Home Blog Page 5694

ஏப்ரல் 14க்கு பிறகு ஊரடங்கு தொடருமா? மத்திய அரசு வெளியிட்ட அதிரடி தகவல்!

0

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இதனால் பொது இடங்களில் சுற்றித் திரியும் இளைஞர்களையும் கடைத்தெருக்களில் கூட்டம் கூடும் பொது மக்களிடமும் காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்தது. மேலும் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்று மாநில அரசால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையில் இளைஞர்கள் சிலர் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி பொது இடங்களில் பொழுதுபோக்காக சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டன. மக்கள் பொது இடங்களில் வருவதாலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதாலும் 21 நாள் ஊரடங்கு நீக்கப்படலாம் என்ற தகவல் மக்களிடையே பரவி வந்தது.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவையின் செயலாளர் ராஜீவ் கௌபா ஏப்ரல் 14க்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படாது கூறினார். மேலும் இந்த நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால் மத்திய அரசு கூடி ஊரடங்கு நீக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

அடுத்த 2 வாரத்திற்கு கொரோனா உச்சகட்டத்தை அடையும்! பீதியை கிளப்பிய டிரம்ப்!

0

அடுத்த 2 வாரத்திற்கு கொரோனா உச்சகட்டத்தை அடையும்! பீதியை கிளப்பிய டிரம்ப்!

உலக நாடுகளில் கொரோனா மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து வரும் ஆபத்தான நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா பற்றி பேசியது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சீனாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து இருப்பதாக ஆறுதல் செய்தியை கேட்டாலும் இத்தாலி, ஸ்பெயின், பிரான்சு போன்ற நாடுகளில் கொரோனாவின் அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் மேலான நபர்கள் கொரோனா தொற்று ஆபத்தில் சிக்கியுள்ளனர். இந்த சூழல் மேலும் அதிகரிக்கும் என்பதுபோல் டிரம்ப்பின் பேச்சும் அமைந்துள்ளது.

டொனால்ட் டிரம்ப்பிற்கு பொருளாதாரத்தில் மீதுதான் கவலை என்றும் மக்கள் மீது அக அக்கறை இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. கொரோனா பாதிப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் ஒரு தரப்பில் குற்றச்சாட்டிய நிலையில், முறையான நடவடிக்கை எடுத்துவருவதாக அதிபர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பற்றிய அடுத்தகட்ட தகவலை டிரம்ப் பேசியுள்ளார். அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொரோனா பாதிப்பு உச்சகட்டமாக இருக்கும், இதனால் சமூக விலகல் உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பதாக கூறியுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மீள வரும் ஜீன் 1 ஆம் தேதி வரை ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். அதிபரின் பேச்சு அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஐ எட்டியது

0

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஐ எட்டியது

இன்று உலகையே ஆட்டிப் படைக்கின்றது கொரோனா வைரஸ் நோய். இந்த நோயால் தமிழகத்தில் இதுவரை 42 ஆக இருந்த எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 8 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் மருத்துவக்குழு வீடுதோறும் சென்று மக்களைப் பரிசோதித்து வருகின்றனர். கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டோர் வீட்டைச் சுற்றியுள்ள ஐந்து மீட்டர் தொலைவுவரை இருக்கும் வீடுகளில் பரிசோதனைச் செய்யப்படுகின்றன.

இவ்வாறு ஈரோடு மாவட்டத்தில் பரிசோதனையின்போது 8 பேருக்குக் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றுக் கூறப்படுகிறது. இதில் பத்து மாதக் குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 4 பேர் தாய்லாந்திலிருந்து வந்து ஈரோட்டில் சிகிச்சைப் பெற்றுவரும் வெளிநாட்டினர் நடத்தியக் கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஐ எட்டியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது. -மத்திய அரசு

0

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது. -மத்திய அரசு

ஊரடங்கின் போது பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் வீட்டு உரிமையாளர்கள் இந்த இக்கட்டான சூழலில் வாடகையை வசூலிக்க கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதால் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் மக்கள் வீட்டிலே இருக்க வேண்டும் என்று மத்திய அரசும் மாநில அரசுகளும் அறிவுறுத்தி வருகிறது.

வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் மீது வழக்கு அல்லது நூதன தண்டணையை போலீசார் வழங்கி வருகின்றனர். சில இடங்களில் லட்டியால் அடித்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. பலர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களிடத்தில் வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என்று வீட்டு உரிமையாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களை வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லியில் வாடகைக்கு குடியிருக்கும் வாடகை கேட்டு தொல்லை தர வேண்டாம். வாடகை தரமுடியாமல் தவிப்பவர்களுக்கு டெல்லி அரசே மூன்று வாடகையை தரும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் பலர் பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளனர்.

கொரோனோவால் சரிந்த பொருளாதாரம் – மன உளைச்சலில் நிதியமைச்சர் தற்கொலை

0

கொரோனோவால் சரிந்த பொருளாதாரம் – மன உளைச்சலில் நிதியமைச்சர் தற்கொலை

உலகம் முழுவதும் நாள்தோறும் ஏற்படும் உயிர் இழப்புகள் உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அதில் குறிப்பாக ஜெர்மனியில் 50000 க்கும் அதிகமான மக்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மரியின் ஹீசி மாகாணத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக நிதி அமைச்சராக பணியாற்றி வருபவர் தாமஸ்ஸீபர் அவரது உடல் சமீபத்தில் அந்த மாகணத்தில் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப் பட்டுள்ளது.

ஹீசி மாகாணத்தின் தலைவர் வோல்கர் சோபியர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தாமஸ்ஸீபர் அவர்கள் கொரோனோவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை எப்படி சரி செய்யப்போகிறோம் என்று மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நெருக்கடியான நேரத்தில் அவரது ஆளுமைத்திறன் எங்களுக்கு மிகுந்த தேவை ஆனால் அவரது இந்த இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று. ஜெர்மனியின் மிக முக்கியமான பொருளாதார தலைநகராக விளங்கும் நகரங்கள் இந்த மாகணத்தில் தான் உள்ளது.

இதுவரை ஜெர்மனியில் ஐம்பதாயிரத்திற்கு மேல் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நிலையில் நானூற்று ஐம்பது நபர்கள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோயாளிகள் என்னென்ன உணவுகள் உட்கொள்ள வேண்டும்

0

கொரோனா நோயாளிகள் என்னென்ன உணவுகள் உட்கொள்ள வேண்டும்

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.இந்த நோயால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொடிய வைரஸ் நம் உடலில் உள்ள செல்களில் புகுந்து நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தியை அழிக்கிறது. நம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தினால் மட்டுமே நம் பொன்னான உயிரைக் காக்க முடியும்.

கொரோனாவினால் பாதி்க்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு அங்கு என்ன என்ன உணவுகள் வழங்கப்படுகின்றன என்பதைக் குறித்து இதில் விரிவாகக் காண்போம் .

காலையில் ஏழு மணிக்கு இஞ்சி எலுமிச்சைச்சாறு உப்பு வெந்நீரில் சேர்த்துத் தரப்படுகிறது. எட்டு மணிக்கு இட்லி சாம்பார் அல்லது வெங்காயச்சட்னி சம்பா ரவை கோதுமை உப்புமா பால் இரண்டு முட்டை மற்றும் பழரசம்.

பதினோரு மணிக்கு இஞ்சி எலுமிச்சைச்சாறு உப்பு கலந்த வெந்நீர் மற்றும் சாத்துகுடி ஜூஸ்.மதியம் ஒரு மணிக்கு இரண்டு சப்பாத்தி புதினா சாதம் ஒரு கப் வேக வைத்தக் காய்கறிகள் ஒரு கப் மிளகு ரசம் ஒரு கப் மற்றும் உடைத்தக் கடலை ஒரு கப்.

மதியம் மூன்று மணிக்கு இஞ்சி மஞ்சள் உப்பு கலந்த வெந்நீர் தரப்படுகிறது.மாலை ஐந்து மணிக்கு உடலுக்குச் சத்தானக் கொண்டைக்கடலைச் சுண்டல் தரப்படுகிறது.

இரவு ஏழு மணிக்கு இரண்டு சப்பாத்தியுடன் இட்லி அல்லது சம்பா ரவை கோதுமை உப்புமா சாம்பார் அல்லது வெங்காயச் சட்னி பால் மற்றும் முட்டை வழங்கப்படுகிறது.
இது போன்ற நோயெதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் உணவுகளை உட்கொண்டால் தான் கொரோனாவின் தாக்குதலில் இருந்து வெளியே வர முடியும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்தி விடுங்கள். அது கொரோனா தொற்றுள்ள நபருக்கு ஆபத்தாக முடிந்துவிடும். இஞ்சி தற்போது அதிக அளவில் மலிவு விலையில் கிடைக்கிறது.இஞ்சித் துவையல் செய்து தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மஞ்சள் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. நம் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. மிளகு இஞ்சி மஞ்சள் போன்றவைகளை நம் முன்னோர்கள் தங்கள் சமையலில் சேர்த்துச் சமைத்தனர். ஆனால் நாமே இன்று நாகரிகம் என்றப் பெயரில் பீட்சா பர்கர் பன்னீர் பட்டர் மசாலா போன்ற உணவு வகைகளுக்கு மாறியிருக்கிறோம்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகமாகக் கொடுங்கள். கொரோனா வைரஸ் பாரம்பரிய உணவின் அவசியத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. ஆகவே நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் இஞ்சியும் மஞ்சளும் சேர்த்துக் கொண்டாலே கொரோனாவின் தாக்குதலில் இருந்துத் தப்பிக்க இயலும்.நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்போம் கொரோனாவை வெல்வோம்.

ஆபத்தின் விளிம்பில் நிற்கிறோம் தயவு செய்து ஊரடங்கை மதித்து நடப்பீர்! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

0

ஆபத்தின் விளிம்பில் நிற்கிறோம் தயவு செய்து ஊரடங்கை மதித்து நடப்பீர்!அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அறிவுரைகளை காற்றில் பறக்கவிட்டு பொது மக்கள் சாலைகளில் நடமாடி வருவது வேதனை அளிக்கிறது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் MP தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து வெளியாகி வரும் தகவல்கள் மிகவும் கவலையளிப்பவையாக உள்ளன. ஒருபுறம் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், அதுகுறித்த அச்சம் எதுவுமே இல்லாமல் ஊரடங்கு குறித்த அறிவுரைகளை காற்றில் பறக்கவிட்டு, பொதுமக்கள் சாலைகளில் நடமாடி வருவது மிகவும் வேதனையளிக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இன்று ஆயிரத்தை கடந்து 1048 ஆக உள்ளது. கடந்த மார்ச் 22&ஆம் தேதி 360&ஆக இருந்த பாதித்தோர் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 700 அதிகரித்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 25 ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பாதிப்பு எண்ணிக்கை 43&ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இது எவரும் எதிர்பார்க்காத வேகமாகும். பாதிக்கப்பட்டவர்களில் பலர் வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ பயணம் மேற்கொள்ளாதவர்கள்; அதேபோல், பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இல்லாதவர்கள். இத்தகைய சூழலில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது, இந்தியாவில் சமூகப்பரவல் தொடங்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு ஆணை உள்ளிட்ட பல நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொண்டுள்ள நிலையில், அவற்றை மதித்து நடப்பது தான் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நாம் செய்யும் உதவியாகும்.

ஆனால், களத்தில் நடப்பது என்ன?

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் எவரும் வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்பது விதி. வீட்டை விட்டு ஓர் அடி வெளியில் வந்தால் கூட கொரோனா உங்கள் வீட்டுக்கு வந்து விடும் என்று பிரதமர் எச்சரித்திருக்கிறார். ஆனால், அவை குறித்த புரிதலோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல் பொது மக்கள் சாலைகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்வது தவிர்க்க முடியாதது தான் என்றாலும் கூட, அரசின் அறிவுரைகளை மதித்து, எப்போதாவது ஒரு நாள் தான் வெளியில் வர வேண்டும். ஆனால், சாலைகளில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவும், ஊரடங்கை மீறி வெளியில் செல்வதே ஒரு சாகசம் என்ற எண்ணத்திலும் தான் ஏராளமானவர்கள் சாலைகளில் தடைகளை மீறி நடமாடிக்கொண்டிருக்கின்றனர். இது தேவையற்றது.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று அதிகாலை முதல் இறைச்சிக் கடைகளிலும், மீன் சந்தைகளிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடி நிற்கின்றனர். அந்த இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற புரிதல் மக்களுக்கும் இல்லை; பெரும்பாலான வணிகர்களுக்கும் இல்லை. சென்னையில் பல சந்தைகளில் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்தும் கூட, ஒழுங்கற்ற நிலையே நீடித்தது. பல இடங்களில் இறைச்சி வாங்க போட்டியே நடந்தது. இறைச்சியை இன்று இல்லாவிட்டாலும் நாளை சாப்பிடலாம். ஆனால், கட்டுப்பாடற்ற செயல்பாடுகளின் மூலம் கொரோனா வைரஸ் நோய் சமூக அளவில் பரவத் தொடங்கி விட்டால் அதன் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

கொரோனா வைரஸ் உலகில் எத்தனை கொடிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்…..

உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டு இளவரசி மரிய தெரசா கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் உயிரிழந்திருக்கிறார். இங்கிலாந்தில் அந்நாட்டு இளவரசர் சார்லசும், பிரதமர் போரிஸ் ஜான்சனும் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் அசைக்க முடியாதவர்கள் என்று வர்ணிக்கப்பட்டவர்கள் கூட இன்று கொரோனாவைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பில்லாதவர்கள் என்று எவரும் இல்லை. எனவே, தமிழக மக்கள் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அலட்சியமாக கருதாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கொரோனாவை தடுப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவற்றுக்கு ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் கடமை ஆகும். அதை மதிக்காமல் விருப்பம் போல செயல்படுவது மலை உச்சியின் விளிம்பில் நின்று கொண்டு நடனமாடுவதற்கு சமமானது ஆகும். ஊரடங்கு என்பது சற்று கடுமையாகத் தான் இருக்கும். ஆனால், இன்றைய சூழலில் அதைத் தவிர வழியில்லை என்பதால், பொதுமக்கள் சில சிரமங்களை பொறுத்துக் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதேநேரத்தில், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்பதையும், அவ்வாறு வெளியில் வந்தால் எடுக்கப்படவிருக்கும் கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் தண்டோரா, ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

CoronaVirusOutbreak #SocialDistancing #21DaysLockDown

6 மாதங்களுக்கு முன்னே கொரோனாவை கணித்து கூறிய அதிசய சிறுவன்.! வியக்கவைக்கும் அதிரடி வீடியோ..!!

0

6 மாதங்களுக்கு முன்னே கொரோனாவை கணித்து கூறிய அதிசய சிறுவன்.! வியக்கவைக்கும் அதிரடி வீடியோ..!!

கொரோனா பாதிப்பை ஆறு மாதத்திற்கு முன்பே ஒரு சிறுவன் கணித்துக் கூறிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுக்க பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி தனது யு டியூப் மூலமாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆபத்து இருப்பதை கூறியுள்ளார். எதிர்கால பாதிப்பை கணித்துக் கூறும் சிறுவன் அபிக்யா தன்னை ஒரு ஜோசியர் என்று கூறிக்கொள்கிறார்.

சிறுவன் வீடியோவில் கொரோனா பற்றி முன்பே கணித்து கூறியதாவது; வருங்காலத்தில் பெரும் ஆபத்து வருவதாகவும் இதில், சீனா அதிகளவு பாதிக்கும் என்றும் விமானத்துறை அதிகம் இழப்பை சந்திக்கும் என்று கூறியுள்ளார். நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும் அப்போதுதான் இதில் இருந்து நம்மாள் மீள முடியும் என்றும் தனது யு டியூப் வீடியோவில் முன்பே கணித்து கூறியுள்ளார்.

கடந்த 2019 ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டுக்குள் உலகையே அச்சுறுத்தும் ஆபத்து உருவாகும் என்று பேசியுள்ளார். எண்ணெய் வளங்கள் நிறைந்த பகுதிகள் அதிகம் பாதிக்கும் என்று கூறிய சிறுவனின் பேச்சு, ஈரான், ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகள் அழிவைச் சந்திக்கும் என எடுத்துக் கொள்ளலாம். எனினும் இதுவரை அந்த பகுதிகளில் அதிகளவு பாதிப்பு ஏற்படவில்லை. இனி நடக்க வாய்ப்புண்டு என்று கூறலாம் ஆனால் உறுதியாக சொல்ல முடியாது.

https://bit.ly/2wKaCNW (சிறுவனின் கணிப்பு வீடியோ)

போக்குவரத்து பாதிக்கும் என்று சிறுவன் கூறியது அப்படியே சொன்னதைப்போலவே நடந்துள்ளது. சிறுவனின் கணிப்பு ஓரளவு சரி என்றாலும் முழுமையாக ஏற்கமுடியாத கருத்தாகவே பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாத அளவில் இருக்கிறது. தற்போது சிறுவன் அபிக்யா கணித்து கூறிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

501ரூபாய் நிவாரண நிதி வழங்கிய ஏழை குடிமகன் : அவரை மோடி என்ன செய்தார் தெரியுமா?

0

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இதனால் அரசின் உத்தரவை ஏற்று மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அயராது பாடுபட்டு வருகின்றனர். மேலும் நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாளுக்கு நாள் நோய் பரவல் அதிகமாகி மருத்துவ மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருவதால் அரசு செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி அரசுக்கு நிதி அளிக்கும்படி மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க டாடா, பஜாஜ், பேடிஎம் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் முதல் தனி நபர்கள் வரை பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். அவ்வாறு நிதி அளிக்கப்பட்ட அதில் ஒருவர் 501/- ரூபாய் மட்டும் வழங்கி தன்னால் முடிந்தது இவ்வளவு தான் என பிரதமருக்கு ட்விட் செய்திருந்தார்.

இதனை பார்த்த மோடி நிவாரண நிதியில் பெரிது அல்லது சிறிது என்று எதுவும் இல்லை, சிறு துளி தான் பெரு வெள்ளமாக மாறும் அதனால் ஒவ்வொருவரின் பங்களிப்பு தான் முக்கியம் என்று அதில் கூறியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான பதிலை பார்த்த நாட்டு மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்ட பிரதமரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி நண்பர்கள் இருவரும் சேர்ந்து செய்த அசிங்கமான செயல்! இந்த நேரத்தில் இப்படியா செய்வது!

0

கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி நண்பர்கள் இருவரும் சேர்ந்து செய்த அசிங்கமான செயல்! இந்த நேரத்தில் இப்படியா செய்வது!

கொரோனா பாதிப்பை பயன்படுத்தி வாட்சப் மூலம் சானிடைசர் மற்றும் முகக் கவசத்தை அதிக விலைக்கு விற்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உலகத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இதனால் மத்திய அரசு கொரோனாவை தடுக்க அதிகபட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் 1004 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 21 பேர் இதனால் உயிர் இழந்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் சமூக இடைவெளி என்ற பாதுகாப்பு வழிமுறை மக்களிடையே அரசு கொண்டுவந்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவால் மாநில எல்லைகளை மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க தினமும் அடிக்கடி கைக்கழுவுதல், அசுத்தமான கைகளால் முகத்தை தொடாமல் இருத்தல், 1 மீட்டர் இடைவெளி விட்டு “சமூக இடைவெளி” என்ற பாதுகாப்பு வழிமுறை கடைபிடிப்பது மற்றும் தேவையற்ற பயணத்தை தவிர்ப்பது, திருமண, ஆன்மீக விழா போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்ப்பது சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறி இருப்பின் உடனடியாக மருத்துமனையை அணுகுமாறு தமிழக அரசு கூறியுள்ளது.

கொரோனாவில் இருந்து பாதுகாக்க அவசியமான சானிடைசர் என்னும் பாதுகாப்பு வேதிப்பொருளும், முகக் கவசமும் மக்களுக்கு அதிக தேவையாக இருப்பதால் இதற்கு தட்டுப்பாடு இருந்து வருகிறது. பலர் இலவசமாகவும் சில இடங்களில் குறைந்த விலையிலும் விற்று வருகின்றனர்.  அத்தியாவசியப் பொருட்களை விலை அதிகமாக விற்றால் கடும் நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசும் எச்சரித்த நிலையில், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் முகம்மது நிஜாம் என்ற இரு இளைஞர்களும் முககவசம் மற்றும் சானிடைசரை மொத்தமாக வாங்கி வைத்து அதிகமான லாபத்திற்கு விற்றனர்.

கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி நண்பர்கள் இருவரும் சேர்ந்து செய்த அசிங்கமான செயல்! இந்த நேரத்தில் இப்படியா செய்வது!

இதனையடுத்து, வாட்சப் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்த தகவல் காவல்துறையினருக்கு கிடைத்த நிலையில் கார்த்திகேயன் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, நூற்றுக்கணக்கான சானிடைசர் மற்று முக கவச பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பதுக்கல் மற்றும் அதிகவிலை விற்பனையில் ஈடுபட்ட அவரது நண்பரையும் கைது செய்தனர். மக்கள் கடுமையாக பாதித்த சூழலில் மனிதநேயம் இல்லாது அசிங்கமாகவும், அநாகரிகமாகவும் நடந்துகொண்ட சம்பவம் பலரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.