல்லை. சுரங்கத்திற்கு வந்தபிறகு திருமணத்தை பற்றி ஈவா வைத்த வேண்டுகோளை ஹிட்லர் ஏற்றுக் கொண்டு அவரை திருமணமும் செய்து கொண்டார். திருமணத்தில் கெப்பல்ஸ் மற்றும் சில நாஜி அலுவலர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். ஹிட்லரும், ஈவாவும் கணவன் மனைவியாக பல மணி நேரங்கள் வாழ்ந்து முடித்த நிலையில், ஜெர்மனியின் படைகள் எந்தெந்த இடத்தில் பின்வாங்கியுள்ளது என்பதையும் இன்னும் எத்தனை நாள் தாக்குபிடிக்கும் என்று தொலைத்தொடர்பு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 1 அல்லது 2 நாட்கள் என்று பதில் வந்தது. இதற்குமேல் தாமதிக்க கூடாது என்று தன்னிடம் இருந்த சயனைடு குப்பிகளை நோக்கினார்.

தன்னிடம் இருக்கும் சயனைடு மாத்திரைகள் ஹிம்லர் எஸ் எஸ் என்ற முன்னாள் துரோகியிடம் இருந்து வந்தவை என்பதால், ஹிம்லரைப் போல் சயனைடும் துரோகம் செய்துவிட்டால் என்ன செய்வது என்று தான் வளர்த்த நாய் ஒன்றுக்கு சயனைடை கொடுத்துப் பார்க்கச் சொன்னார். சயனைடை சாப்பிட்ட நாய் ஏமாற்றாமல் இறந்துபோனது. 1945 ஏப்ரல் 30 அன்று மாலை 2 மணிக்கு சுரங்கத்தில் இருந்த உதவியாளர்கள், படை வீரர்கள் அனைவரிடமும் இருந்து விடை பெற்றுக்கொண்டு தனது இறுதி நாளின் ஏற்பாடுகளுக்கான உத்தரவை பிறப்பித்தார். போதுமான பெட்ரோல் இருக்கிறதா என்று உறுதி செய்யப்பட்டது. மதியம் ஒருமணிக்கே ஹிட்லர் தன் மதிய உணவை முடித்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து வழக்கமான தனது சீருடையில் ஹிட்லரும் ஈவா பிரவுனும் வந்தனர். வெளியே இருந்த கெப்பல்ஸ் மற்றும் மகதாவுடன் கையை குலுக்கிவிட்டு வேகமாக தன் அறைக்குச் சென்றார். கலங்கிய கண்களுடன் ஈவாவை அழைத்துச் சென்று இறுதியாக ஒரு முறை ஹிட்லரை பார்க்க வேண்டும் என்று கேட்டார். அனுமதியும் கிடைத்தது, ஹிட்லரிடம் சென்ற மகதா; நீங்கள் ஏன் பெர்லினை விட்டு தப்பிச்செல்ல கூடாது? என்று கேட்டதற்கு பலமுறை அளிக்கப்பட்ட அதே பதில்தான் மீண்டும் கிடைத்தது. பின்னர் மகதா உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

கெப்பல்ஸ் உட்பட அனைவரும் அறைக்கு வெளியே காத்திருந்தனர். கெப்பல்ஸின் குழந்தைகள் உணவருந்திக் கொண்டே ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். 10 நிமிடங்கள் ஆகிய பிறகும் சத்தம் எதுவும் கேட்காததால் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, ஹிட்லரும், ஈவா பிரவுனும் ஒரு சிறிய சோஃபாவில் அருகருகே அமர்ந்திருந்தனர். ஈவா ஹிட்லர் மீது சாய்ந்திருந்தார். ரசாயன வாசம் காற்றில் மிதந்து வந்தன. உயிரற்ற ஹிட்லரின் தலை முன்பக்கமாக சாய்ந்திருந்தது. வலது நெற்றியில் குண்டு பாய்ந்த இடத்திலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அவருடைய காலுக்கு அருகில் 7.65 mm வால்தர் பிஸ்டல் கிடந்தது.

திடீரென தீப்பிடித்த அரசு பேருந்துகள்! புதுக்கோட்டையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

0

திடீரென தீப்பிடித்த அரசு பேருந்துகள்! புதுக்கோட்டையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

டெப்போவில் நிறுத்தி வைத்திருந்த 6 அரசு பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் தமிழகம் முழுவதும் 144 தடை விதித்த காரணத்தால் போக்குவரத்து சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசுபோக்குவரத்து கழக பணிமனையில் 200 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நிறுத்தி வைக்கப்படிருந்த ஒரு பேருந்தில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் வேகமாக எரிந்த தீ மளமளவென அடுத்தடுத்த பேருந்துகளில் தீப்பற்ற ஆரம்பித்தது. சம்பவத்தை அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் மற்ற பேருந்துகளுக்கும் தீ பரவாமல் நின்றது.

இந்த திடீர் தீவிபத்து சம்பவத்தில் மொத்தம் 6 அரசு பேருந்துகள் எரிந்து சாம்பலாகின. பேருந்தில் தீ எப்படி பற்றியது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு கூறிய 1000 ரூபாயை ரேசன் கடைகளில் தரமுடியாது! பொதுவிநியோக ஊழியர் சங்கத்தலைவர் பேச்சு!

0

தமிழக அரசு கூறிய 1000 ரூபாயை ரேசன் கடைகளில் தரமுடியாது! பொதுவிநியோக ஊழியர் சங்கத்தலைவர் பேச்சு!

கொரோனா பாதிப்பால் அரசு அறிவித்த 1000 ரூபாயை நியாய விலைக் கடைகளில் வழங்க முடியாது என்று பொதுவிநியோக ஊழியர் சங்கத்தின் தலைவர் பால்ராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வருவதால் 144 தடைவிதிக்கப்பட்டது. இதன் பின்னர் மத்திய அரசு 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்த உத்தரவால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பினை சரிசெய்யும் விதமாக தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் 1,000 ரூபாய் பணமும் இலவசமாக அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்குவதாக அறிவித்தது.

இந்நிலையில், தமிழக அரசு மக்களுக்காக அறிவித்த 1,000 ரூபாய் பணம் மற்றும் இலவச உணவுப் பொருட்களை ரேசன் கடைகளில் தரமுடியாது என்று பொதுவிநியோக ஊழியர் சங்கத்தின் தலைவர் பால்ராஜ் அதிரடியாக கூறியுள்ளார். இதனால் மக்களிடையே பரபரப்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பால்ராஜ் கூறியதாவது;

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊழியர்கள் மக்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்களை வழங்கும்போது மற்றவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின் பணத்தையும் உணவுப் பொருட்களையும் விநியோகம் செய்யலாம் என்று கூறினார். மேலும், இந்த விஷயத்தில் அரசு எங்களை வற்புறுத்தினால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

இணையத்தில் முன்னணி இயக்குநரை விதவிதமாக மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள் : அதுக்கு காரணம் இதுதானாம்!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது இதனால் 300 கோடி மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இப்படிப்பட்ட கொடிய நோயையே நம்ம ஊரு மீம் கிரியேட்டர்கள் விதவிதமா படம் போட்டு ட்ரோல் செய்கிறார்கள்.

இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நம்ம ஊரு சினிமா ரசிகர்கள் ஒரு முன்னணி இயக்குனரை மீம் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். இன்று ட்விட்டரில் அந்த இயக்குநருடைய பெயரை வெவ்வேறு விதமாக படங்களில் எடிட் செய்து #Pray_for_Samu***** என்ற ஹேஷ்டேக்கோடு டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இவ்வாறு இணையத்தில் ட்ரோல் செய்பவர்களை மற்றவர்கள் காரணம் கேட்டால் அவர்களுக்கே தெரியவில்லை என்பதுதான் உச்சபட்ச காமெடி. இது ஒரு பக்கமிருக்க அந்த இயக்குனர் மேடைகளில் திரைப்படங்களில் சொல்லப்படும் கருத்து பிடிக்காத சிலர் ‘காரணம் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன’ என்று கலாய்த்து வருகின்றனர்.

அந்த இயக்குனரை பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சிலர் இந்த கூட்டத்தில் சேர்ந்து கொண்டு பொழுது போக்க கேளி செய்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அந்த இயக்குனர் கலாய்ப்பது எல்லாம் என் சொந்தங்கள் தானே என்று கூலாக சொல்லி சென்றுவிட்டார்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு – அரசுக்கு பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஆலோசனை முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வரவேற்பு

0

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஆலோசனை முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வரவேற்பு

தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன் அவர்கள் பலரும் சிந்திக்காத பல்வேறு விடயங்களை பற்றி தொடர்ந்து தனது ஆக்கப்பூர்வமான கருத்தை பதிவு செய்து வருபவர்.

அந்த வகையிலே இன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தை கொண்டு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளதாவது :

ஒவ்வொரு தரப்பு மனநிலையையும் இந்த அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.
உதாரணத்திற்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கூறலாம்.
பல லட்சம் மாணவர்கள் அதைப்பற்றிய சிந்தனையிலேயே கடுமையான மனஅழுத்தத்தில் உள்ளனர்.

அந்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோரையும் அதிலிருந்து இப்போதே விடுவிப்பது நல்லது. என்னைக்கேட்டால், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அப்படியே பதினோராவது தொடர வகை செய்யலாம்.

ஃபர்ஸ்ட் குரூப்.. மற்றும் பாலிடெக்னிக் போன்ற டிப்ளமோ கோர்ஸ் போக விரும்புவர்கள் மட்டும் ஒரு சிறிய சிறப்பு தேர்வு எழுதினால் போதும். நம்ம யோசனை இவ்ளோதான். உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் யோசனை சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனை முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் வரவேற்று தன்னுடைய முகநுல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மீண்டும் உங்களை மகிழ்விக்க வருகிறது சக்திமான்

0

மீண்டும் உங்களை மகிழ்விக்க வருகிறது சக்திமான்

இந்தியாவில் இதுவரை சுமார் ஏழு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து நாடெங்கும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருப்பவர்களுக்குப் பொழுதுபோக்கும் விதமாகப் பல சேனல்கள் தங்கள் பிரபலமான தொடர்களை மீண்டும் ஒலிப்பரப்பி வருகின்றனர்.

அந்த வரிசையில் டிடி நேஷனல் சேனல் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை ஒளிப்பரப்பி வருகிறது.அந்த வரிசையில் தற்போது 80 ஸ் கிட்ஸ்களின் பிரசித்திப் பெற்ற தொடரான சக்திமான் விரைவில் ஒளிப்பரப்பாக இருக்கிறது என்று அத்தொடரின் நடிகரும் தயாரிப்பாளருமான முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

காலத்தால் அழியாத தொடர்களில் சக்திமான் தொடரும் ஒன்று. நாம் குழந்தையாக இருந்தபோது நாம் கண்டு மகிழ்ந்த சக்திமானை நம் குழந்தைகளுக்கும் காட்டும் அரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. எனவே மீண்டும் உங்களை மகிழ்விக்க உங்கள் இல்லம் தேடி வருகிறார் சக்திமான்.

உணவில்லாமல் தவித்த 50பிகார் கூலித்தொழிலாளிகள் : சாப்பாடு கிடைத்தது எப்படி? முதல்வருக்கு நன்றி சொன்னது ஏன்?

0

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த அதிரடி உத்தரவால் காவல்துறை வெளியில் வருபவர்களிடம் கண்டிப்பு காட்டி வந்தது, இதனால் நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று தமிழக முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையில் வெளியூர்களில் வெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் கூலித் தொழிலாளர்கள் தாங்கள் பிறந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே சிக்கித்தவித்தனர். அவ்வாறு பீகாரில் இருந்து திருப்பூருக்கு வந்த 50 கூலித்தொழிலாளிகள் வேலை செய்து வந்த நூற்பாலைகள் மூடப்பட்டதால் பணமின்றி உணவின்றி வீட்டிலேயே முடங்கியிருந்தனர்.

செய்வதறியாது தவித்த அவர்கள் தாங்கள் குழுவாக அமர்ந்து இருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்து தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் தமிழக முதல்வருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை டுவிட் செய்திருந்தனர். இதனை சனிக்கிழமை அன்று பார்த்த முதல்வர் பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் அளித்து இருந்தார்.

இந்த தகவலை பார்த்தவுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன் சம்பந்தப்பட்டர்களை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தார். உடனே ஒரு குழுவுடன் அந்த தொழிலாளர்கள் தங்கி இருந்த இடத்திற்கு நேரில் சென்று உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் சம்பந்தப்பட்ட கூலித்தொழிலாளர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்த ஆட்சியர் விஜய் கார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முதல்வருக்கு தெரியப்படுத்தினார்.

அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பலர் தங்களுக்கும் உதவி வேண்டும் என்று தகவல் அளித்துள்ளனர், இதற்கு சற்றும் சளைக்காமல் முதல்வரும் மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்துள்ளனர். இந்த உரையாடலை முழுவதும் பார்த்த தமிழக மக்கள் முதல்வரின் செயலை சிலாகித்து பாராட்டி வருகின்றனர்.

4000 உண்டியல் பணத்தை உயிர்காக்க உதவிய சிறுமி! இணையத்தில் குவியும் பாராட்டு..!!

0

4000 உண்டியல் பணத்தை உயிர்காக்க உதவிய சிறுமி! இணையத்தில் குவியும் பாராட்டு..!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு திருச்சியை சேர்ந்த சிறுமி வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் தாராளமான நிதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தியாவில் இருக்கும் பஜாஜ், டாட்டா, டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் பல கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளன. திரைப்பட நடிகர்களும் பல கோடி ரூபாய்களை நிவாரண நிதியை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், திருச்சி சஞ்சீவி நகரைச் சேர்ந்த ஜெகன் என்பவரின் மகள் பார்வதி. இவர் தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பார்வதி பள்ளியில் படிக்கும்போதே அன்றாடம் உண்டியில் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தான் உண்டியில் சேர்த்து வைத்திருந்த ரூ.4015 பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

திருவிழா மற்றும் பண்டிகை நிகழ்ச்சியின் போது அப்பா, அம்மா கொடுத்த சிறு சிறு பணத்தையும் மற்றும் உறவினர்கள் கொடுத்த பணத்தையும் உண்டியலில் சிறுமி பார்வதி சேமித்து வந்துள்ளார். அவசர காலத்தில் நாம் இன்னொருவருக்கு உதவ வேண்டும் என்று சிறுவயதிலேயே மனிதநேயத்துடன் பேசுகிறார். சிறுமியின் செயல்பாடு பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டை பெற்று வருகிறது.

21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு நீடிக்குமா.? -மத்திய அரசு விளக்கம்

0

21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு நீடிக்குமா.? -மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில்  கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய ஊரடங்கு உத்தரவு போட்டப்பட்டது. இன்று 5 வது நாள் ஊரடங்கு நாள் நடக்கிறது. இதுகுறித்து முக்கிய தகவலை அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா முக்கிய தகவலை கூறியுள்ளார்.

தேசிய ஊரடங்கு உத்தரவால் இந்திய மாநில எல்லைகள் முடக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மேலும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெருமளவெ பாதித்துள்ளது. 21 நாட்கள் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு இன்னும் சில நாட்களுக்கு மத்திய அரசு நீட்டிக்கும் என்று சில வதந்திகள் இணையத்தில் வெளியானது. இந்த தகவல்களை கேட்கும்போது ஆச்சரியம் அளிப்பதாக ராஜிவ் கவுபா தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவை நீட்டிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது என்றும் அவை ஆதாராப்பூர்வமாக அறிவித்த செய்தி அல்ல என்றும் கூறியுள்ளார். மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டமில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு மக்கள் அவஸ்தைபட்டு வருகின்றனர். பலர் சொந்த ஊருக்கு பல கிலோமீட்டர் நடந்தே செல்ல வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது.
இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.






உங்களுக்கு உணவு தர முடியாது வெளிய போங்க! தீண்டாமையை கடைபிடித்த ஊழியர்கள்? (அதிர்ச்சி வீடியோ உள்ளே)

0

உங்களுக்கு உணவு தர முடியாது வெளிய போங்க! தீண்டாமையை கடைபிடித்த ஊழியர்கள்? (அதிர்ச்சி வீடியோ உள்ளே)

கர்நாடகாவில் உணவுப் பொருள் வாங்கச் சென்ற நாகா இனத்தை சேர்ந்தவரை கடையை விட்டு வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக் இருக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. மளிகை கடை, காய்கறி மற்றும் மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்க அரசு அனுமதி கூறியது. மேலும் எந்த பொருட்களை வாங்கச் சென்றாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் உணவு பொருட்களை வாங்கச் சென்ற நாகா மக்களை கடை ஊழியர்கள் வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் மைசூரில் உள்ள கடையில் தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நாகா இன மக்கள் உள்ளே நுழைந்தனர். அப்போது கடையின் வெளியே நின்றிருந்து கடையின் ஊழியர் உள்ளே செல்ல நினைத்த நாகா இனத்தைச் சேர்ந்த நபரை வெளியேறுமாறு கூறுகிறார். இதனையடுத்து நாங்களும் நீங்களும் மனிதர்கள்தானே ஏன் எங்களை தடுக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு கடை ஊழியர்கள் சரியான பதில் அளிக்காமல் நாட் வீடியோ, நாட் வீடியோ என்று வீடியோ எடுக்க வேண்டாம் என்று கையால் மறைத்து தடுக்கிறார்.

கடை ஊழியருக்கும் உணவு வாங்கச் சென்ற நபருக்கும் நடந்ததை ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதில் கடைக்கு உள்ளே செல்ல வேண்டாம் வெளியேறுமாறு ஊழியர் தெரிவிக்கிறார். வீடியோ எடுப்பதைப் பார்த்தவுடன் அதை நிறுத்துமாறு கேமிராவை மறைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடைக்கு வந்த மற்ற நபர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து வெளியே நிற்பது வீடியோ காட்சியில் பதிவாகி உள்ளது.