Home Blog Page 5692

தமிழகத்தில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா

0

தமிழகத்தில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா

தமிழகத்தில் நேற்று வரை 67 பேர் கொரோனாவால் பாதித்திருந்த நிலையில் தற்போது கொரோனா பாதி்த்தோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் நிஜாமுதீனில் நடைபெற்ற தாய்லாந்து நாட்டினர் நடத்திய மத நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

1500 பேர் கலந்துக் கொண்ட இந்த மாநாட்டில் 981 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளோரைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சுகாதாரத்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரத்தில் 3 பேரும் மதுரையில் 2 பேரும் திருவண்ணாமலை மற்றும் சென்னையில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது.

விஜய் ரசிகர்கள் முன்னெடுத்த மாஸ்டர் பிளான்! ஏழைகளின் பசியை போக்க களமிறங்கிய தளபதிகள்!

0

விஜய் ரசிகர்கள் முன்னெடுத்த மாஸ்டர் பிளான்! ஏழைகளின் பசியை போக்க களமிறங்கிய தளபதிகள்!

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதித்து வீட்டிலேயே முடங்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் சாலையோரம் இருக்கும் ஆதரவற்றோர் மற்றும் பிற ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் தாராள நிதிவேண்டி வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து பல்வேறு பிரபல நிறுவனங்கள் நிதி அளிக்கத் தொடங்கின. மேலும் சினிமா திரைப்பட நடிகர்களும் கோடிக்கணக்கில் நிவாரண நிதியை அளிக்க ஆரம்பித்தனர். இன்னமும் மக்கள் மூலமாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜயின் ரசிகர்கள் கொரோனா பாதிப்பால் உணவின்று தவிக்கும் ஏழைகளின் பசியை போக்க களத்தில் இறங்கியுள்ளனர். விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் பசியால் வாடும் கூலித் தொழில் செய்யும் மக்களுக்காக 150 மூட்டை அரிசியை வழங்கியுள்ளனர். கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் இதனால் பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், பலர் இந்த உத்தரவை மதிக்காமல் பொதுவெளியில் சுற்றி காவல்துறையில் தண்டனைக்கு ஆளாகி வருகின்றனர். வெளி மாநிலங்களுக்கு வேலை நிமித்தமாக சென்றவர்கள் 100 கி.மீ நடந்தே சொந்த ஊருக்கு வந்த சம்பவங்களும் தினமும் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் அரசுக்கு அனைவரும் ஆதரவளித்து நடக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணத்தால் பலதரப்பு தொண்டு மற்றும் சமூக ஆர்வலர்கள் உணவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜயின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் 25 கிலோ எடை கொண்ட 150 அரிசி மூட்டைகளை ஏழைகளுக்கு வழங்கியது பலரிடம் பாராட்டை பெற்று வருகிறது.

20,000 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றம் : அது உருவான சுவாரஸ்ய பின்னணி!

0

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த நோய்த் தொற்று வேகமாக பரவும் அபாயம் உள்ளதால் மருத்துவ துறையினரும் துப்புரவு தொழிலாளர்களும் தீவிர களப்பணியில் இறங்கினர். இதனால் மருத்துவர்கள் சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களை பரிசோதனை செய்வதிலும் துப்புரவு தொழிலாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையில் நோய்த்தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் தயார் செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று அதிகமானால் நோயாளிகளை கண்காணிப்பில் வைக்க நிறைய வார்டுகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றம் செய்திருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரயில்கள் இயங்காமல் இருந்ததாலும் அவற்றின் உள் கைட்டமைப்பும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றம் செய்ய ஏதுவாக இருந்ததாலும் இது எளிதில் சாத்தியமானது

இவ்வாறு ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றம் செய்யும் யோசனையை வழங்கியது டுவிட்டரில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை பின்தொடர்பவர்கள் தான். ரயில்வே அமைச்சர் அடிக்கடி டுவிட்டரில் போட்டு வந்த பதிவு போடும்போது சில நெட்டிசன்கள் வழங்கிய இந்த வித்தியாசமான ஐடியா இன்று செயல்வடிவம் ஆகியுள்ளது.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாறியுள்ள 20,000 பெட்டிகள் மூலம் 3.2லட்சம் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று தனது இன்றைய பதிவில் அமைச்சர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிடப்பட்ட பதிவுகளும் பின்னூட்டங்களும் இதற்கு சான்றாக விளங்குகின்றன.

குறைந்த விலைக்கு வாங்கி கொள்ளை லாபத்திற்கு விற்ற வியாபாரி : ஆட்சியர் கையும் களவுமாக பிடித்தது எப்படி?

0

சீனாவில் தொடங்கி பல நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிர்களை கொத்து கொத்தாக கொன்று வருகிறது. இதனால் பாரத பிரதமர் மோடி நாடு முழுவதும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

இதனால் மக்கள் வீட்டிலேயே இருந்தாலும் அத்தியாவசிய பொருட்களுக்கு அவ்வப்போது வரவேண்டிய சூழல் நிலவியது. இந்த தவிர்க்க முடியாத சூழ்நிலையை புரிந்து கொண்ட முதல்வர் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் நெரிசலான இடங்களில் கூடுவதால் பல மாவட்டங்களில் மார்க்கெட்டுகள் திறந்த வெளிக்கு மாற்றப்பட்டன. இவ்வாறான சூழலில் கடலூர் மாவட்டம் மஞ்சை மைதானத்தில் திறந்த வெளி மார்க்கெட் அமைக்கப்பட்டிருந்தது.

அங்கு வியாபாரிகள் காய்கறிகளை அநியாய விலைக்கு விற்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. இதனை புரிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அந்த வியாபாரிகளை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார்.

இதனை அடுத்து மஞ்சை மைதானத்துக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் பொது மக்களைப் போல வியாபாரிகளிடம் காய்கறி விலையைக் விசாரித்து வந்தார். அப்போது வியாபாரி ஒருவர் கத்தரிக்காயை விவசாயிகளிடம் இருந்து 12 ரூபாய்க்கு வாங்கி 50 ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது.

உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து ஆட்சியர் அன்புச்செல்வன் அந்த வியாபாரியின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார். சம்பந்தப்பட்ட வியாபாரியின் காய்கறிகளைப் பறிமுதல் செய்ததோடு மற்ற கடைகளில் சோதனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையால் பொது மக்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

காவலர்களின் வலியை அறிவீர்களா.? கொசுக்கடியில் உறங்கும் காவலர்களின் வேதனையான மறுபக்கங்கள்!

0

காவலர்களின் வலியை அறிவீர்களா.?
கொசுக்கடியில் உறங்கும் காவலர்களின் வேதனையான மறுபக்கங்கள்!

அரசு ரீதியாக இயங்கும் அனைத்து பிரிவு துறைகளுக்கும் விடுமுறை உண்டு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை வார்த்தையில் சொல்லாமல் வருடம் முழுக்க தனது பணியை செவ்வனே செய்யும் தமிழக காவல்துறையினர் எத்தனை நெருக்கடிகளை சந்திக்கிறார்கள் என்பதை நம்மிடையே பலர் அறிவதில்லை என்றே கூறலாம்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தினாலும் அதை சரியாக ஒருங்கிணைக்கும் பணியில் போலீசார்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எங்கே எப்போது எந்த விபத்தோ, கட்சி கூட்டமோ, கலவரமோ எதுவாக இருப்பினும் காவலர்களால் அந்த பிரச்சினை முடிவுக்கு வருகிறது. மேலும் பிரச்சினை வராமல் தடுப்பதும் காவல்துறைதான். கொரோனா பாதிப்பால் அனைவரும் வீட்டில் இருக்குமாறு அரசு உத்தரவிட்டும் அதை மதிக்காமல் பலர் வெளியில் சுற்றி நோயை பரப்பும் வகையில் காவலர்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர்.

இந்த அசாதாரண சூழலில் ஆரோக்கியமான உணவு? மற்றும் பணி செய்யும் இடங்களில் கழிப்பிட வசதி இல்லாமலும் தவிக்கும் ஆண் மற்றும் பெண் காவலர்களின் வேதனையை பொதுமக்களாக இருக்கும் பலர் புரிந்து கொள்வதில்லை. இரவு பகல் பாராமல் பாதுகாப்பு பணிக்கு செல்லும் காவலர்கள் கொசுக்கடி மற்றும் வெயில் போன்றவையால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மேலும் பணியில் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தால் அதனால் ஏற்படும் பணிச்சுமையையும் சமாளிக்க வேண்டும்.

காவலர் பணியில் சேர்ந்துவிட்டால் எந்த திருவிழா மற்றும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு கூட விடுமுறை கிடையாது. மேலும் எளிதில் பதவி உயர்வோ, சம்பள உயர்வோ கிடைத்துவிடாது. ஏதாவது திடீர் கலவரம் நடந்தால் இவர்களின் உடலுக்கும், உயிருக்குமான பாதுகாப்பு கேள்விக்குரியே. மேலே படத்தில் இருக்கும் காவலரைப் பாருங்கள் தொடர் பணியால் ஓய்வில்லாமல் உழைத்த களைப்பால் உறங்குகிறார். அவரது கைகள் முழுக்க கொசு கடித்த போதும் அவர் களைப்பில் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

மக்களுக்காக உழைக்கும் அரசுக்கும் காவல் துறையினருக்கும் பொதுமக்களாகிய நாம் ஒத்துழைப்பு தரவேண்டும். ஆகவே, அனைவரும் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு அவரவர் வீட்டிலேயே பத்திரமாக இருங்கள். காவல்துறையினர் சில இடங்களில் வரம்பு மீறி நடந்திருக்கலாம் அல்லது அவர்கள் மீது சிலருக்கு முரண்பட்ட கருத்து கூட இருக்கலாம். இதையெல்லாம் விவாதிக்கும் நேரம் இதுவல்ல. ஆகவே அரசுக்கும் காவல்துறைக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள்.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு! புதிதாக 7 பேருக்கு பாதிப்பு!

0

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு! புதிதாக 7 பேருக்கு பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 74 ஆக உயர்வு. மேலும் புதிதாக ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

சைனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வடகொரியா, இத்தாலி போன்ற நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்த உலகநாடுகளே திணறிவரும் வேளையில் இந்திய அரசு வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, தீவிர மருத்துவ சிகிச்சை, வெளி நாட்டில் இருந்து பயணிகளை தொடர்ந்து சிகிச்சை கண்காணிப்புக்கு உள்ளாக்குவது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா தொற்று இருப்பதாக அறிகுறி இருப்பவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 7 நபர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த ஏழு பேரும் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் , விழுப்புரம், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களாவர். தற்போது இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாதிப்படைந்த 74 பேரில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார், ஆறு பேர் குணமடைந்தனர். கொரோனா தொற்று ஏற்பட்ட மீதமுள்ளவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாட்டாளியே… உன்னைப் பார்க்காத நாளெல்லாம் வெறுமைப் பொழுதாய் கழிகின்றனவே!” பாட்டாளிகளுக்கு மருத்துவர் ராமதாஸின் உருக்கமான மடல்

0

பாட்டாளியே… உன்னைப் பார்க்காத நாளெல்லாம் வெறுமைப் பொழுதாய் கழிகின்றனவே!” பாட்டாளிகளுக்கு மருத்துவர் ராமதாஸின் உருக்கமான மடல்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் முப்பது வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து அன்றாடம் மக்களையும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருபவர் அவர் கொரோனோ காரணமாக யாரையும் சந்திக்காமல் இருப்பது சற்று கடினமான காலமாக உணர்வதாக பதிவிட்டுள்ளார்.

அவர் கடந்த மாதம் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளான காளிதாஸ் மற்றும் எதிரொலிமணியன் ஆகியோரது திருமண நிகழ்வில் கலந்துகொண்டதையும் அவரது மகள்வழி பெயர்த்திக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அவர்களது மகளுக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்ட நிகழ்வையும் பகிர்ந்துள்ளார்.

நேரடியாக பார்க்காவிட்டாலும் யார் யாரெல்லாம் தன்னை தொடர்பு கொண்டு பேசினார்களோ அவர்களையும் நினைவுகூர்ந்துள்ளார் அவரது பதிவில். சென்னையில் உள்ள தன்னைடைய பெயரனை பார்க்காமல் இருப்பது தனக்கு மிகுந்த சிரமமாக உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மார்ச் 20-ஆம் தேதி தன்னை தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் குறித்தும், அதைக் கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கு குறித்தும் ஒரு மருத்துவர் என்ற முறையில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாவும் பதிவிட்டுள்ளார்.

உங்களுக்கும், எனக்கும் இடையிலான அனைத்து தடைகளும் தற்காலிகமானவையே என்றும்
கொரோனா வைரஸ் நோய் விரைவில் ஒழிக்கப்படும். அப்போது தைலாபுரம் தோட்டத்தின் கதவுகள் மீண்டும் திறக்கப்படும். அப்போது உங்களின் திருமுகங்களைக் காண்பேன். அந்த நாளை எதிர்நோக்கித் தான் நான் காத்திருக்கிறேன் என்றும் கூறியுளாளார்.

எப்போதும் மருத்துவர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுக்கு கூறும் அறிவுரை முதலில் குடும்பத்தை பாருங்கள் பிறகு தான் மற்றவையெல்லாம் என்பதே அந்தவகையில் இந்த பதிவிலும்
” உங்கள் மனைவி, மக்கள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் அச்சமின்றி மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழியுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும் வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள். ஒரு முறை கடைக்கு சென்றால், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்கி வந்து விடுங்கள். அதற்காக வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிந்து செல்லுங்கள். அதேபோல், 5 நாட்களுக்கு தேவையான காய்கறிகளையும் முகக்கவசம் அணிந்து சென்று வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தினருடன் தனிமைப் படுத்திக் கொண்டு மகிழ்ச்சியாக வாழுங்கள். வாய்ப்பிருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு திருக்குறளை கற்றுத் தாருங்கள்.
என்றும் ஒரு குடும்பத்தின் மூத்த உறுப்பினர் போல தன்னுடைய கட்சியினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

அம்மி அம்மி அம்மி மிதித்து! மீண்டும் உங்களுக்காக!

0

அம்மி அம்மி அம்மி மிதித்து! மீண்டும் உங்களுக்காக!

உலகெங்கும் மிக வேகமாகக் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடைக்கின்றனர். இதனால் படப்பிடிப்புகளும் ரத்தானதால் சீரியல் தொடர்களைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் சன் டிவி விஜய் டிவி போன்றப் பிரபல சானல்கள் மக்களிடம் பிரபலமடைந்த சீரியல்களை தற்போது ஒலிப்பரப்புகிறது. விஜய் டிவியில் மக்களின் உள்ளம் கவர்ந்த ராஜா ராணி மற்றும் சரவணன் மீனாட்சி தொடர்கள் மதிய வேளையில் ஒலிப்பரப்படுகின்றன.

அது போல சன் டிவியிலும் மக்களின் பேராதரவைப் பெற்ற மெட்டி ஒலி தொடர் புதன் கிழமை முதல் மதிய வேளையில் ஒலிப்பரப்பாகவுள்ளது. அதனால் மக்களே உங்கள் மனதுக்குப் பிடித்த சீரியல்கள் உங்கள் இல்லம் தேடி மீண்டும் ஒரு முறை வருகிறது. கண்டு ரசியுங்கள். விடுமுறையை வீட்டிலிருந்தே சீரியல்களோடுக் கொண்டாடுவோம்.

வடசென்னை மக்களுக்கு ஒரு அருமையான தகவல்

0

வடசென்னை மக்களுக்கு ஒரு அருமையான தகவல்

தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதிவரைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்கறிக் கடையிலும் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதற்காகப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் காய்கறித் தொகுப்பு பை ரூபாய் 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தக் காய்கறித் தொகுப்பில் தக்காளி ஒரு கிலோ வெண்டைக்காய் கால் கிலோ கத்திரிக்காய் அரை கிலோ அவரைக்காய் ஒரு கிலோ முருங்கைக்காய் நான்கு பச்சை மிளகாய் கால் கிலோ பீன்ஸ் கால் கிலோ கேரட் கால் கிலோ சவ்சவ் ஒன்று உருளைக்கிழங்கு அரை கிலோ சின்ன வெங்காயம் கால் கிலோ பெரிய வெங்காயம் அரை கிலோ கருவேப்பிலை புதினா கொத்தமல்லி ஒரு கொத்து முள்ளங்கி கால் கிலோ கீரை ஒரு கட்டு வாழைக்காய் மூன்று எலுமிச்சை நான்கும் வழங்கப்படுகிறது. இந்தக் காய்கறித் தொகுப்பு பை மக்களிடம் அமோக வரவேற்புப் பெற்றுள்ளது. இதனால் எங்களுக்கு நேரமும் மிச்சம் ஆகிறது என்று மக்கள் கூறுகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது வடசென்னை மற்றும் ராயபுரம் பகுதிகளில் காய்கறிக் கடைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க அங்கும் இதே யுக்தியைக் கையாளத் தொடங்கியுள்ளனர். மீன்வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்கள் நாளை முதல் காலை ஒன்பது மணி முதல் மன்னிரெண்டு மணி வரை ராபின்சன் மைதானத்தில் காய்கறி தொகுப்பு பை குறைந்த விலையில் விற்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.

ஒரு பையில் 13 காய்கறிகள் இருக்கும். வெங்காயம் ஒரு கிலோ தக்காளி ஒரு கிலோ உருளைக்கிழங்கு ஒரு கிலோ தேங்காய் இரண்டு கத்திரிக்காய் அரை கிலோ கோஸ் அரை கிலோ வெண்டைக்காய் அரை கிலோ பீன்ஸ் அரை கிலோ கேரட் அரை கிலோ வாழைக்காய் இரண்டு பச்சை மிளகாய் 150 கிராம் இஞ்சி 50 கிராம் போன்றவை அந்தப் பையில் இடம்பெற்றுள்ளது.

சமூக விலகலைக் கருத்தில் கொண்டு அதே சமயம் மக்களுக்கும் பயனுள்ள வகையில் இந்த காய்கறித் தொகுப்பு பை குறைந்த விலையில் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வன்னியர் அறக்கட்டளை சொத்து மீட்பு

0

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வன்னியர் அறக்கட்டளை சொத்து மீட்பு

தமிழகத்தில் பெரும்பான்மையான சமுதாயமான வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த கொடை வள்ளல்களான முன்னோர்கள் பலரும் தங்களது சொத்துகளை அந்த சமுதாய மக்களின் அறக் காரியங்களுக்காக எழுதி வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக வன்னியர் சமுதாய கொடையாளர்கள் எழுதி வைத்த இந்த சொத்துகளின் பயன்கள் அதற்கு உரியவர்களான வன்னிய சமுதாய மக்களுக்கு கிடைக்காமல் சிதறிக் கிடந்தன.

குறிப்பாக இந்த சொத்துக்களை சம்பந்தமேயில்லாமல் வேறு சமுதாயத்தை சேர்ந்த பலர் ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடி வந்தனர்.இந்த நிலையில், இவ்வாறு சிதறிக் கிடக்கும் வன்னியர் சொத்துகளை ஒருங்கிணைத்து அதன் பயன்கள் அதற்கு உரியவர்களான வன்னிய சமுதாய மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் வன்னியர் பொது சொத்து நல வாரியத்தை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. 

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வன்னியர் அறக்கட்டளை சொத்து மீட்பு

தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள வன்னியர் பொது சொத்து நல வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜி.சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதனையடுத்து பல்வேறு நபர்களால் முறைகேடாக ஆக்கமிக்கப்பட்டுள்ள வன்னியர் சமுதாய அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கும் பணி தொடங்கியது.

இது வரை வன்னியர் பொது சொத்து நல வாரியத்தின் மூலமாக ஏறக்குறைய 79 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் சென்னையிலுள்ள பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளது குறித்தும் அதை மீட்க கடந்த 2002 ஆம் ஆண்டே முயற்சி செய்து பலனளிக்காமல் போனது குறித்தும் வன்னியர் பொது சொத்து நல வாரியத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வன்னியர் பொது சொத்து நல வாரியத்தின் தலைவர் ஜி.சந்தானம் மற்றும் பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் முயற்சி மேற்கொண்டு அந்த நிலத்தை மீட்டுள்ளனர். இது போலவே தமிழகம் முழுவதும் வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் மீட்க வேண்டும் என வன்னிய சமுதாய மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.