Home Blog Page 5849

கட்டுப்பாடு அற்று பாலியல் உறவு செய்த ஆடுகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

0

கட்டுப்பாடு அற்று பாலியல் உறவு செய்த ஆடுகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தெற்கு அயர்லாந்து நாட்டில் உள்ள ஒரு பகுதியில் நூற்றுக்கணக்கான ஆடுகள் திடீரென கட்டுப்பாடற்ற பாலியல் உறவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள் இந்த ஆடுகளின் கட்டுப்பாடற்ற பாலியல் செயலில் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்தனர். பின்னர் இதுகுறித்து ஆடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பல நாட்களாக கட்டுப்பாடின்றி பாலியல் வெறி பிடித்த இந்த ஆடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில் ஆடுகள் கொடுத்த தண்ணீரில் வயாகரா கழிவுகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த ஒரு மருந்து கம்பெனி 750 டன்னுக்கும் மேலாக வடிகட்ட படாத வயாக்ரா கழிவுகளை ஆற்றில் கலந்துள்ளதாகவும், அந்த ஆற்றின் நீரை இந்த ஆடுகள் குடித்ததால்தான் கட்டுப்பாடற்ற பாலியல் உறவில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

மேலும் இந்த பாதிப்பில் இருக்கும் நூற்றுக்கணக்கான ஆடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப பல வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனையடுத்து வயாகரா கழிவுகளை கலந்த அந்த மருந்து கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கடலூர் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்?

0

தமிழகம் முழுவதும் வெங்காயம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வெங்காயம் விலை 100 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வியாபாரிகள் வெங்காயம் வாங்க முடியாமல் பெரும் பாதிப்படைந்து வந்தனர்.

கடலூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1 கிலோ வெங்காயம் ரூ. 25-க்கு விற்கப்பட்டது. 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என எழுதப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்த கடை உரிமையாளரிடம் மீண்டும் மீண்டும் சென்று இந்த விலை உண்மையா? நாங்களும் 100 ரூபாய் கொடுத்தால் 4 கிலோ வெங்காயம் கிடைக்குமா? என்பதனை அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டனர்.


தகவல் கடலூர் நகர் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. பலர் அந்தக் கடையையும் 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என்ற வாசகத்தையும் செல்போனில் படம் பிடித்து அனைவருக்கும் அனுப்பி வைத்ததை பார்க்கமுடிந்தது.

காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முண்டியடித்து வெங்காயத்தை போட்டி போட்டுவாங்கி சென்றனர்.

இது குறித்து கடை உரிமையாளர் கூறும் போது இன்று காலை பெங்களூர் பகுதியிலிருந்து 2 லாரிகளில் 22 டன் வெங்காயம் எங்கள் கடைக்கு வந்தது. பெங்களூரில் இருந்து அனுப்பிய மொத்த வியாபாரி தெரிவித்த தொகையான 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றோம். பலபேர் எங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, வாழ்த்தியும் செல்கின்றனர் என்றார்.

தமிழர்களின் பாரம்பரியத்தை மறைக்க முயற்சியா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

தமிழர்களின் பாரம்பரியத்தை மறைக்க முயற்சியா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் எதிர்பார்க்கப்படும் 3 கட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்படாமல் தாமதமாவதற்கு காரணம் மத்திய தொல்லியல்துறையின் அலட்சியம் தான் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் “கீழடி அகழாய்வு: முதல் 3 கட்ட ஆய்வு 
அறிக்கைகள் வெளியீடு எப்போது?” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழர்களின் தொல்லியல் பெருமிதமான கீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட அகழாய்வின் முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இவற்றை வெளியிட உயர்நீதிமன்றம் இருமுறை விதித்த கெடுவும் முடிந்து விட்ட நிலையில், அகழாராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படாதது வருத்தமளிக்கிறது.

‘‘கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி’’ என்று தமிழர்கள் பெருமிதப்பட்டு வந்த நிலையில், அதை உறுதி செய்வதற்கான ஆதாரமாக கீழடி அகழாய்வு அமைந்திருக்கிறது. அங்கு நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மூலம் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழர் நாகரிகம் இன்னும் பழமையானது என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்று என்றாலும் கூட, அதை நிரூபிப்பதற்கு தொல்லியல் ஆதாரங்கள் தேவை. அதற்காக கீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை வெளியிட வேண்டும் என்று கடந்த இரு ஆண்டுகளாக பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஆய்வு முடிந்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை அகழாய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் எதிர்பார்க்கப்படும் 3 கட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்படாமல் தாமதமாவதற்கு காரணம் மத்திய தொல்லியல்துறையின் அலட்சியம் தான். 3 கட்ட ஆய்வு முடிவுகளை விரைந்து வெளியிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, கீழடியில் முதல் 3 கட்ட அகழாய்வுகளை மேற்கொண்ட மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அகழாய்வு அறிக்கையை தயாரிக்க வேண்டும்; அடுத்த 7 மாதங்களில், அதாவது கடந்த மே மாதத்திற்குள் அதை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. ஆனால், அதற்கான தொடக்கக்கட்ட பணிகள் கூட நடைபெறவில்லை.

நடப்பாண்டின் மார்ச் 15-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அறிக்கை தயாரிப்பு பணிக்காக அமர்நாத் இராமகிருஷ்ணன் விடுவிக்கப்படாததை அறிந்த உயர்நீதிமன்றக் கிளை, உடனடியாக அவரை பணியிடமாற்றம் செய்ய ஆணையிட்டதுடன், அடுத்த 7 மாதங்களில் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 15-ஆம் தேதிக்குள் முதல் 3 கட்ட அகழாய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கெடு முடிந்து இரு மாதங்களாகியும் கூட அகழாய்வு அறிக்கைகள் இன்னும் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படவில்லை.

கீழடி அகழாய்வு அறிக்கைகள் தாமதமாவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. கீழடியில் இது வரை மொத்தம் 5 கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முதல் 3 கட்ட ஆய்வுகள் 2015 – 2017 காலத்தில் மத்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன. நான்காம் கட்ட ஆய்வு 2018-ஆம் ஆண்டிலும், ஐந்தாம் கட்ட ஆய்வு நடப்பாண்டிலும் மாநில தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் கட்ட ஆய்வுகளின் முடிவுகள் நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், 2015&ஆம் ஆண்டில் நடந்த முதற்கட்ட ஆய்வு முடிவுகள் இன்று வரை வெளியிடப்படாததற்கு அரசியல் காரணங்களைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

ஆய்வு அறிக்கையை தயாரிக்க வேண்டிய அமர்நாத் கோவாவில் பணியில் உள்ளார். அவருக்கு உதவ வேண்டிய பணியாளர்கள் கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் உள்ளனர். ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பொருட்கள் தமிழகத்தில் உள்ளன. இவர்களை ஒருங்கிணைக்க மத்திய தொல்லியல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ஆய்வறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று விடாமல் தடுப்பதற்கான சதிகளை சில சக்திகள் திரைமறைவில் இருந்து செய்து கொண்டு வருகின்றன. கீழடி அகழாய்வு அறிக்கைகள் இன்று வரை வெளியிடப்படாததற்கு இத்தகைய சதிகள் தான் காரணமாகும்.

தமிழர் நாகரிகம் தான் உலகின் மூத்த நாகரிகம் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு விடக் கூடாது என்று நினைக்கும் ஒரு தரப்பினர் தான் இத்தகைய முட்டுக்கட்டைகளை போடுகின்றனர். தமிழர்களின் பாரம்பரியப் பெருமையை யாரோ சிலர் மறைக்க நினைப்பதை அனுமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, முதல் மூன்று கட்ட ஆய்வு அறிக்கைகளை விரைந்து வெளியிடச் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வுகளை ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த மாதத்தில் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளின் முன்பு வரையப்பட்டுள்ள மர்ம குறியீடு! காரணம் என்ன? அச்சத்தில் பொதுமக்கள்!

0

வீடுகளின் முன்பு வரையப்பட்டுள்ள மர்ம குறியீடு! காரணம் என்ன? அச்சத்தில் பொதுமக்கள்!

சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் ஒரு செய்தி அனைவரையும் கலக்கம் அடையச் செய்தது. வட மாநிலத்தில் இருந்து பல கொள்ளையர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும் காலை நேரங்களில் படுக்கை விரிப்புகள் விற்பவர்கள் போலும் மற்றும் வேறு ஏதேனும் பொருட்கள் விற்கும் வியாபாரிகள் போலும் நோட்டமிட்டு, பெண்கள் இருக்கும் வீடுகள், யாரும் இல்லாத வீடுகள், வெகுநாட்களாக பூட்டியிருக்கும் வீடுகள் என அந்தந்த வீடுகளில் குறியீடுகளை விட்டு சென்று விட்டு பின்னர் இரவு நேரங்களில் அந்த வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்து வந்தனர் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் அச்சமடைய வைத்தது.

அந்த வகையில் தற்போது  திருச்சி மாவட்டம் துறையூரில் வீடுகளின் முன்பு மர்ம குறியீடு இருப்பதால், இது கொள்ளையடிப்பதற்கான அடையாளமா? என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

துறையூரில் உள்ள பெரியார் நகர் மற்றும் சாமிநாதன் நகர் பகுதியிலுள்ள தெருக்களில் பொதுவாக ஆள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இப்பகுதி​யில் பூட்டியிருக்கும் வீடுகள் மற்றும் அடிக்கடி வெளியூர் செல்பவர்களின் வீடுகளை மர்ம நபர்கள் கண்காணித்து, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்‍கு முன்பு சாமிநாதன் நகரில் 5 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தான் பெரியார் நகரில் வசித்து வரும் வழக்கறிஞர் ரபிக் என்பவர் வீட்டில் வித்தியாசமாக வட்ட குறியீடு குறிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதே தெருவில் வசிக்கும் மற்றொருவர் வீட்டிலும் இதை போன்ற குறியீடு குறிக்கப்பட்டுள்ளது. இவை வடமாநில கொள்ளையர்கள் வரைந்துள்ள குறியீடாக இருக்‍கலாம் எனவும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்‍கள் அச்சமடைந்துள்ளனர். இதனையயடுத்து அங்கு பொதுமக்‍கள் அச்சமின்றி நடமாட காவல்துறையினர் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

13 தெற்காசிய போட்டி பதக்க வேட்டையில் இந்தியா!

0

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தின் காத்மண்டு மற்றும் போக்ஹரா ஆகிய நகரங்களில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்காளதேசம், பூடான், மாலத்தீவு ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த 2,715 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 487 பேர் கொண்ட குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர்.
பதக்கவேட்டையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. நாள்தோறும் இந்தியர்கள் பதக்க அறுவடை நடத்தினர்.

10 நாட்கள் நடந்த இந்த விளையாட்டு திருவிழா நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக நேபாள துணை பிரதமர் ஈஸ்வர் பொக்ரால் கலந்து கொண்டார்.


பதக்கப்பட்டியலில் இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என்று மொத்தம் 312 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. தெற்காசிய விளையாட்டு ஒன்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கங்கள் இது தான். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த போட்டியில் 309 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாக இருந்தது. இந்த விளையாட்டு தொடங்கிய 1984-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு முறையும் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து வருவது நினைவு கூரத்தக்கது.

13 தெற்காசிய போட்டி பதக்க வேட்டையில் இந்தியா!

நடப்பு தொடரில் நேபாளம் 51 தங்கம், 60 வெள்ளி, 95 வெண்கலம் என்று 206 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலம் என்று 251 பதக்கத்துடன் 3-வது இடத்தையும், பாகிஸ்தான் 131 பதக்கத்துடன் (31 தங்கம், 41 வெள்ளி, 59 வெண்கலம்) 4-வது இடத்தையும் பிடித்தன.

ஓடும் பேருந்தில் வைத்து பெண்ணுக்கு நடந்த அநீதி!

0

ஓடும் பேருந்தில் வைத்து பெண்ணுக்கு நடந்த அநீதி!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜெகன். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு காதலாக மாறி இவர் ஒருதலைப்பட்சமாக அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் இவர் காதலித்து வந்த அந்த பெண்ணிற்கு அவரது வீட்டில் வரன் பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். அதற்குப் பிறகு தன் காதலியிடம் தன் காதலை தெரிவித்துள்ளார். ஆனால் தனக்கு நிச்சயம் ஆகிவிட்டதாகவும் ஆகையால் ஜெகனை காதலிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் அந்த மாணவி.

இந்நிலையில் நேற்று காலை அப்பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார் ஜெகன்.  மேலும் அப்பெண் ஏறிய பேருந்தில் ஜெகன் அமர்ந்துள்ளார்.  பேருந்து சென்று கொண்டிருக்கும் சமயத்தில் அந்தப் பெண் எதிர்பாராத நேரத்தில் ஜெகன் தான் வைத்திருந்த தாலியை எடுத்து பெண்ணின் கழுத்தில் கட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட்டு சக பயணிகளிடம் உதவியை நாடியுள்ளார். உடனே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள் ஜெகனை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

பின்னர் வாணியம்பாடி காவல் நிலையத்தில் ஜெகனை பொதுமக்கள் ஒப்படைத்தனர். சம்பவத்தை விசாரித்த போலீசார் அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் இளைஞர் ஒரு பெண்ணிற்கு தாலி கட்ட கட்ட முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நேரத்தில் கமல்-ரஜினி படங்களில் நடிக்கும் ‘கைதி’ நடிகர்!

0

ஒரே நேரத்தில் கமல்-ரஜினி படங்களில் நடிக்கும் ‘கைதி’ நடிகர்!

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’கைதி’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த வெற்றியை அடுத்து அவர் தற்போது விஜய் நடிக்கும் ’தளபதி 64’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் கமல்ஹாசன் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் கமல்-ரஜினி படங்களில் நடிக்கும் ‘கைதி’ நடிகர்!

இந்த நிலையில் ’கைதி’ திரைப்படத்தில் கார்த்தியை அடுத்து முக்கிய வேடத்தில் நடித்தவர் ஜார்ஜ் மரியான். காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் கெரக்டரில் நடித்த இவரது நடிப்பு விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் இவர் சமீபத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்ததே. இதனையடுத்து தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 168’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்று நடைபெற்ற தலைவர் 168’ பட பூஜையில் ஜார்ஜ் மரியான் கலந்து கொண்டதில் இருந்து இவர் இந்த படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. ஒரே நேரத்தில் கமல், ரஜினி ஆகியோரின் படத்திலும் ஜார்ஜ் மரியான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் இன்று மூன்றாவது போட்டி இந்தியாவில் ஆடும் லெவெனில் யார்? யார்?

0

மும்பையில் இன்று நடைபெறும் 3-வது மற்றும் இறுதி டி20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இருக்கிறது.

ஆனால், கடந்த இரு போட்டிகளிலும் இந்திய அணிக்கு பேட்டிங், பந்துவீச்சில் கடும் சவால் விடுத்த மே.இ.தீவுகள் இன்றைய ஆட்டத்திலும் கடுமையான சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
முதலாவது டி20 போட்டியில் 207 ரன்களைக் குவித்த மே.இ.தீவுகள் அணி, 2-வது டி20 போட்டியில் 170 ரன்களை அனாசயமாக எட்டி வெற்றி பெற்றது. பவர் ஹிட்டர்ஸ் அதிகம் இருக்கும் மே.இ.தீவுகள் அணியின் பேட்டிங் இந்திய அணிக்கு நிச்சயம் சவாலாக இருக்கும்.
இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்று சமநிலையில் இருப்பதால், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

கேப்டன் விராட் கோலி முதல் போட்டியில் வெளுத்து வாங்கினார், ஆனால் 2-வது ஆட்டத்தில் விரைவாக வெளியேறினார். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் கோலியின் தனித்தன்மை ஆட்டம் நிச்சயம் வெளிப்படும். இதுதவிர நடுவரிசையைபலப்படுத்த ஸ்ரேயாஸ் அய்யர் இருப்பது கூடுதல் வலுவாகும். கடந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தால் கலக்கிய ஷிவம் துபே சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். இவரின் ஆட்டம் இன்றும் தொடர்ந்தால் கூடுதல் பலம்.

மும்பையில் இன்று மூன்றாவது போட்டி இந்தியாவில் ஆடும் லெவெனில் யார்? யார்?

பீல்டிங்கிலும் வாஷிங்டன் சுந்தர் மந்தமாக செயல்படுகிறார்.கடந்த ஆட்டத்தில் சிம்மின்ஸுக்கு நழுவவிட்ட கேட்சால் ஆட்டமே மாறிப்போனது. ஆதலால், வாஷிங்டனுக்கு பதிலாக குல்தீப்யாதவ் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது

இந்திய அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் கடந்த இரு போட்டிகளிலும் சுமார் ரகம் என்றுதான் சொல்ல முடியும். முதல் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை 200 ரன்களுக்கு மேல் அடிக்க விட்டனர். 2-வது போட்டியிலும் 170 ரன்கள் எடுத்தும் பந்துவீச்சில் கட்டுப்படுத்த முடியவில்லை.
புவனேஷ்வர் குமார், தீபக் சஹர் இருவரும் ரன்களை வாரி வழங்குகின்றனர்.

ஆதலால், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக, முகமது ஷமி இன்று களமிறங்கக்கூடும். பீல்டிங்கிலும் இந்திய அணி கவனம் செலுத்துவது அவசியம் இல்லாவிட்டால் எவ்வளவு ரன்கள்அடித்தாலும் பயனில்லை.

சமபலம் கொண்ட இரு அணிகளும் மோதுவதால் இன்றைய போட்டி மிக விறுவிறுப்புக்கு குறை ஏதும் இருக்காது இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியம்ல் நடக்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

‘தலைவர் 168’ படத்தின் இன்றைய மாஸ் அறிவிப்பு!

0

‘தலைவர் 168’ படத்தின் இன்றைய மாஸ் அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இந்த படத்தில் ஏற்கனவே சிறுத்தை சிவா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, மீனா, சூரி, டி இமான், ஆகியோர்கள் இணைந்திருப்பதாக அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்றைய மாஸ் அறிவிப்பாக இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு கூடிய ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது. தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கி வரும் அல்லது மார்ச் மாதத்துக்குள் முடிக்க இயக்குனர் சிறுத்தை சிவா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி!

0

கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி!

கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி.

ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி.  இவர் தனது இளைய மகளின் திருமணத்திற்காக  5 லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் பால் வியாபாரியான மணி தனது மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை முறையாக  திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து மணியை பணத்தை திருப்பி செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளாலும் மணியின் வீட்டின் பூட்டை பூட்டி கடனை திருப்பி செலுத்தினால் மட்டுமே வீட்டின் சாவியை கொடுக்க முடியும் என்று மிரட்டியுள்ளனர்.

மேலும் அக்கம் பக்கத்தினரும் ஊர் மக்களும் மணியின் சார்பாக கடன் கொடுத்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் கடனை மிக விரைவில் திருப்பிச் செலுத்தி விடுவதாகவும் அதற்கு முன்னதாக தனது வீட்டின் சாவியை தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கு ஒப்புதல் தெரிவித்து வட்டிக்கு கடன் கொடுத்தவரும் மணியின் வீட்டின் சாவியை அவரிடம் ஒப்படைத்துள்ளார் மேலும் உரிய காலத்திற்குள் பணத்தை திருப்பித் தரவில்லை என்றால் மீண்டும் வீட்டை பூட்டி விடுவதாகவும் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வெகுநேரமாகியும் மணியின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனை கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது மணி மற்றும் அவரது மனைவி கண்மணி ஆகியோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்தது தெரியவந்தது. இருவரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை செலுத்த முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மணி மற்றும் அவரது மனைவி கண்மணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மணியின் உறவினர்கள் கூறுகையில், வட்டிக்கு கடன் பெற்று இருந்ததால் மணி வெகு நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும் மேலும், கடன் கொடுத்தவர்கள் மிகுந்த நெருக்கடி கொடுத்ததாகவும், இதுவே மணியின்  மரணத்திற்கு காரணமாக அமைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சேலம் மாவட்ட ரெட்டிபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.