Home Blog Page 5836

இன்று முதல் வலிமை, தலைவர் 168 படப்பிடிப்புகள் தொடக்கம்: ரஜினி அஜீத் சந்திப்பா?

0

இன்று முதல் வலிமை, தலைவர் 168 படப்பிடிப்புகள் தொடக்கம்: ரஜினி அஜீத் சந்திப்பா?

ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பும் அஜித் நடிக்கவிருக்கும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை முதல் தொடங்குகிறது. இரண்டு படக்குழுவினரும் ஒரு சிறிய பூஜை நடத்திவிட்டு அதன் பின்னர் படப்பிடிப்பு காட்சிகளை படமாக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் ’வலிமை’ படத்திற்கான போடப்பட்ட செட் தயாராக இருப்பதாகவும் அதே போல் தலைவர் 168 படத்தின் படப்பிடிப்புக்கு உண்டான ஏற்பாடுகள் அனைத்தும் நேற்றே தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் ஆகியோர்களின் படப்பிடிப்புகள் ஒரே வளாகத்தில் நடப்பதால் இருவரும் சந்திக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் இன்று இல்லாவிட்டாலும் ஒருசில நாட்களில் இருவரின் சந்திப்பு நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் ஒருபுறம் அரசியல் கட்சி தொடங்கிய அரசியல் களத்தில் குதிக்க உள்ளது தெரிந்ததே. அதேபோல் அஜித்தை அரசியலில் இழுக்க அதிமுக கட்சி பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஜினி-அஜித் சந்திப்பு நடந்தால் அந்த சந்திப்பால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரஜினியை கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துவிட்ட நிலையில் அஜித்தை இதுவரை எந்த கட்சியினர்களும் விமர்சனம் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்டபடி IPL ஏலம் நடைபெறுமா?

0

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மற்றும் டெல்லி போன்ற இடங்களில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது இதனால் IPL ஏலம் திட்டமிட்டபடி கொல்கத்தாவில் நடைபெறுமா என்ற தகவல் கசிந்தது.

இதனிடையே திட்டமிட்டபடி IPL ஏலம் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் ஏலப்பட்டியலில் மொத்தம் 146 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 332 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் இருந்து 73 வீரர்கள் ஏலம் மூலம் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.85 கோடிவரை ஏலத்தில் செலவிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. இதில் ஏற்கனவே தக்க வைத்துள்ள வீரர்களுக்கான ஊதியத்தை கழித்து மீதமுள்ள தொகையைத் தான் ஏலத்தில் பயன்படுத்த முடியும். உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 20 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான ஒட்டுமொத்த சம்பளத் தொகை ரூ.70 கோடி போக மீதமுள்ள ரூ.15 வரை கோடியை கொண்டு தங்களது அணிக்கு தேவையாக உள்ள எஞ்சிய 5 வீரர்களை எடுக்க முடியும்.இது மற்ற அணிகளுக்கும் பொருந்தும். இந்த ஏலத்தில் எந்த எந்த வீரர்கள் தக்க வைக்க படுகின்றனர் எந்த வீரர்கள் மாற்ற படுகின்றனர் என நாளை வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

உச்ச கட்டத்தை அடையும் குடியுரிமை சட்டம் !!! எதிர்க்கட்சிகளுக்கு மோடி சவால் ??? மோடிக்கு எதிராக குடியரசு தலைவரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை !!!

0

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், முஸ்லிம்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்கண்டின் பர்ஹாயத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ காங்கிரஸ் கட்சி பொய்களைப் பரப்பி வருகிறது. இந்தப் புதிய சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு ஆபத்து என்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய குடிமகன்களின் உரிமைகளை எந்த வகையிலும் பாதிக்காது, காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு சவாலை விடுக்கிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவிக்கத் தயாரா? அப்படி அறிவித்தால் அதற்கான பிரதிபலனை நாட்டு மக்கள் அவர்களுக்கு அளிப்பார்கள். குடியுரிமை சட்டம் இந்திய குடிமகனுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்றும் பிரதமர்  மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு மோடி அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு கோரிக்கை வைத்துள்ளது.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான 12 கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் இந்தச் சட்டத்துக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தனர்.

அவர்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விஷயங்களில் தலையிடுமாறு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான மற்றும் மக்களைப் பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மோடி அரசுக்கு அறிவுரை வழங்குமாறும் கோரிக்கை வைத்தனர்.

இன்றைய ஆன்மீகத் தகவல்: திருவெம்பாவை

0

இன்றைய ஆன்மீகத் தகவல்: திருவெம்பாவை

திருவெம்பாவை பாடல் 2

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

பொருள்:

“”அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது “ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய், என்கிறார்கள் தோழிகள். உறங்குபவள் எழுந்து தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள்.

அவளுக்கு பதிலளித்த தோழியர் கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக, என்றனர்.

விளக்கம்:

தேவலோகத்தில் சிவபவனி கிடையாது. அவர்கள் சிவனைக் காண வேண்டுமானால் தவம் முதலான கடும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், நம் ஊரிலோ ஆண்டுதோறும் திருவிழா. சுவாமி வாசல் தேடி பவனி வருவார். இவ்வளவு அருகில் இறைவன் இருந்தும், அதையும் பார்க்க மறுத்தால் எப்படி என்பது இப்பாடலின் உட்கருத்து.

உச்சத்தில் ஏர்டெல்-ஜியோ மோதல்: கொண்டாட்டத்தில் பயனாளிகள்

0

உச்சத்தில் ஏர்டெல்-ஜியோ மோதல்: கொண்டாட்டத்தில் பயனாளிகள்

ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு சலுகைகள் வழங்கி வருவதால் இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ நிறுவனம் அறிமுகம் ஆன பின்னர் தனியார் தொலைத் தொடர்புத் துறையின் ஒரு சில நிறுவனங்கள் தள்ளாட்டத்தில் இருந்தன. குறிப்பாக ஏர்செல் நிறுவனம் தனது நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு சென்று விட்டது. இந்த நிலையில் ஜியோ நிறுவனத்திற்கு ஈடு கொடுத்து வரும் ஒரே நிறுவனமாக ஏர்டெல் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜியோ நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க அவ்வப்போது அசத்தலான திட்டங்களை அறிவித்து வரும் ஏர்டெல், சமீபத்தில் வைஃபை காலிங் என்ற வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நெட்வொர்க் இல்லாத அல்லது நெட்வொர்க் சரியாக இல்லாத இடத்தில் இருந்தும் இந்த வசதியை பயன்படுத்தி கால் செய்யலாம் என்பதுதான் இந்த புதிய சேவையின் முக்கிய அம்சம்.

இந்த நிலையில் ஏர்டெல்லின் இந்த அறிவிப்பை அடுத்து ஜியோவும் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு வசதியை அறிவித்துள்ளது. இந்த சேவையின் பெயர் ‘ஓவர் ஃவைபை வசதி’. இந்த வசதியை பயன்படுத்தி மோசமான சூழ்நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் உதவியைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த வசதி தற்போது சோதனை பயன்பாட்டில் இருப்பதாகவும் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒரே விதமான வசதியை அளித்துள்ளது இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே கொண்டாட்டம்தான்.

3 தலைநகரங்கள் !!! ஜெகன் மோகன் அதிரடி திட்டம் !!…

0

கடந்த மே மாதம் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான ஜெகன் மோகன் ஆந்திராவில் பல அதிரடித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். ஏற்கனவே பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் விதமாக நிறைவேற்றப்பட்டுள்ள திஷா சட்டம் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் அமையவிருப்பதாக அறிவித்துள்ளார் ஜெகன் மோகன்.

ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகனின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திர பிரதேசத்தின் தலைநகர் அமையும் பகுதி பற்றி முடிவு செய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.இந்த குழு ஆய்வு செய்து 2 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கும்.  ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் வளர்ச்சி அடைய செய்வதற்காக நாங்கள் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறோம்.  இதேபோன்று பல தலைநகரங்கள் அமைப்பது பற்றியும் கவனத்தில் கொள்ளப்படும்.

ஆந்திர பிரதேசத்திற்கு 3 தலைநகரங்களை அமைப்பது பற்றியும் நாங்கள் யோசித்து வருகிறோம். அவற்றில் ஒன்று சட்டமன்ற தலைநகராகவும், மற்ற இரண்டும் நிர்வாக மற்றும் நீதிமன்ற தலைநகராகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதன்படி, விசாப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், அமராவதி சட்டமன்ற தலைநகராகவும் மற்றும் கர்னூல் நீதிமன்ற தலைநகராகவும் அமையும் என்று சட்டமன்றத்திலேயே முதலமைச்சர்  ஜெகன் கூறியுள்ளார்.

இதனால் 3 பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைவதுடன், சமநிலையிலான வளர்ச்சியும் உறுதிப்படுத்தப்படும் என ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித்தின் அடுத்த ஐந்து படங்கள் குறித்த திட்டங்கள்!

0

பா.ரஞ்சித்தின் அடுத்த ஐந்து படங்கள் குறித்த திட்டங்கள்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. இந்தப் படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிய பின்னரும் இன்னும் ரஞ்சித் அடுத்தப் படத்தை இயக்க ஒப்பந்தமாகவில்லை. அவர் இயக்குவதாக கூறப்பட்ட பாலிவுட் படம் ஒன்றும் ஆர்யா நடிப்பில் ஒரு படம் இயக்குவதாக கூறப்பட்டதும் எந்த நிலையில் இருக்கின்றது என்பது இன்னும் தெரியவில்லை

இந்த நிலையில் பா ரஞ்சித் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இயக்குனர் ரஞ்சித் முழுநேரமாக தயாரிப்பு தொழிலில் இறங்கி விட்டார்.

பா ரஞ்சித் அடுத்ததாக தொடர்ச்சியாக ஐந்து படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் அவர் தயாராக இருக்கும் ஐந்து படங்களை மேற்கு தொடர்ச்சி மலை இயக்குனர் லெனின் பாரதி, பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் சுரேஷ்மாரி, மோசஸ், பிராங்க்ளின் ஜோசப் ஆகியோர் இயக்க உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஒவ்வொன்றாக விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதாகவும் ரஞ்சித் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளன. இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் அடுத்த படத்தை இயக்க கால தாமதமானாலும் தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலித் வாக்குகளை பெற அதிமுக தலித் பிரமுகர்களுக்கு டிமென்ட் வைக்குமா பாமக? உள்ளாட்சி ஸ்பெஷல்

0

தலித் வாக்குகளை பெற அதிமுக தலித் பிரமுகர்களுக்கு டிமென்ட் வைக்குமா பாமக? உள்ளாட்சி ஸ்பெஷல்

ஒருவழியாக புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்! தோல்வி பயம் காரணமாக வழக்கு மேல் வழக்கு தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நிறுத்திவிடலாம் என்று கணக்கு போட்ட திமுக கடைசியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் வாயிலாகவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை திமுக விரும்பவில்லை என்று கண்டனம் தெரிவித்துவிட்டார்.

இருந்தபோதிலும் விடாப்பிடியாக மாநில தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது திமுக. இதிலிருந்தே தோல்வி பயம் திமுகவிற்கு உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது விழுப்புரம்,கடலூர்,தர்மபுரி,அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர்,மத்திய சென்னை, திண்டுக்கல் ஆகும்,. ஏழு தொகுதிகளில் ஐந்து தொகுதிகள் வன்னியர்கள் பலமிக்க தொகுதியாகும் திண்டுக்கல் மற்றும் மத்திய சென்னை தொகுதியில் மட்டும் வன்னியர்கள் கணிசமாக உள்ளனர்,.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையின் காரணமாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்தது,. இக்கட்சியின் தோல்வி குறித்து ஆய்வு செய்ததில் இரு காரணங்கள் முக்கியமாக முன் நிற்கின்றன,. அதில் ஒன்று தலித் சமுதாயத்திற்கு எதிரான கட்சி என்ற தோற்றத்தை திமுகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்து திட்டமிட்ட விஷமப் பிரச்சாரம் காரணமாக பாமக, பெரும்பான்மையான தலித் வாக்குகளை பெற தவறிவிட்டது,.

முக்கியமாக தலித் வாக்குகள் பெருமளவில் அதிமுகவிற்கு இருக்கின்றன,. ஆனால் அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமகவிற்கு 100 சதவீதத்தில் 5 சதவீதம் அதாவது 300 வாக்குகள் அதிமுகவிற்கு தலித் வாக்குகள் இருந்தால் வெறும் பதினைந்து வாக்குகள் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமகவிற்கு விழுந்தது,. அதுமட்டுமில்லாமல் பாமகவின் தேர்தல் பிரச்சாரத்தை தலித் பகுதியில் செய்யவிடாமல் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மூலமாக ரவுடியிசம் செய்தது.

பாமக கட்சியின் வேட்பாளர்கள் அமைச்சர்களுடன் சென்று வாக்கு சேகரிக்க சென்ற போது தலித் பகுதிகளுக்குள் விடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர்,. இதை ஜெகத்ரட்சகனும் திருமாவளவனும் இருவரும் பேசி மகிழ்ச்சி அடைந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் மற்ற சமுதாய வாக்குகள் பெருமளவிற்கு பாமகவிற்கு விழுந்தன,. தலித் பகுதியில் மட்டும் விழாத காரணத்தினால் தான் அக்கட்சி விழுப்புரம், கடலூர்,அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி ஆகிய தொகுதிகளில் தோல்வி அடைய முக்கிய காரணம் ஆகும்.

மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தினால் முஸ்லிம் வாக்குகள் 5சதவீதம் கூட பாமகவிற்கு விழவில்லை அந்த அளவுக்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பாமகவை வீழ்த்தினார்கள் என்பது தான் உண்மை,. தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாமகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்,

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இடங்களில் பாமக வாக்குகளை அள்ளிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே,. ஆனால் தலித் வாக்குகள் விழுவது மிகக் கடினமே என்று பாமக பிரமுகர்கள் கூறி வருகின்றனர்,. இந்த சூழ்நிலையில் அதிமுக சார்பாக போட்டியிடும் பட்டியல் இனத்திற்கு ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு தலித் வேட்பாளர்கள் இம்முறை பாமகவை அனுசரித்துச் சென்றால் மட்டுமே அவர்களால் வெல்ல முடியும் இல்லை என்றால் திமுக எளிதாக அதிமுகவை வென்றுவிடும்,.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் தலித் பிரமுகர்கள் வேண்டுமென்றே வேலை செய்யாததால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என்று பாமகவினர் அதிமுகவிடம் குற்றச்சாட்டை வைத்தனர்,. ஆனால் தற்பொழுது பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு பாமக பலம் மிக்க பகுதிகளில் வாக்கு சேகரிக்க வரும்போது அதிமுகவிற்கு போதுமான அளவு ஒத்துழைப்பு கொடுப்பார்களா என்பது சந்தேகமே?,.

இந்த சூழ்நிலையில், பாமக வேட்பாளருக்கு தலித்பகுதியில் கணிசமான வாக்குகளை தலித் பிரமுகர்கள் பெற்றுத் தந்தால் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் பாமகவினர் அவர்களுக்கு வாக்குகளை வாங்கி தருவார்கள் என்பது உள்ளூர் கட்சி பிரமுகர்கள் ஆங்காங்கே பேசி வருகின்றனர்,.

நாடாளுமன்றத் தேர்தலில் தலித் வாக்குகளை இழந்த பாடத்தை உள்ளாட்சித் தேர்தல் மூலம் பாமகவினர் தந்திரமாக பெற்றால் மட்டுமே உள்ளாட்சியில் பெரும்பான்மையான இடங்களில் பாமக வெற்றி பெறும் என்பதே உண்மை,.

பெண் நிருபர் மீது சோடா ஊற்றிய அதிகாரியின் மனைவி: அதிர்ச்சி தகவல்

0

பெண் நிருபர் மீது சோடா ஊற்றிய அதிகாரியின் மனைவி: அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் உயர் அதிகாரியின் மனைவி ஒருவர் தனது கணவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு மடக்கிய பெண் நிருபர் மீது சோடா ஊற்றிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா என்ற மாநிலத்தை சேர்ந்த ஜேசன் என்பவர் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவரது அலுவலகத்தில் பட்ஜெட் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல உயர் அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும் வந்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அபே விண்டர்ஸ் என்ற பெண் நிருபர் எழுந்து உயரதிகாரி ஜேசனை கேள்வி மேல் கேள்வி கேட்டு மடக்கினார். அப்போது பார்வையாளர் பகுதியில் உட்கார்ந்திருந்த ஜேசனின் மனைவி திடீரென பெண் நிருபர் மீது கையில் வைத்திருந்த சோடாவை அவரது தலையில் ஊற்றினார். இதனால் அந்த பெண் நிருபரும் அருகில் இருந்த மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து உயர் அதிகாரியின் மனைவி மீது ஒழுங்கற்ற நடத்தை மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டது ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உயர் அதிகாரியின் மனைவி தன்னை அவமானப்படுத்திய போதும் பெண் நிருபர் அமைதியாக உட்கார்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்!

0

பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் தள்ளி போட்டு கொண்டு வந்த தமிழக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனை எதிர்த்து தமிழக எதிர்க் கட்சியான திமுக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தாலும் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள துணை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது ஏறக்குறைய 6 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் அடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வாங்கப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுள்ளவைகள் ஏற்கப்பட்டு, புதிய பெயர்கள் சேர்க்கப்பட்ட பின் தயாரிக்கப்பட்டுள்ள துணை வாக்காளர் பட்டியலை தற்போது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.
 
தற்போது வெளியிட்டுள்ள துணை வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் அதன் அடிப்படையில், 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 257 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பெண் வாக்காளர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் 5 ஆயிரத்து 924 பேர்களும் இந்த வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு மொத்தமாக தமிழகத்தில், 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரை உள்ள கால கட்டத்தில் மட்டும் ஏறக்குறைய ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 571 பேர் இந்த பட்டியலில் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.