Home Blog Page 5731

ராஜ்யசபா சீட் இல்லை: தேமுதிகவுக்கு கைவிரித்தது அதிமுக

0

ராஜ்யசபா எம்பி 6 பேர் பதவி முடிந்ததை அடுத்து மார்ச் 26ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுகவுக்கு மூன்று இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் ஒன்றை பெறுவதற்காக கடந்த சில நாட்களாக தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் அதிமுக தரப்பிலிருந்து நம்பிக்கை தரும் வாக்குறுதி எதையும் அக்கட்சிக்கு தரவில்லை

இந்த நிலையில் தற்போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கும் வாய்ப்பு இல்லை என அதிமுக அறிவித்துள்ளது. ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலின்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தேமுதிகவுக்கு எந்த ஒரு ராஜ்யசபா தொகுதியும் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை என்றும் எனவே அக்கட்சிக்கு ராஜ்யசபா தொகுதி ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் அதிமுக தரப்பில் இருந்து கூறப்படுட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக நிர்வாகிகள் விஜயகாந்த் வீட்டில் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத தேமுதிக ராஜ்யசபா சீட்டுக்கு ஆசைப்படுவது அதிகம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினியின் சிஏஏ கருத்துக்கு திடீரென ஆதரவு தெரிவித்த இஸ்லாமிய அமைப்பு: ஆச்சரிய தகவல்

0

சமீபத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டியின் போது இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தினால் தானே முதல் ஆளாக நின்று குரல் கொடுப்பதாகவும் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்

ரஜினியின் இந்த பேட்டிக்கு இஸ்லாமிய அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர் இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்பினர்களை நேரடியாக சந்தித்து பேசி தனது தரப்பு விளக்கத்தை அளிக்க ரஜினிகாந்த் முடிவு செய்து முதல் கட்டமாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் அவர்களை இன்று காலை ரஜினிகாந்த் சந்தித்தார்

இந்த சந்திப்பு முடிந்த பின்னர் அபுபக்கர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’ரஜினிகாந்தின் சிஏஏ கருத்தை உள்நோக்கத்தோடு எடுக்கக் கூடாது என்றும் அவர் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் குரல் கொடுப்பேன் என்று கூறியதற்கு நன்றி என்றும் கூறினார் மேலும் ரஜினிகாந்த் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே சூப்பர் ஸ்டார் என்று புகழாராம் சூட்டினார்.

ஒரே ஒரு சந்திப்பில் அவர் திடீரென மாறியது எப்படி என்று செய்தியாளர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் ஆனால் அதே நேரத்தில் ரஜினி உடனான சந்திப்பில் நடந்த பேச்சுவார்த்தை விபரம் குறித்து அவர் தெரிவிக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது

மிஷ்கினோடு மோதல்:இயக்குனர் அவதாரம்! மனம் திறந்த விஷால் !

0

மிஷ்கினோடு மோதல்:இயக்குனர் அவதாரம்! மனம் திறந்த விஷால் !

விஷால் மற்றும் பிரசன்னா நடிப்பில் உருவாகி வந்த துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகியதை அடுத்து விஷாலே இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் படம் ஹிட்டானதை அடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் ஒரு மாதம் நடந்தது.  இந்த படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகினார். இந்நிலையில் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் திடீரென இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் முடித்துக் கொடுக்க மிஷ்கின் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில கோடிகள் தயாரிப்பாளர் விஷாலிடம் இருந்து மிஷ்கின் வாங்கி உள்ளார்.

இதற்குக் காரணமாக மிஷ்கின் படத்தின் பட்ஜெட்டை தாறுமாறாக ஏற்றி விட்டதும், சைக்கோ படத்தின் வெற்றிக்குப் பின்னர் தனக்கு சம்பளம் அதிகமாக வேண்டும் எனக் கேட்டதே என சொல்லப்படுகிறது. இதனால் இரு தரப்பும் பேசி இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாகவும் விஷாலே மீதிப் படத்தை இயக்கிக் கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதை உறுதி செய்துள்ள விஷால் ’ நானே அடுத்த ஆண்டு ஒரு படம் இயக்க இருந்தேன். அது விலங்குகள் சம்மந்தப்பட்ட படம் . ஆனால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் வாய்ப்பு எதிர்பாராத விதமாகக் கிடைத்திருக்கிறது. நான் விதியை நம்புவன். அதனால் அதன்படியே செல்கிறேன். இந்த படத்தை இயக்குவதில் உற்சாகமாக இருக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார். விஷால் தற்போது புதுமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கும் சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிந்த பின்னர் மீண்டும் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு நடக்கும் எனத் தெரிகிறது.

இந்தியாவின் பேட்டிங்கை காலி பண்ணிய ஜேமிஸன்! 242 ரனகளுக்கு ஆல் அவுட்

0

இந்தியாவின் பேட்டிங்கை காலி பண்ணிய ஜேமிஸன்! 242 ரனகளுக்கு ஆல் அவுட்

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இந்திய அணியின் இளம் தொடக்க ஜோடியான பிருத் வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும்  இறங்கினர். மயங்க் அகர்வால், கோலி, ரஹானே ஆகியோர் மோசமான ஷாட்கள் விளையாடி அவ்ட் ஆகி ஏமாற்றம் அளிக்க பிருத்வி ஷா (54), புஜாரா(55) மற்றும் ஹனுமா விஹாரி (51) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

இந்தியாவின் பேட்டிங்கை காலி பண்ணிய ஜேமிஸன்! 242 ரனகளுக்கு ஆல் அவுட்

ஆனால் பின் வரிசையில் வந்த பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் வந்த வேகத்தில் சென்றனர். கடைசி நேரத்தில் பூம்ரா மற்றும் ஷமி ஆகியோர் அதிரடியாக விளையாடி 10 மற்றும் 16 ரன்கள் சேர்த்ததால் இந்தியா ஓரளவு கௌரவமான ஸ்கோரான 242 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்த இந்தியாவை நியுசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிஸன் 5 தகர்த்தார். அவர் வரிசையாக ஹனுமா விஹாரி, புஜாரா, பண்ட், ஜடேஜா ஆகியோர்களின் விக்கெட்களை வீழ்த்தி அசத்த்னார். மேலும்  சவுத்தி மற்றும் போல்ட் தலா 2 விக்கெட்களையும் வேக்னர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து நியுசிலாந்து அணி தற்போது தங்கள் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்து விளையாடி வருகிறது.

நீர்நிலைகளில் வனத்துறையினர் கிளிக் கிளிக்..! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைகளின் கணக்கெடுப்பு தொடக்கம்..!!

0

நீர்நிலைகளில் வனத்துறையினர் கிளிக் கிளிக்..! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைகளின் கணக்கெடுப்பு தொடக்கம்..!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட தொடங்கியுள்ளனர். வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏரி, குளம், ஆறு மற்றும் ஓடைகள் போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் நிறைந்திருக்கும்போது அயல்நாட்டு பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்வதோடு, தனது புது குடும்பத்துடன் மீண்டும் வெளிநாடு பறந்துவிடும்.

இப்படி வந்து செல்லும் பறவைகளின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான பறவைகள் வந்து செல்கிறது போன்றவற்றின் கணக்கெடுக்கும் பணி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் வனத்துறையினர், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவியர் கலந்துகொண்டு நவீன கேமிரா உதவிகளுடன் புகைப்படம் எடுத்து கணக்கெடுப்பு நடத்த உள்ளனர்.

பறவைகள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் பல்வேறு குழுவாக பிரிந்து பறவைகளின் எண்ணிக்கை கணக்கெடுக்க உள்ளனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் சதுப்பு நிலப்பகுதியில் பல்வேறு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. இதனை கவனிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் பகுதியில் உள்ள கோடியக்கரை சரணாலயத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பறவைகளின் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் இருக்கும் பறவைகளின் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது.

தமிழிசை சவுந்தரராஜன் உறவினர் தூக்கிட்டு தற்கொலை: திடுக்கிடும் தகவல்

0

தமிழிசை சவுந்தரராஜன் உறவினர் தூக்கிட்டு தற்கொலை: திடுக்கிடும் தகவல்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் இன்னும் தமிழக பாஜகவிற்கு தலைவர் பதவியை நிரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் திடீரென கோவையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் மருமகளுடன் பிறந்த சகோதரர் சண்முகநாதன். 25 வயது வாலிபரான இவர் தனது தந்தையிடம் கார் வாங்கி கொடுக்கும்படி கேட்டதாக தெரிகிறது. ஆனால் இப்போதைக்கு கார் வாங்கும் நிலை இல்லை என்றும் இன்னும் சில மாதங்கள் ஆகட்டும் என்று பெற்றோர் கூறியதாக தெரிகிறது

இதனால் ஆத்திரத்தில் சண்முகநாதன் தன்னுடைய அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உறவினர் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஸ்டாலின் உத்தரவை மீறும் துரைமுருகன்: திமுகவில் மீண்டும் புகைச்சல்! காரணம் இவர்தான் !

0

ஸ்டாலின் உத்தரவை மீறும் துரைமுருகன்: திமுகவில் மீண்டும் புகைச்சல்! காரணம் இவர்தான் !

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நகரச்செயலாளராக இருக்கும் சாரதிகுமார் என்பவர் மேல் திமுக தலைவர் மு க ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை மீறும் முனைப்பில் இருக்கிறார் துரைமுருகன்.

திமுகவில் கலைஞரின் மறைவு மற்றும் பேராசிரியர் க அன்பழகனின் ஓய்வு ஆகியவற்றுக்குப் பின்னர் தலைவர் ஸ்டாலினுக்கும் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும் இடையே அவ்வப்போது முட்டல் மோதல் எழுந்து வருவதாக சொல்லப்படுகிறது. கலைஞருக்கு உற்ற நண்பனாக இருந்த துரைமுருகன் அவரது மகன் ஸ்டாலினுக்கு அவ்வாறு இருக்க விருப்பப் படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு முறை அது நிரூபணமாகியுள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகர செயலாளர் சாரதிகுமார் என்பவர் துரைமுருகனின் ஆதரவாளர். இவரது மனைவி ரம்யா. சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் ‘நான், என் கணவரைக் காதல் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் அவருக்கு அதற்கு முன்பாகவே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. அந்த உறவு எனக்குத் தெரியவந்து நான் தட்டிக்கேட்டதால், என்னை தாக்கினார்கள். இது சம்மந்தமாக திமுக தலைமையகம் அறிவாலயம் சென்று அங்கு புகார் கொடுத்தேன். ஆனால் அதை தெரிந்துகொண்டு என்னை மிரட்டுகிறார்கள். அதனால் எனக்கும் என் குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டும்’ எனக் கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

ஸ்டாலின் உத்தரவை மீறும் துரைமுருகன்: திமுகவில் மீண்டும் புகைச்சல்! காரணம் இவர்தான் !

இந்த விஷயத்தால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு அவராகவே பதவியில் இருந்து விலகுவது மாதிரி விலகச் சொன்னார். அது பற்றிய அறிவிப்பு முரசொலியில் வந்தது. இந்நிலையில் சாரதியின் ஆதரவாளர்கள் துரைமுருகனின் வீட்டில் ஒன்று கூடி அவரை மீண்டும் நகரச் செயலாளராக நியமிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். அதற்கு துரைமுருகன் ‘அவன் நல்லவனோ, கெட்டவனோ… எனக்கும் வாணியம்பாடிக்கும் அவன் வேண்டும்… அவன் கட்சியை வளர்த்தவன்.. என தளபதியிடம் சொல்கிறேன். இப்போது நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள்’ என அவர்களை சமாதானப்படுத்தி வைக்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதி.

6 வயது சிறுமியின் கையைக் கட்டி இழுத்துச் செல்லும் போலிஸ் ! சமூகவலைதளங்களில் கண்டனம் !

0

6 வயது சிறுமியின் கையைக் கட்டி இழுத்துச் செல்லும் போலிஸ் ! சமூகவலைதளங்களில் கண்டனம் !

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பள்ளியில் முரண்டு பிடித்த 6 வயது சிறுமி ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார் ஜெர்சி லாரான்ஸ் என்ற 6 வயது மாணவி. இவர் பள்ளியில் அடிக்கடி ஆசிரியர்களிடம் தவறாக நடந்து கொள்வதும் அதற்காக அவரது பெற்றோர் வந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பதும் வாடிக்கையாக நடந்துள்ளது.

இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர் இவரிடம் ஏதோ கேள்வி கேட்க கோபமான சிறுமி அவர் முகத்தில் புத்தகங்களை தூக்கி எரிந்து தாக்கியுள்ளார். இதனால் அந்த ஆசிரியர் போலிஸுக்கு தகவல் சொல்ல அங்கு வந்த போலிஸார் சிறுமியின் கையை பின் புறம் கட்டி அவரை அழைத்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. அப்போது அந்த சிறுமி ‘ என்னை யாராவது காப்பாற்றுங்க:. எனக்கு போலிஸ் வாகனத்தில் செல்ல விருப்பமில்லை ‘ எனக் கூறி அழுகிறார்.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது. சம்மந்தப்பட்ட வீடியோ இப்போது வெளியானதை அடுத்து சமூக வலைதளங்கலில் போலிஸாருக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

டெல்லி வன்முறையை தூண்டுவதே எதிர்க்கட்சிகள்தான்! அமித்ஷா ஆவேசம்!

0

டெல்லி வன்முறையை தூண்டுவதே எதிர்க்கட்சிகள்தான்! அமித்ஷா ஆவேசம்!

சிஏஏ சட்டத்திற்கு எதிராக தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா பேசுகையில்;

குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்றும், இதனால் அவர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

இச்சட்டம் பக்கத்து நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களுக்கான குடியுரிமை வழங்கும் சட்டம்தான், இதனால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்றும் அழுத்தமாக கூறியுள்ளார். இந்த சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று வெளிப்படையாக பேசினார்.

இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியில் EVKS இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்; குடியுரிமை சட்ட திருத்தம் சம்பந்தமாக யாரும் போராட்டத்தை தூண்டி விடவில்லை என்றும், இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்பட போகிறவர்களும் தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளவே களத்தில் இறங்கி போராடுவதாக கூறினார்.

வடகிழக்கு டெல்லியில் நடந்த சிஏஏ சட்டத்திற்கு எதிரான வன்முறையில் இதுவரை 600 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வழக்கு எப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆட்டம் கண்ட இந்திய பேட்டிங்… சொதப்பிய பேட்ஸ்மேன்கள்! தாங்கி நிற்கும் புஜாரா !

0

ஆட்டம் கண்ட இந்திய பேட்டிங்… சொதப்பிய பேட்ஸ்மேன்கள்! தாங்கி நிற்கும் புஜாரா !

இந்தியாவுக்கும் நியுசிலாந்துக்கும் எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 143 ரன்களை சேர்த்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இந்திய அணியின் இளம் தொடக்க ஜோடியான பிருத் வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும்  இறங்கினர்.

முதல் டெஸ்டில் சொதப்பிய  பிருத்வி ஷா அதிரடியாக விளையாடினார். ஆனால் முந்தைய டெஸ்டில் சிறப்பாக விளையாடிய மயங்க் 7 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் வந்த புஜாரா விக்கெட்டை இழக்காமல் நங்கூரம் பாய்ச்சி நின்றார்.பிருத்வி ஷா அதிரடியாக அரைசதம் அடித்தார். ஆனால் அவர்  54 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் வந்த கேப்டன் கோலி 3 ரன்களிலும், துணைக் கேப்டன் ரஹானே 7 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டு இருக்கிறது. இதையடுத்து ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும்  ஹனுமா விஹாரி ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். களத்தில் இப்போது புஜாரா 47 ரன்களோடும் ஹனுமா விஹாரி 10 ரன்களோடும் ஆடி வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி 143 ரன்கள் சேர்த்துள்ளது. நியுசிலாந்து தரப்பில் சவுத்தி அதிகபட்சமாக 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ட்ரண்ட் போல்ட் மற்றும் ஜேமிசன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.