எல்லையில் இந்தியா பதிலடி 2 பாகிஸ்தான் வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்திய பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி தாக்குவது தொடர்கதையாக உள்ளது இதனிடையே பாகிஸ்தானின் அத்து மீறி தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த கடும் பதிலடியில் அந்நாட்டு வீரர்கள் 2 பேர் பலியாகினர்.
ஜம்மு காஷ்மீர் அக்நூர் மற்றும் சுந்தர் பாரி செக்டார் நேற்று முன்தினமும் நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
இதில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர் இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில் எல்லையில் பாகிஸ்தானின் அத்து மீறலை எதிர்த்து இந்திய தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டது குறைந்தபட்சம் இரண்டு பலி ஆகி இருப்பார்கள் என அவர் தெரிவித்தார்.
மேலும் கடும் பனி மூட்டத்தால் அவர்களின் அடையாளத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் பாகிஸ்தான் வீரர்களின் தகவல் பரிமாற்றும் போது ஒட்டு கேட்ட போது இது உறுதியாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டியில் ரன் மெஷின் என்று அழைக்கப்படுவர் இந்திய கேப்டன் கோலி இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் அடித்த சாதனையை இவர் விரைவில் நெருங்குவார் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். மேலும் அனைத்து விதமான போட்டிகளிலும் பேட்டிங்கில் எதிரணியை கலங்கடிக்க கூடியவர்.
அனைத்து விதமான மைதானங்களிலும் கிட்டத்தட்ட சதங்களை அடித்துள்ள கோலி ஒருநாள் போட்டிகளில் இதுவரை 43 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு அடுத்த இடத்திலும், அடுத்தடுத்த சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலும் உள்ளார்.
அனைத்துவித மைதானங்களிலும் தன் பேட்டிங்கின் மூலம் எதிரணியை கலங்கடித்த கேப்டன் கோலிக்கு இன்று ஒடிசா மாநிலம் கட்டாக் மைதானம் ஒரு ராசியில்லாத மைதானம் ஆகும்.
இங்கு 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 விளையாடிய அவரது ஸ்கோர் விவரம் 3,22, 1, 8 என படு மோசமாக அமைந்துள்ளது அதாவது நான்கு இன்னிங்ஸிலும் வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இது வரை அவர் விளையாடிய மைதானங்களில் இது தான் அவரது மோசமான செயல்பாடாகும் T20 தொடரில் தன் பேட்டிங் மூலம் தொடரை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார் கோலி.
இந்நிலையில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் 4 ரன்களும் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் டக் அவுட்டாகி சொதப்பி உள்ளார். இதனால் இன்றைய போட்டியில் கிங் கோலி நன்றாக பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
மேலும் ராசி இல்லாத மைதானம் என்று கூறப்படும் கட்டாக் மைதானத்தில் தன் பேட்டிங் திறமையை நிரூபித்து ராசியில்லாத மைதானம் என்ற மோசமான வரலாற்று நிகழ்வை மாற்றுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டுவெண்ட்டி 20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டுவெண்ட்டி 20 தொடரில் இந்தியா 2-1 கணக்கில் தொடரை வென்றது.
ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டம் சென்னையில் நடந்தது. இதில் வெஸ்ட்இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும்,2-வது ஒரு நாள் போட்டியில் ஆபாரகமாக விசாகப்பட்டினத்தில் பதிலடி கொடுத்த இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதன் மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடக்கிறது. இந்த ஆண்டில் இந்திய அணி விளையாட உள்ள கடைசி சர்வதேச போட்டி இது.எனவே வெற்றியுடன் தொடரை முடிக்கவேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
தொடக்க ஆட்டத்தில் தடுமாறிய இந்திய அணி விசாகப்பட்டினத்தில் எழுச்சி பெற்றது.
இந்தியா அணியின் தொடர்ந்து பீல்டிங் தான் கவலைக்குரியதாக உள்ளது. இரு ஆட்டங்களிலும் முக்கிய தருணங்களில் இந்திய பீல்டர்கள் கேட்ச்களை கோட்டை கவலை கூறியதாக உள்ளது . தவறுகளை திருத்திக் கொண்டு பீல்டிங்கில் நாம் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.
முதுகுவலி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக 27 வயதான நவ்தீப் சைனி சேர்க்கப்படுவார் என தகவல் கிடைத்து உள்ளது .டாஸ் போடும் போதுதான் ஆடும் லெவேன் அணிவீரர்கள் பற்றி தெரியும்.
இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால், ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ச்சியாக கைப்பற்றிய 10-வது தொடராக பதிவாகும்.
திடீரென விசுவரூபம் எடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரில் இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது.
அந்த அணி இந்தியாவுக்கு எதிராக ஒரு நாள் தொடரை வென்று 13 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் படையினர் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கின்றது.
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி,ஆர்பிஐ அறிவித்திருக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
அதாவது, 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் NEFT மூலம் கட்டணமின்றி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஆர்பிஐ வழிவகை செய்துள்ளது.இதற்கு முன்பு பரிவர்த்தனைக்கு ஏற்றார் போல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன. இப்போது அதை மாற்றி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல்
சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கு NEFT மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் போது பிடித்தம் செய்யப்படும் அனைத்து கட்டணமும் ரத்து செய்யுமாறு ஆர்பிஐ, அனைத்து வங்கிகளுக்கும் தகவல் அனுப்பியுள்ளது.
அதே சமயம்,NEFT மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய இதுவரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயலும் வகையில் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 16ம் தேதி முதல் என்இஎஃப்டி மூலம் 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
நாராயணசாமியை கதறவிடப்போகும் அமித்ஷா! தனக்கு தானே சூடுவைத்து கொண்ட காங் முதலமைச்சர்
புதுச்சேரியில் நேற்று புதிய பஸ் நிலையம் அருகில் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதுவை முதல்வர் திரு நாராயணசாமி அவர்கள் கலந்து கொண்டார்,. அதில் தேசிய குடியுரிமை சட்டத்தை புதுச்சேரியில் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்றும் மத்திய ஆட்சியாளர்கள் எனக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறினார்,.
ஆட்சியே கவிழ்ந்தாலும் தேசிய குடியுரிமை சட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அதிரும் அளவிற்கு பேசி அங்கிருந்த முஸ்லிம் சமுதாயத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் திரு. நாராயணசாமி,.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் இநாராயணசாமி மக்களை ஏமாற்றுகிறார் என்று அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர்,. அதாவது புதுச்சேரி என்பது மாநில அந்தஸ்து கிடையாது அது ஒரு யூனியன் பிரதேசம் ஆகும்,. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கீழ் இயங்குகிறது,.
மத்திய அரசால் கொண்டு வரப்படும் எந்த சட்டத்தையும் அமல்படுத்துவதற்கு யூனியன் பிரதேச அரசை கேட்க வேண்டியதில்லை,. ஏனென்றால் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் நேரடியாகவே சட்டத்தை அமல்படுத்தலாம்,.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் என்பதால் இது போல் பேசி அக்கட்சியின் தலைமையிடம் நற்பெயரைக் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பேசி வருவதாக புதுச்சேரி பாஜகவினர் நாராயணசாமியை கலாய்த்து வருகின்றனர்.
ஏற்கனவே புதுச்சேரியில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் அதிகாரம் மோதல் காரணமாக எந்தத் திட்டமும் சரியாக செயல்படுத்தாமல் கிடப்பில் கிடக்கின்றது,.
இந்த சூழ்நிலையில் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உடனடியாக யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது, இதற்கு போர்க்கொடி காட்டினால், இநாராயணசாமி அவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் தனது ஆட்டத்தை காட்டுவார் என்பது தெளிவாக தெரிகிறது,. இதனால் புதுச்சேரி காங்கிரசார் அமித்ஷாவின் பார்வை நம் மீது திரும்பிவிடுமோ என்று புலம்பி வருகின்றனர்.
81 தொகுதிகளைக்
கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு ஐந்தாவது
மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு
நடந்து முடிந்திருக்கிறது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும்,
காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும்
ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கும்
இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
வாக்கு
எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள
நிலையில் வாக்குப்பபதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், ஆட்சி அமைக்க
41 இடங்கள் தேவை என்ற நிலையில்,
காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில்
வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாட்டில்
பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து கோலோச்சிவந்த பாரதிய ஜனதா கட்சி,
கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பலத்தை இழந்துவருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், 15 ஆண்டுகளாக மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்துவந்த பா.ஜ.க,
ஆட்சியை இழந்தது. அங்கு, காங்கிரஸ் கட்சி
ஆட்சியைப் பிடித்து கமல்நாத் முதலமைச்சராக உள்ளார். உச்சக்கட்டமாக, மகாராஷ்டிராவில் பா.ஜ.க
ஆட்சியை இழந்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன்
அங்கு ஆட்சி அமைத்துள்ளது.
சமீபத்தில்,
சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த
ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சியே
ஆட்சியில் இருந்துவந்தது. அங்கு, ஐந்து கட்டங்களாக
சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த
மாநிலத்தில் , தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், பாரதிய ஜனதா
கட்சி ஆட்சியை இழக்கும் என்று
கூறுகின்றன.
விஷால் நடித்த ’ஆக்சன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ’துப்பறிவாளன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கெளதமி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். பாபநாசம் படத்திற்கு பின்னர் கெளதமி நடிக்கும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால், நந்தா, பிரசன்னா உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்க இருப்பதாகவும் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் இருந்த கணியன் பூங்குன்றனார் என்றா டிடெக்டிவ் கேரக்டர்தான் இந்த படத்திலும் இருப்பதாகவும் இந்த படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மிஷ்கின் இயக்கிய இன்னொரு திரைப்படமான சைக்கோ திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின், நித்யாமேனன், அதிதி ராவ் ஹைத்ரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தன்விர்மிர் ஒளிப்பதிவில் அருண்குமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில்,
வறட்சி, போதிய விளைச்சல் இன்மை, விளைபொருளுக்கு உரிய
விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது.
குறிப்பாக மரத்வாடா மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அதிக
அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.
விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க பயிர்க்கடன்களை தள்ளுபடி
செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள்
வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் புதிதாக பதவியேற்ற சிவசேனா
தலைமையிலான கூட்டணி அரசு விவசாயிகளுக்கான
கடனை தள்ளுபடி செய்துள்ளது. முதல்-மந்திரி உத்தவ்
தாக்கரே நேற்று நாக்பூரில் நடந்த
சட்டசபை கூட்டத்தில் கடன் தள்ளுபடி திட்டத்தை
அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்
“இந்த ஆண்டு செப்டம்பர் மாதம்
30-ந் தேதி வரை நிலுவையில்
உள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இந்த கடன் தள்ளுபடியின் உச்சவரம்பு
ரூ. 2 லட்சம் ஆகும். இது
‘மகாத்மா ஜோதிராவ் புலே கடன் தள்ளுபடி
திட்டம்’ என அழைக்கப்படும்.” என்றார்.
இதைதொடர்ந்து
பேசிய நிதி மந்திரி ஜெயந்த்
பாட்டீல், “இந்த விவசாய கடன்
தள்ளுபடி எந்தவித நிபந்தனையும் அற்றது.
இதுகுறித்த விவரங்கள் உரிய நேரத்தில் முதல்-மந்திரி அலுவலகத்தால் வெளியிடப்படும்”
என்றார்
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ஒரு திரைப்படம் கூட இந்த ஆண்டு வெளியாகவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் அடுத்த ஆண்டு அவருடைய மூன்று படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜகஜ்ஜால கில்லாடி மற்றும் எப்.ஐ.ஆர் ஆகிய இரண்டு படங்களில் விஷ்ணுவிஷால் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான வெற்றிப்படங்களில் ஒன்றான ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்ற படத்தை இயக்கிய செல்லா அப்பாவு மீண்டும் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் ப்ரியா பவானிசங்கருக்கு ஆக்சன் காட்சிகள் இருப்பதால் அவர் தற்போது சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி 2020ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன சிலுக்குவார்பட்டிசிங்கம் போலவே இந்த படமும் விஷ்ணுவிஷாலுக்கு ஒரு திருப்பத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமாவளவன் படத்தை போஸ்டர்களில் தவிர்க்கும் திமுக வேட்பாளர்கள்! நவீன தீண்டாமை இதுதானா?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தடை போட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின,. இதனை நவீன தீண்டாமை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அடிக்கடி தேர்தல் பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டு பேசுவார்,.
இதனை உறுதி செய்யும் வகையில் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் மட்டுமே திருமாவளவன் பிரச்சாரம் செய்தார்,. மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவில்லை, விக்ரவாண்டி இடைத்தேர்தலிலும் திருமாவளவனுக்கு திமுக தடை போட்டதாக தகவல்கள் வெளியாகின இருந்தாலும் அவர் திமுகவிற்காக ஒருநாள் பிரச்சாரம் செய்தார்,.
தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி விட்டதால் ஊரக பகுதிகளில் தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலும் பெரும்பான்மையான மக்களின் சாதி வாக்குகள்தான் வெற்றியாளரை தீர்மானம் செய்யும் என்பது அனைவரும் அறிந்த உண்மை,.
ஊரக உள்ளாட்சி தேர்தல் கிராம பகுதியை சுற்றி நடப்பதால் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் பெரும்பான்மையாக இருக்கிறாரோ அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் தான் ஆண்டாண்டு காலமாக வெற்றிவாகை சூடி வருகிறார்கள் என்பது அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை,. இதன் காரணமாகவே பட்டியலின மக்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்தில் இடஒதுக்கீடு முக்கியத்துவத்தை ஆட்சி கட்டிலில் இருப்பவர்கள் பெருமளவில் கொடுத்து வருகின்றனர்,.
இது ஒருபுறம் இருந்தாலும் கட்சி சார்பு பதவிகளான மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு, தான் சார்ந்த கட்சியோட செல்வாக்கும் கூடவே பெரும்பான்மையான சாதி மக்களின் அடையாளமும் இருந்தால்தான் வேட்பாளர்கள் வெற்றி அடைவார்கள்.
தற்போது, திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் படத்தை விளம்பர போஸ்டர்களில் போடாமல் பல இடங்களில் திமுக வேட்பாளர்கள் தவிர்த்து வருகின்றனர்,. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் உள்ள பெரும்பான்மையான சமுதாய மக்கள் கொண்ட இடங்களில் தேர்தலில் போட்டியிடும் திமுகவினர், திருமாவளவன் படத்தை விளம்பர போஸ்டர்களில் சேர்த்தால் குறிப்பிட்ட பெரும்பான்மையான சமுதாய மக்களின் வாக்குகளை பெற முடியாமல் போகும் என்ற பயத்தில் தவிர்த்து வருகின்றனர்,.
குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பச்சையாங்குப்பம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக பிரமுகர் ஒருவர் திருமாவளவனை படத்தைத் தவிர்த்து விளம்பர போஸ்டரை ஒட்டி உள்ளார்,. மேலும் தஞ்சாவூர் மாவட்டம் ஏழாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக பிரமுகரும் திருமாவளவன் படத்தை விளம்பர போஸ்டர்களில் போடாமல் தவிர்த்துள்ளார்,. தமிழகம் முழுவதும் பல இடங்களில் திருமாவளவன் படத்தை திமுகவினர் புறக்கணித்து வருகின்றனர், இதன்மூலம் திருமாவளவன் உள்ளாட்சித் தேர்தலிலும் நவீனத் தீண்டாமை மூலம் புறக்கணிக்கப்படுகிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கட்சியினர் ஆங்காங்கே கொந்தளித்து வருகின்றனர்,.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் இருந்து விரட்ட வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக சென்னை மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் அவர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேண்டுகோள் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.