Home Blog Page 5738

இந்தியா – அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

0

இந்தியா – அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

இரண்டு நாள் அரசு பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நேற்று சிறப்பான வரவேற்பும், மிகப்பெரிய அளவில் சிறப்பான மரியாதையும் வழங்கப்பட்டது.

பின்னர், மோடி மற்றும் டிரம்ப் அறிமுகத்திற்கு பிறகு குஜராத் சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிட்டார். இதனையடுத்து சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் பல லட்சம் மக்களிடையே டிரம்ப் சிறப்புரையாற்றினார். அங்கு அவருக்கு “நமஸ்தே டிரம்ப்” என்று இந்தியாவின் சார்பாக வரவேற்று புகழ்பெயர் வைக்கப்பட்டது.

அக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், இந்தியா வளர்ந்து வரும் நாடுகளில் சிறப்பான நாடாக விளங்குகிறது. இந்திய பிரதமர் மோடி என்னுடைய கிரேட் நண்பர் என்றும், இந்திய மக்கள் அனைவரையும் நண்பர்களாக நேசிக்கிறேன் என்று தெரிவித்தார். சச்சின் டெண்டுல்கர், விராட்கோலி போன்ற புகழ்மிக்க வீரர்களை பெற்ற நாடு என்று புகழ்ந்து பேசினார். இந்தியா பிரம்மிப்பான வளர்ச்சியை கொண்டுள்ளதாகவும், பிரதமர் மோடியின் கடின உழைப்பை வைத்து இந்தியர்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்றும் கூறினார்.

இந்தியாவின் மிகச்சிறப்பான வரவேற்பை என்னால் மறக்க முடியாது என்றும், 70 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா விளங்குவதாகவும் குறிப்பிட்டார். மேலும் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டு பாராட்டி பேசினார். இந்தியாவிற்கு அமெரிக்க நல்ல நட்பு நாடாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் இரு நாட்டு பிரதமர்களின் சந்திப்பின் மூலம் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இன்று கையெழுத்தாக உள்ளது.

இந்தியாவுக்கு தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வருவதாகவும் கூறினார். மேலும் இரு நாடுகளுக்கிடையே ரூபாய் 21,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் புதிய படத்தின் பெயர் “அண்ணாத்த..! டைட்டில் லுக் வெளியீடு!!

0

ரஜினியின் புதிய படத்தின் பெயர் அண்ணாத்த..! டைட்டில் லுக் வெளியீடு!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான “அண்ணாத்த” டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை, இயக்குனர் சிவா இயக்குகிறார்

சிவா ஏற்கனவே கார்த்தியின் சிறுத்தை, அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் தலைவர் 168 திரைப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இதன்மூலம் இயக்குனர் சிவா ரஜியுடன் முதல் முறையாக சினிமா கூட்டணி சேர்ந்துள்ளார்.

இந்த படம் ரஜினியின் 168 -வது  திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்  தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் மற்றும் காமெடி நடிகர்களான சூரி, சதீஷ் ஆகியோர் பட்டையை கிளப்ப உள்ளனர்.

அண்ணாத்த என்ற டைட்டில் பெயர் மட்டுமே வெளியானது ரஜினியின் தோற்றம் வெளியாகவில்லை, இதில் ரஜினியின் தோற்றம் மாஸ் காட்டும் அளவிற்கு இருக்க வேண்டுமென்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்?

0

டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்?

டெல்லியில் நடந்து வரும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் தலைமை காவலர் ரத்தன் என்பவரை போராட்டகாரர்கள் கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டு டெல்லியே போர்க்களமாக மாறியுள்ளது. வன்முறை மேலும் அதிகரித்ததால் கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர். காவலர் இறப்பிற்கு டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சிஏஏ போராட்டம் தீவிரமாக நடந்த போதும், தலைமை செயலகத்தை முற்றுகையிட்ட போதும் எந்த உயிரிழப்பு அசம்பாவிதமோ, தீ வைப்பு சம்பவங்களோ நடக்கவில்லை. காரணம், தமிழக காவல்துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி போட்ட ரகசிய உத்தரவுதான். முதற்கட்டமாக இஸ்லாமியர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட பிறகு, ஜமாத்தின் முக்கிய நபர்களிடம் தந்திரமாக சமரசம் பேசி போராட்டத்தை நிறுத்தினர்.

சென்னை பழைய வண்ணாரபேட்டையில் பெருமளவு கூட்டம் கூடியது. கோவையில் விடிய போராட்டங்கள் நடந்தபோதும் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை. தமிழக அரசின் நுட்பமான அடுத்தகட்ட நகர்வுகளும், வட இந்திய ஆர்வக்கோளாறு அரசியல்வாதிகளை போன்று எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மத அரசியல் பேசாமல் சமத்துவ அரசியலை எடப்பாடி பழனிச்சாமி பேசியதாலே தமிழகத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஒவ்வொரு மணி நேரத்திலும் சம்பவம் குறித்த தகவல் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மொத்தத்தில் போராட்டத்தை சரியான வீயூகத்தின் மூலம் அதிமுக அரசு கையாண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

போராட்ட சம்பவத்தை வைத்து யார் மீதும் வழக்கு பதியவில்லை. அதிகபட்சமாக சென்னையில் நடந்த போராட்டத்தின் போது லேசான தடியடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்த்த டைட்டில்: உற்சாகத்தின் உச்சத்தில் ‘தலைவர்’ ரசிகர்கள்

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இதன்படி இந்த படத்திற்கு ’அண்ணாத்த’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் டைட்டில் குறித்த ஒரு வீடியோவையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புதிய டைட்டிலுடன் கூடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறா.ர் டி இமான் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது! சீமானைக் கோபப்படுத்திய அந்த கேள்வி!

0

கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது! சீமானைக் கோபப்படுத்திய அந்த கேள்வி!

சீமான் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தன்னை காதலித்து ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த சிக்கல் சில ஆண்டுகளை கடந்து வந்த நிலையில், சமீபத்தில் சீமானுடன் இருக்கும் மூன்று அந்தரங்க வீடியோவை நடிகை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சட்டை இல்லாமல் சினிமா டயலாக்கை டிக்டாக்கில் பேசுவதுபோல் சீமான் பேசியிருந்தார்.

இதற்கு நாம் தமிழர் கட்சியினர் காட்டமாக எதிர்வினையாற்றி வருகின்றனர். அவர்கள் குறித்து பேசிய விஜயலட்சுமி அவர்களை மவுத் பீஸ் எனக் கேலி செய்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய பேச்சாளரான காளியம்மாளுக்கும் விஜயலட்சுமிக்கும் இது சம்மந்தமாக வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இதுபற்றி இதுவரை வாய் திறக்காமல் இருந்த சீமான் இப்போது முதல் முறையாக பேசியுள்ளார்.

கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது! சீமானைக் கோபப்படுத்திய அந்த கேள்வி!

சீமானிடம் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் விஜயலட்சுமி பற்றி ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப முயன்றபோது ‘இதுவரை கேள்விகள் கேட்டீர்கள்.. பதில் சொன்னேன். இதுபோன்ற கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது’ எனக் கோபமாக பதில் சொல்லியுள்ளார். இதற்கு முன்னர் இதுபோல பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு சீமான் பதில் சொல்லாமல் இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்காதலை அம்பலபடுத்திய சிறுவன் அடித்துக் கொலை; காதலன் சொரிமுத்து கைது! தொடரும் அபிராமி சம்பவங்கள்..!!

0

கள்ளக்காதலை அம்பலபடுத்திய சிறுவன் அடித்துக் கொலை; காதலன் சொரிமுத்து கைது! தொடரும் அபிராமி சம்பவங்கள்..!!

நெல்லை மாவட்டத்தில் கள்ளக்காதலுக்காக நான்கு வயது சிறுவனை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லே விகேபுரம் அருகேயுள்ள ஆம்பூர்ரோடு பகுதியில் அந்தோணி பிரவு என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த தீபா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு நான்கு வயதில் யோகேஷ் என்ற மகன் உள்ளார். அந்தோணி பிரவு வெளி மாநிலங்களுக்கு கேஸ் லாரியை ஓட்டும் பணியை செய்து வந்தார். ஓட்டுநர் என்பதால் அதிக நாட்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாமல் வெளி இடங்களிலே தங்கிவிடுவார்.

இந்நிலையில், தீபா தனது மகனுடன் வீட்டில்  தனியாக அதிக நாட்களை கழித்து வந்தார். தீபா தனது உறவினருக்கு தனியார் சுய உதவிக்குழு மூலம் பணத்தை கடனாக வாங்கி கொடுத்துள்ளார். பணத்தை வசூல் செய்ய வந்த சொரிமுத்து என்பவருடன் தீபாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சிரித்து பேசி பழகியதால் நாளடைவில் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி அடிக்கடி தீபாவின் வீட்டிற்கு சொரிமுத்து சென்று வந்துள்ளார்.

கணவர் இல்லாத பல நாட்களில் கள்ளக்காதலன் சொரிமுத்துவுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் தீபா ஊர் சுற்றியுள்ளார். வழக்கம்போல கள்ளக்காதலனுடன் சேர்ந்து நெல்லை புதிய பஸ் ஸ்டாண்டு அருகே விடுதி ஒன்றில் தீபா தனது மகனுடன் தங்கியுள்ளார். அப்போது அந்தோணி பிரபு வீட்டிற்கு பேசுவதற்காக போன் செய்துள்ளார். போனை எடுத்த சிறுவன் யோகேஷ், அம்மாவுடன் கோயிலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தான். மனைவியின் மீது சந்தேகமடைந்த அந்தோணி வீடியோ காலில் வருமாறு தீபாவிடம் கூறியுள்ளார். வீடியோ காலை பேசாமல் தீபா தவிர்த்துள்ளார்.

தந்தையிடம் உண்மையை கூறிய சிறுவனை சொரிமுத்து கோயிலில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் விடுதி அறைக்கு வந்து சிறுவனின் கன்னத்தில் சொரிமுத்து வேகமாக தாக்கியுள்ளான். வலியை தாங்க முடியாத சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளான்.  இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தீபாவும் சொரிமுத்துவும் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். சிகிச்சை பெற்று வந்த சிறுவன் யோகேஷ் நேற்று காலையில் இறந்தார்.

இதனையடுத்து, தீபாவிடம் போலீசார் குறுக்கு விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவனை சொரிமுத்து தாக்கியது உறுதியானது. மேலும் தப்பிக்க முயன்ற சொரிமுத்து கைது செய்யப்பட்டுள்ளான். சிறுவனின் உடல் அவரது சொந்த ஊரில் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. கள்ளக் காதலால் ஒரு சிறுவனின் உயிர்போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதே போன்று பிரியாணியால் கள்ளக்காதல் உருவாகி தனது இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமி சம்பவம் தமிழ்நாட்டை அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று:அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம் !

0

சூரரைப் போற்று:அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம் !

சூரரைப் போற்று திரைப்படத்தின் இயக்குனர் அடுத்து விஜய்யை இயக்கவுள்ள நிலையில் இப்போது அந்த படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ் ரிலிஸுக்கு முன்னதாகவே விற்பனை ஆகியுள்ளது.

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது. அதற்கான வேலைகளை இப்போது படக்குழு சுறுசுறுப்பாக செய்து வருகிறது. நீண்ட நாட்களாக வெற்றிப் படம் அமையாமல் தவிக்கும் சூரியா இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளார். இந்த கதை மேல் உள்ள நம்பிக்கையால் அவர் இந்த படத்தை தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிக்கவும் செய்துள்ளார்.

இன்னும் ரிலிஸே ஆகாத நிலையில் இந்த படம் மற்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைத்து வருகின்றன. இந்த படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை இயக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக விஜய் சூரரைப் போற்று திரைப்படத்தை தனியாக பார்த்துள்ளார். இதனால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

மற்றொரு புறம் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சூர்யாவுக்கு நல்ல செய்தியாக  ரிலிஸுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமை விற்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் குணீத் மோங்கா இதற்கான உரிமைகளை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.  சூரரைப் போற்று ரிலீஸானதும் அதற்கான வேலைகளை ஆரம்பிக்க உள்ளனர்.

டிரம்ப் நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு அவசர அவசரமாக டெல்லி திரும்பும் பிரதமர்: ஏன் தெரியுமா?

0

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று இந்தியாவுக்கு வருகை தந்ததை அடுத்து குஜராத்தில் சபர்மதி ஆசிரமம் மற்றும் நமஸ்தே டிரம்ப் ஆகிய நிகழ்ச்சிகளில் டிரம்புடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வெளிவந்த செய்தியை அறிந்து உடனடியாக அவர் டிரம்ப் நிகழ்ச்சியை பாதியில் முடித்து விட்டு அவசர அவசரமாக டெல்லி திரும்பி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அந்த பகுதியில் இருந்த வாகனங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் முதலில் கண்ணீர் புகை குண்டுவீசி வீசியும், அதன் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றதாகவும், அந்த இடமே ஒரே கலவர பூமியாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து கேள்விப்பட்ட உடன் அகமதாபாத்திலிருந்து உடனடியாக பிரதமர் மோடி டெல்லி திரும்பியுள்ளார். அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் துப்பாக்கி சூடு நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மலேசிய பிரதமர் திடீர் ராஜினாமா: என்ன காரணம்?

0

உலகின் வயதான பிரதமர் என்ற பெருமையை கொண்ட 94வயது மலேசியாவின் பிரதமர் முகமது மகாதீர் என்பவர் திடீரென தனது பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக மலேசிய மன்னருக்கு செய்தி அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மலேசியாவில் தற்போது மலேசியா ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் மக்கள் நீதிக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி செய்து வருகின்றன. இந்த நிலையில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து தனது பிரதமர் பதவியை மகாதீர் முகமது ராஜினாமா செய்ததாகவும் அவர் தனது கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று மதியம் தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னரிடம் மகாதீர் கொடுத்துள்ளதாக கூறப்பட்டாலும் மன்னர் அதனை ஏற்றுக் கொண்டாரா என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை

மலேசிய பிரதமரின் ஆட்சிக்கு மக்கள் நீதி கட்சியின் தலைவர் அன்வர் இப்ராகிம் என்பவர் திடீரென தனது ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால் தான் மலேசிய பிரதமர் பதவி விலக இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மலேசிய பிரதமர் திடீரென பதவி விலகியதால் மலேசிய பங்குச் சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்தியாவின் சிஏஏ சட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தவர் மலேசிய பிரதமர் மகாதீர் என்பது குறிப்பிடத்தக்கது

வீட்டிலிருந்தே நிலவுக்கு சென்ற அதிசயம்! இளைஞர்களின் புது அவதாரம் மூன் செல்ஃபி..!!

0

வீட்டிலிருந்தே நிலவுக்கு சென்ற அதிசயம்!
இளைஞர்களின் புது அவதாரம் மூன் செல்ஃபி..!!

21 ஆம் நூற்றாண்டில் இளைஞர்களின் வாழ்க்கையில் செல்ஃபி இல்லாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு செல்பி மோகம் பரவி வருகிறது. தன்னை பல்வேறு விதமாக செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டு பலர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

இன்றைய கால இளைஞர்கள் தனக்கான விளம்பரத்தை அதிகம் விரும்புகிறார்கள். இதற்கு வழிகாட்டியாய் சமூகவலைதளங்கள் இருக்கின்றன. அரசியல், சமூகம், சமூக பிரச்சினை போன்ற பல்வேறு கருத்தை சமூக வலைதளங்கள் பிரதிபலித்தாலும், அதில் செல்பி பதிவுகள் தனித்துவமாக இடம்பெறுகின்றன.

தற்போதைய சூழலில் இணையவாசிகள் நினைத்தால் எதையும் டிரெண்ட் செய்யக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. அந்த வகையில் சில தினங்களாக “மூன் செல்ஃபி” என்கிற புது வகையாக செல்பி மோகம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கழிவறை காகிதம் அல்லது ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்து உருளையாக சுற்றி, அந்த உருளைக்கு நடுவே தனது முகத்தை வைத்து செல்ஃபி எடுத்து வருகிறார்கள். இதற்கு மூன் செல்ஃபி என்றும் புதிய வகையில் பெயர் வைத்துள்ளனர்.

இந்த புதிய கேளிக்கையின் வழியாக வீட்டிலிருந்தே நிலவுக்கு சென்ற அதிசயத்தை பலர் நிகழ்த்தி வருகின்றனர். இதை பார்க்கும்போது நிலவில் இருந்து புகைப்படம் எடுத்தது போல் உள்ளது. கடந்த காலங்களில் செல்ஃபி மோகத்தால் உயரமான இடங்கள், ரயில்வே தடங்கள் மற்றும் சாலைகளில் விபத்துகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருந்தே எடுக்கும் மூன் செல்ஃபியால் எந்த பிரச்சினையும் வராது என்று உறுதியாக கூறலாம்.