இந்துக்கள் முஸ்லீம் மதத்திற்கு மாறியது ஏன்? பிரபல நடிகரின் விளக்கம்
குடியுரிமை சீர்திருத்த சட்டம் அமலானதில் இருந்தே இஸ்லாம், இந்து என பேதம் பிரித்து அரசியல்வாதிகள் அரசியல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரு மதங்கள் குறித்தும், இந்துக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் என்பது குறித்தும் நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
இஸ்லாமியர்கள், அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான் தான் அவர்களது நாடு என்பது போலவும், பாமர மக்களின் மனங்களில் பிரிவினையை உண்டாக்குவதற்கான, நச்சுக்கருத்துக்களை, காலங்காலமாக விதைத்து வந்தனர், வருகின்றனர்.
இந்த பொய்ப்பிரச்சாரங்கள் ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது. சத்தியத்தை யாராலும் புதைத்து விட முடியாது. இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களின் இரத்த சொந்தங்கள். இந்து மதத்திலுள்ள தீண்டாமை போன்ற, இன்ன பிற கொடுமைகளால், அந்த வாழ்க்கை முறையிலிருந்து தப்பித்து, சுய மரியாதையைப்பேணவும், சமத்துவத்தை அனுபவிக்கவும், அதற்கு வழி வகுத்துத்தந்த இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு மாறியவர்கள். ஒவ்வொரு மனிதனும், தனக்குப்பிடித்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக்கொள்வது, அவனவனுடைய அடிப்படை சுதந்திரம். இதை “இந்திய அரசியல் சாசன சட்டம்” உறுதி செய்திருக்கிறது.
ஒரே தாய், தந்தையருக்கு பிறந்த பிள்ளைகள், அவரவருக்கு பிடித்தமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக் கொள்வதில்லையா, அதே போலத்தான் இதுவும். எல்லா மதத்தினரும் இந்திய தேசத்தின் பிள்ளைகளே என் தகப்பனாரின் மூதாதையர்கள், சேதுபதிச்சீமையின் மறவர் குலம். என் தாயாரின் மூதாதையர்கள், சேதுபதிச்சீமையின் மீனவர் குலம். எனது மூதாதையர் காலத்தில், சேதுபதிச்சீமையில், பள்ளு, பறை என்று 18 சாதிகள் இருந்தனவென்றும், அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறி, சாதிகளற்று, சம்பந்தம் பண்ணிக் கொண்டார்கள் என்றும், என் தாயார் எனக்கு சொல்லியிருக்கிறார்கள். அதனால், எல்லா சாதியிலும் எனக்கு சொந்த பந்தங்கள் உண்டு. பேதங்கள் அற்றதே பெரு வாழ்வு. அதில் மனித நேயமே மாண்பு” என்று கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்
மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சென்னை பல்கலைக்கழகத்துக்கு வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஜனவரி 1-ந்தேதி வரையில் 9 நாட்கள் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாணவர்கள் போராட்டம் செய்ததை தொடர்ந்து
இன்று முதல் 23-ந்தேதி வரையில் 6 நாட்கள் புதிதாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி நீண்ட நாட்கள் விடுமுறை விட்டால் மாணவர்கள் கலைந்து சென்று விடுவார்கள் என்கிற நோக்கத்தோடு தொடர் விடுமுறையை பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் ஒரு பிரிவினர் கல்லூரியை விட்டு வெளியேறாமல் உள்ளேயே அமர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் போராட்டம் நீடிப்பதையொட்டி பலகலைக்கழக வளாகம் மற்றும் மெயின் வாசலில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்கலை கழக மாணவர்கள் போராட்டத்தை முடக்கும் விதமாக நடந்து கொண்ட பல்கலைக்கழகத்திற்கு தன் கண்டனத்தை தெரிவித்தார்.மேலும் நான் கட்சியின் தலைவனாக வரவில்லை இந்தியனாக இங்கு வந்தேன் என கூறினார்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட இருக்கிறது.
நடை திறந்த முதல் நாளில் இருந்து சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. வருகிற 27-ந்தேதி பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடைபெற உள்ளது. மண்டல பூஜைக்கு நாள் நெருங்குவதால் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
இதனால் பக்தர்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற 26-ந்தேதி சூரிய கிரகணம் ஏற்படுவதால் சபரிமலை கோவில் நடை அன்று 4 மணி நேரம் அடைக்கப்படுகிறது.
26-ந்தேதி அதிகாலை 3 மணி முதல் நடை திறக்கப்பட்டு காலை 6.45 மணி வரை திறந்து இருக்கும். தொடர்ந்து பூஜைக்கு பிறகு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். 4 மணி நேரத்திற்கு பிறகு பகல் 11.30 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும்.
தொடர்ந்து பரிகார பூஜைகளும், கலசாபிஷேகமும் நடைபெறும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு விசேஷ தீபாராதனை காட்டப்படும். மறுநாள் 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறும்.
சென்னை பல்கலை கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்?
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சென்னை பல்கலைக்கழகத்துக்கு வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஜனவரி 1-ந்தேதி வரையில் 9 நாட்கள் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாணவர்கள் போராட்டம் செய்ததை தொடர்ந்து இன்று முதல் 23-ந்தேதி வரையில் 6 நாட்கள் புதிதாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி நீண்ட நாட்கள் விடுமுறை விட்டால் மாணவர்கள் கலைந்து சென்று விடுவார்கள் என்கிற நோக்கத்தோடு தொடர் விடுமுறையை பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் ஒரு பிரிவினர் கல்லூரியை விட்டு வெளியேறாமல் உள்ளேயே அமர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டம் நீடிப்பதையொட்டி பலகலைக்கழக வளாகம் மற்றும் மெயின் வாசலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரபல மாடல் அழகியின் மாளிகையில் ரூ.470 கோடி மதிப்பு நகைகள் கொள்ளை
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஒருவரது வீட்டில் ரூபாய் 470 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரபலமான மாடல் அழகி தமரா எக்லெஸ்டோன் என்பவராவார்.
35 வயதான இவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகளுடன் சொகுசு மாளிகையில் தங்கி உள்ளார். இந்த மாளிகை 55 அறைகளை கொண்டது என்பதும் இந்த மாளிகையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு கொண்டது என்பதும், மாளிகை அமைந்துள்ள வீதியில் இரவு பகலாக காவல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாடல் அழகி தமரா எக்லெஸ்டோன் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட தனது கணவர் மற்றும் மகளுடன் பின்லாந்து நாட்டிற்கு சென்று இருந்தார். இதை தெரிந்துகொண்ட கொள்ளையர்கள் இவரது மாளிகைக்குள் நள்ளிரவில் புகுந்து அவரது படுக்கை அறையில் இருந்த சுமார் ரூ.470 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாடல் அழகி தமரா எக்லெஸ்டோன், ‘24 மணி நேரமும் கடுமையான பாதுகாப்பு இருந்தும் இத்தனை பாதுகாப்பையும் மீறி கொள்ளையர்கள் எப்படி கொள்ளையடித்தார்கள் என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தக் கொள்ளைக்கு காவலர்கள் துணை இருக்கலாம் என்று அவர் சந்தேகம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து இங்கிலாந்து போலீசார் பாதுகாப்பு காவலர்கள் அனைவரிடமும் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. கடுமையான பாதுகாப்பையும் மீறி 470 கோடி ரூபாய் நகைகளை மாடல் அழகி வீட்டில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நாட்டையே பெரும் பரபரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் நபர்கள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி போன்ற இடங்களுக்கு ஏற்றவாறு 40 முதல் 120 வரை வசூல் செய்கின்றனர்.
இது தொடர்பாக சிலிண்டர் நிறுவனங்களுக்கு புகார் தெரிவித்தும் indane, Bharatgas மற்றும் hindustan petroliam ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் செய்பவருக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டாம் என Indane நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
சில்லரை விலை என்பது வாடிக்கையாளர்களின் சமையல் அறை வரை சிலிண்டரை டெலிவரி செய்வதற்கான தொகையாகும். வாடிக்கையாளர்கள் ரசீதில் உள்ள விலைக்கு மேல் டெலிவரி செய்பவருக்கு தொகை எதுவும் கொடுக்க வேண்டாம். என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ரசீதில் உள்ள சில்லரை விலைக்கு மேல் தொகை கோரப்பட்டால் வாடிக்கையாளர் இண்டேன் சேவை மையத்தை காலை 9.30 மணி முதல் மாலை 5.15 வரை தொடர்பு கொண்டு புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதர புகார்களுக்கு 18002333555 என்ற இலவச எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பாக இந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு போடப்பட்டது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த மனு தொடர்பாக மத்திய அரசு 2 வாரத்திற்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதி ஒத்திவைத்துள்ளது.
11 ஆண்டுகள் கணவரின் உடலை பிரிட்ஜில் வைத்திருந்த மனைவி: அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் 75 வயது பெண் ஒருவர் தனது இறந்த கணவரை 11 ஆண்டுகளாக பிரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜீன் மாதர்ஸ் என்ற 75 வயது பெண் சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி மரணம் என்பதால் அவரது உடலை ராணுவ முறைப்படி அடக்கம் செய்ய ராணுவ வீரர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர்
அப்போது அவரது வீட்டை சோதனை செய்தபோது அவரது வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் ஒன்றில் அவரது கணவர் உடல் இருந்ததை கண்டு ராணுவ வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு இறந்த ராணுவ வீரரை அவரது மனைவி 11 ஆண்டுகளாக ஃப்ரிட்ஜில் வைத்து இருப்பது தெரியவந்தது
மேலும் இறந்த ராணுவ வீரரின் உடலின் அருகே 2008ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு கடிதம் கிடைத்துள்ளது. ஆனால் இந்த கடிதத்தில் உள்ள விபரங்களை ராணுவ அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனர். இதனால் அதில் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய விஷயங்கள் இடம்பெற்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கணவரின் உடலை 11 ஆண்டுகளாக ப்ரிட்ஜில் வீட்டிலேயே வைத்திருந்த மனைவி குறித்த தகவல் வெளியானதிலிருந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஈழத்தமிழர் நலன் பற்றி திமுக பேசுவது
சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமானது! இராமதாஸ் வெறித்தன பதிலடி
காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஈழத்தமிழர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி துரோகமிழைத்து விட்டதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு துணை நின்றதுடன், அதற்கு கூலியாக புதிய அமைச்சரவையில் கூடுதல் துறைகளை பெற்றுக் கொண்ட திமுக, ஈழத்தமிழர் நலன் குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமானது.
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பதை பாட்டாளி மக்கள் கட்சி தடுத்து விட்டது என்பது தான் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டு ஆகும். ஈழத் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து அவருக்கு சரியான புரிதல் இருந்திருந்தாலோ, ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறை இருந்திருந்தாலோ இப்படி ஒரு கருத்தை அவர் கூறியிருந்திருக்க மாட்டார். ஈழத் தமிழர்களின் தேவை இந்தியக் குடியுரிமை அல்ல. அவர்களின் கோரிக்கை இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான உத்தரவாதம் அல்லது இந்தியா அல்லது இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வாழ்வதற்கான இரட்டைக் குடியுரிமை தான்.
2009-ஆம் ஆண்டு இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்ய துணை நின்றதால் ஏற்பட்ட அவப்பெயரில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைத்த அப்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர், அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், ஈழத்தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றச் செய்தார். அதனடிப்படையில் அப்போதைய பிரதமருக்கு கடிதம் ஒன்றையும் கலைஞர் எழுதினார். ஆனால், அதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை என்ற முழக்கத்தை திமுக கைவிட்டது.
ஈழத்தமிழர்களைப் பொருத்தவரை இந்தியாவில் குடியுரிமை பெற்று விட்டால், அதன்பின்னர் ஈழத்திற்கு திரும்ப முடியாது; தங்களின் தாயகமான ஈழத்தை நிரந்தரமான இழந்து விடுவோம் என அஞ்சுகின்றனர். அதனால் தான் ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு சென்றவர்களில் பெரும்பான்மையானோர் இன்னும் குடியுரிமை பெறாமல் வசிக்கின்றனர். அதேநேரத்தில் என்றாவது ஒரு நாள் தாயகம் திரும்ப இயலும் என்று நினைக்கும் ஈழத்தமிழர்கள், அதுவரை தமிழகத்தில் தாங்கள் கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அதனால் தான் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அவர்களுக்கு எத்தகைய குடியுரிமை வேண்டும் என்பதை, அவர்களின் விருப்பம் அறிந்து அதற்கேற்றவாறு தீர்மானிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
ஆனால், தமிழக அரசியல் வரலாற்றையே அறியாத மு.க.ஸ்டாலின், ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பை அறியாமல், ஏதோ அவர்களைக் காக்க வந்த தேவதூதனே தாம் தான் என்பதைப் போல பேசுகிறார். ஒருவேளை மு.க.ஸ்டாலின் மூச்சு முட்ட பேசுவதைப் போல ஈழத்தமிழர்களின் தேவை இந்தியக் குடியுரிமை என்றாலும் கூட, அதற்காக இலங்கைப் பிரச்சினை தீவிரமடைந்த 1983-ஆம் ஆண்டுக்கு பிறகு திமுக தமிழகத்தை ஆட்சி செய்த 12 ஆண்டுகளிலும், மத்திய அரசில் அங்கம் வகித்த 18 ஆண்டுகளிலும் சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது தான் உண்மை. இதை திமுகவால் மறுக்க முடியுமா?
2009-ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று முப்பெரும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, அதன்பின்னர் 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிலும் அதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரு தருணங்களிலும், மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. இப்போது குடியுரிமைச் சட்டத்தில் எத்தகைய திருத்தங்களை செய்ய வேண்டும் என்று திமுக கூறுகிறதோ, அத்தகைய திருத்தங்களை அப்போதே காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றச் செய்திருக்கலாம். அதை செய்யாதது ஏன் என்பதை ஸ்டாலின் விளக்குவாரா?
ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று இப்போது முழங்கும் திமுக, தங்கள் ஆட்சியின் போது தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களை மரியாதையுடனாவது நடத்தியதா? திமுக ஆட்சியில் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள் அனைவரும் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் தான் நடத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டனர்.
ஈழத்தமிழர்களை கொடுமைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் முதன்முதலில் கலைஞர் ஆட்சியில் தான் 1990-ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் உள்ள திப்பு மகாலில் தொடங்கப்பட்டது. விடுதலைப்புலிகளை அடைத்து வைக்க இந்த முகாம் அமைக்கப்பட்டதாக அறிவித்த திமுக அரசு, அப்பாவி ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்குவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அழைத்து வந்து வேலூர் முகாமில் அடைத்தது. அதை எதிர்த்து போராட்டம் நடத்திய ஈழத்தமிழ் இளைஞர்கள் மீது தேவாரம் தலைமையிலான தனிப்படையை அனுப்பி துப்பாக்கிச்சூடு நடத்தி இரு இளைஞர்களை சுட்டுக் கொன்றது திமுக அரசு தான். அதுமட்டுமின்றி, 130 இளைஞர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்ததும் திமுக அரசு தான்.
ஈழத்தமிழ் அகதிகளுக்கு திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் இத்துடன் நின்றுவிடவில்லை. 2009-ஆம் ஆண்டில் இலங்கைப் போர் முடிவடைந்த நிலையில், செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று உண்ணாநிலை இருந்தனர். இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்ட பிறகு ஒரு சில அகதிகள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களும் தங்களை விடுதலை செய்யக்கோரி 2010-ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில், சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர். அப்போது 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி செங்கல்பட்டு சிறப்பு முகாம்களுக்குள் 150 காவலர்களை அனுப்பிய திமுக அரசு, அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த 15 பேர் மீது காவலரை கடத்தி சிறைவைத்ததாக பொய்வழக்கு பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்த கொடுமையை செய்தது திமுக அரசு தான். உலகிலேயே அனைத்தையும் இழந்த அகதிகள் மீது துப்பாக்கிச் சூடும், கொலைவெறித் தாக்குதலில் நடத்திய பெருமை திமுக அரசுக்கு தான் உண்டு. இவர்கள் தான் ஈழத்தமிழர்களுக்காக இரக்கப்படுகிறார்களாம்.
ஈழத்தமிழர்களுக்காக இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக, ஈழத்தில் போர் நடந்த போது நடத்திய நாடகங்களும், அடித்த பல்டிகளும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவை. இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்ட போது கலைஞர் நடத்திய 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை மறக்க முடியுமா?
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் தான் சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிட்டேன் என்று கூறிய அப்போதைய முதலமைச்சர் கலைஞரிடம், ‘‘இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்களே?’’ எனக் கேட்ட போது, ‘‘மழை விட்டு விட்டது…. தூவானம் விடவில்லை’’ என்று நக்கல் செய்ததை மன்னிக்க முடியுமா?
இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்பதற்காக முத்துக்குமார் என்ற இளைஞர் சென்னையில் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார். தனது உடலையே ஆயுதமாக்கி, ஈழப்போருக்கு எதிராக போராட வேண்டும் என்று அவர் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி போராட தமிழக இளைஞர்கள் ஆயத்தமான போது, முத்துக்குமாருக்கு தமிழக மக்கள் அஞ்சலி செலுத்த விடாமல் திமுக அரசு தடுத்ததையும், இறுதி ஊர்வலத்தில் கூட தடியடி நடத்தியதையும் மறக்க முடியுமா… மன்னிக்க முடியுமா?
இலங்கைப் போரை தடுத்து நிறுத்தக் கோரி தமிழகத்தில் 18 பேர் உயிர்த்தியாகம் செய்ததை திமுக அரசு கொச்சைப்படுத்தியதை மறக்க முடியுமா?
இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த போது, தில்லியில் முகாமிட்டு, திமுகவுக்கு கூடுதல் அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் கலைஞர் பேரம் நடத்தியதை மன்னிக்க தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை.
இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் துயரம் கூட மறையாத நிலையில், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழியும், டி.ஆர். பாலுவும் இராஜபக்சேவின் விருந்தினர்களாக அவரது மாளிகைக்கு சென்று விருந்து உண்டதுடன், கொலைகாரனின் கைகளில் இருந்து பரிசுப்பெட்டிகளையும் வாங்கி வந்தார்களே…. அதை தமிழர்கள் மன்னிப்பார்களா?
இலங்கை அரசால் பல ஆண்டுகள் சிறைக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, அதனால் பக்கவாதம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக 2010&ஆம் ஆண்டு ஏப்ரல் 16&ஆம் தேதி இரவு சென்னைக்கு வந்த போது, 80 வயது மூதாட்டி என்றும் பாராமல் விமானத்தை விட்டு, இறங்குவதற்கு கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி, அவரது மறைவுக்கு வழிவகுத்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு தானே? இதைவிட மாபாதகச் செயல் வேறு ஏதேனும் இருக்க முடியுமா?
ஈழத்தமிழர் விவகாரத்தில் ஏற்பட்ட அவப்பெயரை துடைக்கும் நோக்கத்துடன் 2012&ஆம் ஆண்டில் டெசோ அமைப்பை மீண்டும் ஏற்படுத்தினார் அப்போதைய திமுக தலைவர் கலைஞர். அந்த அமைப்பின் சார்பில் 2012 ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை இராயப்பேட்டையில் தமிழீழ ஆதரவு மாநாடு நடத்தப் படும் என்று ஜூலை மாதத்தில் திமுக அறிவித்தது. அடுத்த சில நாட்களில், அதாவது ஜூலை 15-ஆம் தேதி திமுக தலைவர் கலைஞரை, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சந்தித்து பேசினார். அதுவரை தமிழீழ கோரிக்கையை வலியுறுத்துவதற்காகத் தான் தமிழீழ ஆதரவு மாநாடு நடத்தப் போவதாக கூறி வந்த கலைஞர், இந்த சந்திப்புக்குப் பிறகு மாநாட்டின் தலைப்பில் கூட தமிழீழம் இருக்கக்கூடாது என்று கருதி மாநாட்டின் பெயரையே ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்று மாற்றினார். அதுமட்டுமின்றி மாநாட்டில் தமிழீழம் என்ற வார்த்தையே உச்சரிக்கப்படவில்லை; தமிழீழத்தை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதை விட மோசமானதொரு கொத்தடிமைத்தனம் இருக்க முடியுமா? இதைவிட பெரிய துரோகத்தை ஈழத்தமிழருக்கு செய்ய முடியுமா?
அவ்வளவு ஏன்? விடுதலைப் புலிகள் இயக்கமே இல்லாமல் போய்விட்ட நிலையில், அந்த இயக்கத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்ற மக்களவையில் திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு பேசினாரே? ஈழத்தமிழர் விடுதலைக்காக போராடிய அமைப்பை இதைவிட மோசமாக கொச்சைப்படுத்த முடியுமா?
1992-ஆம் ஆண்டில் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களை கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்ப முயற்சிகள் நடந்ததன. அதை திமுகவும், அதன் தலைமையும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தன. மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தியது நானும், தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களும் தான். அதே ஆண்டில் தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி ஈழத்தமிழர் நலனுக்காக குரல் கொடுத்ததும் பாட்டாளி மக்கள் கட்சி தான்.
திமுகவைப் பொருத்தவரை ஈழத்தமிழர் நலனுக்காக எதையும் செய்ததும் இல்லை…. செய்யப் போவதும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அஞ்சி, தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்திற்கு கஜினி முகமதுவைப் போன்று படையெடுத்த திமுக, இப்போது ஒரு சில இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பதற்காக இப்போது ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களைப் போல நடிக்கிறார்கள். திமுகவின் இந்த புதிய நாடகம் தமிழக மக்களிடம் எடுபடாது; தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.
ஈழத்தமிழர் நலன்களுக்காக கடந்த 36 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த போதெல்லாம் துரும்பைக் கூட அசைக்காதது தான் திமுக. பல நேரங்களில் தமிழீழம் என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட அஞ்சிய இயக்கம் தான் அது. இப்படியாக ஈழத்தமிழர் நலனில் ராஜபக்சேக்களாகவும், ஜெயவர்தனேவாகவும் இருந்த இப்போது பிரபாரகரன் வேடம் போட்டு மக்களை ஏமாற்றத் துடிக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு திமுக இழைத்த துரோகங்கள் குறித்து பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்…. மு.க.ஸ்டாலின் தயாரா?
MP தேர்தலில் இழந்த வாக்குகளை உள்ளாட்சி தேர்தலில் தந்திரமாக வாங்குமா பாமக?
ஒருவழியாக புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்! தோல்வி பயம் காரணமாக வழக்கு மேல் வழக்கு தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நிறுத்திவிடலாம் என்று கணக்கு போட்ட திமுக கடைசியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் வாயிலாகவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை திமுக விரும்பவில்லை என்று கண்டனம் தெரிவித்துவிட்டார்.
இருந்தபோதிலும் விடாப்பிடியாக மாநில தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது திமுக. இதிலிருந்தே தோல்வி பயம் திமுகவிற்கு உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது. விழுப்புரம், கடலூர், தர்மபுரி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை, திண்டுக்கல் ஆகும். ஏழு தொகுதிகளில் ஐந்து தொகுதிகள் வன்னியர்கள் பலமிக்க தொகுதியாகும் திண்டுக்கல் மற்றும் மத்திய சென்னை தொகுதியில் மட்டும் வன்னியர்கள் கணிசமாக உள்ளனர்.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையின் காரணமாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்தது. இக்கட்சியின் தோல்வி குறித்து ஆய்வு செய்ததில் இரு காரணங்கள் முக்கியமாக முன் நிற்கின்றன,. அதில் ஒன்று தலித் சமுதாயத்திற்கு எதிரான கட்சி என்ற தோற்றத்தை திமுகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்து திட்டமிட்ட விஷமப் பிரச்சாரம் காரணமாக பாமக, பெரும்பான்மையான தலித் வாக்குகளை பெற தவறிவிட்டது.
முக்கியமாக தலித் வாக்குகள் பெருமளவில் அதிமுகவிற்கு இருக்கின்றன,. ஆனால் அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமகவிற்கு 100 சதவீதத்தில் 5 சதவீதம் அதாவது 300 வாக்குகள் அதிமுகவிற்கு தலித் வாக்குகள் இருந்தால் வெறும் பதினைந்து வாக்குகள் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமகவிற்கு விழுந்தது,. அதுமட்டுமில்லாமல் பாமகவின் தேர்தல் பிரச்சாரத்தை தலித் பகுதியில் செய்யவிடாமல் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மூலமாக ரவுடியிசம் செய்தது.
பாமக கட்சியின் வேட்பாளர்கள் அமைச்சர்களுடன் சென்று வாக்கு சேகரிக்க சென்ற போது தலித் பகுதிகளுக்குள் விடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர். இதை ஜெகத்ரட்சகனும் திருமாவளவனும் இருவரும் பேசி மகிழ்ச்சி அடைந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் மற்ற சமுதாய வாக்குகள் பெருமளவிற்கு பாமகவிற்கு விழுந்தன,. தலித் பகுதியில் மட்டும் விழாத காரணத்தினால் தான் அக்கட்சி விழுப்புரம், கடலூர்,அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி ஆகிய தொகுதிகளில் தோல்வி அடைய முக்கிய காரணம் ஆகும்.
மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தினால் முஸ்லிம் வாக்குகள் 5சதவீதம் கூட பாமகவிற்கு விழவில்லை அந்த அளவுக்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பாமகவை வீழ்த்தினார்கள் என்பது தான் உண்மை. தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாமகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்,
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இடங்களில் பாமக வாக்குகளை அள்ளிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே,. ஆனால் தலித் வாக்குகள் விழுவது மிகக் கடினமே என்று பாமக பிரமுகர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அதிமுக சார்பாக போட்டியிடும் பட்டியல் இனத்திற்கு ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு தலித் வேட்பாளர்கள் இம்முறை பாமகவை அனுசரித்துச் சென்றால் மட்டுமே அவர்களால் வெல்ல முடியும் இல்லை என்றால் திமுக எளிதாக அதிமுகவை வென்றுவிடும்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் தலித் பிரமுகர்கள் வேண்டுமென்றே வேலை செய்யாததால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என்று பாமகவினர் அதிமுகவிடம் குற்றச்சாட்டை வைத்தனர்,. ஆனால் தற்பொழுது பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு பாமக பலம் மிக்க பகுதிகளில் வாக்கு சேகரிக்க வரும்போது அதிமுகவிற்கு போதுமான அளவு ஒத்துழைப்பு கொடுப்பார்களா என்பது சந்தேகமே?.
இந்த சூழ்நிலையில், பாமக வேட்பாளருக்கு தலித்பகுதியில் கணிசமான வாக்குகளை தலித் பிரமுகர்கள் பெற்றுத் தந்தால் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் பாமகவினர் அவர்களுக்கு வாக்குகளை வாங்கி தருவார்கள் என்பது உள்ளூர் கட்சி பிரமுகர்கள் ஆங்காங்கே பேசி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் தலித் வாக்குகளை இழந்த பாடத்தை உள்ளாட்சித் தேர்தல் மூலம் பாமகவினர் தந்திரமாக பெற்றால் மட்டுமே உள்ளாட்சியில் பெரும்பான்மையான இடங்களில் பாமக வெற்றி பெறும் என்பதே உண்மை.