Home Blog Page 5834

இப்படியும் பந்து விசியதா இந்திய அணி?

0

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் சிவம் துபே நீக்கப்பட்டு அருகில் தாகூர் சேர்க்கப்பட்ட டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் முதலில் இந்தியாவை பேட் செய்ய கேட்டுக்கொண்டார்.

இதன்படி ரோஹித் சர்மாவும் களம் இறங்கினர். பேட்டிங்கில் சாதகமான பிச் என்பதால் ராகுலும், ரோகித் சர்மாவும் வெஸ்ட்இண்டீஸ் பவுலர்களை வெளுத்து வாங்கினர் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினர், ரோகித் சர்மா தனது 28வது சாதத்தையும் கேஎல் ராகுல் தனது மூன்றாவது சதத்தையும் அடித்தனர்.

அணியின் ஸ்கோர் 227 ரன்கள் ஆக இருந்த பொழுது கேஎல் ராகுல் 102 ரன்களில் அவுட்டானார் இதில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர் அடங்கும்.

அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
சதம் அடித்த பிறகு ரோகித் சர்மா ரன் மழை பொழிந்தார் நான்காவது இரட்டை சதத்தை அடிப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் ஆனால் துரதிஷ்டவசமாக 44 வது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார்.

இப்படியும் பந்து விசியதா இந்திய அணி?

பின்பு ஸ்ரேயஸ் அவருடன் பண்ட் ஜோடி இறுதி ஓவர்களை சிக்ஸர்களும் பவுண்டரிகள் தெறிக்கவிட்டது. இவர்களின் அதிரடி ஆட்டத்தில் இந்தியா 380 ரன்களை தாண்டியது 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது கடைசி பத்து ஓவர்களில் இந்திய அணி 127 ரன்களை சேகரித்து குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அடுத்து மிக இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது முந்தைய ஆட்டத்தின் ஹீரோ ஹெட்மயர் 4 ரன்களில் ரன் அவுட் ஆனது இந்திய அணியினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது 86 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில் விக்கெட் கீப்பர் ஹோப்ஸ், பூரான் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இந்தியாவின் பில்டிங் மெச்சும்படியாக இல்லை ஹோப்ஸ் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே ஸ்லிப்பில் நின்ற ராகுல் வாய்ப்பை வீணடித்தால் பூரான் 22 ரன்னில் இருந்த போது தூக்கி அடித்த பந்து தீபக் சாகர் தவற விட இதன் காரணமாக இவர்கள் இருவரும் கொஞ்ச நேரம் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் இந்தியா பக்கம் ஆட்டம் திரும்பியது இந்திய அணியின் இடக்கை பந்துவீச்சாளர் குலதீப் யாதவ் ஹாட்ரிக் சாதனையையும் நிகழ்த்தினார். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.1 ஓவர்களில் 280 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இப்படியும் பந்து விசியதா இந்திய அணி?

இதனால் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 22-ஆம் தேதி கட்டாக்கில் நடக்கிறது.

“சூழ்” நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

0

சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கி வருகிறது. இந்தவகையில் 2019’ம் ஆண்டிற்கான விருது பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 23 மொழிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாவல்கள் பிரிவில் தமிழ், தெலுங்கு, அசாமி, மணிப்புரி இந்த நான்கு மொழிகளுக்கு மட்டுமே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய “சூழ்” நாவலுக்கு விருது கிடைத்துள்ளது.

கரிசல் மண்ணின் விவசாயம் மற்றும் கால நிலைகள்,  விவசாயிகளின் அனுபவங்கள் ஆகியவற்றை கிராம நடையில் வெளிப்படுத்தியிருந்தது “சூழ்” நாவல்.

“ஆன் ஏரா ஆப் டார்க்னெஸ்” புத்தகத்திற்காக கேரளாவை சேர்ந்த எம்.பி சசி தரூருக்கு விருது கிடைத்துள்ளது.

வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம் இன்று ?

0

இன்றுமார்கழி பெரிய அஷ்டமி 19/12/19 வியாழன் அன்று அஷ்டமி சப்பரம் கொண்டாடப்படுகிறது உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவை தான் அஷ்டமி சப்பரம் என்கிறோம்.

சிவாயநம திருச்சிற்றம்பலம்

இன்று அஷ்டமி சப்பரம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவை தான் அஷ்டமி சப்பரம் என்கிறோம். இந்த விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரிஷப வாகன சட்டத்தேர் உலாவாக கொண்டாடப்படுகிறது. விரதமிருந்து மார்கழி அஷ்டமியை தர்மத் திருநாளாக மனதில் நினைத்துக் கொண்டு, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்து இறையருள் பெறுங்கள்.

வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம் இன்று ?

மதுரையில், கோயில்களுக்கும் விழாக்களுக்கும் பஞ்சம் இல்லை. அனைத்து சுபதினங்களிலும் மாசி வீதிகள் களைகட்டும். மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக்குறிக்கும் நிகழ்ச்சியாகக் கருதப்படும் மதுரையில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான ‘அஷ்டமி சப்பரம்’ என்னும் தேர் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம்.

இந்த படியளக்கும் திருநாளைப் பற்றிய ஒரு சுவாரசியமான கதை உண்டு. அதனை இங்கேப் பார்க்கலாம்..

ஒரு சமயம், பார்வதி தேவிக்கு மனதில் ஒரு சந்தேகம் வந்து விட்டது. அதாவது ‘அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு அளிக்கிறாரா? இல்லையா?’ என்று மனதுக்குள் கேள்வியை எழுப்பியவாறு இருந்தாள். கடைசியாக அதைச் சோதனை செய்தே பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி ஒரு எறும்பை எடுத்து குவளைக்குள் போட்டு அடைத்து வைத்து விட்டாள் பார்வதிதேவி.

சிவபெருமான் அன்றைய தினம் படியளக்கச் சென்று விட்டு திரும்பி வந்தார். அவரை இடை மறித்த பார்வதி, ‘அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே.. இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்துவிட்டீர்களா?’ என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள்.

‘ஆம்.. அதில் உனக்கென்ன சந்தேகம்?’ என்று சிவபெருமான் பதிலளித்தார்.

‘இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பார்வதி தேவி, எறும்பை அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக் குடுவையை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்த எறும்பு, ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிவபெருமானை மடக்க நினைத்தவர் திகைத்து விட்டார். அதனை தொடர்ந்து சிவபெருமானிடம் பார்வதி தேவி மன்னிப்பை வேண்டினார்.

எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வழியில் படியளந்து விடுகிறார் இறைவன். மேற்கண்ட திருவிளையாடல் நடந்த நாள்- மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள்.

தர்மம் தலைகாக்கும் என்பர். மிகப்பெரிய அளவில் தான் தர்மம் செய்ய வேண்டும் என்பதில்லை; எளிய முறையில் தர்மம் செய்தாலே போதும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த படியளக்கும் லீலை மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி வீதிகளில் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள் இழுத்து வருவார்கள்.

அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கும் நிகழ்வை நினைவூட்டும் வகையில் அஷ்டமி சப்பரம் புறப்பாட்டின்போது கோவில் நிலத்தில் விளைந்த நெல் மணிகள், அரிசி ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மதுரையில் நடக்கும் விழாக்களில் சப்பர பவனி ஆடிவீதி, சித்திரை வீதி, மாசி வீதிகளில் நடப்பதே வழக்கம். ஆனால், படியளக்கும் விழா சப்பரம் மட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வெளிவீதியில் உலா வரும். அதிகளவு மக்களுக்கும், குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.

விரதமிருந்து மார்கழி அஷ்டமியை தர்மத் திருநாளாக மனதில் நினைத்துக் கொண்டு, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்து இறையருள் பெறுங்கள். இந்நிகழ்ச்சி, இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோயிலிலிருந்து சுவாமி,அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு மாசி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வந்தார் அம்மன் சப்பரத்தை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும்.

நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்த சப்பரத்தை ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வர் . மேலும், கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர் . திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக் கொண்டால், அள்ள அள்ள அன்னம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்ற நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்காக என்ற நம்பிக்கை மெய்ப்பிக்கப்படும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்

சிவாயநம திருச்சிற்றம்பலம்

“பல நாள் திருடர்கள் ” – திஷா கொலை குற்றவாளிகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

0

நாடுமுழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ஐதராபாத் பெண் மருத்துவர்  திஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) கொலை வழக்கு விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த கொலை வழக்கில் கைதான நான்கு பேரில் இருவர் திஷாவை  கொலை செய்வதற்கு முன்னதாக பல்வேறு காலகட்டங்களில் இதே முறையில் ஒன்பது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அனைத்து கொலைகளும் மகபூப் நகர், சங்காரெட்டி, ரங்காரெட்டி, ஐதராபாத்,  கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகிலேயே நடந்துள்ளன.

இந்த குற்றவாளிகளை என்கவுண்டரில் சுட்டு கொள்வதற்கு முன்பு நடந்த விசாரணையில்தான் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் வெற்றி: அமெரிக்காவில் பரபரப்பு

0

டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் வெற்றி: அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

குறிப்பாக சட்டத்தை அவர் தனக்கு சாதகமாக வளைத்து கொண்டதாகவும் உக்ரைன் அதிபருக்கு எதிராக சதி செய்ததாகவும் ரஷ்யாவுடன் இணைந்து அவர் பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது

இதனை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டிலும் தீர்மானம் வெற்றி பெற்றால் அதிபர் டிரம்ப் பதவி விலக நேரிடும்

இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 227 பேர்களும், தீர்மானத்திற்கு எதிராக 179 பேர்களும் வாக்களித்தனர். இதனை அடுத்து தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் செனட் சபையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்படும். இந்த தீர்மானத்திற்கு செனட் சபையிலும் ஆதரவு கிடைத்தால் டொனால்ட் டிரம்ப் தனது அதிபர் பதவியில் இருந்து விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் செனட் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறுவது சந்தேகமே என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

“குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடையில்லை” – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

0

நாடுமுழுவதும்  பெரும்  சர்ச்சையை ஏற்படுத்திவரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனால் அதற்க்கு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால் எதிர்ப்பு தெரிவித்தார். “இந்த சட்டம் தொடர்பான விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை,இன்னும் முழுமையாக இந்த சட்டம் அமலுக்கு வரவில்லை, அதனால் தடை தேவையில்லை” என மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறினார். இதையடுத்து சட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க முடியாது என அமர்வு அறிவித்தது.

மேலும் இந்தியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களின் மீது, பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை  வரும் ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இன்றைய ஆன்மீகம் -திருவெம்பாவை பாடல் 3

0

திருவெம்பாவை பாடல் 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

பொருள்:

முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள்.தூங்கிக் கொண்டிருந்த தோழி, “”ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன்.

அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள்.வந்த தோழியர் அவளிடம், “”அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.

விளக்கம்:

ஒருநாள் கோயிலுக்கு போவது, ஆண்டவனை விழுந்து விழுந்து வணங்குவது, மறுநாள் ஏதோ விரக்தியில் அல்லது எதிர்பார்ப்பு நிறை வேறாமல் போனதும் அவனை வணங்குவதை விட்டுவிடுவது…இதெல்லாம் நிஜ பக்தியாக முடியாது என்பதே இந்தப் பாடல் உணர்த்தும் கருத்து.

கபாலிக்கு பின் மீண்டும் ரஜினி படத்தில் இணைந்த நடிகர்!

0

கபாலிக்கு பின் மீண்டும் ரஜினி படத்தில் இணைந்த நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில் ’தலைவர் 168’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே தானும் கலந்து கொண்டதை நினைத்து பெருமை அடைவதாகத் நடிகர் விசுவநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்தவர் என்பதும் விஷால் நடித்த சண்டக்கோழி 2’ திரைப்படத்தில் வரலட்சுமி கணவராக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது

‘தலைவர் 168’ படத்தில் ரஜினிக்கு மிக நெருக்கமான ஒரு நபராக விசுவநாத் நடிப்பதாக தெரிகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கொடுத்த சிறுத்தை சிவா அவர்களுக்கு தனது நன்றியைத் வைத்துக் கொள்வதாகும் நடிகர் விஸ்வநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

https://twitter.com/kabalivishwanth/status/1207367087221432320

சீமான் போன்ற பிரிவினைவாதிகளுக்கு கைலாஷ் நாட்டில் இடமில்லை: நித்தியானந்தா

0

சீமான் போன்ற பிரிவினைவாதிகளுக்கு கைலாஷ் நாட்டில் இடமில்லை: நித்தியானந்தா

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, கைலாஷ் என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அந்த நாட்டில் குடியுரிமை பெற 40 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ’எங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை பறி போனாலும் பிரச்சனை இல்லை என்றும் எங்கள் தலைவர் நித்தியானந்தா கைலாஷ் என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அந்த நாட்டிற்கு நாங்கள் சென்று விடுவோம் என்றும் நகைச்சுவையாக கூறினார்.

சீமானின் இந்த நகைச்சுவை பேச்சை சீரியசாக எடுத்துக் கொண்ட நித்தியானந்தா தரப்பு கைலாஷ் நாட்டின் பிரதமர் அலுவலகம் என்ற டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார். கைலாஷ் நாடு என்ற ஒன்று இல்லை என்று ஈக்வடார் நாட்டின் அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ள நிலையிலும் கைலாஷ் என்ற நாடு இருப்பது போல தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா தெரிவிக்கும் கருத்துக்கள் சீமானின் நகைச்சுவையை விட பெரிதாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதை அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் பேசாமல் டெல்லி பஸ் ஸ்டாண்டிலா பேசினார்? கனிமொழியை வெளுத்து வாங்கிய பாமகவினர்

0

இதை அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் பேசாமல் டெல்லி பஸ் ஸ்டாண்டிலா பேசினார்? கனிமொழியை வெளுத்து வாங்கிய பாமகவினர்

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து குடியரசுத் தலைவரும் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த மசோதா தற்போது சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக ஆதரவாக வாக்களிதுள்ளது.

அதாவது மக்களவையில் அதிமுகவின் ஒரு எம்பியும், மாநிலங்களவையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாமக உள்ளிட்ட கட்சிகளின் 11 எம்பிக்களும் இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர். இதனையடுத்து இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் என எழுந்து வருகின்றன. மேலும் பல இடங்களில் போராட்டம் என்ற பெயரில் இந்த சட்டத்தை எதிர்க்கும் நபர்கள் அராஜகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் இந்த மசோதாவை எதிர்த்து பேசி கொண்டிருந்த திமுக வெளிநடப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகின. எதிர்த்து வாக்களிக்க வேண்டிய திமுக எம்பிக்கள் வெளி நடப்பு செய்தது ஏன்? அதன் மர்மம் என்ன? என அவர்களுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த பிறகு திமுக எம்பி கனிமொழி இது குறித்து முறையாக விளக்கம் கொடுத்தார். மேலும் இந்த மசோதாவிற்கு ஆதரவளித்து அதிமுக மற்றும் பாமக துரோகம் செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அதாவது அன்புமணி ராமதாஸை நாங்கள் மாநிலங்களவையில் பார்த்ததே இல்லை. அப்படி தலைமறைவாகவே இருந்த அவர் , அந்த ஒரு நாளில் மட்டும் சரியாக ஆஜராகி அந்த ஒரு வாக்கையும் அநீதிக்கு ஆதரவாகப் போட்டு, குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற வழிவகுத்து துரோகம் செய்துவிட்டுப் போனார்” என்று விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

இந்நிலையில் ஈழத்தமிழர்களுக்காக இந்த சட்டத்தை எதிர்க்கும் திமுகவை இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்திருந்தார்.கூடவே இது குறித்து பொது இடத்தில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்றும் சவால் விட்டிருக்கிறார்.

அடுத்ததாக அன்புமணி ராமதாஸை மாநிலங்களவையில் பார்த்ததே இல்லை என்று திமுக எம்பி கனிமொழி கூறியதை பொய் என்று நிரூபிக்கும் வகையில் பாமக தொண்டர்கள் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் பேசியதை ஆதாரத்துடன் பதிவிட்டு கனிமொழியை கலாய்த்து வருகின்றனர்.

குறிப்பாக சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் நதி நீர் இணைப்பு பற்றி மாநிலங்களவையில் பேசிய வீடியோவை ஆதாரமாக பதிவிட்டு “இதை அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் பேசாமல் டெல்லி பஸ் ஸ்டாண்டில் பேசினாரா? இல்லை திமுகவின் அறிவாலயத்தில் பேசினாரா?” என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் பேசிய பல வீடியோக்களை பதிவிட்டு தமிழக மக்களிடம் பொய்யான தகவல்களை பரப்பிய திமுக எம்பி கனிமொழியின் முகத்திரையை பாமகவினர் கிழித்து வருகின்றனர். அவற்றில் சில பதிவுகள்: