Home Blog Page 5759

எனது பள்ளிக்காலத்தில் இருந்து இதைதான் சொல்லி வருகிறார்கள்!மீண்டும் ரஜினியை சீண்டும் மூன்றாம் கலைஞர்!

0

எனது பள்ளிக்காலத்தில் இருந்து இதைதான் சொல்லி வருகிறார்கள்!மீண்டும் ரஜினியை சீண்டும் மூன்றாம் கலைஞர்!

நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே ஒரு நடிகர் அரசியலுக்கு வருவதாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ரஜினியை மறைமுகமாக கேலி செய்துள்ளார்.

செல்லும் இடம் எல்லாம் ரஜினியை சீண்டிப் பார்ப்பதற்காகவே திமுகவில் ஒருவரை வைத்துள்ளார்கள் என்றால் அது மிகையில்லை. அந்த ஒருவர் வேறு யாரும் இல்லை. உடன்பிறப்புகளால் மூன்றாம் கலைஞர் என அன்பாக அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலின்தான். சமீப வருடங்களில் அரசியலுக்கு வந்து கட்சிக்குள் அதிகாரமிக்க பதவிகளுள் ஒன்றைப் பெற்றுள்ள அவர் கட்சி கூட்டங்களில் முன்னிலைப் படுத்தப் பட்டு வருகிறார்.

ரஜினி சமீபத்தில் பேசிய துக்ளக் பொன்விழா பேச்சு மற்றும் குடியுரிமைத் திருத்த சட்டம் பற்றிய பேச்சு ஆகியவற்றைக் கலாய்த்து சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வந்த அவர் இப்போது பொது மேடைகளிலும் ரஜினியை சீண்ட ஆரம்பித்துள்ளார்.

எனது பள்ளிக்காலத்தில் இருந்து இதைதான் சொல்லி வருகிறார்கள்!மீண்டும் ரஜினியை சீண்டும் மூன்றாம் கலைஞர்!

அந்தவகையில் இன்று வடலூரில் நடைபெற்ற திமுக விழாவில் கலந்து கொண்ட அவர் மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர் ‘நான் பள்ளி படிக்கும் போதில் இருந்தே ஒருவர் அரசியலுக்கு வருவதாக சொல்லிக் கொண்டுள்ளார். அப்படியே அவர் இப்போது வந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை’ எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட ரஜினி ரசிகர்கள் சிலர் ‘என்ன செய்வது உங்களைப் போல அவருக்கு அப்பாவும் தாத்தாவும் இல்லையே!’ என கேலி செய்துள்ளனர்.

282 கோடி ரூபாய் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்த கிரிக்கெட் வீரர்!ரசிகர்கள் அதிர்ச்சி!

0

282 கோடி ரூபாய் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்த கிரிக்கெட் வீரர்!ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான மைக்கேல் கிளார்க் தனது மனைவி கைலியை விவாகரத்து செய்ய 192 கோடியை ஜீவனாம்சமாகக் கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டரான மைக்கேல் கிளார்க் கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையோடு சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டார். அப்போது அடிக்கடி ஏற்படும் காயங்களாலும் குடும்பத்துடன் நேரம் செலவிடவுமே ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 2012 ஆம் ஆண்டு கைலி என்பவரை மணந்தார். அவர்களுக்கு  4 வயதான கெல்ஸி லீ என்ற பெண் குழந்தை உள்ளார்.

282 கோடி ரூபாய் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்த கிரிக்கெட் வீரர்!ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இப்போது அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இது சம்மந்தமாக இருவரும் தி ஆஸ்திரேலியன் நாளிதழுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ‘இருவரும் மனப்பூர்வமாக இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்கள் மகளின் எதிர்காலத்துக்காக பொறுப்பேற்றுள்ளோம்’ எனக் கூறியுள்ளனர்.

விவாகரத்துக்குப் பிறகு மகள் கெல்ஸி லீ தந்தை கிளார்க்குடன் இருப்பார் எனத் தெரிகிறது. இந்த விவாகரத்துக்காக கிளார்க் தனது மனைவிக்கு 40 மில்லியன் அமெரிக்கன் டாலர் ஜீவனாம்சமாகக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு 282 கோடி ரூபாய் ஆகும். இந்த விலையுயர்ந்த விவாகரத்தை ஆஸ்திரேலிய மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதுவரை வர் 115 டெஸ்ட் போட்டிகளிலும், 245 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள கிளார்க் 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்குத் தலைமை தாங்கி கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார்.

ஏய் பொண்டாட்டி… அவ ஒன்னும் கெட்டவ இல்லடி; சீமானுடன் விஜயலட்சுமி இருக்கும் வைரல் வீடியோ!!

0

ஏய் பொண்டாட்டி… அவ ஒன்னும் கெட்டவ இல்லடி; சீமானுடன்  விஜயலட்சுமி இருக்கும் வைரல் வீடியோ!!

 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நடிகை விஜயலட்சுமி வீடியோ எடுப்பது போலவும் சீமான் சினிமா வசனங்களை பேசுவது போலவும் எடுக்கப்பட்டுள்ளது.

சீமான் மீதான பாலியல் புகாரில் 700 ஆதாரங்களை வைத்துள்ளதாக முன்பு விஜயலட்சுமி கூறியிருந்தார் தற்போது சில புகைப்படங்களும், வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். புதிய வீடியோவில் சினிமா டயலாக் பேசி காண்பிப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பழைய வீடியோவில் சீமானுக்கு கேக் ஊட்டுவது போல காட்சிகள் இருந்தன. தன்னைக் காதலித்து விட்டு திருமணம் செய்யாமல் சீமான் ஏமாற்றியதாக கடந்த காலத்தில் விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார். இது காலப்போக்கில் அப்படியே மறைந்து போய் விட்டது.

மேலும், மதுரையில் அவருடன் நான் 15 நாட்கள் குடும்பம் நடத்தியுள்ளேன் என்றும், 3 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்து விட்டு என்னைத் தூக்கிப் போட்டு விட்டார் சீமான் என்று விஜயலட்சுமி முன்பு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானுடன் இருப்பது தொடர்பாக விஜயலட்சுமி வெளியிட்டுள்ள படங்களால் நாம்தமிழர் கட்சி தொண்டர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. திராவிட கழகத்தில் இருந்து பல்டி அடித்து நாம்தமிழர் கட்சியின் அரசியல் பயணத்தில் இருக்கும் சீமானுக்கு நடிகையின் மூலம் சோதனை புதிய வந்துள்ளது.

கடந்த காலங்களில் தமிழ் கடவுளை அநாகரிகமாக விமர்ச்சித்த சீமான், 2009 காலகட்டத்திற்கு பிறகு திராவிட இயக்க அரசியலை தவிர்த்து தமிழ் அரசியலில் புதிய பயணத்தை தொடர்ந்தார். சமீபத்தில் தஞ்சை கோயிலில் சீமான் வழிபட்ட புகைப்படங்களுடன் பழைய வீடியோவுடன் இணைத்து சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தன. இந்திலையில் , நடிகை விஜயலட்சுமி நேரடி காணொளியில் சீமானை பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அதில், நான் ஒரு சிவபக்தை என்றும் சிவனைப்பற்றி பேச சீமானுக்கு தகுதி இல்லை என்றும் காட்டமாக பேசியிருந்தார். இதனையடுத்து இன்று சீமானை பழிவாங்கும் விதமாக விஜயலட்சுமி சில வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோக்களை பேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டதால் சமூக வலைதளங்களில் மிகவேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமாவரத்தில் வைத்து ரஜினியை அடித்தாரா எம் ஜி ஆர்?ரகசியத்தை பகிர்ந்துகொண்ட மெய்க்காபாளர்!

0

ராமாவரத்தில் வைத்து ரஜினியை அடித்தாரா எம் ஜி ஆர்?ரகசியத்தை பகிர்ந்துகொண்ட மெய்க்காபாளர்!

ரஜினிகாந்தை எம் ஜி ஆர் தனது ராமாவரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாக சொல்லப்படும் செய்தியை எம்ஜிஆரின் பாதுகாவலர் கே பி ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

ரஜினிகாந்த் 1980 களில் நடிகை லதாவை ஒருதலையாக காதலித்ததாகவும், அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர். அவரை ராமாவாரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாகவும் வாய்வழிச் செய்தியாகவும் கிசுகிசுக்களாகவும் பல ஆண்டுகளாக ஒரு தகவல் உலாவந்து கொண்டு இருக்கிறது..அந்த லதாவுடன் சேர முடியாத காரணத்தால் அதே பெயருடைய மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ராமாவரத்தில் வைத்து ரஜினியை அடித்தாரா எம் ஜி ஆர்?ரகசியத்தை பகிர்ந்துகொண்ட மெய்க்காபாளர்!

இது ரஜினியின் அரசியல் பிரவேசத்தைக் கெடுப்பதாக செய்யப்படும் அவதூறு என ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த செய்தியின் உண்மைத் தன்மையை எம் ஜி ஆரிடம் பாதுகாவலராக இருந்த கே பி ராமகிருஷ்ணன் என்பவர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் ‘அது போன்ற ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. ஆனால் கோவையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கட்சி பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஒரு தொண்டரை தோட்டத்துக்கு அழைத்து எம் ஜி ஆர் அடித்தார்’ எனக் கூறி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதே போல இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்ட நடிகை லதாவும் ஒரு நேர்காணலில் இதை மறுத்துள்ளார். அதில் ‘பாவம் ரஜினியைப் பற்றி வேறு எதுவுமே சொல்ல முடியாது என்று நினைக்கிறார்கள் போல. அவரைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும் அது பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை’ என்று  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரிசையாகக் கலக்கும் இளம்வீரர்!திறக்குமா இந்திய அணியின் கதவு?

0

வரிசையாகக் கலக்கும் இளம்வீரர்!திறக்குமா இந்திய அணியின் கதவு?

மும்பை அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடும் சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

தற்போது மாநில அணிகள் பங்கேற்கும் ரஞ்சி போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு வீரராக சர்பராஸ் கான் உருவாகி வருகிறார். சர்பராஸ் கான் என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பழக்கப்பட்டது. பெங்களூர் அணிக்காக ஐபிஎல்-ல் சில போட்டிகளிலும் இந்திய அணிக்காக சில போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் மோசமான பார்ம் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

முன்னதாக உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் முச்சதம் அடித்த அவர், அடுத்த போட்டியில் இமாச்சல பிரதேசம் அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 226 ரன்கள் விளாசினார். இதனால் அவர் மீதான கவனம் உருவான நிலையில் தற்போது இமாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம அடித்துள்ளார். இதன் மூலம் நான்கு போட்டிகளில் 800 ரன்களை சேர்த்துள்ளார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனக்காக வாய்ப்புக்காக கதவைத் தட்ட ஆரம்பித்துள்ளார். கீப்பிங் செய்யும் திறமையும் இருப்பதால் ரிஷப் பண்ட் மற்றும் சஹா ஆகியோருக்கான மாற்று வீரராக இவர் தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

ஆதீனத்தை நடந்து செல்ல வைத்த திராவிடர் கழகத்தினர்:பல்லக்குப் போராட்டம் வெற்றி!

0

ஆதீனத்தை நடந்து செல்ல வைத்த திராவிடர் கழகத்தினர்:பல்லக்குப் போராட்டம் வெற்றி!

பட்டினப்பிரவேசம் என சொல்லப்படும் பல்லக்கில் வைத்து ஆதீனத்தைத் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சிக்கு எதிராக போராடி பெரியாரியவாதிகள் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் மடத்தின்  27 ஆவது ஆதீனகர்த்தராக மாசிலாமணி தேசிக சம்மந்தர் பொறுப்பேற்றுள்ளார். இதனை முன்னிட்டு இவர் அந்த ஆதினத்தின் ஆளுகைக்குள் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பனந்தாள் வந்து வழிபட்டார். அவர் செல்லும் கோயில்களில் எல்லாம் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பட்டினப் பிரவேசம் எனப்படும் பல்லக்கில் வைத்து திருவீதிகளை சுற்றி கோயிலுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வாறு சென்ற அவர் மக்களுக்கு ஆசி வழங்கினார்.

இதன் அடுத்த கட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் பிப்ரவரி 12ஆம் தேதி பட்டினப் பிரவேசம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மனிதனை மனிதனே சுமந்து செல்லும் இந்நிகழ்வுக்கு திராவிடர் கழக தலைவர் கி வீரமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து திருப்பனந்தாள் கடைவீதிகளில் திராவிடர் கழக அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள், நீலப்புலிகள் அமைப்பினர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த செய்தி அறிந்த ஆதீனம் நடந்தே செல்வதாகவும் பல்லக்கு வேண்டாம் எனவும் தெரிவித்தார். இந்த தகவல் காவல் துறையினர் மூலம் போராட்டக்காரர்களை அடைந்தது. போராட்டக்காரர்கள் இதைக் கேட்டு ‘பெரியார் வாழ்க, அம்பேத்கர் வாழ்க, ஆதீனத்துக்கு நன்றி’ என முழக்கமிட்டுக் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருப்பனந்தாள் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது.

தனது வீட்டையே தானமாக கொடுத்த பாடகர்; வீடியோவில் இருக்கும் உண்மை தெரிந்தால் வியந்து போவீர்கள்!

0

தனது வீட்டையே தானமாக கொடுத்த பாடகர்; வீடியோவில் இருக்கும் உண்மை தெரிந்தால் வியந்து போவீர்கள்!

இந்திய திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பாடி மக்கள் மனதை வென்றவர் எஸ்.பி.பி. ஒரே நாளில் 17 பாடல்கள் 20 பாடல்களை பாடி கின்னஸ் சாதனைகளை படைத்த சாதனையாளர்.
இவரின் பாடல் இல்லாத படங்களே இல்லை என்பது தமிழ் சினிமாவின் கடந்தகால வரலாறாகும். திரைப் பிண்ணனி பாடகர் மற்றும் நடிகராக இருந்துவரும் எஸ்பிபி ஆந்திரா நெல்லூரை பூர்வீகமாக கொண்டவர்.

எஸ்பிபி சினிமா பாடகர் என்பது ஒரு புறம் இருந்தாலும், அதீத கடவுள் பக்தியும் ஆன்மீகத்தின் மீதும் பெரிதும் நம்பிக்கை கொண்டவர். தற்போது சென்னையில் வசித்து வருவதால் இவரின் சொந்த ஊரில் பரம்பரை வீட்டை வேதபாட சாலை அமைப்பதற்காக காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தானமாக கொடுத்துள்ளார்.

முறைப்படி வீட்டில் பூஜை செய்யப்பட்டு தானமாக ஒப்படைக்கப்பட்டது. பூஜையின் போது மடாதிபதிகளின் முன் ஆன்மீக பாடலை பாடியது இணையத்தில் வெளியாகியுள்ளது. இவரின் கலைத்துறை சேவைக்காக மத்திய அரசு “பத்ம பூஷன்” வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆண்டவனே செய்தாலும் தவறு தவறுதான்! அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேட்டி..!!

0

ஆண்டவனே செய்தாலும் தவறு தவறுதான்! அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேட்டி..!!

சமீபத்தில், சினிமா துறையில் பைனான்ஸ் செய்துவரும் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரி சோதனையின் மூலமாக பலகோடி ரூபாய் கைப்பற்றியது வருமான வருமான வரித்துறை. அன்புச்செழியன் அதிமுகவின் மதுரை மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பதவியில் இருந்து வந்தார்.

விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை குறித்து, அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது; சற்றும் யோசிக்காமல் விஜய் மட்டுமல்ல “ஆண்டவனே தவறு செயதாலும் தவறு தவறுதான்” என்று ஒரு போடு போட்டார். தவறு செய்பவர்களுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்றும், அதுபோன்ற நடவடிக்கை விஷயங்களில் எங்கள் அரசு தலையிடாது என்றும் கூறினார்.

அமைச்சரின் பேட்டி சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் காதுகளுக்கு சென்றாகவும், அதற்கு அவர் கோடி கோடியாய் அரசியலில் சம்பாதித்து விட்டு மற்றவரை பற்றி பேசுவதா..? என்று கடுப்பாகியதாக தகவல் வந்துள்ளது. கடந்த சில நாட்களாக வரிமான வரிசோதனை தமிழகத்தில் திடீரென பல இடங்களில் நடைபெறுகிறது. இதனால் பல அரசியல்வாதிகள், பிரபல சினிமா நடிகர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

’கோவிட் 19’ தாக்குதல்:ஒரே நாளில் 242 பேர் பலி! சீனாவில் மீண்டும் பதற்றம்!

0

’கோவிட் 19’ தாக்குதல்:ஒரே நாளில் 242 பேர் பலி! சீனாவில் மீண்டும் பதற்றம்!

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 242 பேர் பலியாகியுள்ள நிலையில் பதற்றம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 1115 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 47000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மட்டும் சீனாவில் இந்த நோயால் நேற்று இறந்தவர்களின் எண்ணிக்கை 97 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தொற்று வெகு விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நோய் தொற்றால் கொரோனா பற்றி உலகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரே இறந்துள்ளதால் மக்கள் முகமூடி அணிந்தே வெளியெ செல்கின்றனர். சீனா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொரோனா என்ற பெயரே பீதியைக் கிளப்பி வருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு கோவிட் 19 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலால் நேற்று ஒரே நாளில் 242 பேர் பலியாகியுள்ளனர். இதை சீன அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சீனாவில் மீண்டும் பீதி அதிகமாகியுள்ளது. இதனால் கோவிட் 19 நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1300 ஐ தாண்டியுள்ளது.

தாலி கட்டும் முன்பே தாயான பெண்! குழந்தையை கொன்று நாடகமாடியது அம்பலம்..!!

0

தாலி கட்டும் முன்பே தாயான பெண்! குழந்தையை கொன்று நாடகமாடியது அம்பலம்..!!

விருதுநகர் மாவட்டம் திருமால் புதுப்பட்டியை சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் குழந்தை கடந்த 5 ஆம் தேதி மர்மமான முறையில் தண்ணீர் மூழ்கி இறந்து கிடந்தது. குழந்தையை தனது கணவர் அமல்ராஜ்தான் கொன்றார் என சுஷ்மிதா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் துரிதமான விசாரணையை தொடங்கினர். குழந்தை இறப்பு பற்றி அமல்ராஜ் குடும்பத்தினரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் சுஷ்மிதா குழந்தையை கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது, இச்சம்பவத்தை அறிந்த குடும்பத்தினர் மட்டுமல்லாது காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளிக் கூடத்தில் படித்த போது அமல்ராஜினுடன் பழக்கம் ஏற்பட்டு சுஷ்மிதா கர்ப்பமான காரணத்தால் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திவிட்டனர். இதையடுத்து இருவருக்கும் உடனடியாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தாலி கட்டும் போது சுஷ்மிதா 7 மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு பிறகு இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகிய சில மாதங்களிலே குழந்தை பிறந்ததால் அமல்ராஜிக்கு சந்தேகம் எழுந்தது.

மேலும், சுஷ்மிதா தனது உறவுக்காரர் ஒருவருடன் பழகிய சம்பவமும் அமல்ராஜ் காதுகளில் வந்து விழ, அவருடைய சந்தேகம் மேலும் வலுத்தது. இதன் விளைவாக அந்த குழந்தையை தொடாமல் புறக்கணித்து வந்தார். குழந்தையை கொன்றுவிடலாம் என்று கணவன் மனைவி இருவரும் திட்டம் தீட்டி, பாத்ரூம் பக்கெட்டில் நீரில் குழந்தையின் தலையை அமுக்கி கொன்றுள்ளனர்.

குழந்தை இறந்ததாக குடும்பமே நாடகமாடியது இறுதி விசாரணையில் துப்பு துலங்கியது. இந்த கொலைக்கு பிண்ணனியில் இவர்களின் குடும்பமே இருந்த காரணத்தால் மொத்த பேரையும் காவல்துறை கைது செய்தது. பச்சிளம் குழந்தையை கொல்ல இவர்களுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ என்று பலரும் கொந்தளித்து போயுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாக இந்தியாவில் பெருகி வருவது வேதனையான ஒன்று.