Home Blog Page 5846

சமஸ்கிருத மொழிக்கு தரும் முக்கியத்துவத்தை தமிழுக்கு மறுப்பது ஏன்? மத்திய அரசு மீது மருத்துவர் ராமதாஸ் காட்டம்

0

சமஸ்கிருத மொழிக்கு தரும் முக்கியத்துவத்தை தமிழுக்கு மறுப்பது ஏன்? மத்திய அரசு மீது மருத்துவர் ராமதாஸ் காட்டம்

சமஸ்கிருத கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்துவதற்கான அளவீடு, மற்ற மொழி சார்ந்த கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்தும் விஷயத்தில் கடைபிடிக்கப்படாதது ஏன்? என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் “செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை
மத்திய பல்கலை.யாக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தில்லி மற்றும் திருப்பதியில் செயல்பட்டு வரும் சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்துவதற்கான சட்டமுன்வடிவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமஸ்கிருத கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டும் மத்திய அரசு, அதே ஆர்வத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழி கல்வி நிறுவனங்கள் மீது காட்டாதது தான் மிகவும் வருத்தமளிக்கிறது.

சமஸ்கிருதத்தை வளர்ப்பது மட்டுமின்றி, அம்மொழியில் அறிவியல் ஆராய்ச்சிகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் 3 சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கங்கள் மத்தியப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்படுவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு மொழியை வளர்ப்பதற்காகவும், ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்காகவும் அம்மொழி சார்ந்த நிறுவனங்களை தரம் உயர்த்துவதை குறை கூற முடியாது. அதனால், மத்திய அரசின் இந்த முடிவை விமர்சிக்க பாட்டாளி மக்கள் கட்சி விரும்பவில்லை. ஆனால், சமஸ்கிருத கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்துவதற்கான அளவீடு, மற்ற மொழி சார்ந்த கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்தும் விஷயத்தில் கடைபிடிக்கப்படாதது ஏன்? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்ப விரும்பும் நியாயமான வினா.

எந்த வகையில் ஒப்பிட்டுப் பார்த்தாலும் சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான செம்மொழியாகும். பல்வேறு பன்னாட்டு அரங்குகளில் இதை பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், சமஸ்கிருத வளர்ச்சிக்காக செலவிடும் தொகையில் நூற்றில் ஒரு பங்கை கூட தமிழ் வளர்ச்சிக்காக மத்திய அரசு செலவிடுவதில்லை என்பது தான் உண்மையாகும். செம்மொழி வளர்ச்சிக்காக இந்தியா முழுவதும் 18 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தமிழுக்காக ஒரே ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைக் கூட மத்திய அரசு நடத்தவில்லை. தமிழக அரசின் சார்பில் தமிழ் ஆராய்ச்சிக்காக ஒரே ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டும் தான் தஞ்சாவூரில் செயல்பட்டு வருகிறது.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் மொழி குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக, செம்மொழி தமிழ் உயராய்வு மையம் ஏற்படுத்தப்பட்டு, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இயங்கி வந்தது. பின்னர் இது தரம் உயர்த்தப்பட்டு 2008-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி முதல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமாக சென்னையில் செயல்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு முழுமையான ஆதரவு வழங்கியிருந்தால் மிகப்பெரிய அளவில் தமிழ் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு, தமிழ் மொழி குறித்த பல வரலாற்று உண்மைகள் நிறுவப்பட்டிருக்கும். ஆனால், தமிழ் செம்மொழி மத்திய நிறுவனத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகள் தான் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதற்கான முழுநேர இயக்குனர் கூட இன்னும் நியமிக்கப்படவில்லை என்பதிலிருந்தே, அதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை உணர முடியும்.

அடிப்படையில் பார்த்தால் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமும் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்திற்கு இணையான தகுதி கொண்டது தான். இப்போது 3 சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தும் மத்திய அரசு, இரு ஆண்டுகளுக்கு முன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை என்ன செய்ய முயன்றது தெரியுமா? நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதி கொண்ட அந்த நிறுவனத்தை மூடி விட்டு, திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக மாற்ற திட்டமிட்டது. இதற்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். இத்திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து தான், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மூடப் போவதில்லை என மத்திய அரசு அறிவித்தது.

சமஸ்கிருதம் சார்ந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்திய பல்கலைக்கழகங்களாக உயர்த்துவதும், தமிழ் சார்ந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஓர் துறையாக சுருக்க முயல்வதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை ஆகும். ஆராய்ச்சி செய்வதற்கான அம்சங்கள் சமஸ்கிருதத்தை விட தமிழில் ஏராளமான உள்ளன. ஆராய்ச்சி செய்வதற்கான மாணவர்களும் தமிழில் தான் அதிகமாக உள்ளனர். எனவே, சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மத்திய தமிழ்ப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும். அத்துடன் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதன் வளாகங்களை அமைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பிரிட்டன் பிரதமர் ஆகிறாரா போரீஸ் ஜான்சன்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள்!

0

மீண்டும் பிரிட்டன் பிரதமர் ஆகிறாரா போரீஸ் ஜான்சன்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள்!

பிரிட்டனில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 650 தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் வெற்றி பெறும் கட்சி எது என்றும் அடுத்த பிரதமர் யார் என்பதையும் என்ற செய்தியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு 650 எம்பிக்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் மெஜாரிட்டி பெற 326 எம்பிக்கள் ஒரு கட்சிக்க்கு தேவை. இந்த நிலையில் பிபிசி மற்றும் ஸ்கை தொலைக்காட்சிகள் எடுத்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேட்டிவ் கட்சி மிக அபாரமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கருத்துக் கணிப்பின்படி கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 368 தொகுதிகள் கிடைக்கும் என்றும் தொழிலாளர் கட்சிக்கு 196 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மற்ற கட்சிகளுக்கு 80 முதல் 100 தொகுதிகள் வரை கிடைக்கும் என அந்த கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் சுமார் நூற்று நாற்பத்து நான்கு தொகுதிகளில் இந்த கருத்துகணிப்பு எடுக்கப்பட்டதாகவும் இந்த கருத்துக் கணிப்பின் படி தான் தேர்தலின் முடிவு வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பிரிட்டன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இன்னும் சில மணி நேரத்தில் அதிகாரபூர்வமான தேர்தல் முடிவுகள் வெளிவரும் என்பதால் அதுவரை பொறுமை காப்போம்.

குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக போக்சோ சட்டம் கூறுவது என்ன?

0

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த திருச்சி பாலக்கரை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்ஃபோன்ஸ்ஸை போலீஸார்கைதுசெய்தனர். இந்நிலையில் குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக போக்சோ சட்டம் கூறுவது என்ன என்பதை தற்போது காணலாம்

2019-ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தப்பட்ட `போக்ஸோ’ சட்டத்தின்படி குழந்தைகளின் ஆபாசப் படங்களை வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள், பார்ப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

அதன்படி முதல்முறையாக குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து குழந்தைகள் ஆபாச படத்தை பார்ப்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

குழந்தைகள் ஆபாச படத்தை வலைதளங்கள் மூலமாக பகிரும் நபர்களுக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

குழந்தைகள் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்பவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புகைப்படம், வீடியோ, டிஜிட்டல் படம் அல்லது கணினியில் உருவாக்கிய படம் என எந்த வடிவில் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படுகிறது.

குழந்தைகளை வைத்து படம் நேரடியாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அல்லது குழந்தைகளின் படத்தை எடிட் செய்து சேர்த்திருந்தாலும் கூட, அது சட்ட விரோதம் என்றே கூறப்படுகிறது.

தாலி கயிறு மாற்றும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன?

0

திருமணமான பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் மிக முக்கியமான ஒன்று தாலி. இன்றைக்கு சிலர் தங்கத்தில் தாலி அணிகின்றனர். இருப்பினும் பலர் மஞ்சள் கயிற்றில்தான் தாலியை அணிகின்றனர்.

தாலிக்கயிற்றில் அழுக்கு இருந்தாலோ அல்லது மங்கி இருந்தாலோ, மாங்கல்யம் பழுது பட்டாலோ அதனை மாற்ற வேண்டி இருக்கிறது.

அப்போது நாம் மிக முக்கியமாக  கடைபிடிக்க  வேண்டிய விஷயங்கள்  சில  இருக்கிறது. மாங்கல்யம் மாற்றுவதாக இருந்தாலோ அல்லது தாலிக்கயிரை மாற்றுவதாக இருந்தாலோ திங்கள், செவ்வாய் வியாழக்கிழமைகளில்தான் செய்ய வேண்டும். இந்த மூன்று நாட்கள் மட்டுமே தாலிக் கயிறு மாற்ற சரியான நாட்கள். 

கோவிலுக்கு சென்று அங்கு மாற்றும் போது, கோவிலினுள் கிழக்கு பக்கமாக அமர்ந்தபடி மாற்றுவது நல்லது.

மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் தாலி கயிறில் ஊக்கு, சாவி போன்றவற்றை தொங்கவிடக் கூடாது.

ராகு, எமகண்டம் நேரத்தில் தாலி கயிறு மாற்றுதல் நிகழ்வை மேற்கொள்ளக் கூடாது.

அதே போன்று அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை ஏற்படும். எனவே  சரியான தருணத்தில் தாலி கயிறை மாற்றிக் கொள்வது நல்லது.

இவற்றைப் பின்பற்றினால், அந்த பெண் தீர்க்க சுமங்கலியாக பல்லாண்டு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்-ஐ அறிமுகம் செய்தவருக்கு நேர்ந்த சோகம்!

0

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்-ஐ அறிமுகம் செய்தவருக்கு நேர்ந்த சோகம்!

கடந்த 2014ஆம் ஆண்டு இணையதளத்தில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற சேலஞ்ச் பயங்கர வைரலானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவிலும் ஏன் தமிழகத்திலும் கூட இந்த சேலஞ்சை பிரபலங்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் எடுத்து அதன் வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டனர் ஒரு பக்கெட் நிறைய ஐஸ் கட்டியை வைத்து அந்த ஐஸ் கட்டியை தலையில் போட்டு குளிப்பது போன்ற வீடியோவை வெளியிட வேண்டும் என்பதே இந்த சேலஞ்சின் நோக்கம்

அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்பால் விளையாட்டு வீரரான பீட் ஃப்ரேட்ஸ் என்பவர் நரம்பு சார்ந்த ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நோய் குறித்த விழிப்புணர்ச்சிக்காகவே ஐஸ் பக்கெட் சேலஞ்சை அறிமுகம் செய்தார்.

நரம்பு சார்ந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கொண்டு ஐஸ் பக்கெட் சேலஞ்சை அறிமுகம் செய்த பீட் ஃப்ரேட்ஸ் என்ற அமெரிக்கர் தற்போது மரணம் அடைந்தார். அவருக்கு வயது 34.

சர்வதேச பிரபலங்கள் முதல் உள்ளூர் வரையில் பலரும் இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச் செய்து சமூக வலைதளப் பக்கங்களில் பிரபலப்படுத்தி இந்த நோய் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ததால் ALS என்னும் அந்த நரம்பு சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி கிடைக்க வழிவகை செய்த பீட் ஃப்ரேட்ஸ் அதே நோயால் இன்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது

குடியுரிமை சட்டம் எதிரொலி: வங்கதேச அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

0

குடியுரிமை சட்டம் எதிரொலி: வங்கதேச அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தாக்கல் செய்த குடியுரிமை சீர்த்திருத்த மசோதா கடந்த திங்கள் அன்று மக்களவையிலும் நேற்று மாநிலங்களவையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் தற்போது வெளிநாட்டிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது

மேலும் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வங்க தேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மோமன் தமது இந்தியப் பயணத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளார். அவர் நாளை முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை இந்தியாவில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

வங்கதேச இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற மசோதா காரணமாக அவர் திட்டமிட்டபடி இன்று டெல்லி வரவில்லை என்றும் அவர் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் வங்கதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த சட்டம் குறித்து செய்தியாளர்கள் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமனிடம் கேள்வி எழுப்பியபோது, ‘வங்கதேசத்தில் இந்துக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த சட்டதிருத்தத்திற்கு அவர் நேரடியாக எவ்வித கண்டனங்களும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஐந்து ஆண்டுகளில் ஐம்பது பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு!

0

பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நேற்று செலுத்தப்பட்டது தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது இஸ்ரோ மூலம் கடந்த 26 ஆண்டுகளில் 52 டன் செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 17 டன் வணிக ரீதியிலானவை. மேலும் நேற்று அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி 50வது பிஎஸ்எல்வி ராக்கெட் பொன்விழா கொண்டாடும் வேளையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் இந்த ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெறுகிறது.

ஐந்து ஆண்டுகளில் ஐம்பது பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு!

பிஎஸ்எல்வி ராக்கெட் 26 ஆம் ஆண்டு பயணத்தில் 1.1 டன் எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை கொண்டு செல்லும் அளவுக்கு அதன் செயல் திறனை அதிகப்படுத்த பட்டுள்ளது வெற்றிகரமான இந்த பயணத்தில் இஸ்ரோவில் இதற்கு முன் பணியாற்றிய ராக்கெட் ஏவுதல் குழு ஒட்டுமொத்த பிஎஸ்எல்வி குழுக்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பங்கு உண்டு அதனால் மாதவன் நாயர் சீனிவாசன் உட்பட முன்னாள் தலைவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நினைவு கூர்ந்து பாராட்டுகிறேன் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட்டின் மொத்த எடை 56 சதவீத எடை வெளி நாடுகளின் செயற்கைக்கோள்கள் கொடுக்கப்பட்டது இஸ்ரோவின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று சொன்னாலும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன பிஎஸ்எல்வி ராக்கெட் இதுவரை நிலவுக்கும் செவ்வாய்க்கும் செயற்கைக்கோள்களை கொண்டு சென்றுள்ளது.

இந்த ஆண்டுக்கான ராக்கெட் ஏவும் பணிகள் அனைத்தும் முடிந்தன விரைவில் சூரியனுக்கு வெளிப்புறப் பகுதியில் ஆராய்வதற்கான ஆதித்யா ஏவப்படவுள்ளது உள்ளது. இதுவும் pslv ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ளது.

அந்த வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐம்பது பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

ஜெயலலிதா திரைப்படங்களின் பிரச்சனையை முடித்து வைத்த சென்னை ஐகோர்ட்

0

ஜெயலலிதா திரைப்படங்களின் பிரச்சனையை முடித்து வைத்த சென்னை ஐகோர்ட்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் ஏஎல் விஜய் ஆகியோர் இயக்கி வந்தனர் என்பது தெரிந்ததே. இயக்குனர் கௌதம் மேனன் ’குயின்’ என்ற தலைப்பில் இணையதள தொடரையும், இயக்குனர் விஜய் ’தலைவி’ என்ற தலைப்பில் திரைப்படத்தை இயக்கி வந்தனர். கௌதம் மேனனின் இணையதள தொடரில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா கேரக்டரிலும், தலைவி திரைப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கேரக்டரிலும் நடித்து வந்தனர்

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கில் குயின் மற்றும் தலைவி ஆகிய இரண்டு படங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நடந்த போது இது குறித்து விளக்கம் அளிக்க இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் ஏ எல் விஜய் ஆகியோர்களுக்கு உத்தரவிடப்பட்டது

இந்த நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் தரப்பில் இன்று விளக்கம் அளித்தபோது குயின்’ இணையதளத்தில் தீபா குறித்த கேரக்டர் இல்லை என்றும் அதனால் அவர் இந்த வழக்கை தொடர உரிமை இல்லை என்றும் கூறினார். அதேபோல் விஜய் தரப்பில் தலைவி முழுக்க முழுக்க கற்பனையில் உருவான கதை என்றார். இதனை ஏற்றுக்கொண்ட சென்னை ’குயின்’ மற்றும் தலைவி ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் தடை இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. அதுமட்டுமின்றி தலைவி திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனை கதை என்று அறிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது

ஆபாச பட விவகாரம் திருச்சியை சேர்ந்த ஒருவர் கைது?

0

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த திருச்சி பாலக்கரை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்ஃபோன்ஸ்ஸை போலீஸார் கைது செய்தனர்.

நிலவன் ஆதவன் என்ற பெயர் கொண்ட கணக்கு மூலம் வீடியோக்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்த அவர் அந்த கணக்குகள் மூலம் சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படத்தை 15 முறை பகிர்ந்துள்ளார் இதற்காக கைது செய்யப்பட்ட 42 வயதான ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் கிறிஸ்டோபர் அல்ஃபோன்ஸை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்டார் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் அவர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஆபாச பட விவகாரம் திருச்சியை சேர்ந்த ஒருவர் கைது?

மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார் குழந்தை ஆபாசப்படங்களை பார்த்தல் மற்றும் பகிர்ந்த குற்றத்திற்காக தமிழகத்தில் முதல் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இதுபோன்ற குழந்தை ஆபாச படங்களை பகிர்ந்த நபர்களின் விவரங்கள் காவல்துறை வசம் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கான பேர் அந்த பட்டியலில் இருப்பதால் அடுத்தடுத்து கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் கணக்கில் நண்பர்களாக உள்ள 150 பேர் இப்படங்களை பார்த்து பகிர்ந்துள்ளனர் ஆகவே அவர்களும் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

T20 போட்டி – கேப்டன் கோலி செய்த சாதனை என்ன?

0

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 240 ரன்கள் எடுத்தது தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும் கேஎல் ராகுல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

T20 போட்டி - கேப்டன் கோலி செய்த சாதனை என்ன?

கேப்டன் கோலியும் தன் பங்குக்கு சிக்ஸர்மலைகளாக அடித்து நொறுக்கினர்.241 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது இதன்மூலம் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதில் கேப்டன் விராட் கோலி இந்தியாவில் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 1,000 ரன்கள் மைல்கல்லைக் கடந்த முதல் வீரர் ஆனார். நியூஸிலாந்தின் கப்தில் மற்றும் மன்ரோ ஆகியோர் நியூஸ்லாந்தில் 1,000 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளனர்.

முன்னதாக ரோஹித் சர்மா தனக்கேயுரிய காட்டடியில் 400 வது சர்வதேச சிக்சர்களை எடுத்து குறைந்த போட்டிகளில் 400 சிக்சர்கள் மைல்கல்லை எட்டினார். மேலும் கெய்ல், அப்ரீடிக்குப் பிறகு 400 சிக்சர்கள் மைல்கல்லை கடந்த ஒரு வீரர் ஆனார் ரோஹித் சர்மா.
அதே போல் மே.இ.தீவுகளுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 500 ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோஹித் சர்மா.