Home Blog Page 5732

அசூரன் படத்தை பார்த்த ஸ்டாலின் திரௌபதி படத்தை பார்ப்பாரா? வலுக்கும் கோரிக்கை! சிக்கலில் உடன்பிறப்புகள்!

0

அசூரன் படத்தை பார்த்த ஸ்டாலின் திரௌபதி படத்தை பார்ப்பாரா? வலுக்கும் கோரிக்கை! சிக்கலில் உடன்பிறப்புகள்!

தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரௌபதி திரைப்படம் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபல கதாநாயகர்கள் யாரும் நடித்திராத இந்த படத்திற்கு பெரிய நடிகர்களின் படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை விட அதிகமான முக்கியத்துவத்தை தமிழக மக்கள் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்.ஜி அவர்களின் இரண்டாம் படைப்பான இந்த திரௌபதி படத்தின் டிரெயிலர் வெளியான நாள் முதல் பல்வேறு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதே நேரத்தில் சாதி மறுப்பு இயக்கங்கள் சில இந்த படத்தை எதிர்த்து வழக்கும் தொடர்ந்தன. இதனையடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் படம் வெளியானதும் முதல் ஆளாக இந்த படத்தை பார்ப்பதாகவும், படக் குழுவினருக்கு தேவையான சட்ட உதவியை தருவதாகவும் கூறினார். இதனையடுத்து பாஜகவின் ஹச். ராஜா அவர்களும் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆதரவு தெரிவித்த பாமக மற்றும் பாஜக என இரு அரசியல் கட்சி தலைவர்களும், அதன் கட்சி நிர்வாகிகளும் நேற்று திரையிடப்பட்ட திரௌபதி திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து படத்திற்கான தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்தனர்.படம் வெளியான இன்று அதிமுக,திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தொண்டர்களும் எந்த பாகுபடுமின்றி இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் திமுகவை சேர்ந்த விளம்பர பிரியறான தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் அந்த மாவட்டத்தில் மட்டும் இந்த திரைப்படம் வெளியிட முடியாத அளவிற்கு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளார் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. அது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்வதற்கு முன்பே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்த சிக்கல் உருவாகியுள்ளது.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை சித்தரிக்கும் படமாக வெளியான அசூரன் திரைப்படத்தை திமுக தலைவர் சென்று பார்த்ததும் அதனால் ஏற்பட்ட சிக்கலும் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது நாடகக் காதல் மற்றும் ஆனவக் கொலைகள் மூலம் பெரும்பான்மை சமுதாய மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வெளியாகியுள்ள திரௌபதி படத்தை பார்க்க ஸ்டாலின் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு அவர் கட்சி தொண்டர்கள் மத்தியிலேயே ஏற்பட்டுள்ளது.

கடந்த கால தமிழக அரசியலில் திராவிட கட்சிகள் குறிப்பாக திமுக ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் பற்றி மட்டுமே பேசுகிறது. சில சமயங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதே குற்றமிருந்தாலும் அதையெல்லாம் திமுக கண்டு கொள்ளாமல் கடந்து வந்தது. அப்படி கண்டு கொள்ளாமல் வந்த பிரச்சினைகளில் இந்த நாடகக் காதலும் அதனால் பெண்ணை பெற்றவர்களுக்கு ஏற்படும் துன்பங்களும் ஒன்று.

திமுகவில் அனைத்து சாதி மற்றும் மதத்தை சேர்ந்தவர்களும் உறுப்பினராக உள்ள நிலையில் இனியாவது ஸ்டாலின் சமத்துவத்துடன் நடந்து கொள்வாரா? அசூரன் படத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை போல திரௌபதி படத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தியேட்டருக்கு சென்று பார்ப்பாரா? என்று பல கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளன.

தற்போதைய சூழலில் ஸ்டாலின் திரௌபதி படத்தை பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் அதை வைத்து அவருடைய சந்தர்ப்பவாத அரசியலை விமர்சிக்க எதிர்க் கட்சியினர் தயாராக உள்ளனர். ஸ்டாலின் எதை செய்தாலும் எதிராக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த திரௌபதி பட விவகாரமும் திமுகவினருக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பண்ணை தீயில் கருகிய மாடுகள்! திடீர் தீவிபத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்!

0

பண்ணை தீயில் கருகிய மாடுகள்! திடீர் தீவிபத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்!

மாட்டுப்பண்ணையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்ட காரணத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் இளங்கன்றுகள் தீயில் கருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள செட்டியபட்டி என்னும் கிராமத்தில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. செட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர்
50 -க்கும் மேற்பட்ட மாடுகளும் இளங்கன்றுகளும் மற்றும் நூற்றுக்கணக்கான ஆடுகளையும் வைத்து மாட்டுப்பண்ணை தொழில் செய்து வந்தார்.

ஆடு, மாடுகள் மூலம் பால் கறந்து விற்பது, ஆடுகளை விற்பனை செய்வது போன்ற வழிகளில் மனோகரன் தனக்கான வருமானத்தை ஈட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாட்டுப் பண்ணையில் இருந்த மின்சார வயரில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக மின் உராய்வு ஏற்பட்டு திடீரென பண்ணை தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த தீவிபத்தை யாரும் உடனடியாக அறியவில்லை.

பின்னர், மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து முடிந்தவரை தீயை அணைக்க முயற்சி செய்தனர். இதனிடையே தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்து எஞ்சியிருந்த ஆடு,மாடுகளை காப்பாற்றினர். இந்த விபத்தில் முப்பது மாடுகள் இறந்துள்ளன. மேலும் தீயில் காயப்பட்ட விலங்குகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திடீரென யாரும் எதிர்பாராத இந்த தீவிபத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீட்டை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ் அனுப்பியது; விஷம் குடித்து விவசாயி தற்கொலை!

0

வீட்டை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ் அனுப்பியது; விஷம் குடித்து விவசாயி தற்கொலை!

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உள்ள சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் விவசாயத்தை தனது தொழிலாக செய்து வந்தார். தனது விவசாய தேவைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் வங்கியில் கடன் வாங்கியிருந்தார்.

விவசாயம் செய்து வந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து நஷ்டமே ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கியில் வாங்கிய கடனுக்கான தவணையை கட்டமுடியாமல் தர்மலிங்கம் தவித்துள்ளார். சரிவர தவணை கட்டாத காரணத்தால் வங்கி அதிகாரிகள் தர்மலிங்கத்தின் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக நோட்டீஸ் அனுப்பினர்.

இதைப்பார்த்து வேதனை அடைந்த விவசாயி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கடனை அடைக்க பார்த்துள்ளார். அனைத்தும் தோல்வியில் முடிந்து போனதால் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு போனார். இதனையடுத்து நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் சேர்ந்து மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தர்மலிங்கம் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்திருந்தாலும், தர்மலிங்கம் போன்ற எத்தனையோ விவசாயிகள் இன்னும் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

2 பேர் மரணம் 2 பேர் மருத்துவமனையில்.. பிரசாந்த் கிஷோர் வந்த நேரம் சரியில்லையா?

0

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை பெற திமுக முடிவு செய்து அவருக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கி உள்ளதாக செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் வந்த நேரம் திமுகவுக்கு நேரம் சரியில்லை என்று திமுக தொண்டர்கள் புலம்பி வருகின்றனர். ஏற்கனவே திமுகவின் மூத்த தலைவர்களான அன்பழகன் மற்றும் துரைமுருகன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அடுத்தடுத்து திருவொற்றியூர் எம்.எல்.ஏ கேபிபி சாமி மற்றும் குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் ஆகிய இரண்டு திமுக எம்எல்ஏக்கள் மரணமடைந்துள்ளனர். இதெல்லாம் நல்ல அறிகுறியாக இல்லை என்றும் பிரசாந்த் கிஷோர் வரவுக்கு பின்னரே இம்மாதிரியான நிகழ்வுகள் வருவதாகவும் உடனடியாக அவருடைய ஆலோசனை பெறும் முடிவை திமுக தலைவர் கைவிட வேண்டும் என்றும் திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

தொண்டர்களின் கோரிக்கைகளுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் செவிசாய்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

என்னிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் விமல் படத்தை தயாரிக்க வேண்டும்: பிரபல தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

0

பிரபல தயாரிப்பு நிறுவனமான அரசு பிலிம்ஸ் என்ற நிறுவனம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ’மன்னார் வகைறா’ என்ற படத்தில் நடிக்கும்போது நடிகர் விமல் தன்னிடம் ரூ.5.35 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், ஆனால் 1.35 கோடி ரூபாய் மட்டுமே அவர் திருப்பி கொடுத்து இருப்பதாகவும், மீதி பணத்தை அவர் இன்னும் தரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே விமல் நடிக்கும் அனைத்து படங்களும் என்னுடைய என்.ஒ.சி இல்லாமல் வெளியாக முடியாது என்பதால் அவரை வைத்து படம் தயாரிப்பவர்கள் தன்னிடம் கலந்து ஆலோசித்து விட்டு அதன் பின்னர் தயாரிக்கும்படி கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள முழு அறிக்கையின் விபரம் இதோ:

என்னிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் விமல் படத்தை தயாரிக்க வேண்டும்: பிரபல தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

டாக்டர் படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

0

சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கத்தில் உருவாகி வந்த ’டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது

இந்த நிலையில் டாக்டர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது உள்ளதாகவும் படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியா மோகன் நடித்து வரும் இந்தப் படத்தில் வில்லனாக பிரபல நடிகர் வினய் நடித்து வருகிறார். யோகி பாபு, அர்ச்சனா மகள் ஜாரா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் மார்ச் மாதம் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் ‘அயலான்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

உயரம் சிறுசு… உள்ளம் பெருசு..! ரூ 3.40 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும் வள்ளல் குவாடன்..!!

0

உயரம் சிறுசு… உள்ளம் பெருசு..! ரூ 3.40 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும் வள்ளல் குவாடன்..!!

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியைவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவரது 9 வயது மகன் குவாடன் பேல்ஸ் கதறி அழுது கொண்டே நான் சாகபோகிறேன், தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என்று கண்ணீர் விட்டு பேசியது உலகம் முழுவதும் பரவி பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

அந்த சிறுவன் உருவ வளர்ச்சி இல்லாமல் வித்தியாசமான நோயால் தாக்கப்பட்டு தலை மட்டும் பெரியதாகவும், கை,கால் உடல்கள் சிறியதாகவும் இருப்பதை அவரது பள்ளி நண்பர்கள் தொடர்ந்து கேலி செய்து வந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான குவாடன் தற்கொலை செய்துகொள்வதாக கதறி அழுதார். இதனைப்பார்த்த சமூக வலைதளவாசிகள் குவாடனுக்கு உலகம் முழுவதும் ஆதரவளித்து அவருக்கு ஊக்கம் தரும் விதமாக ஆதரவளித்தனர்.

இதனையடுத்து குவாடனுக்காக அமெரிக்க நடிகர் ப்ராட் வில்லியம்ஸ் உருவாக்கிய பக்கத்தின் மூலம் 4 லட்சத்து 75 அமெரிக்க டாலர் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது. இந்திய மதிப்பில் ரூபாய் 3 கோடியே 40 லட்சம் ஆகும். இந்த நிதியின் மூலம் குவாடனையும் அவரது தாயையும் டிஸ்னிலேண்ட் அனுப்புவதற்காக திட்டமிட்டனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இதை குவாடனின் தாயார் மறுக்கும் விதமாக நாங்கள் எங்கும் செல்ல விரும்பவில்லை என்றும், இந்த பணம் அதிகம் தேவையான தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க இருப்பதாக ஆச்சர்யமான பதிலை கூறியுள்ளார். குவாடன் உருவத்தில் சிறியவர் என்றாலும் அவரது குடும்பத்தினரின் உள்ளம் மிகப்பெரியதாகவே உள்ளது.

பி.ஈ. படித்தவர்கள் விண்ணப்பித்த வேலை: வேலையில்லா திண்டாட்டத்தின் கொடுமை!

0

வாகனம் நிறுத்தும் உதவியாளர் பணிக்கு பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

சென்னையில் அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் புதிய வாகன நிறுத்துமிடம் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்கள் 70% பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்றும் அதில் 50 சதவீதம் பேர் பி.ஈ. முடித்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது

பி.ஈ. முடித்தவர்கள் சாதாரண வாகன நிறுத்தம் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளது வேலையில்லாத் திண்டாட்டத்தில் கொடுமையை காட்டுவதாக மாநகராட்சி ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மட்டுமே தகுதியான வேலைக்கு பி.ஈ. படித்தவர்கள் விண்ணப்பிப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஏற்கனவே மாநகராட்சி குப்பை வண்டியை இயக்கும் ஓட்டுனர் பதவிக்கு ஆயிரக்கணக்கான பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரிகள் விண்ணப்பித்தனர் என்பது தெரிந்ததே. சாதாரண வேலையாக இருந்தாலும் அரசு வேலை, பணி நிரந்தரம், கைநிறைய சம்பளம், மேலதிகாரி தொல்லை இல்லை, டார்கெட் இல்லை, சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பதே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கண்ணில் கருமை நிற போட்டதால் பார்வை இழந்த பாடகி: அதிர்ச்சி தகவல்

0

போலந்து நாட்டை சேர்ந்த ஒருவர் கண்ணில் கருமை நிற போட்டதால் பார்வை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

போலந்து நாட்டைச் சேர்ந்த ராப் இசை பாடகி அலெக்ஸாண்ட்ரா. இவர் பிரபல பாப் பாடகர் போபெக் என்பவரின் தீவிர ரசிகையாக இருந்தார். சமீபத்தில் போபெக் கண்ணில் டாட்டூ போட்டு கொண்டதைப் பார்த்து தானும் அதே போல் டாட்டூ போட வேண்டும் என விரும்பி டாட்டூ போடும் ஒரு நபரை அணுகி உள்ளார்

டாட்டூ போடுவதில் அனுபவமற்ற அந்த நபர் பணத்துக்கு ஆசைப்பட்டு அலெக்சாண்டரின் கண்ணில் டாட்டூ போட்டு உள்ளார். இந்த நிலையில் டாட்டூ போட்டவுடன் கண் எரிச்சல் மற்றும் வலி இருந்ததையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனை சென்று பார்த்தபோது அலெக்சாண்டரின் இடதுகண் முழுவதும் பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், மிக விரைவில் வலது கண் பார்வையும் இல்லாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார்

மேலும் இதனை சரி செய்யவே முடியாது என்றும் டாக்டர் தெரிவித்தது அலெக்ஸாட்ராவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் டாட்டு போட்டவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் டாட்டூ மோகத்தால் கண்பார்வை இழந்த பாடகியின் பரிதாபம் நிலையில் அந்த பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திமுகவிற்கு உச்சத்தில் இருக்கும் ராகு கேது! அடுத்தடுத்த நிகழ்வுகளால் அமைதியான அறிவாலயம்!!

0

திமுகவிற்கு உச்சத்தில் இருக்கும் ராகு கேது! அடுத்தடுத்த நிகழ்வுகளால் அமைதியான அறிவாலயம்!!

கடந்த இரு தினங்களாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் திமுக கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளை ரத்து செய்துள்ளார்.

தமிழகத்தில் அசைக்கமுடியாத மிகப்பெரும் எதிர்க்கட்சியாக திமுக இருந்து வருகிறது. சிஏஏ மற்றும் மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் திமுக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இறப்பு திமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, 2019 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காந்தவராயன் எம்எல்ஏ தற்போது காலமாகியுள்ளார். கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அறிவாலயத்தில் சோகமாக அமைதியை உண்டாக்கியுள்ளது.

இதைப்போலவே, திமுக வின் பொதுச் செயலாளர் அன்பழகன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருவதாக மருத்துவமனை சார்பில் கூறப்படுகிறது. இதனால், ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 29 (நாளை) ஆம் தேதி நடக்கவிருந்த திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வருத்தமான சம்பவங்களின் காரணமாக திமுகவின் பலம் குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.