Home Blog Page 5843

சேலத்தில் வண்டி ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம்!

0

சேலத்தில் வண்டி ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மனைவி கார்த்திகா (வயது 36). இவர் ஒரு ஸ்கூட்டர் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலுவலக முத்திரையுடன், கார்த்திகா பெயருக்கு ஒரு தபால் வந்தது. அந்த தபாலை பிரித்து பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அதில் கடந்த 3-ந் தேதி சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 200 அடி சாலையில் கார்த்திகா, ‘ஹெல்மெட்’ அணியாமல் அவரது ஸ்கூட்டரை ஓட்டிச்சென்றதாகவும், அதற்கு அபராத தொகையாக ரூ.100-ஐ 24 மணி நேரத்தில் செலுத்துமாறும் கூறப்பட்டு இருந்தது.

அதில் கார்த்திகாவின் ஸ்கூட்டர் பதிவு எண் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த அபராத தொகையை தமிழ்நாடு போலீஸ் இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் கட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

சேலம் மாவட்டத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு, சென்னையில் அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“தான் இதுவரை சென்னைக்கு சென்றது கூட கிடையாது. தனது ஸ்கூட்டர் பதிவெண்ணுடன் சென்னையில் வேறு ஒரு ஸ்கூட்டர் இயக்கப்படுகிறதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கார்த்திகா தெரிவித்தார்.

அந்த ஸ்கூட்டர் போலி வாகன எண்ணுடன் இயக்கப்பட்டதா? அது திருட்டு ஸ்கூட்டரா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

வாகன சோதனையின்போது ‘ஹெல்மெட்’ அணியாமல் செல்பவர்களின் வாகனத்தை நிறுத்தி, “நீங்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்து கடிதம் அனுப்புவோம்” என்று கூறி அவர்கள் வாகன எண்ணை வைத்து அந்த நபருக்கு சம்மன் அனுப்புவோம்.

அதன்படி தான் அந்த ஸ்கூட்டரின் பதிவு எண்ணை வைத்து சம்மன் அனுப்பினோம். தற்போது அந்த பெண் இல்லை என்பது தெரியவந்துள்ளதால் போலி பதிவு எண்ணுடன் அந்த ஸ்கூட்டர் இயக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விவகாரத்தில் சேலம் போலீசார் அளிக்கும் தகவலின் பேரில் கார்த்திகா பெயருக்கு அனுப்பப்பட்ட சம்மன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் மூலம் ரத்து செய்யப்படும். அவர் அபராதம் கட்ட வேண்டியதில்லை. அவர் ஸ்கூட்டர் சம்பந்தமாக வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.போலி எண்ணை வைத்து வண்டி ஓட்டிய நபரை பிடிக்க வேண்டும் என பொது மக்கள் விரும்புகின்றனர்.

மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முக்கிய வீரர்! மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

0

மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முக்கிய வீரர்! மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

பல மாதங்களுக்கு பிறகு இந்திய அணியின் முன்னணி வீரர் ஒருவர் மீண்டும் அணியில் இணைவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்திய அணியுடன் மோதும் மேற்கு இந்திய தீவுகள் அணி இதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 20 ஓவர் போட்டியான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் பங்கேற்கின்றன.

இந்நிலையில் இதற்காக முதல் கட்டமாக தற்போது நடந்து முடிந்த முதலாவது டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து நடக்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடா் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 15 ஆம் தேதி நாளை துவங்குகிறது. அடுத்ததாக இரண்டாவது ஒருநாள் போட்டி 18 ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது ஒருநாள் போட்டி 22 ஆம் தேதி கட்டாக்கிலும் நடக்கிறது.

பல மாதங்கள் கழித்து இந்திய அணிக்கு திரும்பும் நட்சத்திரம்... மகிழ்ச்சியின் உச்சியில் ரசிகர்கள்! 3

இந்நிலையில் 2 வதாக நடக்கவுள்ள ஒருநாள் ஆட்டத்துக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவும் இணையவுள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னணி வீரரான பும்ராவுக்கு அவரது கழுத்தின் கீழ்பகுதியிலும், கால் கணுக்கால் பகுதியிலும் காயம் இருந்தது.இதனையடுத்து அவர் அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

கடைசியாக பும்ரா, இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த போது விளையாடினார். அதன் பிறகு காயம் காரணமாக அவர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்காமல் சிகிச்சை எடுத்து வந்தார்.

இதனிடையே அந்த காயம் சரியானதையடுத்து பும்ரா, விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் பங்கேற்க உள்ளார் என்று தெரிகிறது.

“நான் ராகுல் காந்தி.. ராகுல் சாவர்க்கர் அல்ல.. மன்னிப்பு கேட்க மாட்டேன்…” ராகுல் காந்தி அதிரடி

0

“நான் ராகுல் காந்தி.. ராகுல் சாவர்க்கர் அல்ல.. மன்னிப்பு கேட்க மாட்டேன்…” ராகுல் காந்தி அதிரடி

ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான ஒரு பொது கூட்டத்தில் பேசும் போது ” மோடி, மேக் இன் இந்தியா’வை உருவாக்குவதாக சொன்னார். ஆனால் தற்போது ரேப் இன் இந்தியா தான் உருவாகிக் கொண்டிருக்கிறது ” என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு பா.ஜ.க  பலவகையிலும் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வந்தது. அதோடு பாராளுமன்றத்திலும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில் இன்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற  பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ” என் பெயர் ராகுல் காந்தி.. ராகுல் சாவர்க்கர் அல்ல. உண்மையை பேசியதற்காக நான் ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் மட்டும் அல்ல எந்த காங்கிரஸ் காரரும் கேட்க மாட்டார் . நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா தான் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.”என்று தெரிவித்தார்.

ஜாமீன் கிடைத்ததா! நித்யானந்தா சிஷ்யை களுக்கு விவரம் உள்ளே?

0

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார்.

குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் நித்யானந்தா.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது.

அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் தங்களது இரு பிள்ளைகளைச் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக ஜனார்த்தனன் சர்மா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதுபோன்று இரு மகள்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நித்யானந்தா சிஷ்யைகளான ப்ராணபிரியா மற்றும் பிரிய தத்துவா இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஜாமீன் கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த நவம்பர் 27ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில் ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள் தங்களது விருப்பத்தின் பேரில் தான் ஆசிரமத்தில் இருப்பதாகவும், அவர்களை யாரும் சித்திரவதை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு நேற்று அகமதாபாத்தில் உள்ள மிஷ்ராபூர் ரூரல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தரவிட்ட நீதிமன்றம் இருவரும் தீவிர குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

டிக் டாக்கால் ஏற்பட்ட விபரீதம் மனைவியை கொன்ற கணவன்?

0

டிக்டாக்கில் ஆண் நண்பருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டதால் மனைவியை கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள தனியார் விடுதி அறை ஒன்றில், இளம்பெண்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 2 இளம்பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

பட்டப்பகலில் விடுதி அறையில் அரங்கேறிய இரட்டை படுகொலை சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபர்கள் இருவர் விடுதி அறைக்குள் வருவது, அங்கிருந்து தப்பித்து ஓடுவது போன்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவானதை வைத்து அந்த இளைஞர்கள் யார் என்பதையும் அவர்களுக்கும் இளம் பெண்களுக்கும் என்ன தொடர்பு என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தினர்.

அதன்படி உயிரிழந்த பெண்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் அவர்களை தாக்கியது சயீப் மற்றும் குலாம் முஸ்தபா என்பதும் தெரியவந்தது.

சகோதரிகளான மனிஷாவும், மஞ்சுவும் ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில் மனிஷா ராய்ப்பூரில் தங்கி நர்சிங் படித்துவந்துள்ளார். அவருக்கு உதவியாக சகோதரி மஞ்சுவும் விடுதியில் தங்கி அவருக்கு உதவியாக இருந்துள்ளார். மேலும், சயீப்பும், மஞ்சுவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதும், மாமியார் வீட்டில் ஏற்றுக்கொள்ளாததால் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனிடையே ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து நடித்த டிக்டாக் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் மஞ்சு. ஏற்கெனவே மஞ்சு மீது ஆத்திரத்தில் இருந்த சயீப் அந்த வீடியோவைப் பார்த்து மேலும் கோபமடைந்துள்ளார். ஆத்திரத்தில் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக முஸ்தாபா எனும் நண்பரின் உதவியை நாடிய சயீப், தனது மனைவியை கொலை செய்தால் ரூ.7 லட்சம்  பணம் தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் சகோதரிகள் தங்கிருந்த விடுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேசியுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் மோதல் வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சயீப்பும், முஸ்தாபாவும் அங்கிருந்த தோசை சுடும் தவா-வால் மஞ்சுவை அடித்தே கொலை செய்துள்ளனர். இதை தடுக்க வந்த மனிஷாவையும் அவர்கள் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்தக் இரட்டை படுகொலை சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தையே அதிரவைத்தது. 

இதனால் விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் விடுதிக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் சயீப்பையும், முஸ்தாபாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியர்கள் எத்தனை பேர் தெரியுமா?

0

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியர்கள் எத்தனை பேர் தெரியுமா?

பிரிட்டனில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை அபார வெற்றி பெற்றது என்பதும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் புதிய அரசு விரைவில் பதவி ஏற்க உள்ளது என்பதும் தெரிந்ததே.

650 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டன் தேர்தலில் 364 இடங்களை கன்சர்வேடிவ் கட்சியை கைபற்றி உள்ளது என்பதும் ஆட்சி அமைக்க 326 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலே போதுமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து புதிய ஆட்சி அமைந்த பின்னர் பிரெக்சிட் விவகாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கடும் போட்டியாக இருந்த தொழிலாளர் கட்சி 203 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் 15 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது. வெற்றிபெற்ற 15 இந்தியர்கள் பெயர் பின்வருமாறு:

உள்துறை மந்திரியாக சேர்ந்த பிரீத்தி பட்டேல், கருவூல தலைமைச் செயலராக இருந்த இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக், சர்வதேச மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக இருந்த அலோக் சர்மா மற்றும் சைலேஸ்வரா, சுயெல்லா பிரேவர்மன், பிரீத்தி கவுர் கில், தன்மன்ஜித் சிங் தேசி, வீரேந்திர சர்மா, லிசா நந்தி, சீமா மல்ஹோத்ரா, வலேரி வாஸ், ககன் மொஹிந்திரா, கிளேர் கொட்டின்ஹோ ஆகியோர் கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்தும், லேபர் கட்சி சார்பில் நவேந்தரு மிஸ்ரா ஆகிய இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

விஷால் படத்தின் நாயகி ஆகும் விக்ரம் பட நடிகை

0

விஷால் படத்தின் நாயகி ஆகும் விக்ரம் பட நடிகை

விஷால் நடித்து வரும் படம் ஒன்றில் விக்ரம் படத்தின் நாயகி ஒருவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த ’துருவ நட்சத்திரம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை ரித்து வர்மா. இந்த படம் ஒரு சில பிரச்சனை காரணமாக பாதியில் நின்றுள்ளது என்பதும் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் கௌதம் மேனன் அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகியுள்ளதால் இந்த படம் எப்போது முடியும் என்று தெரியாது என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

விஷால் படத்தின் நாயகி ஆகும் விக்ரம் பட நடிகை

இந்த நிலையில் விஷால் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் ’துருவ நட்சத்திரம்’ நாயகி ரித்துவர்மா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. விஷால் நடிப்பில் ’அரிமா நம்பி’ மற்றும் ‘இருமுகன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் விஷால் தற்போது ’துப்பறிவாளன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ‘சக்ரா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் அதன் பின்னரே அவர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன்?

0

குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிராமதத்தில் கூலித்தொழிலாளியின் 11 வயது மகள் அருகே அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். குளிதிகையை சேர்ந்த வினோத் (வயது 30), தொழிலாளி. இவர், நேற்று மாலையில் மாணவி படிக்கும் பள்ளிக்கு சென்றார்.

மாணவியிடம் உனது தந்தை விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார். அதனால் உன்னை அழைத்து வர சொன்னார்கள் என கூறி மாணவியை அழைத்து சென்றார். அப்பகுதியில் உள்ள கானாற்று ஓடை பகுதிக்கு அழைத்து சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார்.

மாணவியை அழைத்து சென்றது குறித்தும், மாணவியின் தந்தைக்கு விபத்து ஏற்பட்டது குறித்தும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் மாணவியின் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

விபத்து சம்பவம் எதுவும் நடைபெறாமல் தனது மகளை அழைத்து சென்றது குறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் மாணவியை தேடி விரைந்து சென்றனர்.

இந்த நிலையில் கானாற்று பகுதியில் மாணவி, வினோத்திடம் இருந்து தப்பிக்க கூச்சலிட்டுள்ளார். மாணவியின்அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் வினோத்திடம் இருந்து மாணவியை மீட்டனர்.

பின்னர் வினோத்தை சரமாரியாக தாக்கினர். படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது தொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சர்க்கரை விலை உயர்கிறதா?

0

2018 -2019 சந்தை பருவத்தில் அக்டோபர் முதல் செப்டம்பர் மாதம் வரை 37 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. என மத்திய அரசு தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன உள்நாட்டில் இருந்து மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் இந்த மாநிலங்களின் பங்கு மட்டும் 70 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலம் சர்க்கரை சந்தை பருவமாகும் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 2018 19 பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 20 சதவீதம் அதிகரித்து 3.3 கோடி கோடி டன்னாக எட்டியது இருக்கிறது பொதுவாக வங்கதேசம் இலங்கை சோமலிய நாடுகள் இந்தியாவில் இருந்து அதிக அளவில் சர்க்கரை இறக்குமதி செய்து வருகின்றன கடந்த பருவத்தில் இந்திய ஆலைகளுக்கு 50 லட்சம் டன் வரை சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

2018 -19 பருவத்தில் 37 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப் பட்டிருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார் நடப்பு

2019-20 பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 21.5 சதவீதம் குறைந்து 2.6 கோடி டன்னாக இருக்கும் என இஸ்மா முன்னறிவிப்பு செய்துள்ளது. நடப்பு பருவத்தில் நவம்பர் 30 நிலவரப்படி நாட்டில் மொத்தம் 18.85 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி அதிகரித்து உள்ளதாக தெரிவித்து இருக்கிறது.

சென்ற ஆண்டு இதே நாளில் 40.69 லட்சம் கோடி டன்னாக இருந்தது உற்பத்தி 54 சதவீதம் சரிவடைந்துள்ளது நம் நாட்டில் சர்க்கரை நுகர்வு ஆண்டுக்கு சுமார் 2.5 கோடி டன்னாக உள்ளது குளிர்பான நிறுவனங்கள் பேக்கரி பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனங்கள் ஓட்டல்கள் மட்டுமே அதிக அளவு சர்க்கரையை பயன்படுத்துகின்ற என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஓய்வு முடிவை மாற்றினார்… சென்னை சூப்பர்கிங்ஸ்ஸின் நட்சத்திர வீரர்?

0

ஓய்வு முடிவை மாற்றினார் பிராவோ சர்வதேச 20 ஓவர் போட்டியில் விளையாட தயார் என்று அறிவிப்பு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் வென்று அதன் பிறகு அவர் காயம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அணியில் இடம்பெறவில்லை. 36 வயதான அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஓய்வு முடிவை மாற்றினார்... சென்னை சூப்பர்கிங்ஸ்ஸின் நட்சத்திர வீரர்?

தற்போது அவர் தனது ஓய்வு முடிவை மற்றும் 20 ஓவர் சர்வதேச போட்டியில் விளையாட தயார் என்று அறிவித்து வருகிறார் இருக்கிறார் இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்புகிறேன் என்பது ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது இந்த அறிவிப்பில் எந்த ரகசியமும் கிடையாது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் பயிற்சியாளர் சிம்மன்ஸ் கேப்டன் பொல்லார்ட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் சர்வதேச போட்டியில் மீண்டும் விளையாடுவது ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது திறமையான இளம் வீரர்கள் பலர் உள்ளனர். அனுபவம் வாய்ந்த வீரர்களும் அங்கம் வகிக்கின்றனர் சமீப காலங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது வெற்றியும் தொடர்ந்து தொடங்கியிருக்கிறது அணியின் நல்ல மாற்றத்திற்கு என்னாலும் பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன் நடந்த இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு வெற்றியைப் பெற்றது இரண்டு ஆட்டங்களில் நல்ல ஸ்கோரை எடுத்தது எங்கள் அணி பந்து வீச்சு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

என் அனுபவத்தின் மூலம் பந்துவீச்சாளர்களுக்கு என்னால் உதவ முடியும் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டில் என்னால் நிறைய போட்டிகளில் விளையாட முடியவில்லை அடுத்த ஆண்டே ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

அடுத்த ஆண்டு சிறப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் உடல் ரீதியாக நான் நல்ல நிலையில் இருக்கிறேன். உடல் தகுதி எனக்கு ஒரு பிரச்சனை இல்லை எனக்கு திறமையும் அனுபவம் ஒருபோதும் என்னை விட்டுப் போகாது மீண்டும் கிரிக்கெட் விளையாட இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.