Home Blog Page 5782

மோடிக்கு அடுத்த இடத்தை பிடித்த ரஜினி: ஒரு சூப்பர் தகவல்

0

இந்திய பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தில் நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த ஆவணப்படம் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பான போது அதை 168 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்த்தார்கள் என்ற தகவல் உள்ளது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மோடியை அடுத்து ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளார் இது குறித்த படப்பிடிப்பு இன்றும் நாளையும் கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகம் ஒன்றில் நடைபெறுகிறது

இந்த ஆவணப்படத்தில் தண்ணீர் மற்றும் உணவை அவர்களே தேடிக்கொள்ள வேண்டும் என்பதுதான் கண்டிஷன். இரண்டு நாட்கள் ஒரு மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்வது எப்படி என்பதை உணர்த்துவதுதான் இந்த ஆவணப்படங்களின் நோக்கம்

இந்த ஆவணப்படங்களில் நடிக்க முதலில் உடல் பரிசோதனை செய்யப்படும். இதில் தகுதி பெற்றால் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறும். நேற்று ரஜினிக்கு உடல்தகுதி செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த ஆவணப்படம் இன்னும் ஒரு சில வாரங்களில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது

ப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ?

0

ப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ?

ப ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா, கலையரசன் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

பா ரஞ்சித் அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் ஆனார். இதில் கடைசியாக அவர் இயக்கிய காலா திரைப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்ததால் அடுத்த படத்துக்காக இடைவேளை எடுத்துக் கொண்டுள்ளார்.

காலா ரிலிஸுக்கு முன்பாகவே அவர் இந்தியில் பிர்சா முண்டா என்ற தலித் தலைவரின் வாழ்க்கையப் படமாக எடுக்க ஒப்பந்தமானார். நமா பிக்சர்ஸ் என்ற நிறுவனம் இதை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் அந்த படம் தள்ளிப்போனது. இதனால் இப்போது ரஞ்சித் ஒரு தமிழ்ப்படம் இயக்கும் முனைப்பில் உள்ளார்.

இந்த படத்தில் ஆர்யா, கலையரசன் மற்றும் தினேஷ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இது வடசென்னையில் நடைபெற்ற ஒரு உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டது என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் திரைக்கதையை ரஞ்சித்துடன் எழுத்தாளர் தமிழ் பிரபா இணைந்து எழுதியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்துக்கு சல்பேட்டா பரம்பரை எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் இதில் வில்லனாக நடிக்க இயக்குனர் மகிழ்திருமேனி நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. குத்துச்சண்டையை மையப்படுத்திய கதை என்பதால் இதில் நடிக்கும் அனைவருக்கும் குத்துச்சண்டை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தொடங்க இருக்கும் இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஐபிஎல் 2020:புதிய விதிகள் என்னென்ன?கங்குலி அறிவிப்பு!

0

ஐபிஎல் 2020:புதிய விதிகள் என்னென்ன?கங்குலி அறிவிப்பு!

ஐபிஎல் 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் என்னென்ன புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த நாட்டு வாரியங்களும் எந்த தொடர்களையும் அமைத்துக் கொள்வதில்லை.

இந்நிலையில் பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்ட பின் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் முறையாக நடக்க இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதன் பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கங்குலி இந்த தொடரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்து பேசியுள்ளார்.

ஐபிஎல் 2020:புதிய விதிகள் என்னென்ன?கங்குலி அறிவிப்பு!

நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

  • ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல 4 மணி மற்றும் 8 மணிக்கு போட்டிகள் தொடங்கும். 7.30 மணிக்கு தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அது குறித்த முடிவு எடுக்கப்படவில்லை.
  • நோபாலுக்காக மூன்றாவது நடுவரை அணுகும் முறை அறிமுகமாகிறது.
  • டெஸ்ட் போட்டிகளில் கன்கஸன் ஏற்பட்டால் மாற்று வீரரை இறக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
  • ஐபிஎல் இறுதி ஆட்டம் மும்பையில் நடக்கும். அகமதாபாத்தில் நடத்துவதாக வெளியாகும் செய்தி உண்மையில்லை.
  • போட்டிகளின் அட்டவணை மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.
  • ஐபில் போட்டி மார்ச் 29 முதல் மே 24 வரை நடக்க இருக்கிறது.

பாண்டியாவின் உடல்நிலைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது ‘அவர் இன்னும் குணமாகவில்லை. அவர் தேசிய அகாடெமியில் தங்கி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்’ எனத் தெரிவித்தார்.

தலைவர் 168 படத்தின் கதை இது தான்: யூகித்த நெட்டிசன்கள்

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்து இண்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது

வெளிநாட்டில் இருந்து கிராமத்துக்கு வரும் மீனா நவநாகரீகமாக இருப்பதாகவும் அவரை தமிழ் பெண்ணாக ரஜினிகாந்த் மாற்றுவதும் தான் இந்த படத்தின் கதை என்று இன்டர்நெட்டில் கசிந்துள்ளது

இதனை உறுதி செய்வது போல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சேலைகட்டி பக்கா தமிழ் பெண்ணாக இருக்கும் மீனாவின் ஒரு புகைப்படம் வெளியானது. இதனை அடுத்து இன்று வெளியாகி இருக்கும் ஒரு புகைப்படத்தில் மீனா கோட் சூட் அணிந்து வெளிநாட்டு பெண் போல் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. இதிலிருந்து நெட்டிசன்கள் யூகம் செய்த கதை சரிதான் என்று தோன்றுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இதுதான் கதையா? என்பதை படம் வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்

கண் தெரியாத பிரசாந்தை விடாமல் துரத்தப் போகும் ரம்யா கிருஷ்ணன்!மோகன் ராஜாவின் பலே திட்டம் !

0

கண் தெரியாத பிரசாந்தை விடாமல் துரத்தப் போகும் ரம்யா கிருஷ்ணன் ! – மோகன் ராஜாவின் பலே திட்டம் !

அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் வில்லியாக நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியானத் அந்தாதூன் திரைப்படம் வெற்றி பெற்றது. நெட்பிளிக்ஸில் வெளியான பின்பு அது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.  

இதையடுத்து அந்த படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய மிகப்பெரிய போட்டி நிலவ, தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் மற்றும் நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.

இந்நிலையில் தமிழ் ரீமேக்கில் தன்னுடைய மகனையே நடிக்க வைக்க அவர் முடிவு செய்து இயக்குனரை தேடிக் கொண்டிருந்தார். முதலில் கௌதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இப்போது ரீமேக் இயக்குனர் எனப் பெயர்பெற்ற மோகன்ராஜாவிடம் அந்த வாய்ப்பு சென்றுள்ளது. இந்த படத்துக்காக தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்துள்ளார் பிரசாந்த்.

கண் தெரியாத பிரசாந்தை விடாமல் துரத்தப் போகும் ரம்யா கிருஷ்ணன்!மோகன் ராஜாவின் பலே திட்டம் !

இந்நிலையில் அந்தாதூண் படத்தின் முக்கியத் தூண்களில் ஒருவராக இருந்தவர் நடிகை தபு. தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களிடம் திட்டு வாங்கிய அந்த வில்லிக் கதாபாத்திரத்தை தமிழில் யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில் இப்போது ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்க இயக்குனர் மோகன் ராஜா முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலமாக பாகுபலி, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களால் கலக்கி வரும் ரம்யா கிருஷ்ணனே அந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவராக இருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது.

சீனாவில் வேகமாக பரவும் கரோனா வைரஸ்!பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு !

0

சீனாவில் வேகமாக பரவும் கரோனா வைரஸ்!பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு !

சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸ் உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய்க்கு மருந்து இல்லை என்பதால் இதைக் கட்டுபடுத்த சீன அரசு திணறி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் சீனாவின் பொருளாதாரம் பலமாக அடிவாங்கும் என சொல்லப்படுகிறது.

சீனாவின் பொருட்களின் விலை வீழ்ச்சி, சுற்றுலா பயணிகள் வருகைக் குறைவு மற்றும் விமான சேவைகள் ஆகியவை வீழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதல் முதன் முதலாக சீனாவில் ஹுபெய் மற்றும் வுஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சலின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சீனாவில் வேகமாக பரவும் கரோனா வைரஸ்!பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு !

அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இந்த வைரஸுக்கு விஞ்ஞ்சானிகள் கரோனா வைரஸ் எனப் பெயர் சூட்டினர். இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

இதுவரை இந்நோய் தாக்குதலுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 2300 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 106 ஆகியுள்ளது. இதனால் புத்தாண்டுக்கு வழங்கப்பட்ட விடுமுறையை சீன அரசு மேலும் நீடித்துள்ளது. சீனாவில் இருந்து இந்தியா வந்த பெண் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த செயலுக்காக இன்னும் யாரும் என்னை மன்னிக்கவில்லை:மனம் திறந்த மெக்ராத் !

0

அந்த செயலுக்காக இன்னும் யாரும் என்னை மன்னிக்கவில்லை:மனம் திறந்த மெக்ராத் !

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சச்சினை அவுட் ஆக்கியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ சேதங்களுக்கு உதவிடும் வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் தலைமையில் கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. இதில் பாண்டிங் தலைமையேற்கும் அணிக்கு இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அவர் காலத்தைய ஜாம்பவான் பவுலர் க்ளன் மெக்ராத்தும் இடம்பெற்றுள்ளார்.

அந்த செயலுக்காக இன்னும் யாரும் என்னை மன்னிக்கவில்லை:மனம் திறந்த மெக்ராத் !

மெக்ராத் சச்சின் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் அவருக்கு சரியான அழுத்தம் கொடுத்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். அவரின் பந்துவீச்சை எவ்வளவோ முறை துவம்சம் செய்துள்ள சச்சின், அதேப்போல தனது விக்கெட்டையும் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமான ஒரு போட்டி என்றால் 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டி.

அந்த தொடர் முழுவதும் அசுர பலத்தில் இருந்த இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. அதில் முதலில் பேட் செய்த ஆஸி 360 ரன்களை இலக்காக நியமித்தது. அந்த காலகட்டத்தில் அது எட்ட முடியாத ஸ்கோர். ஆனால் சச்சினை பெரிதும் நம்பியிருந்தது இந்திய அணி. ஆனால் முதல் ஓவரிலேயே மெகராத் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார் சச்சின்.

இந்நிகழ்ச்சியை தற்போது நினைவு கூர்ந்துள்ள மெக்ராத் ‘அந்த விக்கெட்டை நான் எடுத்ததற்காக எனக்கு இன்னும் இந்தியர்கள் மத்தியில் மன்னிப்புக் கிடைக்கவில்லை. இப்போது நான் இந்தியாவில் தான் அதிகமாக வசிக்கிறேன்.’ எனக் கூறி மனம்திறந்துள்ளார்.

கரோனா வைரஸ் உருவானது எங்கே? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

0

கரோனா வைரஸ் உருவானது எங்கே? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸ்சுக்கு இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர். 2000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டின் பயோ- வெப்பன் தயாரிக்கும் ஆய்வுக்கூடத்தில் இந்த வைரஸ் உருவாகி இருக்கலாம் என செய்திகள் வந்துள்ளது.

இந்த செய்தி “தி வாஷி்ங்டன் டைமஸ்” பத்திரிகைக்கு இஸ்ரேலைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தெரிவித்து உள்ளார். அதாவது உலகிற்கு தெரியாமல் சீன கிருமிகளை உருவாக்கி வருவதாகவும் , மனிதர்களை கொல்லும் பயோ- வெப்பன் ஆய்வுக்கூடத்தை வுஹன் மாநிலத்தில் அமைந்துள்ளது. அங்கு இருந்து பரவி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ ராணுவத்தின் புலன் ஆய்வு பிரிவின் முன்னாள் அதிகாரியும், பயோ ஆயுதங்கள் போன்றவை குறித்து அறிந்தவருமான தேனி ஷேஹம் வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகையில் பேட்டி அளித்தார். அதில் அவர , சீனாவின் வுஹான் நகரில் பயோ ஆயுதங்கள் உருவாக்கும் ஆய்வு கூடத்தை 2015 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகின்றன.

corona virus
corona virus

அந்த நகரில் மட்டும் தான் ஆபத்தான கிருமிகள் குறித்து ஆய்வு செய்யும் வகையில் ஆய்வகங்கள் உருவாக்கி நடத்தி வந்தனர். இந்த ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்படும் கிருமிகள் மனிதர்களை கொல்லும் ஆற்றல் மிக்கது என்று அவர் தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த வித விதமான ஆதாரங்களும் தெளிவாக இல்லை. இந்த குற்றச்சாட்டுக்களை சீனா மறுக்கிறது.

சீனாவின் வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் முதன் முதலாக பரவியுள்ளது. சீனாவில் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இன்று விமான விபத்து! 83 பேர் பலி?

0

ஆப்கானிஸ்தானில் இன்று விமான விபத்து! 83 பேர் பலி?

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிரட் நகரில் இருந்து காபுல் நோக்கி இன்று பயணிகள் விமானம் சென்றது . இந்த விமானத்தில் 83 பேர் பயணம் செய்தனர் .

டெக்யாக் மாவட்ட பகுதியை அந்த விமானம் கடந்து சென்ற போது , எதிர்பாராத விதமாக தரையில் விழந்து விபத்தில் சிக்கியது.

இதில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை.

இந்த விமானத்தில் பயணம் செய்த 83 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் , இந்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பலமுறை எச்சரித்தும் கண்டு கொள்ளாத அரசு! இறுதியில் நடந்த சம்பவம்! மீண்டும் எச்சரிக்கும் ராமதாஸ்

0

பலமுறை எச்சரித்தும் கண்டு கொள்ளாத அரசு! இறுதியில் நடந்த சம்பவம்! மீண்டும் எச்சரிக்கும் ராமதாஸ்

தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் முதலீட்டை எடுத்த பிறகும் தொடர்ந்து கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில மாதங்களாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை மூலமாக எச்சரித்து வந்தார். இந்நிலையில் தான் பரனூரில் உள்ள சுங்கச்சாவடி ஓட்டுநர்களாலும், பொது மக்களாலும் தாக்கப்பட்டுள்ளது. இது சுங்கச்சாவடிகள் மீதுள்ள மக்களின் கோபத்தின் வெளிப்பாடு என மருத்துவர் ராமதாஸ் மீண்டும் எச்சரித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “சுங்கச்சாவடி தாக்குதல்: மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூரில் உள்ள சுங்கச்சாவடி நேற்று அதிகாலை வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளால் சூறையாடப்பட்டிருக்கிறது. சட்டத்தை மதிக்காமல் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என்றாலும் கூட, எதிரி நாட்டு இலக்குகளுக்கு இணையாக சுங்கச்சாவடிகள் கோபத்தை சம்பாதித்து வைத்துள்ளன என்பதற்கு இந்நிகழ்வு எடுத்துக்காட்டு ஆகும்.

சுங்கச்சாவடியை கடப்பதற்கு முன்பாகவும், சுங்கச்சாவடியை கடந்த பிறகும் ஒரு வாகன ஓட்டியின் ரத்த அழுத்தத்தை அளவிட்டு பார்த்தால் இரண்டுக்கும் இடையே மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பார்க்க முடியும். ஒரு பக்கம் கட்டணச் சுரண்டல்களில் ஈடுபடும் சுங்கச்சாவடிகள் மறுபுறம் வாகன ஓட்டிகளை மனதளவில் காயப்படுத்தும் இடங்களாக மாறி வருகின்றன. அதன் விளைவு தான் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி ஓட்டுனர்களாலும், பயணிகளாலும் நொறுக்கப்பட்டுள்ளது.

பரனூர் சுங்கச்சாவடியை கடந்த அரசுப் பேருந்து ஓட்டுனர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒரு கட்டத்தில் அவரைத் தாக்க முயன்றுள்ளனர்; தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுனர்களும், பயணிகளும் இணைந்து தான் சுங்கச்சாவடியை தாக்கியுள்ளனர். இது அந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வால் வெடித்த கோபத்தின் வெளிப்பாடு அல்ல. நீண்டகாலமாகவே சுங்கச்சாவடி பணியாளர்கள் மீது ஓட்டுனர்களுக்கும், பொது மக்களுக்கும் இருந்த கோபம் தான் நேற்றைய சம்பவத்தால் ஏற்பட்ட பொறி காரணமாக பெரும் தீயாக மாறி சுங்கச்சாவடியை சூறையாடும் அளவுக்கு சென்றிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு சுங்கச்சாவடி பணியாளர்களின் பொறுப்பற்ற செயலும், சுங்கக்கட்டணக் கொள்ளையும் தான் முக்கிய காரணமாகும்.

தமிழகத்தின் நெரிசல் மிக்க சுங்கச்சாவடிகளில் பரனூர் சுங்கச்சாவடி முதன்மையானதாகும். ஒவ்வொரு நாளும் இந்தச் சுங்கச்சாவடியை இரு மார்க்கங்களிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. அவற்றில் பல வாகனங்களிடம் ரசீது கொடுக்காமல் கட்டணம் வசூலித்தல், வாகன ஓட்டிகளை மிரட்டுதல் உள்ளிட்ட செயல்களில் சுங்கச்சாவடி பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களின் இந்த அணுகுமுறை தான் சுங்கச்சாவடிகள் பதற்றம் மிகுந்தவையாக திகழ காரணமாகும்.

மற்றொருபக்கம் சுங்கச்சாவடிகள் சுரண்டல் மையங்களாக திகழ்கின்றன. பரனூருக்கும், திண்டிவனம் ஆத்தூருக்கும் இடையிலான 4 வழிச்சாலை அமைக்க 2005-ஆம் ஆண்டில் ரூ.536 கோடி மட்டுமே செலவானது. அதற்கு பிந்தைய 15 ஆண்டுகளில் இந்த சுங்கச்சாவடிகளில் மட்டும் ரூ.2,000 கோடிக்கும் கூடுதலாக சுங்கவரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான 13 ஆண்டுகள் ஆறு மாத காலத்தில் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ரூ.1098 கோடி மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, செலவுக்கணக்குகளும் உயர்த்திக் காட்டப்பட்டுள்ள நிலையில், இந்த நெடுஞ்சாலையில் முதலீடு ஏற்கனவே எடுக்கப்பட்ட பிறகும், இன்னும் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை விட மோசமான சுரண்டல் எதுவும் இருக்க முடியாது.

அதுமட்டுமின்றி, சுங்கக்கட்டணங்கள் ஆண்டுதோறும் 15 முதல் 20% வரை உயர்த்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சியும், பண வீக்கமும் 5 முதல் 7 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது. தனிநபர்களின் ஊதிய உயர்வு 5 முதல் 8 விழுக்காட்டுக்குள் தான் உள்ளது. ஆனால், சுங்கக் கட்டணம் மட்டும் ஆண்டுக்கு 20% வரை உயர்த்தப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது ஆகும். இதுபோன்ற வெறுப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தான் சுங்கச்சாவடி தாக்குதலில் முடிகின்றன.

பரனூர் சுங்கச்சாவடி மட்டும் தான் என்றல்ல. அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடியிலும் நேற்று சுங்கச்சாவடி ஊழியர்களால் பயணிகள் தாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 45 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு சுங்கச்சாவடியில் ஒரு ஓட்டுனர் தாக்கப்படுவது வாடிக்கையாக ஒன்றாகிவிட்டது. இதேநிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் சுங்கச்சாவடிகள் அனைத்தும் போர்க்களமாகிவிடும்.

இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு முழுமையாக முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மற்ற சுங்கச்சாவடிகளிலும் அளவுக்கு அதிகமான சுங்கக்கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். அதற்கெல்லாம் மேலாக வாகன ஓட்டிகளிடம் நட்பாக நடந்து கொள்வது என்பது குறித்து சுங்கச்சாவடிகளின் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கவும் மத்திய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.