Home Blog Page 5717

பொன்னையனை திருப்திபடுத்த புதிய பதவி கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி

0

பொன்னையனை திருப்தி படுத்த புதிய பதவி கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழகத்தில் உள்ள மாநிலங்களவைக்கான உறுப்பினர் பதவிக்கு 6 இடங்கள் காலியாக உள்ளது. இதற்காக திமுக மற்றும் அதிமுக சார்பில் தலா 3 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் நேற்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்றய தினமே அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டது.

அதில் அதிமுகவின் கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளோட்டோர் இடம் பெற்றிருந்தனர். இதனால் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக புறக்கணிக்கப் பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்த நிலையில் கூட்டணியில் உள்ள காரணத்திற்காகவே அனைத்து கட்சிக்கும் இடம் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற கருத்தும் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக பிளவுபட்டபோது பன்னீர் செல்வம் அணியில் இருந்து வழிநடத்திச் சென்றவர் கே.பி.முனுசாமி அவர்கள். ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ள தம்பிதுரைக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சி.பொன்னையன் அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் கொடுக்காதற்காக அவரை திருப்தி படுத்தும் நோக்கில் அவருக்கு மாநில திட்டக்குழு துனைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகள் கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஹீ ரகுநாதன் திங்கள் கிழமை வெளியிட்டார்.

மாநிலங்களவை பதவி கொடுக்காததால் கட்சியில் பிரச்சனை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு முன்னாள் அமைச்சர் பொன்னையன் அவர்களுக்கு திட்டக்குழு துனைத்தலைவர் பதவி அளிக்கப்படுள்ளதாக பல்வேறு அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

‘கந்த சஷ்டி கவசம்’ பாடலை வெளியிட தடை! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

0

‘கந்த சஷ்டி கவசம்’ பாடலை வெளியிட தடை! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

கந்த சஷ்டி கவச பாடலை வெளியிட கூடாது என்று சிம்போனி நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கர்நாடக இசைக் கலைஞரான நடிகை ஷோபனா சிறுவயதில் இருந்தே ஆன்மீக பாடல்களை பாடுவதில் திறமையானவர். கடந்த 1995 ஆம் ஆண்டு பிரபல சிம்போனி நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதில் கந்த சஷ்டி கவசம் மற்றும் டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற இரண்டு பாடல்களை பாடி ஆல்பமாக இணையத்தில் வெளியிடப்பட்டது.

இப்பாடல்கள் யுடியூப் போன்ற இணையத்தில் 5 கோடி நபர்களுக்கும் மேல் தாண்டி பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னுடைய எவ்வித அனுமதியும் இல்லாமல் இணையத்தின் மூலம் தன்னுடைய பாடல்களை பதிவேற்றி வருமானம் பார்க்கும் சிம்பொனி நிறுவனத்தின் மீது நடிகை ஷோபனா வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்தது.

நடிகை ஷோபனா 13 வயதில் இருந்தபோது சிம்பொனி நிறுவனம் அவரிடம் ஒப்பந்தம் போட்டது சட்ட ரீதியாக செல்லாது என்று நடிகையில் தரப்பு வக்கீல் வாதாடினார்.
மேலும், நடிகையின் அனுமதி இல்லாமல் முகநூலில் இருந்து புகைப்படங்களை எடுத்து ஆல்பங்களுக்காக பயன்படுத்தியது சட்டப்படி குற்றம் என்று வாதிட்டார். பின்னர் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணைக்கு பிறகு நடிகை ஷோபனா பாடிய இரண்டு ஆல்பங்களையும் இணையத்தில் வெளியிட சிம்பொனி நிறுவனத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இதேபோல் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை தனது உரிமை இல்லாமல் பாடியதால் இளையராஜாவுக்கும் பிரபல பிண்ணனி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு “எதிராக’ தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் என்று நம்பிக்கை உள்ளது! – திருமாவளவன்

0

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு “எதிராக’ தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் என்று நம்பிக்கை உள்ளது! – திருமாவளவன்

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிஏஏ போராட்டம் நடைபெற்றது. இன்னும் தமிழ்நாடு மற்றும் சில இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு “எதிராக’ தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாக தனது பேட்டியில் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசுகையில்;

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட வன்முறை இந்தியாவிற்கே தலைக்குனிவை ஏற்படுத்தியது. கடந்த காலத்தில் குஜராத்தில் எப்படி வன்முறை நடத்தினார்களோ அதேபோல் டெல்லியிலும் நடத்தியுள்ளனர்.

இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பாராளுமன்ற கூட்டத் தொடரில் டெல்லி வன்முறை குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகுமாறு தொடர்ந்து வலியுறுத்துவோம். மேலும் டெல்லியில் நடந்த வன்முறை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து நடத்த கோரிக்கை வைப்போம்.

தமிழகத்தின் சட்டசபையில் சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி -க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் தவறான முயற்சிக்கு ஆளும் அதிமுக அரசு உடன்படக் கூடாது என்றும் கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்பதை பாஜக உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக ஏற்கனவே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

கோயில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது! ஈரோட்டில் நடந்த பரபரப்பான சம்பவம்..!!

0

கோயில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது! ஈரோட்டில் நடந்த பரபரப்பான சம்பவம்..!!

ஈரோட்டில் பவானீஸ்வரர் கோயிலின் தெற்கு சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் ஆற்றுப்பாலத்தின் அருகே உள்ள பவானி ஆற்றின் கரையில் பவானீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கடந்த 2018 ஆம் ஆண்டு பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அதன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

இந்நிலையில், பாதிப்படைந்த தெற்கு பகுதி சுற்றுச்சுவரை நீக்கிவிட்டு புதியதாக சுற்றுச்சுவர் கட்டும் பணி 40 லட்சம் செலவில் நடைபெற்றது. முன்பு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுவரின் அடிப்பகுதியில் இருந்த கெட்டியான மண் பரப்பு அனைத்தும் வலுவிழந்த நிலையில், இன்று காலை மீண்டும் தெற்கு பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் கோயிலின் பாரம்பரியமான சிலைகளான 63 நாயன்மார்களின் சிலைகளின் சேதமடைந்துள்ளன. யாரும் எதிர்பாராத விதத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. விபத்தினை பற்றிய தகவல் அறிந்தவுடன் கோயிலுக்கு சத்தியமங்கலம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆய்வும் செய்யப்பட்டது.

ஏழு நாட்களில் எட்டாத உயரத்திற்கு சென்ற தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்

0

ஏழு நாட்களில் எட்டாத உயரத்திற்கு சென்ற தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்

இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்த காலத்திலும் மக்களுக்கு ஆடை ஆபரணங்களின் மீதான மோகம் என்பது குறைந்ததாக தெரியவில்லை. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தற்போது உயர்ந்து வரும் தங்கத்தின் விலையானது இவர்களுக்கெல்லாம் அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.

குறிப்பாக இந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலையானது சீராக அதிகரித்த வண்ணமே தொடர்ந்து வருகிறது. அதாவது இந்த ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது 40,750 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்றைய தேதியில் அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது 45,810 ரூபாயாக வியாபாரமாகிக் கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதியன்று 24 கேரட் தரத்திலான 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது 43,660 ரூபாய் என்று விற்பனையாகி கொண்டிருந்தது. ஆனால் அடுத்த ஏழு தினங்களுக்குள் தங்கத்தின் விலையானது அடுத்ததாக மீண்டும் ஒரு உச்சத்தைத் தொட்டது. அதாவது இந்த மார்ச் 06 ஆம் தேதியன்று அதே 24 கேரட் தரத்திலான 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது 46,160 என்கிற உச்ச விலையைத் தொட்டு விற்பனையாகி கொண்டிருக்கிறது.

Gold Price Updates in Chennai 2020-News4 Tamil Latest Business News in Tamil
Gold Price Updates in Chennai 2020-News4 Tamil Latest Business News in Tamil

ஏறக்குறைய இந்த ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் மார்ச் 06 ஆம் தேதி வரையிலான தங்கத்தின் விலை ஏற்றத்தை கணக்கிட்டால், குறிப்பாக இந்த 66 தினங்களில் தங்கத்தின் விலையானது சுமார் 13.2 சதவிகிதம் விலை ஏற்றம் கண்டுள்ளது. அடுத்ததாக கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் மார்ச் 06 ஆம் தேதி வரையிலான இந்த ஏழு நாட்களுக்குள் தங்கத்தின் விலையானது ஏறக்குறைய 5.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து உயர்ந்து கொண்டு வந்த தங்கத்தின் விலையானது தற்போது ஓரளவு நிலைபெற்றுள்ளது. அதாவது கடந்த மார்ச் 06 ஆம் தேதியன்று 46,160 ரூபாய்க்கு விற்ற 24 கேரட் 10 கிராம் தங்கமானது, மார்ச் 10 ஆம் தேதியான இன்று 45,810 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அனைவருக்கும் பிடித்த தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது நடுத்தர மக்களின் மனதில் கவலையை உண்டாக்கியுள்ளது.

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அனுபவித்த பேராசிரியர்! சக பேராசிரியை கண்ணீருடன் புகார்.!! நடந்தது என்ன?

0

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அனுபவித்த பேராசிரியர்! சக பேராசிரியை கண்ணீருடன் புகார்.!! நடந்தது என்ன?

தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி சக பேராசிரியையை ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அருகேயுள்ள கரந்தை பகுதியைச் சேர்ந்த அஸ்வின்ராஜ் என்பவர் வல்லம் அடைக்கலமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் பணிபுரிந்த சக பேராசிரியை ஒருவருடன் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்வதாக கூறி அவருடன் அடிக்கடி தனிமையில் நெருக்கமாக பழகியுள்ளார்.

இந்நிலையில், காதல் ஜோடிகளாக பழகி வந்த இவர்களுக்கு இடையே திடீரென்று பிரிவு ஏற்பட்டது. பேராசிரியர் அஸ்வின்ராஜ் தனது காதலியிடம் இருந்து நெருக்கத்தை குறைத்துக் கொண்டு விலக ஆரம்பித்தார். இதனால் கோபமடைந்த அவரது காதலி போலீசில் புகார் அளித்துள்ளார்.

தன்னை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துவிட்டு தற்போது புறக்கணிக்கிறார். இவரால் நான் ஏமாந்துள்ளேன் அவரை உடனடியாக விசாரிக்குமாறு காவல் நிலையத்தில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் பேராசிரியர் அஸ்வின்ராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

என் மகனை தொந்தரவு செய்தால் கொன்று விடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்த பேராசிரியர் அஸ்வின்ராஜின் தந்தை செல்வராஜையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதல் என்கிற பெயரில் சக பேராசிரியரே ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் புதிய பொதுச் செயலாளர் யார்..? முக்கிய பதவியை துரைமுருகன் கைப்பற்ற அதிக வாய்ப்பு! ஆனால் ஸ்டாலின்?

0

திமுகவின் புதிய பொதுச் செயலாளர் யார்..? முக்கிய பதவியை துரைமுருகன் கைப்பற்ற அதிக வாய்ப்பு! ஆனால் ஸ்டாலின்?

சமீபத்தில் கட்சியின் இரண்டு எம்எல்ஏ மற்றும் மூத்த அரசியல்வாதியான அன்பழகன் இறப்பிற்கு பிறகு அந்த பதவிக்கு யார் என்கிற எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது. முதல்வருக்கு அடுத்த பதவி என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு பெருகி வருகிறது.

திமுக கட்சியின் மூத்த தலைவர் க.அன்பழகன் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் போனதால் அண்மையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் எம்.ஜி.ஆர் தனது கட்சியை சரியாக வழிநடத்தியதுபோல் அவருக்கு பிறகு ஜெயலலிதா நிரந்தர கழக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து முக்கிய முடிவுகளை எடுத்து கட்சியை திறம்பட வழிநடத்தி வந்தார். இந்நிலையில் திமுகவின் பொருளாளராக இருக்கும் துரைமுருகனுக்கு கழக பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்படுமா அல்லது திமுக தலைவர் ஸ்டாலினே அப்பதவியை கைக்கொள்வாரா என்பது குறித்த சூடான விவாதம் அரசியல் கட்சியினரிடையே பேசப்பட்டு வருகிறது.

திமுகவின் குடும்பத்தில் இருந்து ஸ்டாலினோ அல்லது கனிமொழியோ பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் உலா வருகிறது. திமுகவின் துணை பொதுச்செயலாளர் பெரியசாமி அல்லது திமுக வின் பொருளாளர் துரைமுருகன் ஆகியோரில் ஒருவர் நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்டால், பொருளாளர் பதவிக்கு
எ.வ.வேலு, டி.ஆர்.பாலு மற்றும் முதன்மை செயலாளராக உள்ள கே.என்.நேரு உள்ளிட்ட மூன்றுபேரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

கொரோனாவில் இருந்து தப்பிக்க கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் உயிரிழப்பு! வதந்தியை நம்பியதால் வந்தவினை!

0

கொரோனாவில் இருந்து தப்பிக்க கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் உயிரிழப்பு! வதந்தியை நம்பியதால் வந்தவினை!

சீனாவில் உருவான கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உலகத்தையே அச்சுறுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் முகமூடியை அணிந்து மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரது செல்போன் ரிங்டோனிலும் கரோனா வைரஸ் அறிகுறி பற்றிய விழிப்புணர்வு தகவலை புதியதாக அனைத்து போன் சேவைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை பலர் வரவேற்று பேசியதோடு அவரவர் மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதன்பின்னர் ஈரான் வடகொரியா போன்ற நாடுகளில் கரோனா வேகமாக பரவியதில் ஈரானில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஏழாயிரம் பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் சிறையில் இருக்கும் 70 ஆயிரம் கைதிகளை விடுவிக்க இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனாவில் இருந்து தப்பிக்க மது குடித்தால் போதும் என்ற பொய்யான தகவல் இணையத்தில் பரவியதை நம்பி கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதை நம்பி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்த 214 பேர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர். யாரோ பரப்பிய வதந்தியை நம்பியதால் இந்த உயிரிழப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களை தனிமைபடுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸை குறித்து பயப்பட வேண்டாம், முக கவசமும்அணிய வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகத்தில் கவசங்களை அணிந்த படங்களை பதிவேற்ற பேஸ்புக் நிறுவனமும் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக தினசரி பல்வேறு விழிப்புணர்வுகளும் அறிவுரைகளும் பல்வேறு தரப்பில் கூறப்பட்டாலும் கொரோன வைரஸால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க முடியவில்லை.

அழகான பெண்ணை தேர்வு செய்த விஜய் டிவி புகழ் சரத்! நிச்சயம் முடிந்து வருங்கால மனைவியுடன் எடுத்த முதல் புகைப்படம்!

0

அழகான பெண்ணை தேர்வு செய்த விஜய் டிவி புகழ் சரத்! நிச்சயம் முடிந்து வருங்கால மனைவியுடன் எடுத்த முதல் புகைப்படம்!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சரத். சினிமா நடிகரான மொட்டை ராஜேந்திரனை போல் அச்சு அசலாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். கனா காணும் காலங்கள் சீரியலில் ஏற்கனவே நடித்திருந்தாலும் பெரிய அளவில் பிரபலம் ஆகாத சரத், கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் அதிகளவு பிரபலம் ஆனார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சரத் மற்றும் தீனா இணைந்து களத்தில் இறங்கிவிட்டால் அந்த நிகழ்ச்சியே மிக குதூகலமாகவும், அரட்டைக்கும் பஞ்சம் இல்லாத அளவிற்கு இவர்களின் நகைச்சுவை இருக்கும். தொடர்ந்து சினிமா துறையில் தனக்கான புதிய அடையாளத்தை தேடி வரும் சரத்துக்கு சமீபத்தில் திருமண் ஏற்பாடு தொடங்கி கடந்த மார்ச் 6 ஆம் தேதி நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிந்தது.

அழகான பெண்ணை தேர்வு செய்த விஜய் டிவி புகழ் சரத்! நிச்சயம் முடிந்து வருங்கால மனைவியுடன் எடுத்த முதல் புகைப்படம்!

இந்நிலையில், தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் அழகான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் சரத் பதிவு செய்துள்ளார். அவருக்கு சினிமாதுறை மற்றும் நண்பர்கள், இணையதளவாசிகள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் இவர்களது ஜோடியான புகைப்படம் வைரலாகி வருகிறது.

பெற்ற பிள்ளைகள் ஆறு! கடலை மிட்டாய் விற்றால்தான் சோறு! கணவனை காப்பாற்ற வைராக்கியத்தோடு வெயிலில் போராடும் மூதாட்டி.!!

0

பெற்ற பிள்ளைகள் ஆறு! கடலை மிட்டாய் விற்றால்தான் சோறு! கணவனை காப்பாற்ற வைராக்கியத்தோடு வெயிலில் போராடும் மூதாட்டி.!!

தஞ்சை மாவட்டம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் தினமும் தன் குடும்பத் தேவைக்காக தினமும் வெயிலில் அலைந்து கடலை மிட்டாய் விற்கும் சம்பவம் பார்ப்பவர்களை வேதனை அடையச் செய்கிறது.

மூதாட்டியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி காது கேளாதவர். இவர்களுக்கு 4 ஆண் பிள்ளைகளும் 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். கடைசி பிள்ளையை தவிர முதல் ஐந்து பேருக்கும் திருமணம் ஆகி பெற்றோரை புறக்கணித்து தனித்தனியாக குடும்பம் நடத்திக் வருகின்றனர். காது கேட்கவில்லை காலில் மூட்டு அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் தனது கடலை மிட்டாய் வியாபாரத்தை செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்கிப் போனார். பெற்ற பிள்ளைகளின் ஆதரவற்ற நிலை மேலும் மன உளைச்சலை கொடுத்துள்ளது.

இந்நிலையில், குடும்ப வருமானத்திற்காக பூங்கா ஒன்றில் அமர்ந்து கொண்டே வியாபாரம் செய்கிறார். அவரது மனைவி சுசீலா கோயில், பூங்கா வெளிப்பகுதி மற்றும் சாலையோரங்களில் வெயிலில் அலைந்து கடலை மிட்டாய் விற்று வருகிறார். தினமும் அலைந்து திரிந்து விற்றால் கூட ரூ.300 தாண்டாது. கோயிலுக்கு வருபவர்கள் மூதாட்டியை பார்த்து பரிதாபத்தோடு பணம் கொடுத்தாலும் அதை கைநீட்டி வாங்காமல் மிட்டாய் வாங்கிக் கொண்டு காசு கொடுங்கள் என்கிறார்.

பத்தாவது வரை படித்த மூதாட்டி தனது 6 பிள்ளைகளை நம்பி இருந்தது பெருத்த ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது. கடைசி காலத்தில் பிள்ளைகள் காப்பாற்றாமல் போனதால் வயதான காலத்தில் ஓடியாடி உடல் அலுத்து உழைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்போதைக்கு கடலை மிட்டாய் வியாபாரம் நன்றாக செல்கிறது இதுபோதும். பெற்ற பிள்ளைகளை நினைத்து அவர் கண்ணீர் விடுவார், நான் இருக்கும்போது நீ அழ கூடாது என்று வைராக்கியத்தோடு பேசும் சுசீலா பாட்டியின் தினசரி வாழ்வு சோகத்தையும், ஆச்சரியத்தையும் கொடுக்கிறது.