நாடு முழுவதும் என்.ஆர்.சி. என்று அழைக்கப்படுகிற
தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.தேசிய
குடியுரிமை திருத்தச் சட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பெரும் வன்முறை போராட்டங்களுக்கு
வழிவகுத்துள்ள நிலையில், தேசிய குடிமக்கள்பதிவேடு தயாரிப்பும் நாட்டு மக்களிடையே பீதியை
ஏற்படுத்தி இருக்கிறது.
இதைப் பீகாரில் அமல்படுத்தப்போவதில்லை என்று
அந்த மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தில் 2004-ம் ஆண்டு செய்யப்பட்ட
திருத்தத்தின்படி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, பிற இடங்களில் பெற்றோர் இந்தியராக
இருந்தாலோ அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களாக இல்லாதபோது அவர்கள் இந்தியர்கள் எனக்
கூறப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், தற்போது யார், யார் இந்தியக்
குடிமக்கள் என்பது பற்றிய மத்திய அரசு தரப்பில் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர், “இந்தியாவில் 1987-ம் ஆண்டு, ஜூலை
மாதம் 1-ந் தேதி அல்லது அந்த தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் அவர்களின் குழந்தைகள் சட்டப்படி
இந்தியக் குடிமக்கள் ஆவர். அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-க்காகவோ, தேசிய
குடிமக்கள் பதிவேட்டுக்காகவோ கவலைப்படத் தேவையில்லை.” என்றார்.
குடியுரிமை விவகாரத்தில், ஆவணங்களைக் காண்பிப்பது
தொடர்பாக எந்தவொரு இந்திய குடிமகனும் தேவையற்ற முறையில் துன்புறுத்தப்படவோ அல்லது சிரமத்துக்கு
ஆளாக்கப்படவோ மாட்டார் என மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது
இஸ்லாமிய
சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வு குறித்தும் விவாதிப்பதற்காக
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உச்சி
மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் இரண்டாம் நாளன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதே
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த தனது
அதிருப்தியை வெளிப்படுத்தினார் பிரதமர் மகாதீர்.
“மதச்சார்பற்ற
நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில்
இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அதேபோன்றதொரு நடவடிக்கையை இங்கு (மலேசியா) மேற்கொண்டால்
என்ன நடக்குமென்பது உங்களுக்குத் தெரியும். அனைவரும் பாதிக்கப்படுவர்,” என்றார் மகாதீர்.
இந்தியா
சுதந்திரம் அடைந்தது முதல் அனைத்துக் குடிமக்களும்
இணைந்து வாழ்ந்து வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும்,
மலேசியாவில் பிற இனத்தவர்களுக்கும் குடியுரிமை
வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“மலேசியாவுக்கு
வந்த இந்தியர்களை நாம் ஏற்றுக் கொண்டோம்.
அதேபோல் சீனர்களையும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், உரிய வகையில்
தகுதி பெறவில்லை என்றாலும் கூட அவர்களுக்குக் குடியுரிமை
வழங்கி உள்ளோம். இப்போது அந்த இனங்களைப்
பிரதிநிதித்துவம் செய்பவர்கள் மலேசிய அரசிலும் இடம்பெற்றுள்ளனர்.”
“சுமார்
70 ஆண்டுகளாக இந்தியக் குடிமக்கள் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் இவ்வாறு சட்டத் திருத்தம்
கொண்டுவருவதற்கான அவசியம் என்ன?” என்று
மகாதீர் கேள்வி எழுப்பினார்.
உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை: கமலை போட்டுத்தாக்கிய எச்.ராஜா
உலகநாயகன் கமலஹாசன் மற்றும் பாஜக தலைவர்கள் அவ்வப்போது வார்த்தை போர் நடத்திக் கொண்டு வருவது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு பாஜக தேசிய தலைவர் ஹெச் ராஜா பதிலடி கொடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தியது குறித்து கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து அவருக்கு உலக அறிவும் சட்ட அறிவும் இல்லை என்பதை நிரூபித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் என்பது ஏற்கனவே நான்கு முறை திருத்தப்பட்டு தற்போது ஐந்தாவது முறையாக திருத்தப்பட்டுள்ளது. இதில் மூன்று முறை காங்கிரஸ் ஆட்சியில் திருத்தப்பட்டது. இதெல்லாம் கமலஹாசனுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவருக்கு உலகநாயகன் என்ற பெயர் வைத்தால் மட்டும் பத்தாது உலக அறிவும் தெரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு சட்டமும் தெரியாது பாராளுமன்ற நடவடிக்கையும் தெரியாது’ என திருவாரூரில் பேட்டியளித்த தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு கமல் ரசிகர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். விரைவில் கமல்ஹாசனிடம் இருந்தும் ஒரு அதிரடியாக பதிலடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டாக் மைதானத்தில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கோலி 85 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு ஆற்றினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் அவர் பெற்றார். இந்த மைதானத்தில் கோலி அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும்
அனைத்து விதமான மைதானங்களிலும் கிட்டத்தட்ட சதங்களை அடித்துள்ள கோலி ஒருநாள் போட்டிகளில் இதுவரை 43 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு அடுத்த இடத்திலும், அடுத்தடுத்த சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலும் உள்ளார்.
அனைத்துவித மைதானங்களிலும் தன் பேட்டிங்கின் மூலம் எதிரணியை கலங்கடித்த கேப்டன் கோலிக்கு கட்டாக் மைதானம் ஒரு ராசியில்லாத மைதானமாக இருந்தது.
இதற்கு முன் இந்த மைதானத்தில் 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 விளையாடிய அவரது ஸ்கோர் விவரம் 3,22, 1, 8 என படு மோசமாக அமைந்திருந்தது. அதாவது நான்கு இன்னிங்ஸிலும் வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஐந்தாவது இன்னிங்ஸ்சனா நேற்றைய போட்டியில் 85 ரன்கள் எடுத்ததன் மூலம் தனக்கு ராசியில்லாத மைதானம் என்ற மோசமான வரலாற்றை கோலி முறியடித்தார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டுவெண்ட்டி 20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டுவெண்ட்டி 20 தொடரில் இந்தியா 2-1 கணக்கில் தொடரை வென்றது.
ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டம் சென்னையில் நடந்தது. இதில் வெஸ்ட்இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும்,2-வது ஒரு நாள் போட்டியில் ஆபாரகமாக விசாகப்பட்டினத்தில் பதிலடி கொடுத்த இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய கேட்டு கொண்டார்.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் லீவிஸும் சாய் ஹோப்ஸ் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கினர். முன்பு போட்டியில் சிக்ஸர்கள் பவுண்டரிகள் அடித்த ஜோடி இந்த போட்டியில் நிதானமாக ஆட்டத்தை ஆடியது.
அணியின் ஸ்கோர் 57 ஆக இருந்தபோது 14-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா போட்ட பந்தை தூக்கி அடித்த லூயிஸ் நவ்தீப் சைனி இடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 20 ஆவது ஓவரில் சாய் ஹோப் விக்கெட்டை முகமது சமி போல்ட் ஆக்கி வெளியேற்றினார்.
ஹெட்மயர் 37 ரன்களும் சேஸ் 38 ரன்களும் எடுத்தனர். அதிரடி ஆட்டக்காரர் பூரான் மற்றும் கேப்டன் பொல்லார்டும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பூரான் 89 ரன்களும் கேப்டன் பொல்லார்ட் 51 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். அதில் 7 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும். 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு அணி 315 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் சைனி 2 விக்கெட்டுகளும் ரவிந்திர ஜடேஜா தாக்கூர் மற்றும் ஷமி தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் கே எல் ராகுலும் நிலைத்து நின்று ஆடினார். நாலாபுறமும் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்தனர்.
ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் அடுத்தடுத்து 50 ரன்களை கடந்தனர் அணியின் ஸ்கோர் 122 ஆக இருந்த பொழுது ரோகித்சர்மா 63 ரன்களில் ஆட்டமிழந்தார் இதில் 8 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும் பின்பு கேப்டன் கோலி உடன் ஜோடி சேர்ந்த கே எல் ராகுல் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினார் அணியின் ஸ்கோர் 167 ஆக இருந்த பொழுது கேஎல் ராகுல் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார்.
அதன்பின் சீரிய இடைவெளியில் இந்தியா விக்கெட் விழுந்துகொண்டே இருந்தது பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ் ஆகியோர் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
பின்பு கோலியுடன் ஜோடி சேர்ந்து ரவீந்திர ஜடேஜா நிலைத்து நின்று ஆடினார் இந்த ஜோடி வெற்றி இலக்கை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தது இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 286 ஆக இருந்த பொழுது பால் பந்தில் 85 எடுத்து இருந்த கோலி போல்டு ஆனார்.
கோலி அவுட்டான பிறகு இன்றைய தோற்றுவிடும் என்னும் என்ற எண்ணம் ரசிகர்களை வருடியது பிறகு ஜடேஜா உடன் தாக்கூர் இணைந்து ஆடினார். காட்ரல் வீசிய ஒரு ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என்று பறக்கவிட்டு வெற்றியை எளிதாக்கினார் தாக்குர்.
48.4 ஓவரில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 316 எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் 39 ரன்களை எடுத்த ரவீந்திர ஜடேஜா கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2க்கு 1 என்று கைப்பற்றியது. ஆட்டநாயகனாக கேப்டன் கோலியும் தொடர் நாயகனாக ரோகித் சர்மாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஸ்டாலின் காரை வழிமறித்து முரசொலி மூல பத்திரத்தை கேட்ட பாஜக! பதற்றத்தில் உறைந்த திமுக உபிக்கள்
மதுரையில் திமுக ஆதரவு பெற்ற கிறிஸ்தவ அமைப்புகள் சார்பாக நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் இன்று மதுரை சென்றடைந்தார்.
விழா நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்லும்போது மதுரை பாஜகவினர் கட்சி கொடியுடன் பத்திற்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் சென்ற காரை திடீரென வழிமறித்து முரசொலி அலுவலக மூலப் பத்திரத்தை கேட்டனர். இதனையடுத்து ஸ்டாலின் சென்ற காரும் சில நொடிகள் நின்றது.
இதனை சற்றும் எதிர்பாராத அவரது பாதுகாவலர்கள் பதற்றம் அடைந்தனர். இந்நிலையில் சூழ்நிலையை புரிந்து கொண்ட பாதுகாவலர்கள் பாஜகவினரை உடனடியாக அப்புறப்படுத்தினர்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர், பாஜகவினரை தாக்க முற்பட்ட பிறகு கலைந்து சென்றனர். மதுரையில் நடைபெற்ற இந்நிகழ்வு திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யூட்யூபில் நிறுவனம் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மற்றும் அனைத்து விதமான வீடியோக்களை பார்க்க கூடிய தளத்தில் முதல் நிறுவனம் ஆகும்.
பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் இதில் வருமானத்திற்காக பல பேர் இந்த தளத்தில் யூடியூப் சேனல்கள் உருவாக்கி வருகின்றனர். அதில் கணிசமான வருமானங்களையும் பெற்று வருகின்றனர்.
குறைந்த அளவு முதல் நிறைவான வருமானம் வரை பெற்று வருகின்றனர். அதில் நிறைவான வருமானம் பெறுபவர்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ஜூன் 1, 2018-ம் ஆண்டு முதல் ஜூன் 1, 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் அதிகம் சம்பாதித்தவர்கள் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் காஜி முதலிடம் பிடித்துள்ளார்.
2015-ம் ஆண்டு தன்னுடைய 3 வயதில் Ryan Toys Review என்ற பெயரில் யூடியூப் சேனலை பெற்றோர்கள் உதவியுடன் சிறுவன் ரியான் காஜி தொடங்கினார். விளையாட்டு பொருட்களை பயன்படுத்துவது குறித்த வீடியோக்களை பதிவிடுவதுதான் ரியான் வழக்கம்.
தற்போது ரியான்ஸ் உலகம்(Ryan’s World) என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ள இந்த யூடியூப் சேனலுக்கு 2.2 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர், 2019-ம் ஆண்டில் மட்டும் யூடியூப் சேனல் மூலம் 185 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். இதன் மூலம் யூடியூப்பில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
ரியான்க்கு அடுத்தபடியாக ரஷ்யாவைச் சேர்ந்த 5 வயது சிறுமி அனஸ்தீசியா 128 கோடி சம்பாதித்து அடுத்த இடத்தில் உள்ளார்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பின் எதிர்ப்பு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிர கட்டத்தை எட்டி வருகின்றன.
மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்ட களத்தில் இறங்கினர். சென்னை பல்கலை கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மற்றும் நடிகர் சித்தார்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் நாளை தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருந்த நிலையில்.
தி.மு.க. வின் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில், தி.மு.க. பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிகிச்சைக்காக கமல்ஹாசன் வெளிநாடு சென்றுள்ளதால் சென்னையில் டிசம்பர் 23-ம் தேதி நடைபெறும் தி.மு.க. பேரணியில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 26ஆம் தேதி சூரியன், நிலவு, பூமி என மூன்றும் ஒரே நேர் கோட்டிற்கு வருகின்றன. இதனால் சூரிய வெளிச்சத்தை சில மணி நேரம் நிலவு மறைக்கும். சூரியனை முழுவதுமாக நிலவு மறைப்பதால் முழு சூரிய கிரகணம் ஏற்படவிருக்கிறது.
சூரியனை நிலா முழுமையாக மறைத்தால் அது முழு சூரியனின் மையப் பகுதியை மட்டும் சந்திரன் மறைத்து விளிம்பில் வளையம் போல விழுகிறபோது அது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.
இது ஒரு அபூர்வ நிகழ்வாகும் இந்தியாவில் தமிழ்நாட்டிலும் கர்நாடக மாநிலத்தின் சில இடங்களிலும் கேரளாவின் சில பகுதிகளிலும் இந்த சூரிய கிரகணம் தெரியும்.
தமிழ்நாட்டில் பொறுத்தவரை அதிக அளவில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும் 26 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் 11. 16 வரை மணி வரை இதை பார்க்கமுடியும்.
தமிழ்நாட்டில் குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் சூரிய கிரகணம் முழுமையாக தெரியும்.
மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணத்தை காண தமிழகத்தில் 11 இடங்களில் விஞ்ஞான பிரச்சார் அறிவியல் கணித அறிவியல் நிறுவனம் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஏற்பாடு செய்திருந்தது.
இது குறித்து விஞ்ஞான பிரச்சார் விஞ்ஞானி டிவி வெங்கடேசன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் சௌந்தரராஜ பெருமாள் ஆகியோர் கூறுகையில்.
இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது என்றும் அதற்கென்று இருக்கும் கண்ணாடி வழியாக பார்க்க வேண்டும் அதற்காக தமிழகத்தில் முழு சூரிய கிரகணம் தெரியும் 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னையிலும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார் சூரிய கிரகணம் வரும் நேரத்தில் வெளியே செல்லக்கூடாது என்பது சொல்வது தவறு சாதாரணமாக வெளியே செல்லலாம் வெறும் கண்களால் மட்டும் பார்க்கக் கூடாது என்று கூறினார்.
இதற்கு பிறகு 2031 ஆம் ஆண்டு தான் தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தேனி சூரிய கிரகணத்தை பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பின் எதிர்ப்பு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிர கட்டத்தை எட்டி வருகின்றன.
மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்ட களத்தில் இறங்கினர். சென்னை பல்கலை கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மற்றும் நடிகர் சித்தார்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, டெல்லி, பெங்களூரு, சென்னை, லக்னோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரி, மாணவர்கள், தொடர்ந்து பல்வேறு முறைகளில் போராடி வருகின்றனர் ரயில் மறியல் போன்ற போராட்டங்களும் நடந்தவண்ணம் உள்ளன.உத்திரபிரதேசத்தில் நடந்த வன்முறையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது இதில் 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கர்நாடக மாநிலம் மங்களூரில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் . மங்களூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போலீசாரை தாக்க முற்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் படுகாயமடைந்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில், மங்களூருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.