ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார் அதில் எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன் அவரைசந்திக்கஆசைப்படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்.
இதுதொடர்பாக வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார் அதில் கூறியதாவது அன்றைய தினம் காப்பி கொண்டு கொண்டு வந்து கொடுத்த அந்த ஓட்டல் ஊழியர் என்னிடம் கிரிக்கெட் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறினாள் நானும் சரி என்றேன் நீங்கள் தற்போது பயன்படுத்தும் முறை உங்களது பேட்டிங் தன்மை சற்று மாற்றுகிறது.
பலமுறை டிவியில் உங்களது பேட்டிங்கை கவனித்து தான் இதை சொல்கிறேன் என்று சொன்னால் அதற்கு நான் இந்த உலகத்தில் நீங்கள் மட்டும்தான் இந்த குறைபாட்டை கண்டுபிடித்து விட்டீர்கள் என்று கூறி வியந்து அதன் பிறகு தடுப்பு நடவடிக்கையை சரியான அளவுக்கு மாற்றிக் கொண்டேன் என்று கூறியுள்ளார், அவர் சொன்ன ஆலோசனைப்படி முழங்கையில் நான் அணியும் தடுப்பு கையைப் பற்றிக் கூறிய ஆலோசனைக்குப் பிறகு அதன் வடிவமைப்பு மாற்றம் செய்துகொண்டு இப்போது அந்த ஊழியரை சந்திக்க ஆசைப்படுகிறேன் கண்டுபிடிக்க நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும் என்று அந்த வீடியோ பதிவிலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி “என் பெயர் ராகுல் காந்தி.. ராகுல் சவார்க்கர் அல்ல. உண்மை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் மட்டும் அல்ல எந்த காங்கிரஸ் காரரும் கேட்க மாட்டார். நரேந்திர மோடி மற்றும் அமித்’தான் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
முன்னதாக ஜார்கண்ட்
தேர்தல் பிரச்சாரம் தொடர்பான ஒரு பொது கூட்டத்தில்
பேசும் போது ” மோடி,
மேக் இன் இந்தியா’வை
உருவாக்குவதாக சொன்னார் .. ஆனால் தற்போது ரேப்
இன் இந்தியாதான் உருவாகிக் கொண்டிருக்கிறது ” என்று கூறியிருந்தார். அவரது
இந்த கருத்துக்கு பா.ஜ.க பலவகையிலும் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும்
தெரிவித்து வந்தது .அதோடு பாராளுமன்றத்திலும், ராகுல் காந்தி மன்னிப்பு
கேட்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்ப
பட்டன. அதற்க்கு பதில் அளிக்கும் வகையில்
டெல்லி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இவ்வாறு கூறியிருந்தார்
ராகுலுக்கு
பதிலளிக்கும் வகையில் பா.ஜ.க
தேசிய பேச்சாளரான G.V.L.
நரசிம்ம ராவ் “ராகுல் காந்திக்கு , ராகுல்
ஜின்னாஹ் என்ற பெயர் மிகவும்
பொருத்தமாக இருக்கும், ஏனெனில் இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும்
அரசியில் பாணி அவருடையது , இந்த
வகையில் அவரை முஹம்மத் அலி
ஜின்னாஹ்வின் அரசியல் வாரிசாகவே கருதலாம்
” என்று கூறியுள்ளார்.
69-வது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20ந் தேதி தொடங்கியது. மொத்தம் 111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றதில், பல்வேறு போட்டிகளுக்குப் பின் 40 பேர் வரிசைப்படுத்தப்பட்டனர்.
உலக அழகி யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் ஜமைக்கா, பிரான்ஸ், இந்தியா, பிரேசில், நைஜீரியா அழகிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
இறுதிச் சுற்றில் ஜமைக்கா இளம்பெண் டோனி- ஆன்சிங் உலக அழகியாக தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற மெக்சிகோ அழகியான வனிசா பொன்சி டி லியான் ((
Vanessa Ponce de Leon)) மகுடம் அணிவித்தார்.
மொரான்ட் பே-யில் பிறந்து வளர்ந்து வளர்ந்த டோனி, தற்போது அமெரிக்காவின் பிளாரிடா பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார்.
பிரான்சின் ஓபெலி மெசினா இரண்டாம் இடத்தையும், இந்திய அழகி சுமன்ராவ் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர். இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, டயானா ஹைடன், யுக்தா முகி, மனுஷி சில்லார் உள்ளிட்டோர் உலக அழகிகளாக வெற்றிபெற்றாலும், முதன்முறையாக சுமன்ராவ்தான் 3வது இடத்திற்கு தேர்வாகி உள்ளார்
ஆந்திர மாநிலம் தெனாலியை சேர்ந்தவர் ஆயிஷா மீரா. கடந்த 2007ம் ஆண்டு இவர், விஜயவாடா அருகே உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
அப்போது அவர் தங்கியிருந்த விடுதியின் கழிப்பறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால் பல்வேறு சந்தேகங்களும் எழுந்தது. இதுகுறித்து அம்மாநில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சத்யம் பாபு என்பவர், அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்ததால், அவரை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த விஜயவாடா மகிளா நீதிமன்றம், சத்யம் பாபுவிற்கு 2010ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. எனினும், சத்யம் பாபுவை 2017ல் அம்மாநில உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் இருந்து விடுவித்தது. அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் உயிரிழந்த அந்த மாணவியின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். இதுதொடர்பாக அப்பெண்ணின் பெற்றோரிடம் உரிய அனுமதி பெற்ற அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உதவியுடன் அப்பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தினர். தற்போது இந்த கொலை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளதால் பல குற்றவாளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால அரசர்களோ பல யாகங்கள் செய்து தங்கள் இராஜ்ஜியங்களையும், படை வலிமைகளையும் பெறுக்கிக் கொண்டனர். யாகங்களால் இவை மட்டுமல்ல, பெறுதற்கரிய பிறவிப் பேறும் பெற முடியும். வாழ்க்கையில் யோகிகள் மட்டுமல்ல, இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டிய சில யாகங்கள் உண்டு.
இல்லறத்தில் வாழும் ஒவ்வொரு வரும் தினமும் செய்யவேண்டிய 5 வித யாகங்களை கீழ்க் கண்டவாறு பெரியோர்கள் வகுத்துள்ளனர். 1.தேவயாகம், 2.பூத யாகம், 3.மனித யாகம், 4.பிரம்ம யாகம், 5.பிதுர் யாகம். தேவ யாகம்: ஒவ்வொருவரும் தினம் ஏதாவது ஒரு தெய்வத் திருமேனியைத் தரிசித்து வணங்க வேண்டும்.
பூத யாகம்: ஒவ்வொருவரும் தினமும் ஒரு பிராணிக்கு (பசு, பூனை, காகம், நாய், எறும்பு, குருவி, குரங்கு, பட்சி ஆகிய ஏதாவது ஒர் உயிரி னத்துக்கு) ஒருபிடி உணவு அளிக்க வேண்டும்.
மனித யாகம்: தினமும் ஒரு ஏழை மனித னுக்கு உணவளித்து வாழ்தல் மனித யாகம்.
பிரம்ம யாகம்: அறிவை கொடுத்த ஆசானை யும் ஞானம் கொடுத்த ரிஷியையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது பிரம்ம யெக்கியமாகும்.
பிதுர் யாகம்: நம்முடைய காலஞ்சென்ற மூதா தையர்களுக்கு அர்ப்பணம் செய்தல், தீபம் ஏற்றல் முதலிய வற்றைத் தவறாமல் செய்வது பிதுர்யாகம்.
யாகம் செய்வதனால் பயன் உண்டா? என்றும் பஞ்சயெக்கியம் என்பது என்ன? என்றும் பலருக்கு தெரியாது. யாகம் என்ற வார்த்தையின் பொருள் அர்ப் பணித்தல் ஆகும். நம்மிடம் உள்ளபொருட்களில் புனிதமானவைகள் என கருத கூடியதை இறை வனுக்கு அர்ப்பணம் செய்வதே யாகம் ஆகும். அம்மா சமைத்த உணவை எடுத்து அம்மாவுக்கே குழந்தை ஊட்டினால் தாய் சந்தோஷப்பட மாட்டாளா? அதே போல் இறைவன் படைத்ததை இறைவனுக்கே கொடுக்கிறோம். அம்மா கட்டி பிடித்து முத்தம் தருவது போல் கடவுளும் நமது பிராத்தனைக்கு எதாவது தருவார். அதனால் தான் வேதங்கள் யாகம் செய்வதை தர்மகாண்டத்தில் பேசுகிறது. பலன் நோக்கும் யாகமாக இருந்தாலும் பலன் நோக்கா யாகமாக இருந்தாலும் யாகத்தை செய்பவன் நிச்சயம் சிறப்பு அடைகிறான்.
டி.ஆர்.பாலுவை கண்டு கொள்ளாத கனிமொழி! மக்களவையில் அரங்கேறிய அதிகார மோதல்
மத்தியில் ஆட்சியிலிருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் இந்த சட்ட திருத்தத்திற்கு ஆதரவும்,எதிர்ப்பும் ஒருசேர எழுந்து வண்ணமே உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இந்தியாவில் தயாரிக்கும் முறையை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி கொண்டு வந்த ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இதை அப்படியே மாற்றி, தற்போது ரேப் இன் இந்தியாவாக தான் உள்ளதாக முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதற்கு எதிராக பாஜக எம்பிக்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டத்தால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்திய பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக கூறி இதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக எம்பிக்கள் வலியுறுத்தினார்கள்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி ராகுல்காந்தி பேசிய இந்த சர்ச்சை பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார். இதனையடுத்து கனிமொழி, சரத்பவார் மகள் சுக்ரியா சுலே தவிர மீதியிருக்கும் மொத்த பெண் எம்பிக்கள் அனைவரும் எதிர் தரப்பில் இருந்து இதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூச்சலிட்டனர்.
மேலும் அப்போது பேசிய ஸ்மிருதி இராணி ஒட்டு மொத்த இந்திய பெண்களையும் ராகுல் காந்தி இதன் மூலமாக அவமானபடுத்தி விட்டதாகவும் நாட்டில் உள்ள பெண்கள் கற்பழிக்க படுவதை ராகுல் காந்தி வரவேற்கிறாரா என்றும் ஆக்ரோஷமாக பேசினார்.
மேலும் இதனை பற்றி ஒவ்வொரு பெண்களும் 40 வார்த்தைகள் பேச வேண்டும் எனவும் கூறினார். இதனையடுத்து கனிமொழி இது குறித்து அவருடைய கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் ஸ்ம்ரிதி இராணி அழைத்தார். அதற்காக கனிமொழி பேச ஆரம்பிக்கும் போது தொடர்ந்து பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டதால் அவர் தன்னுடைய பேச்சை தொடர முடியாமல் தடுமாறி கொண்டிருந்தார்.
இந்நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு என்ன நினைத்தாரோ தெரியவில்லை வேகமாக கனிமொழியிடம் தமிழில் உட்காரும்மா என்று கூறினார். ஆனால் இதை கண்டுகொள்ளாத கனிமொழியோ இருங்க என் பெயரை குறிப்பிட்டு தானே கூப்பிடுகிறார்கள் என்று கட்டளையிடும் குரலில் தமிழில் கூறிவிட்டு பேச்சை தொடர்ந்தார். அதனை தொடர்ந்து கனிமொழி ராகுல் கருத்திற்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்தார்.
இந்நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவர்களின் கட்டளைக்கு பணியாத கனிமொழியின் செயலை அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி கடும் வைரலாகி வருகிறது. எவ்வளவு பெரிய மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் திமுகவில் குடும்ப உறுப்பினர்களுக்கு தான் முன்னுரிமை என்றும் இந்த சம்பவம் குறித்து சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இன்னும் வேறு சிலரோ நாடாளுமன்ற திமுக குழு தலைவராக கனிமொழி வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில் டி ஆர் பாலுவை ஸ்டாலின் நியமித்தது கனிமொழிக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது அது தான் நேற்று வெளிப்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஒன்று ரிலீஸ் ஆகிறது என்றால் தமிழ் திரையுலகில் உள்ள பெரிய நடிகர்களே தங்கள் படத்தை அதே நாளில் ரிலீஸ் செய்ய ரொம்பவே யோசிப்பார்கள். ஆனால் ரஜினியின் குடும்பத்திலேயே உள்ள தனுஷ் தனது படத்தை ரஜினி படம் ரிலீஸாகும் அதே நாளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்பட பொங்கல் விருந்தாக ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. இருப்பினும் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தனுஷ் நடித்து வந்த ‘பட்டாஸ்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 16 என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ரஜினியின் ’தர்பார்’ மற்றும் தனுஷின் ‘பட்டாஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரு சில நாட்கள் இடைவெளியில் ரிலீசாக உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிக்கு எதிராக தனுஷே திரும்பி விட்டாரா? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால் கோலிவுட் திரையுலகில் இதுகுறித்து கூறிய போது ரஜினியின் ’தர்பார்’ திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகும் என்றும், அதன் பின்னர் ஆறு நாட்கள் கழித்தே தனுஷின் ‘பட்டாஸ்’ ரிலீசாகும் என்றும், எனவே இரண்டு படங்களுக்கும் எந்தவித போட்டியும் இருக்காது என்றும் தெரிவித்தனர்
சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரன் தாயாரை துரத்திவிட்ட திமுக காங் கூட்டணி! உதயநிதி செய்யும் நகைச்சுவை
விடுதலைப் புலிகள் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்கள் பக்கவாத நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு மலேசியாவிலிருந்து மேல் சிகிச்சைக்காக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு (16 ஏப்ரல் மாதம் 2010) சுமார் 10.45 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தபோது காங்கிரஸ் தலைமையிலான திமுக அங்கம் வகித்த மத்திய அரசின் குடியேற்ற உரிமை அதிகாரிகள் அவரை விமானத்தில் இருந்து கூட இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர்.
அப்பொழுது மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆகும், தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது,. இலங்கையில் ஈழத் தமிழர்களை கொடூரமாக கொன்று மன்னிக்க முடியாத பாவத்தை செய்து முடித்த ராஜபக்ஷேவிற்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் திமுக தான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்து கொண்டிருந்தது,.
மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருந்த காங்கிரஸ் தான் இலங்கை தமிழர்களை கொல்ல ராஜபக்சேவிற்கு உதவிகளை செய்து கொண்டிருந்தனர், இதற்கு ஆதரவாக காங்கிரசோடு ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்துகொண்டு பதவி சுகத்தை அனுபவித்துக்கொண்டு திமுகவும் இருந்து வந்தது,. ஈழத் தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டு தற்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வில்லை என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறது திமுக.
தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம். மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக மற்றும் காங்கிரஸ் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கும் ஈழதமிழர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மசோதாவில் அனுமதிக்கவில்லை என்று தனது குற்றச்சாட்டை முன்னெடுத்து வருகிறது,.
இந்த சூழ்நிலையில் கடுமையான வார்த்தைகளை கொண்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் பாஜக மற்றும் அதிமுக அரசுகளுக்கு எதிராக பேசி வருகிறார்,. தமிழக மக்களுக்கு தனது மகனின் முகம் நன்கு அறிமுகமாக வேண்டும் என்ற நோக்கத்தில் நான்கு படங்களில் நடிக்க வைத்து விட்டு தனக்கு பின்னால் தன் மகனை திமுக தலைவராக வரவேண்டும் என்ற நோக்கத்தில் தற்போதே முயற்சிகளை செய்து கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது மகன் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்தவிட்டு ஏதோ மிகப் பெரிய சாதனை தனது மகன் செய்ததுபோல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல என்பது தமிழக மக்கள் நன்கு அறிந்த ஒன்றுதான்,. ஈழத்தமிழர்களை கொத்துக் கொத்தாக, கொத்துகுண்டுகளை கொண்டு கொடூர கொலை செய்த கொலைகாரர்களுக்கு ஆதரவாக இருந்து விட்டு,. தனது மகன்,மகள், பேரன் இவர்களின் மந்திரி பதவிக்காக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் வழியில் தமிழக மக்களை முட்டாளாக்க வேண்டும் என்ற நினைப்பில் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்படுவது பற்றி தமிழக மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்,.
*தமிழக மக்கள்தான் சிந்திக்கணும்!
இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருவதை அடுத்து இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதை செல்ல வேண்டாம் என அமெரிக்கா இங்கிலாந்து நாடுகள் தங்கள் நாட்டின் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா சமீபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்சிகளும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக அசாம் உள்பட வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் கலவரமாக மாறி பதட்டமான சூழ்நிலை உள்ளது
இந்த நிலையில் இந்தியாவிற்கு குறிப்பாக வடகிழக்கு மாநில பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஐநா சபை அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், மேலும் சில நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம் ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்கள் தீர்ந்து விடுகின்றன.
இதன் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களையே பெரிதும் நம்பியுள்ளனர். ஜனவரி 14-ந் தேதி (செவ்வாய்கிழமை) போகி பண்டிகை, 15-ந் தேதி தைப்பொங்கல், 16-ந் தேதி திருவள்ளூவர் தினம், 17-ந் தேதி உழவர் தினம் வருகிறது.
300 கி.மீ தூரத்திற்கு மேற்பட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சொகுசு மற்றும் ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி நாகர்கோவில், கோவை, பெங்களூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 1200-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேற்கண்ட அரசு விரைவு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பயணிகள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர்.
அரசு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் டிக்கெட் முன்பதிவு செய்ய போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது.
www.tnstc.in இணைய தளம் மட்டுமல்லாமல் www.redbus.in, www.busindia.com, www.paytm.com, www.goibibo.com ஆகிய இணையதளங்கள் வழியாகவும் பயணிகள் தங்களது டிக்கெட்டை எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அடுத்த 2 வாரங்களில் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த ஆண்டு இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை குறித்து விரைவில் போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.