Home Blog Page 5784

திமுக வெற்றிக்கு காரணம் மோடி தான்! உண்மையை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்

0

திமுக வெற்றிக்கு காரணம் மோடி தான்! உண்மையை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்

சமீபத்தில் நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு காரணம் இரண்டு பேர்; ஒன்னு மோடி; இன்னொன்னு எங்க டாடி என்று அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.

திருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக சார்பில், சென்னை ஆவடியில் மொழிப்போர் தியாகிகளுக்கான பிரம்மாண்ட வீரவணக்க பொதுக்கூட்டம்  நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சியினர் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, நடந்து முடிந்து பாராளுமன்ற தேர்தலில் நான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ததால் தான் 100 சதவீத வெற்றியை இந்தியாவையே திரும்பி பார்க்க கூடிய அளவுக்கு தமிழக மக்கள் தந்தார்கள் என்று கூறுகிறார்கள்.

ஆனால் கண்டிப்பாக அது என்னுடைய பிரச்சாரத்திற்கு தந்த வெற்றி இல்லை. அந்த வெற்றிக்கு காரணம் இரண்டு பேர். ஒன்று மோடி இன்னொன்னு எங்க டாடி. இந்த வெற்றி நம்முடைய தலைவருக்கு கிடைத்த வெற்றியாக தான் நான் பார்க்கிறேன் என்றும் அவர் கூறினார்.

எனக்கு சினிமாவும் அரசியலும் இரண்டு கண்கள் என்று மாவட்ட செயலாளர் நாசர் கூறினார். ஆனால் அது தவறு. நடிப்பை நான் மனதளவில் தான் செய்கிறேன். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகமும், கருப்பு சிவப்பும், தமிழ்மொழியும் என்னுடைய ரத்தத்தில் ஊறிப் போனது என்றார். அதேபோல் திமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் ஆட்சி மொழிக்கு என்ன பங்கு உண்டு என்ற கேள்வி மக்கள் மத்தியில் அனைவருக்கும் உள்ளது.

தமிழ் வளர்ச்சிக்காக அமைச்சகத்தை உருவாக்கி தீவிரமாக செயல்படுத்தியது கருணாநிதி தான். தற்போது இந்த அமைச்சகத்தின் கீழ் இருக்கும் அமைச்சர் தான், தமிழ்வளர்ச்சித் துறைக்காக இல்லாமல், இந்தி வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளார். அதற்கு காரணமும் நீங்கள் தான் என அங்கே கூடியிருந்த கட்சியினர் கூட்டத்தை பார்த்து கூறினார்.

தமிழை ஒடுக்குவதற்கும், அதை மறக்கடிக்கும் வேலைகளில் தான் தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி கவனம் செலுத்துகிறது என்று குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின், உலகப் பொதுமறை திருக்குறளுக்கு காவி போட்டவர்கள் அதிமுகவினர் தான், கொஞ்சம் விட்டிருந்தால் திருவள்ளுவரையே நாங்கள் தான் கூட்டி வந்தோம் எனவும் கூறியிருப்பார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினரான வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி சட்ட மன்ற உறுப்பினரான ஆர்.கிருஷ்ணசாமி மற்றும் மாவட்ட செயலாளர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்

கோமாளி பஜ்ஜிக்கடை ஆன்ட்டியின் அட்டகாசமான புகைப்படம்! உறைந்து போன ரசிகர்கள்!!

0

கோமாளி பஜ்ஜிக்கடை ஆன்ட்டியின் அட்டகாசமான புகைப்படம்! உறைந்து போன ரசிகர்கள்!!

டந்த வருடம் பிரபல நடிகர் ஜெயம் ரவி நடித்த திரைப்படமான கோமாளி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் ஜெயம் ரவி பள்ளி மாணவன் போல நடித்து இருந்தது மிகவும் அட்டகாசமாக இருந்தது. அது, அவரது ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுக கால ஜெயம் ரவியை கண்முன்னே கொண்டு வந்தது என்றால் மிகையாகாது.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருப்பார். இந்த படத்தில் பல்வேறு காமெடி காட்சிகள் வந்தது. இருப்பினும், பஜ்ஜி கடை ஆண்டி நடித்து இருந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல மிகவும் பிரபலமானது.

இந்த படத்தில், நடிகை கவிதாராதேஷ்யம் தான் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்து இருப்பவர். இவர் ஒரு பாலிவுட் நடிகை. பல்வேறு ஹிந்தி சீரியல்களில் கவிதாராதேஷ்யம் நடித்து இருக்கின்றார். விலங்குகள் வதைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் சுண்டி இழுத்தார்.

இதனை தொடர்ந்து, இந்தி பிக்பாஸ் சீசன் 6-ல் கவிதாராதேஷ்யம் போட்டியாளாராக கலந்து கொண்டார். தற்போது கன்னடம் மற்றும் தமிழ் மொழியில் உருவாகிவரும் காசுரன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகிறது.

https://www.instagram.com/p/B6unemlDUDu/?igshid=94f6zi3tl2on

இதனை பார்க்கும் திரைத்துறை ரசிகர்கள் பலரும், கோமாளி பட பஜ்ஜி கடை ஆண்டியா இது என்று வாய்பிளக்கின்றனர்.

 

71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின உரை – 2020

0

71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின உரை – 2020

இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து ஏறக்குறைய 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய மக்கள் அனைவரும் 71ஆம் குடியரசுத் திருநாளை கொண்டாடவுள்ளார்கள். இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்காக உரையாற்றியுள்ளார். அதன் தமிழாக்கம் பின் வருமாறு.

எனதருமை நாட்டுமக்களே,

  1. 71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு நம் நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழும் இந்தியாநாட்டின் அனைவருக்கும் என் இருதயபூர்வமான நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
  2. இன்றிலிருந்து 70 ஆண்டுகள் முன்பு, ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று நமது அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது.  அதற்கு முன்னரே கூட, இந்தத் தேதியின் சிறப்பான மகத்துவம் நிறுவப்பட்டு விட்டது.  பூரண சுயராஜ்ஜியம் அடைந்த பின்னர் நமது நாட்டுமக்கள், 1930 முதல் 1947ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று பூரண சுயராஜ்ஜிய தினத்தைக் கொண்டாடி வந்தார்கள்.  ஆகையால் 1950ஆம் ஆண்டில், இதே வரலாற்றுச் சிறப்புமிக்க நாளன்று இந்தியாவைச் சேர்ந்த மக்களனைவரும் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கங்களின்பால் நமது நம்பிக்கையை வலியுறுத்தும் வகையில், ஒரு குடியரசு என்ற வகையில், நமது பயணத்தைத் துவக்கினோம்.  அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று நாம் குடியரசுத் திருநாளைக் கொண்டாடுகிறோம். 
  3. நவீன குடியரசின் நிர்வாக அமைப்பிலே 3 அங்கங்கள் இருக்கின்றன – சட்டமியற்றும் அவைகள், நிர்வாக அமைப்பு, நீதிமன்றம்.  இந்த மூன்று அங்கங்களும் சுதந்திரமானவையாக இருந்தாலும் கூட, ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாகவும் இருக்கின்றன, ஒன்றை ஒன்று சார்ந்தும் இருக்கின்றன.  இருந்தாலும், மக்கள் தான் ஒரு நாட்டை உருவாக்குகிறார்கள்.  இந்திய நாட்டைச் சேர்ந்த நாம் தான் நமது குடியரசை இயக்குகிறோம்.  நமது பகிரப்பட்ட எதிர்காலம் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ளும் மெய்யான சக்தியானது இந்திய நாட்டு மக்களான நம்மிடம் தான் அடங்கியிருக்கிறது.
  4. நமது அரசியலமைப்புச் சட்டமானது, சுதந்திரமான மக்களாட்சியின் குடிமக்கள் என்ற முறையிலே, சில உரிமைகளை நமக்கு அளிக்கிறது.  ஆனால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுத் தான், நாமனைவரும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற அடிப்படையான ஜனநாயகக் குறிக்கோள்களின்பால், என்றும் மாறாத அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்போம் என்ற இந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.  நாட்டின் தொடர் வளர்ச்சி மற்றும் பரஸ்பர சகோதரத்துவத்திற்காக, இதுதான் மிகவும் உன்னதமான மார்க்கம்.   தேசப்பிதா காந்தியடிகளின் வாழ்க்கைச் சித்தாந்தங்களை ஏற்பதன் வாயிலாக, இந்த அரசியலமைப்புச் சட்டக் குறிக்கோள்களைப் பின்பற்றும் செயல்பாடு மேலும் சுலபமானதாக மாறி விடுகிறது.  இப்படிச் செய்வதன் மூலம், நாமனைவரும் காந்தியடிகளின் 150ஆவது ஜெயந்தியை மேலும் பொருளார்ந்த நிகழ்வாக பரிமளிக்கச் செய்ய முடியும்.
  5. என் பிரியமான நாட்டுமக்களே, மக்கள் நலன் பொருட்டு, அரசு பல இயக்கங்களை செயல்படுத்தி வருகிறது.  குடிமக்கள் தன்னிச்சையாக இந்த இயக்கங்களை, அனைவருக்கும் விருப்பமானவையாக மாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  மக்களின் பங்களிப்பு காரணமாக, தூய்மை இந்தியா இயக்கம் மிகக்குறைவான காலத்தில், மெச்சத்தகுந்த வெற்றியைக் கண்டிருக்கிறது.  பங்களிப்பின் இந்த உணர்வு, வேறுபல துறைகளிலும் செய்யப்பட்டுவரும் முயற்சிகளிலும் பிரதிபலிப்பதை நம்மால் காண முடிகிறது.  அது சமையல் எரிவாயு மீதான மானியத்தைத் துறப்பதாக இருக்கட்டும், அல்லது டிஜிட்டல்முறை பணம் செலுத்தலுக்கான ஊக்கமாகட்டும்.  பிரதம மந்திரி உஜ்வலா திட்டம் என்ற சமையல் எரிவாயு வழங்கல் திட்டம் படைத்திருக்கும் சாதனைகள் பெருமிதம் கொள்ளத்தக்கவை.  இலக்கை நிறைவேற்றும் அதே வேளையில், 8 கோடி பயனாளிகள் இந்தத் திட்டத்தினால் பயனடைந்திருக்கிறார்கள்.  இதன் காரணமாக, தேவை இருக்கும் மக்களுக்கு இப்போது தூய்மையான எரிபொருள் வசதி கிடைத்து வருகிறது.  பிரதம மந்திரி அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கல் திட்டமான சௌபாக்கியா திட்டம், மக்களின் வாழ்க்கையில் புதிய ஒளியைப் பாய்ச்சியிருக்கிறது.  இந்தியப் பிரதமரின் விவாயிகள் கௌரவக் கொடை வாயிலாக 14 கோடிக்கும் அதிக விவசாய சகோதர சகோதரிகளுக்கு ஆண்டொன்றுக்கு 6000 ரூபாய் குறைந்தபட்ச வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.  இதன் வாயிலாக நமக்கெல்லாம் அன்னம் படைப்போர், கௌரவமாக வாழ உதவி கிடைக்கிறது.

பெருகிவரும் நீர்ப்பற்றாக்குறை என்ற சங்கடத்தை எதிர்கொள்ள ஜலசக்தி அமைச்சகம் உருவாக்கப் பட்டிருக்கிறது; மேலும் நீர்ப் பாதுகாப்பு – வழங்கல் ஆகியவற்றுக்கு முதன்மை அளிக்கப்பட்டு வருகிறது.  ஜல ஜீவன் இயக்கமும்கூட, தூய்மை பாரத இயக்கத்தைப் போலவே, ஒரு மக்கள் இயக்கமாகப் பரிமளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

  1. அரசின் ஒவ்வொரு கொள்கைத்திட்டத்தின் பின்புலத்திலும், ஏழைகளின் நலன்களோடு கூடவே, அனைத்திலும் நாட்டிற்கே முதன்மை என்ற உணர்வு  மேலோங்கி இருக்கிறது.  ஜி.எஸ்.டியை அமல் செய்ததன் வாயிலாக ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை என்ற குறிக்கோளுக்கு வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இதோடு கூடவே, ஈ-நாம் திட்டம் வாயிலாகவும், ஒரு நாட்டிற்காக ஒரு சந்தையை உருவாக்கும் செயல்பாடு பலப்படுத்தப்பட்டு வருகிறது; இதன் வாயிலாக விவசாயிகள் பலன் அடைவார்கள்.    அது ஜம்மு கஷ்மீரம் லடாக்காகட்டும், வடகிழக்குப் பகுதியாகட்டும், அல்லது இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் நமது தீவுக்கூட்டங்கள் ஆகட்டும், நம் நாட்டின் ஒவ்வொரு பாகத்திற்கும் முழுமையான முன்னேற்றம் ஏற்படுவதில் செரிவான ஈடுபாட்டோடு இருக்கிறோம்.
  2. நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு உறுதியான உள்நாட்டுப் பாதுகாப்பு முறை மிகவும் அவசியமான ஒன்று.  ஆகையால், அரசின் உள்நாட்டுப் பாதுகாப்பினை மேலும் உறுதிப்படுத்த, பல சிறப்பான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 
  3. ஆரோக்கியம் மற்றும் கல்வி வசதிகள் அனைவருக்கும் கிடைக்க, நல்ல நிர்வாகம் அடித்தளங்களாகக் கருதப்படுகின்றன.   கடந்த ஏழு பத்தாண்டுகளில் நாம் இந்தத் துறைகளில் ஒரு நீண்ட பயணத்தைத் தீர்மானம் செய்திருக்கிறோம்.  அரசு தனது சீரிய சிறப்பான திட்டங்கள் வாயிலாக, உடல்நலத் துறையில் விசேஷமான அழுத்தத்தை அளித்து வருகிறது.  பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரதம் போன்ற திட்டங்கள் வாயிலாக, ஏழைகளின் நலன்கள் குறித்த புரிந்துணர்வு வெளிப்படுத்தப்படுவதோடு, அவர்களுக்கு சிறப்பான ஆதாயங்களும் கிடைத்து வருகின்றன.   ஆயுஷ்மான் பாரதம் திட்டமானது உலகின் மிகப்பெரிய மக்கள் உடல்நலத் திட்டமாகி விட்டது என்பது நம் அனைவருக்குமே தெரியும்.  சாமான்ய மக்களுக்கு, உடல்நலச் சேவைகள் கிடைத்தல் மற்றும் அவற்றின் தரம் ஆகிய இரண்டிலுமே மேம்பாடு காணப்பட்டிருக்கிறது.  மக்கள் மருந்தகங்கள் வாயிலாக மிக மலிவான விலைகளில் தரம்வாய்ந்த ஜெனரிக் மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருப்பதால், சாதாரணக் குடும்பங்களில் சிகிச்சைக்கான செலவினம் குறைந்திருக்கிறது.

அன்புநிறை நாட்டுமக்களே,

  1. பண்டைய காலம் தொட்டே, ஒரு நல்ல கல்விமுறையின் அடித்தளங்கள் நாலந்தா மற்றும் தக்ஷிணஷீலாவின் மகத்தான பல்கலைக்கழகங்களில் நிறுவப்பட்டு விட்டன.  நமது நாட்டில் சக்தி, புகழ், செல்வம் ஆகியவற்றை விட என்றுமே ஞானம் அதிக மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.   இந்தியப் பாரம்பரியத்தில், கல்வியமைப்புகள் ஞானம் பெறும் இடங்கள், அதாவது கல்விக் கோயில்களாகவே கருதப்பட்டு வந்திருக்கின்றன.  நீண்ட நெடுங்காலமாக காலனியாதிக்கம் காரணமாக ஏற்பட்ட துர்பாக்கிய நிலையை அகற்ற, கல்வி மட்டுமே அதிகாரப்பங்களிப்புக்கான வலுவான ஊடகமாக ஏற்பட்டிருக்கிறது.  நமது நவீன கல்விமுறையின் அடிப்படைக் கட்டமைப்பு, சுதந்திரம் கிடைத்தவுடனேயே தொடங்கி விட்டது.  அப்போது நமக்கிருந்த சாதனங்கள் மிகவும் குறைவானவையாகவே இருந்தன.  இருந்தாலும்கூட, கல்வித் துறையில் நமது பல சாதனைகள் குறிப்பிடத்தக்கவை.   நாட்டின் எந்தவொரு குழந்தையோ, இளைஞனோ, கல்வி பெறாமல் இருக்கக்கூடாது என்பதே நமது கல்விமுறையின் நோக்கம்.  கூடவே, கல்விமுறையில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் அதே வேளையில், கல்வியமைப்பில் உலகத் தரத்தை எட்ட, நாம் தொடர்முயற்சிகளை மேற்கொண்டு வர வேண்டும். 
  2.  இந்திய விண்வெளி ஆய்வு மையம், அதாவது இஸ்ரோவின் சாதனைகள் நாட்டுமக்களான நம்மனைவரையும் பெருமிதம் கொள்ள வைக்கின்றன.  இஸ்ரோவின் குழுவானது தனது மிஷன் ககன்யான் திட்டத்தில் முன்னேறி வருகிறது.  மேலும் நாட்டுமக்கள் அனைவரும் இந்த ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்பும் கலம் தொடர்பான திட்டம் மேலும் விரைவு கதியில் முன்னேறுவதை மிகுந்த உற்சாகத்தோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  3. இந்த ஆண்டில் தான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.  பாரம்பரியமான வகையிலே, பல விளையாட்டுக்களில் நம்நாடு சிறப்பாகச் செயல்பட்டு வந்திருக்கிறது.  நமது புதிய தலைமுறை ஆட்டக்காரர்களும், தடகள வீரர்களும், சமீபத்தில் நடைபெற்ற பல விளையாட்டுப் போட்டிகளில் நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.  ஒலிம்பிக் 2020 விளையாட்டுப் போட்டிகளில், இந்தியக்குழுவுடன் கோடிக்கணக்கான நாட்டுமக்களின் நல்வாழ்த்துக்களும் நல்லாதரவின் உத்வேகமாகத் துணைவரும்.
  4. அயல்நாடுகளில்வாழ் இந்தியர்கள் எப்போதுமே நாட்டிற்கு அதிக பெருமை சேர்த்து வந்திருக்கிறார்கள்.  எனது அயல்நாட்டுப் பயணங்களின் போது, அங்கு வாழும் நம் தேசத்தவர்கள், தங்கள் உழைப்பினால் அந்த மண்ணிற்கு வளம் சேர்த்திருப்பதோடு மட்டுமல்லாமல், உலக சமுதாயத்தின் கண்களில் இந்திய நாடு பற்றிய நல்பிம்பத்திற்கு மேலும் அழகு சேர்த்திருப்பதை என்னால் காண முடிந்தது.  பல அயல்நாடுவாழ் இந்தியர்கள் பலவகையான துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். 

நாட்டுமக்களே,

  1. நாட்டின் இராணுவத்தினர், துணை இராணுவத்தினர், உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் ஆகியோரை நான் திறந்த மனதோடு பாராட்டுகிறேன்.  நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றைப் பராமரிக்க அவர்களின் தியாகம், ஈடு இணையற்ற சாகஸம், ஒழுங்குமுறை ஆகியவை காலம் கடந்தும் அவர்கள் பெருமையை பறைசாற்றும்.  நமது விவசாயிகள், நமது மருத்துவர்கள் – செவிலியர்கள், கல்வியையும் நற்பண்புகளையும் அளிக்கும் ஆசிரியர்கள், கடமையே கருத்தாக இருக்கும் விஞ்ஞானிகள் – பொறியாளர்கள், விழிப்பும் உழைப்பும் உடைய இளைஞர்கள், தொழிற்சாலைகளில் தங்கள் வல்லமையைப் பறைசாற்றும் உழைப்பாளர்கள், தொழில்வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பை அளிக்கும் நமது தொழிலாளர் சகோதரர்கள், நமது கலாச்சாரம் கலைகள் ஆகியவற்றுக்கு மெருகூட்டும் கலைஞர்கள், இந்திய நாட்டுச் சேவைத் துறைக்கு உலகெங்கும் பெருமை சேர்க்கும் அனைத்துத் தொழில் வல்லுனர்கள், மேலும் பல்வேறு துறைகளில் தங்கள் பங்களிப்பை அளித்துவரும் நமது நாட்டுமக்கள், குறிப்பாக எல்லா வகையான தடைகளையெல்லாம் தாண்டி, வெற்றியின் புதிய அளவுகோல்களை நிறுவிக் கொண்டே இருக்கும் நமது சாதுர்யம் நிறைந்த பெண்கள்…… இவர்கள் தாம் நமது நாட்டின் பெருமிதங்கள்.
  2. இந்த மாதத்தின் தொடக்கத்தில், கருமமே கண்ணாக இருக்கும் நம் நாட்டினர் சிலரைச் சந்திக்கும், உரையாடும் பேறு கிடைத்தது; அவர்கள் பல்வேறு துறைகளில் பாராட்டத்தக்க பணிகளை ஆற்றியிருக்கிறார்கள்.  எளிமை, அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் அமைதியாகத் தங்கள் பணிகளை ஆற்றிய அதே வேளையில், அறிவியல் மற்றும் புதுமைகள் படைத்தல், விவசாயம் மற்றும் வனவளங்கள் மேம்பாடு, கல்வி, உடல்நலம், விளையாட்டுக்கள், பண்டைய கைவினைத்திறத்தை மீண்டும் பிரபலமாக்குதல், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரப் பங்களிப்பு, ஏழைகளுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான வழிவகைகளை ஏற்படுத்தல் போன்ற பல துறைகளில் மகத்தான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.  எடுத்துக்காட்டாக, ஜம்மு கஷ்மீரத்தில் ஆரிஃபா ஜான் அவர்கள் நமதா தஸ்தகாரீ என்ற கைவினைத் திறனுக்குப் புத்துயிர் அளிப்பதிலும், தெலங்கானாவின் ரத்னாவலீ கோட்டப்பள்ளி அவர்கள் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதிலும், கேரளத்தின் தேவகீ அம்மா அவர்கள் தனது தனிப்பட்ட முயற்சியால் வன வளங்களை மேம்படுத்துவதிலும், மணிப்பூரைச் சேர்ந்த ஜாமகோஜாங் மிஸாவோ அவர்கள் சமூக மேம்பாட்டிற்கான முன்னெடுப்புக்களிலும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாபர் அலி அவர்கள் சிறுவயது முதல் நலிவுற்ற சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியளிப்பதிலும் பாராட்டத்தகுந்த பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட மக்களின் வாழ்வினில் ஒரு நம்பிக்கைக் கீற்றை ஏற்றியிருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட பலர் இருக்கிறார்கள்; நான் ஒரு சிலரின் பெயர்களை மட்டுமே இங்கே கூறியிருக்கிறேன்.  சாமான்ய மனிதர்கள்கூட, தங்களின் குறிக்கோள்கள் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வின் சக்தியால் மாத்திரம், சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை இப்படிப்பட்ட மனிதர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள்.  பெரிய எண்ணிக்கையில், இப்படி பல தன்னார்வ அமைப்புக்களும், அரசோடு கைகோர்த்து, தேசத்தை நிர்மாணிக்கும் இயக்கத்தில், தங்கள் பங்களிப்பை அளித்து வருகிறார்கள். 

என் மனம் நிறை நாட்டுமக்களே,

  1. நாம் 21ஆம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டிற்குள் கால் பதித்திருக்கின்றோம்.  புதிய பாரதத்தின் நிர்மாணம் மற்றும் இந்தியாவின் புதிய தலைமுறையினரின் விடிவெள்ளிப் பத்தாண்டாக இது மலரவிருக்கிறது.  இந்தப் பத்தாண்டிலே பிறந்த இளைஞர்கள், உற்சாகத்தோடு, தேசத்தின் சிந்தனை ஓட்டத்தில் தங்களின் பங்களிப்பை அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.   காலம் கடந்து செல்லச் செல்ல, நமது விடுதலைப் போராட்டத்தின் நேரடி சாட்சியாகத் திகழ்ந்தவர்கள் அனைவரும் நம்மை விட்டு மெல்ல மெல்லப் பிரிந்து சென்று கொண்டிருக்கிறார்கள்; ஆனால் நமது சுதந்திரப் போராட்டத்தின் நம்பிக்கைகள் என்றும் நீக்கமற நிறைந்து நிற்கும்.   தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் காரணமாக, இன்றைய இளைஞர்கள் வசம் பரந்துபட்ட தகவல்வளம் கொட்டிக் கிடக்கிறது என்பதோடு, அவர்களிடம் தன்னம்பிக்கை நிரம்ப இருக்கிறது என்பதும் முக்கியமான ஒன்று.  நமது அடுத்த தலைமுறையினர் நமது நாட்டின் அடிப்படை விழுமியங்களில் ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள்.  அவர்களுக்கு தேசம் தான் என்றுமே அனைத்திற்கும் மேலானதாகத் திகழ்கிறது.  இத்தகைய இளைஞர்களிடத்தில் நான் புதிய இந்தியா உதயமாவதைக் காண்கிறேன்.
  2. தேசத்தின் நிர்மாணத்திற்காக, அண்ணல் காந்தியடிகளின் கருத்துக்கள் இன்றும்கூட முழுமையான அளவு பயனுடையவையாக இருக்கின்றன.  காந்தியடிகளின் வாய்மை மற்றும் அஹிம்சை தொடர்பான செய்தியை நினைத்து பார்த்து அதன் வழிநடப்பது என்பது நமது தினசரி வாடிக்கையாக வேண்டும்.  வாய்மை மற்றும் அஹிம்சை பற்றிய அவரது செய்தி இன்றைய காலகட்டத்தில் மேலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.  எந்த ஒரு குறிக்கோளுக்காகவும் போராடுவோர், குறிப்பாக இளைஞர்கள், காந்தியடிகள் அளித்திருக்கும் அஹிம்சை என்ற மந்திரத்தை என்றும் மறவாமல் இருக்க வேண்டும்; ஏனென்றால் மனித சமூகத்துக்கு இதுவே விலைமதிப்பில்லாத கொடையாகும்.  எந்த ஒரு செயலும் அது உசிதமா, உசிதம் இல்லையா என்பதைத் தீர்மானம் செய்ய காந்தியடிகள் விதித்திருக்கும் மக்கள் நலன் என்ற உரைகல், நமது ஜனநாயகத்தின் மீதும் அமல் செய்யப்படக்கூடியது.  மக்களாட்சியில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு – இருவரின் பங்குபணியுமே மகத்தானவை.  அரசியல் கருத்துக்கள் பற்றிய வெளிப்பாட்டுடன் கூடவே, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நாட்டுமக்களின் நலன் ஆகியவற்றுக்காக இருவருமே இணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும்.  

அன்பான நாட்டுமக்களே,

  1. குடியரசுத் திருநாள் என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கொண்டாட்டம்.  இந்த நாளில், நான் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதன்மைச் சிற்பியான பாபாசாஹேப் அம்பேத்கரின் கருத்துக்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  அவர் என்ன சொன்னார் தெரியுமா?   நாம் மேலோட்டமாக மட்டுமே அல்லாமல், உள்ளார்ந்தரீதியாக ஜனநாயகத்தை நிலைநிறுத்த முதலில், நாம் என்ன செய்ய வேண்டும்?  நமது அரசியல் மற்றும் பொருளாதாரக் குறிக்கோள்களை எட்ட, தீவிரமான அர்ப்பணிப்போடு, அரசியலமைப்புச் சட்டத்தின் துணை ஒன்றையே நாட வேண்டும் என்று நாம் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும் என்றார். பாபாசாஹேப் அம்பேத்கரின் இந்தச் சொற்கள், நமது பாதையை என்றுமே பிரகாசப்படுத்தட்டும்.  அவரது இந்தச் சொற்கள், நமது தேசத்தை கௌரவத்தின் சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்வதில் நிரந்தரமான வழிகாட்டுதலாய் இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. 

பிரியமான நாட்டுமக்களே,

  1. உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதும் வசுதைவக குடும்பகம் என்ற நமது கருத்தியல், மற்ற தேசங்களோடு நமது உறவுகளை பலப்படுத்துகிறது.  நாம் நமது ஜனநாயக விழுமியங்கள், வளர்ச்சி, சாதனைகள் ஆகியவற்றை, ஒட்டுமொத்த உலகத்தோடும் பகிர்ந்து வந்துள்ளோம்.  குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் அயல்நாட்டுத் தலைவர்களை வரவேற்பது நமது பாரம்பரியமாக இருந்து வந்திருக்கிறது.  இந்த ஆண்டும், இந்தப் பாரம்பரியத்தை அனுசரித்து, நாளைய நமது குடியரசுதினக் கொண்டாட்டத்தில், நமது நீண்டகாலத்திய நண்பரான, பிரேசில் அதிபர் ஹாயர் போல்ஸோனாரோ அவர்கள், நம்முடைய மதிப்பிற்குரிய விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கிறார்.    வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்லுகையில், நம்முடைய நாடும், நாட்டுமக்கள் அனைவரும், நம்முடைய எதிர்காலத்திற்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்தின் எதிர்காலமும் பாதுகாப்பாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் இருக்க, உலக சமுதாயத்திற்கு ஒத்துழைப்பும் உதவிகளும் அளிக்க கடமைப்பட்டிருக்கிறோம். 
  2. நான் மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் குடியரசுத் திருநாளுக்கான இதயம்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான எதிர்காலம் அமைய என் பிரார்த்தனைகளை உரித்தாக்குகிறேன்.

ஜெய் ஹிந்த்!!  ஜெய் ஹிந்த்!!  ஜெய் ஹிந்த்!!

காதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்!

0

காதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்!

திருப்பூர் மாவட்டதிலுள்ள தாராபுரம் பகுதியின் அருகேயுள்ள குண்டடம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது வீட்டில் வசித்து வந்துள்ளார். இதே போல இவர்களது வீட்டிற்கு அருகில் இவரது உறவினர் ஒருவருக்கு 17 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவன் இருந்துள்ளான்.

இந்த நிலையில் இந்த சிறுவன் அருகிலுள்ள வேறொரு பெண்ணை பிடித்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணிடம் இவர் தனது காதலை வெளிப்படுத்துவதற்காக அடிக்கடி இந்த பக்கத்துக்கு வீட்டு சிறுமியை பயன்படுத்தி தன்னுடைய காதலிக்கு தூது அனுப்பி வந்துள்ளார்.

அதன் பின்னர் அடிக்கடி சிறுமி வந்து செல்வதால் சிறுவனுக்கு அந்த சிறுமியின் மீது தவறான எண்ணம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த சிறுமி அவர்களது வீட்டில் தனியாக இருந்த போது, இந்த சிறுவன் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளான்.

பின்னர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் இங்கு நடந்ததை பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அந்த சிறுமியை அவன் மிரட்டியுள்ளான். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட அவரது பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி 6 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் தன்னுடைய மகளிடம் இந்த கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று விசாரித்துள்ளனர். அதற்கு அந்த சிறுமி நடந்ததை அனைத்தையும் மறைக்காமல் கூறி உள்ளார்.

இதையடுத்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கற்பழித்த அந்த சிறுவன் மீது புகார் அளித்தனர். இதனையடுத்து விசாரணை நடத்திய காவல் துறையினர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி அந்த சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு

0

2020 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு

ஒவ்வொரு வருடமும் கலை, அறிவியல், சமூக சேவை, வர்த்தகம், தொழில், மருத்துவம், பொதுவாழ்வு, ஆன்மிகம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி, சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு ‘பத்ம’ விருதுகளை வழங்கி அவர்களை கவுரவித்து வருகிறது.

வருடா வருடம் குடியரசு தின விழாவையொட்டி இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது தொடர்ந்து மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2020-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 

அந்த வகையில், மறைந்த முன்னாள் மத்திய மந்திரிகளான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் போன்றோருக்கு இந்த ஆண்டிற்கான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் விளையாட்டுப் பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் மறைந்த பாதுகாப்புதுறை அமைச்சரும் கோவா முதல் அமைச்சரான மனோகர் பாரிக்கர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனை பிவி சிந்து உள்பட 16 பேருக்கு 2020 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷண் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

இவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த டிவிஸ். வேணு சீனிவாசன் , சமூக சேவை செய்து வரும் திருமதி.கிருஷ்ணம்மாள், ஜெகநாதன் உள்பட 16 பேருக்கு 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 7 நபர்களுக்கு பத்ம விபூஷண் விருதும், 16 நபர்களுக்கு பத்ம பூஷண் விருதும், 118 நபர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் இந்த ஆண்டு வழங்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான மாணவி

0

பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான மாணவி

பெண் குழந்தைகள் தினம் என்பதால் அதனை பெருமை சேர்க்கும் வகையில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளியில் நேற்று ஒரு நாள் மட்டும் தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து வருகைப்பதிவேட்டில் காவியா என்ற 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி கையெழுத்திட்டார். அதன்பிறகு ஆசிரியர்களுடன் காவியா ஆலோசனை நடத்தினார் . பிறகு அனைத்து வகுப்புக்கு சென்று ஆய்வு செய்தார் .

காவியா சக மாணவ மாணவிகள்ளுடன் பழகும் மனபான்மை, குணத்தில் சிறந்து விளங்கியாதல் இவருக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தார்.

நன்றாக விக்கெட் கீப்பிங் செய்யும் ராகுல்:பறிபோகிறதா ரிஷப் பண்ட்டின் இடம் ?

0

நன்றாக விக்கெட் கீப்பிங் செய்யும் ராகுல்:பறிபோகிறதா ரிஷப் பண்ட்டின் இடம் ?

இந்திய அணியில் தோனிக்கு மாற்றாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இப்போது தனது இடத்தையாவது தக்க வைத்துக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தோனியின் ஓய்வுகாலம் நெருங்கிய வேளையில் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேட வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி ஐபிஎல் கண்டுபிடிப்பான ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளித்தது. அவரும் முதலில் சிறப்பாக விளையாண்டாலும் அதன் பின் வரிசையாக சொதப்ப ஆரம்பித்தார்.

அதனால் முதலில் டெஸ்ட்டில் இருந்து அவர் தூக்கப்பட்டார். அதன் பிறகு டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தலையில் அடிபட்டதால் தொடரில் இருந்து விலகினார். அதனால் பகுதிநேரக் கீப்பரான ராகுல் அந்த பொறுப்பை ஏற்றார். இரு போட்டிகளிலும் சிறப்பாக பேட் செய்து கீப்பிங்கும் செய்தார். இதனால் அவரேக் கீப்பாராக தொடர்வார் என பேச்சுகள் எழுந்துள்ளன.

இதற்கு முன்னதாக ராகுல் டிராவிட் இதுபோல சில காலம் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்றுக்கொண்டது நினைவிருக்கலாம். ஆனால் பண்ட் ஒரு சிறந்த அதிரடி ஆட்டக்காரர் என்பதும் பின்வரிசை ஆட்டக்காரரும் என்பதும் அவருக்கான அடையாளங்களாக உள்ளது. வெறும் 21 வயதே ஆகும் அவருக்கு இன்னும் சில வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுபற்றி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேள்வி எழுப்பியபோது ‘அணித் தேர்வு என்பது கேப்டனும் தேர்வுக்குழு தலைவர்களும் முடிவு செய்ய வேண்டியது. அதனால் பண்ட் விளையாடுவதும் விளையாடாமல் போவதும் விராட் கோலி எடுக்கும் முடிவு’ என சொல்லியுள்ளார்.

எப்படி இருந்தாலும் அணியில் பண்ட்டின் இடம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. ஆகவே தனது முழுத்திறமையையும் வெளிக்காட்டி தனது இடத்தை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். இல்லையெனில் அவர் இடத்தைக் கொத்திச் செல்ல நிறைய பேர் வரிசையில் நிற்கிறார்கள்.

பி எஸ் என் எல் வாடிக்கையாளர்களே ! இதோ உங்களுக்கான குடியரசு தின சலுகை !

0

பி எஸ் என் எல் வாடிக்கையாளர்களே ! இதோ உங்களுக்கான குடியரசு தின சலுகை !

பி எஸ் என் எல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குடியரசுத் தின சிறப்பு ஆஃபரை அறிவித்துள்ளது.

பி எஸ் என் எல் நிறுவனம் நீண்டகாலமாக 4 ஜி சேவையை பெற மத்திய அரசிடம் இருந்து போராடி வருகிறது. ஆனால் இன்னமும் அது அளிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாத நிலையில் உள்ளது அந்நிறுவனம். இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையில் தத்தளித்து வருகிறது.

இருப்பினும் தனது வாடிக்கையாளர்களுக்காக பல சலுகைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அதனால் வாடிக்கையாளர்களை இழுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று வருகிறது. நாளை குடியரசுத் தினம் கொண்டாடப்பட உள்ளதால அதை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை வழங்கியுள்ளது.

வழக்கமாக 1999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 345 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டா, எல்லையில்லா கட்டண அழைப்பு மற்றும் 100 எஸ் எம் எஸ் கள் வழங்கப்படும். ஆனால் இப்போது இதே வசதிகளை கூடுதலாக 71 நாட்களுக்கு அதாவது 436 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இச்சலுகை 26 ஜனவரி 2020 முதல் 15 பிப்ரவரி 2020 வரை ரீசார்ஜ் செய்பவர்களுக்குக் கிடைக்கும் என அறிவித்துள்ளது.

4 ஜி வசதி இல்லாவிட்டால் கூட இது போன்ற சலுகைகளால் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் பி எஸ் என் எல் க்கும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி மூலமாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் 4 ஜி சேவைக்கான உரிமம் கிடைத்து சிறப்பான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மாஸ்டர்’ படத்தின் சூப்பர் அப்டேட்: குஷியில் விஜய்சேதுபதி ரசிகர்கள்

0

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் இன்னொரு பக்கம் நடைபெற்று வருகிறது
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட்லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாளை மாலை 5 மணிக்கு இந்த படத்தின் மூன்றாவது லுக் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த மூன்றாவது லுக்கில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

எனவே நாளை மாலை 5 மணிக்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் சேதுபதி ரசிகர்களும் குஷியில் இருப்பதால் இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிவரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

அவுட்டானதும் கத்தி அவமானப்படுத்திய ரசிகர்கள்:கோபத்தில் ஸ்டோக்ஸ் சொன்ன வார்த்தை !

0

அவுட்டானதும் கத்தி அவமானப்படுத்திய ரசிகர்கள்:கோபத்தில் ஸ்டோக்ஸ் சொன்ன வார்த்தை !

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களின் கூச்சலால் ஆத்திரமடைந்து கோபத்தை வெளிப்படுத்தியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இப்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வரும் வேளையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களைத் திட்டி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்த போட்டியில் 2 ரன்களில் அவர் அவுட் ஆகி அதிருப்தி அடைந்து பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது ரசிகர்கள் ஏதோ சொல்ல அதற்குக் கோபமான பென் ஸ்டோக்ஸ் ஆத்திரத்தில் கத்தினர். கேமராவில் அவர் ‘தைரியம் இருந்தால்  இதை வெளியே வந்து சொல் பார்ப்போம்’ எனக் கூறியது தெளிவாகக் கேட்டது. இதையடுத்து பென் ஸ்டோக்ஸை சுற்றி சர்ச்சைகள் கிளம்பியது.

இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் தனது டிவிட்டரில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் ‘எனது செய்கைக்காக நான் வருந்துகிறேன். ஆனால் மைதானத்தில் தொடர் கூச்சல் இட்டு ரசிகர்கள் வெறுப்பேற்றியதால் அவ்வாறு நடந்து கொண்டேன். ஆனால் எனது செய்கை எந்த விதத்திலும் சரியானது அல்ல எனப் புரிந்துகொண்டேன். இந்த தொடர் முழுவதும் ரசிகர்கள் இரு அணியினையும் சிறப்பாக உற்சாகப் படுத்தினார்கள். இந்த ஒரு சம்பவம் அதை மாற்றி விடாது.’ எனத் தெரிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸை அவ்வளவு கோபப்படுத்தும் அளவுக்கு அப்படி என்ன சொன்னார் அந்த ரசிகர் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் ‘பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து பாடகர் எட் ஷீரனுடன் ஒப்பிட்டு ஏதோ கூறியதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் தான் சிறந்த கிரிக்கெட்டர் விருதை பென் ஸ்டோக்ஸ் ஐசிசி யிடம் இருந்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.