சென்னை ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு காரணமாக கிரிக்கெட் வர்ணனையாளர் கூறும் ஒரு சில காரணங்களை தற்போது பார்ப்போம்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஆரம்பத்தில் மிக நிதானமாக விளையாடி பந்துகளை வீணடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 56 பந்துகளை சந்தித்து 36 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 15 பந்துகளை சந்தித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்
கேப்டன் விராத் கோலியும் நேற்று 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி மைதானத்தை விட்டு வெளியேறினார். முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் சொதப்பிய போதிலும் நேற்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் பொறுப்புடன் விளையாடினர். இருப்பினும் அதன்பின் வந்த ஜடேஜா, டூபே ஆகியோர் அதிரடி கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட தவறியதும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக உள்ளது
மேலும் இந்திய அணியின் பவுலிங்கை பொருத்தவரை நேற்று பவுலர்கள் விக்கெட் எடுத்த தவறிவிட்டனர். தீபக் சஹர் மற்றும் ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்த போதிலும் கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் இருவரின் பந்துகள் நேற்று எடுபடவில்லை. அதேபோல் டூபே நேற்று 7.5 ஓவர்கள் வீசி 68 ரன்கள் கொடுத்ததும் ஜடேஜா 10 ஓவர்கள் வீசிய 58 ரன்கள் கொடுத்ததும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது. மொத்தத்தில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் சொதப்பியதே தோல்வி காரணமாக படுகிறது
மத்திய அரசு மறுப்பு! தமிழக அரசு தாராளம்: மருத்துவர் ராமதாஸ் பெருமிதம்
தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு வழங்க மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் “ஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி பணியாற்றிய மக்களுக்கு பல மாதங்களாகியும் ஊதியம் கிடைக்கவில்லை என்று கூறி போராட்டங்கள் வெடித்துள்ளன. உழைத்தவனின் வியர்வை அடங்குவதற்குள் வழங்கப்பட வேண்டிய ஊதியம் மாதக்கணக்கில் வழங்கப்படாமல் இருப்பது நியாயமல்ல.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே கிராமப்புற மக்களை வறுமையிலிருந்து மீட்க வேண்டும் என்பது தான். அதற்காகத் தான் இத்திட்டத்தின்படி பணியாற்றிய மக்களுக்கான ஊதியம் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் – திசம்பர் மாதங்களுக்கு மேல் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதற்குக் காரணம் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை என்பது தான்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பிறகு கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது 2018-19 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.61,084 கோடியை விட மிகவும் குறைவு ஆகும். கடந்த ஆண்டே இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ஊதியம் நிலுவை வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல என்று அப்போதே குறிப்பிட்டு இருந்தேன். அதன்பின் இத்திட்டத்தில் சில கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அதை வரவேற்ற பாட்டாளி மக்கள் கட்சி, அவற்றை செயல்படுத்துவதற்காக கூடுதல் நிதி ஒதுக்கும்படி வலியுறுத்தி இருந்தது.
ஆனால், மத்திய அரசு எந்த கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யாத நிலையில், இப்போது கடுமையான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் மத்திய அரசு இதுவரை ரூ.55,311 கோடியை விடுவித்துள்ளது. அதில் நேற்று மாலை வரை ரூ.47,542 கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை ரூ.4450.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநில அரசின் பங்கு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கிடைத்த நிதியையும் சேர்த்து இதுவரை மொத்தம் ரூ.4725.24 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.4684.23 கோடி செலவிடப்பட்டு விட்டது. இதுதான் பயனாளிகளுக்கு குறித்த காலத்திற்குள் ஊதியம் வழங்கப்படாதமைக்கு காரணம் ஆகும்..
அதேநேரத்தில் தமிழகம் பெருமிதப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக தமிழகத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட நடப்பாண்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது தான். கடந்த ஆண்டில் வேலை உறுதித் திட்டத்திற்காக திசம்பர் இறுதி வரை ரூ.4138.14 கோடி மட்டுமே அளிக்கப் பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் திசம்பர் 14-ம் தேதி வரை, கடந்த ஆண்டில் வழங்கப் பட்டதை விட சுமார் ரூ.600 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு திசம்பர் இறுதி வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக 33.34 நாட்கள் பணி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இதுவரை மட்டும் 37.38 நாட்கள் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு திசம்பர் வரை 10,724 குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாட்கள் வேலை தரப்பட்டுள்ளது. ஆனால், நடப்பாண்டில் இன்று வரை 44,743 குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் சாதகமானவை தான் என்றாலும் கூட, இதுவரை பணியாற்றிய பயனாளிகளுக்கு ஊதியம் வழங்கப்படாதது தான் கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.
கடந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்காக தமிழகத்துக்கு ரூ.4951 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில் அதைவிட ரூ.1,000கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்தால் இத்திட்டம் குறித்த மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றிட முடியும். நடப்பாண்டில் இதுவரை ரூ.4450 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும் சேர்த்து தமிழகத்திற்கு இன்னும் ரூ.1500 கோடி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.
எய்ட்ஸ்சை விட கொடுமையான நோய்க்கு காரணம் இந்த மதுப்பழக்கமா?
கல்லீரல்… மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல் தான். உடலில் மற்ற உறுப்புகளை விட இது கொஞ்சம் ஸ்பெஷல் தான். காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுக் கொள்ளும்.
கல்லீரல் முக்கால்வாசி பாதித்தாலும் தன் வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கும். ஏறக்குறைய, பாதியளவு பாதிக்கப்பட்ட பின்னர் தான் இதன் பாதிப்பே வெளியில் தெரிய வரும். அதுவும், ஒரு சில அறிகுறிகளின் மூலமாகவே தெரியவரும். அதில் ஒரு முக்கியமான அறிகுறிதான் மஞ்சள் காமாலை.
மஞ்சள் காமாலை நோய்க்கான காரணம்:
கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் இருப்பதால் மஞ்சள் காமாலை வருகிறது. இதில் இரண்டு விதமான காமாலைகள் உள்ளன. கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறி, பித்தப்பைக்குச் சென்று சேர்ந்து, பித்தக்குழாய் வழியாகக் குடலுக்குச் சென்றுவிட வேண்டும். அப்படிச் செல்லாமல் கல்லீரலிலேயே தேங்கிவிட்டால் மஞ்சள் காமாலை உண்டாகும்.
பித்தப்பைக் கல், பித்தப்பைப் புற்றுநோய், பித்தக்குழாய் புற்றுநோய், கணையப் புற்றுநோய், குடலின் முதற்பகுதியான டியோடினம் பகுதியில் புற்றுநோய் போன்ற பாதிப்புகளால் பித்தம் வெளியேறாமல் தேங்கிவிடும். அப்படிப் பாதிக்கப்படும்போது காமாலை உண்டாகும்.
மஞ்சள் காமாலை நோய் வருவது எதனால்?
இவ்வாறு கல்லீரலில் இருக்கிற செல்கள் செயல்படாமல் போவதால் வரக்கூடிய மஞ்சள் காமாலைக்கு ‘ஹெப்பட்டோ செல்லுலர் ஜான்டிஸ்‘ என்று பெயர். மேலும் இவ்வாறு உருவாகும் மஞ்சள் காமாலையை ‘மெடிக்கல் ஜான்டிஸ்‘ என்றும் அழைக்கலாம். ‘ஹெப்படைட்டிஸ்‘ என்பது வைரஸ் கிருமிகளின் பாதிப்பு, மது அருந்துதல் உள்ளிட்ட காரணங்களால் வரலாம்.
மேலும் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் பூச்சி மருந்து குடிப்பார்கள் அதனால் அவர்களுக்கும் வரலாம். டி.பி போன்ற நோய் பாதிப்புகளுக்கு மாத்திரை சாப்பிட்டதால் கல்லீரல் பாதிப்படைந்த நபர்களுக்கும் இந்த வகையான காமாலை வரும். இவ்வாறு மஞ்சள் காமாலை வந்தவருக்கு சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும், மேலும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். இதனுடைய பாதிப்பு அதிகமாகிவிட்டால் பித்தப்பை உப்புக்கள் உடல் தோலில் படிந்து அரிப்பு உண்டாகும்.
இந்த மஞ்சள் காமாலை நோய்க் குறித்து பெரும்பாலான மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை. இவ்வாறு இந்த ‘ஹெப்படைட்டிஸ்‘ என்ற வைரஸ் கிருமித் தொற்றால் உருவாகக்கூடிய இந்த மஞ்சள் காமாலை நோயால் பெரும்பாலான மக்கள் தொடர்ந்து உயிரிழக்கிறார்கள். இந்த எண்ணிக்கையானது எய்ட்ஸ் நோய்ப் பாதிப்பால் உயிரிழப்பவர்களை விட அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 90 சதவிகிதத்துக்கும் மேலானவர்களுக்குத் தங்களுக்கு இந்த நோயின் பாதிப்பு இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள்.
அறிகுறிகள்:
மஞ்சள் காமாலை பாதிப்பு இருக்கும் பலர், அதை அறியாமல் வெறும் உடல் சூடுதான் என்று கவனிக்காமல் இருந்து விடுகிறார்கள். வெயிலால், உடல் சூட்டால் சிறுநீர் மஞ்சளாக வெளியேறினால் ஒரு நாளில் சரியாகிவிடும். கண்கள் மஞ்சளாக மாறாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசோனிக் பரிசோதனைகளின் மூலமாக இதைக் கண்டறிய முடியும்.
இந்த ஹெப்படைட்டிஸ்-ஏ அல்லது இ என்ற வைரஸ் பாதிப்பால் உருவாகும் மஞ்சள் காமாலை ஒரு வாரத்தில் சரியாகிவிடும். சி – வைரஸ் பாதிப்பு என்றால் சரியாக குறைந்தது இதற்காக மூன்று மாதங்களாவது மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டும். ஹெப்படைட்டிஸ்- பி வைரஸ் பாதிப்பு என்றால் ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு இதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் சிலர் இந்த நோய்ப் பாதிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் கூட சாப்பிட வேண்டிய சூழல் வரும்.
மஞ்சள் காமாலை நோய் உள்ளதை அறிந்து கொள்வது எப்படி?
இவ்வளவு கொடுமையான மஞ்சள் காமாலை நோயை சில அறிகுறிகள் மூலம் நாமே அறிந்து கொள்ளலாம். அதாவது குமட்டலுடன் வாந்தி, பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலது பக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறு வீக்கம், காய்ச்சல், ரத்தக் கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும். கண்ணின் வெள்ளைப் படலத்திலும், நாக்கின் அடிப் பகுதியிலும் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும்.
மேலும் சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் வெளியாகும். மேலும் இந்நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் ஏற்படும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி அளவில் பெரிதாகும். இத்துடன் நிற்காமல் நிணநீர்க்கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
நோய் வருவதற்கு முன்பே அது பற்றிய விழிப்புணர்வோடு இருந்தால், தற்காத்துக் கொள்ளலாம்.
இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக விளங்குகிறது மகராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சீரடி. இங்குள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவிலுக்கு, வெளிநாடுகளிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர்.
இதனிடையே இந்தூரை சேர்ந்த மனோஜ்குமார் என்பவர் தரிசனத்திற்காக சீரடிக்கு சென்ற தனது மனைவி மாயமானது தொடர்பாக பம்பாய் உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் டி.வி.நளவாடே, எஸ்.எம்.கவான்ஹே ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சீரடியில் தரிசனத்திற்கு வந்த 88 பேருக்கும் அதிகமானவர்கள் கடந்த ஓராண்டில் மாயமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது, இவர்கள் உடல் உறுப்புக்காக கடத்தப்பட்டனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் மாயமானவர்களில் ஒரு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர், மீதம் இருப்பவர்களில் பெரும்பாலனவர்கள் பெண்கள், குழந்தைகளாக இருக்கின்றனர். இதற்கு பின்னால் கடத்தல்காரர்கள் இருப்பதாக சந்தேகம் இருந்தால் சிறப்பு குழு ஒன்றை காவல்துறையினர் அமைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பம்பாய் உயர்நீதிமன்ற அவுரங்காபாத் கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 10ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர், அன்றைய தினம் இது தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கபட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு மற்றும் ரொக்கம் 1000 ரூபாய் ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 27, 30 தேதிகளில் நடைபெற உள்ளதால் பொங்கல் தொகுப்பு பரிசு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 29-ந்தேதியே தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 2 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தேவையான பொங்கல் பரிசு தொகுப்புகளை கொள்முதல் செய்ய அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தது.
அதன்படி ரேஷன் கடைகளுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவைகளை பாக்கெட்டு போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் முடிந்துவிடும்.
அதேபோல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பணம் ரூ.1000-த்தை இரண்டு 500 ரூபாய் தாள்கள் வீதம் வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் தயார் நிலையில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
வருகிற புதன்கிழமை இருந்து ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் இவை அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அனேகமாக பொங்கல் தொகுப்பு பரிசுகளை வருகிற 20-ந்தேதி வழங்க அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே அனைத்து கார்டுகளுக்கும் கொடுத்து முடித்துவிட ஏற்பாடு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் வாயிலாக ரசிகர்களிடம் ஒரு உதவி கேட்டு இருந்தார்.
அதில் எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன
சென்னை டெஸ்ட் தொடரின் போது
Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்
அவரைசந்திக்கஆசைப்படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கருக்கு ஆலோசனை வழங்கிய ஓட்டல் ஊழியர் சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த குருபிரசாத் என தெரியவந்துள்ளது.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் நான் அவரது Elbow Guard-ல் ஒரு சிறிய மாற்றம் செய்வது குறித்து அவரிடம் கூறினேன். அதற்கு அவர் அதை மாற்றிக் கொள்வதாக கூறினார். அவ்வளவு தான் வேறு எதுவும் நான் பேசவில்லை.
ஆனால், 19 ஆண்டுகளுக்கு பிறகு நான் கூறியதை சச்சின் நினைவு கூர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவரை சந்திக்க மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். இருப்பினும், சச்சின் எங்கள் வீட்டிற்கு வந்து விருந்து உண்டு சென்றால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் குரு பிரசாத்.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை ஐகோர்ட்டு நியமித்தது. ஒரு ஆண்டு பணியாற்றிய அவரது பதவி காலம் கடந்த மாதம் 30-ந் தேதியுடன் முடிவடைந்தது.
அவரிடம் உள்ள சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இதில் வழக்கு ஆவணங்களை சிலை கடத்தல் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஆவணங்களை தாக்கல் செய்யாத பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒரு வாரத்தில் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பில்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை போராடித் தான் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குறுகிய வடிவிலான போட்டிகளில் எப்போதும் அபாயகரமானவர்கள். அதனால் மிகவும் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.
பொதுவாக சென்னை ஆடுகளம் வேகமின்றி (ஸ்லோ) காணப்படும்.
இத்தகைய ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபடும். கடைசியாக இங்கு நடந்த 7 ஆட்டங்களில் 6-ல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கக்கூடும்.
தமிழ், தெலுங்கு படங்கள் எல்லாம் வேண்டாம் என்று பாலிவுட்டில் செட்டிலான இலியானாவின் பார்வை தற்போது மீண்டும் தென்னிந்திய படங்கள் பக்கம் திரும்பியுள்ளது. பாலிவுட்டில் செட்டிலான அவரால் அங்கு முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற முடியவில்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.
அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இலியானா ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தான் இலியானா அஜித்திற்கு ஜோடியாக “வலிமை” படத்தில் நடிக்கப் போவதாக பேசப்பட்டு வருகிறது..
“நேர்கொண்ட பார்வை” படத்தை அடுத்து அஜித் மற்றும் H. வினோத் இணையும் “வலிமை.” படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் ஹைராபாத்தில் துவங்கியது. அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை யாமி கவுதம் நடிப்பதாக பேசப்பட்டது.
இந்நிலையில் யாமி அல்ல இலியானா நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவலை போனி கபூர் உறுதி செய்யவில்லை. முன்னதாக இலியானா விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த மாதம் 9-ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டுமென பெரும்பாலோனோர் வலியுறுத்தினார்.
பெற்றோரை பிரிந்து இருந்ததால் மன அழுத்தம் காரணமாக பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டதாக விடுதி காப்பாளர் லலிதாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, தனது மகளின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாத்திமாவின் தந்தை லத்தீப் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த ஐ ஐ டி மாணவி பாத்திமாவின் தற்கொலை வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.