Home Blog Page 5848

விண்வெளியில் நாசா ஆரம்பிக்கும் ஹோட்டல்: புதிய தகவல்

0

விண்வெளியில் நாசா ஆரம்பிக்கும் ஹோட்டல்: புதிய தகவல்

விண்வெளியில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் பெரும் புரட்சி செய்து வரும் அமெரிக்காவின் நாசா தற்போது புதிய முயற்சியாக விண்வெளியில் ரோபோ ஹோட்டல் என்ற ஹோட்டலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஹோட்டல் உணவு வழங்கும் ஹோட்டல் அல்ல என்பதும் விண்வெளியில் உள்ள பாதுகாப்பு தன்மைகளை கண்காணிப்பது இதன் நோக்கம் என்றும் நாசா தெரிவித்துள்ளது

விண்வெளியில் ஒரு பாதுகாப்பு சேமிப்பு அலமாரி அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த அலமாரியை கண்காணிக்க ரோபோ ஹோட்டல் உருவாக்கப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்த ஹோட்டலை கண்காணிக்க ஏற்கனவே ஒரு ரோபோ தயார் நிலையில் உள்ளதாகவும், தற்போது இன்னொரு ரோபோ உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த இரண்டு ரோப்போக்களும் விண்வெளி மையத்தில் லீக் ஏதாவது ஏற்படுகிறதா என்பதை கண்டுபிடிக்கும் என்றும் நாசா கூறியுள்ளது

விண்வெளியில் அடிக்கடி நிகழும் அமோனியா வாயு வெளியேற்றத்தை அறிந்து அதனை உடனடியாக இந்த ரோபோக்கள் சரி செய்யும் என்றும், சர்வதேச விண்வெளி மையம் அருகே அமையவிருக்கும் இந்த ரோபோ ஹோட்டல் விண்வெளியில் நாள் பூமிக்கு ஏற்படும் ஆபத்துகளை தடுக்கவும் செய்யும். குறிப்பாக விண்வெளியில் உலவும் சிறு மற்றும் பெரிய விண்கற்களில் இருந்து பூமியை காப்பாற்ற இந்த ரோபோக்கள் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது – ஸ்டாலின்

0

மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது.

வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்பளித்த உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், 2011 மக்கள்தொகை அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர். “உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சம்மட்டி அடி என்றால் அதிமுகவுக்கு அது மரண அடி.” என்றார்.

தேர்தலை நிறுத்த வேண்டும் என்று திமுக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என கூறிய ஸ்டாலின், மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை என்றார். நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை. மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது. தற்போதாவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றி முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுதியுள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், வார்டு வரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாள் – தமிழக அரசு மரியாதை

0

மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாள் – தமிழக அரசு மரியாதை

மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழக அரசின் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் 138 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு மீன்வளம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு டி. ஜெயக்குமார்,  மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு, மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்  திரு.க .பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திருமதி .பா .வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர் திரு.நடராஜ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப.,செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் முனைவர் சங்கர் இ.ஆ.ப. ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வின் போது கழக தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

பிரபலங்கள் கலந்துகொண்ட காமெடி நடிகர் சதீஸ் திருமணம்!

0

பிரபல காமெடி நடிகர் சதீஸ் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவருக்கும் சிக்சர் பட இயக்குநரின் தங்கை சிந்துவுக்கும் சதீஷுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சிக்சர் படத்தில் நடிகர் வைபவ் உடன் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் காதல் திருமணம் என்று பேச்சு அடிபட்டது. இந்நிலையில் அவர்களின் திருமணம் இன்று நடைபெற்றது

சிக்சர் பட இயக்குநரும் மணப்பெண்ணின் அண்ணனுமான இயக்குநர் சாச்சி சதீஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறி சதீஷ் – சிந்து இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களுக்கும் திரையுலகில் இருக்கும் தனது நண்பர்களுக்கும் சதீஷ் திருமன அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார்.விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், முருகதாஸ் பிரபலங்கள் சதீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்டனர்.

காலாவதியாகும் வாட்ஸ்அப் சேவை!

0

காலாவதியாகும் வாட்ஸ்அப் சேவை!

பெரும்பாலான செல்போன்களில் வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளது. சந்தையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்-களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இவற்றுள் சில செல்போன்களில் இந்த வருடத்துடன் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ பயன்படுத்தி இயங்கும் செல்போன்கள் முற்றிலுமாக வாட்ஸ் அப் சேவையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 31 2019 இந்த சேவை முடிவடைகிறது. மேலும் ஆண்ட்ராய்ட் 2.3.7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ios 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகிய செல்போன்களிலும் வாட்ஸ்அப் அடுத்த ஜனவரியில் செயல்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நீங்கள் விண்டோஸ் மொபைல் பயன்படுத்துபவர் என்றால் இந்த மாதத்திற்குள்ளாக உங்களது வாட்ஸப்பில் உங்களது வாட்ஸ் அப் மெனுவில் எக்ஸ்போர்ட் எனும் வசதியை பயன்படுத்தி உங்களுடைய அனைத்து தகவல்கள் மற்றும் மீடியாக்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த முடிவால் பெருமளவு பாதிப்பு இருக்காது என்றே கூறுகின்றனர்.

முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியுள்ளது. வாட்ஸ்அப் பேஸ்புக் கைவசம் சென்றதிலிருந்து, வாட்ஸப்பில் பல்வேறு முன்னேற்றங்கள், அப்டேட்கள், மற்றும் செய்திகளை எளிமையாக பகிர்வதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பேட்டி எடுத்தவரின் செல்போனை திடீரென பறித்த பிரதமர்: பெரும் பரபரப்பு

0

பேட்டி எடுத்தவரின் செல்போனை திடீரென பறித்த பிரதமர்: பெரும் பரபரப்பு

பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென பேட்டி எடுத்தவரின் செல்போனை பிரதமர் பறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் நாளை பிரதமர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சிக்க்கும் ஜெர்மி கார்பைன் என்பவரின் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடைசிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது செய்தி சேனல் ஒன்றின் நிருபர் ஒருவர் தனது மொபைல் போனை எடுத்து அதிலிருந்து ஒரு புகைப்படத்தை காண்பித்து அந்த புகைப்படத்தில் உள்ள நான்கு வயது சிறுவன் அரசு மருத்துவமனையில் தரையில் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரதமர் போரிஸ் ஜான்சன் உடனடியாக அந்த நிருபரின் செல்போனை பறித்து தனது சட்டைப் பையில் போட்டுக்கொண்டார். இந்த காட்சி அடங்கிய வீடியோவை அந்த நிருபர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து அந்த வீடியோ பயங்கர வைரல் ஆகி இரண்டு மணி நேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் அதனை பார்த்தனர். இந்த வீடியோவை பார்த்த பெரும்பாலானோர் பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்கையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நாளை பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இதனால் பெரும் பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே வருடத்தில் கணவரை விவாகரத்து செய்யும் தமிழ் நடிகை

0

ஒரே வருடத்தில் கணவரை விவாகரத்து செய்யும் தமிழ் நடிகை

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது பெற்ற நடிகை ஸ்வேதாபாசு, தமிழில் உதயா, ராரா, சந்தமாமா போன்ற படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு கன்னடம் உள்பட பல மொழிகளில் நடித்த இவர் கடந்த ஆண்டு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஸ்வேதா பாசுவுக்கு பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் மிட்டலுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் முடிந்து ஓராண்டு திருமண நாள் நாளை மறுநாள் கொண்டாட இருக்கும் நிலையில் இன்று அவர் திடீரென தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

ஒரே வருடத்தில் நடிகை ஒருவர் தனது கணவரை பிரிந்து விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தனது விவாகரத்து முடிவு குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: “கணவர் ரோகித்தை நான் பிரிந்து விட்டேன். பல மாதங்களாக யோசனை செய்த பிறகே இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம். பிரிய வேண்டும் என்ற முடிவை சேர்ந்தே எடுத்தோம். புத்தகத்தின் எல்லா பக்கங்களையும் படிக்க முடியவில்லை என்பதற்காக புத்தகம் மோசமாக இருக்கிறது என்று பொருள் அல்ல. ரோகித் எப்போதுமே என்னை ஊக்கப்படுத்தி வந்தார். அதற்காக அவருக்கு நன்றி. அவரை பற்றிய மறக்க முடியாத நினைவுகளும் எனக்குள் இருக்கும்.” இவ்வாறு ஸ்வேதா பாசு கூறியுள்ளார்.

திருமணம் நடந்து 12 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் பல மாதங்களாக பிரிவது குறித்து யோசனை செய்தேன் என்று ஸ்வேதாபாசு கூறியிருப்பது திருமணம் ஆனதில் இருந்தே இருவரும் கருத்து வேறுபாட்டுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

சினிமாவில் அதிகரித்து வரும் போலி சாதி ஒழிப்பு போராளிகளை எதிர்த்து களமாட தயாராகும் பிரபல இயக்குனர்

0

சினிமாவில் அதிகரித்து வரும் போலி சாதி ஒழிப்பு போராளிகளை எதிர்த்து களமாட தயாராகும் பிரபல இயக்குனர்

தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் பொது மக்கள் அனைவரும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க சட்டங்கள் கடுமையானதாக இயற்றப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க சட்டம் வேண்டும் என்று பேசும் மக்கள் இது போன்ற குற்றங்களுக்கு என்ன காரணம் என்பதை ஆராய மறந்து விடுகின்றனர். நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பெரும்பாலான குற்றங்களுக்கு காரணமாக ஒரு தலைக் காதல், மது பழக்கம் போன்றவையே கூறப்பட்டு வருகிறது. இதில் இந்த ஒருதலைக் காதல் என்பது தற்போது தமிழகத்தில் நாடக காதலாக மாறி விட்டது என பெரும்பாலோனோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பெண்களின் விருப்பமில்லாமல் அவர்களை விரட்டி விரட்டி காதல் செய்வது போன்ற நாடக காதலை தமிழ் சினிமாக்கள் தொடர்ந்து ஆதரித்து வருகின்றன. தமிழக அரசியல் அமைப்புகள் சிலவும் சமூக நீதி என்ற பெயரில் இளைஞர்களை தவறாக வழி நடத்தி இது போன்ற சமூக சீர்கேடுகளை செய்ய ஊக்கப்படுத்தி வருகின்றனர். மாற்று சமூகத்து பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று பொது வெளியில் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு இந்த போலி சாதி ஒழிப்பு போராளிகள் சமுதாயத்தை சீரழித்து வருகின்றனர் என்றும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

சினிமாவில் அதிகரித்து வரும் போலி சாதி ஒழிப்பு போராளிகளை எதிர்த்து களமாட தயாராகும் பிரபல இயக்குனர்

இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அல்லது அவரது சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படங்கள் என அனைத்திலும் வட தமிழகத்தில் வாழும் பெண்களை மட்டுமே குறி வைத்து காதல் செய்வது போல காட்சிகள் அமைப்பதாகவும், முடிந்தால் மதுரை பக்கம் உள்ள பெண்களை காதலிப்பது போல படம் எடுக்க முடியுமா என்று பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன்.ஜி சவால் விட்டிருந்தார். இது குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கு இயக்குனர் பா.ரஞ்சித் ஆதரவாளர்களும், சாதி ஒழிப்பு போராளிகள் என்ற பெயரில் உலவி வருபவர்களும் எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு சாதியை ஒழிக்க போகிறேன் என்ற பெயரில் மற்றவர்களை விமர்சனம் செய்து கொண்டு மறைமுகமாக அவர்கள் சார்ந்த சமுதாயத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து வருகின்றனர் என்றும் இந்த போலி சாதி ஒழிப்பு போராளிகள் குறித்து எதிர் தரப்பினர் விமர்சனம் செய்கின்றனர். இதற்கு உதாரணமாக பா.ரஞ்சித் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான அனைத்து படங்களிலும் அவர் சார்ந்த சமுதாயத்தினர் தான் அதிகமாக பணியாற்றியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பா.ரஞ்சித்தின் இந்த போலி சாதி ஒழிப்பு நாடகத்தையும், அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதையும், பெற்றோர்களுக்கு எதிராக பெண்களின் மனநிலையை மாற்றுவது, விருப்பமில்லாத பெண்களை விரட்டி விரட்டி காதல் செய்வதை தூண்டும் விதமாக காட்சி அமைத்தது போன்றவற்றை விமர்சனம் செய்த இயக்குனர் மோகனுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதாக கூறி அவரது ஆதரவாளர்கள் அனைவரும் எதையெதையே குறிப்பிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

சினிமாவில் அதிகரித்து வரும் போலி சாதி ஒழிப்பு போராளிகளை எதிர்த்து களமாட தயாராகும் பிரபல இயக்குனர்

இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்த மோகனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இதனையடுத்து மீண்டும் இந்த விவகாரத்தை கையிலெடுத்த இயக்குனர் மோகன் ஜி ஒரே ஒரு ட்விட்க்கு அவ்வளவு கதறலா? இனி தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு பண்ணுவேன் என அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது.

இந்த ஒரே ஒரு ட்விட்க்கு அவ்வளவு கதறல்.. ஏன்டா புள்ளைங்கள பெத்து வளர்கிறவங்க வலியை சொன்னா உங்களுக்கு அவ்வளவு கோபம் வருதா.. பெத்தவங்கள எதிரியாகவே காட்டி புள்ளைங்க மனச மாத்துற உங்க தந்திரம் இனி செல்லாது. விழிப்புணர்வு பண்ணுவேன். கதறுறவன் இன்னும் கதறு.. உங்க சித்தாந்தம் பலிக்காது இனி

https://twitter.com/mohandreamer/status/1204638442958680064

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் இயக்குனர் மோகன் ஜி அவர்களின் இந்த கருத்துக்கு பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு கூடி வருகிறது. சினிமா என்ற கலையின் மூலம் மறைமுகமாக சமூகத்தை சீரழிக்கும் சில போலியான நபர்களின் முகத்திரை விரைவில் கிழியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

ரஜினியின் அரசியலுக்கு அஜித் ஆதரவா? திடீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் பரபரப்பு

0

ரஜினியின் அரசியலுக்கு அஜித் ஆதரவா? திடீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்த ஆண்டு அரசியல் கட்சியை ஆரம்பித்து, 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியின் அரசியலுக்கு நடிகர்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதை போகப்போகத்தான் பார்க்க வேண்டும். ஏனெனில் கமலஹாசன் ஆரம்பித்த அரசியல் கட்சிக்கு எந்த பெரிய நடிகரும் இதுவரை ஆதரவு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினி, அஜித் சந்திப்பு விரைவில் நடைபெற இருப்பதாகவும் அப்போது ரஜினிக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து அஜித் ஒரு முக்கிய முடிவை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தலைவர் 168’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. அதே தேதி அதே நேரத்தில் அதே ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித் நடிக்கவிருக்கும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது

ஒரே இடத்தில் ரஜினி, அஜித் படங்களின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதால் இந்த படப்பிடிப்பின் இடையே ரஜினி-அஜித் சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் அப்போது இருவரும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் பல அரசியல் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி, அஜித் ஆகிய இருவரும் திரையுலகில் மாஸ் நடிகர்கள் என்பதால் அரசியலில் இருவரும் இணைந்தால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணில் பாய்ந்தது PSLV C-48 ராக்கெட்

0

விண்ணில் பாய்ந்தது PSLV C-48 ராக்கெட்

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பிஎஸ்எல்வி வகையில் ஐம்பதாவது பிஎஸ்எல்வி சி 48 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது நாட்டின் பாதுகாப்பு இயற்கை வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக பிஎஸ்எல்வி -ஜிஎஸ்எல்வி ராக்கெட் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துகிறது.

இஸ்ரோ தற்போது எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக 628 கிலோ எடையில் ரிசாட்-2 பி. ஆர் என்ற அதிநவீன செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.

விண்ணில் பாய்ந்தது PSLV C-48 ராக்கெட்

இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று மதியம் 3.25 மணிக்கு விண்ணில் பாய்ந்தது அதன் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

ஜிசாட் 6 செயற்கைக்கோள் இஸ்ரேல் இத்தாலி ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒரு செயற்கைகோளும் அமெரிக்காவின் 6 செயற்கைக் கோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன இன்று விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட 75 ஆவது ராக்கெட் என்ற சிறப்பைப் பெறுகிறது.