Home Blog Page 5737

மருத்துவர் ராமதாஸ் எச்சரித்தும் கண்டு கொள்ளாத தமிழக ஆளுநர்! எதிர்பார்த்தது போலவே தமிழர்களுக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

0

மருத்துவர் ராமதாஸ் எச்சரித்தும் கண்டு கொள்ளாத தமிழக ஆளுநர்! எதிர்பார்த்தது போலவே தமிழர்களுக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

சென்னை அண்ணா பல்கலைகழகத் துணை வேந்தராக வெளிமாநிலத்தை சேர்ந்தவரான சுரப்பா அவர்களை நியமிக்கும் போதே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இது குறித்து எச்சரிக்கும் விதமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் எச்சரிக்கை செய்தது போலவே புதியதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தரின் செயல்பாடுகளும் உள்ளன. வெளி மாநிலத்தவர்களுக்கும் துணை வேந்தருக்கு நெருக்கமானவர்களுக்கும் சாதகமாக செயல்பட்டு வருவதாக மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து மீண்டும் எச்சரிக்கும் விதமாக மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “அண்ணா பல்கலைக்கழகம் : ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி கூடாது!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள காலியிடங்களை தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பாமல், ஒய்வுபெற்ற ஆசிரியர்களை பணியமர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி மற்றும் குரோம்பேட்டை வளாகங்களில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கட்டிடக்கலைப் பள்ளி ஆகியவற்றில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 851 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 530 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், முந்நூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நேர்மையான முறையில் போட்டித்தேர்வு நடத்தி நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.

இத்தகைய சூழலில் அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடிகள், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியர், வருகை தரும் பேராசிரியர், புகழ்பெற்ற பேராசிரியர், கவுரவ பேராசிரியர் ஆகிய நிலைகளில் நியமிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவில் 255.3 என்ற எண் கொண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவ்வாறு நியமிக்கப்படும் பேராசிரியர்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை மாத ஊதியம் வழங்கப்படும்; அவர்களின் எண்ணிக்கை மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையில் 10%&ஐ தாண்டக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு அநீதியானது. அண்ணா பல்கலைக்கழகத்தின் மொத்த ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 40% பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு துணைவேந்தர் சுரப்பா எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதற்கு தான் அதிக ஆர்வம் காட்டுகிறார். துணைவேந்தருக்கும், பல்கலைக்கழக உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கும் நெருக்கமான பேராசிரியர்களுக்கு மறு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்துடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நியமிக்கும் போது இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது. சமூகநீதிக்கும் எதிரான இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் துணைவேந்தருக்கு அக்கறை இருந்தால், உயர்கல்வி அமைச்சரிடமும், உயர்கல்வித்துறை செயலாளரிடமும் கலந்து பேசி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன், 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திருக்கும். ஆனால், காலியிடங்களை நிரப்புவதை தவிர்த்து விட்டு, ஓய்வு பெற்றவர்களை நியமிப்பது என்பது பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்களுக்கு வேலை வழங்கும் ஏற்பாடு என்றே எண்ணத் தோன்றுகிறது. இது பல்கலைக்கழகத்தை சீரழித்து விடக்கூடும்.

Dr Ramadoss Criticise Anna University Vice Chancellor
Dr Ramadoss Criticise Anna University Vice Chancellor

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சுரப்பாவை நியமிக்க ஏற்பாடுகள் நடந்த போதே அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். தமிழகத்தைப் பற்றி எதுவும் தெரியாத சுரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டால், அண்ணா பல்கலைக்கழகம் சீரழியும் என்று நான் எச்சரித்தேன். ஆனால், சிறந்த கல்வியாளரான சுரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்துவார் என்று கூறி, அவரை ஆளுனர் மாளிகை நியமனம் செய்தது. அதன்பின் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் எந்த வகையிலும் முன்னேறவில்லை.

மாறாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் சீரழிந்து வருகிறது. அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் துணைவேந்தர் சுரப்பா, முக்கிய பதவிகளில் தமக்கு வேண்டியவர்களை நியமித்து பல்கலைக்கழகத்தை சீரழித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துறைத் தலைவர்கள், புலத் தலைவர்கள் ஆகியவற்றில் தமிழர் அல்லாத, பிற மாநிலத்தவர்களை சுரப்பா நியமித்திருக்கிறார். பாடத்திட்ட இயக்குனராக தமிழகத்தின் கலாச்சாரம் குறித்து எதையும் அறியாத வட மாநிலத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டாதால் தான், பகவத்கீதை பாடமாக அறிவிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்தது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் தன்னிச்சையான போக்கு கட்டுப்படுத்தப்படாவிட்டால், அப்பல்கலைக்கழகம் சீரழிவதை தடுக்க முடியாது. எனவே, ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மறு நியமனம் செய்யும் முடிவை கைவிடும்படி துணைவேந்தர் சுரப்பாவுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். ஆட்சிக் குழுவை வலுப்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதான் பார்ட் டைம் ஜாப்..! ஒரே இரவில் 18 செல்போன்களை பறித்த பலே திருடன்!!

0

இதுதான் பார்ட் டைம் ஜாப்..! ஒரே இரவில் 18 செல்போன்களை பறித்த பலே திருடன்!!

தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்கள் மேலும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பார்க் ஓட்டலில் இருந்து வெளியே வந்ந நபர்களிடம் திடீரென்று செல்போனை பறித்துக் கொண்டு இரண்டு இளைஞர்கள் வாகனத்தில் பறந்துள்ளனர். இரு சக்கர வாகனத்தை சினிமா பாணியில் பின்னாலேயே துரத்திச் சென்று இடித்துள்ளனர். இதனால் திருடர்கள் இருவரும் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தனர்.

வண்டியிலிருந்து கீழே விருந்தவர்களில் ஒருவன் மட்டும் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பித்துவிட்டான். கீழே விழுந்து சிறிது காயம்பட்டதால் ஓடமுடியாமல் ஒருவன் மட்டும் சிக்கினான். பிடிபட்ட திருடனை உடனடியாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், மாட்டிக் கொண்ட இளைஞர் பழை வண்ணார பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது வெளியானது. மேலும் மணலி பகுதியில் ஒரே இரவில் மட்டும் தொடர்ந்து 18 செல்போன்களை பறித்துள்ளதாகவும் வாக்குமூலத்தில் திருடன் பாலாஜி தெரிவித்துள்ளான். விசாரணையின் முடிவில் அவனிடம் இருந்து பதினெட்டு கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருடன் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து தப்பிச்சென்ற கார்த்தி என்பவனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ரோந்து போலீசார் இருக்கும்போதே இத்தனை அட்டூழியங்கள் நடேந்தேறி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவி காலி! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

0

தமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவி காலி! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

மறைமுக தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்டுள்ள மாநிலங்களவை தற்போது 245 உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் 12 நியமன உறுப்பினர்களும் அடங்குவர். அதாவது கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு மற்றும் தொழில் உள்ளிட்ட துறைகளில சிறந்து விளங்குபவர்களை குடியரசு தலைவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்து வைப்பார்.

இவர்களை தவிர்த்து மீதமுள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்ற மற்றும் நியமனம் செய்யப்படும் ஒவ்வொரு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

இவ்வாறாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைக்கான தேர்தலில் தமிழகத்திலிருந்து 6 உறுப்பினர்கள் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில் அ.தி.மு.க. சார்பில் 4 உறுப்பினர்களும், திமுக மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் தலா 1 உறுப்பினரும் அடங்குவர்.

அதிமுக உறுப்பினர்கள்:

1. விஜிலா சத்யானந்த்

2. மேட்டுப்பாளையம் செல்வராஜ்

3. முத்துகருப்பன்

4. சசிகலா புஷ்பா

திமுக உறுப்பினர்:

5. திருச்சி சிவா (தி.மு.க.)

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுப்பினர்:

 6. டி.கே.ரங்கராஜன்

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்த ஆறு  மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் வருகிற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் காலியாகும் இந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்களை நிரப்ப புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே 17 மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள உறுப்பினர்களுக்கும் சேர்த்து இந்த 55 இடங்களுக்கும் வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலுக்கு மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதலாக வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 

வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் மார்ச் 16 ஆம் தேதியாகும். இவ்வாறு தமிழகம் சார்பாக 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வெளியாகியுள்ள இந்த தேர்தல் அறிவிப்பில் அதிமுக சார்பாக 3 உறுப்பினர்களும், திமுக சார்பில் 3 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

சமூக ஆர்வலரின் மோசமான மறுபக்கம்! பெண்ணை தாக்கி மிரட்டியதால் போலீசில் புகார்! ( வீடியோ )

0

சமூக ஆர்வலரின் மோசமான மறுபக்கம்! பெண்ணை தாக்கி மிரட்டியதால் போலீசில் புகார்! ( வீடியோ )

இயற்கை ஆர்வலர் பியுஷ் மனுஷ் மீது வாடகை தராமல், வீட்டு ஓனரை தாக்கியதாக காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் இயற்கை எதிராக நடக்கும் சம்பவங்களில் களத்தில் குரல் கொடுத்து வருபவர் பியுஸ். ஏரிகளை தூர்வாறுதல், கிணுறுகளை சீரமைத்தல், சாக்கடை கால்வாய்களை சுத்தப்படுத்துதல் போன்ற பல்வேறு சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சமூக வலைத் தளங்களில் பிரபலமாக இருக்கும் பியுஸ், தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வாடகை தராமல் வம்பிழுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இவர் மீது ஏற்கனவே சில சர்ச்சையான நிகழ்வுகள் நடந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டில் பாஜக அலுவலகத்தில் சென்று ஆர்வகோளாறால் அடிவாங்கிய சம்பவமும் உண்டு. முன்பு அரசின் திட்டத்திற்கு எதிராக போராடியதால் சிறையில் வைத்து அடித்த சம்பவம், நாகர்கோவில் போத்தீஸ் புதிய கிளையை திறந்தபோது கடைக்கு முன்பு இருந்த மரம் வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை பெரிதுபடுத்தாமல் இருக்க 10 லட்சம் பணம் வாங்கியதாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், பியுஷ் மானுஷ் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் குடும்பத்தோடு புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. புகாரில், வீட்டு வாடகை கேட்டால் தரமறுத்ததுடன் வீட்டு ஓனரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் “அட மானங்கெட்டவனுங்களா இதுக்கு எதுக்குடா சமூக ஆர்வலர்னு சுத்திட்டு இருக்கீங்க’ என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை! மீண்டும் மறக்காமல் கவனத்துடன் பதிவு செய்த டிரம்ப்..!

0

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை! மீண்டும் மறக்காமல் கவனத்துடன் பதிவு செய்த டிரம்ப்..!

இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு முப்படைகளின் மரியாதை அளித்து பிரதமர் மோடி மிகச் சிறப்பானை வரவேற்பை அளித்தார். பின்னர் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று காந்தியின் நினைவுகளை பார்வையிட்டு, அங்கிருந்த ராட்டையை சுற்றினார். சபர்மதி ஆசிரம குறிப்பில் மோடியை பற்றி எழுதினார் தவிர காந்தியை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார்.

பின்னர், பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்வில் சிறப்புரை ஆற்றினார். இதனையடுத்து டெல்லி ஆக்ராவை சுற்றி பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். இரவு ஓய்வு டெல்லியிலேயே முடிந்தது. இரண்டாம் நாளான இன்று, ஜனாதிபதி மாளிகைக்கு வந்த டிரம்ப்புக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, தனது மனைவி மெலனியாவுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து ராஜ்க்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் டிரம்ப் மற்றும் அவரது மனைவியும் மலர் வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், மரக்கன்று ஒன்றையும் இருவரும் சேர்ந்து நட்டுவைத்தனர். காந்தியின் நினைவிடத்திற்கு செல்பவர்கள் பார்வையாளர்களின் குறிப்பேட்டில் காந்தியின் கடந்தகால புகழை பற்றியோ அல்லது அவரின் போராட்டத்தை பற்றியோ எழுதுவது மரபு. சபர்மதி ஆசிரமத்தில் காந்தியை பற்றி குறிப்பிட தவறிய டிரம்ப், ராஜ்காட்டில் அவரது நினைவிடத்தில் மறக்காமல் பதிவு செய்துள்ளார். குறிப்பில்; “மகாத்மா காந்தியின் எண்ணப்படி இறையாண்மை கொண்ட மற்றும் அற்புதமான இந்தியாவுடன் அமெரிக்க மக்கள் எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள்’ “இது மிகப்பெரிய கெளரவம்’ என்று எழுதினார்.

டெல்லியில் 144 : வன்முறையில் இறந்த காவலரின் குடும்பம் அநாதையாக நின்ற கொடூரம்!

0

டெல்லியில் 144 : வன்முறையில் இறந்த காவலரின் குடும்பம் அநாதையாக நின்ற கொடூரம்!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நேற்று பயங்கரமான வன்முறை வெடித்தது. இன்னொரு பக்கம் அமெரிக்க அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வடகிழக்கு டெல்லியில் நேற்று போராட்டம் தீவிரமடைந்து வன்முறையானது. மஜ்பூரில் ஏற்பட்ட கல்லெறி சம்பவத்தால் ரத்தன் என்ற டெல்லி காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கலவரத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும், துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. சிஏஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களுக்கும் கலவரம் அதிகரித்தது. இதனையடுத்து அங்கிருந்த வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டு கலவரம் உச்சகட்டத்தை அடைந்தது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்ததோடு, வன்முறையில் இறந்த காவலருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருந்தார். போராட்டத்தில் சிலர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மஜ்பூர், ஜாப்ராபாத் ஆகிய பகுதிகளில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் ஊர்வலமாக நடந்து வந்த போது இரு கூட்டத்திற்கும் இடையே கலவரம் வெடித்தது. சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய சட்டத்தை திரும்ப பெறக்கோரிய சம்பவத்தில் இறந்த ரத்தன் லால் என்ற காவலரின் குடும்பம் அநாதையாகி உள்ளது. அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் எதிர்காலம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் டெல்லியில் அதிர்ச்சியும், சோகமும் ஏற்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நடைபெறுவதாலும், மீண்டும் வன்முறை நடக்காமல் இருக்கவும் வடகிழக்கு டெல்லி பகுதிகளான மஜ்பூர், கர்தாம்பூரி, தயால்பூர், சாந்த்பாக் போன்ற இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு விசாரணை ஆணையம் அதிரடி உத்தரவு

0

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்ய ரஜினிக்கு ஒருநபர் விசாரணை ஆணையம் சமீபத்தில் சம்மன் அனுப்பியது என்பது தெரிந்ததே

இந்த சம்மனை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் தனக்கு விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு ஒன்றை அளித்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் விசாரணையின் முடிவில் ரஜினியின் கோரிக்கை ஏற்கப்படுவதாகவும் அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் எழுத்துமூலம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அவருடைய வழக்கறிஞர் அவரிடம் ஒப்படைப்பார் என்றும் விசாரணை ஆணையத்தின் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது

மூடி சீலிடப்பட்ட கவரில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு ரஜினிகாந்த் இன்னும் ஓரிரு நாளில் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபர் கைது! 350 ஆண்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம்..!!

0

பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபர் கைது! 350 ஆண்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம்..!!

நெல்லை மாவட்டம் பனகுடி ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண் குரலில் பேசி பல ஆண்களிடம் பணத்தை அபகரித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இணையத்தில் இணையத்தில் லொகாண்டோ என்ற வேலைவாய்ப்பு அப்ளிகேஷன் மூலம் தனது ராஜதந்திர ஏமாற்று வேலையை நடத்தியுள்ளார் ரீகன். இவரது முழுப்பெயர் வள்ளல் ராஜ்குமார் ரீகன் என்று கூறப்படுகிறது. லொகாண்டோ ஆப் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் தனக்கான வேலையை தேடி வருகின்றனர். இதை தனக்கு சாதகமாக ரீகன் பயன்படுத்தியுள்ளார்.

வேலை தேடுவோரை குறிவைத்து பெண் பாலியல் ஆசைகளை தூண்டியுள்ளார். ஹாய் அலோ நான் பிரியா பேசுறேன்” என்று பெண் குரலில் பேசி பலரை மயக்கியுள்ளார். வழக்கம்போல ஆண்களிடம் பெண் குரலில் மிமிக்ரி செய்து வந்த ரீகன், சென்னை மதுரவாயலைச் சேர்ந்த உதயராஜ் என்பவரிடம் தனது கைவரிசையை காட்டியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன உதயராஜ் மதுரவாயல் காவல் நிலையத்தில் ரீகன் மீதான புகார் ஒன்றை கொடுத்தார்.

அந்த புகாரில் கூறப்படுவதாவது:
சமீபத்தில் பிரியா என்ற பெண்மணி தனக்கு போன் மூலம் அறிமுகம் ஆனார். இருவரும் தொடர்ந்து போனில் பேசி செக்ஸ் சாட் வரை சென்றது. தற்போது பிரியா என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார். பணம் தரவில்லை என்றால் என்னுடன் சாட் செய்ததை பொதுவில் பதிவிட்டு மானத்தை வாங்குவேன் என்றும் பயமுறுத்துகிறார் என்று உதயராஜ் கூறியிருந்தார்.

மேலும், நான் வேலை தேடும் காரணமாக லொகான்டோ ஆப்- ல் பதிவு செய்திருந்தேன். அந்த இணையத்தில் செக்ஸ் சாட் செய்ய விருப்பமா என்று ஒரு தகவல் ஓபன் ஆனது. இதனையடுத்து அந்த நம்பரில் இருந்து பிரியா என்ற பெண்மணி செக்ஸ் பற்றி பேசினார். இவ்வளவு பணம் கொடுத்தால் போனில் பேசலாம், செக்ஸ் சாட் செய்யலாம் என்று கூறினார். இதனால் 100 ரூபாய் பணம் அவருக்கு அனுப்பிய உடனே ஒரு நிர்வாண புகைப்படம் ஒன்று வந்தது. பின்னர் செக்ஸ் வீடியோவுக்காக 1500 ரூபாய் கட்டச் சொன்னார். என்னால் முடியாது என்று கூறி அந்த நம்பரை பிளாக் செய்துவிட்டேன். எனக்கு மீண்டும் அதே நபரிடம் இருந்து மீண்டும் மிரட்டல் வந்தது. பின்னர் இது சம்பந்தமாக போலீசிடம் புகார் கூறியதாக தெரிவித்தார்.

உதயராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், ரீகன் கைது செய்யப்பட்டார். பின்னர்தான் விசாரணையில் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 2017 ல் இருந்து இதுபோன்ற ஏமாற்று வேலையில் ஈடுபட்டு 350 ஆண்களையும் ஏமாற்றிய சம்பவம் வெளியே வந்தது. இதனையடுத்து வள்ளல் ரீகன் சிறையில் அடைக்கப்பட்டார். தைரியமாக புகார் கொடுத்த உதயராஜை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர்.

யூடியூப் பிரபலம் இயக்கும் முதல் படத்தில் அருள்நிதி!

0

எருமசாணி என்ற யூடியூப் சேனல் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றது என்பதும் குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்களிடையே இந்த சேனல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே. எருமசாணி விஜய் மற்றும் ஹரிதா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் எருமசாணி விஜய் ஒருசில படங்களில் சமீப காலமாக நடித்து வந்த நிலையில் தற்போது ஒரு படத்தை இயக்கவுள்ளார். முதல் முறையாக எருமசாணி விஜய் இயக்கும் படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படம் ஒரு கல்லூரி மாணவ மாணவிகள் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்றும் சமீபத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் பாதிப்பு தான் இந்த கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அருள்நிதி கல்லூரி மாணவராக நடிக்கிறார். இந்த படத்தின் கதை அவரை மிகவும் கவர்ந்ததால் உடனடியாக அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க விருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது

கட்சி கூட்டத்திற்கு அழைத்து வந்து பணம் தராததால் வாழைத்தாரை தூக்கிச் சென்ற திமுகவினர்! மதுரையில் ருசிகரம்!!

0

கட்சி கூட்டத்திற்கு அழைத்து வந்து பணம் தராததால் வாழைத்தாரை தூக்கிச் சென்ற திமுகவினர்! மதுரையில் ருசிகரம்!!

திமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராஜ கண்ணப்பன் மீண்டும் திமுக கட்சியில் இணையும் விழா மதுரையில் நடைபெற சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு ருசிகரமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

மதுரையில் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் பேசுகையில் கூட்டம் கலந்த வெறிச்சோடி காணப்பட்டது. வெறும் சேர்களின் மத்தியில் பேசிய வீடியோ இணையத்திலும் பரவியது. மதுரை பகுதியில் திமுக கட்சி பலம் இழந்து போனதன் காரணத்தை அறிந்து கொண்ட திமுக, கட்சியில் செல்வாக்கு உடைய முன்பு கட்சியை விட்டு விலகியவர்களையுடம் தந்திரமாக கட்சியில் இணைத்து வருகின்றனர். கடந்தமுறை மதுரை திமுக நிர்வாகிகள் ஸ்டாலின் பேச்சுக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், மீண்டும் அதே போன்ற குழப்பம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக சரியா வழியை திமுக தேர்ந்தெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திருச்சியில் இருந்து ஆட்களை வரவழைக்க மதுரை மற்றும் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒத்தக்கடையில் பொதுக்குழு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ ராஜகண்ணப்பன் கட்சியில் இணையும் விழாவை அவரது சொந்த மாவட்டமான சிவகங்கையில் விழா நடைபெற வாய்ப்பில்லாமல் போனது.

இதனையடுத்து இணைப்பு விழாவை மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு கட்சி உறுப்பினர்களுக்கு; பிரியாணி, குவாட்டர் மற்றும் பணம் தருவதாக கூறி கூட்டத்திற்கு ஆட்களை வரவழைத்தனர். விழாவிற்கு வந்தால் ஒரு ஆளு 300 ரூபாய் தரப்படும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. கட்சி கூட்டம் முடிந்தபோது கடைசியில் 100 ரூபாய் மட்டுமே உடன்பிறப்புகளுக்கு வழங்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த திமுக கட்சியினர் சிலர் விழாவை சிறப்பிக்க வைத்திருந்த தோரணத்தில் இருந்த வாழைத்தாரையும், பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் லாவகமாக அள்ளிச் சென்றனர். இந்த நகைச்சுவை சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மீம்ஸ்களாக உருவெடுத்தது. ஆம் அவர்களுக்கென்று ஒரு தனி வரலாறு உண்டு என்பதுபோல் பல்வேறு விதமான விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தன்னை பணம் தருவதாக கூறி ஏமாற்றியதால், ஆவேசமாக வாழைத்தாரை தூக்கிக் கொண்டு மதுரை மாட்டுத்தாவணி அருகிலுள்ள காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து பணமாக்கினர். திமுக கூட்டத்தில் நடந்த, ருசிகரமான சம்பவம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. முன்னாள் எம்எல்ஏ ராஜ கண்ணப்பன் அதிமுக மற்றும் திமுக வில் மாறி இணைந்து அரசியல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.