Home Blog Page 5783

காதலனின் பிறந்தநாள் கொண்டாட்டம்; இணையத்தில் வைரலாகும் அஜால் குஜால் வீடியோ! நடந்தது என்ன..?

0

காதலனின் பிறந்தநாள் கொண்டாட்டம்; இணையத்தில் வைரலாகும் அஜால் குஜால் வீடியோ! நடந்தது என்ன..?

கடந்த சில நாட்களாக ஒரு இளம் ஜோடியின் ஆபாச வீடியோ ஒன்று யாரோ ஒருவரால் பதிவேற்றப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ஆஷன் என்னும் நபர் தனது பிறந்த நாளை தனது காதலியுடன் வெகு சிறப்பாக கொண்டாடினர்.

பல நாட்களாக காதலில் நனைந்த இளம் ஜோடி வயது கோளாரின் காரணமாக, நெருக்கமாக இருந்து தன் பாலியல் ஆசையை தீர்த்துள்ளனர். இருவருக்கும் இடையில் நடந்த அந்தரங்கத்தை ஆஷன் வீடியோ எடுத்துள்ளார் பின்பு, சந்துணிக்கும் ஆஷனுக்கும் இடையே ஏதோ ஒரு வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது.

தனது காதலிக்கு விலை உயர்ந்த ஐபோனை அன்பு பரிசாக வாங்கி கொடுத்ததை வீடியோவில் ஆஷன் சிங்கள மொழியில் பேசுவதாக கூறப்படுகிறது? இருவருக்கும் நடந்த சண்டையில் தனியாக பிரிந்துள்ளனர். காதலியின் மீதுள்ள கோபத்தை தீர்க்க, பழிவாங்கும் நோக்கத்தோடு தன்னுடன் தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை ஆஷன் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் பரவியது. எந்த சம்பவம் நடந்தாலும் அதை மீம்சுகளாக மாற்றும் இணையதள குழுக்களிலும் இந்த பிறந்தநாள் வீடியோ மீம்சுகளாக பரவியது. இது சம்பந்தமாக, வீடியோவை வெளியிட்ட ஆஷன் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் காதலி வீடியோ சம்பவத்தால் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தின் நீட்சியாக ராம்குமார் என்பவர் தனது டுவிட்டரில் சந்துணியை தெலுங்கு பெண் என்று கூறி அமித்சா, ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை குறிப்பிட்டு டுவிட் செய்துள்ளதாக வீடியோக்கள் மூலமாக சிலர் பதிவு செய்துள்ளனர். இளம் பருவத்தில் இது போன்று கெட்டு அழிவதால் எதிர்காலம் பாதிப்பதை கூட சிந்திக்காமல் இப்படி தவறு செய்யலாமா..? என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆஷன் மற்றும் சந்துணி இருவரும் இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள் என்று கூறப்படுகிறது.

சமூகத்தில் நடக்கும் நல்ல செயல்களை அறிந்து கொள்ளவும், அன்றாட செய்தி, அறிவியல், கல்வி, வணிகம் மற்றும் புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக இருந்த சமூக வலைதளங்கள் தற்போது தவறான செயல்களை வேகமாக பரப்புவதற்கு பயன்படுத்துவது வேதனைக்குரிய செயலாகும்.

சொன்ன சொல்லை காப்பாற்றாத கமல்: தர்ஷனின் அதிர்ச்சி வீடியோ

0

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போது தன்னுடைய ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தர்ஷன் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக கமலஹாசன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கான ஒப்பந்தத்தையும் தர்ஷனிடம் அவர் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக கமல்ஹாசனிடம் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்த தர்ஷன் எந்தவித அழைப்பும் வராததை அடுத்து தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஒரு மிகப்பெரிய நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் முழு விபரங்கள் மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்றும் தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தர்ஷன் நடிக்கும் படத்தை தயாரிக்க போவதாக கமல் தான் கூறிய சொல்லை காப்பாற்றாததால் தான் தர்ஷன் வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக கூறப்படுகிறது. ஆனால் கமல் தயாரிப்பில் தர்ஷன் நடிப்பில் உருவாகும் படம் விரைவில் தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

https://www.instagram.com/p/B7vx1j1h4jQ/?utm_source=ig_web_copy_link

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை கொண்டு வந்து வெளுக்க வேண்டும்! திருமண விழாவில் ஸ்டாலின் டென்சன்..!!

0

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை கொண்டு வந்து வெளுக்க வேண்டும்! திருமண விழாவில் ஸ்டாலின் டென்சன்..!!

தமிழகத்தின் வணிக சங்கங்களின் மாநில தலைவர் விக்கிரமராஜா அவர்களின், இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மணமக்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பின்னர், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாடுகளை விமர்சித்தார். மேற்கு வங்க முதல்வரும் எதிர்த்து வருகிறார் என்பதை சுட்டிக்காட்டி இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பல்வேறு மாநிலங்கள் எதிர்க்கும் சூழலுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் மட்டும் எதிர்க்க முடியாத ஒரு வலிமையில்லாத ஆட்சி நடக்கிறது என்று கடுமையாக விமர்சித்தார். இப்படிப்பட்ட லட்சணத்தில் தமிழகத்தின் முதல்வராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சி நடத்துவதாக பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழகம் நல்லாட்சி விருதுகளை வாங்கி இருப்பதாகவும் கூறுகிறார். தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசுக்கு, விருது கொடுத்தவர்களை கூட்டி வந்து அடிக்க வேண்டும் என்று ஆவேசமாக ஸ்டாலின் பேசியுள்ளார். நடுவண் அரசு தமிழகத்திலே பல மக்கள் விரோத சட்டங்களை தொடர்ந்து இயற்றி வருகிறது. இப்போது நடக்கும் ஆட்சி கமிஷன் ஆட்சி என்றும் அதிமுகவை தாக்கி பேசினார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக மீது குற்றம் சாட்டும் ஸ்டாலின் திமுக ஆட்சியன் போது சென்னையில் ஒரு கோடி ரூபாயில் அமைக்க வேண்டிய பாலம் கட்டுமான பணியை ஒன்றரை கோடிக்கு இழுத்து ஊழல் செய்ததாக அதிரடியாக தெரிவித்தார்.

காதலர் தினத்தில் சூர்யாவின் ‘சூரரை போற்று?

0

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் விஜய்யின் மாஸ்டர் வெளியாகும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இடம்பெற்ற ’மாறா தீம்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. சூர்யா பாடிய இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இந்த பாடலையும் வரவேற்க தயாராகி வருகின்றனர். காதலர் தினத்தில் காதல் ரசம் சொட்டச் சொட்ட ஒரு ரொமான்ஸ் பாடலை படக்குழுவினர் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றது.

’சைக்கோ’ படத்தை கிண்டலடித்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி!

0

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது

இந்த படத்தை விமர்சனம் செய்த ஒரு சில விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருப்பதாக கூறினர். குறிப்பாக இத்தனை கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரன் ஒரு சிசிடிவி கேமராவில் கூட மாட்டவில்லைஎன்றும் எங்குமே சிசிடிவி கேமரா இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார்

இந்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் தனக்கு வந்த வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்றை பார்வேர்ட் செய்துள்ளார். அந்த மெசேஜில் கூறப்பட்டுள்ளது இதுதான்

”சைக்கோ படத்தில் எங்குமே சிசிடிவி கேமரா இல்லை என்று கேட்கப்படுகிறது. அந்த படம் சிறையில் ராம்குமார் வயரை கடித்த காலம், கொடநாடு கொள்ளை நடந்த காலம், ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த காலகட்டங்களில் எடுக்கப்பட்டது என்பதால் சிசிடிவி கேமரா எங்கும் இருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் மிஷ்கின் ஆர்மி சார்பாக நாங்கள் சொல்ல விரும்பும் பதில்

முதலில் அவர்களை சிசிடிவி கேமராவை காட்டச் சொல்லுங்கள் அப்புறமாக நாங்க காட்டுவோம்’ இவ்வாறு அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஏர் இந்தியாவை முழுமையாக விற்க மத்திய அரசு முடிவு: எதிர்க்கும் பாஜக எம்பி

0

ஏர் இந்தியா விமான நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்பட்டாலும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக லாபத்தில் இயங்கி வருவதாக கூறபடுகிறது.

இந்த நிலையில் திடீரென மத்திய பாஜக அரசு ஏர் இந்தியா விமான நிறுவனத்தை முழுவதுமாக அதாவது 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியம் சாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூபாய் 50,000 கோடி கடன் இருப்பதால் தொடர்ந்து இந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் அதனால் இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்புபவர்கள் மார்ச் 17-ஆம் தேதிக்குள் மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முன்வந்தபோது அதனை யாரும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் தற்போது 100 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது என்பதும் இந்த முடிவிற்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவிற்கு பாஜகவின் மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியசாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது தேச விரோத நடவடிக்கை என்றும் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் செல்ல இருப்பதாகவும் அவர் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறா? பரபரப்பு தகவல்

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் விழாவில் கலந்துகொண்டதிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பதும் இதுகுறித்து போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து ரஜினிகாந்த் விமானம் மூலம் மைசூருக்கு சென்றுள்ளார். அவர் சென்ற விமானம் நடுவானில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இருப்பினும் ரஜினிகாந்த் உள்பட அந்த விமானத்தில் பயணம் செய்த யாருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் அனைவரும் பத்திரமாக உள்ளார்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ரஜினிகாந்த் சென்ற விமானம் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியால் ரஜினி ரசிகர்கள் பலர் பதட்டம் அடைந்தனர். இருப்பினும் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற செய்தி அனைவரையும் நிம்மதி அடையச் செய்துள்ளது

உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர் விபத்தில் மரணம்: தனுஷ், அனிருத் அஞ்சலி

0

அமெரிக்காவை சேர்ந்த கோப் பிரயண்ட் என்ற உலகப்புகழ் பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரர் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் மரணமடைந்தது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கோப் பிரயண்ட் மறைவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ள நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பலர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் கோப் பிரயண்ட் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தனுஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் கோப் பிரயண்ட் அவர்களின் தீவிர ரசிகர்கள் என்பதால் தங்களது டுவிட்டரில் தங்கள் வருத்தத்தை தெரிவித்து உள்ளனர்

கோப் பிரயண்ட் அவர்கள் தனது 13 வயது மகளுடன் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கோப் பிரயண்ட் மற்றும் அவரது மகள் உள்பட 9 பேர் மரணம் அடைந்ததாகவும் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர். 5 முறை என்.பி.ஏ சாம்பியன் பட்டம் பெற்ற கோப் பிரயண்ட் மறைவு உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பெரு நிறுவனங்களின் வணிக நலன் கருதி மத்திய அரசு போட்ட திட்டத்தை அம்பலபடுத்தும் ராமதாஸ்

0

பெரு நிறுவனங்களின் வணிக நலன் கருதி மத்திய அரசு போட்ட திட்டத்தை அம்பலபடுத்தும் ராமதாஸ்

பொது சுகாதாரத்தை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதன் மூலமாக மாநில அரசுகளின் அதிகாரங்களை சுரண்டி, அவற்றை அலங்கரிக்கப்பட்ட மாநகராட்சிகளாக மாற்ற மத்திய அரசு முயல்வது தவறு மற்றும் ஆபத்தானது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “சுகாதாரத்துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்தானது; கைவிட வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் என்ற பொருளை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிதி ஆணையத்தின் சுகாதாரத்துறைக்கான துணைக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. பெரு நிறுவனங்களின் வணிக நலன் கருதி செய்யப்பட்ட இந்த பரிந்துரை மிகவும் ஆபத்தானதாகும்.

மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான நிதி உறவு, நிதிப்பகிர்வு முறையை வரையறை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 15&ஆவது நிதி ஆணையம், சுகாதாரத்துறை சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைக்க எய்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரந்தீப் குலேரியா தலைமையில் துணைக்குழு ஒன்றை அமைத்தது. அக்குழு அண்மையில் நிதி ஆணையத்திடம் தாக்கல் செய்த பரிந்துரை அறிக்கையில், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. மருத்துவக் கல்வி, குடும்பக்கட்டுப்பாடு ஆகிய துறைகள் பொதுப்பட்டியலில் இருக்கும் போது பொதுசுகாதாரமும் பொதுப்பட்டியலில் இருப்பது தான் சரியானதாக இருக்கும் என்று அக்குழு கூறியுள்ளது. இது அபத்தமான வாதம் மட்டுமின்றி, மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் செயலும் ஆகும்.

மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப்பட்டியலில் வரையறுக்கப்பட்டுள்ளன. மத்தியப்பட்டியலில் உள்ள துறைகளில் மத்திய அரசுக்கும், மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளில் மாநில அரசுகளுக்கும் தான் அதிகாரம் உண்டு. பொதுப்பட்டியலில் உள்ள துறைகளில் முடிவெடுக்க மத்திய அரசு, மாநில அரசுகள் இரண்டுக்குமே அதிகாரம் உண்டு என்றாலும் கூட, மத்திய அரசின் முடிவே இறுதியானது ஆகும். அந்த வகையில், பொது சுகாதாரமும், மருத்துவமனைகளும் பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்படும் பட்சத்தில், அந்த துறைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமிருந்து, மத்திய அரசுக்கு மாற்றப்பட்டு விடும். அதனால், பொது சுகாதாரம், மருத்துவமனை ஆகிய விஷயங்களில் மாநில அரசு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. மத்திய அரசுடன் கலந்து பேசி தான் முடிவெடுக்க முடியும். மத்திய அரசு அதன் முடிவை திணித்தால் அதை ஏற்பதைத் தவிர மாநில அரசுக்கு வேறு வழியில்லை.

பொது சுகாதாரமும், மருத்துவமனைகளும் மக்களுக்கு மிகவும் முக்கியமானவை. மாநில அரசுகள் தான் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவை என்பதால் மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு, சுகாதார சேவை வழங்க முடியும். ஆனால், மத்திய அரசால் இது சாத்தியமில்லை. நீட் தேர்வு சர்ச்சையைத் தொடர்ந்து மருத்துவக் கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற முழக்கங்கள் எழுந்துள்ள நிலையில், பொது சுகாதாரத்தை பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்ல முயல்வது மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும். இது கூட்டாட்சி தத்துவத்தையே தகர்க்கும் செயலாகும்.

பொது சுகாதாரத்துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது மட்டுமின்றி, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அரசு மற்றும் தனியார்துறை கூட்டு முயற்சியில் 3000-5000 மருத்துவமனைகளை அமைக்கலாம் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. இது அரசின் வளங்களை தனியாருக்கு வாரி வழங்கும் நோக்கம் கொண்டதாகும். நிதி ஆணையத் துணைக்குழுவில் இடம்பெற்ற 5 உறுப்பினர்களில் இருவர் தனியார் மருத்துவமனை அதிபர்கள் எனும் நிலையில் இந்த பரிந்துரையை ஏற்கக் கூடாது.

1975-ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, வனம், விலங்குகள் பாதுகாப்பு உள்ளிட்ட 5 துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, மின்திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் உள்ளிட்ட தமிழகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அந்த துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது தான் காரணமாகும். அவ்வாறு இருக்கும் போது மேலும், மேலும் துறைகளை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது நியாயமல்ல.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப்பகிர்வு குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா ஆணையம், நீதிபதி எம்.எம்.பூஞ்சி ஆணையம், தமிழக அரசால் அமைக்கப்பட்ட பி.வி. ராஜமன்னார் குழு, மேற்கு வங்க அரசின் விரிவான மனு, பஞ்சாப்பில் அகாலி தளம் தயாரித்து இயற்றிய அனந்த்பூர் சாஹிப் தீர்மானம் ஆகிய அனைத்துமே மாநில அரசுகளுக்கு தான் பெரும்பான்மை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்; பாதுகாப்பு, வெளியுறவு, பணம் அச்சிடுதல், தொலைதொடர்பு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றை மட்டும் மத்திய அரசு வைத்துக்கொண்டு மீதமுள்ள துறைகளின் அதிகாரங்களை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதைத் தான் வலியுறுத்துகின்றன. உலகின் வல்லரசான அமெரிக்காவில் கூட இந்த அடிப்படையில் தான் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த பரிந்துரைகளையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, மாநில அரசுகளின் அதிகாரங்களை சுரண்டி, அவற்றை அலங்கரிக்கப்பட்ட மாநகராட்சிகளாக மாற்ற மத்திய அரசு முயல்வது மிகவும் தவறு. எனவே, பொது சுகாதாரத்தை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற துணைக்குழுவின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மத்திய & மாநில அரசுகளின் அதிகாரப்பகிர்வை வரையறுக்க புதிய ஆணையம் அமைப்பதுடன், அதன் பரிந்துரைகளை செயல்படுத்தவும் வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கி.வீரமணி படத்திற்கு செப்பல் ஷாட்! பிஜேபி மகளிர் அணியினர் கதம் கதம்..!!

0

கி.வீரமணி படத்திற்கு செப்பல் ஷாட்! பிஜேபி மகளிர் அணியினர் கதம் கதம்..!!

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பொன்விழாவில் பெரியார் குறித்து பேசிய சர்ச்சையான கருத்து இன்றுவரை தமிழகத்தில் புகைச்சலாகி வருகிறது. ரஜினியின் மீது ஒரு பக்கம் வழக்கு தொடுத்தாலும் தினந்தோறும் இதைப்பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகி, தற்போது ரோட்டில் இறங்கி எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.

பெரியார் தலைமையில் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாட்டில் ராமர் மற்றும் சீதையின் உருவங்களை நிர்வாணமாக கொண்டு வந்த சம்பவத்தை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பேசியது தொடர்பாக காவல் நிலையங்களில் திகவினர் வழக்கு தொடுத்தனர். பின்னர் 15 நாட்கள் கால அவகாசம் முடியும் முன்னரே சென்னை உயர்நீதிமன்றத்திலும் திகவினர் வழக்கு போட்டதால் நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்தனர். இது சம்பந்தமாக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திராவிட அமைப்பு மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து குரல் எழுப்பியது.

நான் உண்மையைதான் பேசினேன் என்னிடம் ஆதாரம் உள்ளது என்றும், யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் தனக்கே உரித்த பாணியில் தெரிவித்தார். இதையடுத்து, திராவிட கழகத்தினரால் ரஜினிக்கு மிரட்டல் விடுக்கும் அளவிற்கு நிலைமை மோசமானது. இச்சம்பவத்தின் நீட்சியாக பகவத் கீதையை இழிவுபடுத்திய கி.வீரமணியின் படத்தை வைத்து பாஜகவின் மகளிர் அணியினர் இன்று செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து தனது கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

மேலும், திராவிட கழகத்தினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொள்ளாச்சியில் பெரியாரின் உருவ பொம்மையை எரித்து தனது எதிர்ப்பினை காட்டியுள்ளனர். உருவ பொம்மை எரிப்பு சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜக மற்றும் பல இந்து அமைப்புகள் ரஜினிக்கு ஆதரவாக இருப்பது இச்சம்பவத்தின் மூலமாக தெரியவந்துள்ளது