Home Blog Page 5845

வார இறுதி நாட்களில் தங்கம் வெள்ளி நிலவரம் என்ன?

0

தங்கத்தின் மீதான முதலீடு என்பது அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர்.
மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர்.

உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது.

எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு: ஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 2 ரூபாய் குறைந்து 3600 ரூபாய் ஆகவும், ஒரு பவுன் தங்கம் நேற்றைய விலையை விட 16 ரூபாய் அதிகரித்து பவுன் ஒன்றுக்கு 28800 ரூபாயாகவும் உள்ளது.

அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை1கிராம் 3780 ரூபாய் ஆகவும் 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 37800 ஆகவும் உள்ளது.

வெள்ளியின் விலையைபொறுத்தவரை கிராம்க்கு அதிகரித்து ரூபாய் 47.30ஆகவும், 1கிலோ ரூபாய் 47300க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

100க்கான பறவைகள் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்த மர்மம்: ஆராய்ச்சியாளர்கள் திணறல்

0

100க்கான பறவைகள் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்த மர்மம்: ஆராய்ச்சியாளர்கள் திணறல்

வேல்ஸ் என்ற நாட்டில் உள்ள ஒரே ஒரு சாலையில் மட்டும் நூற்றுக்கணக்கான பறவைகள் திடீர் திடீரென மயங்கி செத்துக் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. வேல்ஸ் நாட்டில் வெல்ஸ் என்ற நகரில் ஒரே ஒரு சாலையில் மட்டுமே நூற்றுக்கணக்கான பறவைகள் செத்துக் கிடந்தாகவும் அதற்கு அடுத்த சாலையில் எந்த ஒரு பறவையின் சாகாமல் இருந்ததாகவும் அந்த ஒரு சாலையில் மட்டும் பறவைகள் செத்து கிடந்ததன் மர்மம் என்ன என்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்

பறவைகளின் உடலை ஆய்வு செய்த பின்னர் தான் இதற்கான காரணம் தெரியவரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர் என்றாலும் அந்த சாலையில் பறவைகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. அது மட்டுமின்றி பறவைகள் சாவதற்கு அமானுஷ்ய சக்தியும் காரணம் என்று ஒரு வதந்தியும் மிக வேகமாக பரவி வருகிறது.

தற்போது சாலையில் செத்து விழுந்த பறவைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த ஒரு சாலையில் மட்டும் பறவைகள் நூற்றுக்கணக்கில் இறந்ததை அடுத்து அந்த சாலையில் மக்களும் பயணம் செய்ய பீதி அடைவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து கூறியபோது, ‘மனிதர்களுக்கு இந்த சாலைகள் எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் எனவே தாராளமாக பயணம் செய்யலாம் என்றும் கூறி வருகின்றனர். இதுகுறித்து ஒரு தனியார் ஊடகமும் தனியாக விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“அந்த இளம் வீரரையே தொடர்ந்து நான்காவதாக களமிறக்க வேண்டும் ” – அனில் கும்ப்ளே கருத்து

0

“அந்த இளம் வீரரையே தொடர்ந்து நான்காவதாக களமிறக்க வேண்டும் ” – அனில் கும்ப்ளே கருத்து

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்று உள்ளூரில் தனது ஆதிக்கத்தை மேலும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது. இருப்பினும் அனைவரின் கவனமும் ஒரு நாள் தொடர்மீது திரும்பியுள்ளது . குறிப்பாக இந்த தொடரில் நான்காவது வீரராக களம்காணப்போவது யார் என்ற கேள்வி மீண்டும் ஒருமுறை எழுந்துள்ளது.

கடந்த சிலவருடங்களாகவே இந்தியாவிற்கு பலவகையிலும் நெருக்கடியை ஏற்படுத்திவருவது இந்த நான்காம் வரிசை வீரரின் தேர்வுதான். கடந்த தொடர்களில் நான்காம் வீரராக களம்கண்ட மும்பை வீரர் ஷ்ரேயஸ் ஐயர் தனது பணியை சிறப்பாக செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுழற்பந்து வீச்சாளரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே ….. ” ஷிகர் தவான் இல்லாத நிலையில் அவரது இடத்தை கே. எல். ராகுல் சிறப்பாக தக்கவைத்துக்கொண்டதாகவும் , அதேபோல் ஷ்ரேயஸ் ஐயர் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருவதாகவும் தொடர்ந்து நான்காவது வீரராக அவர் களம் காண வேண்டும்” என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் மேற்கிந்திய தொடர் குறித்து குறிப்பிடுகையில் ” மேற்கிந்திய வீரர்கள் அதிரடியாக ஆடக்கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைய வேண்டியது அவசியமானது என்றும் அப்படி அமையும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றுவது எளிதானது ” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பழமை விரும்பிகளா நீங்கள்!அப்போது இதை படியுங்கள்?

0

பழமையை மீட்டெடுக்கும் விதமாகவும் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் சென்னை ரயில்வே சார்பில் முக்கிய விழா நாட்களில் பழமையான நீராவி எஞ்சின் ரயில் இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட பழமையான நீராவி எஞ்சின் ரயில் நாளை சனிக்கிழமை எழும்பூர் முதல் கோடம்பாக்கம் இயக்கப்பட உள்ளது.

காலை 11 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருக்கும் மருமார்கமாக மதியம் 12 45 மணிக்கு கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் நீராவி எஞ்சின் ஒரு பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். அதில் 40 பேர் பயணம் செய்யலாம்.


எழும்பூரிலிருந்து கோடம்பாக்கம் செல்ல ரூ 500 கட்டணமும் உணவுக்கு கூடுதலாக 165 ரூபாய் ஆகும் நினைவு பொருளுக்கு 100 மொத்தம் 765 கட்டணம் வசூலிக்கப்படுகிறது மறு மார்க்கமாக கோடம்பாக்கத்தில் இருந்து எழும்பூர் செல்ல கூடுதலாக கட்டணம் ஆகியோருடன் மொத்தம் 1265 வசூலிக்கப்படுகிறது.

இதேபோல் போல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 300 கட்டணத்துடன் உணவு நினைவு பொருளுடன் சேர்த்து 565 மருமார்கத்திலிருந்து பயணம் செய்ய கூடுதலாக 300 கட்டணத்துடன் மொத்தம் 865 கட்டணமும் வசூலிக்கப்படும் வெளிநாட்டை சேர்ந்த பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு 1765 ரூபாய் கட்டணமாகும்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு டிக்கட் கவுண்டரில் இந்த ரயில் பயணத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது மொத்தம் 80 டிக்கெட்டுகள் வரை மட்டும் விற்பனை செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சென்னை வருகை!

0

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 10 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது இதில் 20 20 தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

நேற்று முன்தினம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் லோகேஷ் ராகுல் 91ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா 71 ரன்களும் கேப்டன் கோலி அவுட்டாகாமல் 21 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி நிர்ணயித்த 20 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்தது 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்ககளே எடுக்க முடிந்தது இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது.


இதனிடையே இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. முதல் போட்டி சென்னையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சென்னை வருகை!

இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். இங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள் அவர்கள் தங்கியுள்ளனர் இன்று காலை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயிற்சியைத் தொடங்கினர். மாலையில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.

ஜார்கண்ட் தேர்தல்…. வாக்களித்த தோனி!

0

ஜார்கண்ட் மாநிலத்தில் 17 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தல் நடந்தது வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஜர்காண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கு 5 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது இம்மாதம் 7ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

ஜார்கண்ட் தேர்தல்.... வாக்களித்த தோனி!

இந்த நிலையில் நேற்று 17 தொகுதிகளில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது 17 தொகுதிகளிலும் 32 பெண்கள் உட்பட 350 வேட்பாளர் போட்டியில் போட்டியிட்டனர் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுப்பதிவு நடந்த எட்டு மாவட்டங்களிலும் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தன் மனைவியுடன் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். மாலை 5 மணி நிலவரப்படி 62.35 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன அமைதியான முறையில் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

நான்காம் கட்ட தேர்தல் 17ஆம் தேதியும் ஐந்தாம் கட்ட தேர்தல் 20ஆம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்: எத்தனையாவது இடம் தெரியுமா?

0

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்: எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார். நிர்மலா சீதாராமன் இந்தப் பட்டியலில் 34வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இங்கிலாந்து ராணி எலிசபெத் 40 ஆவது இடத்தில் உள்ளதை அடுத்து அவரை நிர்மலா சீதாராமன் முந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பட்டியலில் முதலிடத்தில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளார். இதனை அடுத்து பிரான்ஸ் நாட்டின் கிரிஸ்டின் லகர்தே இரண்டாவது இடத்திலும், அமெரிக்காவின் நான்சி பிளவுசே மூன்றாவது இடத்திலும், பெல்ஜியம் நாட்டின் உர்சுலா வோன் டெர் நான்காவது இடத்திலும் அமெரிக்காவின் மேரி பாரா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்: எத்தனையாவது இடம் தெரியுமா?

அதேபோல் பில்கேட்ஸ் மனைவி மெலிண்டாகேட்ஸ் ஆறாவது இடத்திலும், அமெரிக்காவின் அபிகெய்ல் ஜான்சன் 7வது இடத்திலும், ஸ்பெயின் நாட்டின் ஆனா பாட்ரிகா 8வது இடத்திலும் அமெரிக்காவின் கின்னி ரோமடி 9ஆவது இடத்திலும் அமெரிக்காவின் மர்லின் 10-வது இடத்திலும் உள்ளனர். மேலும் இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஷிவ் நாடார் அவர்களின் மகள் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா 54வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது

0

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது

சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய சென்ற காவல் துறையினருடன் திமுகவினர் வாக்குவாதம் செய்தது அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன.

இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள எதிர்கட்சித் தலைவர்கள் இதனை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுகவினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் கலந்து கொண்ட திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்தார். 2000 க்கும் மேற்பட்ட திமுகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.

திமுக சார்பில் இன்று நடந்த இந்த போராட்டத்தில் இந்தியாவை பிரிக்காதே, மக்களை பிரிக்காதே என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது . அதே போல் இந்த சட்டத்திற்கு காரணமான மோடி ஒழிக, அமித் ஷா ஒழிக என்றும் உதயநிதி ஸ்டாலின் கோஷம் எழுப்பி போராட்டம் செய்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் கோஷமிட்டதை தொடர்ந்து திமுகவினர் பலரும் மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

DMK Protest Against Citizenship Amendment Bill-News4 Tamil Latest Online Political News in Tamil
DMK Protest Against Citizenship Amendment Bill-News4 Tamil Latest Online Political News in Tamil

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் குடியுரிமை சட்ட நகலை கிழித்து போட்டார். நிறைய நகல்களை கிழித்து கட்சி தொண்டர்களை நோக்கி வீசினார். இதனையடுத்து திமுக தொண்டர்களும் தங்களிடம் இருந்த சட்ட நகலை கிழித்து எறிந்தனர். இன்னும் சிலர் சட்ட நகலுக்கு தீ வைத்தும் போராட்டம் செய்தனர்.

இவ்வாறு ஒரு சட்ட நகலை கிழிப்பது சட்டப்படி குற்றமாகும். இதனையடுத்து இதற்கு காரணமான உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய போலீசார் முயன்றனர். ஆனால் திமுக தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய காவல் துறையினரை அனுமதிக்கவில்லை. மேலும் அங்கிருந்த திமுக தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய விடமால் தடுத்து காவல் துறையினருடன் வாக்கு வாதம் செய்தனர்.

இதையடுத்து காவல் துறையினர் வேகமாக திமுக தொண்டர்களை கைது செய்தனர். இதனால் உதயநிதி தானாக கீழே இறங்கி வந்து காவல் துறையினருடன் சென்றார். காவல் துறையினர் அவரை கைது செய்து அரசு பேருந்தில் அழைத்து சென்றனர்.

கோவையில் பரபரப்பு நான்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்?

0

தர்மபுரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40) டிரைவர் வேலை செய்துவருகிறார் . இவரது மனைவி அம்சவேணி (37). இவர்களுக்கு சவுமியா (16), சத்யபிரியா (11) என்ற 2 மகள்களும், மணிகண்டன் (10), சபரிகிரிநாதன் (7) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

கோவிந்தராஜ் கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் அருகே உள்ள தியாகி குமரன் வீதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குழந்தைகள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

இவர்களது 2-வது மகள் சத்யபிரியா நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை கோவிந்தராஜ் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.

சிகிச்சை செலவுக்கு பணம் அதிமாக தேவைப்பட்டதால் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் அம்சவேணி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

நேற்று கோவிந்தராஜ் வேலை சம்பந்தமாக வெளியூருக்கு சென்று இருந்தார். வீட்டில் குழந்தைகளுடன் அம்சவேணி இருந்தார்.

அப்போது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததாலும், சிகிச்சை செலவுக்கு பணம் இல்லாமலும் சிரமப்பட்டு வந்த அம்சவேணி குழந்தைகளுடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

அதன்படி நேற்று இரவு வீட்டில் இருந்த அம்சவேணி அரளி விதையை அரைத்து தனது குழந்தைகளுக்கு சாப்பாட்டில் கலந்து கொடுத்தார். பின்னர் தானும் சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டார். சாப்பாட்டை சாப்பிட்ட குழந்தைகள் ஏன் சாப்பாடு கசக்கிறது என கேட்டனர்.

இதில் மனம் மாறிய அம்சவேணி குழந்தைகள் அனைவரையும் ஆட்டோவில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு 5 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். தற்போது 5 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் ஆட்சி அமைக்கின்றார் போரீஸ் ஜான்சன்

0

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் ஆட்சி அமைக்கின்றார் போரீஸ் ஜான்சன்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிங் கட்சி முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 359 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரத்தில் தொழிலாளர் கட்சி 202 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் 650 தொகுதிகள் உள்ள நிலையில் 326 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெஜாரிட்டியை கன்சர்வேட்டிவ் கட்சி பெற்றுவிட்டதால் போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரிட்டன் பிரதமர் ஆகிறார்.

பிரிட்டன் தேர்தலில் போட்டியிட்ட எஸ்.என்.பி கட்சிக்கு 48 தொகுதிகளும், லிப் டெமாக்ரேட்டிவ் கட்சிக்கு 11 தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு 22 தொகுதிகளும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடதக்கது. மெஜாரிட்டி பெற்று மீண்டும் பிரிட்டனில் ஆட்சி அமைக்கவுள்ள போரீஸ் ஜான்சனுக்கு இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.